அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

ரண்டாம் பார்வை
அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
அமைதியாய்
மௌனத்தைச் சுமந்து.

மரம் அனுப்பும்
முத்தச்சருகுகளை சுமந்தபடி
செ ல் லு ம்
அதன் சலசலப்புகளை
மட்டுமே கேட்டறிவீர்கள்.

அதன் அடிவயிற்றில்
புதைந்த மௌனம்
மௌனமும் மௌனமானது.

சிலநேரங்களில் நதி
அபூர்வமாய்ச் சிரிக்கக்கூடும்
சிறுவர்கள் தன் முகத்தில்
சிறுநீர்கழிக்கும்போதும்
சிலிர்ப்பூட்டும்படி
மீன்கள் தொடையை
உரசிக் கடக்கும்போதும்.

2 உரையாட வந்தவர்கள்:

  1. bala said...

    //அபூர்வமாய்ச் சிரிக்கக்கூடும்
    சிறுவர்கள் தன் முகத்தில்
    சிறுநீர்கழிக்கும்போதும்//

    வெளியே மிதக்கும் அய்யா,

    சிறுவர்கள் அடிச்சா சிரிக்கும்.சரி.நீங்க அடிச்சீங்கன்னா,என்ன பண்ணும்,உங்க மூஞ்சியில எச்சில் துப்புமா?
    இதெல்லாம் கவிதைன்னு எழுதறீங்களே?

    பாலா

  2. கார்மேகராஜா said...

    ///அதன் அடிவயிற்றில்
    புதைந்த மௌனம்
    மௌனமும் மௌனமானது///

    அருமையான வரிகள்.

    ///சிலநேரங்களில் நதிஅபூர்வமாய்ச் சிரிக்கக்கூடும்சிறுவர்கள் தன் முகத்தில் சிறுநீர்கழிக்கும்போதும்சிலிர்ப்பூட்டும்படிமீன்கள் தொடையைஉரசிக் கடக்கும்போதும்///

    நன்றாக இருக்கிறது.

    பாலா போன்ற சில கழிச்சடைகள் யார் ஒருவர் நன்றாக எழுதினாலும் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள் போல!