சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல்



"நான் அய்யங்கார்"
"நான் சக்கிலியன்"
"உனக்கு சாதிவேண்டாம் என்று நீதானே சொன்னாய்?"
"ஒரு திருத்தம். எனக்கு மட்டும் சாதி வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. பொதுவாக சாதி வேண்டாம் என்றேன். ஆனால் உங்களுக்கு சாதி என்பது கைவிடமுடியாத அத்தியாவசியமாக இருக்கிறது, உங்கள் ஆண்குறியைப்போல. ஆனால் எனக்கோ சாதி என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது, வெட்ட வெட்ட வளரும் மசிர்போல, மறைவிடத்து மசிர் போல"
"நீ கெட்ட வார்த்தை பேசுகிறாய்"
"கெட்டவார்த்தை என்றால் என்ன நண்பா?"
"அதை எப்படி என் வாயால் சொல்வது?"
"ஓ, உன்னால் உச்சரிக்க முடியாத வார்த்தைகள்தான் கெட்டவார்த்தைகளா?, சரி உனக்குத் தெரிந்த வார்த்தைகளைச் சொல்"
"அய்யங்கார், அய்யர், சாதி, வேதம், மனுதர்மம், இந்துமதம், ராமபிரான், நெடுங்குழைகாதன்..."
"மன்னிக்கவும் நண்பா. எனக்கு அவையெல்லாம் கெட்டவார்த்தைகள்"
"ஏன் இப்படியெல்லாம் பேசறேள்?"
"நான் தெலுங்கு பேசலாமா?"
"ஏன்?"
"ஒவ்வொரு சந்திப்பின்போதும் நீ அவாள், இவாள் என்று உன் ஆத்துப்பாஷையே பேசுகிறாய். நான் சக்கிலியன் என்பதால் என் வீட்டுமொழி தெலுங்கு பேசலாமா என்று கேட்டேன்?"
"ஏன் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுகிறாய்?"
"ஏட்டி என்று ஒன்று இருந்தால் போட்டியும் இருக்கும்தானே நண்பா"
"நாட்டில் முக்கியமான பிரச்சினை நடந்துகொண்டிருக்கும்போது நீ விதண்டாவாதம் பேசித் திரிகிறாய்"
"அப்படியென்ன தலைபோகிற பிரச்சினை?"
"தெருக்களில் இருந்த சாதிப்பெயர்களையெல்லாம் எடுத்துவிட்டார்கள்"
"எங்கள் சேரிக்கள் எவையும் சாதிப்பெயர் தாங்கியவையில்லை"
"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது"
"அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்"
"சாதிப்பெயர்களை எடுத்து தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார்கள்"
"வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் என்ற பள்ளமாவீரனின் பெயரை பேருந்திற்கு வைத்தபோது தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்து எங்கள் குடிசைகள் தீக்கிரையாயின. அப்போதெல்லாம் கண்டனக்குரல் எழுப்பமுடியாதவாறு உன் வாய் போண்டாக்களாலோ சிக்கன் லெக் பீசாலோ அடைக்கபட்டிருந்தனவா நண்பா. சரி, அதுபோகட்டும் அது ஆதிக்கக் கள்ளர் சாதி வெறியர்களின் வெறியாட்டம். ஜெகஜீவன்ராம் எனும் தலித் அமைச்சர் வடநாட்டில் ஒரு துறவியின் சிலையைத் திறந்துவைத்தபோது தீட்டுப்ப்பட்டுவிட்டது என்று பார்ப்பனர்கள் தண்ணீர் ஊற்றி சிலையைக் கழுவினார்களே, அருணாச்சலம் என்னும் பறையனுக்கு இடம் கிடையாது என்று ஜெயலலிதா அவரை விமானத்திலிருந்து இறக்கிவிட்டாரே, ஏன், இன்னமும் 'அம்பேத்கர் சிலைகள் டிராபிக்கிற்கு இடையூறாக இருக்கிறது" என்று அசோகமித்திரன் என்ற பார்ப்பன எழுத்தாளன் (தீராநதி ஜனவரி 20007) உளறிக்கொட்டினானே. அம்பேத்கர், ஜெகஜீவன்ராம், அருணாச்சலமெல்லாம் தலைவர்கள் இல்லையா நண்பா?"
"இருந்தாலும் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார்......"
"முதலில் அவர்களை மனிதர்களாகச்சொல் நண்பா. சாதிப்பெயர் சுமக்கும் எவனும் எனக்குத் தலைவனாக முடியாது"
"ஏன் நீ பிரித்துப் பிரித்துப் பேசுகிறாய்?. நான் தான் என்னுடைய எலெக்ட்ரிக் டிரெயினில்.."
"ஓ நீ முதலில் கார்தான் வாங்கினாய். இப்போது எலெக்ட்ரிக் டிரெயினையுமா? அதுசரி, நீ எங்கள் சகோதரர்கள் சிலரையே விலைக்கு வாங்கியவனாயிற்றே. இந்த நாடே உன்னுடையதாயிற்றே. எனக்கு உடைமையானதெல்லாம் குப்பைகளைக் கூட்டிப் பெருக்க சில துடைப்பங்களும் துரட்டிகளும் சாதித்திமிர் கண்டால் காறி உமிழ எச்சிலும் சில கெட்டைவார்த்தைகளும்தானே நண்பா"
"என்னை முடிக்கவிடு. நான் உன்னோடு வந்து கிங்பிஷர் பியரும் சிக்கன் பிரியாணியும் சாப்பிடவில்லையா?"
"ஆதிகாலத்தில் நீ சுராபானம் அருந்தியவன் தானே. அபோது நான் சுரா அருந்தாததால் அசுரனாகிப்போனேன். இப்போதோ குடியும் மாமிசமும் எனக்குப் பழக்கமாகிப்போனது. நீ சாப்பிட்டாலோ அது செய்தியாகிறது"
"நீ ஒரு முகமிலிதானே?"
"அதுசரி. வரலாற்றின் பக்கங்களில் முகத்தைத் தொலைத்தவன் தான். ஆமாம் ஊருக்கெல்லாம் ஒழுக்கம் உரைத்த நீ கழிவறைக் கதவுகளுக்குப் பின் சுயமைதுனம் செய்யும்போதுதான் என் நண்பன் கையும் களவுமாகப் பிடித்துவிட்டானே"
"ராமபிரான் வாலியைக் கொல்லும்போது மறைந்திருந்து கொல்லவில்லையா?"
"நீ மீண்டும் கெட்டவார்த்தையிலேயே உதாரணம் சொல்கிறாய்"
"விஷ்ணுபகவான் பல அவதாரங்கள் எடுக்கவில்லையா?"
"எந்த அவதாரம் எடுத்தாலும் என்னைக் கொலைதானே செய்தாய். சம்புகனும் ஏகலைவனும் கம்மி அழும் விசும்பல்களின் ஒலிகள் என் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருகிறது நண்பா. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சமும் வள்ளலாரை எரித்த நெருப்பின் மிச்சமும் இன்னமும் எங்கள் இதயக்கூட்டுக்குள் கனன்றுகொண்டிருக்கிறது. தயவுசெய்து அதைக் கிளறிவிடாதே. அதற்குப்பின் இந்த உரையாடல் நிகழ்த்த நான் மட்டும்தான் இருப்பேன்"
"எப்படியோ நீயும் முகமிலி. நானும் முகமிலி"
"நெருக்கடிநிலைக் காலத்தில் நக்சல்பாரிப் போராளிகள் தலைமறைவாக இருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் நாய்களும் தலைமறைவாகத்தானிருந்தார்கள். இருவரும் ஒன்றா என்ன?"
"நீ மீண்டும் வசவைத் தொடங்கிவிட்டாய்"
"இல்லை. நீ தொடங்கியதே வசவிலிருந்துதான்"
"எப்படி?"
"இந்த உரையாடலைத் தொடங்கும்போதே 'நான் அய்யங்கார்' என்றாய். நீ அய்யங்கார் என்றால் நான் வேசிமகன் என்றுதானே உன் வேதம் உரைக்கிறது. வேசிமகன் என்பது வசவு இல்லையா? அல்லது ஆபாசமில்லையா? சரி பரவாயில்லை. நீ பல அவதாரம் எடுக்கவேண்டியிருக்கும். எனக்கோ அதைத் தாண்டிய சில வேலைகள் இருக்கின்றன.பிறிதொருமுறை சந்திப்போம். முடிந்தால் நீ எலெக்டிரிக் டிரையினையோ அலது கிங்பிஷர் விமானத்தையோ விலைக்கு வாங்கி வா நாம் கிங்பிஷர் அருந்துவோம்"
"உன் சாதிப்புத்திதான் எனக்குத் தெரியுமே. நட்பாகப் பழகுவாய். ஆனால் உன் நண்பனின் வீட்டில் என்னை நினைத்துக் காறியுமிழ்வாய். ஆனால் எனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன்"
"விடைபெறும்முன் தொடக்கத்தில் நான் சொன்னதையே நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.. நான் உச்சரிக்கும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு கெட்டவார்த்தைகளாக இருக்கின்றன. உனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் எல்லாம் எனக்கு கெட்டசெய்தியையே உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.நன்றி"
.

49 உரையாட வந்தவர்கள்:

  1. - யெஸ்.பாலபாரதி said...

    கண்ணு வலிக்குது! பாண்ட் சைஸ் பெரிசு பண்ணி இருக்கலாம். மெதுவா படிச்சுட்டு வாரேன்.

  2. சென்ஷி said...

    //"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது" "அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்" //

    சரியான செருப்படி....



    சேரியை பார்க்காதவன்
    விபச்சாரி இருக்கும் தெருவில்
    முக்காடு போட்டு போவான்..
    வீடு வந்து
    முழங்காலை தட்டிப் போவான்..

    சென்ஷி

  3. லக்கிலுக் said...

    தமிழ் வலையுலகின் தலைசிறந்த பதிவுகளில் இதை ஒன்றாக கருதுகிறேன்.

  4. நாமக்கல் சிபி said...

    நன்றாக உரையாடலை வடிவமைத்திருக்கிறீர்கள்!

    ஒரு சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்! :(
    மற்றபடி சூப்பர்!

  5. மாசிலா said...

    திரும்ப திரும்ப சாதியைப்பற்றி எழுதிக்கொண்டே இருப்பதால்,
    'அவாள்கள்' எண்ண நெருப்பிற்கு நெய் வார்ப்பதை போலல்லவா அமைகிறது? போகிற போக்கை பார்த்தால், சாதியை 'நீங்கள்' மறந்தாலும் 'நாங்கள்' விடமாட்டோம் என்பதை போலல்லவா இருக்கிறது?

    அல்லது, 'நல்லா எழுதி இருக்கிறீர்' என்கிற ஜல்லி அடித்து விட்டு நல்ல பெயர் வாங்கி செல்லலாமா?

    உங்கள் கருத்து?

  6. Unknown said...

    இவர்(கள்) ஒதுக்கப்பட வேண்டியவர். "அவரின் கருத்துடன்தான் எங்கள் எதிர்ப்பு , _______ என்ற தனி மனிதரின் மீது அல்ல" என்று இன்னும் எப்படி உறவாட முடிகிறது சந்திப்புகளில்? அவரின் ஒவ்வொரு அணுவும் சாதி பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கும்போது அதிலிருந்து பிரித்து எந்த குணத்தை/அல்லது எந்ததை தனிமனிதம் என்கிறார்கள்? நம்புங்கள் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.

  7. நியோ / neo said...

    அபாரம்!

    ஈராயிரமாண்டு சமூக - வரலாற்று நிகழ்வுகளின் 'பிழிவு' ஆக இந்த உரையாடல் இருக்கிறது - என்று படிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

  8. dondu(#11168674346665545885) said...

    "அம்பேத்கர் சிலைகள்"
    அம்பேத்கரே சாதிப்பெயருங்கோவ். அதுவும் பாப்பான் சாதிங்கோவ். தன்னை ஆதரித்த பாப்பானின் பெயரை அவர் சூடிக்கொண்டாருங்கொவ். அந்தப் பெயரையும் தூக்குங்கோவ். தைரியம் இருந்தால்.

    //நான் தெலுங்கு பேசலாமா//
    தாராளமா பேசலாமே.

    //என்னை முடிக்கவிடு. நான் உன்னோடு வந்து கிங்பிஷர் பியரும் சிக்கன் பிரியாணியும் சாப்பிடவில்லையா?//
    அதுவும் என் பங்கு காசை கொடுத்து விட்டுத்தான் சென்றேன். இல்லாவிட்டால் நீங்கள் அதற்கும் அசிங்கமாக பேசியிருப்பீர்கள்.

    //ஆமாம் ஊருக்கெல்லாம் ஒழுக்கம் உரைத்த நீ கழிவறைக் கதவுகளுக்குப் பின் சுயமைதுனம் செய்யும்போதுதான் என் நண்பன் கையும் களவுமாகப் பிடித்துவிட்டானே//
    என்ன புடலங்காய் பேச்சு இது? இன்னொரு பெயரில் எழுதுவது நான் மட்டுமா? இன்னொருவர் பெயரில் சிலர் செய்ததை போல அசிங்கப் பின்னூட்டமா போட்டேன்? நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் போய் தேடுங்கள்.

    //நெருக்கடிநிலைக் காலத்தில் நக்சல்பாரிப் போராளிகள் தலைமறைவாக இருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் நாய்களும் தலைமறைவாகத்தானிருந்தார்கள். இருவரும் ஒன்றா என்ன?"//
    கண்டிப்பாக இல்லை. பேரிடர் வரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஓடோடி வந்து சேவை செய்வார்கள். நக்ஸல்பாரியினர் செய்ய மாட்டார்கள்.

    //விடைபெறும்முன் தொடக்கத்தில் நான் சொன்னதையே நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.. நான் உச்சரிக்கும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு கெட்டவார்த்தைகளாக இருக்கின்றன. உனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் எல்லாம் எனக்கு கெட்டசெய்தியையே உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.நன்றி//
    The feeling is mutual.

    By the way, thanks for linking me with the great patriot MuraLi Manoohar Joshiji. I just put MuraLi manohar and you added Joshi, a caste name.

    Confused in the top storey, what?

    Regards,
    Dondu N.Raghavan

  9. Anonymous said...

    Good Post!

    Everyone should read and make a Monoact to their profession place. It is very important

    -anbudan Nellakanda Aravinthan

  10. சாலிசம்பர் said...

    முரளி மனோகர் ஜோஷிக்கு நோய் முற்றிப்போய் விட்டது.

    //இல்லை. நீ தொடங்கியதே வசவிலிருந்துதான்" "எப்படி?" "இந்த உரையாடலைத் தொடங்கும்போதே 'நான் அய்யங்கார்' என்றாய்.//

    சூப்பர்.

  11. அருண்மொழி said...

    //லக்கிலுக் said...
    தமிழ் வலையுலகின் தலைசிறந்த பதிவுகளில் இதை ஒன்றாக கருதுகிறேன்.
    //

    வழி மொழிகின்றேன்.

  12. Anonymous said...

    //
    By the way, thanks for linking me with the great patriot MuraLi Manoohar Joshiji. I just put MuraLi manohar and you added Joshi, a caste name.

    Confused in the top storey, what?//

    Again Playing with mother(tongue) fucking English!

    Dondu Asshole, suguna purposely put the caste name Joshi with Murali Manohar to hit your dumb upstairs. It's quite fair dinkum to say u r an asshole full of shit...there's nothing wrong with Suguna's top storey. Thats why He still remains as a Creator and you remain as a crippled "cho" copy - paster.

  13. அருண்மொழி said...

    //By the way, thanks for linking me with the great patriot MuraLi Manoohar Joshiji. I just put MuraLi manohar and you added Joshi, a caste name. //

    Please refer http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html

    "Muralimanohar(#02717864569534015186) said...
    "உங்கள் நடை சென்னையில் உள்ள என் நண்பர் ஒருவரை ( அவரும் ......

    ப. - ஏன்னாக்க என்கிட்ட நெஜம்மாவே ரெண்டு சட்டை இருக்கு.

    முரளி மனோஹர் ஜோஷி"

    Please refer http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html

    அங்கே "முரளி மனோஹர் ஜோஷி" என்று எழுதிய இழிபிறவி யார்? யார்? யார்?

  14. Anonymous said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    உங்க காலை காமிங்க அய்யா.அப்படியே கழுவி குடிக்கனும் போல இருக்கு அய்யா.இந்த எழுத்தைப் பார்த்தா அந்த நோண்டு கிழம் மேல் மாடியில் குழப்பம்னு கேக்குது. குழப்பம்னு சொன்னா வந்து யாகம் வளர்க்க போகிறாரா என கேட்டு சொல்லவும்.

  15. rajavanaj said...

    சுகுனா திவாகர்,

    //உங்களுக்கு சாதி என்பது கைவிடமுடியாத அத்தியாவசியமாக இருக்கிறது, உங்கள் ஆண்குறியைப்போல. ஆனால் எனக்கோ சாதி என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது, வெட்ட வெட்ட வளரும் மசிர்போல, மறைவிடத்து மசிர் போல//

    //ஓ, உன்னால் உச்சரிக்க முடியாத வார்த்தைகள்தான் கெட்டவார்த்தைகளா?, சரி உனக்குத் தெரிந்த வார்த்தைகளைச் சொல்" "அய்யங்கார், அய்யர், சாதி, வேதம், மனுதர்மம், இந்துமதம், ராமபிரான், நெடுங்குழைகாதன்..." "மன்னிக்கவும் நண்பா. எனக்கு அவையெல்லாம் கெட்டவார்த்தைகள்//

    //அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது" "அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்//

    //இருந்தாலும் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார்......" "முதலில் அவர்களை மனிதர்களாகச்சொல் நண்பா. சாதிப்பெயர் சுமக்கும் எவனும் எனக்குத் தலைவனாக முடியாது//

    //நீ அய்யங்கார் என்றால் நான் வேசிமகன் என்றுதானே உன் வேதம் உரைக்கிறது. வேசிமகன் என்பது வசவு இல்லையா? அல்லது ஆபாசமில்லையா? //

    அருமை... வெகு அருமை. வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை நன்பா!

    வாழ்த்துக்கள் சுகுனா திவாகர்!

    -ராஜாவனஜ்

  16. பங்காளி... said...

    வலையுலக டெண்டுல்கர்(?)....ரிட்டையர் ஆக இதுவே சரியான சநதர்ப்பம்......

    அவரும் பிழைப்பார், தமிழ் வலைப்பதிவும் பிழைக்கும்....

    இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்த அவரது மகரநெடுங்குழைகாதன் அருள்புரியட்டும்....

  17. bala said...

    //Confused in the top storey, what?//

    No confusion what so ever..After all, the top storey has been vacant since birth. How else ,one can become a Naxal sympathiser?

    Bala

  18. ஜோ/Joe said...

    சரியான சாட்டையடி பதிவு .ஆனால் இதற்கெல்லாம் டோண்டு ஐயா மசிய மாட்டார் .தூங்குவது போல நடிப்பதில் அவர் மகா கெட்டிக்காரர் .இதை நான் உணர்ந்து ரொம்ப நாட்களாகிவிட்டது.

  19. dondu(#11168674346665545885) said...

    "அங்கே "முரளி மனோஹர் ஜோஷி" என்று எழுதிய இழிபிறவி யார்? யார்? யார்"?

    பதில் கீழே.

    rajavanaj said...
    வாங்க முரளிமனோகர்(ஜோஷி?) புதுசா வர்ரீங்க போல..

    முதல்லே சொன்னபோது முரளி மனோஹர்னு மட்டும்தான் சொல்லப்பட்டது. மேலே ராஜ்வனஜ் சொன்னதுக்குத்தான் எதிர்வினை ரெண்டாவதா போட்டது. சந்தேகமிருந்தா போய் பாத்துக்கோங்க.

    இல்லே, தெரியாமத்தான் கேக்கறேன், அதில சொன்ன ஐடியாவை வச்சுப் பேசும் ஐயா. இழிபிறவின்னு எல்லாம் ஏன் பேச வேண்டும்?

    இதனால எல்லாம் இந்த டோண்டு ராகவன் அஞ்ச மாட்டான். போய் வேலை ஏதாவது இருந்தால் பாரும்.

    அம்பேத்கர் சாதிப் பேரை பத்தி என்ன சொல்லறீங்க?

    டோண்டு ராகவன்

  20. Anonymous said...

    டோண்டு சாருக்கு ஆதரவாக

    உங்களுடைய முழு சூழ்நிலையையும் உங்களுடைய சூழலிலிருந்து பார்த்தால்தான் 'இவிங்களுக்கு' விளங்கும்.

    அதை நான் முழுதாக அறிவதுடன், என் முழு ஆதரவை நீங்கள் இந்த விஷயத்தில் நடந்து கொள்ளும் முறைக்கு அளிக்கிறேன்.

    நடந்தது நல்லதே எனும் கீதை மொழிப்படி, இந்த சமபவம் உங்களுடன் நட்புடன் இருப்பது போல பதுங்கிப் பழகிய பல சர்ப்பங்களை கோரப்பற்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

    உள்ளத்தனையது உயர்வு என்பது போல திரா'விட' கம்யூன்'விஷ' விகாரங்களே இந்த சிறிய புஸ்வானத்தை மத்தாப்பு கொளுத்தி ஆடுகின்றன.

    மனிதற்கு முழுமுதலானாது மானம். அதை அவமானமாக்கி மலையாளபட அசிங்க நடிகர்களை விட அதிகமாக உங்களை சித்தரித்து விளையாண்ட உலக மகா கொடுமை இரவில் உறங்காமல் நீங்கள் விழித்திருந்து பட்ட துன்பம் பார்த்த நண்பர்களுக்குதான் தெரியும்.

    பதிவரை மட்டுமன்றி, பெற்ற மகளையும் போரில் துணைக்கழைத்து பெரும்பாதகம் செய்த இழிபிறவியை 'ம்' என்று கூட சொல்லாத **பிறவிகள் சில இன்று எச்சில் இலை பதிவுகளை பட்டியல் போட்டு பரப்புகின்றன.

    இரண்டு நாட்களாக சாட்டிலைட் வைத்துத் தேடியும் விகார கொமண்ட் ஒன்று கோட கிடைக்காத போதே இவர்களுக்கு வேர்த்துக் கொட்டினாலும், அடுத்தவன் சதையை மொய்ந்து தின்பதால் வரும் சுவையை விட மன்மில்லாமல், பேரை பார்த்ததும் பாய்ந்து வருகிறார்கள்.

    நீங்கள் தளரவில்லை என்பது திண்ணம்.

    உங்களால் ஊக்கம் பெற்ற பென்னெடும் இளைய பதிவர்கள் பலர் உங்களுடைய முன்மாதிரி கொள்கைகள் மற்றும் செயல்களை வியந்தே பார்க்கிறார்கள்.

    யுத்தம் என்ற கலையில் என்கிருந்து வேண்டிமானாலும் அம்பு வரும் பேராபத்தை பனி போல உருகச்செய்யும் பாடத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    மந்தையில் நிற்கும் கூட்டங்களுக்கிடையே நீங்கள் நந்தவனத் தேராக ஒளிரும் போது, அடிவருடி மாண்டூகங்களுக்கு மனசு பொருக்காதுதான். இந்த விஷயம் இல்லாவிடினும் எந்த விஷயத்தையாவது வைத்து உங்களை இழுத்து வாங்கிக் கட்டி கொண்டு போவது புதிதா என்ன?
    இதில நடப்பதும் அதுதான். இறுதியில் எஞ்சப் போவதும் நீங்கள்தான்.

    இந்த குழப்பத்தை கண்டு மனம் கலங்கி சில நீலநண்பர்களும், கால்சிவாக்களும் அர்த்தம் தேடி அடுத்தவரிடம் நல்ல பேர் வாங்க நினைப்பதும் கசப்பானதொன்றே. ஆனாலும் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமில்லை.

    ஆங்கிலம் தெரியாக அறிவிலிகளும், அரபுக்களின் அடிமைகளும் போடும் ஆணவ ஆட்டத்தை புறந்தள்ளி நிற்பதில் நாங்கள் பலர் பக்கத்தில் நிற்கிறோம்.

    மூத்த பதிவரான நான் அதிகமாக தற்போது எழுதுவதில்லை. ஆனால் இப்போது எழுதாமல் வேறு எப்போது?

  21. தமிழ்நதி said...

    உரையாடல் கட்டபொம்மன் ஸ்டைலில் விறுவிறுப்பாகப் போனது. வாசிக்க சுவாரசியமாக இருந்தது.
    உங்கள் கை ராசிதான் போலிருக்கிறது. எனது பக்கத்திற்கு வந்து பின்னூட்டம் இட்டாலும் இட்டீர்கள். 'அந்த எசமாடன் கேக்கட்டும்'பலருக்குப் பிடித்திருக்கிறது. யார் புண்ணியத்திலாவது கொஞ்ச நாளைக்கு மிதந்துகொண்டிருப்போம்.

  22. Anonymous said...

    arumaiyaana aalumai!

  23. Anonymous said...

    Dear Sir

    I havea doubt? Who is this person?

    http://munivelu.blogspot.com/

    http://www2.blogger.com/profile/04553556820907257167

    January 30, 2007 12:18 PM
    munivelu(#04553556820907257167) said...
    என்ன டோண்டு சார், நீங்களும் உஜாலாவுக்கு மார்றிட்டீங்க போலிருக்கு?

    நீங்க சாதிப்பெயரைப் பத்தி சொல்றதை இங்க இருப்பவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல்லையே. அது சரி நீங்க அதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்கங்கறதை எங்அ எல்லோருக்கும் தெரியுமே. :))

    முனிவேலு கவுண்டர் (ஹி ஹி)

  24. கருப்பு said...

    //"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது"
    "அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்"
    //

    நச்சுன்னு இருக்குய்யா சுகுனா திவாகர்.

    ஒவ்வொரு வரியிலும் இலக்கியம் பின்னிப் பிணைந்து வருகிறது.

    இவ்வளவு எழுதியும் ஜாதிவெறி மிருகத்தின் பதில்களைப் பார்த்தீர்களா?

    காசு கொடுத்து விட்டால் சிக்கனும் பியரும் பிகரும் அடிக்கலாம். இவ்வளவு ஆன பின்னரும் இன்னமும் தாங்கள் ரொம்ப ஆச்சாரமான அவுசாரி.... மன்னிக்கவும் ஐயங்கார் குடும்பம் என்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    பார்ப்பனர்கள் சுராபானம், சோமபானம் அடித்தது பற்றியும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்னிக் கறி தின்றது பத்தியும் என் பதிவுகளிலே நான் எழுதி இருக்கிறேன் திவாகர் அவர்களே.

  25. கருப்பு said...

    //"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது"
    "அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்"
    //

    நச்சுன்னு இருக்குய்யா சுகுனா திவாகர்.

    ஒவ்வொரு வரியிலும் இலக்கியம் பின்னிப் பிணைந்து வருகிறது.

    இவ்வளவு எழுதியும் ஜாதிவெறி மிருகத்தின் பதில்களைப் பார்த்தீர்களா?

    காசு கொடுத்து விட்டால் சிக்கனும் பியரும் பிகரும் அடிக்கலாம். இவ்வளவு ஆன பின்னரும் இன்னமும் தாங்கள் ரொம்ப ஆச்சாரமான அவுசாரி.... மன்னிக்கவும் ஐயங்கார் குடும்பம் என்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    பார்ப்பனர்கள் சுராபானம், சோமபானம் அடித்தது பற்றியும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்னிக் கறி தின்றது பத்தியும் என் பதிவுகளிலே நான் எழுதி இருக்கிறேன் திவாகர் அவர்களே.

  26. Anonymous said...

    வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் என்ற பள்ளமாவீரனின் பெயரை பேருந்திற்கு வைத்தபோது தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்து எங்கள் குடிசைகள் தீக்கிரையாயின.

    Yes, but who did that.Do you have the guts the name those castes who did this.

  27. rajavanaj said...

    //Yes, but who did that.Do you have the guts the name those castes who did this.//

    Dear Anony,

    Let's find the answer for the question 'why?' before 'who?'..

    Why they did so?

    1) To ensure the castist structure of parpanist religion .

    2) Whenever the caste structure; which is the one and only contribution of parpans to Indian society is challenged, the upper caste dogs will come & bark to show their regards to parpanism.

    Now we do not have any hesitation to reveal 'who?'...

    YES IT IS DONE BY UPPER CASTE DOGS

    R.V

  28. மிதக்கும்வெளி said...

    /கண்ணு வலிக்குது! பாண்ட் சைஸ் பெரிசு பண்ணி இருக்கலாம். மெதுவா படிச்சுட்டு வாரேன்./

    தல உங்களுக்க்த்தான் வயசாயிடிச்சில்ல

  29. மிதக்கும்வெளி said...

    /தமிழ் வலையுலகின் தலைசிறந்த பதிவுகளில் இதை ஒன்றாக கருதுகிறேன். /

    நன்றி லக்கிலுக் மற்றும் அருண்மொழி

  30. மிதக்கும்வெளி said...

    /திரும்ப திரும்ப சாதியைப்பற்றி எழுதிக்கொண்டே இருப்பதால்,
    'அவாள்கள்' எண்ண நெருப்பிற்கு நெய் வார்ப்பதை போலல்லவா அமைகிறது? போகிற போக்கை பார்த்தால், சாதியை 'நீங்கள்' மறந்தாலும் 'நாங்கள்' விடமாட்டோம் என்பதை போலல்லவா இருக்கிறது? /

    மாசிலாவா இப்படியெல்லாம் பேசுவது?

  31. Anonymous said...

    //தாராளமாக இருங்கள். உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை.
    அனானி ஆப்ஷன் திறந்தாயிற்று//
    http://pithatralgal.blogspot.com/2007/02/187.html
    இதுக்கு என்ன சொல்றீங்க? உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை ங்கரதுக்கு என்ன அர்த்தம்?
    இதுக்கு மேல ஒரு அவமானம் தேவையா?நீங்க எல்லாம் போய் தூக்கு மாட்டிக்கலாம்.

  32. மிதக்கும்வெளி said...

    /No confusion what so ever..After all, the top storey has been vacant since birth. How else ,one can become a Naxal sympathiser?

    Bala /

    எங்கள் பாலா அப்பாவியாயிற்றே, அவர் இங்கீஷிலில் எல்லாம் உளறமாட்டாரே? 'பிறவியிலேயே எனக்கு அறிவு கிடையாது' என்று ஆங்கிலத்தில் உளறிய சாதிவெறி மிருகம் யார்?

  33. Anonymous said...

    டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:

    http://aiyan-kali.blogspot.com/

  34. வரவனையான் said...

    தோழர் சுகுணா, எனக்கென்னவோ இது வெட்டுகுத்தில் தான் முடியும் போல் தோணுது. நமக்கு ஒன்னும் இது புதிசில்லதானே .


    ஆனால் இந்த பாலா நம் அன்பிற்குரிய அந்த பாலா இல்லை போல் தோன்றுது

  35. மிதக்கும்வெளி said...

    அன்பின் இனிய டோண்டு

    /அதுவும் என் பங்கு காசை கொடுத்து விட்டுத்தான் சென்றேன். இல்லாவிட்டால் நீங்கள் அதற்கும் அசிங்கமாக பேசியிருப்பீர்கள்./

    உங்களிடம் காசுகொடுத்துத்தானாகவேண்டும் என்று கழுத்தில் கத்திவைக்கும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் யாரும் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.மேலும் உங்கள் வீட்டிற்கு நான் வந்தாலும் சாப்பாடு போட்டுவிட்டு பில் கொடுத்து வசூலிப்பீர்கள் என்றும் நான் கருதவில்லை.
    இங்கே நான் விமர்சிப்பது டோண்டு என்ற தனிப்பட்ட மனிதரை அல்ல. இன்னும் சொல்லப்போனால் லக்கிலுக், பாலபாரதி போன்றவர்கள் எனக்கு முன்பே உங்களுக்கு அறிமுகமானவர்கள், பழக்கமானவர்கள். அவர்களும் உங்களை விமர்சிப்பது உங்கள் சாதிய அகங்காரத்தைத்தான்.

    /அம்பேத்கரே சாதிப்பெயருங்கோவ். அதுவும் பாப்பான் சாதிங்கோவ். தன்னை ஆதரித்த பாப்பானின் பெயரை அவர் சூடிக்கொண்டாருங்கொவ். அந்தப் பெயரையும் தூக்குங்கோவ். தைரியம் இருந்தால்.
    /

    அம்பேத்கர் என்பது சாதிப்பெயர் என்று உங்களுக்கு எந்த மடையன் சொல்லிக்கொடுத்தான் என்று தெரியவில்லை. பீமாராவ் தனது பார்ப்பன ஆசிரியர் அம்பேத்கரின் மீதுள்ள மரியாதையால் தனது பெயரை மாற்றிக்கொண்டார் என்பது தனஞ்செயன்கீர் எழுதிய வரலாறு. ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் அதை மறுக்கின்றனர். அப்படியே அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயராக இருந்தாலும் அது நிச்சயம் சாதிப்பெயர் அல்ல. மராத்தியத்தில் யாருக்காவது பெயரின் பின்னால் அம்பேத்கர் என்னும் சாதிப்பெயர் ஒட்டி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மேலும் வடநாட்டில் பேருக்குப் பின்னால் இருப்பதெல்லாம் சாதிப்பெயர் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை. உதாரணமாக வி.பி.சிங் - ஒரு சீக்கியர் அல்ல, அவர் ரஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர். லால்பகதூர்சாஸ்திரி - பார்ப்பனர் அல்ல. சாஸ்திரி என்பது அவருக்குக் கல்வியில் கொடுக்கப்பட்ட பட்டம். எனவே இந்த மாதிரி அபத்தமாக உளறுவதை நிறுத்துங்கள்.

    /கண்டிப்பாக இல்லை. பேரிடர் வரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஓடோடி வந்து சேவை செய்வார்கள். நக்ஸல்பாரியினர் செய்ய மாட்டார்கள்.
    /

    இப்படித்தான் காந்தியிடமும் சிலர் சொன்னார்கள். காந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூகசேவையைப் பார்வையிட்டுவந்து சொன்னார், "நாஜிக்களும் கூடத்தான் சமூக சேவை செய்தார்கள்". கடைசியில் காந்தியையே கொலை செய்து ஆர்.எஸ்.எஸ். தனது 'சமூகசேவையை'ச் செய்தது. நேருவும் சரியாகவே சொன்னார், "இந்தியாவில் பாசிசம் பெரும்பான்மைவாதத்தின் வடிவில்தான் வரும்" என்று.

    மேலும் நக்சல்பாரிகளால் செய்யமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூகசேவைகள்.
    முஸ்லீம்கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்துக் குழந்தைகளையும் எடுத்துக்கொல்வது,
    ஏதாவது கோவிலை அடிபப்டையாக வைத்து மதகக்லவரம் ஏற்படுத்துவது,
    கரசேவை செய்வது,
    "முஸ்லீம் பெண்களின் யோனிகளை இந்து ஆண்களின் விந்துக்களால் நிரப்புங்கள்" என்று சுற்றறிக்கை அனுப்புவது.

  36. bala said...

    //எங்கள் பாலா அப்பாவியாயிற்றே, அவர் இங்கீஷிலில் எல்லாம் உளறமாட்டாரே? //

    வெளியே மிதக்கும் அய்யா,

    யார் யாரோ என் பேர்ல போடறாங்க.செந்தில் அய்யா ஆரம்பித்து வைத்த கூத்து இது.ஆனாலும்,நக்சல் கும்பலைப் பற்றிய அனானியின் கருத்து ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து.அது சாதி வெறி ஆகாது.எந்த சாதியினராக,எந்த மதத்தினராக இருந்தாலும்,நக்சல் கும்பல் மேல் மாடி காலி தான்.

    பாலா

  37. நியோ / neo said...

    >> இப்படித்தான் காந்தியிடமும் சிலர் சொன்னார்கள். காந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூகசேவையைப் பார்வையிட்டுவந்து சொன்னார், "நாஜிக்களும் கூடத்தான் சமூக சேவை செய்தார்கள்". கடைசியில் காந்தியையே கொலை செய்து ஆர்.எஸ்.எஸ். தனது 'சமூகசேவையை'ச் செய்தது. நேருவும் சரியாகவே சொன்னார், "இந்தியாவில் பாசிசம் பெரும்பான்மைவாதத்தின் வடிவில்தான் வரும்" என்று. >>

    வரலாற்றை மறக்கடிக்கச் செய்யும் வேலையில் சில ஓநாய்கள் ஈடுபட்டு வரும் வேளையில் - இம்மாதிரியான நினைவூட்டல்கள் மிக மிக மிக முக்கியம்.

    பாராட்டுகள் :)

  38. Santhosh said...

    //"உன் சாதிப்புத்திதான் எனக்குத் தெரியுமே. நட்பாகப் பழகுவாய். ஆனால் உன் நண்பனின் வீட்டில் என்னை நினைத்துக் காறியுமிழ்வாய். ஆனால் எனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன்"//
    திவாகர் ஒரு சில மனிதர்கள் செய்யும் தவருக்கு அவர்கள் சார்ந்து இருக்கும் சமூகமோ, நாடோ என்ன தவறு செய்தது. இது போல் பொதுமை படுத்துவதை தவிர்க்கலாமே. நீங்க சொன்ன அந்த சமூகத்தில் எனக்கு நிறைய அருமையான பல நண்பர்கள் உண்டு. தவறு செய்வது தனிமனிதர்களே அன்றி சமூகமோ, நாடோ அல்ல.

  39. dondu(#11168674346665545885) said...

    "உங்களிடம் காசுகொடுத்துத்தானாகவேண்டும் என்று கழுத்தில் கத்திவைக்கும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் யாரும் தரம் தாழ்ந்தவர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.மேலும் உங்கள் வீட்டிற்கு நான் வந்தாலும் சாப்பாடு போட்டுவிட்டு பில் கொடுத்து வசூலிப்பீர்கள் என்றும் நான் கருதவில்லை".
    போன இடம் ஒரு பார். வீடு அல்ல. உங்கள் கம்பேரிசனே தப்பு
    அதே போல டட்ச் ட்ரீட் வைத்து கொள்ளும்படி சொன்னது நான். ஆகவே நான் என் பங்கு என்று உத்தேசமாக நினைத்ததை கொடுக்காது போயிருந்தால் ஓசி பிரியாணி என்று பலர் கூறியிருப்பார்கள், நீங்கள் உட்பட.

    //இங்கே நான் விமர்சிப்பது டோண்டு என்ற தனிப்பட்ட மனிதரை அல்ல.//
    அப்படீங்கறீங்க? அப்ப இது என்ன சுவாமி?
    //ஆமாம் ஊருக்கெல்லாம் ஒழுக்கம் உரைத்த நீ கழிவறைக் கதவுகளுக்குப் பின் சுயமைதுனம் செய்யும்போதுதான் என் நண்பன் கையும் களவுமாகப் பிடித்துவிட்டானே//
    அதுக்கு என்னோட பதில்: //என்ன புடலங்காய் பேச்சு இது? இன்னொரு பெயரில் எழுதுவது நான் மட்டுமா? இன்னொருவர் பெயரில் சிலர் செய்ததை போல அசிங்கப் பின்னூட்டமா போட்டேன்? நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் போய் தேடுங்கள்.//
    இப்போது நீங்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருந்த செல்வன் பதிவு பின்னூட்டங்களும் காலை வாரிவிட்டன.


    இன்னொன்று கவனியுங்கள். நான் உங்களை நீங்கள் என்றுதான் எழுதுகிறேன். நீங்கள் என்னை நீ என்று குறிப்பிட்டு அசிங்கமாகவெல்லாம் எழுதுகிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா?

    ஒரு அனாமத்து எழுதுகிறது, //Dondu Asshole, suguna purposely put the caste name Joshi with Murali Manohar to hit your dumb upstairs. It's quite fair dinkum to say u r an asshole full of shit...there's nothing wrong with Suguna's top storey. Thats why He still remains as a Creator and you remain as a crippled "cho" copy - paster.//
    அது உங்கள் இந்தப் பதிவின் ஒரு பின்னூட்டம்.

    நான் என்ன செய்து விட்டேன் என்று நீங்கள் குதிக்க வேண்டும்? நீங்கள் யாருமே அனானிப் பின்னூட்டம் இட்டதேயில்லையா? பெயரா முக்கியம், கருத்துத்தானே முக்கியம் என்றுதானே சாதாரணமாக கூறுவீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  40. மிதக்கும்வெளி said...

    /உரையாடல் 'கட்டபொம்மன்' ஸ்டைலில் விறுவிறுப்பாகப் போனது/



    இதுக்குபேர்தான் குசும்பா?

  41. மிதக்கும்வெளி said...

    அன்பின் இனிய டூண்டு சாரி டோண்டு.

    நான் 'நீ' என்று குறிப்பிட்டிருப்பது எழுத்தமைதிக்காகவும் வாசிப்பின் ஓட்டத்திற்காகவும்தானே தவிர உங்களை மரியாதைக்குறைவாகக் குறிப்பிடவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் நீங்கள் ஆபாசமாக எழுதினீர்களா என்பது என் கவலையுமில்லை. ஆபாசம், கெட்டவார்த்தை, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றிற்கு எனக்கு வேறுபார்வைகள் இருக்கின்றன. நீங்கள் ஆபாசமாகவே எழுதியிருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. நான் மட்டுமல்ல, இப்போது உங்களை விமர்சிக்கும் பலரும்கூட அனானியாய், அதராய்ப் பின்னூட்டம் போட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் நல்லொழுக்க லெக்சர் அடித்துக்கொண்டிருந்தவர்கள் அல்ல, உங்களைப் போல.
    மேலும் அவர்கள் அனானியாய் மாற முக்கியக் காரணம் நீங்கள்தான்.
    எனக்கு இந்த எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனையெல்லாம் தெரியாவிட்டாலும் பன்றிக்குட்டிகள் போல உங்கள் பதிவுகளுக்கு மட்டும் கமெண்ட்கள் பெருகியகதை தெரியும். ஒன்று நீங்களே வேறுபெயர்களில் உங்களுக்குக் கமெண்ட்கள் போட்டுக்கொள்வீர்கள். அல்லது முத்துச்சாமி என்பவர் உங்களுக்குக் கமெண்ட் போடுவதாக வைத்துக்கொள்வோம். முத்துவுக்கு ஒரு நன்றி சொல்வீர்கள், அப்புறம் சாமிக்கு ஒரு நன்றிக்கு சொல்வீர்கள். ஆக உங்கள் பதிவு எப்போதுமே 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகை'களில் நின்றுகொண்டேயிருக்கும். மற்ற பதிவாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்களாகப் போல கைபிசைந்துகொண்டு நிற்கவேண்டும்.
    அடுத்து நீங்கள் முன்வைக்கும் இன்னொரு காரணம் உங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டால் போலிடோண்டு மிரட்டுகிறார் என்பது. ஆனால் எனக்குள்ள கேள்வியெல்லாம் அப்படி என்ன எழவுதான் இருக்கிறது என்று உங்கள் பதிவில் வந்து பின்னூட்டம் போடுகிறார்கள் என்பதுதான். உங்கள் எழுத்துக்களில் இருப்பதெல்லாம் அய்யங்கார், அம்பாசிடர்கார் போன்ற தத்துபித்து உளறல்கள் அப்புறம் கொஞ்சம் தயிர்சாதவாசனை. இந்தப் பதிவுக்குப் போய் பின்னூட்டமும் இட்டுவிட்டு அப்புறம் போலியிடமும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டுமா? வாழ்க்கையில் பைசா பெறாத விசயத்திற்கெல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்ன?
    இந்த விசயத்தில் போலியின் மீதும் எனக்க்கு வருத்தம்தான். உங்கள் பதிவுக்கெல்லாம் போய்ப் பின்னூட்டம் இடக்கூடியளவிற்கு இருக்கக்கூடிய அப்பாவிகளை ஏன் மிரட்ட வேண்டும்?

  42. மிதக்கும்வெளி said...

    /திவாகர் ஒரு சில மனிதர்கள் செய்யும் தவருக்கு அவர்கள் சார்ந்து இருக்கும் சமூகமோ, நாடோ என்ன தவறு செய்தது. இது போல் பொதுமை படுத்துவதை தவிர்க்கலாமே/

    அன்பின் இனிய சந்தோஷ்

    உரையாடலில் இது யாருடைய கூற்றாக வருகிறது என்று கவனியுங்கள்.

  43. மிதக்கும்வெளி said...

    /வெளியே மிதக்கும் அய்யா,

    யார் யாரோ என் பேர்ல போடறாங்க.செந்தில் அய்யா ஆரம்பித்து வைத்த கூத்து இது/

    உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. செந்திலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  44. மிதக்கும்வெளி said...

    /வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் என்ற பள்ளமாவீரனின் பெயரை பேருந்திற்கு வைத்தபோது தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்து எங்கள் குடிசைகள் தீக்கிரையாயின.

    Yes, but who did that.Do you have the guts the name those castes who did this.

    /


    அதுதான் அடுத்த வரியிலேயே சொல்லியிருக்கிறேனே, ஆதிக்கச்சாதிக் கள்ளவெறியர்களின் வெறியாட்டம் என்று.

  45. மிதக்கும்வெளி said...

    /டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:

    http://aiyan-kali.blogspot.com/ /

    படித்தேன் தோழரே. ஒருசிலவற்றில் எனக்குக் கருத்து மாறுபாடு இருந்தாலும் தொடர்ந்து படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

  46. Anonymous said...

    1) To ensure the castist structure of parpanist religion .

    2) Whenever the caste structure; which is the one and only contribution of parpans to Indian society is challenged, the upper caste dogs will come & bark to show their regards to parpanism.

    Now we do not have any hesitation to reveal 'who?'...

    YES IT IS DONE BY UPPER CASTE DOGS.

    Thevars are considered as intermediary caste not upper caste.
    They come under Other Backward Classes and get benefits of reservation. Why do some christians
    are called dalit christians and why
    they want to be treated as equal to SCs.Is there no caste division
    in muslim society in India.
    The harsh fact is you cannot blame one caste for all ills of Indian
    society.But doing so is easy for you as it obscures the real issues.

    அதுதான் அடுத்த வரியிலேயே சொல்லியிருக்கிறேனே, ஆதிக்கச்சாதிக் கள்ளவெறியர்களின் வெறியாட்டம் என்று.
    If so what is the point in telling that 'Murali Manohar Joshi'. In which way he is responsible for that.Has he supported them.
    "உரையாடலில் இது யாருடைய கூற்றாக வருகிறது என்று கவனியுங்கள்".

    The voice of the author is evident
    here.Anyone who has read your previous posts know that this is
    your view.It is illogical to attribute this view to 'Murali
    Manohar Joshi'.That is obvious.
    Do you want to deconstruct this and
    correlate this view with your views
    on brahmins in other blog posts.

  47. கொசு said...

    மதுசூதனன் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் இது.

    செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.

    உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.

    ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.

    பைதபை நானும் உம்ம ஜாதிதான்!

    ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.

    சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?

  48. Anonymous said...

    // டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை://

    தலித்தியப் பார்வையா? இங்கே ஏதோ இடிக்கிற மாதிரி தெரியுதே! யாராவது இணைய அல்லது மொழி ஆராய்ச்சியாளர்கள் கீழ்கண்ட இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டு கருத்து சொல்லவும்.

    http://aiyan-kali.blogspot.com

    http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_05.html

  49. Anonymous said...

    சவுக்கடி...
    அருமையான பதிவு..
    பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட..