புலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்....



தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச்செயலாளர் தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி மீண்டும் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு xஎதிர்ப்பு என்னும் இருவேறுமுகாமகளிலிருந்தும் பலத்த விவாதங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன. தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்திருந்தது.

இவ்வூர்வலத்தில் கலந்துகொள்வதாயிருந்த, தற்போது திமுக கூட்டணியிலிருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்தேசபொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மணியரசன் போன்றோர் தடையை மீறி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார்கள். 'இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றிவிட்டது' என்றும் 'கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்' என்றும் கர்ஜித்திருக்கிறார் வைகோ.

மறுபுறத்திலோ பெரியார் திராவிடர்கழகத்தினர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தட்டி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்டனத்திற்குப் பிறகு காங்கிரசாரால் கிழிக்கப்பட, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் பெரியார் தி.க தோழர்கள் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் கலைஞர் தமிழ்செல்வனுக்கு இரங்கல் விடுத்ததே சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதுகுறித்து கேள்விகேட்பதற்குத் திராணியற்ற வைகோதான் கருணாநிதி மீது பாய்ந்திருக்கிறார். வைகோவைப் பொறுத்தவரை அவருக்கென்று இருந்த பல சாதகமான முகமூடிகள் கழன்றுவிழுந்திருக்கின்றன. பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய சில திராவிட இயக்கபோக்கின் அம்சங்களையும் இழந்துவிட்ட வைகோவிற்கு மிஞ்சியிருப்பது புலி ஆதரவு அரசியல் வேடம் மட்டும்தான்.

ஆனால் அதிலும்கூட சமீபகாலமாகத் திருமாவளவன் போன்றவர்கள் வைகோவை விடவும் தீவிரமாகப் புலி ஆதரவு அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தன் கடைசிக் கோவணமும் கழற்றப்படுமோ என்னும் பதட்டம் வைகோவிற்கு.

நெடுமாறனைப் பொறுத்தவரை ஈழ ஆதரவு அரசியலில் தன் இடம் பறிபோய்விடக்கூடாது. புலிகளைத் தமிழகத்தில் யார் ஆதரித்தாலும் தான் மட்டுமே அவர்களுக்கு ஞானத்தந்தையாக விளங்கவேண்டும் என்னும் அரிப்பு உண்டு. நெடுமாறனின் தமிழ்த்தேசியக் கருத்தியல் தளம் வெள்ளாளக் கருத்தியலும் முதலாளியமுமே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் சமீபத்திய உதாரணம், நெடுமாறன் தலைவராய்ப் பங்குபற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு தமிழகத் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு 'உலகபெருந்தமிழர் விருது' வழங்கியிருப்பதைச் சொல்லலாம். (இப்போக்கைக் கண்டித்து அரங்கிலிருந்து ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் மற்றும் பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.ராமகிருட்டிணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.)

பொள்ளாச்சி மகாலிங்கம் வெளிப்படையான இந்துத்துவ ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா கூட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர், இந்துத்துவத்தைப் பரப்புவதற்காகவே 'ஓம்சக்தி' என்னும் பிற்போக்கு இதழை நடத்திவருபவர். தொழிலாளர் விரோத மற்றும் உலகமயமாக்கல் ஆதரவுப் போக்கைக் கடைபிடித்துவருபவர். இவருக்கு விருது வழங்கி மகிழும் நெடுமாறனின் அரசியல் லட்சணம் எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கத்தேவையில்லை.

ஒருபுறம் புலிகள் ஆதரவு, இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தாலும் மறுபுறம் இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டம் போன்ற சாதியொழிப்புப் போராட்டங்களைப் பெரியார் தி.க முன்னெடுத்து நடத்திவருகிறது. ஆனால் சாதியமைப்பிற்கு எதிராகவோ, இந்துசாதியத்தால் நாள்தோறும் ஒடுக்கப்பட்டுவரும் உள்ளூர்த்தமிழர்களுக்கு ஆதரவாகவோ ஒரு புல்லையும் பிடுங்கிப்போட்டதில்லை நெடுமாறன்.

இலங்கைத்தமிழர்களுக்கு உணவுபொருட்கள் போகவேண்டுமென்று உண்ணாவிரத நாடகம் நடத்தி தானே இலங்கைக்குச் சென்று உணவுபொருட்களை அளிக்கப்போவதாக சாகசவாத பயாஸ்கோப் ஓட்டும் நெடுமாறனுக்கு தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் ஊரிலிருந்து சேரிக்குத் தண்ணீர் வருவதில்லை என்பது தெரியுமா? தலித்துகள் வாயில் மலந்திணிக்கப்படுவது வெறுமனே செய்திகளாயிருந்தது மாறி, நிகழ்வுகளாக மாறிவருகின்றன. இதுகுறித்தெல்லாம் நெடுமாறனின் 'தமிழ்த்தேசியம்' கவலைப்படாதா?

இப்படியாக ஒருபுறம் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் சாகசவாதப் படம் ஓட்டியே தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுயற்சிக்க மறுபுறம் புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம் பார்பனப் பாசிஸ்ட்களாலும் காங்கிரசு தேசிய வெறியர்களாலும் முடக்கிவிடப்பட்டு வருகிறது.

புலி ஆதரவுப் போராளி வைகோவிற்கு தன் சகோதரி ஜெயலலிதாவை எதிர்த்துக் கேட்க துணிவில்லை. கருணாநிதியோ புலிகள் விசயத்தில் காங்கிரசைப் பகைத்துகொள்ள முடியாது. இனி என்ன நடக்கும்? வழக்கம்போல 'புலிகள் ஊடுருவல் புராணங்களை' தினமலர், துக்ளக், ஜெயா பார்ப்பனப் பாசிசக் கூட்டணி ஆரம்பித்துவிட்டது.

தனது கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளவும் 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்' கருணாநிதி தனது அரசு எந்திரத்தை 'முடுக்கிவிடுவார்'. இப்போதே 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக' பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜி.பி அறிவித்துள்ளார்.

இன்னும் சிலதினங்களில் யாராவது அப்பாவி ஈழத்தமிழர் வெடிகுண்டுடன் 'கண்டுபிடிக்கப்பட்டு' கைது செய்யப்படுவார். 'புலிகளின் ஊடுருவல்' தடுத்து நிறுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியில் சகல துவாரங்களிலும் பெவிகால் ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய வீராதிவீரன்கள், வீரபத்திரப் பேரன்கள் 'வீர முழக்கம்' செய்யத்துவங்கி விடுவார்கள். வைகோ, நெடுமாறன் மாதிரியான 'வாடகை மாவீரன்களுகு' தமிழ்நாடு முழுதும் பொதுக்கூட்டம் போட ஒரு நல்ல வாய்ப்பு.

தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் முகாம்களில் அடைத்துவைக்கபட்டிருக்கும் இலங்கை அகதித் தமிழர்கள் ஏற்கனவே 'நாயினும் கீழான வாழ்வு' வாழ்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுரிமையை உறுதிசெய்ய எந்த ஓட்டுபொறுக்கிக் கட்சிகளோ தமிழ்த்தேசிய மாவீரன்களோ முயற்சித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நடக்கப்போகும் நாடகத்தில் அரசின் கடும் கண்காணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகப்போவது தமிழகத்தில் வசிக்கும் அப்பாவி இலங்கை அகதிகளே..ஆகமொத்தம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப் போகிறது, 'ஆடு புலி புல்லுக்கட்டு' நாடகம்.

கற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்













'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான அன்றே பல நண்பர்கள் போன் செய்து, "நீங்கள் அவசியம் படம் பார்க்கவேண்டும், அதுபற்றி எழுதவேண்டும்" என்றார்கள். ஆனால் கடைசிவரை சென்னையில் அப்படத்தைப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. இப்போது திண்டுக்கல்லில் கள்ளக்குறுந்தகடு (?) வழியாகவே பார்க்க நேர்ந்தது.

அப்படம் பற்றி வலைத்தளங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களைத் திட்டமிட்டே படிக்கவில்லை. உயிர்மை இதழில் சாருநிவேதிதாவின் விமர்சனம் மட்டும் படித்திருந்தேன். படத்தை வெகுவாய்ப் பாராட்டியிருந்த சாரு, அப்படத்திலுள்ள தெளிவின்மையைக் குறிப்பிட்டு தனிப்பட்ட உளவியல் அல்லது சமூகச்சிக்கல் ஆகியவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்கெடுத்து விபரித்திருந்தால் சிறப்பாகவிருந்திருக்குமென்று கருத்து தெரிவித்திருந்தார். (சாருவின் தேர்வு தனிமனித உளவியல் நெருக்கடி)

கற்றது தமிழ் முன்வைக்கும் அரசியலோடு ஒத்த கருத்துடைய வேறுசில நண்பர்களின் கருத்தோ, 'இத்தகைய அரசியல் நிலைப்பாடு உடையவன் ஒரு சைக்கோவாக கொலைகளைச் செய்யும்போது அதன் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது' என்பதாகவிருந்தது.

திரைப்படம் வந்து பலநாட்களாகி, பல ஊர்களில் தூக்கப்பட்டபிறகு எழுதப்படும் விமர்சனம் என்பதால் விரிவாக எழுத விருப்பமில்லை. ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள ஆவல்...

இதுமாதிரியாக காட்சியமைப்புகளிலும், காட்சி விபரிப்புகளிலும் கவித்துவம் தெறிக்கும் திரைப்படத்தை இதற்குமுன் தமிழில் பார்த்ததில்லை. பிரபாகர் தான் சந்தித்த முதல் சாவாக, தன் நாய் டோனியின் சாவைச் சொல்கிறான். மனிதர்களே மதிக்கப்படாத தமிழ்ச்சினிமாவில் நாய் மதிக்கப்படுவது அபூர்வம்தானே!

தாயின் சதைத்துணுக்குகள் சிதைந்து தெளிக்கும் மரணத்தின் குரூர வாசனை, பால்யவயது காதல் என்றவுடன் 'ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா' என்ற அலுப்பு தோன்றுவதற்குள், இல்லாத புலி இல்லாத பாலைவனம் குறித்துக் காணும் நீண்டகனவு குறித்த கதையளப்பு கவிதை.

இப்படியாக பிரபாகரின் தன்வரலாற்றுக் கதைமொழிதல் முழுவதுமே கவிதை, கவிதை, கவிதை... போலீசு என்னும் அதிகார நிறுவனத்தைச் சரியாகவே தோலுரித்துக்காட்டியிருக்கிறது படம்.

படத்தின் மய்யமான இரு பிரச்சினைகளுக்கு வருவோம். சாரு மற்றும் நண்பர்கள் சொன்ன பிரச்சினை... கற்றது தமிழ், தான் முன்வைக்க விரும்பிய அரசியல் குறித்துப் பெரிதாய்ச் சமரசம் செய்துகொண்டதாய் எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் படித்துவந்த அனந்தரங்கனிடம் பிரபாகர், "அமெரிக்கா போய் வந்தும் இன்னும் நீ நாமம் போடுவதை விடலையா?' என்று கேட்கும் காட்சியிலாகட்டும், பிரபாகர் 'இந்த நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலை, ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ்ஷுக்கு புரியலாம்' எனச் சொல்லும் காட்சிகளிலும் சரியகவே அரசியலை முன்வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒருவசதிக்காக சொல்வதாகவிருந்தால் ஷங்கரின் படங்களுக்கு எதிரான கதையாடல் என்றே 'கற்றது தமிழ்' படத்தைச் சொல்லலாம். குற்றங்கள் புரிந்தபிறகு, தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவைப்பது, அந்த வாக்குமூலம் குறித்து 'மக்கள் கருத்து' என ஷங்கரின் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்.

ஆனால் சங்கரின் சாகசநாயகன்கள் போல பிரபாகர், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஷங்கர் படத்தின் 'மக்கள் கருத்துக்கள்' பொதுப்புத்தியைக் கட்டமைக்க விரும்பும் ஒத்துப்பாடல்களாக இருக்கும். ஆனால் கற்றது தமிழ் படத்தில் வரும் 'மக்கள் கருத்துக்களோ' 'வயிற்றெரிச்சலில் பேசறான் சார்' என்று மாற்றுக்கருத்தையும் பதிவுசெய்கிறது.

மேலும் ஒரு தனிமனிதன் சந்திக்க நேர்கிற சிக்கலிலிருந்தே தனக்கான சமூகக்கருத்தை உருவாக்கிக்கொள்கிறான் என்னும் அடிப்படையில் ராமின் கதைசொல்லல் முறை முற்றிலும் சரியானது என்றே நான் கருதுகிறேன். வெறுமனே அரசிய்ல் பிரச்சினையை மட்டும் பேசியிருந்கால் ஒரு பிரச்சாரம் என்பதைத் தாண்டாது தன் கலைத்தன்மையை இழந்திருக்கும், அல்லது சாரு சொல்வதைப் போல வெறுமனே தனிமனித உளவியல் சிக்கல் பற்றி மட்டுமே பேசியிருந்தால் மாதந்தோறும் வெளிவரும் இரண்டுமூன்று தமிழ் சைக்கோ சினிமாவிலொன்றாக 'கற்றது தமிழ்' வந்துபோயிருக்கும்.

இன்னொரு பிரச்சினை, பெண்களின் பனியனிலுள்ள வாக்கியங்கள் குறித்த விமர்சனம், மற்றும் கடற்கரையில் காதலர்களைச் சுட்டுக்கொல்வது ஆகிய இருகாட்சிகள். பிரதியிலிருந்து தனித்து எடுத்துப் பார்த்தால் இரண்டுமே ஆணாதிக்கப்பாசிசம்தான். ஆனால் வருமானம், சமூகப்படிநிலை, நுகர்வுக்கலாச்சாரம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்காலத்திய மணவுறவுகளின் பின்னணியில் பார்த்தால் அக்காட்சிகளுக்கான நியாயங்கள் விளங்கும்.

இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன. நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.

இன்னொருபுறம் சாதிமறுப்புத்திருமணங்களுக்கான விளம்பரங்கள்கூட மாதம் 30000/- ரூபாய் வருமானமுள்ள ஆணை வேண்டிநிற்கின்றன. இங்கு புதியதொரு வர்க்கச்சூழல் உருவாகியுள்ளது. அதிக வருமானம் பெண்களின் சுயச்சார்பான பொருளாதாரச்சார்பு போன்ற சில சாதகமான அம்சங்களை உருவாக்கியிருந்தாலும் மறுபுறத்தில் எந்த சமூகப்பொறுப்புமற்ற சம்பாதிக்கும் ஆண், பெண் பிராணிகளின் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த சூழலின் அடிப்படையிலேயே 'கற்றது தமிழ்' திரைப்படத்கை அணுகமுடியுமென்று கருதுகிறேன்.

ஆனால் கற்றது தமிழ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு படத்தின் 'இருண்மை அல்லது தெளிவின்மை' மட்டுமே காரணமென்று நான் கருதவில்லை.

திண்டுக்கல்லில் இப்படம் குறித்து விசாரித்தபோது பலருக்கும் இப்படம் குறித்து அதிகமும் தெரியவில்லை. வீட்டு வாடகை ஏறுவது, ஸ்பென்சர்பிளாசா, சத்யம் தியேட்டர் குறித்த விவரங்கள் சென்னையைத் தாண்டி தெரியாத அல்லது பாதிக்காத இடங்களில் இப்படத்தின் தீவிரம் சென்னையைத் தவிர பிற பகுதிகளால் இப்போதைக்கு உணரப்படப்போவதில்லை.

மேலும் கணிப்பொறியை அலாவுதீனின் அற்புதவிளக்காய் நினைத்து அதற்குப் பழக்கப்படுத்த தன் குழந்தைகளைப் பயிற்று வரும் பெற்றோர்கள் மற்றும் வருமானம் மற்றும் கேளிக்கையையே நோக்கமாய்க்கொண்ட இளையதலைமுறையினரும் நிச்சயமாய் இப்படத்தைப் புறக்கணிக்கவே செய்வர்.இப்படத்திற்கெதிராக அய்.டி துறையைச் சேர்ந்த நண்பர்கள் குறுஞ்செய்திகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சாரமே செய்ததாய் அறிந்தேன். அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க?' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

ஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.

டோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'யும்...

சிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார்.

இத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான்.

இப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்டுகோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்?

பின் குறிப்பு :

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.

"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி?

பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்கிறது. நான்குநாட்களுக்கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர்விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தில் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவதால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்காரம் தவிர்த்து) திரும்பப்பெற்றிருக்கிறது.

ஜெயலலிதாவோ தான் இவ்விழாவிற்காக மூன்று கோடி ஒதுக்கியதாகவும் ஆனால் திமுக அரசு அய்ம்பது லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். 'புரட்சிப்புயல்' வைகோவோ தான் தான் கருணாநிதியைவிட நீண்டகாலமாக குருபூசையில் அஞ்சலி செலுத்தியவன் என்று உரிமைகோருகிறார். சரத்குமார், பா.ம.க இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்துவதால் அரசியல் ரீதியாக ஆதாயமென்ன என்று விளங்கவேயில்லை.

தலித்மக்களின் காவலன் திருமாவளவனோ தலித்துகளை வெட்டிச்சாய்த்த முத்துராமலிங்கம் நூற்றாண்டுவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தது அறிந்ததே. சாதிக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குருபூசையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான நல்லகண்ணுவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது.

இந்தளவிற்குக் கொண்டாடபடவேண்டியளவிற்கு முத்துராமலிங்கத்தின் 'சமூகப் பங்களிப்புதான் என்ன?

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர், குறிப்பாக பிரமலைக்கள்ளர்கள் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டனர். காவல்நிலையத்தில் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரைச்சட்டம், ரேகைச்சட்டம் ஆகிய சனநாயகமற்ற இத்தகைய கொடூரச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முத்துராமலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. அத்தகைய போராட்டங்கள் நியாயம் வாய்ந்தவையே.

ஆனால் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட முக்குலத்துச் சமூகம் தனக்குக் கீழுள்ள சாதிகளை ஒடுக்கும் கொடூரச் சமூகமாக மாறிப்போனதில் முத்துராமலிங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. முத்துராமலிங்கம் உள்ளிட்ட தேவர் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத பிறசாதியினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. முத்துராமலிங்கம் மேடைகள் தோறும் சாதிப்பெருமிதத்தை முழங்கிவந்தார். அண்ணாதுரை, காமராசர் குறித்த அவரது விமர்சனங்கள் சாதியரீதியாக இழிவுபடுத்துபவையாகவே அமைந்தன.


தலித்துகளின் ஆலய நுழைவுப்போராட்டம் மற்றும் தலித்துகளுக்கு நிலமளித்தது ஆகியவற்றைத் தலித்துகளின் மீதான கரிசனமாகக் கூறுவர். ஆனால் ஆலயநுழைவுப்போராட்டத்தைப் பொறுத்தவரை அவரது 'பங்களிப்பு' என்பது தலித்துகளுக்கு எதிராக அடியாட்களை அனுப்பாதது என்பதாகவே இருந்தது.

அவரது தலித்மக்களின் மீதான அணுகுமுறை என்பதும் மேல்நோக்கிய பார்வையாகவே இருந்தது. பெருந்தன்மையாகச் சில சலுகைகளைத் தலித்துகளுக்கு அளித்தால் போதும் என்பதே அவரது நிலைப்பாடு. தலித்துகள் மறுக்கப்படட் உரிமைகளைத் தாங்களாகக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு எதிராக நின்றார். இதற்கான மகத்தான உதாரணம்தான் போராளி இம்மானுவேல் சேகரனின் படுகொலை.

மேலும் முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. 'தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்' என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

பார்வர்ட்பிளாக் என்னும் இடதுசாரிக் கட்சியை ஒரு வலதுசாரிக் கட்சியாக மாற்றிய 'பெருமை' முத்துராமலிங்கத்திற்கே உண்டு. இந்தியாவில் வேறெங்கும் பார்வர்டு பிளாக் இப்படியொரு சாதிக்கட்சியாகச் சுருங்கியதில்லை. தமிழகத்தில் பல்வேறு பார்வர்ட்பிளாக்குகளில் செயல்பட்டுவரும் தேவர்சாதி வெறியர்களுக்கோ 'பார்வர்ட் பிளாக்கின்' பொருளே தெரியாது. இந்தியதலைமைகளுக்கோ அதுகுறித்த அக்கறைகளுமில்லை.

மேலும் காங்கிரசு என்னும் நிலப்பிரபுத்துவக் கட்சிக்கு எதிராக வளர்ந்துவந்த திமுகவை நோக்கிய முத்துராமலிங்கத்தின் விமர்சனங்களைப் படித்தாலே அவர் எவ்வளவு பெரிய பிற்போக்குச்சக்தி என்பதை விளங்கிக்கொள்ள இயலும். திமுகவின் மொழிப்போராட்டம், வரம்பிற்குட்பட்ட பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை, முஸ்லீம் ஆதரவு, வடவர் எதிர்ப்பு ஆகியவற்றை முத்துராமலிங்கம் இந்தியப் பெருந்தேசியம் மற்றும் இந்துத்துவ நிலைப்பாடுகளின் அடிப்படையிலிருந்து விமர்சனம் என்றபெயரில் கொச்சைப்படுத்தினார். (சமயங்களில் திமுகவின் மீதான ஜீவாவின் விமர்சனங்களைப் பைத்தாலும் முத்துராமலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் வித்தியாசங்கள் தெரியாது)

சாதியச்சமூகமாய் விளங்கும் இந்தியச்சமூகத்தில் பல்வேறு சாதிகளும் அமைப்புகளாகத் திரள்வதும் தனக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் தவிர்க்கவியலாததே. ஆனால் தமிழகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதியமைப்புகள் பெரியார், அம்பேத்கர் போன்றவற்றை குறைந்தபட்ச தந்திரமாக திரு உருக்களாக முன்வைத்தும் சமூகநீதி என்னும் பெயரில் தங்களது பங்குகளை வலியுறுத்தியுமே தங்கள் சாதி அரசியலைக் கட்டமைத்திருக்கின்றன.

ஆனால் முக்குலத்துச் சாதியமைப்புகளோ அத்தகைய நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவைகளோ அல்லது சமூகநீதியை ஒத்துக்கொள்பவையோ அல்ல. அவை தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் எதையும் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்திலோ அவற்றின் கோரிக்கைகளே இட ஒதுக்கீட்டை நீக்கவேண்டும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை அகற்றவேண்டும் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.

முக்குலத்தோர் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரச்சக்தியாக உருமாறத்தொடங்கியது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எனலாம். ஒருபுறம் தீண்டாமையை மறைப்பதற்காக நாடார்கள் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவது, உள்ளூர்க் கோயில் பணிகளில் பங்கெடுத்துக்கொள்வது என்றெல்லாம் தொடங்கிய செயல்பாடுகள் 80களில் முற்றமுழுக்க அவர்களது சமூக உரிமைகளுக்காகப் போராடிய சுயமரியாதை இயக்கத்திடமிருந்து விலகி இந்துத்துவச் சக்திகளிடம் அடையாளங்காணச்செய்து இந்துமுன்னணிக்கு வழிகோலியது.

தங்களது சமூகத்திற்கான பங்குகளைக் கோரி அரசியல் பயணத்தைத் துவங்கிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் பழனிபாபா கூட்டணி தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியது. அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் இந்துமுன்னணியை மறைமுகமாய் ஆதரித்து ஊக்குவித்தார். மறுபுறத்தில் தனக்கு முதன்முதலாக வெற்றியைத் தேடித்தந்த சாதி என்பதால் (திண்டுக்கல்லில் மாயத்தேவர்) தேவர் சமூகத்தின் மீது கரிசனம் காட்டினார். பொன்.பரமகுரு உள்ளிட்ட பல முக்குலத்தோர் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் நிரப்பப்பட்டனர். கட்சியிலும் திருநாவுக்கரசு, காளிமுத்து என முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.

இந்த நிரப்பல் ஜெயலலிதா வருகைக்குப் பின் ஜெயா - சசி கூட்டணி மூலம் உச்சத்தை எட்டியது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் கிளைவிடத்தொடங்கின. அனைத்து அமைப்புகளும் தங்கள் ஞானகுருவாக முத்துராமலிங்கத்தையே ஏற்றுக்கொன்டன. முத்துராமலிங்கத்தைக் கடவுளாக்கி மொட்டையடித்தல், காதுகுத்துதல், பால்குடமெடுத்தல் ஆகிய கேலிக்கூத்துக்கள் எவ்வித விமர்சனங்களுமின்றி அரங்கேறின.

தமிழ்ச்சூழலில் ஆரம்பித்த காலத்திலிருந்தே தேவர் அரசியல் என்பது முற்றமுழுக்க பெரியாரின் அரசியலுக்கு எதிரானதேயாகும். கமுதி முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தைக் கைதுசெய்யவேண்டுமென்று குரல்கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. பெரியார் இறந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இரண்டு, அவை சங்கரமடம் மற்றும் தமிழகப் பார்வர்ட் பிளாக் கட்சி.

முக்குலத்தோர் அமைப்புகள் வலதுசாரித் தன்மையை அடைந்ததற்கு இன்னொரு உதாரணம் முருகன் ஜீ என்னும் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட 'பாரதீய பார்வர்ட் பிளாக்'. இந்துவெறியன் பிரவீண் தொகாடியாவைத் தமிழகத்திற்கு அழைத்து சிறுபான்மையினருக்கு எதிராக மதுரையில் திரிசூலம் வினியோகித்தது பாரதீய பார்வர்ட் பிளாக். மேலும் 'ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்' என்னும் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகள் நிரம்பிய ஒரு நூலை வெங்கடேசன் என்னும் தலித் ஒருவரைக் கொண்டு எழுதச் செய்து தனது கட்சி வெளியீடாகக் கொணர்ந்தது.

இவ்வாறாக தேவர் அரசியலின் வலதுசாரித்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவப் போக்குகளுக்குப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்த்திரையுலகில் இறுதிவரை கடவுளர் வேடமேற்று நடிக்காததால் 'லட்சிய நடிகர்' எனப் புகழப்படுபவர் எஸ்.எஸ்.ராசேந்திரன் என்னும் எஸ்.எஸ்.ஆர். இன்றுவரையிலும் கூட அவர் நாத்திகராயிருக்கலாம். ஆனால் பசும்பொன்னில் முதல் அஞ்சலி அவருடையதே. திராவிட இயக்க அரசியலும் வெறுமனே பகுத்தறிவுவாதமுமே சாதியத்தை நீக்கம் செய்திருக்கிறதா என்பதற்கான பதில்தான் 'லட்சியநடிகர்'.

தமிழ்த்தேசியம், நவீன இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் பல்வேறு வேடங்களில் இருந்தபோதும் தேவர் அரசியல் அதைத்தாண்டி பல்லிளிக்கத் தவறுவதேயில்லை. 'தமிழால் ஒன்றுபடுவோம்' என முழங்கி 'தமிழ்ச்சான்றோர் பேரவையை'யும் நந்தன் இதழையும் ஆரம்பித்தவர் ஆனாரூனா என்னும் அருணாச்சலம். நந்தன் நின்றுபோன கடைசி இதழவரையிலும் அம்பேத்கரின் ஒரு சிறு புகைப்படமும் வெளியிடாத நந்தன் தான் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.

இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.

காலச்சுவட்டின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் கனவான்கள் புதியபார்வையின் தேவர் சாதீயத்தைக் கண்டிக்காதது ஏன்? உண்மையிலேயே சமூக அக்கறை உடைய எழுத்தாளர்கள் 'புதியபார்வை' இதழைப் புறக்கணிக்க வேண்டும். பார்ப்பனர்களிடம் காணப்படக்கூடிய அளவுகூட ஜனநாயகச் சக்திகளை முக்குலத்தோரிடம் காணமுடிவதில்லை.

வீரசாவர்க்கருக்குச் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மய்யநீரோட்டத் தேர்தல் கட்சிகளும் கூட முத்துராமலிங்கத்தின் திருவடியைச் சரணடைகின்றன. தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.

தீ...தீ..தீ...வாசந்தீ..தீ..தீ

ரண்டு வாரங்களிருக்கும், தீம்புனல் என்னும் அமைப்பு எழுத்தாளர் ஞாநி ஆனந்தவிகடனில் எழுதிய 'விருப்பப்படி இருக்க விடுங்கள்' என்ற கலைஞரைப் பற்றிய கட்டுரைக்கு எதிராகக் கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரமாண்டமான அரங்கம், அனைவருக்குமான தேநீர், நொறுக்குத்தீனிகள் என ஒருவேளை மல்ட்டிலெவல் மார்க்ல்கெட்டிங் கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என குழப்பமேற்பட்டது. கூட்டம் ஆரம்பித்தபிறகு பார்த்தால் 'ஒருவேளை திமுக இலக்கிய அணி கூட்டமோ' என மயக்கம் ஏற்பட்டது. இமையம், சல்மா ஆகிய எழுத்தாளர்கள் கலைஞரைத் தமிழினத்தின் மீட்பராகப் புகழ்பாட அறிவுமதி, வீ.அரசு, அ.மார்க்ஸ் ஆகியோரின் உரைகள் மட்டுமே பொருத்தப்பாடு உடையவையாய் இருந்தன. அ.மார்க்ஸ் "கருணாநிதியை ஞாநி எழுதியதற்காக துடித்துப்போய்க் கண்டனக்கூட்டம் நடத்துபவர்கள் 'பெரியார் பொம்பளைப் பொறுக்கி' என்று வசைபாடப்பட்டபோது ஏன் கண்டனக்கூட்டம் நடத்தவில்லை?' என்றும் 'அதை வெளியிட்டு தொடர்ந்து பெரியாரை இழிவுசெய்த காலச்சுவடு குழுமத்தைச் செர்ந்த மூவர் இதே அரங்கத்தில் இருக்கிறார்களே' என்று கனிமொழியை நோக்கிக் கேள்வியெழுப்பினார். அப்படி எழுதிய ரவிக்குமாரும் சரி, கனிமொழியும் சரி அதுகுறித்து மூச்சுக்கூட விடவில்லை. எனக்க்நென்னவோ கனிமொழி வகையறாக்காளுக்கு கருணாநிதியைத் திட்டுவதை விட ஞாநி அவரது வாரிசு அரசியல் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதே எரிச்சலாக இருக்கிறது என்று கருதுகிறேன்.

நியாயமாகப் பார்த்தால் வேதாந்திக்கு எதிராகத்தான் கனிமொழி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கவேண்டும். கருணாநிதியைக் காலமெல்லாம் விமர்சிக்கும் ம.க.இ.க தோழர்கள் வேதாந்திக்கு எதிராக வீதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். இளவரசி கனிமொழியோ மத்தியதரவர்க்க அறிவுஜீவிகளின் தயவில் தனக்கான இடத்தை உறுதிசெய்துகொள்கிறார். அரசியலில் எந்த வித களப்பணியோ கருத்தியல் பணியோ ஆற்றாத கனிமொழி வெறுமனே தில்லி அதிகார மய்யங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பயன்படும் ஒரு தொடர்புக்கருவி, நாடார் வாக்குத்திரட்டி மற்றும் தயாநிதிமாறனின் வெற்றிடத்திற்கான நிரப்பு என்பதைக் கனிமொழியின் நெருங்கிய நட்புவட்டமாகிய கார்த்திசிதம்பரம், காலச்சுவடு கண்ணன், மனுஷ்யபுத்திரன் இத்யாதிகளைப் பார்த்தாலே புரிந்துகொள்ள இயலும்.

சரி, அதுபோகட்டும். இப்போது நான் எழுதவந்ததே நவம்பர் குமுதம் தீராநதி இதழில் வாசந்தி எழுதியுள்ள 'ராமனுக்கான போர்' என்னும் கட்டுரை குறித்து. மனசைத்தாண்டி, எலும்பை மீறி, தசையில் உருகிவழிந்திருக்கிறது பார்ப்பனக் கொழுப்பு. ஒருவேளை ராமனுக்காய்க் கலைஞரிடம் நீதிகேட்டு வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்.

வாசந்தி கட்டுரையின் சாராம்சம்.

1. பெரியாரோ கருணாநிதியோ எவ்வளவுதான் கடவுள் மறுப்பு பேசினாலும் பக்தியை ஒழிக்கமுடியாது.

2. ஒரு வளர்ச்சித்திட்டத்தை 'ராமன் இருக்கிறாரா இல்லையா' என்று திசைதிருப்பியதன்மூலம் கருணாநிதி தமிழகத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்.

3. கருணாநிதி ராமனை விமர்சித்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார்.

4. ராமன் என்கிற ஒருவர் இல்லை என்று தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்து 'சொதப்பிவிட்டது'.

5. கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனத்தைக் கேட்டு நாத்திகர்களும் கூட முகம் சுளித்தனர்.

6. கருணாநிதியின் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதும் மத்திய அரசுடனான செல்வக்கு நீண்டகாலம் நீடிக்கமுடியாது என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

7. வயதாகிறதே தவிர கருணாநிதிக்கு அறிவுகிடையாது.

வாசந்தியின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் பார்ப்பனக்குயுக்தியை மேற்கண்ட அவரது வாதங்களே நிரூபிக்கின்றன. திமுக என்பது கடவுள்மறுப்பு இயக்கமல்ல, கருணாநிதிக்கு அது வேலையுமில்லை. மேலும் நாத்திகம் பேசப்பட்டபோதும் பக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிற கேள்வியை இப்படியும் தலைகீழாக்கிக் கேட்கலாம். ' சாமி கண்ணைக்குத்திடும் என்பதிலிருந்து தொடங்கி இத்தனை வதை புராணங்கள் இருந்தபோதும் நாத்திகர்கள் என்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லையே'

அதைவிடுவோம், ஏதோ ராமன் பிரச்சினையை கருணாநிதிதான் முதலில் ஆரம்பித்தார் என்பதைப்போல வாசந்தி கயிறுதிரிப்பதைக் கவனியுங்கள். அவர் ராமனை விமர்சித்ததன்மூலம் சாசனத்தை மீறிவிட்டார் என்றால் இப்போது தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளதே, மோடி சாசனத்தை மீறவில்லையா? அதுகுறித்து வாசந்திக்கு ஏன் எழுததோன்றவில்லை?

தொல்லியல்துறை சொதப்பிவிட்டது என்கிறாரே வாசந்தி, வேறென்ன செய்யவேண்டும் வாசந்தி எதிர்பார்க்கும்படி சொதப்பாமலிருக்க? ராமன் என்று ஒருவன் வாழ்ந்தான், தசரதனும் கோசலையும் கூடித்தான் குழந்தைபெற்றார்கள், அதற்கு அத்வானிதான் விளக்கு பிடித்தார் என்று மனுதாக்கல் செய்யவேண்டுமா?

எந்த நாத்திகர்கள் 'முகம் சுளித்தனராம்? வாசந்தி மாதிரியான 'முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா?'

அவரது மைனாரிட்டி அரசு குறித்த வாந்தி மறைமுகமான பார்ப்பன மிரட்டலல்லாது வேறொன்றுமில்லை.

கடைசியான நான் குறிப்பிட்டிருக்கும் அவரது கட்டுரையின் சாராம்சம்தான் கட்டுரை முழுக்க தொனிக்கும் தொனி.

வாசந்தியின் அறிவுநாணயமற்ற செயல்பாடுகளுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே போகலாம். 90களில் அவர் இந்தியாடுடேயின் ஆசிரியர்பொறுப்பில் இருந்தபோது வெளிவந்த இலக்கியமலரில் தலித்படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டதையும் திராவிட இயக்கம்குறித்த வெங்கட்சாமிநாதனின் விசம்தோய்ந்த கட்டுரையை எதிர்த்தும் நிறப்பிரிகைத்தோழர்கள் இந்தியாடுடேயின் பக்கங்களைக் கிழித்து மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் இதே குமுதம் தீராநதியில் பத்திரிகையாளராகத் தனது அரசியல் அனுபவங்களை வாசந்தி தொடராக எழுதிவந்தார். 1991 சட்டமனறத்தேர்தல் சூழலையும் 1996 சட்டமன்றத்தேர்தலையும் சேர்த்துக் குழப்பி எழுதினார். ஒரு இரண்டாண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தெரியவேண்டிய குறைந்தபட்சத் தரவுகள் கூட மூத்த பத்திரிகையாளராகக் குப்பைகொட்டிய வாசந்திக்குத் தெரியவில்லை.

வெறுமனே அந்தத் தொடரில் அவரது அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. சென்ற சட்டமன்றத்தேர்தலையொட்டிய காலகட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக வெளியேறிவிடும் என்னும் நிலை, சின்னச்சின்னப்பிணக்குகளும் ,அதையொட்டிய வதந்திகளும் பரவிக்கொண்டிருந்த நேரம். அந்த இரண்டுவாரத்தில் தீராநதித் தொடரில் வாசந்தி எழுதத் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட், வைகோ திமுகவை விட்டு வெளியேற நேர்ந்த சூழல்.

அக்கட்டுரையில் வைகோவைத் திமுகவின் தலைவராக்குவதற்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கருணாநிதி வெளியிட்ட 'உளவுத்துறை அறிக்கை'யில் உண்மை இல்லாமலில்லை என்றும் கருணாநிதியின் பயம் நியாயம்தானென்றும் எழுதினார். எப்படியோ வலிமை வாய்ந்த திமுக கூட்டணி உடைந்தால்போதும் என்னும் மனோவிருப்பமே அக்கட்டுரைகளில் தெரிந்தது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் திண்ணை இணைய இதழில் அவர் எழுதி வந்த கட்டுரையில் 'கன்னடர்களுக்கு இனவெறியே கிடையாது' என்றும் 'ராஜ்குமாரின் மரணத்தையொட்டியே கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது, அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடி தமிழர்களும் கன்னடர்களும் அந்த ஆறுகளில் ஒன்றாக மாறி மாறிக் குளித்துத் திளைத்தனர்' என்கிற ரீதியிலும் 'கன்னடர்களிடம் இந்தளவிற்கு குறுகிய இனவெறி ஏற்படுவதற்குக் கர்நாடகப்பகுதியில் திமுக தொடங்கப்படதும் அய்.டி. படித்த தமிழ் இளைஞர்கள் கன்னடர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுமே காரணம்' என்றும் எழுதித் தனது தமிழின விரோதப் போக்கை நிறுவினார்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் 'தினவு' என்னும் ஒரு கதையில் மாயாவதிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு புனைவு எழுதி அதைப் பல்வேறு தலித்தியக்கங்கள் கண்டித்தபோதும் அதுகுறித்துக் கள்ள மௌனம் சாதித்தார்.

இத்தகைய வாசந்தி, மாலன் வகையறாக்களே 'முற்போக்காளர்களாக'ப் படம் காண்பிக்கப்படுகின்ற கேலிக்கூத்து ஒருபுறம் தொடர்கின்றதென்றால், இவர்களே தங்கள் சாதியைத் தாண்டிவந்த தாராளவாதப் பார்ப்பனர்களாகக் கட்டமைக்கப்படுவது உண்மையிலேயே சாதியைக் கடந்து வருவதற்கு எத்தனிக்கும் சமூக ஜனநாயக சக்திகளான பார்ப்பன நண்பர்களுக்கு தலைகுனிவே. தீ...தீ... பாப்பாத்தீ... தீ...

நெருப்புக்குஞ்சு

1. 'வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்' - இந்த வரிகள் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ, ஆபாசமானதாகவோ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு மசிரும் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்ய விழைகிறேன். 'ராமனுக்கான போர்' என்னும் பிரதியில் கண்ணகி x ராமன் என்னும் எதிர்வுகளைக் கையாள்கிறார் வாசந்தி. எனக்குக் கண்ணகி மீது எந்தக் கரிசனமும் கிடையாதென்றாலும் தட்டையாக வாசந்தி ராமனை அடிப்படையாக வைத்துக் கதையாடினால் கண்ணகியை அடிப்படையாக வைத்து நானும் கதையாடுவேன் என்பதற்காகத்தான்... இந்த ச்ச்சும்மா..

2. கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?

பெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்



தனது அய்ம்பதாண்டுகால வாழ்க்கையைத் தமிழக அரசியல் களத்தில் செலவழித்த பெரியாரின் அரசியற் செயற்பாடுகள் பரப்புரை, போராட்டம் , எழுத்து என பல்வேறு களங்களில் அமைந்தன. தனது வணிக வாழ்க்கையின் போது கடனைத் திருப்பித் தராத பார்ப்பனரை இசுலாமிய அரசு ஊழியரிடம் ஒப்படைத்ததன் மூலம் தந்தையிடம் செருப்படி வாங்கியதிலிருந்து (1902 ஆம் ஆண்டு) தனது இறுதிக்காலக் கட்டங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்காய்க் கருவறை நுழைவுப் போராட்டம்(1973) அறிவித்தது வரை எழுபதாண்டுகாலம் போராட்டங்களின் மீதான அபிமானியாய் வாழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ரா.

தனது பேச்சு, எழுத்துப்பிரதிகளில் அவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்களைப் புரிந்துகொள்வதன் மூலம் பெரியாரின் செயல்பாட்டின் உளவியலையும், கருத்தாக்கங்கள் பற்றிய அவரது புரிதலையும் அறிந்து கொள்ள இயலும். போராட்டம் என்னும் வார்த்தைக்குப் பதிலாக அவர் 'கிளர்ச்சி' என்னும் வார்த்தையையே பாவித்தார். 'புரட்சி' என்னும் சொல்லாடலின் இடத்தை 'தலைகீழாய்க் கவிழ்ப்பது' என்று நிரப்பினார். 'வன்முறை' என்னும் சொல்லாடலைப் 'பலாத்காரம்' என்னும் சொல்லாடலின் மூலம் பதிலீடு செய்தார்.

பெரியாரின் போராட்டங்கள் முழுமையுமே குறியீட்டழிப்புப் போராட்டங்களாகவே அமைந்தன. இராமன் உருவப்படம் எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, தமிழ்நாடு தவிர்த்த இந்திய தேசப்படத்தைத் தீயிடுதல், தேசியக் கொடியைக் கொளுத்துதல், இந்திப் பெயர் அழிப்பு, பிராமணாள் கபே பெயரழிப்பு என அவர் அறிவித்த போராட்டங்கள் பெரும்பான்மையும் அழித்தல், கொளுத்துதல், உடைத்தல் எனவாறே அமைந்தன. இந்து பார்ப்பனக் குறியீடுகளால் இட்டு நிரப்பப்பட்ட தமிழ்மனங்களினின்று அக்குறியீடுகளை அகற்றுதல், புனிதமெனக் கட்டமைக்கப்பட்ட குறியீடுகளைப் பலரறிய அவமானப்படுத்துதல் என்பதாகவே அவரது போராட்ட வடிவங்கள் அமைந்தன. எனினும் அவரது போராட்டத்தின் இலக்கு பெருந்தெய்வ மற்றும் பெருஞ்தேசியக் குறியீடுகளை நோக்கியே அமைந்திருந்தன என்பதும் அவரால் இழிவுபடுத்தப்பட்ட தெய்வங்களில் நாட்டார் சிறுதெய்வங்களும் பெண் தெய்வங்களுமில்லை என்பதும் பலரும் கூறியதே.

'தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் புரட்சி. அதை யாராவது எதிர்த்தால் அந்த வேலையைக் குஷாலாகச் செய்ய வேண்டியதுதான்' என்ற பெரியார், தன்னை 'ஒரு அழிவுவேலைக்காரன்' என்றே பிரகடனப்படுத்தினார். எனவே அவரது போராட்ட வடிவங்கள் தலைகீழாய்க் கவிழ்க்கும் கலகத்தன்மை வாய்ந்ததாய் அமைந்ததில் வியப்பில்லை. ஆனால், அவரது போராட்ட வடிவங்கள் அத்துக்களை மீறுவதாயிருக்க, அவரது போராட்ட முறைமைகளோ அதற்கு நேர்மாறாயிருந்தன.

'அழிவுவேலை' என்பதை நிறுவனங்கள், பிரதிகள் மற்றும் குறியீடுகளை அழித்தொழிப்பதாய் அர்த்தப்படுத்தினாரேயல்லாது தூலமான வன்முறையை அவர் ஆதரித்தாரில்லை. 1953ல் அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜூ குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, 'திராவிடர் கழகத் தோழர்கள் மண்ணென்ணையும், தீப்பெட்டியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு ராஜாஜூக்கு கெடு விதிப்போம். அந்த கெடுவிற்குள் அவர் திரும்பப் பெறாவிட்டால் நான் அறிவித்தவுடன் அக்கிரகாரத்தைக் கொளுத்த வேண்டும்' என்றார்.

3.11.1957 இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தஞ்சை தனி மாநாட்டில் பேசும்போது குறிப்பிடுகிறார். " எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை, குத்தியதில்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் பட்டதில்லை, கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்கமுடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே? ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப் போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?" என்றெல்லாம் கூடப் பேசினார்.

ஆயினும் இதெல்லாம் அவ்வப்போதைய உணர்ச்சி வெளிப்பாடுகளாய் அமைந்தனவே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறையை அவர் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. அதற்கான மகத்தான உதாராணமாய்க் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1948 காலத்திய சூழலைச் சொல்லலாம். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மண்ணாகிய மகாராட்டிரத்தில் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்பாடுகள் நிகழ்ந்தன. காந்தியைக் கொன்றது பார்ப்பனர் என்கிற உண்மையின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு எதிராய் வன்முறையை ஏவிவிடுவதற்கானதொரு வாய்ப்பாக பெரியார் நினைத்திருந்தால் இதைப் பயன்படுத்திவிடுக்கலாம்.

ஆனால், அத்தகைய சாத்தியங்களை அறத்தின் அடிப்படையில் மறுக்கவே செய்தார். 31.01.1948 அன்று திருச்சி வானொலியில் காந்தியின் மறைவு குறித்துப் பேசும் போதும் காந்தியின் சிறப்புகள் குறித்துப் பேசினாரேயல்லாது. பார்ப்பன எதிர்ப்பு குறித்துப் பேசவில்லை. 12.02.1948அன்று காங்கிரசார் ஏற்பாடு செய்த 'காந்தியார் அனுதாபக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தவர்களும் கலந்துகொள்ளலாம்' என்று அனுமதியளித்த பெரியார், 'அக்கூட்டங்களில் பேச நேர்ந்தால், அனுதாபம் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்தவிதமான கட்சிப்பேச்சுப் பேசாமல் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்' என்றும் கட்டைளை பிறப்பித்தார்.

19.02.1948 அன்று நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூரில் காந்தி இறந்தபிறகு நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பெரியாரும் கலைஞர் மு.கருணாநிதியும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது மு.கருணாநிதி கோட்சேயின் பார்ப்பன அடையாளம் குறித்து ஆவேசமாகப் பேசும் போது, பெரியார் பேச்சை இடைமறித்து, ' காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி, அவ்வளவுதான்' என முடித்து வைத்தார். (இந்த சம்பவத்தை மு.கருணாநிதியே பலமுறை தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய 'உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு பாகம்2'ல் இது 'விடுபட்டுள்ளது')

இப்படியான பல்வேறு சம்பவங்களையும், சந்தர்ப்பங்களையும் பெரியாரின் வாழ்க்கையிலிருந்து குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். அவரது முதலும் முடிவுமான அரசியல் செயற்பாடுகளின் அடிநீரோட்டமாக சாதியழிப்பும் பார்ப்பன எதிர்ப்புமே அமைந்திருந்தன என்பது வெளிப்படை. ஆனாலும் அவரே ஒருமுறை கூறியதுபோல, 'நான் பார்ப்பனர்களை எதிர்ககிறேனே தவிர வெறுக்கவில்லை. நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்' என்பதாகவே அவரது மனப்பாங்கு அமைந்தது.

பெரியாரின் இத்தகைய வன்முறைமறுப்பு மனோபாவம் என்பது வெறுமளே பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமல்லாது ஆளும் வர்க்கக் கருவியாகிய அரசின் வலிமை வாய்ந்த ஆயுதநிறுவனமாம் காவல்துறையை எதிர்கொள்வதிலேயும் பிரதிபலித்தது. இதற்கு ஒரு உதாராணமாக 04.08.1948 'விடுதலை' இதழில் பெரியார் எழுதிய 'விளக்கமும் வேண்டுகோளும்' கட்டுரையைக் குறிப்பிடலாம்.

கட்டாய இந்தித் திணிப்பை அப்போதைய ராஜாஜூ அரசு கொண்டு வந்த பொழுது, அதற்கெதிரான போராட்டத்தில் தனது தோழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான அறிக்கையில் பெரியார், திராவிடர் கழகத் தோழர்களுக்கு விதித்த 14 நிபந்தனைகளே அவை. அவற்றில் சில நிபந்தனைகளைக் காண்போம்.

1.போலிஸ்காரரிடம் நமக்கு சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

2.போலிஸ்காரர் முன்வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்டவேண்டும்.

3.கூப்பிட்டால், கைதுசெய்வதாய்ச் சொன்னால், உடனே கீழ்ப்படிய வேண்டும்.

4.போலிஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடிவாங்க வேண்டும். நன்றாய் அடிப்பதற்கு வசதிகொடுக்கவேண்டும்.

5.போலிஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பதுபோல் ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்காக இந்த அற்ப அதாவது நமது சரீரத்ததிற்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலிகொடுக்கக் கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு(பாக்கியம்) நமக்குக் கிடைக்கிறது என்று வரவேற்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

6..போலிஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

7.அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரி யாராக இருந்தாலும் அவர்கள் அருள்கூர்ந்து கிட்டே வரக்கூடாது.

8.போலிசார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம் ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆகவேண்டும்.

இத்தகைய நிலைப்பாடுகளே பெரியாரின் எல்லாப் போராட்டங்களிலும் தொடர்ந்தது. இன்னொரு உதாரணம் குறிப்பிட வேண்டுமெனில் 1948ல் தமிழக அரசு கருஞசட்டைப்படையைத் தடைசெய்த நிகழ்வைக் குறிப்பிடலாம். திராவிடர் கழகத்தின் உதயத்தையட்டி முழுநேர இயக்கப்பணியாற்றக் கூடிய தோழர்களைக் கொண்ட ஒரு சார்பமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பது பெரியாரின் எண்ணமாயிருந்திருக்கிறது. இதனாலேயே 1945ல் கருஞ்சட்டைப்படைக்கான அழைப்பை திராவிடர்கழகம் விடுக்கிறது. என்றபோதும் அந்த திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவராமலேயே கைவிடப்பட்டது. கருஞ்சட்டை அணிதல் என்னும் வழக்கம் அனைத்துத் தோழர்களுக்கும் பரவலாக்கப்பட்டது.

ஆயினும் இல்லாத கருஞ்சட்டைப்படையை 01.03.1948 அன்று தமிழக அரசு தடைசெய்தது.

" நம் இயக்கத்தில் திராவிடர் கழகத்தில் உள்ளோர்க்கு கருஞ்சட்டை அணிய வேண்டுமென்று வேண்டுகோள் விட்டதானது திராவிட சமுதாயத்துக்கு இருந்துவரும் சமுதாய இழிவு நீக்கிக் கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆகும். இதைக் கழக அங்கத்தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும் ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.

இந்தப்படியாகக் கருஞ்சட்டை அணிந்தவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ எந்தவித ரிஜூஸ்டரோ, சேனைபோன்ற உடையோ யூனிபாரமோ அணிவகுப்போ ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஒரு சேனைக்கோ படைக்கோ உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.

இருப்பினும் சென்னை அரசாங்கம் இதை ஒர் அமைப்பாகக் கருதி சட்ட விரோதமாக்கியிருக்கின்றது என்ற போதிலும் நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவதுபோல் இது விஷயத்தில் நாம் கழக அங்கத்தினரும் திராவிட பொதுமக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும் சமாதானமுமாய் நடந்து வரவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்ககுமானால் அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும். என்பதைத் தவிர இந்த உத்தரவினால் நமக்குள் எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிட்டதாகக் கருதவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறறேன்." என்று 1.3.1948ல் விடுதலையில் பெரியார் அறிக்கையில் தெளிவுபடுத்துகிறார்.

உண்மையில் கருஞ்சட்டைப்படை மீதான தடை என்பது அடிப்படையில் திராவிடர்கழகத்தைத் தடை செய்வதற்கான முன்திட்டமாகவே இருந்தது. என்றபோதிலும் பெரியார் நிதானம் தவறாது இதை அணுகினார். கருஞ்சட்டைப் படைக்கு தடை விதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த பெரியார், அதில் பேசும்போது, " இப்படி ஒரு தடையுத்தரவு போடுவதென்றால் சர்க்கார் இக்கழகத்தின்மீது, இதை அழிக்க வேண்டுமென்று கண்வைத்து இருப்பதாகத்தானே அர்த்தம்? பாமரமக்களுக்குத் திராவிடர் கழகத்தின் மீது அநாவசியமான பீதியை உண்டாக்குவானேன்? அவர்களுக்கு எங்கள் கழகத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படி செய்வானேன்?" என்று மனம் வருந்தியபோதும், "விரைவில் என்னைக் கைது செய்வார்கள். செய்தால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஜெயிலை இடித்து சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகாமகா முட்டாள் தனம். என்னைப் போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அந்தப்பக்கம் ஒருவர்கூட வரக்கூடாது" என்று கூறவும் செய்தார்.

அதேகாலகட்டத்தில் 21.03.1948 அன்று மருங்கூரில் பெரியார் பேசவிருந்த கூட்டத்திற்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் ஆவேசத்தையும் மீறி தடையை மீறப்போவதில்லை என்று அறிவித்த பெரியார்,

"இன்று மருங்கூர் கூட்டத்திற்கு விதித்துள்ள தடை உத்தரவை மீற வேண்டுமென்று மக்கள் கொண்ட எழுச்சியை நீங்கள் அறிந்ததேயாகும். பல தோழர்கள் என் கார் முன்னதாக மறியலும் செய்தனர். அவ்வுத்தரவு நியா£யமோ அல்லது அநியாமோ எவ்வாறிருப்பினும் அதை இன்று உடளே மீறுவதில்லையென்று முடிவு செய்து மக்களுக்கு என்னாலியன்ற சமாதானமும் கூறியுள்ளேன். என்றாலும் உங்களின் மனம் நிம்மதியடையவில்லை என்பதை நான் நன்றாக அறிவேன்.

தடை உத்தரவை மீறவில்லையென்ற காரணத்தால் சிலர் நம்மை வேறுவிதமாகக் கருதலாம். என்னைப் பொறுத்தவரை நான் அவ்விதப் பேச்சுக்களைப் பற்றிக் கவலைப் படுபவனல்லன்.

தடை உத்தரவைச் சர்வ சாதாரணமாக மக்களுக்கு பயமின்றி மீறுவதென்பது வெறும்வீரர் பட்டத்தையோ அதன்மூலம் ஓட்டு பெறுவதற்கு அல்லது பதலி பெறுபவர்களுக்குச் சுலபமாயிருக்கலாம். அதுவே அவர்களுக்குக் கொள்கையாகவும் பிழைப்பாகவுமிருக்கலாம். ஆனால் நமக்கிருக்கும் பொறுப்பும், லட்சியமும் மிகமிக இன்றியமையாததாகும்" என்றார்.

இப்படி பெரியாரின் போராட்டங்கள் சட்டம் ஒழுங்கை மீறாத வரம்பிற்குட்பட்டவையாவே இருந்தன. வன்முறை குறித்த அதிருப்தியும் அவரது பேச்சுகளில் பிரதிபலித்தன. ஆனால், வன்முறை, சட்டம், ஒழுங்கு ஆகிய கருத்தாக்கங்கள் குறித்த பெரியாரின் அளவுகோல்கள், புரிதல்கள் மற்றம் அணுகுமுறைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாதகமான விளைவுகளையே தந்தன என்றோ எதிர் அரசியல் செயற்பாடுகளுக்கு நீதி செய்தன என்றோ சொல்லிவிட இயலாது. அதற்கான சில உதாரணங்களைக் காண்போம்.

ஈரோட்டில் பெரியார் காங்கிரஸ் சார்பாளராகவும், ராஜாஜூயின் ஆதரவாளராகவும் இயங்கி நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் செயல்பட்டு வந்தாலும், அவரைத் தீவிர காங்கிரஸ்காரராக்கியது ஜாலியன் வாலாபாக் படுகொலைதான். இதை அவரே, 'ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது' என்னும் தனது வாழ்க்கைக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"பஞசாப் படுகொலை நடந்த சமயம், அதன்பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கியெழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக் கூட்டம். இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம், இந்த டிசம்பரில் மோதிலால் நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் மகாநாடு ஏற்பாடாகியிருந்தது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்களும் சென்றிருந்தோம். அங்குசென்று நேரில் அந்த படுகொலைச் சம்பவங்களைப் பார்த்தபிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசியவாதியாகிவிட்டேன்."

ஆனால் இத்தகைய கொடூரக் கொலைகளை நிகழ்த்திய ஜெனரல் டயரை உத்தம்சிங் என்னும் இளைஞன் சுட்டுப் பழிதீர்த்தபோது, ''ஒரு அனாமதேய இளைஞன் இவ்வழியான மிருகத்தனமான காரியத்தைச் செய்தான். இக்காரியம் உலகோர்முன் இந்தியர்களுக்கு மானக்கேட்டை உண்டுபண்ணும் ஈனக்காரியமாக முடிந்துவிட்டது. உண்மை இந்தியன் ஒவ்வொருவனும் வெட்கப்படுவான்." என்று கண்டித்து அறிக்கை விடுத்தார்.

அதேபோல் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களையும் இந்தியாவோடு இணைக்கும் முயற்சியில் இந்திய அரசு, குறிப்பாக அன்றைய மய்ய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் தீவிரங்காட்டினார். இந்திய அரசு அப்பகுதிகளில் ராணுவ பலங்கொண்டு ஒடுக்கமுயல, அதற்கெதிரான எதிர்வன்முறைச் செயல்பாடுகளும் வெடித்தன. அத்தகைய எதிர் வன்முறை அய்தராபத்திலும் எதிரொலித்தது.

அய்தராபாத் கலவரத்தை ஆதரிக்காதது மட்டுமல்லாது, இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் பெரியார் தயங்கவில்லை.

"நம்மைப் பொறுத்தவரையில் அய்தராபாத்துடன் இந்திய சர்க்கார் போர் தொடுக்குமானால், திராவிடப் பொதுமக்கள் இந்திய சர்க்காரை ஆதரித்தே தீரவேண்டும் எனக்கூறுவோம். பண உதவி மட்டுமல்ல. பெருவாரியாக இராணுவத்திலும் சேர்ந்து அய்தராபாத் குண்டர்களை விரட்டும் திருப்பணியில் ஈடுபடவேண்டியது அவசரமான தொண்டாகும். இந்திய சர்க்காரிடமிருந்து பிரிந்து தனி அரசாக இருக்கவேண்டும் என்பதே நம் குறிக்கோள் என்றாலும், அதற்காகக் குண்டர்களுக்கு அடிமையாவதையோ, அவர்களுடைய காட்டுமிராண்டித் தனங்களுக்கு இரையாவதையயோ, உண்மையான எந்தத் திராவிடனும் விரும்பவே மாட்டான். ஆகையால் நம் மாகாணம் அய்தராபாத் வெறியர்களின் அட்டகாசச் செயல்களால் அவதிப்படாமலிருக்க வேண்டுமானால், இந்திய சர்க்காரைக் காட்டிலும் அதிகமான பொறுப்பு நமக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது."(06.08.1948)

நக்சல்பாரிகளை அரசு ஒடுக்கியபோதும் பெரியார் ஆதரித்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. பெரியாரின் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு அடிப்படை வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்குமீறல் குறித்த அவரது அணுகுமுறையே என்பதை விளக்கத் தேவையில்லை. இதன் உச்சமாக, வெண்மணிச் சம்பவத்தின்போது பெரியார் விடுத்த அறிக்கையைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்தாண்டுகளாக ஒரு சில தலித் சிந்தனையாளர்கள் மற்றம் பார்ப்பனர்கள் பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்துவந்தனர். பெரியாரின் ஒரு சில கூற்றுகளை முன்னும்பின்னும் தொடர்பின்றித் துண்டித்து இதற்கு ஆகப் பயன்படுத்தினர். மேலும் கீழ்வெண்மணியில் 1968ஆம் ஆண்டு, 42தலித் மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தில் பெரியார் எதிர்வினை எதுவும் ஆற்றாது கள்ள மவுனம் சாதித்தார் என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளிலொன்றாயிருந்தது.

ஆனால், 'எழுச்சி தலித்முரசு' மாதஇதழ்(மார்ச் 2006) வெண்மணிச் சம்பவத்தையட்டி பெரியார் விடுத்த அறிக்கையை வெளியிட்டது. மீண்டும் அவ்வறிக்கை விசமப்பிரச்சாரங்கள் செய்யவே அவரது எதிரிகளால் பயன்படுத்தப்பட்டது. எனது நோக்கில் அதை ஒரு தலித்விரோத அறிக்கையாக வாசிப்பு நிகழ்த்த எவ்வித முகாந்திரங்களுமில்லை. என்றபோதும் அது ஒரு வரவேற்கத்தக் அறிக்கையுமல்ல என்பதைக் கூறவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவ்வறிக்கைகள் குறித்த விசாரணைகள் நம்மை வேறுசில மாற்றுப் பார்வைகளுக்கும், புரிதல்களுக்கும் இட்டுச்செல்லும்.

முதலாவதாக, பெரியார் வெண்மணிச் சம்பவத்தை, ஒழுக்கம் தவறிய ஒரு 'காலித்தனமான செயலாகவே' கருதினர் என்பதை அவரது கீழ்கண்ட கூற்றிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.

"காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி, தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றையதின்ம் மக்களை சட்டம் மீறும்படி(அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்றுமுதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ்நிலைக்குப் போய்விட்டது. சட்டம் மீறுதல் மூலம் சத்தியாக்கிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழிகாட்டினாரோ, அன்று முதலே மக்கள் அயோக்கியாகளாகவும் , காலிகளாகவும் மாறிவிட்டார்கள்".
(விடுதலை-28.12.1968)

மேலும், "......நாட்டுக்குச் 'சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்கு பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்கு பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளாந்தன என்றால் 1.காந்தியார் கொல்லப்பட்டார். 2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன. 3.போலிஸ்அதிகாரிகள் கட்டிப்போட்டு நெருப்பு வைத்துக்கொளுத்தப்பட்டனர். 4.நீதிஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பலவாகனங்கள்(பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன. 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.''

பெரியார் மேறகண்ட சமபவங்களை அடுக்குவதன் மூலம், வெண்மணிச் சம்பவத்தைப் 'பல பிரச்சினைகளில் ஒன்றாகப்' பார்ப்பதையும் அதற்கான அடிப்படை ஒழுக்கமும் நீதியும் தவறிய காலித்தனம் என்றே அவர் கருதுவதையும் உணரமுடியும்.

மேலும் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக அவர் முன் வைப்பது நம்மை இன்னும் திகைப்பிலாழத்தும்.

"இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், 'ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு
'அரசநாயகம்' ஏற்படவேண்டும் " என்பதோடு மட்டும் நிற்கவில்லை.

"...எனவே இன்றைய இந்த நிலை மாறவேண்டுமானால் முதலாவது குறைந்தது.
1.காங்கிரஸ் திராவிட முன்னேற்றக்கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்கவேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகிய தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்றபிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி, ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுகளுக்கு, பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து இந்த ஆறாண்டுகாலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கை பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது., இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேணடும்"

வெண்மணிச் சம்பவம் தி.மு.க ஆட்சியின்போது நடந்தது என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய விவசாயிகள் சங்கத்திற்கு எதிராக கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலப்பிரபுவால் நிகழ்த்தப்பட்டதே அக்கொடூரம் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோது அவரை வரவேற்றவர் அன்றையக் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் இன்னொரு நிலப்பிரபுவுமான கருப்பையா மூப்பனார் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடுவை 'அழித்தொழிப்பு' மூலம் பழிதீர்த்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்பதையும் அறிந்தவர்களுக்கு பெரியாரின் மேற்கண்ட 'ஆலோசனைகள்' எவ்வளவு அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

பெரியாரின் இந்த அறிக்கையிலுள்ள பிரச்சினைகளை இரு சிக்கல்கள் வழியாகப் புரிந்து கொள்ளக் கூடலாம்.

முதலாவதாக வெண்மணிச் சம்பவம் அண்ணாதுரை முதல்வராயிருந்த போது நடைபெற்றது. முதன் முதலாக ஒரு பார்ப்பனரல்லாதார் ஆட்சிக்கு இந்த சம்பவம் பெருந்தீங்காய் அமைந்துவிடக்கூடுமென்ற சங்கடம் பெரியாருக்கு இருந்திருக்கலாம்.
ஏனெனில் அவர் காமராசர் ஆட்சியை அதற்குமுன் ஆதரித்தாலும், அவரே ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருப்பதைப் போல,
"காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருக்கின்ற யார்வாயிலும் சாதி ஒழிய வேண்டுமென்று ஒரு வார்த்தை வராது. சாதி ஒழியவேண்டும், சாதி இல்லை என்கின்ற கருத்துடைய எனது மதிப்பிற்குரிய காமராசர் அவர்களே கூட சாதி ஒழிய வேண்டுமென்று வாயால் சொல்ல முடியாதே, சொன்னால் காங்கிரசிலிருக்க முடியாது" (30.05.1973) என்னும் உண்மையையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

பெரியார் எப்போதும் தேர்தல் அரசியலின் மீது மரியாதையோ ஈடுபாடோ கொணடவரல்ல. அவரைப் பொறுத்தவரை, 'அர்ச்சகன் பொறுக்கித் தின்ன கோயில், அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்' என்பதைப்போல, 'அரசியல் வாதி பொறுக்கித்தின்ன அரசியல்'.

தேர்தல் அரசியலின் மீதிருந்த அவரின் ஈடுபாடின்மைக்கு சிறந்த உதாரணம் நீதிக்கட்சி, திராவிடர்கழகமாகப் பெயர் மாற்றமடைந்த வரலாறு, 27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிலேயே ஜஸ்டிஸ்கட்சி, திராவிடர் கழகமாக பெயர் மாற்றமடைந்தது என்பதும், இந்த தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்ததால் இது'அண்ணாத்துரை தீர்மானம்' என்று அழைக்கப்படுகிறது என்பதும் பலரும் அறிந்தது. ஆனால் இந்த 'அண்ணாத்துரை தீர்மான'த்தின் பின்னணியைப் பெரியார் விளக்குகிறார்.(உலகத்தலைவர் பெரியார் பக்155-156)

நீதிக்கட்சிக்குத் 'தென்னிந்திய திராவிடர்கழகம்' என்று பெயர் மாற்றுவது என்பதும், திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது என்பதும் ஏற்கனவே முடிவுசெய்த ஒன்று. ஆனால், ஜஸ்டிஸ்கட்சியில் பதவி, அதிகாரச் சுகத்தை அனுபவித்தவர்கள் இதைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.'சண்டே அப்சர்வர்' பாலசுப்ரமணியம், கி. ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஒருகட்டத்தில் அண்ணாதுரையும் எதரிகளின் கையாள் என்று பெரியார் அய்யமுற்றார். ஆனால் அண்ணா, அந்த மாற்று அணித்தலைவர் எழுதிய ஒரு ரகசியக் கடிதத்தைப் பெரியாரிடம் காட்டித் தன்னை நிரூபித்தார். அதனாலேயே ஒரு சிறு மாறுதலோடு தீர்மானத்தை எழுதி, அண்ணாவாலேயே முன்மொழியச் செய்கிறார்.

இதன் மூலம் பெரியாருக்குத் தேர்தல் அரசியலின் மீதான நம்பிக்கையின்மையையும், அண்ணாதுரை போன்றவர்களுக்கு இந்தப் போக்கு சங்கடத்தை எறபடுத்தியதையும் அறியலாம்.

இவ்வாறாக வாழ்நாள் முழுவதும் தேர்தல் அரசியலைப் பெரியார் நிராகரித்த போதிலும், சில சமயங்களில் இன நலனுக்காக அரசுகளை ஆதரிக்கவும் பயன்படுத்தவும் செய்தார், இந்த போக்கின் நீட்சியாகவும் வெண்மணி அறிக்கையைக் கருதலாம்.

ஆனால் ஒரு அரசை எப்படிப் பயன்படுத்துவது(அ)கையாள்வது என்னும் சிக்கல் பெரியாருக்கு மட்டுமில்லை, எல்லா எதிர் அரசியல் செயற்பட்டாளர்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் இருந்திருக்கின்றன.

பார்ப்பனியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சூத்திர, பஞ்சம மக்களை அரவணைத்ததன் மூலம் பவுத்தம் மக்கள் மதமாய் மலர்ந்தது. அது அரசமதமாக மாறிய போது இறுகி நிறுவன மயமானது. "அடிமைகள் பவுத்த சங்கத்தில் சேர்வதால் தனக்கு இடையூறு ஏற்படுகிறது" என்று ஒரு அரசர் முறையிட்ட பிறகு "அடிமைகள் தங்கள் ஒப்பந்த காலத்தை முடித்தபிறகே சங்கத்தில் சேரலாம்" என்றார் புத்தர்.

கம்யூனிச சமூகத்தில் அரசு உலர்ந்து உதிரும் என்றது மாக்சியம் ஆனால் பல் கம்யூனிஸ்டு கட்சிகளின் அரசுகளோ புரட்சிக்குப் பின் இறுகி நிறுவனமயமாகின பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது அபரிதமான நம்பிக்கை கொண்ட அம்பேத்கரால் ஒரு வெற்றிகரமான பாராளுமன்ற அரசியல்வாதியாய் நீடிக்க முடியவில்லை.

பெரியார் அரசுகளை ஆதரித்த போதும் தனது கருத்தியல்களில் சமரசம் செய்துகொண்டவரில்லை 1971ல் சட்டமன்றத் தேர்தலின் போது பெரியார் நடத்திய ராமன் உருவப்பட எரிப்பு போராட்டம் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இடையூறு கொடுக்கக் கூடிய அளவிற்கு நெருக்கடியை கொடுத்தது. என்ற போதும் பெரியார் போராட்டத்தை கைவிட்டாரில்லை ஆனால் அத்தகைய உறுதித் தன்மையை இன்றைய திராவிடர்கழகம் ஏறக்குறைய கைகழுவிவிட்டது என்றே சொல்லலாம்.

எப்படி இருந்த போதிலும், அரசு ஆதரவு, எப்படி ஒரு அரசை கையாளுவது அல்லது பயன்படுத்துவது (How to handle the state?) என்ற கேள்விகள் இன்னமும் தொடர்கின்றன.

வெண்மணி அறிக்கையின் இன்னொரு பிரச்சினைக்குரிய அடிப்படை அம்சம் வன்முறை, சட்டம் ஒழுங்கு, அதை மீறல் குறித்த பெரியாரின் வழமையான புரிதல்கள்.

காந்தியிடமிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியபோதும், சில காலங்களிலேயே அவரிடமிருந்து விலகி எதிர்த்திசையில் பயணித்தவர் பெரியார். என்ற போதும் இந்த வன்முறை மறுப்பு மனோபாவம் பெரியாரிடமிருந்த காந்திய அரசியலின் எச்சம் எனலாம்.

அதே நேரத்தில் இன்னொரு அம்சம் குறித்தும் யோசிக்க வேண்டும். காந்தியின் போராட்ட வடிவங்கள் உடலை வருத்தும் முறைமைகளைச் சார்ந்தவை. ஆனால் பெரியார் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். சத்தியாக்கிரகம் சண்டித்தனம் என்பதும், உண்ணாவிரதம் முட்டாள்தனம் என்பதும் அவரது கருத்து.

இருந்த போதும் தூலமான வன்முறையை அவர் நிராகரித்தார். வன்முறை என்கிற சொல்லாடலிலுள்ள குறைந்தபட்ச உடன்பாட்டுத் தன்மையையும், மென்மையையும், பெரியார் பயன்படுத்திய பலாத்காரம் என்னும் சொல்லாடல் பின்னுக்குத்தள்ளி அதற்கு முற்றிலுமான எதிர்மறை அம்சத்தை வழங்குகிறது.

ஆனால், எப்போதும் வன்முறையை நிராகரிப்பது சாத்தியமா, கிளர்ச்சிகளின்போது தன்னெழுச்சியாய் வெளிப்படும் குறைந்தபட்ச வன்முறை, அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர் வன்முறைச் செயல்பாடுகள் ஆகியவற்றை எப்படி புரிந்துகொள்வது என்கிற கேள்விகள் மிகவும் முக்கியமானவை.

அதே நேரத்தில் 'எல்லா அதிகாரங்களும் வன்முறையுடனேயே தோன்றின, அவை வன்முறையாலேயே நிலைபெற்றன, அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்' என்கிற புரட்சிகரச் சூத்திரத்தை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திவிட முடியாது. ஏனெனில் இந்திய ஆதிக்கக் கருத்தியலாகிய பார்ப்பனியம் தூலமான வன்முறைகளை விடவும் கருத்தியல் சார்ந்த வன்முறைகளையே பெரிதும் நம்பியிருக்கிறது.

இந்திய ஆளும் வர்க்க வன்முறை கட்புலனாகா வன்முறை (invisible violence) வன்முறையைக் கைக்கொண்டு பார்ப்பனியத்தை அழித்தொழித்த முன்மாதிரிகளும் நமக்கில்லை, இத்தகைய சூழலில் மக்களை நேசிப்பவர்களும், எதிர் அரசியல் செயற்பாட்டாளர்களும் 'வன்முறை' குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியமென்றே தோன்றுகிறது.


சில குறிப்புகள்:

1. நக்சல்பாரிகளை அரசு ஒடுக்கியபோது பெரியார் ஆதரித்ததான தகவல், புதியகலாச்சாரம் இதழில் வெளிவந்த 'பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்' கட்டுரைத் தொடரில் படித்த நினைவு. ஆண்டு நினைவில்லை.

2.சமீபத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தைப்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1938 தொடங்கி 1969 வரையிலான நிகழ்வுகளைக் கூறும் அந்நூலில் 1938ல் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிப் பல்வேறு போராட்டங்களில் மு.கருணாநிதி பங்குபெற்றது விவரிக்கப்படுகிறது. ஆனால், கலைஞரும் சரி, அண்ணாதுரை உள்ளிட்ட திமுக முன்னோடிகளும் சரி பெரியார் இயக்கத்தில் இருந்தபோதும் மொழிப் போராட்டங்களிலேயே ஈடுபட்டிருந்தார்களே தவிர சாதியழிப்புப் போராட்டங்களில் அல்ல. "1930களுக்குப் பிறகு மொழிப்போர் பெரியாரியக்கத்தின் தன்மையையே மாறியது" என ஆய்வாளர் வ.கீதா அடிக்கடி கூறுவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

3.காந்தியின் போராட்ட வடிவங்களைச் சமண மரபோடு இணைத்துச் சொன்னவர், தமிழ் மென்பொருளாளரும், வேறு பெயரில் சில சிறுகதைகளை எழுதியவருமான நண்பர் இரா.துரைப்பாண்டி.

உதவியவை:

1. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு
2. திராவிடர் கழகம் வெளியிட்ட 'பெரியார் களஞ்சியம்' தொகுதிகள்.
3.உலகத்தலைவர் பெரியார்- வாழ்க்கைவரலாறு பாகம்2 - திராவிடர்கழக வெளியீடு.
4.திராவிடத்துவா - சேம்ஜி,
5.அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் ஏன்? - பெரியார் திராவிடர் கழக வெளியீடு.
6. பெரியார்கணிணி - பேராசிரியர் மா. நன்னன்
6.thamilachi.blogspot.com

(16.09.2007 அன்று திருப்பத்தூர் தூயநெஞ்சர் கல்லூரியும் பகுத்தறிவாளர்கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த 'தமிழ்ச்சமூகமும் பகுத்தறிவும்' கருத்தரங்கில் பேசியதன் எழுத்துவடிவம்)

சொற்கள் நிரம்பிய தனிமையும் தனிமை நிரம்பிய சொற்களும்



ஈழத்தின் போர்ச்சூழல் வாழுமிடத்திடத்தினின்று துரத்தியடிக்க, ஒரு பனிபடர்ந்த பிரதேசத்தில் அடைக்கலமாகிப் பின் அங்கிருந்தும் புலம்பெயர்ந்து மொழி வழியாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய்த்த் தொடர்புடையதாய்ச் சொல்லப்படும் 'தாய்'த்தமிழகத்தின் தலைநகரத்தில் வாழநேர்ந்ததன் மனப்பதிவுகளாய் வெளியாகியுள்ளது கவிஞர் தமிழ்நதியின் முதல் கவிதைத்தொகுதியான 'சூரியன் தனித்தலையும் பகல்'. ஈழம், கனடா, தமிழகம் என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்தலும் வாழ்தலின் நிமித்தமுமான புதிய, பழைய உறவுகள், புறக்கணிப்பு, முகம் முன் நீளும் கேள்விகள், அலைக்கழிப்பு, அங்கீகாரம், வெறுமை, தனிமை, கவிதை, ஆயாசம், இளைப்பாறுதல், கண்ணீர், புன்னகை, பிரிவு என அனைத்தும் பிழிந்த சாற்றின் உப்புச்சுவையும் இனிப்புருசியுமென ஒரு எழுத்துப்பலகாரமாய் மாறியிருக்கிறது இத்தொகுப்பு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒரு வசதிக்காய்ப் போர் பற்றிப் பாடுபவை, இருப்பற்று அலையும் துயர் குறித்துப் பேசுபவை, மீறலின் வேட்கை குறித்து மயக்கத்துடன் கதைப்பவை எனப் பிரித்துக்கொள்ளலாம். ஆனாலும் இத்தகைய சட்டகங்களையும் தாண்டி சட்டகத்தின் வெளிபிதுங்கும் சதைக்கோளங்களும் இல்லாமலில்லை.

மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்ட கையை நாய் இழுத்துச்செல்லுமோ என்றஞ்சி, தானே புதைக்கும் அவலம், சக்கரநாற்காலிகளில் வாழ்வினிருப்பு குறுக்கப்படுவதன் துயரம், உடல்கள், உடல்கள், மேலும் உடல்கள், உடல்களா பிணங்களா எனப்பெயர் சூட்ட இயலாது மயங்கிக்கலங்கும் சூன்யக்கணம் என விரியும் போர்க்காட்சிகள் வாசிப்போரின் முகத்திலறைய வல்லவை. பாரதி சொன்னதைப்போல, 'ஈரத்திலேயே பிறந்து ஈரத்திலேயே வாழ்ந்து, ஈரத்திலேயே இருக்கப்பழகிவிட்ட ஈரத்தமிழர்களுக்கு' ஈழத்தமிழர்களின் அவலங்களைச் சொல்லத்தவறவில்லை கவிதைகள்.

அரைநூற்றாண்டாய் எவ்வித அரசியல் போராட்டங்களுமற்று வெற்று மிதப்பில் அலையும் தமிழ்மனங்களின் மனச்சாட்சியின், அப்படியென ஏதேனுமிருப்பின் , அதன் நெஞ்சாங்குலை மீது ஏறிமிதிக்க,

" எந்ததேவதைகளைக் கொன்றழித்தோம்
எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்
'அம்மா' என விசும்பும் குரல்கேட்க'

என்னும் வரிகளே போதுமானவை.

"சூன்யம் நிழலெனப்படந்து வருமித்தெருக்கள்
இருந்தாற்போல விழிக்கலாம்
மிதிவெடியாய்,
நிலக்கண்ணியாய்' என்னும் வரிகளில் படிமம் விரிகிறது.

இவ்வரிகள் ஏதும் நிகழலாம் என்னும் சாத்தியத்தையும் சாத்தியமின்மையையும் ஒருசேரச் சமன்படுத்தும் வரிகளாய் மட்டுமல்லாது இருப்பு அழிபடுவதை எக்கணமும் எதிர்நோக்குவதே வழமையாய்ப் போன வாழ்வுகுறித்தும் பேசுவதாய் விரிகின்றன. மேலும் இன்னொரு கவிதையின் இன்னொரு வரி 'ஏவுகணைகள் கூவிக்கொண்டிருக்கலாம்' என்கின்றது. கண்ணிவெடி, ஏவுகணைகள் போன்ற போர்க்கருவிகளோடு இணைத்துப்பேசப்பயன்படும் 'விழிக்கலாம்', 'கூவிக்கொண்டிருக்கலாம்' என்னும் சொற்களின் பயன்பாடு குறித்து யோசிக்கையில் துயரங்களின் இருப்பில் அழிவுகளினூடாகவே ஒரு எதிர்நிலையில் அழகியல் பிறக்கிறதோ எனத் தோன்றுகிறது.

இருப்பற்று அலையும் துயர்களில் சாட்சியமாகும் போர்க்காட்சிகள், மனிதத்தலைகளை உரலிலிட்டு பற்களால் இடிக்கும் கலிங்கத்துப்பரணியின் மரபை வரித்துக்கொண்ட தமிழ்மரபை யோசிக்கச் செய்பவை. வெற்றி, தோல்வி என்னும் இருமைகளின் அடிப்படைகள் என்பவை அடிப்படையில் ஏதேனுமொரு மரணம் மட்டும்தான் என்னும் உண்மையைப் பரீசீலிக்கத் தூண்டுபவை.

"பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை
நடுங்கும்விரல்களால் பற்றுகிறேன்
ஐயோ என் சிறுமொட்டே' என பதறித்துடிக்கும் மனம் வெறுமனே சிறுமொட்டிற்கானதுமட்டாயில்லை. தன் காலுரசும் பட்டுப்பூனைக்குட்டிகள். வால்சுருட்டிப் படுத்திருக்கும் பொன்னி என்னும் நாய்க்குட்டி ஆகியவை குறித்தும் கவலைப்படவும் அவற்றின் இருப்பு என்னாயிற்று என அலைவுறவும் தயங்கவில்லை.

இன்னும் விரிந்த ஒரு பயணத்தில் இந்தவுலகம் வெறுமனே வெறும் மனிதர்களுக்கானதுதானா, போர்களைக் கைக்கொண்ட மனிதர்களின் போர்களால் அழிபடுபவை வெறும் மனித உடல்கள் மட்டும்தானா என்று யோசிப்பு நீள்கிறது. ஒரு குண்டுவெடிப்பில் சிதறிக் குடல்கிழிந்து சாகும் நாய்க்காகவும் கவலையுறும் மனம் இருக்கும்வரை மட்டும்தான் கவிதை எழுதுதல் சாத்தியமாகிறது.

"எனக்கு உன்னைத் தெரியாது
நீ நித்திலா, யாழினி, வாசுகி"

இத்தகைய குரல்கள் இரு எதிரெதிர்த்தளங்களினின்றும் வெளிவருவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை. அதிகார வெறியும் மூலதனப்பசியும் கொண்டலையும் ஆதிக்கக்கருத்தியலுக்கும் பெயர்களும் அடையாளங்களும் தேவையில்லை. எண்கள், பினங்களின் எண்னிக்கைகள், அல்லது அடிமைகளாய் வாழச் சம்மதித்தோர் குறித்த கணக்கீடுகள் மட்டுமே போதுமானவை என்னும்போது பெயரும் அடையாளமும் எவ்வகையிலும் அவசியமற்றதாய் மாறிப் பயனொழிகிறது.

அதேநேரத்தில் அதிகாரத்திற்கெதிராய்க் கிளம்பும் எதிர்க்குரல்களும் பெயர்களையும் அடையாளங்களையும் புறந்தள்ளி ஒன்றிணைப்பைக் கோருகின்றன. ஆனால் இவை வெறுமனே விசித்திர முரண் என எண்ணாது முன்னதின் குரல் அடையாளத்தகர்ப்பை நிகழ்த்துவதையும் பின்னதன் குரல் அடையாளங்களைத் தாண்டி வித்தியாசங்களூடே ஒன்றிணைப்பைக் கோருவதற்கு அன்பையும் பாதிப்பையுமே முன்நிபந்தனையாய் நிறுத்துவதன் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள ஏலும். இத்தகைய புரிதல்கள் சாத்தியப்படுகிறபோது இந்தப் பட்டியலில் நித்திலா, யாழினி, வாசுகி மட்டுமில்லாது, பாலஸ்தீன, மியான்மர், உகாண்டா, சோமாலியா, குஜராத், சட்டீஸ்கர் என விரியும் ஒடுக்கப்பட்ட மனிதத்தன்னிலைகளையும் சேர்த்து விரிவடையலாம்.

எல்லா யுத்தங்களிலும் அதிகாரக்கொடி நாட்டப்படுகிற நிலங்களாய்ப் பெண்ணுடல்கள் மாற்றப்படுவதையும் மாற்று இனப்பெண்களின் உடலைச் சிதைப்பதை தனது ஆணடையாளத்திற்கும் இனப்பெருமிதத்திற்கும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படுவதையும் 'ஆண்மை', 'விசாரணைச்சாவடி' என்னுமிவ்விரு கவிதைகள் பதிவுசெய்கின்றன.

போர்துரத்தச் சரணடையும் நிலப்பரப்புகளில் காட்டப்படும் பாரபட்சத்தையும் மொழியால் ஒன்று என்னும் பெருங்கதையாடல்களினடியிலும் ஒதுக்கலின் துகள் படிந்துகிடப்பதையும் உணர்த்துவதற்கு,

"காய்கறிவிற்பவன் கண்களைச் சுருக்கி
நான்காவதுதடவையாகக் கேட்கிறான்
கேரளாவா " என்னும் வரிகளே போதுமானவை.

இந்ததொகுப்பின் ஆகச்சிறந்த கவிதைகளிலொன்றான 'பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது' இப்படி முடிகிறது..

"எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
இலங்கையில்தான் போர்நடப்பதாக"

போர்நடக்கும் பூமியையும் தாண்டித் தனது கொலைக்கரங்களை விரித்துவைத்திருக்கும் போரின் பெருங்கருணையை என்னென்பது!

அதேபோல் இன்னொரு சிறந்த கவிதையான 'அற்றைத்திங்கள்' தனது வரலாற்றுக் கண்ணியை எதிர்மரபிலிருந்து தேர்ந்துகொள்கிறதெனலாம். போரும் புலம்பெயர்தலும் நேற்றுமுதல்நாளோ அதற்கு முதல்நாளோ தோன்றியதில்லை. அரசு என்னும் ஆளும்வர்க்கக்கருவி உருவானபோதே இவையிரண்டும் தொடங்கிவிட்டன. புலம்பெயர்தலின் துன்பம் பூமியில் வாழும் எல்லாம் மானுட இனக்குழுக்களுக்கும் சொந்தமானவையே. அவை எப்போதாவது வரலாற்றின் எந்தக் காலகட்டங்களிலாவது இதை அனுபவித்திருக்கிறது, என்றபோதும் அதை எழுத்தில் முதன்முதலில் பதிவுசெய்த பெருமை தமிழுக்கே உரியது. அன்றைய ஏகாதிபத்திய அரசுகளான மூவேந்தர் படைகள் பாரியைக் கொன்று, பறம்புமலையை கைப்பற்றி, பாரிமகளிரைத் தனிமைப்படுத்தியபோது, அவ்விரு மனங்களின் அழுகுரலே 'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' எனப் போர்வெறியைப் பதிவுசெய்தன. பறம்புமலையில் உடைந்துசிதறிய பாரிமகளிரின் கண்ணீர்த்துளிகள் நூற்றாண்டுகளைக் கடந்துவந்து தமிழ்நதியின் கவிதைகளையும் ஈரப்படுத்துகின்றன இப்படியாக,

"அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே"

புகலிடவாழ்வு குறித்த தமிழ்நதியின் கவிதைகள் குறித்துப் பேசும்போது ஒரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்கவேண்டும். 'கலாச்சாரம் போச்சு, மதம் போச்சு, பண்பாடு போச்சு, கோவில்போச்சு' என்னும் போச்சுப்புலம்பல்களாயில்லாது புகலிடவாழ்வில் ஏற்படும் அடையாளச்சிக்கல்களையும் தனிமைத்துயரங்களையும் மட்டுமே பேசுவது ஒரு ஆறுதல். 'எப்படியும் நாடுதிரும்புவோம்' என்பது வெறுமனே விருப்புசார்ந்த விஷயம் என்பதிலிருந்து சபதங்களாய், ஆவேசங்களாய்ச் சவால்களாய் மாறுவதன் அபத்தத்தை 'ஊருக்குத்திரும்புதல்' என்னும் கவிதை பகிடிசெய்கிறது.

"நதியின்மேற்பரப்பில்
தாகித்தமான்களைப்
புலிகள் பசியாறிய
குருதிகலந்து கூடவே ஓடிவரும்" என்னும் அதிர்வுவரிகளைத் தாங்கிய 'நதியின் ஆழத்தில்' என்னும் கவிதை,

" எத்தனைபேர் உமிழ்ந்த எச்சில் / எத்தனைபேர் எறிந்த கற்கள்/ சிறுநீர் மலம் விந்து'.... எனத் தொடர்வதன்மூலம் பட்டினத்தாரின் 'எத்தனைபேர் தொட்டமுலை, எத்தனைபேர் நட்ட குழி எத்தனைபேர் பற்றியிழுத்த இதழ்' என்னும் மொழிகளைத் தலைகீழாய்ப் பிரதியிடுகிறது.

பட்டினத்தாரின் குரல் ஆண்மய்யக்குரலாவும் உடலொடுக்கம் சார்ந்ததாவுமிருக்க, கவிஞரின் குரலோ உடலைகொண்டாடுவதாய் ஆண்மய்யச்சமூகம் உருவாக்கிவைத்த அத்துக்களை மீறும் எத்தனங்களையும் விருப்பையும் கொண்டதாயுள்ளது. ஒருநாளும் இரண்டு அறைகளும், வண்ணங்களாலான நீர்க்குமிழி, துரோகத்தின் கொலைவாள் எனப் பலகவிதைக்ளைச் சுட்டலாமெனினும் 'காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பினது மட்டுமில்லாது தமிழில் பதிவுசெய்யப்பட்ட வரிகளில் சிறந்த வரிகளிலொன்றாகத் திகழும் வரியைச் சுட்டினாலே போதும். 'கலவி முடிந்தபெண்னின் கண்களென கிறங்கிக்கிடக்கிறது மழைதோய்ந்த இக்காலை' என விரவிப்பரவுகிறது வேட்கையின் மொழி.

வித்தைக்காரன் என்னும் கவிதை, புரிதலின் பின்னுள்ள பிரச்சினை, கோபத்தின் ஊற்றுக்கால், தான் மற்றும் மற்றமைக்கான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல், பித்தநிலையின் ஒருமை மற்றும் மற்றமையோடு ஒன்றுபடல் எனப் பல்வேறு பாதைகளில் பயணித்து நம்மை மயக்குகிறது.

தமிழின் மிகமுக்கியமான தொகுப்பு, முதல்தொகுப்பிலேயே கவித்துவத்தின் உச்சபட்ச சாத்தியங்களைப் பரிசோதித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுசொல்லும் அதேவேளையில் பிதாமகனின் வருகை, கலகக்காரன், தண்டோராக்காரன், எழுது இதற்கொருபிரதி போன்ற கவிதைகள் வாசிப்பின் சுகானுபவத்தைத் தடைசெய்து ஏமாற்றமளிக்கின்றன என்பதையும் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது, உணர்வுகள் கவிதையாய்ப் பரிணாமம் அடையாது வெறுமனே வரிகளாய் நின்றுவிடும்போது அதை எதிர்கொள்வதில் வாசகனுக்கு எந்தப் பயனுமில்லை. சில கேள்விகளை முன்வைத்து பலவிசாரணைகளை நிகழ்த்துவது படைப்பின் சாத்தியம்தானெனினும் பல்வேறு தளங்களில் கேள்விகளை முன்வைத்துப் பரீசீலிக்காதபோது கவிதை வெறுமனே பொலிட்டிகல் ஸ்டேண்ட்மெண்டாகவே முடிந்துவிடும் என்பதற்கு உதாரணம் 'யசோதரா'.

தமிழ்நதியின் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது மண்டோவும் ஷோபாசக்தியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. வாதை, பிரிவு, அலைக்கழிப்பு, அடையாளச்சிக்கல், இருப்பின் சாத்தியம் குறித்த நிச்சயமின்மை என எல்லாம் தொடர்ந்தபோதும் தனது அவலங்களுக்குக் காரணமான அல்லது காரணமெனத் தான் நம்புகிற அதிகாரங்களையும் நிறுவனங்களையும் 'கலாய்க்கிற' மனோபாவம் கொண்டாட்டப்பெருவெள்ளமாய்ப் பெருக்கடுப்பது மண்டோவுக்கும் ஷோபாவுக்கும் சாத்தியமானது. ஆனால் 'இன்றொருநாள் எனினும்' என்னுமொரு கவிதையும் ஆங்காங்கே சில சிதறல்களும் தவிர அத்தகைய வாசிப்பனுவத்தை நிகழ்த்துவதற்குத் தமிழ்நதி அனுமதிக்கவில்லை.

எல்லோருக்குமிருப்பதைப் போல எனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பில் மிகமிகவும் பிடித்த கவிதை 'இன்றொருநாள் எனினும்'.

வாழ்வு, அரசியல், போராட்டம், மரணம், கலவி, காதல் என அனைத்தும் கணக்குகளாகவும் சூத்திரங்களாகவும் மாற்றப்படும் கணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் ஒரு கறாரான கணக்காளனாயிருந்து இத்தொகுப்பை அளந்துபார்த்தால் இத்தொகுப்பில் அதிகம் புழங்கப்பட்டிருக்கும் சொற்களிரண்டு. 'சொற்கள்' மற்றும் 'தனிமை'யே அவை.

'நேற்றிரவையும் குண்டுதின்றது' எனத்துவங்கும் தொகுப்பு, 'என்னதான் இருக்கிறது தான் கவிதையென நம்பும் ஒன்றைத்தவிர' என்றவாறு முடிகிறது.

சொற்களைத் தனிமையாலும் தனிமையைச் சொற்களாலும் இட்டு நிரப்பமுயலும் எத்தனங்களினூடே வென்றும் தோற்றும் விளையாட்டை நிகழ்த்தியவாறே பட்டப்பகலில் தனித்தலைகிறது சூரியன்.


சூரியன் தனித்தலையும் பகல் - கவிஞர் தமிழ்நதி
வெளியீடு : பனிக்குடம் பதிப்பகம்
பக்கங்கள் : 64
விலை : ரூ 40/-

ஞாநியின் வக்கிரம்

எழுத்தாளர் ஞாநி விகடன் இதழில் தமிழகமுதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கருணாநிதி முதுமையின் இயலாமையாலும் தள்ளாமையாலும் அவதிப்படுகிறார் என்றும் அவர் முதல்வர் பொறுப்பை விட்டு விலகவேண்டுமென்னும் ரீதியிலும் எழுதியிருக்கிறார்.

நான்குபக்கங்களுக்கு நீளும் அக்கட்டுரை மேலோட்டமாக கரிசனமும் அக்கறையும் கொண்டதாகத் தோன்றினாலும் அதன் அடியாழத்தில் தன் வக்கிரத்தைக் காட்டிப் பல்லிளிக்கிறது. கருணாநிதியின் முதுமை குறித்து முழுநீளத்திற்கு விவரித்திருக்கிறார். கருணாநிதி 'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞானி எழுதுகிறார். இது 'சமீபத்தில் கேட்ட வீடீயோகாட்சியில் பதிவான உரையாடல்' என்கிறார். அது என்ன வீடியோகாட்சி என்பதைக் குறிப்பிடவில்லை. எந்த ஆதாரமும் காட்டாமல் போகிற போக்கில் மனவிகாரத்தைக் கொட்டிவிட்டுப்போவதுதான் ஒரு எழுத்தாளருக்கு அழகா?

கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞானியோ நாமோ அல்ல. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் ரவிக்குமார் 'கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு யார் வரவேண்டும்' என்று எழுதியிருந்தார்.

இந்த அக்கறையெல்லாம் அறிவுஜீவிகளுக்கு எதற்கு? வயதானாலேயே ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபடமுடியாதென்றால் காந்தி என்ன செய்தார்? பெரியார் மூத்திரப்பையைச் சுமந்துகொண்டு நாலுபேர் தூக்கிவந்து மேடையில் அமர்த்தித்தான் பேசினார். பெரியாரின் செயல்பாடுகளையும் கருணாநிதியின் செயல்பாடுகளையும் ஒப்பிடமுடியாதென்றாலும் வயதுமுதுமையைக் காரணம் காட்டியே ஒருவரது பொதுவாழ்க்கையை நிராகரித்துவிட முடியாது என்பதற்காகவே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதாலேயே அவரது கருத்துக்களைப் புறந்தள்ளவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஜெயேந்திரன் விவகாரத்திலும் குஷ்பு பிரச்சினையிலும் அவரது நிலைப்பாடுகள் நேர்மையானவையாகவும் உறுதிமிக்கவையாகவுமிருந்தன. ஆனால் அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

கருணாநிதிக்குச் சொன்ன அறிவுரையை ஞாநி ஏன் அடேல்பிகாரி வாஜ்பேயிக்கும் சங்கர்தயாள்சர்மாவிற்கும் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்புவது தவிர்க்கவியலாதது.

ராமன் எதிர்ப்பும் 'போலி மதச்சார்பின்மை' குறித்த கேள்விகளும்

"திக காரர்கள், திமுககாரர்கள் ஏன் இந்துமதத்தை, இந்துக்கடவுள்களை மட்டும் தாக்குகிறார்கள்? மற்ற மதங்களை ஏன் கடுமையாக விமர்சிப்பதில்லை?" - இது அடிக்கடி இந்துத்துவச்சக்திகள் தங்கள் பிரச்சாரங்களிலும் வெளியீடுகளிலும் கேட்கும் கேள்விகள்தான்.

ஆனால் இந்தக்கேள்விகள் சமயங்களில் மற்ற முகாம்களிலிருந்தும் எழுப்பப்படுவதுண்டு. உதாரணங்களாக கருணாநிதி - ராமன் பிரச்சினையில் ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் நிலைப்பாடுகளைக் காணலாம். இதில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் எந்தவிதக் கருத்தியல் அடிப்படையுமற்ற ஆதாயக்காரர்கள் மட்டுமே. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் திராவிடக்கட்சியொன்றிற்குத் தலைவியாகிற விபத்து நேர்ந்துவிட்டதே தவிர முற்றான பார்ப்பனீயக்கருத்தியல்வாதிதான்.

ஆனால் மாற்று அரசியலை முன்வைக்கக்கூடிய முகாம்களிலிருந்தும் இப்படியான குரல்கள் எழுவதுதான் வேடிக்கையானது. ஒரு உதாரணம் சிதம்பரம் கோயிலில் திருமாவளவனுக்கு பூரணகும்ப மரியாதை நடந்தது குறித்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில், "ஏன் நோன்புகஞ்சி குடிக்க மசூதிக்குச் செல்லும்போது கோயிலுக்கு ஏன் போகக்கூடாது?' என்று வினவினார். இதேமாதிரியான குரலை சமீபத்தில் கேட்கநேர்ந்தது.

பெரியாரின் 129ஆம் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் தூயநெஞ்சர்கல்லூரி திருப்பத்தூர் பகுத்தறிவாளர்கழகத்துடன் இணைந்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கில் 'பகுத்தறிவும் பெரியாரும்' என்னும் தலைப்பில் பேசிய திராவிடர்கழகத்தோழர் துரைசந்திரசேகரன் இந்துப்புராணங்கள் குறித்து விமர்சித்தார்.

அதன்பிறகு 'பெரியாரும் பொதுவுடைமை அடையாளமும்' என்னும் தலைப்பில்பேசிய தோழர்.ராசேந்திரசோழன், தனது தலைப்பு குறித்தே பேசாததோடு, 'ஏன் பெரியார் ராமனை மட்டும் எரித்தார், மற்ற மதங்களை ஏன் விமர்சிக்கவில்லை' என்றும் கேள்வியெழுப்பினார்.

பிறகு 'பெரியாரின் போராட்டமுறைகள்' குறித்துப் பேசும்போது இதுகுறித்துக் குறிப்பிட்டநான், 'இந்துமதம் என்பது மற்ற மதங்களுடன் ஒப்பிடக்கூடிய தன்மைவாய்ந்ததல்ல. அதன் அடிப்படையே சாதியம்தான். சாதியத்தை உருவிவிட்டால் இந்துமதம் கலகலத்துவிடும். அதன் ஆன்மீக மற்றும் தத்துவ அடிப்படைகள் கூட மாற்றுமரபுகளிலிருந்து உட்செரித்துக்கொண்டவையே. இதைப் பலசந்தர்ப்பங்களில் அம்பேத்கரும் பெரியாரும் விளக்கி இந்துமத ஒழிப்பை முன்வைத்திருக்கிறார்கள். தன்னை ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்திக்கொள்கிற தமிழ்த்தேசியவாதி, மேலும் மண்மொழி என்னும் இதழையும் தமிழ்த்தேசிய மார்க்சியக்கட்சி என்னும் அமைப்பையும் நடத்திவரும் ராஜேந்திரசோழன் என்னும் அஷ்வகோஷ் இந்துத்துவவாதிகளின் குரலில் பேசுவது வருந்தத்தக்கது' என்று குறிப்பிட்டேன்.

பெரியார் தொடர்ச்சியாக இந்துப்பெருங்கடவுள்களை பலரறிய அவமானப்படுத்தியிராவிட்டால், இந்துக்குறியீடுகளை இழிவுபடுத்தியிராவிட்டால் ராமன் விஷம் தமிழகத்தையும் விழுங்கியிருக்கும். எத்தனையோ கருத்தியல் சமரசங்களைச் செய்தபோதும் அவ்வப்போது இந்துமதத்தையும் இந்துக்கடவுள்களையும் கேள்விக்குள்ளாவதற்காக கருனாநிதியையும் இந்துவெறியர்களுக்கு உதைகொடுத்ததற்காக திமுகவினரையும் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த ராமன்பாலம் பிரச்சினையில்கூட ராமதாஸ், தேர்தல் கம்யூனிஸ்ட்கள் பிஜேபியை எதிர்க்கிறார்களே தவிர இந்துமதத்தையோ ராமனையோ அல்ல என்பதைக் கவனிக்கவேண்டும்.


சில குறிப்புகள் :

திருமாவளவன் சிதம்பரம் கோவில் பிரச்சினையில் சமரசம் செய்துகொண்டாலும் வேதாந்தி என்னும் இந்துவெறியனுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பது பாராட்டத்தக்கது.

ராமனை எரித்தார், அதனாலேயே இங்கு ராமன் அரசியல் பலிக்கவில்லை என்று சொல்லும் அதேநேரத்தில் பெரியாரால் நடுத்தெருவில் போட்டுடைக்கப்படட் பிள்ளாயாரைக்கொண்டு இந்துத்துவச்சக்திகள் இருபதாண்டுகளாக அரசியல் நடத்திவருவதையும் கணக்கிலெடுக்கவேண்டும். தொடர்ச்சியாக பெரியாரின் குறியீட்டழிப்புப்போராட்டங்களையும் இந்துமத எதிர்ப்பையும் அவரது வழித்தோன்றல்கள் முன்னெடுக்காதது மிகமுக்கிய காரணம்.

கலைஞரின் 'நெஞ்சுக்குநீதி'யும் வீரமணியின் 'உலகத்தலைவரும்'



கலைஞர் மு.கருணாநிதி தன் வாழ்க்கை வரலாற்றைத் தானே எழுதிய 'நெஞ்சுக்குநீதி' மற்றும் சாமிசிதம்பரனார் பெரியாரின் வரலாறாக எழுதிய 'தமிழர்தலைவர்' நூலின் இரண்டாம்பாகம் என அறிவிக்கப்பட்டு வெளியாகியிருக்கும், திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி எழுதிய 'உலகத்தலைவர்' என்னும் இருநூற்களையும் அடுத்தடுத்துப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 1924 முதல் 1969 வரையிலான நிகழ்வுகளைக் கொண்டதெனில் உலகத்தலைவர் 1948 வரையிலானது.

நெஞ்சுக்கு நீதியில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பலவற்ரைச் சொல்லமுடியுமெனினும் ஒரேஒரு சம்பவத்தை மாதிரிக்குச் சுட்டலாம். கருணாநிதி எவ்வளவு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை அவரது இளமைக்காலத்தில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சி சுட்டுகிறது.


திருவாரூரில் கலைஞர் தலைமையில் சீர்திருத்தச்சங்கம் என்னும் பெயரில் இளைஞர்கள் சங்கமாய்த் திரண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் கருணாநிதியின் நண்பர்களில் ஒருவரான தியாகராஜன் என்பவர் அதிலிருந்து விலகிப்போய் 'இளைஞர்சங்கம்' என்னும் பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்குகிறார்.

இந்த இரண்டுசங்கத்திற்குமிடையிலும் கடுமையான போட்டிகளும் வன்முறை மோதல்களும்
அரங்கேறுகின்றன. ஒருமுறை எந்தச் சங்கத்திற்கு செல்வாக்கு அதிகம் என போட்டிவந்து ஊர்மக்கள் மத்தியில் தேர்தல் நடத்தலாமென இருசங்கத்தாரும் முடிவு செய்கின்றனர்.

இருதரப்பினரும் கடுமையான பிரச்சரம், கூட்டம் திரட்டுவதற்கென நாடகங்கள் என நடத்துகின்றனர். ஒருமுறை தியாகராஜன் ஏற்பாடு செய்த நாடகத்தில் நடிப்பதற்கு முக்கியமான நடிகர் ஒருவர் வரவில்லை. வேறுவழியில்லை. தியாகராஜன் கருணாநிதியிடம் நேரில் சென்று அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டுகோள்விடுக்கிறார். ஏனெனில் கருணாநிதி சிறுவயதிலேயே மாணவர்களிடம் நாடகங்கள் நடத்தியவர்.

அப்போது நாடகத்தில் நடிப்பதற்கு கருணாநிதி ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதிக்கிறார், அது, 'நான் நாடகத்தில் நடிகக்வேண்டுமானால் இளைஞர்சங்கத்தைக் கலைத்துவிடவேண்டும்' என்பதுதான் அது. இளைஞர்சங்கம் காணாமல்போய் அனைவரும் சீர்திருத்தச்சங்கத்தில் அய்க்கியமானதையும் கருணாநிதி மட்டுமே ஒரே தலைவராக விளங்கியதையும் சொல்லவும் வேண்டுமா?

இப்படியான பலசம்பவங்களைக் கருணாநிதி தனது வழக்கமான பகட்டுநடையின்றி இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்.

நெஞ்சுக்குநீதியை வாசித்துமுடித்தபோது இரண்டுவிதமான பார்வைகள் கிடைத்தன.

1924ல் பிறக்கும் கருணாநிதி தனது பதினான்கு வயதில் பட்டுக்கோட்டை அழகிரியின் முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1938ல் முதல் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமே அரசியல்களத்துக்குள் நுழைகிறார். அதிலிருந்து திமுக தொடங்கப்படட் 1948 வரையிலும் அதற்குப் பிறகும் ஏன் இன்றளவிலும் கருணாநிதி பல போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்.

ஆனால் ஆச்சரியமான விஷயம் பெரியாரியக்கத்திலிருந்தவரை கருணாநிதியும் சரி, அண்ணாதுரை போன்ற திமுகவின் முன்னோடிகளும் சரி மொழிப்போராட்டங்களிலேயே பங்கெடுத்திருக்கின்றனரே தவிர எந்த சாதியொழிப்புப் போராட்டங்களிலுமல்ல. இதன்மூலமே அண்ணாதுரையின் பேச்சு மூலமாக திராவிடர்கழகத்தில் உருவான இளைஞர்கூட்டத்தின் மனச்சாய்வு என்னமாதிரியாக இருந்தது என்பதையும் இந்த கூட்டமே பின்னாளில் திராவிடர்கழகம் உடைவதற்கும் திமுக உதயமாவதற்கும் காரணமாக அமைந்தது என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

ஆய்வாளர் வ.கீதா பெரியாரியக்கத்தின் வீரியமிக்க சாதனைகள் 1930கள் வரையிலான காலமே என்றும் முதல் இந்தித்திணிப்புப் எதிர்ப்புப்போராட்டம் பெரியாரியக்கத்தின் திசைவழிப்போக்கையே மாற்றியது என்றும் குறிப்பிடுவது சரிதானோ என்று யோசிக்கத்தோன்றுகிறது.

கருணாநிதியின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி என்றும் அதையே கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார் என்றும் பலரும் சொல்கின்றனர். ஆனால் அப்படியான குறிப்புகளெதுவும் நெஞ்சுக்கு நீதியில் இல்லை. ஆனால் கருணாநிதியின் மைத்துனர், தயாளு அம்மாளின் அண்ணனின் பெயர் தட்சணாமூர்த்தி.

அதேபோல், திராவிடர்கழகம் உருவான வரலாறு பற்றி எழுதும் அத்தியாயத்திலும் திராவிடர்கழகக் கொடியத் தான் தான் கைவிரல் கிழித்து ரத்தத்தால் உருவாக்கியதாக எழுதவில்லை. முதல்பாகம் வந்த ஆண்டு 1975 என்பதும் பெரியார் இறந்த இரண்டாண்டுகள் வரையிலும் கருணாநிதி இப்படியாகக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னாட்களில்தான் கருணாநிதி திராவிடர்கழகக் கொடியைத் தானே உருவாக்கியதாக எழுதியும் பேசியும் வந்தார். இதைத் திமுகவோடு முரண்பட்ட காலங்களில் திராவிடர்கழகம் மறுத்தே வந்துள்ளது. ஆனால் இப்போது வீரமணி எழுதியுள்ள 'உலகத்தலைவர்' நூலில் கருணாநிதியே தி.க கொடியை உருவாக்கியதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. (இத்தகைய முரண்பாடுகளைத் தோழர் கொளத்தூர்மணி பெரியார்திராவிடர்கழகத்தின் இதழாகிய பெரியார்முழக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார்.)

அதுமட்டுமல்ல, நூலின் பல இடங்களிலும் திமுக சார்பு அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு சிறந்த உதாரணம் 1947 ஆகஸ்ட்15.

ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியார் அறிக்கைவிட அண்ணாவோ அதை இன்பநாள் என்று அறிக்கைவிடுகிறார். பெரியாருக்கும் அண்ணாவிற்குமான முரண்பாடுகள் வெளிப்படையாய்த் தெரிந்த சம்பவம் இதுவே. ஆனால் அண்ணா இன்பநாள் என அறிக்கைவிடுத்தார் என ஒருவரி கூட நூலில் இல்லை.

இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டுமென்றே தோன்றுகின்றன.

அம்பேத்கரின் அரசியலும் விடுதலைச்சிறுத்தைகளின் வீழ்ச்சியும்




தமிழகத்தில் தலித் அரசியலுக்கென்று ஒரு நீண்ட நெடும்பாரம்பரியமுண்டு. 1800களிலேயே சந்திரோதயம் என்னும் இதழ் தலித்துகளால் நடத்தப்பட்டது. மேலும் அரசியல் களத்தில் 'திராவிட' என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி அரசியலைக் கட்டமைக்க முயன்றவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.

அயோத்திதாசர், எம்.சி.ராஜா, சிவராஜ், இரட்டைமலைசீனிவாசன் போன்ற தலித் ஆளுமைகள் தமிழக அரசியல் களங்களில் செயற்பட்டுவந்திருக்கிறார்கள். ஆனாலும் மற்ற இயக்கங்களைப் போல ஒரு தனித்துவமான இயக்காமாக தலித் இயகக்ம் வளரவில்லை என்பதே உண்மை. இதற்குப் பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம் என்று தற்போதைய தலித் எழுத்தளர்கள் மற்றும் தலித் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றம் சாட்டிவருவதும் நாமறிந்த செய்திதான்.

ஆனால் 80களில் தலித்துகள் மீண்டும் அரசியல் அமைப்புகளாகத் திரளத்தொடங்கினர் என்று சொல்லலாம். குறிப்பாக ஒடுக்கப்படட் மகக்ளின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாய் வளர்ந்துவந்தவர் திருமாவளவன். அதுகாறும் சிற்சில இடங்கள் தவிர பலவிடங்களில் தலித்மகக்ள் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டு வந்த நிலை மாறி தாங்களும் திருப்பித்தாக்கத் தொடங்கினர்.

'திட்டமிடு, திமிறியெழு, திருப்பியடி' என்னும் முழக்கம் தலித் இளைஞர்களிடையே புதிய உற்சாகத்தை ஊட்டியது. கருஞ்சிறுத்தைகள் இயக்கததை முன்மாதிரியாகக் கொண்டு மகாராட்டிராவில் ஆரம்பிக்கப்பட்டது இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கம். ஆனால் தமிழ்ச்சூழலில் டி.பி.அய் என்றே அழைக்கப்பட்டாலும் அதன் அடையாளம் விடுதலைச்சிறுத்தைகளாய் மாறியது.

மலைச்சாமிக்குப் பிறகு தலைமைக்குவந்த திருமாவளவன் தடயவியல்துறையில் பணியாற்றிவந்த ஒரு அரசு ஊழியராக இருந்தபோதும் பல தலித் இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கினார் என்பது மறுக்கமுடியாது. சிறுத்தைகள் தேர்தல் அரசியலைப் புறக்கணித்ததோடு மட்டுமல்லாது தேர்தலின்போது பலவிடங்களில் தேர்தல் மறுப்புவாசகங்களை எழுதி வாக்குப்பெட்டிக்குள் போடவும் செய்தனர்.

ஆனால் தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் சிறுத்தைகள் இயகக்ம் தேர்தல் மறுப்பு என்னும் நிலைப்பாட்டைக் கைவிட்டுத் தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. அரசியலதிகாரமற்ற தலித்துகள் தொடர்ந்து அரசினால் குண்டர்சட்டம் போன்ற கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களால் துன்புறுத்தப்படும்போது தனக்கான அதிகாரத்தைக் கைப்பற்றவே இந்த நிலைப்பாடு என்று விளக்கமளித்தது சிறுத்தைகளின் தலைமை. தனது அரசுபபணியைத் துறந்து தேர்தல் அரசியல் களத்தில் குதித்தார் திருமா.

பல்வேறுபட்ட கூட்டணிகளில் இடம்பெற்று இன்று மய்யநீரோட்ட அரசியலில் தவிர்க்கமுடியாத அமைப்பாய் விளங்குகிறது டி.பி.அய். இதே சமகாலத்தில் திருமாவோடு போட்டியிட்ட பறையர் தலைவர்களாகிய சாத்தை பாக்கியராஜ், அரங்க.குணசேகரன், ஏர்போர்ட் மூர்த்தி, வை.பாலசுந்தரம், ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களால் திருமா அளவிற்கான கவனத்தையோ அமைப்புத் திரட்சியையோ பெறமுடியவில்லை.

தென்மாவட்டங்களில் தேவர்சாதியினருக்கு எதிராக திருப்பித் தாக்கும் அரசியலை முன்வைத்து இயக்கங்களாய் வளர்ந்த பள்ளர்சமூகத்தலைவர்களாக ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன், டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளைப் பெற்றவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. ஆனாலும் அவரின் அரசியல் வாழ்வும் கடந்த பத்தாண்டுகளில் அஸ்தமித்து வெறுமனே அறிக்கைத்தலைவராக மாறிப்போனார். இறுதியாக காவிரிப்பிரச்சினையில் நடிகர்.ரஜினிகாந்தின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுத் தனது அரசியலைத் தானே மலினப்படுத்திக்கொண்டார்.

இன்று மய்யநீரோட்ட அரசியல்கட்சிகளுடன் அரசியல் பேரம் பேசும் அளவிற்குத் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கும் விடுதலைச்சிறுத்தைகள் கருத்தியல் ரீதியாக இழந்தவை என்ன? 1992 பபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டித் தமிழ்ச்சூழலில் பரவலாக விவாதிக்கப்பட்ட தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் அரங்கியல் ஆகிய கருத்தாக்கங்களே சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு மாபெரும் உற்சாகத்தை அளித்தன என்று சொல்வது தவறாகாது.

ஆனால் இன்று தனது தனித்துவமிக்க அடையாளத்தை இழந்திருக்கின்றனர் சிறுத்தைகள். ஜெயலலிதா அரசால், ஜெயேந்திரனின் ஆசியோடு கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு, கோழி பலிதடைச்சட்டம் ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் வழிப்பாட்டுமுறைகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒடுக்கும் பார்ப்பனீய அரசியல்தந்திரத்தோடேயே கொண்டுவரப்பட்டது.

ஆனால் இதை எவ்வாறு எதிர்கொண்டனர் சிறுத்தைகள்? பலித் தடைச்சட்டத்திற்கு எதிரான அமைப்புரீதியான பெரிய போராட்டங்கள் எதையும் நிகழ்த்திவிடவில்லை. மதமாற்றத்தடைச் சட்டம் என்பது உண்மையில் தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதை வலுவாக முன்வைப்பதற்கும் அந்தக் கருத்தியலைத் தலித்மக்களிடம் வீச்சாகக் கொண்டுசெல்வதற்கும் இந்துமதம் என்னும் மாயக்குகையிலிருந்து வெளியேறுவதற்கும் தலித்மக்களைப் பார்ப்பனீயத்திலிருந்து துண்டிப்பதற்குமான அரியவாய்ப்பு.

ஆனால் நடந்தது என்ன? இந்தச் சட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்காகக் கூடிய சிறுத்தைகளின் மய்யக்குழு மதமாற்றத்திற்குப் பதிலாக பெயர்மாற்றத்தை முன்வைத்தது. உண்மையில் இந்துமதத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ள சிறுத்தைகள் தயாராக இல்லை என்பது அவர்கள் கருத்தியல் ரீதியாக தயார்ச்செய்யப்படவில்லை என்பதையும் அம்பேத்கர் பிம்பமாகவன்றி தத்துவமாக உள்வாங்கப்படவில்லை என்பதையுமே காட்டியது.

திருமா ஆரம்பித்துவைத்த பெயர்மாற்ற அரசியல் என்பதும்கூட திமுகவிடம்,இருந்து கடன்வாங்கியதுதான். நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் ராமைய்யா அன்பழகனாகவும் மாறியது திமுகவின் கடந்தகாலக் கதை. அதே அரசியலைப் பின் தொடர்ந்த திருமா, இதுவே சாதியடையாளத்திற்கும் இந்து அடையாளத்திற்கும் எதிரான மாற்று என்றார். அப்படியானால் திமுக ஏன் சாதியெதிர்ப்பு இயககமாக மாறவில்லை என்னும் கேள்வியை அவர் எதிர்கொள்ளத் தயங்கினார்.

மேலும் தமிழ் மரபு, தமிழ்ப்பண்பாடு என்று ஆதிக்கமரபுகளையே அவரும் கட்டமைத்தார். 'உங்களது பெயரை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை?' என்னும் கேள்விக்கு 'கரிகால்சோழனின் இன்னொரு பெயர்தான் திருமாவளவன். அதை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை' என்று அவர் பதிலிறுத்ததன்மூலம் பார்ப்பனீயத்தையும் ஆணாதிக்கமதிப்பீடுகளையும் கட்டிக்காத்த சோழர் காலத்தைப் பொற்காலமாய்க் கதையாடிய திமுகவின் மரபில் இயல்பாகப் பொருந்திப்போனார். மட்டுமல்லாது அருணாச்சலம் போன்ற ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கும் கூட செம்மலை என்று பெயர்சூட்டி 'ஞானஸ்ன்நானம்' செய்தார்.

கற்பு - குஷ்பு விவகாரத்தில் சிறுத்தைகள் வெளிப்படையாகவே தங்களை ஆணாதிக்கப்பாசிஸ்ட்களாக வெளிப்படுத்திக்கொண்டனர். எண்ணற்ற தலித் இளைஞர்களின் ரத்தத்தின் மீதும் சுயமரியாதை உணர்வின்மீதும் கட்டப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் பறையர்களுக்கெதிராக கலவரங்களைத் தொடுத்த வன்னிரகளின் தலைவர் ராமதாசோடு 'தமிழைப் பாதுக்காக' கைகோர்த்தார்.

'இனி சாதிக்காக ரத்தம் சிந்தப்போவதில்லை' என்று புன்னகையோடு பொன்மொழி உதிர்த்தனர். ஒடுக்கப்பட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அணிதிரள வேன்டிய அமைப்பு சினிமாக்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தது. விடுதலைககாய்ச் செலவழிக்கப்படவேண்டிய தலித் மகக்ளின் உழைப்பு விளம்பரங்களுக்காகவும் சுயநலங்களுக்காகவும் விரயமாக்கப்படட்து.

சிறுத்தைகள் முன்வைத்த தமிழ்த்தேசிய அரசியலும்கூட 'தமிழ்பேசும் சாதி'களுக்கானது. இதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிறுத்தைகள் பல்வேறு காலகட்டங்களில் நடத்திவந்த ஏடுகளான கலகக்குரல், தாய்மண், இப்போது தமிழ்மண், உலகத்தமிழர்சக்தி ஆகிய ஏடுகள் வெளிப்படுத்தின. இத்தகைய வரையறுப்புகளின் மூலம் அருந்ததியர்கள், நரிக்குறவர்கள், பழங்குடிகள் ஆகிய விளிம்புநிலைச்சாதியினர் தேசியக்கட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர்.

பெரியாரே தலித் அரசியலின் மாபெரும் எதிரியாய் முன்னிறுத்தப்பட்டார். பார்ப்பனர்களோடு எவ்வித தயக்கங்களுமின்றி உறவுகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை அண்ணாபேருந்து நிலையத்திற்கருகே சிறுத்தைகளால் தமிழ்த்தாய்க் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலில் திருமாவிற்கு பரிவட்டம் கட்டப்படும் படங்கள் தாய்மண்ணில் பகட்டாக வெளியிடப்பட்டது. சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் திருமாவிற்குப் பூரணகும்ப மரியாதை செய்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்பனீய மதிப்பீடுகள் எவ்விதக் கூச்சமுமின்றி அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது. திமுக நடத்திவந்த கவர்ச்சி அரசியல், தனிநபர் வழிபாடு, தலைமைதுதி, 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்' என ஏட்டளவிலும் 'மய்யப்படுத்தப்பட்ட தலைமை' என்பதுமாக நடைமுறையிலுமாக திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் 'போலச்செய்தனர்' சிறுத்தைகள்.

இதன் உச்சகட்டமாக தோழர் திருமா 'அண்ணன் திருமாவாக' மாறினார். ஈழப்பிரச்சினை குறித்து எவ்வித விமர்சனங்களுமற்று தலித்துகள் விடுதலைப்புலிகளின் ரசிகர்களாக்கப்பட்டனர். 'தென்னகத்துப் பிரபாகரன் திருமாவளவன் வாழ்க' என்னும் கோஷங்கள் விண்ணதிரத்தொடங்கின. கடைசியாக அதனுச்சம் திருமா அரசியல் களத்தில் மட்டுமில்லாது திரையுலகிலும் 'கதாநாயகன்' ஆனார்.

சிலகாலம் முன்புவரை கட்டவுட்டுகளில் மழைக்கோட்டும், துப்பாக்கியும், கூலிங்கிளாசுமெனத் தோற்றமளித்த விஜயகாந்தின் தோற்றம் கதர்ச்சட்டை, கதர்வேட்டி என மாறிப்போனதெனில் திருமாவளவனோ விஜயகாந்தின் கெட்டப்புகளை மாட்டிக்கொண்டு ரெயின்கோட், கூலிங்கிளாஸ், துப்பாக்கி சகிதம் தலித மக்களுக்குக் காட்சியளிக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் மற்றெந்த தலித் அமைப்புகளையும் விட கூடுதலான கவனத்தையும், கணிசமான பலத்தையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தத் தலித் மக்களை இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்களவில் பறையர்சமூகத்தை வாக்குவங்கியாகத் திரட்டியிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறத்திலோ அது மோசமான கருத்தியல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய இரு உதாரணங்களைச் சொல்லலாம்.

பெரியாரை ஒருபுறம் தலித்விரோதியாகச் சித்தரித்துக்கொண்டு (இப்போது திமுக கூட்டணிக்குப்பிறகு இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) மறுபுறம் தலித்துகளின் மீது கடும் வன்முறையையை ஏவிவிட்டவரும் இந்துத்துவக் கருத்தியலில் ஊறிப்போனவருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென சிறுத்தைகள் அமைப்பு சமீபத்தில் நெல்லையில் நடத்திய 'மண்ணுரிமை மாநாட்டில்' முதல்வர் கருணாநிதியிடம் தீர்மானம் நிறைவேற்றிக் கோரிக்கை வைத்துள்ளது.

இரண்டாவது கொடூரசம்பவம் அருந்ததியர்கள் மீதான சிறுத்தைகள் அமைப்பினர் நேரடியாகப் பங்குபற்றிய தாக்குதல். அயோத்திதாசரைத் த்லித் திரு உருவாகக் கட்டமைக்கும்போது பறையர் சமூகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் அவரின் அருந்ததியர் விரோதக் கருத்தியல் குறித்து எவ்வித விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை. மேலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரையில் தலித் தோழமை இயக்கம் நடத்திய 'தந்தை பெரியார் தலித்துகளுக்கு எதிரியா? என்னும் கருத்தரங்கில் அருந்ததியர் இயக்கமாகிய ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான், சிறுத்தைகள் அமைப்பை விமர்சித்தார் என்பதற்காக அவரைச் சாதிப்பெயர் சொல்லித் தாக்கமுனைந்தனர்.

இப்போது அதேபோல விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்புப் பகுதியில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகளே அருந்ததியர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு...

http://www.keetru.com/dalithmurasu/aug07/ponnusamy.php


தம்ழிச்சூழலில் சிறுத்தைகள் மட்டுமல்ல, இன்னும் பல அமைப்புகளும் தேசிய அரசியலில் பகுஜன்சமாஜ்வாடி உள்ளிட்ட அமைப்புகளும் இப்படியாகக் கருத்தியல் ரீதியாகச் சீரழிந்துபோனது குறித்து யோசிக்கும்போது அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடு குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் வாழ்வு மற்றும் செயற்பாடுகளை ஒரு வசதிக்காக மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள், இந்துமதப்பிரதிகள் ஆகியவற்றைக் கட்டவிழ்த்து அதன் அடிப்படை வருணாசிரமப் பார்ப்பனீயமே என்பதை வெளிக்கொணர்வது.

2. இந்து மதத்திலிருந்து வெளியேறும் முகத்தானாகவும் பார்ப்பனீயத்திற்கெதிரான மாற்று அறவியல் மதிப்பீடுகளைக் கைக்கொள்ளும் முகத்தானாகவும் மதமாற்றத்தை மேற்கொள்வது.

3. தலித்துகள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது.

ஆனால் அம்பேத்கரின் மூன்றாவது கூறையே இன்றைய தலித் அமைப்புகள் விடாப்பிடியாகப் பற்றுகின்றன என்பதே உண்மை. நக்சல்பாரிகள் சொல்வதைப்போல தலித்துகள் தேர்தல் அரசியலில் ஈடுபடாமலிருப்பது அம்பேகரியத்தின்படிச் சாத்தியமில்லை.

ஏனெனில் 'தீண்டாமை என்பது வெறுமனே சமூகப்பிரச்சினை மட்டுமில்லை, மாறாக அது ஒரு அரசியல் பிரச்சினையே' என்பதை அம்பேத்கர் வலியுறுத்திவந்தார். பாராளுமன்ற அரசியலை மனப்பூர்வமாக ஆதரித்தார். அவரது பல நிலைப்பாடுகள் தலித்துகள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றும் அபிலாஷையின் அடிப்படையிலேயே அமைந்தது.

குறிப்பாக மாநிலங்கள் குறைந்தளவிலான அதிகாரத்திலிருப்பதையும் அதிகாரங்கள் நிறைந்த மய்ய அரசையும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில் வலிமைவாய்ந்த மாநில அரசு தங்கள் மாநிலங்களில் சிறுபான்மையினரான தலித்துகளின் மீது கரிசனம் செலுத்தாது என்றும் அதைக் கண்காணிக்க வலிமையான மய்ய அரசு தேவை என்றும் வலியுறுத்தினார்.

அவர் காந்தியுடன் தொடர்ச்சியாக இந்தியத்தேசியம் குறித்து முரண்பட்டு வந்தபோதும் அவர் எந்த பிராந்திய தேசியங்களை ஆதரிக்கத் தயாராக இல்லாததற்கும் இதுவே காரணம். ஆனால் அம்பேத்கரின் இத்தகைய நிலைப்பாடுகள் என்ன விதமான பலன்களை விளைவித்தன என்பதற்கான நடைமுறைகளுக்கு நாம் வேறெங்கும் போகத்தேவையில்லை, அம்பேத்கரையே மகத்தான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

அம்பேத்கர் பாராளுமன்ற அரசியலின்மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவரால் எப்போதும் வெற்றிகரமான பாராளுமன்ற அரசியல்வாதியாக இருக்கமுடிந்ததில்லை. அவரது குடியரசுக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பெருமளவு வெற்றியைத் தேர்தல்களங்களில் ஈட்டியதில்லை.

இந்திய அரசியல் சட்டத்திற்கு எழுத்துவடிவம் தந்த அம்பேத்கரே பின்னாளில், 'என்னை ஒரு ஸ்டெனோ போல பயன்படுத்திக்கொண்டனர்' என்றும் 'அவர்களுக்கு (பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்கச் சாதிகளுக்கு) ராமாயணம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்ட வால்மீகியிடம் போனார்கள், அவர்களுக்கு மகாபாரதம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்ட வியாசரிடம் போனார்கள், அவர்களுக்கென்று ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்டவனாகிய என்னிடம் வந்தார்கள்' என்றே புலம்பினார்.

அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தை அறிமுகம் செய்தபோது கூடியிருந்த நிருபர்கள், மகாதமா வாழ்க', 'படேல் வாழ்க' என்று ஆரவாரம் செய்தனரே தவிர அம்பேத்கரின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. அவரால் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டுவரப்பட்ட இந்துசட்டத்தொகுப்பு மசோதாவை பிரதமர் நேரு ஆதரித்தபோதும் மற்ற ஆதிக்கச்சக்திகள் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்காதபோது மனம் வருந்திப் பதவியிலிருந்து விலகினார் அம்பேத்கர்.

தனது வாழ்வின் இறுதிக்காலங்களில் இட ஒதுக்கீட்டின் மூலம் பதவிக்கு வந்த தலித் அரசு அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியிலிருந்தார் அவர். அதன் அழுத்தம் அவரை மீண்டும் பவுத்தத்தை இறுகப்பற்றச் செய்தது.

எனவே தலித் ஒருவர் அரசியலதிகாரத்திற்கு வருவதே அம்பேத்கரியத்திற்குக் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்கரியத்திற்குச் செய்யும் நீதியாகாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கே. அறமும் கருத்தியலுமற்ற அதிகாரக் கைப்பற்றல் என்ன பலனைத் தரும் என்பதற்கான உதாரணம்தான் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தியல் ரீதியான வீழ்ச்சி.

இந்தியச் சாதியமைப்பு, இன்றைய உலகமயமாக்கல் சூழல், ஊழல் கறைபடிந்த நாடாளுமன்ற அமைப்பு கருத்தியலைக் காலிசெய்துவிடும் அபாயம், கருத்தியல்மயப்படுத்தாமல் அமைப்புகளைத் திரட்டுவதில் உள்ள பின்னடைவு ஆகியவை குறித்த கேள்விகளே இன்று ஒடுக்கப்பட்ட மகக்ளின்பால் கரிசனங்கொள்வோரின் முன்நிற்கும் கேள்விகள்.

பதிவாளர் பட்டறை?

தொடர்ச்சியான அலுவல்கள் இருந்ததால் வலைப்பதிவாளர்பட்டறையில் தொடர்ந்து பங்குபற்றாத இயலாத நிலை. அதிகபட்சம் அரைமணிநேரம் மட்டுமே பட்டறையில் சுற்றிவரமுடிந்தது. அரங்கத்தில் ஒரே ஒரு அமர்வினை மட்டுமே கேட்டேன். அதுவும் தலைப்பு ஈர்த்ததால்.

'வலைப்பதிவாளர்களின் சமூக அக்கறை'. ராமகிருஷ்ணன் என்பவர் பேசினார். (அவர்தான் ரஜினிராம்கி என்று ஒரு நண்பர் சொன்னார். சரியா என்று தெரியவில்லை.) அவர் பேசியதன் சாராம்சம் இதுதான். 2004ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நிதி திரட்டிக்கொடுத்தது, கல்வி மற்றும் மருத்துவச்செலவுகளுக்காக நிதி திரட்டிக்கொடுத்தது ஆகியவற்றைப் பட்டியலிட்ட ராமகிருஷ்ணன் இதைத்தான் சமூக அக்கறை என்றார்.

இதற்குப்பெயர் மிடில்கிளாஸ் மனிதாபிமானமே தவிர சமூக அக்கறையல்ல. இயற்கைப்பேரழிவுகளோ அல்லது வறுமையோ வெறுமனே இயறகை மாற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை, அதற்குப் பின்னால் அகோரமான மூலதனப் பசியும் வல்லரசுகளின் சுரண்டலும் முதலாளித்துவக் கொடூரமும் உறைந்திருக்கின்றன. இதுபற்றிப் பேசுவதும் பேசச்செய்வதுமே சமூக அக்கறை. நிதி திரட்டித் தருவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குப் பெயர் சமூக அக்கறையில்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

மாலன் பேசியதில் உள்ள சர்ச்சைகளை தொடர்ச்சியாக ஈழத்தமிழ்த்தோழர்கள் எழுதிவருகிரார்கள். ராஜீவ் கொலைக்குற்றவாளிகளுக்கான தீர்ப்பின்போது மாலன் எப்படி நடந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். மாலன் மற்றும் ஹிந்துராம் போன்ற பார்ப்பனர்களின் ஈழப்போராட்டத்திர்கு எதிரான மனோநிலையைக் கண்டறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதில்லை.

டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை


ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை அமுலி லுள்ள தேனீர்க் கடைகள் மற்றும் தலித் மக்களை அனுமதிக்காத கோயில்களின் பட்டி யலை - பெரியார் திராவிடர் கழகத் தோழர் கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலை, இங்கு வெளியிடுகிறோம்.


பாபு, த/பெ. ராமசாமி, பாபு டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638503.

முருகேஷ், த/பெ. ரங்கசாமி, முருகன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம்௬38 503.

அழகிரிசாமி (கண்ணன்), கண்ணன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் சத்தி வட்டம் - 638 503.

வெங்கடேஷ், த/பெ. செட்டியார், வெங்கடேஷ் டீ ஸ்டால், கடைவீதி சாலை, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுந்தரமூர்த்தி, த/பெ. வெள்ளேகவுண்டர், சுந்தரமூர்த்தி டீ ஸ்டால், அம்மன் கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

ராமசாமி, த/பெ. கருப்பண முதலியார், ராமசாமி டீ ஸ்டால், பாரஸ்ட் ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

சஞ்சீவி, சஞ்சீவி டீ ஸ்டால், கடைவீதி ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

இராசு, இராசு டீக்கடை, புது மேட்டூர், ஆயில் மில் அருகில், சத்தி ரோடு, தவிட்டுப்பாளையம், அந்தியூர் அஞ்சல், பவானி வட்டம்.

சம்பத் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கிரி தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

மல்லிகா டீ ஸ்டால், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

இராயப்பன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சிவாயாள் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

முருகபவன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

ஆசனூர்க்காரர் டீக்கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாய் டீக்கடை, மசூதி பின்புறம், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

தங்கவேல், தங்கவேல் தேனீரகம், முதன்மைச் சாலை, அளுக்குளி அஞ்சல், கோபி வட்டம்.

முத்துசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

கந்தசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

வேலன் டீக்கடை, குள்ளம்பாளையம் பிரிவு, ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம்,கோபி வட்டம்.

ஜெயராணி டீக்கடை, வேலன் டீக்கடை எதிரில், ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம், கோபி வட்டம்.

சுப்ரமணியம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பி.எஸ். கிருஷ்ணன் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாரியூர் அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கார்மேகம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

அசோக் டீ ஸ்டால், தாசம்பாளையம், ஈரோடு மெயின்ரோடு, கோபி வட்டம்.

முருகேசன், த/பெ. சின்னப்ப உடையார், முருகேசன் டீக்கடை, காராப்பட்டி,
கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

சின்ன அம்மணி டீக்கடை, க/பெ. கே.பி. ராஜா, கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

நாச்சிமுத்து டீக்கடை, எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சங்கீதா டீக்கடை, பேரூராட்சி அலுவலகம் அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

காளியப்பன் டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பொன்னுச்சாமி டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சின்னப்பன் (எ) காளையன், மாரனூர், ஊத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சக்தி தாலுக்கா.

சிந்து உணவகம் (தேனீர்க்கடை), குமாரசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

பாலன் உணவகம் (தேனீர்க்கடை), மாரனூர், உத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

ராஜேந்திரன் தேனீரகம், வேடச்சின்னானூர் (பேருந்து நிறுத்தம் அருகில்) வேடச்சின்னானூர் ஊராட்சி செண்பகபுதூர் அஞ்சல், சத்தி வழி.

கோபால் தேனீர்க் கடை, விண்ணப்பள்ளி ஊராட்சி, பாலிபாளையம் அஞ்சல், சத்தி வட்டம்.

மாகாளி நாய்க்கர் தேனீர்க்கடை, புதுரோடு (பேருந்து நிலையம் அருகில்), செண்பகபுதூர் அஞ்சல், விண்ணப்பள்ளி ஊராட்சி, சத்தி
வழி.சிக்கரசம்பாளையம் (ஊராட்சி)

பொன்னம்மா உணவகம், சிக்கரசம்பாளையம் புதுகாலனி, பேருந்து நிலையம் அருகில், சிக்கரசம்பாளையம் அஞ்சல்சக்தி வட்டம் - 638 401. சிக்கரசம்பாளையம் ஊராட்சி

ராமசாமி தேனீரகம், குளத்தூர் பிரிவு, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 401.அரியப்பம்பாளையம் பேரூராட்சி

சின்னப்பன் டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

பழனிசாமி டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல்,சக்தி வட்டம் - 638 402.

தனலட்சுமி டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

மணி, டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

தமிழரசு டீ, உணவகம், (கோவில் அருகில்), பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

சிவகாமி டீ, உணவகம், (காலனி அருகில்), சதுமுகை அஞ்சல், தா.க. புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

முருகேசன், டி, உணவகம், காலனி அருகில், கெம்மநாய்க்கன்பாளையம் அஞ்சல், தா.க.புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

கோபால் டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), ராஜகோபால், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

பாலாஜி டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), பழனியப்பன், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

ரவி டீ ஸ்டால் (மேற்கு பகுதி கூடக்கரை),ரத்தினசாமி, கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

லட்சுமி டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), மணி பண்டாரம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

தங்கராசு டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), இராமலிங்கம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

கொண்டையம்பாளையத்துக்காரன் டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

கிட்டுசாமி டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

சரவணன் புரோட்டா ஸ்டால், உணவகம், கூடக்கரை மேற்கு, உரிமை : சரவணன், இவர் அரியப்பம்பாளையத்தை சார்ந்தவர்.

குறிப்பு: அனைத்துக் கடை களிலும் செயற்கைக் குவளை (பிளா°டிக் கப்) அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

முடி திருத்தக் கடைகள்

சுப்பிரமணி சலூன் கடை, கடைவிதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

வெள்ளியங்கிரி சலூன் கடை, முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுப்பிரமணி சலூன் கடை, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை (சின்னப்பையன்), முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை, நரசஸ்சாபுரம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

செல்வம், யுவராஜ் முடித்திருத்தகம், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

செல்வன் சலூன் கடை, உரிமை: செல்வன், லோகு சலூன் கடை, உரிமை: லோகநாதன், லிங்கேஸ் சலூன் கடை, உரிமை: லிங்கேஸ்ரன்,

லைட் (எ) ஆறுமுகம், அயனிங்கடை, கூடக்கரைமேற்கு, கூடக்கரை.
(இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதில்லை)

கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கூடக்கரை (வடக்கு).


கோவை மாவட்டம்



கோவை புறநகர்

மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.

அன்னூர் :

மோக்கனூர், எ°. புங்கம்பாளையம், பகத்தூர், பல்லேபாளையம். இரும்பொறை : கவுண்டன்பாளையம், மீனம்பாளையம், கனுவக்கரை, கள்ளப்பட்டி, சின்னரங்கம்பாளையம், பெரியரங்கம்பாளையம்.

அவிநாசி

சேவூர், நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),ராணியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம்.

ஈரோடு உட்கோட்ட எல்லை

காவிரி பாளையம், குப்பன் துறை, உக்கரம், கடத்தூர்,பனையம்பாளையம்.

பல்லடம்


பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர்.

மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.

ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.

வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,
பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.

அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.

தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.

புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.

நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.

முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.

பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.

கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

தனி சுடுகாடு உள்ள இடங்கள்:


இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.

பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,

குண்டடம் ஒன்றியம்

எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.

வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :

காளப்பட்டி மாரி அம்மன் கோயில்
மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை

சலூன்

வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.

ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவை

நிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.


விழுப்புரம் மாவட்டம்


அப்பு (ஆறுமுகம்), அருத்தங்கொடி, திருக்கோவிலூர் வட்டம்.
குமார் (செகதீசன்), லக்கிநாயக்கம்பட்டி, சங்கராபுரம் வட்டம்.

ஆதி திராவிடர்களை அனுமதிக்காத கோயில்கள்

சிவன் கோயில் - கடுவனூர், சங்கராபுரம் வட்டம்.துரோபதி அம்மன் - தொழுவந்தாங்கல், சங்கராபுரம் வட்டம்.

துரோபதி அம்மன் - கள்ளிப்பட்டு, சங்கராபுரம் வட்டம்.

ஈசுவரன் கோயில் - கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.

கல்வராயன் கோயில் - கோமனூர், கள்ளக்குறிச்சி வட்டம்.

வினாயகர் கோயில் - நாகந்தூர், செஞ்சி வட்டம்.


திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை முறைகள் உள்ள கிராமங்களின் பட்டியல்

பழனி ஒன்றியம்


1. மிடாப்பாடி2. மயிலாபுரம் 3. நல்லெண்ணக்கவுண்டன்புதூர்4. பாப்பாகுளம்5. அய்யம்பாளையம்6. சின்னாக்கவுண்டன்புதூர்7. வேலாயுதம்பாஇளையம் புதூர்8. காவலப்பட்டி 9. போடுவார்பட்டி10. கரடிக்கூட்டம்


ஓட்டன்சத்திரம் ஒன்றியம்

11. திருவாண்டபுரம்,12. மோதுப்பட்டி,13. அப்பியம்பட்டி,14. நால்ரோடு,15. கூத்தம்பூண்டி,16. கழுத்தறுக்கன்பாளையம்,17. கரியாம்பட்டி,18. அம்மாபட்டி,19. குத்திலிப்பை,20. ஓடைப்பட்டி,21. சக்கம்பட்டி,22. சிந்தலப்பட்டி.23. சவ்வாதுபட்டி24. கோ.கீரனூர்25. புதுஅத்திக்கோம்பை26. அரசப்பிள்ளைபட்டி27. காவேரியம்மாபட்டி28. சின்னக்கரட்டுப்பட்டி29. பெரிய கரட்டுப்பட்டி30. பெரியகோட்டை31. தேவத்தூர்32. கொத்தயம்33. கந்தப்பகவுண்டன்வலசு34. 16 புதூர்35. கிலாங்குண்டல்36. கப்பல்பட்டி37. புலியூர்நத்தம்38. முத்துநாயக்கன்பட்டி39. நவாலூத்து40. இ.கல்லுப்பட்டி41. புளியமரத்துக்கோட்டை42. பி.என்.கல்லுப்பட்டி43. குளிப்பட்டி44. சின்னக்குளிப்பட்டி45. மறுநூத்துப்பட்டி46. சிறுநாயக்கன்பட்டி47. வடகாடு 48. பால்கடை49. வண்டிப்பாதை50. கொசவபட்டி51. தங்கச்சியம்மாபட்டி52. மேட்டுப்பட்டி (அம்பிளிகை)53. வளையபட்டி ( இடையகோட்டை 54. வெரியப்பூர்55. சீரங்கக்கவுண்டன்புதூர்56. கொல்லபட்டி57. குட்டில்நாயக்கன்பட்டி

தொப்பம்பட்டி ஒன்றியம்


58. கோவில்அம்மாபட்டி 59. இராஜம்பட்டி 60. அத்திமரத்துவலசு 61. பணம்பட்டி 62. அக்கரைப்பட்டி 63. சரவணப்பட்டி 64. ஆலாவலசு 65. பூலாம்பட்டி 66. வாகரை 67. மரிச்சிலம்பு 68. கொழுமங்கொண்டான் 69. சங்கஞ்செட்டிவலசு 70. கல்துரை 71. கோட்டத்துரை 72. பெரியமொட்டனூத்து 73. தாளையூத்து 74. நாச்சியப்பக்கவுண்டன்வலசு75. புங்கமுத்தூர்,76. அப்பனூத்து,77. குமராசாமிக்கவுண்டன்வலசு,78. அரண்மனைவலசு79. தீத்தாக்கவுண்டன் வலசு80. திருமலைக்கவுண்டன்வலசு81. பருத்தியூர்,82. வடபருத்தியூர்,83. பொருளூர்84. மேட்டுப்பட்டி (கள்ளிமந்தையம்)85. ஒத்தையூர்( கள்ளிமந்தையம் 86. வேலம்பட்டி87. புளியம்பட்டி


தோழர்களே தயாராவீர்!

ஆகஸ்டு 15 இல் தேனீர் கடைகளில், இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை பற்றியும், தலித் மக்களை அனுமதிக்க மறுக்கும் பொதுக் கோயில்கள் பற்றியும், பட்டியல் தயாரித்து விட்டீர்களா?


தோழர்கள் அனுப்பி வைத்த பட்டியலை இந்த இதழில் வெளியிட் டிருக்கிறோம். உரிய நடவடிக்கை கோரி, தொடர்புடைய அரசுத் துறைக்கு, இவை முறைப்படி அனுப்பி வைக்கப்படும். அரசு உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனில், ஆகஸ்டு 15 இல் திட்டமிட்டபடி ‘இரட்டைக் குவளை’ உடைப்புப் போராட்டத்தில் கழகம் இறங்கும்.

கழகத் தோழர்களே!
• மாவட்டத்தில் போராட்டம் நடக்கும் பகுதியைத் தேர்வு செய்யுங்கள். • காவல் துறைக்கு போராட்டம் பற்றிய தகவல்களைத் தெரியப் படுத்துங்கள்.
• உடன்பாடுள்ள தோழமை அமைப்புகளைச் சந்தித்துப் பேசுங்கள். அவர்களின் ஆதரவைக் கோரி அவர்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
• போராட்டத்தின் நியாயத்தை பல்வேறு பிரச்சார வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களிடம் விளக்குங்கள்.

தீண்டாமையைப் பின்பற்றுவது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். சட்டங்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்து நிற்பதைக் கண்டித்தும் -சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை கோரியும் - தீண்டாமையையும், அதற்கு உயிர் கொடுக்கும் சாதி அமைப்பை யும் எதிர்த்து, ‘பெரியார் திராவிடர் கழகம்’ இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
நாட்டின் அடிப்படையான முதலுரிமையும் முன்னுரிமையுமான ஒரு பிரச்சினையை கழகம் முன்னெடுத்துள்ளது.தோழர்களே! கழகச் செயல்வீரர்களே, தயாராவீர்!

“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும், இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண் டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், மனக் குறையின்றி, நிறை மனதுடன் அனுபவிப்பேன்-சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”

- பெரியார் (தமிழர் தலைவர் - நூல், பக்.15)

நன்றி : http://thozharperiyar.blogspot.com/2007/08/blog-post.html