சுழல்கிறது சுடர்

நண்பர் ஓசை செல்லா இப்போது என் கையில் சுடரைத் தந்திருகிறார். காண்க..

http://osaichella.blogspot.com/2007/02/blog-post_11.html

உங்கள்எழுத்துக்களுக்கு inspiration யார்?

கவிதைக்கு யவனிகாசிறீராம். மற்றபடி கட்டுரைகளுக்கு பெரியார், அ.மார்க்ஸ், சாருநிவேதிதா போன்ற பலர்.


2. தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் இவ்வளவு செயற்கைத் தனமாக இருக்க யார் காரணம்?


தமிழ்ச்சினிமாவே செயற்கையாக இருக்கும்போது கதாநாயகர்கள் மட்டும் பாவம் என்ன செய்வார்கள்?


3. கவிதையின் விதை ?

ஏதோ ஒரு பொறி, அல்லது ஈரத்துளி, அல்லது சிலவேளை முத்தச்சிலிர்ப்பு.


4. நிதர்சனத்தின் நிசப்தங்கள் என்ற தலைப்பில் சில வரிகள்எழுதுங்களேன்?


நிசப்தமாய்க் கிடக்கிறது இரவு.
ஒருவேளை சுவர்க்கோழி மட்டுமே
அந்த இரவைச் சிதைத்துக்கொண்டிருக்கலாம்.
என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.
தெரியும் நிலையில் இல்லை நான்.
பின்னிரவின் உறக்கத்தில்
சிவப்பாய்க் கவிந்த
கொடுங்கனவின் இடையில்
விழித்து அலறுகிறேன்.
இப்போது இரவு சிதைந்திருக்கிறது.
சுவர்க்கோழியோ அடங்கியிருக்கிறது.

(அவசரத்தில் எழுதியதால் முழுமை அடையாமல் போயிருந்திருக்கலாம்.)

5. "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" ... அடுத்து என்ன மாற்றம் நிகழ்த்தப் படவேண்டும் என்று நினைக்கிறீர்? ( சமூக மற்றும் இலக்கியக் தளங்களில் ....)


சமூகத்தளங்களில் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்பு, தேசியம், ஏகாதிபத்தியம் என்னும் இரு ஆதிக்கப் பெருங்கதையாடல்களிருந்து விடுதலை பெற்று அன்பு, அன்பை மட்டுமே முன்நிபந்தனையாகக் கொண்ட சமூகம் உருவாகுதல், மொத்தத்தில் சுதந்திரம் அடைந்த தன்னிலைகளை உருவாக்குவது. இலக்கியத்தைப் பொறுத்தவரை இன்னும் அதிகமான விளிம்புநிலைமக்களின் வாழ்க்கை பதிவு செய்யப்படவேண்டும். அறிவின் சேகரம் அதிகரிக்கவேண்டும். சமத்துவமும் மனிதவிடுதலையும் நோக்கியதாகவும் சக உயிர்களை நேசிப்பதற்கான மார்க்கமாகவும் இலக்கியம் மாறவேண்டும்.

நன்றி செல்லா.

இப்போது சுடரை வரவணையான் கைகளுக்கு மாற்றுகிறேன். செந்திலிடம் அய்ந்துகேள்விகள்...

1. இன்னமும் திராவிட இயக்கத்திற்கான தேவைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

2. தமிழ்த்தேசியம், ஈழப்பிரச்சினை குறித்து உங்கள் நிலைப்பாடு...

3. காதல் வந்தால் சொல்லி அனுப்புவீர்களா?

4. வலையுலகின் இயங்குதளம் என்னவாய் இருப்பதாய் உணர்கிறீர்கள்?

5. பொதுவாக நீங்களும் நானும் பலசமயம் கொண்டாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறோம். ஆனால் எதுவித வலியையோ அல்லது துயரத்தையோ எதிர்கொள்ளாத மேம்போக்கான மனம் மட்டும்தான் இதை வலியுறுத்துகிறு என்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?

20 உரையாட வந்தவர்கள்:

  1. லக்கிலுக் said...

    நீங்கள் வரவனை கையில் சுடரை தந்ததற்குப் பதிலாக "பின்னூட்டப் புயல் பாலா" அவர்களிடம் சுடரை ஒப்படைத்திருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட....

  2. Anonymous said...

    காதல் வந்தால் சொல்லி அனுப்புவீர்களா?

    What do you mean.Wont it be enough if he says that to that girls or
    do you expect him to love you :)

  3. Anonymous said...

    அருமையானதொரு முயற்சி. தொடரட்டும் !!!

  4. Anonymous said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    எப்படி அய்யா இதெல்லாம்? அடுத்தது வரவனையான் அய்யாவா? அவருக்கு வேறு நான் பின்னூட்டங்கள் போடவேண்டும்.

  5. Anonymous said...

    சமத்துவமும் மனிதவிடுதலையும் நோக்கியதாகவும் சக உயிர்களை நேசிப்பதற்கான மார்க்கமாகவும் இலக்கியம் மாறவேண்டும்.

    Nonsense.One can write great literature and yet be a bigot.
    If this is the aim of liteature then moral stories are sufficient.

  6. கவிதா | Kavitha said...

    Excellant Questions and Replys. எப்படிங்க இப்படி எல்லாம் கேள்வி கேட்டு அசத்தறீங்க.. எனக்கு வரமாட்டேன்ங்குது.. :))

    உங்களை எல்லாம் பார்த்து படிச்சிக்கனும் நானு..

  7. Osai Chella said...

    தங்கள் வேலைகளுக்கு இடையிலும் சுடரை நிறைவு செய்ததற்கு மிக நன்றி! நிசப்தம் குறைப்பிரசவம் இல்லை! நன்றாகவே வந்திருக்கிறது!

  8. மிதக்கும்வெளி said...

    /நீங்கள் வரவனை கையில் சுடரை தந்ததற்குப் பதிலாக "பின்னூட்டப் புயல் பாலா" அவர்களிடம் சுடரை ஒப்படைத்திருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட/

    நல்ல கருத்து!

  9. மிதக்கும்வெளி said...

    /What do you mean.Wont it be enough if he says that to that girls or
    do you expect him to love you :)/

    unfortunately we arenot gays.

  10. மிதக்கும்வெளி said...

    /அவருக்கு வேறு நான் பின்னூட்டங்கள் போடவேண்டும்.
    /

    உங்களுக்கு ஓவர்டைம்தான் போங்க

  11. மிதக்கும்வெளி said...

    /உங்களை எல்லாம் பார்த்து படிச்சிக்கனும் நானு.. /

    உள்குத்து...?

  12. Anonymous said...

    நல்ல முயற்சி...சுவாரசியமாக உள்ளது...சகவலைப்பதிவர்களை பற்றி அறிய உதவும்..

  13. கவிதா | Kavitha said...

    /உங்களை எல்லாம் பார்த்து படிச்சிக்கனும் நானு.. /
    உள்குத்து...?//

    என்னங்க உண்மை சொன்னா கூட உள்குத்தான்னு கேட்கறீங்க.. நிஜமாவே படிச்சிக்கனும்ங்க.. கேள்விக்கேட்க கூட ஒரு திறமை வேண்டும் சரியா?..

  14. மிதக்கும்வெளி said...

    /நல்ல முயற்சி...சுவாரசியமாக உள்ளது...சகவலைப்பதிவர்களை பற்றி அறிய உதவும்.. /

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி!உங்களுக்கு என் காதலர்தின புரியாணி வாழ்த்துக்கள்!

  15. Anonymous said...

    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் (இருந்தாலும் இந்த கிண்டல் கூடாது)

  16. Anonymous said...

    unfortunately we are not gays.
    Better luck in next birth :)

  17. Anonymous said...

    thala,

    super

  18. மெலட்டூர். இரா.நடராஜன் said...

    உங்களின் இரவுக் கவிதை அமர்களமாக இருக்கிறது. குறுங்கவிதை என்றாலும் பளிச்சென்று சொல்ல்லியிருக்கிறீர்கள்.

    மனதுக்கு இசைந்த ஒரு நல்ல இசைக் கேட்ட திருப்தி எனக்கு கிடைத்தது.

    உங்கள் மற்ற கவிதைகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  19. Anonymous said...

    Thozhar..
    Kadantha irandu naatkalaaga ungal ezhuthukkal thaaan april-06 irunthu ithO kadaisi vaarthai varai padithaayitRu. mandaikul suguna periya maatrangal nigalthi vittaar.chance'a illeenga..keep it Up..

  20. காலம் said...

    தங்களின் பதிவுகள் இந்த குழுமத்தில் ப்பெரும் அதிர்சிகளை கட்டமைக்கப்பட்ட கூட்டு மனங்களுக்குள்
    ஏற்படுத்துகிறது
    தொடர்க
    நாதாரி
    கோவை