அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

வெறுப்பின் வழி உன்னை வந்தடைந்ததாய் சொன்னாய்.
தாயின் மடியை மூத்திரத்தால் நனைக்கும் குழந்தை.
தாய் நீ.

பேசும்போது உன் முகம் பார்த்துபேசுவதில்லை என்று கோபித்தாய்.
கடவுளின் முகம்
யாரும் பார்த்தில்லை சகி
இறை நீ.

உன்னிடம் பேசியபிறகு
மரியாதைக்கான அடையாளமாய்த்
தேங்கிநிற்கும்
சில கண்ணீர்த்துளிகள்
வலி நீ.

எப்போதேனும் உன் மீது
கல்லெறிந்து பார்க்க
ஆசை வரும்.
நதி நீ.

4 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    எனக்கு எதுவும் புரியல.

    செந்தழல் ரவி

  2. Anonymous said...

    அருமையான கவிதை

  3. பாரதி தம்பி said...

    கவித சூப்பரு...

  4. bala said...

    //வெறுப்பின் வழி உன்னை வந்தடைந்ததாய் சொன்னாய்.
    தாயின் மடியை மூத்திரத்தால் நனைக்கும் குழந்தை.
    தாய் //

    வெளியே மிதக்கும் அய்யா,
    என்ன சொல்றீங்கய்யா?கன்னட குழந்தைகள்(அடப்பாவிகளா, அங்கேயும் லக்கி கும்பல் ஒண்ணு இருக்கா?) போற மூத்திரத்துக்கு தமிழர்கள் ஆலாப் பறக்கறாங்கன்னா?"இன்னும் கொஞ்சம் மூத்திரம் போங்கடா"ன்னு கெஞ்சறோம்னா சொல்றீங்க?
    நீங்க சொல்றது சரியாகத் தான் இருக்கும்.ஏற்கெனவே ஒரூ டுபாக்கூர் கன்னட தாடிக்காரர்கிட்ட கற்ப்பை இழந்தவள் தானே தமிழ்.

    பாலா