தீ...தீ..தீ...வாசந்தீ..தீ..தீ
இரண்டு வாரங்களிருக்கும், தீம்புனல் என்னும் அமைப்பு எழுத்தாளர் ஞாநி ஆனந்தவிகடனில் எழுதிய 'விருப்பப்படி இருக்க விடுங்கள்' என்ற கலைஞரைப் பற்றிய கட்டுரைக்கு எதிராகக் கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரமாண்டமான அரங்கம், அனைவருக்குமான தேநீர், நொறுக்குத்தீனிகள் என ஒருவேளை மல்ட்டிலெவல் மார்க்ல்கெட்டிங் கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என குழப்பமேற்பட்டது. கூட்டம் ஆரம்பித்தபிறகு பார்த்தால் 'ஒருவேளை திமுக இலக்கிய அணி கூட்டமோ' என மயக்கம் ஏற்பட்டது. இமையம், சல்மா ஆகிய எழுத்தாளர்கள் கலைஞரைத் தமிழினத்தின் மீட்பராகப் புகழ்பாட அறிவுமதி, வீ.அரசு, அ.மார்க்ஸ் ஆகியோரின் உரைகள் மட்டுமே பொருத்தப்பாடு உடையவையாய் இருந்தன. அ.மார்க்ஸ் "கருணாநிதியை ஞாநி எழுதியதற்காக துடித்துப்போய்க் கண்டனக்கூட்டம் நடத்துபவர்கள் 'பெரியார் பொம்பளைப் பொறுக்கி' என்று வசைபாடப்பட்டபோது ஏன் கண்டனக்கூட்டம் நடத்தவில்லை?' என்றும் 'அதை வெளியிட்டு தொடர்ந்து பெரியாரை இழிவுசெய்த காலச்சுவடு குழுமத்தைச் செர்ந்த மூவர் இதே அரங்கத்தில் இருக்கிறார்களே' என்று கனிமொழியை நோக்கிக் கேள்வியெழுப்பினார். அப்படி எழுதிய ரவிக்குமாரும் சரி, கனிமொழியும் சரி அதுகுறித்து மூச்சுக்கூட விடவில்லை. எனக்க்நென்னவோ கனிமொழி வகையறாக்காளுக்கு கருணாநிதியைத் திட்டுவதை விட ஞாநி அவரது வாரிசு அரசியல் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதே எரிச்சலாக இருக்கிறது என்று கருதுகிறேன்.
நியாயமாகப் பார்த்தால் வேதாந்திக்கு எதிராகத்தான் கனிமொழி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கவேண்டும். கருணாநிதியைக் காலமெல்லாம் விமர்சிக்கும் ம.க.இ.க தோழர்கள் வேதாந்திக்கு எதிராக வீதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். இளவரசி கனிமொழியோ மத்தியதரவர்க்க அறிவுஜீவிகளின் தயவில் தனக்கான இடத்தை உறுதிசெய்துகொள்கிறார். அரசியலில் எந்த வித களப்பணியோ கருத்தியல் பணியோ ஆற்றாத கனிமொழி வெறுமனே தில்லி அதிகார மய்யங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பயன்படும் ஒரு தொடர்புக்கருவி, நாடார் வாக்குத்திரட்டி மற்றும் தயாநிதிமாறனின் வெற்றிடத்திற்கான நிரப்பு என்பதைக் கனிமொழியின் நெருங்கிய நட்புவட்டமாகிய கார்த்திசிதம்பரம், காலச்சுவடு கண்ணன், மனுஷ்யபுத்திரன் இத்யாதிகளைப் பார்த்தாலே புரிந்துகொள்ள இயலும்.
சரி, அதுபோகட்டும். இப்போது நான் எழுதவந்ததே நவம்பர் குமுதம் தீராநதி இதழில் வாசந்தி எழுதியுள்ள 'ராமனுக்கான போர்' என்னும் கட்டுரை குறித்து. மனசைத்தாண்டி, எலும்பை மீறி, தசையில் உருகிவழிந்திருக்கிறது பார்ப்பனக் கொழுப்பு. ஒருவேளை ராமனுக்காய்க் கலைஞரிடம் நீதிகேட்டு வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்.
வாசந்தி கட்டுரையின் சாராம்சம்.
1. பெரியாரோ கருணாநிதியோ எவ்வளவுதான் கடவுள் மறுப்பு பேசினாலும் பக்தியை ஒழிக்கமுடியாது.
2. ஒரு வளர்ச்சித்திட்டத்தை 'ராமன் இருக்கிறாரா இல்லையா' என்று திசைதிருப்பியதன்மூலம் கருணாநிதி தமிழகத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்.
3. கருணாநிதி ராமனை விமர்சித்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார்.
4. ராமன் என்கிற ஒருவர் இல்லை என்று தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்து 'சொதப்பிவிட்டது'.
5. கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனத்தைக் கேட்டு நாத்திகர்களும் கூட முகம் சுளித்தனர்.
6. கருணாநிதியின் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதும் மத்திய அரசுடனான செல்வக்கு நீண்டகாலம் நீடிக்கமுடியாது என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
7. வயதாகிறதே தவிர கருணாநிதிக்கு அறிவுகிடையாது.
வாசந்தியின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் பார்ப்பனக்குயுக்தியை மேற்கண்ட அவரது வாதங்களே நிரூபிக்கின்றன. திமுக என்பது கடவுள்மறுப்பு இயக்கமல்ல, கருணாநிதிக்கு அது வேலையுமில்லை. மேலும் நாத்திகம் பேசப்பட்டபோதும் பக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிற கேள்வியை இப்படியும் தலைகீழாக்கிக் கேட்கலாம். ' சாமி கண்ணைக்குத்திடும் என்பதிலிருந்து தொடங்கி இத்தனை வதை புராணங்கள் இருந்தபோதும் நாத்திகர்கள் என்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லையே'
அதைவிடுவோம், ஏதோ ராமன் பிரச்சினையை கருணாநிதிதான் முதலில் ஆரம்பித்தார் என்பதைப்போல வாசந்தி கயிறுதிரிப்பதைக் கவனியுங்கள். அவர் ராமனை விமர்சித்ததன்மூலம் சாசனத்தை மீறிவிட்டார் என்றால் இப்போது தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளதே, மோடி சாசனத்தை மீறவில்லையா? அதுகுறித்து வாசந்திக்கு ஏன் எழுததோன்றவில்லை?
தொல்லியல்துறை சொதப்பிவிட்டது என்கிறாரே வாசந்தி, வேறென்ன செய்யவேண்டும் வாசந்தி எதிர்பார்க்கும்படி சொதப்பாமலிருக்க? ராமன் என்று ஒருவன் வாழ்ந்தான், தசரதனும் கோசலையும் கூடித்தான் குழந்தைபெற்றார்கள், அதற்கு அத்வானிதான் விளக்கு பிடித்தார் என்று மனுதாக்கல் செய்யவேண்டுமா?
எந்த நாத்திகர்கள் 'முகம் சுளித்தனராம்? வாசந்தி மாதிரியான 'முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா?'
அவரது மைனாரிட்டி அரசு குறித்த வாந்தி மறைமுகமான பார்ப்பன மிரட்டலல்லாது வேறொன்றுமில்லை.
கடைசியான நான் குறிப்பிட்டிருக்கும் அவரது கட்டுரையின் சாராம்சம்தான் கட்டுரை முழுக்க தொனிக்கும் தொனி.
வாசந்தியின் அறிவுநாணயமற்ற செயல்பாடுகளுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே போகலாம். 90களில் அவர் இந்தியாடுடேயின் ஆசிரியர்பொறுப்பில் இருந்தபோது வெளிவந்த இலக்கியமலரில் தலித்படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டதையும் திராவிட இயக்கம்குறித்த வெங்கட்சாமிநாதனின் விசம்தோய்ந்த கட்டுரையை எதிர்த்தும் நிறப்பிரிகைத்தோழர்கள் இந்தியாடுடேயின் பக்கங்களைக் கிழித்து மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பிவைத்தனர்.
சமீபத்தில் இதே குமுதம் தீராநதியில் பத்திரிகையாளராகத் தனது அரசியல் அனுபவங்களை வாசந்தி தொடராக எழுதிவந்தார். 1991 சட்டமனறத்தேர்தல் சூழலையும் 1996 சட்டமன்றத்தேர்தலையும் சேர்த்துக் குழப்பி எழுதினார். ஒரு இரண்டாண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தெரியவேண்டிய குறைந்தபட்சத் தரவுகள் கூட மூத்த பத்திரிகையாளராகக் குப்பைகொட்டிய வாசந்திக்குத் தெரியவில்லை.
வெறுமனே அந்தத் தொடரில் அவரது அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. சென்ற சட்டமன்றத்தேர்தலையொட்டிய காலகட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக வெளியேறிவிடும் என்னும் நிலை, சின்னச்சின்னப்பிணக்குகளும் ,அதையொட்டிய வதந்திகளும் பரவிக்கொண்டிருந்த நேரம். அந்த இரண்டுவாரத்தில் தீராநதித் தொடரில் வாசந்தி எழுதத் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட், வைகோ திமுகவை விட்டு வெளியேற நேர்ந்த சூழல்.
அக்கட்டுரையில் வைகோவைத் திமுகவின் தலைவராக்குவதற்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கருணாநிதி வெளியிட்ட 'உளவுத்துறை அறிக்கை'யில் உண்மை இல்லாமலில்லை என்றும் கருணாநிதியின் பயம் நியாயம்தானென்றும் எழுதினார். எப்படியோ வலிமை வாய்ந்த திமுக கூட்டணி உடைந்தால்போதும் என்னும் மனோவிருப்பமே அக்கட்டுரைகளில் தெரிந்தது.
அதுமட்டுமல்ல, சமீபத்தில் திண்ணை இணைய இதழில் அவர் எழுதி வந்த கட்டுரையில் 'கன்னடர்களுக்கு இனவெறியே கிடையாது' என்றும் 'ராஜ்குமாரின் மரணத்தையொட்டியே கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது, அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடி தமிழர்களும் கன்னடர்களும் அந்த ஆறுகளில் ஒன்றாக மாறி மாறிக் குளித்துத் திளைத்தனர்' என்கிற ரீதியிலும் 'கன்னடர்களிடம் இந்தளவிற்கு குறுகிய இனவெறி ஏற்படுவதற்குக் கர்நாடகப்பகுதியில் திமுக தொடங்கப்படதும் அய்.டி. படித்த தமிழ் இளைஞர்கள் கன்னடர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுமே காரணம்' என்றும் எழுதித் தனது தமிழின விரோதப் போக்கை நிறுவினார்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் 'தினவு' என்னும் ஒரு கதையில் மாயாவதிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு புனைவு எழுதி அதைப் பல்வேறு தலித்தியக்கங்கள் கண்டித்தபோதும் அதுகுறித்துக் கள்ள மௌனம் சாதித்தார்.
இத்தகைய வாசந்தி, மாலன் வகையறாக்களே 'முற்போக்காளர்களாக'ப் படம் காண்பிக்கப்படுகின்ற கேலிக்கூத்து ஒருபுறம் தொடர்கின்றதென்றால், இவர்களே தங்கள் சாதியைத் தாண்டிவந்த தாராளவாதப் பார்ப்பனர்களாகக் கட்டமைக்கப்படுவது உண்மையிலேயே சாதியைக் கடந்து வருவதற்கு எத்தனிக்கும் சமூக ஜனநாயக சக்திகளான பார்ப்பன நண்பர்களுக்கு தலைகுனிவே. தீ...தீ... பாப்பாத்தீ... தீ...
நெருப்புக்குஞ்சு
1. 'வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்' - இந்த வரிகள் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ, ஆபாசமானதாகவோ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு மசிரும் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்ய விழைகிறேன். 'ராமனுக்கான போர்' என்னும் பிரதியில் கண்ணகி x ராமன் என்னும் எதிர்வுகளைக் கையாள்கிறார் வாசந்தி. எனக்குக் கண்ணகி மீது எந்தக் கரிசனமும் கிடையாதென்றாலும் தட்டையாக வாசந்தி ராமனை அடிப்படையாக வைத்துக் கதையாடினால் கண்ணகியை அடிப்படையாக வைத்து நானும் கதையாடுவேன் என்பதற்காகத்தான்... இந்த ச்ச்சும்மா..
2. கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?
vaa.. santhikku!
//கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?//
பேசாமல் ஒத்துக்கொள்ளப் போகிறோம். இல்லையென்றால் எதற்கெடுத்தாலும் சாதியை இழுப்பது உடன்பிறப்புகளின் வாடிக்கை என்று எல்லோரும் (பார்ப்பனரல்லாதவர்களும்) ட்ரேட்மார்க் கோஷம் போட ஆரம்பித்துவிடுவார்கள் :-)))))
BTW, வாரம் இரு முறையாவது உங்களது பின்னூட்ட கும்மியை கும்மவும். உங்களது ரசிகர்களின் பின்நவீனத்துவ இலக்கியத் தாகத்தை தீர்ப்பது உங்கள் கடமை!
வாஸந்தி வா...சந்தி...சிரிங்கிறிங்க
:)
vasanthi's article is usual blah blah blah and full of factual errors.
i gave up on kanimozhi long back
-aathirai
அய்யா! உங்களால் கமெண்டு ரிலீஸ் செய்யமுடியவில்லையென்றால் என்னை மாதிரியான நம்பிக்கையான ஆளிடம் பாஸ்வேர்டு கொடுக்கவும். பின்னூட்டம் போட்டுவிட்டு 24 மணிநேரமாக வெளியிடப்படாமல் தாவு தீருகிறது!
சபாஷ், சரியான தீபாவளிப் பட்டாசு.
/அய்யா! உங்களால் கமெண்டு ரிலீஸ் செய்யமுடியவில்லையென்றால் என்னை மாதிரியான நம்பிக்கையான ஆளிடம் பாஸ்வேர்டு கொடுக்கவும். பின்னூட்டம் போட்டுவிட்டு 24 மணிநேரமாக வெளியிடப்படாமல் தாவு தீருகிறது/
இதிலென்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? கீழே என்னுடைய அய்.டியும் பாஸ்வேர்டும் தந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் அவரவர் பின்னூட்டங்களையும் வெளியிடலாமே ! (என்ன ஏடாகூடமான பதிவுகளோ, மெயில் பக்கம் எட்டிப்பார்ப்பதும் மட்டும் வேண்டாம்)
/வாசந்தி கட்டுரையின் சாராம்சம்./
சாரம்சப் படுத்த வேண்டாம்; கலைத்துப் போட்டு விளையாடுவோம்:
வளர்ச்சித் திட்டம் என்பதே முகம் சுளிக்க வைப்பது என்பதால் கடவுள் மறுப்பு என்பதை நீதிமன்றம் பெரியார், கருணாநிதியைக் கேட்டு மைனாரிட்டியாக நீடிக்க முடியாமல் போகின்றது. ராமன் கருணாநிதியின் வயதை விட அதிகமானாதால் அறிவு இல்லாமல் மத்திய அரசுடன் நீடிக்க முடியாது. இப்படியாக, இப்படியாக.....
ஆனால், பெண் என்பதால் 'வா சந்திக்கு' என்பவர்களை, வா பொந்துக்கு (அதுவும் பின் புறமுள்ள பொந்து) என்று சொல்வதுதானே மோனைக்கு அழகு.
//கீழே என்னுடைய அய்.டியும் பாஸ்வேர்டும் தந்துள்ளேன்.//
எங்கே கொடுத்திருக்கிறீர்கள் வெளியே மிதக்கும் அய்யா. காணவில்லையே? ஒருவேளை மஞ்சத்துண்டு கூட்டம் அடிச்சிக்கிட்டு போயிடிச்சா?
id name : sugunadiwakar
password : sugunasister
வெளியே மிதக்கும் அய்யா, தவறான பயனர் சொல்லையும், கடவுசொல்லையும் கொடுத்து ஏமாற்றுகிறீர்க்களே அய்யா. மஞ்சத்துண்டை இந்த விஷயத்தில் மிஞ்சிவிட்டீர்கள் அய்யா.
பாலா
வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள்
முரளி கண்ணன் said...
வாரம் ஒரு முறையாவது எழுதுங்கள்
ரிப்பீட்...
உங்கள் பதிவுகளில்தான் தமிழகத்தில் நடக்கும் இந்தவகை கூத்துகளினை புரிந்து கொள்ள முடிகிறது.
முலையறுத்தல் என்பதில் எல்லாம் பெண்ணியமும் இல்லை ஒன்றுமில்லை. தொண்மங்களுக்கு எதிராக தொண்மங்களை வைத்துதான் புணித உடைப்பு செய்ய வேண்டும்.
எவ்வளவு சொன்னாலும் மண்டையிலும் உறைக்காது கொண்டையிலும் உறைக்காது.
Irresponsible writing.. this is not the way to treat a woman.. thamizhan kaattu mirandi'nnu periyar correct'a dhan sollirukaru.. yenakku kadavul nambikkai illai.. aana karunanidhi vitta statement lam pathu "yenna oru muttal" nu dhan nenaikka thonuchu...
ச்சும்மா பின்னீட்டிங்க போங்க.
பிரியா,
அப்படி யாரும் இருக்கிறீர்களா என்ன? பெரியாரை ஏன் இங்கு இழுக்கிறீர்களென்று தெரியவில்லை? நாத்திகம் ஆத்திகமல்ல பிரச்சினை. இந்தியச்சூழல் முழுவதையும் தனது ராமன் - இந்துவிஷத்தால் மூழ்கடிக்கப்பார்க்கும் இந்துத்துவச் சக்திகளுக்கு எதிரான ஒரு சிறு எதிர்வினையே கருணாநிதியின் கூற்று.
அந்த வாந்திக்கு சுதி(மிதக்கும்வெளி அய்யா) சுத்தமா பதில் சொல்லியிருக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன். பழைய நினைப்பிலிலும் ஆதங்கத்திலும், நம்மினம் அடிபடும் போதெல்லாம் எதிர்வாதங்களை முன்வைப்பது நம் இனமரபாகிவிட்டதால் உங்களை நொந்தும் பயனில்லை. :)
தோழர், அது தீயல்ல, ஓமப்புகை, வயிற்றெறிச்சலால் புகைவது. தமிழிய மூத்திரமே அதை அணைக்க போதுமானது. இனிவரும் காலங்களில் இந்த குடுமிகளை கொத்தாக பிடித்தாட்டக் கூடிய போராட்டத்தை முன்னெடுக்க எந்த இயக்கமும் இல்லை என்பதே என் வருத்தம். தாடிக்காரரின் அருமை இப்பொழுதுதான் புரிகிறது. :(
நல்ல பதிவு.