கற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்
'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான அன்றே பல நண்பர்கள் போன் செய்து, "நீங்கள் அவசியம் படம் பார்க்கவேண்டும், அதுபற்றி எழுதவேண்டும்" என்றார்கள். ஆனால் கடைசிவரை சென்னையில் அப்படத்தைப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. இப்போது திண்டுக்கல்லில் கள்ளக்குறுந்தகடு (?) வழியாகவே பார்க்க நேர்ந்தது.
அப்படம் பற்றி வலைத்தளங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களைத் திட்டமிட்டே படிக்கவில்லை. உயிர்மை இதழில் சாருநிவேதிதாவின் விமர்சனம் மட்டும் படித்திருந்தேன். படத்தை வெகுவாய்ப் பாராட்டியிருந்த சாரு, அப்படத்திலுள்ள தெளிவின்மையைக் குறிப்பிட்டு தனிப்பட்ட உளவியல் அல்லது சமூகச்சிக்கல் ஆகியவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்கெடுத்து விபரித்திருந்தால் சிறப்பாகவிருந்திருக்குமென்று கருத்து தெரிவித்திருந்தார். (சாருவின் தேர்வு தனிமனித உளவியல் நெருக்கடி)
கற்றது தமிழ் முன்வைக்கும் அரசியலோடு ஒத்த கருத்துடைய வேறுசில நண்பர்களின் கருத்தோ, 'இத்தகைய அரசியல் நிலைப்பாடு உடையவன் ஒரு சைக்கோவாக கொலைகளைச் செய்யும்போது அதன் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது' என்பதாகவிருந்தது.
திரைப்படம் வந்து பலநாட்களாகி, பல ஊர்களில் தூக்கப்பட்டபிறகு எழுதப்படும் விமர்சனம் என்பதால் விரிவாக எழுத விருப்பமில்லை. ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள ஆவல்...
இதுமாதிரியாக காட்சியமைப்புகளிலும், காட்சி விபரிப்புகளிலும் கவித்துவம் தெறிக்கும் திரைப்படத்தை இதற்குமுன் தமிழில் பார்த்ததில்லை. பிரபாகர் தான் சந்தித்த முதல் சாவாக, தன் நாய் டோனியின் சாவைச் சொல்கிறான். மனிதர்களே மதிக்கப்படாத தமிழ்ச்சினிமாவில் நாய் மதிக்கப்படுவது அபூர்வம்தானே!
தாயின் சதைத்துணுக்குகள் சிதைந்து தெளிக்கும் மரணத்தின் குரூர வாசனை, பால்யவயது காதல் என்றவுடன் 'ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா' என்ற அலுப்பு தோன்றுவதற்குள், இல்லாத புலி இல்லாத பாலைவனம் குறித்துக் காணும் நீண்டகனவு குறித்த கதையளப்பு கவிதை.
இப்படியாக பிரபாகரின் தன்வரலாற்றுக் கதைமொழிதல் முழுவதுமே கவிதை, கவிதை, கவிதை... போலீசு என்னும் அதிகார நிறுவனத்தைச் சரியாகவே தோலுரித்துக்காட்டியிருக்கிறது படம்.
படத்தின் மய்யமான இரு பிரச்சினைகளுக்கு வருவோம். சாரு மற்றும் நண்பர்கள் சொன்ன பிரச்சினை... கற்றது தமிழ், தான் முன்வைக்க விரும்பிய அரசியல் குறித்துப் பெரிதாய்ச் சமரசம் செய்துகொண்டதாய் எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் படித்துவந்த அனந்தரங்கனிடம் பிரபாகர், "அமெரிக்கா போய் வந்தும் இன்னும் நீ நாமம் போடுவதை விடலையா?' என்று கேட்கும் காட்சியிலாகட்டும், பிரபாகர் 'இந்த நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலை, ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ்ஷுக்கு புரியலாம்' எனச் சொல்லும் காட்சிகளிலும் சரியகவே அரசியலை முன்வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
ஒருவசதிக்காக சொல்வதாகவிருந்தால் ஷங்கரின் படங்களுக்கு எதிரான கதையாடல் என்றே 'கற்றது தமிழ்' படத்தைச் சொல்லலாம். குற்றங்கள் புரிந்தபிறகு, தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவைப்பது, அந்த வாக்குமூலம் குறித்து 'மக்கள் கருத்து' என ஷங்கரின் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்.
ஆனால் சங்கரின் சாகசநாயகன்கள் போல பிரபாகர், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஷங்கர் படத்தின் 'மக்கள் கருத்துக்கள்' பொதுப்புத்தியைக் கட்டமைக்க விரும்பும் ஒத்துப்பாடல்களாக இருக்கும். ஆனால் கற்றது தமிழ் படத்தில் வரும் 'மக்கள் கருத்துக்களோ' 'வயிற்றெரிச்சலில் பேசறான் சார்' என்று மாற்றுக்கருத்தையும் பதிவுசெய்கிறது.
மேலும் ஒரு தனிமனிதன் சந்திக்க நேர்கிற சிக்கலிலிருந்தே தனக்கான சமூகக்கருத்தை உருவாக்கிக்கொள்கிறான் என்னும் அடிப்படையில் ராமின் கதைசொல்லல் முறை முற்றிலும் சரியானது என்றே நான் கருதுகிறேன். வெறுமனே அரசிய்ல் பிரச்சினையை மட்டும் பேசியிருந்கால் ஒரு பிரச்சாரம் என்பதைத் தாண்டாது தன் கலைத்தன்மையை இழந்திருக்கும், அல்லது சாரு சொல்வதைப் போல வெறுமனே தனிமனித உளவியல் சிக்கல் பற்றி மட்டுமே பேசியிருந்தால் மாதந்தோறும் வெளிவரும் இரண்டுமூன்று தமிழ் சைக்கோ சினிமாவிலொன்றாக 'கற்றது தமிழ்' வந்துபோயிருக்கும்.
இன்னொரு பிரச்சினை, பெண்களின் பனியனிலுள்ள வாக்கியங்கள் குறித்த விமர்சனம், மற்றும் கடற்கரையில் காதலர்களைச் சுட்டுக்கொல்வது ஆகிய இருகாட்சிகள். பிரதியிலிருந்து தனித்து எடுத்துப் பார்த்தால் இரண்டுமே ஆணாதிக்கப்பாசிசம்தான். ஆனால் வருமானம், சமூகப்படிநிலை, நுகர்வுக்கலாச்சாரம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்காலத்திய மணவுறவுகளின் பின்னணியில் பார்த்தால் அக்காட்சிகளுக்கான நியாயங்கள் விளங்கும்.
இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன. நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.
இன்னொருபுறம் சாதிமறுப்புத்திருமணங்களுக்கான விளம்பரங்கள்கூட மாதம் 30000/- ரூபாய் வருமானமுள்ள ஆணை வேண்டிநிற்கின்றன. இங்கு புதியதொரு வர்க்கச்சூழல் உருவாகியுள்ளது. அதிக வருமானம் பெண்களின் சுயச்சார்பான பொருளாதாரச்சார்பு போன்ற சில சாதகமான அம்சங்களை உருவாக்கியிருந்தாலும் மறுபுறத்தில் எந்த சமூகப்பொறுப்புமற்ற சம்பாதிக்கும் ஆண், பெண் பிராணிகளின் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த சூழலின் அடிப்படையிலேயே 'கற்றது தமிழ்' திரைப்படத்கை அணுகமுடியுமென்று கருதுகிறேன்.
ஆனால் கற்றது தமிழ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு படத்தின் 'இருண்மை அல்லது தெளிவின்மை' மட்டுமே காரணமென்று நான் கருதவில்லை.
திண்டுக்கல்லில் இப்படம் குறித்து விசாரித்தபோது பலருக்கும் இப்படம் குறித்து அதிகமும் தெரியவில்லை. வீட்டு வாடகை ஏறுவது, ஸ்பென்சர்பிளாசா, சத்யம் தியேட்டர் குறித்த விவரங்கள் சென்னையைத் தாண்டி தெரியாத அல்லது பாதிக்காத இடங்களில் இப்படத்தின் தீவிரம் சென்னையைத் தவிர பிற பகுதிகளால் இப்போதைக்கு உணரப்படப்போவதில்லை.
மேலும் கணிப்பொறியை அலாவுதீனின் அற்புதவிளக்காய் நினைத்து அதற்குப் பழக்கப்படுத்த தன் குழந்தைகளைப் பயிற்று வரும் பெற்றோர்கள் மற்றும் வருமானம் மற்றும் கேளிக்கையையே நோக்கமாய்க்கொண்ட இளையதலைமுறையினரும் நிச்சயமாய் இப்படத்தைப் புறக்கணிக்கவே செய்வர்.இப்படத்திற்கெதிராக அய்.டி துறையைச் சேர்ந்த நண்பர்கள் குறுஞ்செய்திகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சாரமே செய்ததாய் அறிந்தேன். அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க?' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.
ஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.
//அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.//
total follishness
we pay our 30% of our income directly to government
we work hard and we pay our taxes properly..no one can object this.
government would have contributed 100 crores for tidel park but we have contibuted more that in 3 years..the companies operating from tidle park itself would have contributed more than 1000 crores.
dont fool around..
if you are eligible you have the rights.
you have choosen wrong path( for you it may right way) .. it s your decision.. dont fool arround society and culture .
சுகுணா,
//அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க?' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.//
விமர்சனம் அருமை!
ஐ.டி. தவிர மற்ற பொறியியல் துறை சார்ந்தவர்களுக்கும் வயிறெரிச்சல் உண்டு. ஆனால் அது நியாயமானது தான்.
ஒரு வித்யாசமான முயற்சியைக் கண்டிப்பாக வரவேற்றே ஆக வேண்டும்.
நன்றி
இதைப்பற்றி கருத்து தெரிவித்தாலே கும்மு கும்முன்னு software மக்கள் கும்முறாங்கோ. அதனால ஜகா வாங்கிக்கிறேன்
//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.
//
இந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது.... இவர் சொன்னார், இந்த நிறுவனம் சொன்னது என்று சொல்வதில் சுகுணாவிற்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன்.
பிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...
'கற்றது தமிழ்' இன்னும் பார்க்கவில்லை, பார்த்த பிறகு அதைப்பற்றி பேசலாமென உள்ளேன்...
kuzhali
//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.//
Infy, TCS diversify into match making business
"ஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது."
அந்த நண்பர்கள் சமூக விரோதிகள் அல்ல. அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அன்னிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள்.தங்கள் சேமிப்பினை சுவிஸ் வங்கிகளில் அல்லது வெளிநாட்டில் பாதுகாப்பதில்லை, இங்கேதான் முதலீடு செய்கிறார்கள் அல்லது செலவழிக்கிறார்கள். அவர்கள் சலுகை எதையும் அரசிடம் கோரவில்லையே அல்லது இலவசமாக இதைக் கொடு என்று கேட்பதில்லையே. அரசு டைடல் பார்க்கினை அமைக்க செலவு செய்ததை விட பல மடங்கு வருமானம் அரசுக்கு அத்தொழில் மூலம் திருப்பித் தரப்பட்டுள்ளது. அந்த நண்பர்கள் அரசு குடிசைவாசிகளுக்கு எதுவும் செய்யாதே என்று தடுத்தார்களா என்ன. அரசின் அக்கறையின்மைக்கும், கையாலாகத போக்கிற்கும் அவர்கள் மீதா பழி போட வேண்டும். சுகுணா திவாகர் தன் அலுவலகத்தில் வசதிகள் வேண்டாம் என்று, பிளாட்பாரத்திலிருந்தும், சேரியிலிருந்தும் தன் தொழிலைச் செய்கிறார் என்று நம்புகிறேன் :).
"பிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...
"
குழலி தன் பதிவுகளில் எழுதியது அத்தனையும் பார்த்து சான்றுகளுடன் ஆராய்ந்து எழுதியதுதானா?
மன்சூர் அலிகானை குறை சொல்லும் முன் தன் பதிவுகளை ஒரு முறை அவர் படித்துப் பார்க்க வேண்டும். எப்படியோ தான்பார்க்கும் தொழிலில் உள்ளவர்களை பற்றி அவதூறு செய்தாலும், அது தன்னையும் பாதிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறாரே, அதுவே நல்லதுதான்.
நானும் தெளிவற்றதான கள்ளக் குறுந் தகடில்தான் பார்த்தேன். அமேரிக்கா குறித்த வசனம் உங்கள் விமர்சனத்தில்தான் படித்தேன்.
உங்கள் பார்வை படத்தின் ஒற்றைப் பரிமாணத்திற்குள்தான் பயணிக்கிறது. படம் முன்வைக்கும் மற்றொரு முரண் தமிழ் x ஆங்கிலம். மனச்சிதைவு x இயல்பு போன்றவை.
படத்தில் அவன் செய்யும் 2 கொலைகள்.. அதை
ஆணிய பெண்ணிய நோக்கில் பார்க்க முடியவில்லை. பெண்ணே பெண்ணியத்தின் அடிப்படை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆணையும் விடுவிக்கப்போவது பெண்ணிய அரசியல்தான். நீங்கள் பெண்களை கொலை செய்வதால் ஆணிய நோக்கு என்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை எனது புரிதல் தவறாக இருக்கலாம். அந்த பெண் அணிந்துவரும் பணியனில் உள்ள ஆங்கில வாசகங்கள்தான் அந்த கொலையைத் தூண்டுகிறது. இது சுஜாதா கதைகளில் வரும் நாயகிகளின் பிம்பம். 'Hills Alive' போன்ற வாசகங்கள் என்ன நுகர்வு மணோபாவத்தை தூண்ட முயல்கின்றன என்பது இதனடிப்படையில் வரும் கேள்வி. இதில் வரும் வாசகம் தைரியமிருந்தால் தொட்டுப்பார் என்பதுபோல என நினைக்கிறேன். அந்தகொலை அவள் பெண் என்பதற்காக நிகழ்த்தப்படவில்லை. அல்லது அது பெண் மீதான வன்கொடுமையும் அல்ல.
பத்தின் தர்க்கமற்ற அல்லது ஒழுங்கற்ற கொலைகள். குற்றம் பற்றிய ஆதிக்கத்தின் தர்க்கத்தை உடைக்கிற உளவியல் கூறு அது. இப்படி பாருங்கள் அவன் சொல்லாமல் இருந்திருந்தால் அந்த கொலைகள் பயங்கரவாதி தீவிரவாதி என்ற ஆதிக்கம் குற்றம் பற்றிய அன்றைக்கான கூழலில் முன்வைக்கும் தர்க்கமே பேச்சாக மாற்றப்பட்டிருக்கும். படத்தில் இன்ஸ்பெக்டர் கொலை அப்படித்தான் தொ.கா. யில் ஒளி பரப்பப்படுகிறதை ஒரு காட்சியாக ஆக்கியுள்ளார் இயக்குநர்.
அடுத்து சாவுணர்ச்சி பற்றிய அழகியலை பேசுதல். உங்கள் பாணியில் கவிதை.. கவிதை..கவிதை. வாழ்க்கை மரணத்தை ஒத்திப்போடுகிறது. மரணம் வாழக்கையை துரத்திக் கொண்டிருக்கிறது. இந்த மைய முரணில்தான் எல்லாக் கதையாடல்களும் கட்டப்பட்டுக் கொன்டிருக்கினறன.
இல்லாத பாலைவனம் வராத புலி பற்றிய பார்வை (ஒன்றிற்கு மேற்பட்ட முறை உச்சரிக்கப்படும் வசனம்) ஒரு நுட்பமான வேறு சங்கேதங்களைத் தரக்கூடியவை.
இறுதியாக படத்தின் தெளிவின்மை.. ஒரு மனச்சிதைவாளனின் ஒழுங்கற்றப் பேச்சுதான் படம். ஒரு தர்க்கமற்ற மொழிபோல அங்கும் இங்குமாக அலைகிறது. புரிதல் அனுபவம் சார்ந்தது என்றால் படம் அனுபவத் தளத்திலானது அறிவு என்கிற புரிதல் தளத்திலானது அல்ல.
இப்படியாக சில பல நல்ல அம்சங்கள் படத்தில் உள்ளது. இதனை த.தொ. மட்டுமே எதிராக பார்க்க முடியாது. சங்கர் ஒரு அந்நிய பார்ப்பனராக தன்னைக் கருதிக் கொள்ளும் மோசமான இயக்குநர். அவரை இங்கு ஒப்பிடுவதும் பொறுத்தமற்றதே.
நன்றி.
"இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன."
அதைத் தவறு என்று எப்படிக் கூறமுடியும். காதல் என்பது அழகைப் பார்த்துத்தான் வர வேண்டும் எனக் கட்டாயமா. அவரவர் விருப்பம் என்றுக் கூடக் கொள்ளலாமே.பகுத்தறிவு கொண்டு பார்த்தால்
30,000 சம்பாதிக்கும் ஆண்/பெண் கிட்டதட்ட அதே சம்பளத்தில் இருப்பவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதும் அல்லது காதலிப்பதும் சரிதானே. 30,000 சம்பாதிக்கும் ஒரு பெண், படிப்பு, அழகு, குடும்ப பிண்ணணி இவை ஒன்றாக இருக்கும் போது 10,000 சம்பாதிக்கும் ஆணை விட 30,000 சம்பாதிக்கும் ஆண் பரவாயில்லை என்று தீர்மானிப்பது தவறா?. முன்பை விட பெண்களுக்கு இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம், ஆண்களுக்கும்தான். தன்னுடைய சாதியில் தன்னைப் போல் படிப்பு,வேலை உள்ள ஆணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் என்று பெண்(கள்) கருதினால் அதை காரியவாதம் என்று சொல்லலாம். காரியவாதம் தவறில்லையே, இதனால் யாருக்கும் பாதிப்பிலையே.
/////
//நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.
//
இந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது....//
/////
இன்ஃபோஸிஸ். இன்னும் பிற கம்பெனிகள் மறைமுகமாக சலுகைகள் அளிக்கின்றன. சில கம்பெனிகளில் மேட்ரிமோனியல் சைட் கூட உண்டு.
மேலும் ஃபி.பி.ஓ, கால் சென்டர்கள் கழிவறைகளில் காண்டம் இருந்ததாக சொல்லப்படுவதும் உண்மை தான்...
மற்றபடி நீங்கள் சாரு நிவேதிதாவை 'லூசு' என்று விளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...;)
/we pay our 30% of our income directly to government/
even brick and mortar business employees pay these taxes. The question is why I.T. Companies like Infosys / Sathyam / Wipro should be given tax exemptions (customs duty, central excise duty, service tax and even income tax exemption for a period of 10 years).
கற்றது தமிழ் படம் எனக்குப் பிடிக்க வில்லை. கடற்கரையில் காதலர்களைக் கொல்வதை நீங்கள் சொல்வது மாதிரியெல்லம் நியாயப் படுத்த முடியாதென்ரு நினைக்கிறேன். (எனக்கு 27 வயது வரையில் ஒரு பெண்ணும் கிடைக்கலை அதனால் காதலர்களைக் கொல்வேன் என்பது அராஜகத்தின் உச்சம்).
இன்னொரு முறை பிரபாகர் தமிழ் M.A. சேரும் வகுப்பறைக் காட்சியைப் பாருங்கள். அந்தக் காட்சி (அதில் வரும் வசனங்கள் அல்ல) முன் வைக்கும் அரசியலைப் பேசுவதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
//இந்த கேள்விப்பட்ட தகவல் எந்த நிறுவனம், யார் சொன்னார் என்று தெளிவாக தெரிவிக்கவும் ஏனெனில் இந்த கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன் என்றே பல கேள்விப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் ஐ.டி. துறைப்பற்றி சில பிம்பங்களை உருவாக்குகின்றது.... இவர் சொன்னார், இந்த நிறுவனம் சொன்னது என்று சொல்வதில் சுகுணாவிற்கு எந்த தயக்கமும் இருக்காது என நினைக்கிறேன்.
பிபிஓ கால்செண்டர் கழிவறைகள் காண்டம்களால் நிரம்பி வழிகிறது என்று 'லூசு' சாருநிவேதிதா (முதன்முறையாக சாருநிவேதிதா லூசு என்ற அடைமொழியில் அழைக்க ஆரம்பிக்கிறேன்) சொல்வதும், மன்சூர் அலிகான் என்ற 'பொறுக்கி' நடிகன் திரைப்படங்களில் காரில் பாலுறவு கொள்பவர்களை பார்த்து ஏன்டா அதான் கால்செண்டர் இருக்கே என்று சொல்வதும் 'கேள்விப்பட்டு கேள்விப்பட்டு கேள்விப்பட்டு' சொல்வது தான்... பிபிஓ, கால்செண்டர், ஐடி துறைப்பற்றிய ஒரு உண்மையில்லாத பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகின்றது, அதே துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒருவனுக்கு தெரிந்ததை விட கேள்விப்பட்டவர்கள் கேள்விப்பட்டதாக சொல்லுவது எனக்கே பயமாக இருக்கின்றது...
'கற்றது தமிழ்' இன்னும் பார்க்கவில்லை, பார்த்த பிறகு அதைப்பற்றி பேசலாமென உள்ளேன்...
//
குழலி இவ்வளவு தட்டையாக சிந்திப்பாரென்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அவர் ஒருமுறை சுகுணா குறித்து சொன்ன பிரேக்கிங் பாயிண்டினை இப்போது குழலி டச் செய்திருக்கிறார் போலிருக்கிறது.
குழலி எழுதிய ஒரு சில கட்டுரைகளின் கருக்களை அவர் கேள்விப்பட்டு (ஊடகம் மூலமாக) தானே எழுதிவருகிறார்? இல்லை நேரில் பார்த்தாரா?
சென்னை சதர்லேண்ட் கால்செண்டரின் கழிவறைகள் அடைத்துகொள்ள ஆயிரக்கணக்கான ஆணுறைகளே காரணம் என்று ஒருமுறை செய்தித்தாள்களில் செய்தியாகவே வந்தது.
மென்பொருள் பணிவாய்ப்புகளும், நிறுவனங்களும் அதிகரித்தபின்னர் அந்நிய கலாச்சார ஊடுருவலும், கலாச்சார சீர்கேடுகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்பது எல்லோருக்குமே (அதே துறையில் இருப்பவர்கள் உட்பட) தெரியும்.
சினிமாகாரர்களால் கலாச்சாரம் கெடுகிறது என்று குழலியின் அபிமான ராமதாசு அய்யா சொல்கிறாரே? அவர் என்ன விளக்கு பிடித்தா பார்த்தாராம்? 'கேள்விப்பட்டு, கேள்விப்பட்டு' தானே சொல்கிறார்?
துஷ்யந்த்
இந்த வலைப்பதிவை படித்து பாருங்கள்.
http://egalaivan.wordpress.com/2007/11/25/hello-world/
தன்னுடைய சாதியில் தன்னைப் போல் படிப்பு,வேலை உள்ள ஆணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் என்று பெண்(கள்) கருதினால் அதை காரியவாதம் என்று சொல்லலாம். காரியவாதம் தவறில்லையே, இதனால் யாருக்கும் பாதிப்பிலையே.
The other name for this is pure selfishness.We have too many pragmatic and intelligent people
who cannot think beyond their self
interests and personal gains in any
matter.So they will not oppose casteism as long as they benefit
from it.
மண உறவுகளை தீர்மானிக்கும் காரணிகளாக பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிதர்சனம். "sense of insecurity" எங்கும் நிலவும் காலமிது. இத்தகைய சூழலை உருவாக்கியதில் பெரும் பங்கு யாருக்கு என்பது விவாதிக்கப்படவேண்டியது.
சமூகத்தில் ஒரு மிகப்பெரிய பொருளாதார ரீதியிலான ஒரு ஏற்றத்தாழ்வை IT-துறை மட்டுமே ஏற்படுத்துகிறது என்பது உண்மையில்லை. இது குறித்து மிக தடவை பேசியாகிவிட்டது. இன்னும் இதே கருத்தை கொண்டிருந்தால், அதை மனநிலை பிறழ்ந்தவனின் கருத்தாகத் தான் கொள்ளவேண்டும்.
மற்றபடி, அமெரிக்காவிற்க்கு சென்றுவந்தும் நாமம் போடுவது தவறென்றால், உலக அரசியலையும், பின்நவீனத்துவத்தையும் பேசிவிட்டு, இனப்பெருமை பேசுவதும் முட்டாள்தனம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
விமர்சனம் மிக அருமை.உண்மையிலேயே வித்தியாசமான படம்தான்.
பெரும் எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்தை வாரியிருப்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது.
http://jeyamohan.in/?p=111
கற்றது தமிழ் இந்த காலகட்டத்தில் மிக வித்தியாசமான நல்ல முயற்சி.குத்துப் பாடல்களும்,இரட்டை அர்த்த வசனங்களும்,பறக்கும் சண்டைக்காட்சிகளும் மலிந்த தமிழ் சினிமாவில் ஒரு ஆழமான கதையோடு வணிக ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும் பரவாயில்லையென்ற நோக்கில் எடுக்கப்பட்ட படம்.
எனவேதான் இத்திரைப்படம் ஊடகங்களால் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்றன.இதில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கமெனப் புரியவில்லை??
மிகச் சமீபத்தில் புகழ்பெற்ற வார இதழொன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில் தமிழ்சினிமாவே அவர் பார்ப்பதில்லையெனவும் பார்க்க முயற்சித்தாலும் பாதியிலேயே மனம் திசை திரும்பி விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறெனில் எப்பொழுது அவர் கற்றது தமிழைப் பார்த்தார்?
ஒரு வேளை அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தது போல ஷகீலா படம் பார்க்கப் போய் இதனைப்பார்த்து வந்திருப்பாரோ?
அப்படியாயின் நிச்சயமாக ஏமாற்றமாகத் தான் இருக்கும் !
தமிழ் கணிப்பொறி செய்திகள்
தினமணி.இன் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இனிய தமிழில் http://dinamani.in
//"இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன."//
இப்போ என்ன சொல்ல வர்றீங்க? பொருத்தம் பாத்து அப்பா அம்மா செய்கிற கல்யாணம் எல்லாம் பொருளாதார அடிப்படியில இல்லையா? கிராமத்தில காதல் பண்ணுறவங்க எல்லாம் இதை (நீங்க ஒத்துக்கிற எதையோ) அடிப்படையா வச்சிருக்கங்கன்னு சொல்லறீங்களா?
இல்ல வேற எந்த அடிப்படியில இருக்கணும்னு எதிர்பாக்கிறீங்க? எப்படி இருந்தா ஒத்துகுவீங்க? கல்யாணம் அவங்களோட சொந்த விருப்பமா இருக்கிறதில என்ன தப்பு? இது கருத்தியல் வன்முறை இல்லையா?
~srinivasan
Anne,
Naan potta comment varalaiye? enna aachchi?
~Srinivasan
Ellaam sarithaangna...
Inda kanraavikal ellam IT la mattum thana? cinema industry le illaya? mutrpoekku vattathulae illaya? :-)
IT yoda palanai ellam anubavichuttu adhai thitrathu nallava irukku? IT kaaranode kaasu vaenum, avan kittae irundhu varrae google,wiki,blog ellaam vaenum aanda cinema vilae avanai kollanum...post modernisa pithamagan chaaru vum edirpaar, maaperum puracthicyalan mansur um edipaar...
ellam oru vilambaram thaan
//jeyamohankooda vaari iruppathu aacharyam//
hello sherif shervani pottu pose kudukkumpothe ninachen. bekku mathirithan yosippennu. jeyamohanukku cinema paththi enna theriyum. ipdiye aachiyappattukkittu iru. velangirum
Tamil MA yeduthavitham arumai . Karuththukalai Solli yullar . Iyakunar thanathu karuthukkalai solli ullar . Aanaal solliya karuthukal yentha alavu unmai yenbathai nokka vendum . Cinema Industry'l Kodikalai vangubavargalum irukiraarkal , sorpa varumaanam eetupavarkalum irukiraarkal . Athu pol IT thuraiyil sambalam illaamal velai seibavarkalai theriyuma ... theriyaathendral naan ungalakku avarkalai kaata thayaar .
Sorpa varumanathil pala naal velai seithu pinbu oru naal pala madangu oothiyam vangu giran . Ungalakku pala madangu oothiyam mattum theriyumaayim ... athai neril paarthaal mattumae puriyum .
uzhuthundu vaazhvatharkku oppillai kandeer thozhundhudu veror pannikku ,
yendra valluvarin karuthirkku inanga anaithu nanbarkalai than pankirkku yen vayazhukku alaikiraen .....
Yenna neengal yenna uzhavaa seikireerkal . Uzhavan padum vethanaiyil siru pangaavathu unda ...
Makkal variyil thaan Tidel katta pattullathu ... athae gramapura makkal panathil thaan chennai membaalal katta pattullathu ... Thaal thala perunthu mithavai perunthu ... then maavattankallukku vanthu paarungal angu ullavarkulum thaanae vari kattukiraarkal ..ungallukku alikapadum vasathi kalil 1/2 pangaavathu angu irukirathu paarungaal ... athu yeppadi nammakku aapu adichaa mattum vazhikudhu ....