"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி?
பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்கிறது. நான்குநாட்களுக்கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர்விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தில் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவதால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்காரம் தவிர்த்து) திரும்பப்பெற்றிருக்கிறது.
ஜெயலலிதாவோ தான் இவ்விழாவிற்காக மூன்று கோடி ஒதுக்கியதாகவும் ஆனால் திமுக அரசு அய்ம்பது லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். 'புரட்சிப்புயல்' வைகோவோ தான் தான் கருணாநிதியைவிட நீண்டகாலமாக குருபூசையில் அஞ்சலி செலுத்தியவன் என்று உரிமைகோருகிறார். சரத்குமார், பா.ம.க இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்துவதால் அரசியல் ரீதியாக ஆதாயமென்ன என்று விளங்கவேயில்லை.
தலித்மக்களின் காவலன் திருமாவளவனோ தலித்துகளை வெட்டிச்சாய்த்த முத்துராமலிங்கம் நூற்றாண்டுவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தது அறிந்ததே. சாதிக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குருபூசையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான நல்லகண்ணுவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது.
இந்தளவிற்குக் கொண்டாடபடவேண்டியளவிற்கு முத்துராமலிங்கத்தின் 'சமூகப் பங்களிப்புதான் என்ன?
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர், குறிப்பாக பிரமலைக்கள்ளர்கள் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டனர். காவல்நிலையத்தில் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரைச்சட்டம், ரேகைச்சட்டம் ஆகிய சனநாயகமற்ற இத்தகைய கொடூரச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முத்துராமலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. அத்தகைய போராட்டங்கள் நியாயம் வாய்ந்தவையே.
ஆனால் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட முக்குலத்துச் சமூகம் தனக்குக் கீழுள்ள சாதிகளை ஒடுக்கும் கொடூரச் சமூகமாக மாறிப்போனதில் முத்துராமலிங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. முத்துராமலிங்கம் உள்ளிட்ட தேவர் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத பிறசாதியினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. முத்துராமலிங்கம் மேடைகள் தோறும் சாதிப்பெருமிதத்தை முழங்கிவந்தார். அண்ணாதுரை, காமராசர் குறித்த அவரது விமர்சனங்கள் சாதியரீதியாக இழிவுபடுத்துபவையாகவே அமைந்தன.
தலித்துகளின் ஆலய நுழைவுப்போராட்டம் மற்றும் தலித்துகளுக்கு நிலமளித்தது ஆகியவற்றைத் தலித்துகளின் மீதான கரிசனமாகக் கூறுவர். ஆனால் ஆலயநுழைவுப்போராட்டத்தைப் பொறுத்தவரை அவரது 'பங்களிப்பு' என்பது தலித்துகளுக்கு எதிராக அடியாட்களை அனுப்பாதது என்பதாகவே இருந்தது.
அவரது தலித்மக்களின் மீதான அணுகுமுறை என்பதும் மேல்நோக்கிய பார்வையாகவே இருந்தது. பெருந்தன்மையாகச் சில சலுகைகளைத் தலித்துகளுக்கு அளித்தால் போதும் என்பதே அவரது நிலைப்பாடு. தலித்துகள் மறுக்கப்படட் உரிமைகளைத் தாங்களாகக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு எதிராக நின்றார். இதற்கான மகத்தான உதாரணம்தான் போராளி இம்மானுவேல் சேகரனின் படுகொலை.
மேலும் முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. 'தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்' என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.
பார்வர்ட்பிளாக் என்னும் இடதுசாரிக் கட்சியை ஒரு வலதுசாரிக் கட்சியாக மாற்றிய 'பெருமை' முத்துராமலிங்கத்திற்கே உண்டு. இந்தியாவில் வேறெங்கும் பார்வர்டு பிளாக் இப்படியொரு சாதிக்கட்சியாகச் சுருங்கியதில்லை. தமிழகத்தில் பல்வேறு பார்வர்ட்பிளாக்குகளில் செயல்பட்டுவரும் தேவர்சாதி வெறியர்களுக்கோ 'பார்வர்ட் பிளாக்கின்' பொருளே தெரியாது. இந்தியதலைமைகளுக்கோ அதுகுறித்த அக்கறைகளுமில்லை.
மேலும் காங்கிரசு என்னும் நிலப்பிரபுத்துவக் கட்சிக்கு எதிராக வளர்ந்துவந்த திமுகவை நோக்கிய முத்துராமலிங்கத்தின் விமர்சனங்களைப் படித்தாலே அவர் எவ்வளவு பெரிய பிற்போக்குச்சக்தி என்பதை விளங்கிக்கொள்ள இயலும். திமுகவின் மொழிப்போராட்டம், வரம்பிற்குட்பட்ட பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை, முஸ்லீம் ஆதரவு, வடவர் எதிர்ப்பு ஆகியவற்றை முத்துராமலிங்கம் இந்தியப் பெருந்தேசியம் மற்றும் இந்துத்துவ நிலைப்பாடுகளின் அடிப்படையிலிருந்து விமர்சனம் என்றபெயரில் கொச்சைப்படுத்தினார். (சமயங்களில் திமுகவின் மீதான ஜீவாவின் விமர்சனங்களைப் பைத்தாலும் முத்துராமலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் வித்தியாசங்கள் தெரியாது)
சாதியச்சமூகமாய் விளங்கும் இந்தியச்சமூகத்தில் பல்வேறு சாதிகளும் அமைப்புகளாகத் திரள்வதும் தனக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் தவிர்க்கவியலாததே. ஆனால் தமிழகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதியமைப்புகள் பெரியார், அம்பேத்கர் போன்றவற்றை குறைந்தபட்ச தந்திரமாக திரு உருக்களாக முன்வைத்தும் சமூகநீதி என்னும் பெயரில் தங்களது பங்குகளை வலியுறுத்தியுமே தங்கள் சாதி அரசியலைக் கட்டமைத்திருக்கின்றன.
ஆனால் முக்குலத்துச் சாதியமைப்புகளோ அத்தகைய நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவைகளோ அல்லது சமூகநீதியை ஒத்துக்கொள்பவையோ அல்ல. அவை தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் எதையும் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்திலோ அவற்றின் கோரிக்கைகளே இட ஒதுக்கீட்டை நீக்கவேண்டும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை அகற்றவேண்டும் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.
முக்குலத்தோர் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரச்சக்தியாக உருமாறத்தொடங்கியது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எனலாம். ஒருபுறம் தீண்டாமையை மறைப்பதற்காக நாடார்கள் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவது, உள்ளூர்க் கோயில் பணிகளில் பங்கெடுத்துக்கொள்வது என்றெல்லாம் தொடங்கிய செயல்பாடுகள் 80களில் முற்றமுழுக்க அவர்களது சமூக உரிமைகளுக்காகப் போராடிய சுயமரியாதை இயக்கத்திடமிருந்து விலகி இந்துத்துவச் சக்திகளிடம் அடையாளங்காணச்செய்து இந்துமுன்னணிக்கு வழிகோலியது.
தங்களது சமூகத்திற்கான பங்குகளைக் கோரி அரசியல் பயணத்தைத் துவங்கிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் பழனிபாபா கூட்டணி தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியது. அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் இந்துமுன்னணியை மறைமுகமாய் ஆதரித்து ஊக்குவித்தார். மறுபுறத்தில் தனக்கு முதன்முதலாக வெற்றியைத் தேடித்தந்த சாதி என்பதால் (திண்டுக்கல்லில் மாயத்தேவர்) தேவர் சமூகத்தின் மீது கரிசனம் காட்டினார். பொன்.பரமகுரு உள்ளிட்ட பல முக்குலத்தோர் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் நிரப்பப்பட்டனர். கட்சியிலும் திருநாவுக்கரசு, காளிமுத்து என முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.
இந்த நிரப்பல் ஜெயலலிதா வருகைக்குப் பின் ஜெயா - சசி கூட்டணி மூலம் உச்சத்தை எட்டியது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் கிளைவிடத்தொடங்கின. அனைத்து அமைப்புகளும் தங்கள் ஞானகுருவாக முத்துராமலிங்கத்தையே ஏற்றுக்கொன்டன. முத்துராமலிங்கத்தைக் கடவுளாக்கி மொட்டையடித்தல், காதுகுத்துதல், பால்குடமெடுத்தல் ஆகிய கேலிக்கூத்துக்கள் எவ்வித விமர்சனங்களுமின்றி அரங்கேறின.
தமிழ்ச்சூழலில் ஆரம்பித்த காலத்திலிருந்தே தேவர் அரசியல் என்பது முற்றமுழுக்க பெரியாரின் அரசியலுக்கு எதிரானதேயாகும். கமுதி முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தைக் கைதுசெய்யவேண்டுமென்று குரல்கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. பெரியார் இறந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இரண்டு, அவை சங்கரமடம் மற்றும் தமிழகப் பார்வர்ட் பிளாக் கட்சி.
முக்குலத்தோர் அமைப்புகள் வலதுசாரித் தன்மையை அடைந்ததற்கு இன்னொரு உதாரணம் முருகன் ஜீ என்னும் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட 'பாரதீய பார்வர்ட் பிளாக்'. இந்துவெறியன் பிரவீண் தொகாடியாவைத் தமிழகத்திற்கு அழைத்து சிறுபான்மையினருக்கு எதிராக மதுரையில் திரிசூலம் வினியோகித்தது பாரதீய பார்வர்ட் பிளாக். மேலும் 'ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்' என்னும் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகள் நிரம்பிய ஒரு நூலை வெங்கடேசன் என்னும் தலித் ஒருவரைக் கொண்டு எழுதச் செய்து தனது கட்சி வெளியீடாகக் கொணர்ந்தது.
இவ்வாறாக தேவர் அரசியலின் வலதுசாரித்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவப் போக்குகளுக்குப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்த்திரையுலகில் இறுதிவரை கடவுளர் வேடமேற்று நடிக்காததால் 'லட்சிய நடிகர்' எனப் புகழப்படுபவர் எஸ்.எஸ்.ராசேந்திரன் என்னும் எஸ்.எஸ்.ஆர். இன்றுவரையிலும் கூட அவர் நாத்திகராயிருக்கலாம். ஆனால் பசும்பொன்னில் முதல் அஞ்சலி அவருடையதே. திராவிட இயக்க அரசியலும் வெறுமனே பகுத்தறிவுவாதமுமே சாதியத்தை நீக்கம் செய்திருக்கிறதா என்பதற்கான பதில்தான் 'லட்சியநடிகர்'.
தமிழ்த்தேசியம், நவீன இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் பல்வேறு வேடங்களில் இருந்தபோதும் தேவர் அரசியல் அதைத்தாண்டி பல்லிளிக்கத் தவறுவதேயில்லை. 'தமிழால் ஒன்றுபடுவோம்' என முழங்கி 'தமிழ்ச்சான்றோர் பேரவையை'யும் நந்தன் இதழையும் ஆரம்பித்தவர் ஆனாரூனா என்னும் அருணாச்சலம். நந்தன் நின்றுபோன கடைசி இதழவரையிலும் அம்பேத்கரின் ஒரு சிறு புகைப்படமும் வெளியிடாத நந்தன் தான் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.
இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.
காலச்சுவட்டின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் கனவான்கள் புதியபார்வையின் தேவர் சாதீயத்தைக் கண்டிக்காதது ஏன்? உண்மையிலேயே சமூக அக்கறை உடைய எழுத்தாளர்கள் 'புதியபார்வை' இதழைப் புறக்கணிக்க வேண்டும். பார்ப்பனர்களிடம் காணப்படக்கூடிய அளவுகூட ஜனநாயகச் சக்திகளை முக்குலத்தோரிடம் காணமுடிவதில்லை.
வீரசாவர்க்கருக்குச் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மய்யநீரோட்டத் தேர்தல் கட்சிகளும் கூட முத்துராமலிங்கத்தின் திருவடியைச் சரணடைகின்றன. தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.
கொலைகார பாவிகளுக்கெல்லாம் சிலை, விழா இத்யாதி இத்யாதி...
புதிய கடவுள் ஒருவரை உருவாக்கி வருகிறார்களோ?
இன்னும் ஒரு நூறாண்டுகளுக்குப் பிறகு தேவர் கடவுளாகவே ஆக்கப்பட்டிருப்பார்.
மக்களின் வரிப்பணத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்சியாளர்களின் குரங்கு சேஷ்டைகளுக்கு அளவில்லாமலே போய்விட்டது.
கூலிக்கு மாரடிக்க வேண்டிய அரசியல் காரர்கள் எல்லாரும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கு சக்திகளை உருவாக்குவதில்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.
வெட்கம். வேதனை.
விழிப்புணர்வு அவசியம் தேவை.
சமுதாய கேடிகளை கௌரவிக்கும் அரசியல் பேடிகளை வன்மையுடன் கண்டிப்போம்.
நானும் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன் முத்துராமலிங்கம் என்னசெய்தார்னு. இதுவரைக்கும் நான் அந்த சிலைகளைத்தான் பார்த்திருக்கேன் ஆனா என்ன செய்தார் என்று யோசித்து மண்டைகுடைந்திருக்கிறது சில சமயம் என் குடைச்சலை தீர்த்துவைத்த உங்களுக்கு நன்றி தென் மாவட்டம் என்றாலே கலவரம் செய்வது இவங்கதான் அதுக்கு இந்த ஆள்தான் காரனமுனு எனக்கு தெறியாது.
நன்றி உங்கள் கட்டுரைக்கு
ஜெயம் அவர்கள் கவனத்திற்கு.
இங்கு சென்று திரு.அசுரன் அவர்களின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் என்கிற அற்புதமான கட்டுரையை படித்துப் பாருங்கள்.
நன்றி.
நன்றி மாசிலாவிற்கு..
அவரது இணைப்புகள் வழி "தேவர்திருமகனார்" பற்றி பல 'வரலாற்ற' கட்டமைப்பு உண்மைகளைப் புரிந்து கோள்ள முடிந்தது.
கற்பக விநாயகத்தின் கோணத்திலிருந்து விலகி பெரியாரியக் கோணத்தில் அலசும் உங்கள் கட்டுரையும் அருமை. இரண்டு கட்டுரைகளும் பின்னொட்டங்களும் அவசியமான தரவுகள்.
சாதியம் என்பது ஒருவகை சொத்து மதிப்பு அல்லது உடமை மதிப்பைக் கொண்டது. அதற்கு படிநிலை அடிப்படையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலையின் மதிப்பை பெறுவதற்கான முயற்சியல் சாதிகட்சிகள் இயங்குகின்றன என்றால் அவற்றின் உபரியைச் சுரண்ட இதர ஓட்டுக் கட்சிகள் முயல்கின்றன.
//தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.//
அரசியல் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட வரிகள். அதற்கான உங்களது முன்முயற்சி பாராட்டத்தக்கது.
தீக்கதிரில் வெளியான கட்டுரையையும் படியுங்கள்.தீக்கதிர் இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இன்று தி.க முத்துராமலிங்கத் தேவரை விமர்சிக்கிறதா?. பெரியார் தி.க என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது. முத்துராமலிங்கத் தேவர் வளர்த்தெடுத்த பார்வார்ட் பிளாக் பிளவுண்டு சிதைந்து விட்டது. ஆனால் சாதி அரசியல் அனைத்துக் கட்சிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தேவர் ஒட்டினைப் பெற தென் மாவட்டங்களில் அனைத்துக் கட்சிகளும் போட்டி போடுவதால் அவைகள்
முத்துராமலிங்கத் தேவரை விமர்சிக்கவே மாட்டார்கள்.வழக்குகளைத் திரும்பப் பெற்றது ஒரு மோசமான முன்னூதரணம். நாளை இதை பிற சாதிகளும் உதாரணம் காட்டி சாதிக்கலவரங்களில் போடப்பட்ட வழக்குகளை கைவிடக் கோரலாம். உங்கள் கருத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் இன்று அதற்க்கு பெரியாரியவாதிகள் கூட ஆதரவாக இருப்பார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. திருமாவளவன் கூட இன்று இத்தகைய கேள்விகளை எழுப்புவதில்லை. தேர்தல் அரசியலில் சமரசமானதன் விளைவு இது.
சுகுணா,
பல தெரியாத விஷயங்களை விளக்கமாகத் தந்திருக்கிறீர்கள். இந்தப் பதிவு ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம்.
முரளிகண்ணன்,
தகவல் சரியானதுதான்.
சுகுணா,
தமிழகத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளின் பின்னால் இன்றும் முத்துராமிலிங்கம் அடையாளமாக இருக்கிறார். 1991 தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் தேவர் சாதியினர் அதிகாரத்தில் பலமடைந்தனர். அரசு நிர்வாகத்தில் மற்றும் காவல்துறையில் தேவர் சாதியினர் அதிகாரிகளாக, காவலர்களாக செல்வாக்கு பெற்றனர். தலித் மக்களை கொடுமைப்படுவதும் சாதியினரில் தேவர் சாதி தென்மாவட்டங்களில் கணிசமான பங்குவகித்து வந்தது. தொடர்ந்து ஜெயலலிதா-சசிகலா அதிகார, அரசியல் பங்காளி உறவின் மூலம் இந்த அடக்குமுறைக்கு முடிசூட்டலும் நடந்தது. அப்போதைய தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் பின்னால் தேவர் சாதியினர் இருக்க, காவல்துறை தலித்மக்களை வேட்டையாடியது. ஜெயலலிதா-சசிகலா உறவின் அரசியல் விளைச்சலை உணர்ந்த தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் முத்துராமலிங்கத்தின் விழாவ கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. வாக்குவங்கிகளை குறிவைத்து நகர்த்தப்படும் காய்களில் வெட்டப்படுகிறது தலித் அரசியல் எழுச்சி. இந்துத்துவமயப்படுத்தும் அரசியலுக்கும் இதே காய் தான் நகர்த்தப்படுகிறது. திராவிட மற்றும் பொதுவுடமை இயக்கங்கள் இந்த அரசியலை புரிந்து முறியடிப்பது அவசியம்
பெரியாரிய பார்வையிலான நல்ல பதிவிற்கு நன்றி.
சுகுணா,
மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர் வைப்பதற்கான முயற்சியில் அரசு முயற்சி எடுப்பதாக மார்க்ஸிய கம்யூனிஸ்ட்கள் எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வன்கொடுமை வழக்குகளை அரசு ரத்து செய்ய இருப்பதும் தெரிகிறது. இந்த செய்தி உண்மையானால், சமூகநீதிப் போராட்டத்திற்கு கொடுக்கிற அடியாக அமையும். முக்குலத்தோரின் வாக்குகளுக்காக தி.மு.க செய்யும் இந்த தகிடுதத்தங்கள் தலித்மக்களுக்கு எதிரான அரசியலையும், இந்துத்துவத்தையும் வளர்க்கவே உதவும்.
கொள்கை அடிப்படையிலான போராட்டங்களிலிருந்து விலகி, 'அரசியல்' செய்யும் இந்த போக்கு ஜெயலலிதாவை எதிர்க்க குறிகிய காலத்திற்கு உதவலாம். தமிழகத்தின் நீண்டகால போராட்டத்திற்கு இது எதிர்விளைவையே தரும்.
பார்ப்பனீய(சாதீய), இந்துத்துவ, வர்க்க ஆதிக்க எதிர்ப்புகளில் தடம்புரண்ட தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் சுயபரிசோதனை செய்யவேண்டிய அவசியம் எழுகிறது. கரவொலிகளும், புகழ்பாடல்களும், சுயபுராணங்களும் நிறைந்த மாநாடுகளும், கூட்டங்களும் இதற்கு உதவுமா என்பது கேள்வியே.
கழகங்களும், சு.சாமி,வைகோ, தற்போது கட்சி ஆரம்ப்பித்த வி.காந்த், சரத்குமார் வரை எல்லாருமே குரு பூஜைக்கு போய் விசுவாசம் காட்டி நடித்து ஓட்டு வாங்க தான் துடிக்கிறார்கள்.யாருக்குமே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை தான் காட்டுகிறது.
இந்த அக்கரையை மற்ற சமுதாயத்தலைவர்களின் பிறந்த நாட்களின் போது காட்டுவதே இல்லையே ஏன்?
புதிய பார்வையை எல்லாம் படிக்க ஆட்கள் இருக்கிறார்களா என்ன? காலச்சுவடு மீது ஆயிரம் குறை இருந்தாலும் அதன் தரத்தில் பாதி கூட வராத ஒரு பத்திரிகை புதியபார்வை, நடராசன் பத்திரிக்கை நடத்துவதே விளம்பரத்துக்கு தானே ,இதற்கு முன்னர் தமிழரசினு ஒன்றை நடத்திப்பார்த்து விட்டு ஓய்ந்தவர் தான்.
கையில காசு இருக்கு செலவு பண்ண வழி தெரியலை,அவர் நடத்தும் பத்திரிக்கையை எல்லாம் கணக்கிலவே எடுத்துக்க கூடாது.
In our place (Manamadurai and paramakudi area) we called him "Kodanki". See his hair style. He will look like kodanki. He was lobber, that is true. That's why he got a leprosy. But, our political dogs they want to lick his feet. They spending a lo of govt. money for his ceremony and other things. Alternatively, they can use that for other useful things.
By "Chandra"
சுகுணா... உண்மையிலேயே மிகச் சிறந்த ஆவணம் இது.
பெரியார் பாசறையிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இது போன்று வோட்டுக்களுக்காக செய்யும் பல செயல்கள் கடும் கோபத்தை வர வைக்கின்றன. (அம்மையாரை எல்லாம் இதுல ஒரு கணக்காகவே எடுத்துக்க வேணாம்)
சரியான சமயத்தில் முத்துராமலிங்கரின் உண்மையான வரலாறை உலகுக்கு எடுத்து வைக்காமல் இருந்தோமேயானால், அடுத்த தலைமுறை முத்து ராமலிங்கரை கடவுளுக்கு ஒப்பான மனிதராக தன பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கும்.
ஹாட்ஸ் ஆஃப்.
நல்லதொரு கட்டுரை.
.....
/இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது./
புதிய பார்வையின் பின்புலம் தெரிந்துகொண்டும் அதில் எழுதும் அ.மார்க்ஸ் போன்றோரின் அரசியல்/அறம் குறித்த கேள்விகளும் எழுப்பப்படவேண்டியதே.
மதுரைக்கு வரும் விமானங்களில் தலித் மக்கள் உட்கார்ந்து கொண்டே பிராயணிக்க முடியுமா? அல்லது மதுரையை நெருங்கியதும் எழுந்து நின்றுகொள்ள வேண்டுமா?
;-D
/புதிய பார்வையின் பின்புலம் தெரிந்துகொண்டும் அதில் எழுதும் அ.மார்க்ஸ் போன்றோரின் அரசியல்/அறம் குறித்த கேள்விகளும் எழுப்பப்படவேண்டியதே/
இதுகுறித்து அ.மார்க்சிடம் தனிப்பட்டமுறையில் பேசும்போது புதியபார்வை இதழில் எழுதப்போவதை நிறுத்தப்போவதாகக் கூறினார். தலித்முரசு இதழ் சார்பில் புதிய பார்வையின் சாதீயப் போக்கை விமர்சித்து துண்டறிக்கை வெளியிடுவதாயிருக்கின்றனர்.
பெரியார் தன் காலத்தில் முத்துராமலிங்கத் தேவரை எப்போதும் எதிர்த்தே அரசியல் செய்து வந்தாரா என்ன?. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அதை ஒடுக்க வேண்டும், தலித்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தினார்.மற்றபடி அவர் தேவரை தொடர்ந்து எதிர்த்தார் என்று
சொல்ல முடியாது. திமுக முதுகுளத்தூர் கலவரத்தின் போது எப்படி நடந்து கொண்டது, சட்டசபையில் என்ன செய்த்தது என்பதையெல்லாம் படித்துவிடு எழுதுங்கள். இன்று பெரியார் தி.க, தி.க இந்தப் கோரிக்கையை எதிர்க்கின்றனவா என்பதையும் எழுதுங்கள்.
தென்மாவட்டங்களில் தேவர்களின் ஒட்டினைப் பெற முத்துராமலிங்கத் தேவர் பெயரால் அரசியல் செய்தாக வேண்டும். அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் அவர்கள் ஒட்டு விழாது. கருணாநிதிக்கு இது நன்றாகவே தெரியும். மேலும் அண்ணா காலத்திலேயே பார்வர்ட் பிளாக்குடன் திமுகவிற்கு தேர்தல் கூட்டணி இருந்தது என்று நினைக்கிறேன். பின்னர் பார்வர்ட் பிளாக் பிளவுபட்டு ஒரு பிரிவு திமுகவுடன்,
இன்னொன்று அதிமுகவுடன் என்று கூட்டணி ஏற்படுத்திக் கொண்டன. மூக்கையாத் தேவர் மகனை
எம்.எல்.ஏ ஆனர், அதிமுக உதவியுடன். எப்படிப் பார்த்தாலும் தேவர் துதிபாடல், தேவர்களின் கட்சியுடன் கூட்டணி போடுவது போன்றவை 1970களில் துவங்கி விட்டன. இன்று நடைபெறுவது அதன் 'பரிணாம வளர்ச்சி'தான்.
தெய்வீகத்தினை ஏற்காதவர்கள் கூட தேசியத்தை ஏற்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். அவர்களுக்கு தெரியும், தேசியத்தினை எதிர்த்தால் பதவி கிடைக்காது என்று. பிரிவினை கோரிய அண்ணா அன்றே தேசியத்தை ஏற்று பிரிவினையை கைவிட்டார்.இல்லையெனில் 67ல் தேர்தலில் திமுக நிற்பது சாத்தியமற்றுப் போயிருக்கும்.நடைமுறையில் அரசியல்வாதிகளுக்கு பெரியார் பெயரும் வேண்டும், தேவர் பெயரும் வேண்டும், ஏனெனில் அதிகாரம், பதவி வேண்டும். பெரியார் பூமி என்று நீங்கள் சொன்னாலும் இதுதான் உண்மை.
1972ல் மதுரையில் கோரிப்பாளையத்தில் தேவர் சிலையை கருணாநிதி முன்னிலையில் திறந்து வைத்தவர் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. இந்த சிலை நிறுவப்பட நானே காரணம் என்று கருணாநிதி பல முறை கூறியிருக்கிறார். பெரியார் இதை எதிர்த்தாரா?. கலைஞர் காலத்தில் தேவர் பெயரில் அரசுக் கல்லூரிகள் துவங்கப்பட்டன என்று நினைக்கிறேன். எனவே 1970களிலிருந்தே ஒரு தொடர்ச்சியை இங்குப் பார்க்கலாம். கலைஞரும், ஜெ.லலிதாவும் போட்டிக் போட்டுக் கொண்டு தேவரைக் கொண்டாடினர். சு.சாமி தேவர் சிலை தில்லியில் பாராளுமன்றத்தில் நிறுவப்பட வேண்டும் என்று கோரி, வெற்றிக் கண்டார். இதை தி.க உட்பட எந்த அமைப்பும் எதிர்த்ததாகத் தெரியவில்லை.
தகவலுக்கு நன்றி.
...
அண்மையில் புதியபார்வை கடையில் வாங்கும்போது, சிறப்பிதழ் என்பதால் இந்த முறை விலை கூட்டியிருக்கிறது என்றார்கள் . இந்தத் தேவையில்லாத தேவரிற்காய் கூடக்காசு கொடுத்து நான் வாங்க வேண்டியிருக்கின்றதேயென முணுமுணுத்தபடி இதழை வாங்கியிருந்தேன். புதியபார்வையின் பின்புலம் ஒரளவு தெரிந்தாலும், இப்படி வெளிப்படையாக சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவார்கள் என்பது எதிர்ப்பார்க்காத ஒன்று :-(.
பாராளுமன்றத்தில் தேவருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதில் பெரியார்.தி.க வுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. உண்மைதான். வாக்குவங்கிக்காகவோ, அல்லது ஆதிக்கத்துக்குப் பயந்தோ அல்ல. அதில் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. மேலும் தி.மு.க முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது என்பதும் உண்மை. சட்டசபைக் குறிப்புகளில் விபரம் காணலாம்.
தியாகி.சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் அமைக்க அறிவிததபோது எழுந்த கலவரம் அனைத்து தலைவர்களின் பெயரிலான போக்குவரத்துக்கழகங்களையும் பெயர் நீக்க வைத்தது. எனவே இப்போது மதுரை விமான நிலையத்திற்கு அந்த சுந்தரலிங்கனின் பெயரையோ, இம்மானுவேல் சேகரனின் பெயரையோ வைக்க வேண்டுமென பெரியார் தி.க சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம். தாமரைக்கண்ணன், பெரியார்.தி.க
//மதுரை விமான நிலையத்திற்கு அந்த சுந்தரலிங்கனின் பெயரையோ, இம்மானுவேல் சேகரனின் பெயரையோ வைக்க வேண்டுமென பெரியார் தி.க சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம். தாமரைக்கண்ணன், பெரியார்.தி.க//
என்னை பொறுத்தவரை, இதுபோன்ற தனிமனித துதி பாடும் செயல்களை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றே சொல்வேன்.
ஒரு மரத்தின், செடியின் அல்லது பூவின் ... பெயரை வைத்து தொலைக்கலாமே?
வருங்காலத்தில் ஜாதிபிரச்சனைதான் அதிகமாக வரப்போகிறது பொறுத்திருந்து பாருங்கள் ஜாதி சண்டை மதச்சண்டை இதனாலே உலகம் அழியப்போகிறது
நீங்களே இதற்க்கு உதாரணம்.
சமூகத்தில் எந்த வித அதிகாரமும் இல்லாத பிராமணர்களை திட்டுவதே பிழைப்பாக கொண்ட நீங்கள் இதை போல எழுதுவது சம்ம காமேடி. அதோடு உங்கள் ஜாதியே பிராமணருக்கு நிகரானதே..உங்கள் ஜாதி சமூகத்தில் செய்த ஆதிக்கத்தை முறியடிக்க முடியாமல் ஜாதி அபிபானத்தோடு விலகும் நீங்கள் ஏன் உங்களின் பிள்ளை ஜாதியை விமர்சித்து விட்டு தேவரை தாக்கலாமே..
ennda parathesi mavnee..
devidiya...mavane...
innaikku thalith peyaral valura naykal ennada seythirukku engalukku...
but ennakku padipukku uthaviyathu.. velaikku udhavathu ellamee.. thevar samuthathavarkal thaanda...
vetti kuuchsal poddum moodarkalee... poy uruppadiyaay ethavathu seyungada... mothalil.. vettiyay sathimothal kalai thooondamal... pullamarupaya puthiya kaatturilla...
வீரன் சுந்தரலிங்கம் என்ற ஒரு தலித் தலைவனின் பெயரை ஒரு பேருந்துக்கு அரசு வைத்ததால், ஆதிக்கச் சாதி வெறியர்கள் நடத்திய கலவரத்தை நாம் மறக்கவில்லை. அதனால், அரசு மாவட்டங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களையும், போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது. இவ்வாறு நீக்கப்பட்ட பெயர்களில் திருவள்ளுவரின் பெயரும் அடக்கம். மதுரை விமான நிலையத்துக்கு 'பொன் முத்துராமலிங்கத் தேவர்' பெயரை வைக்கச் சொல்லி தேவர் சாதி வெறியர்கள் கோரிக்கை வைத்தால், தலித் தலைவர்களும், ஜனநாயகச் சக்திகளும் சேர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு 'வீரன் சுந்தரலிங்கம்' பெயரைச் சூட்டக் கோரி ஏன் போராடக் கூடாது?
குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை. அவரை மக்கள் விரோத சக்தி என்று சொல்வதை ஏற்பதற்கில்லை. நேதாஜியின் படைக்கு தமிழனை திரட்டியவர் அவர். மிகச்சிறந்த தேசியவாதி.
மீனாட்சியம்மன் கோவிலில் தலித் பிரவேசம் ஏற்படுத்தியவர் அவர். தனது சொத்தை தலித் சகோதரனுக்கு பகிர்ந்து கொடுத்தவர். சாதி துவேசத்தை எப்போதும் ஊக்குவிக்காதவர். இமானுவேல் கொலைவழக்குகூட அரசியல் சார்ந்தது. அவர் தேர்ந்து எடுத்த ஆன்மிகம் நெறிமுறையில் முறையாக வாழ்ந்தவர்.
//////////////
கட்டுரையாளருக்கு கண்டனங்கள்!
Interesting but not fully dependable information. Can any one answer the following questions? 1. Did Periyar and
Devar ever meet in person? 2. Did Veeramani ever make any adverse comments on devar or devar community? 3. Can anyone reproduce what devar said about Anna and Periyar exactly? Without answers to these questions, it is impossible to come to a judgement.
@Bala
//குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை. அவரை மக்கள் விரோத சக்தி என்று சொல்வதை ஏற்பதற்கில்லை. நேதாஜியின் படைக்கு தமிழனை திரட்டியவர் அவர். மிகச்சிறந்த தேசியவாதி.
மீனாட்சியம்மன் கோவிலில் தலித் பிரவேசம் ஏற்படுத்தியவர் அவர். தனது சொத்தை தலித் சகோதரனுக்கு பகிர்ந்து கொடுத்தவர். சாதி துவேசத்தை எப்போதும் ஊக்குவிக்காதவர். இமானுவேல் கொலைவழக்குகூட அரசியல் சார்ந்தது. அவர் தேர்ந்து எடுத்த ஆன்மிகம் நெறிமுறையில் முறையாக வாழ்ந்தவர்.
//////////////
கட்டுரையாளருக்கு கண்டனங்கள்!//
நன்றி நண்பரே!!! உங்கள் பதிவை(கருத்தை) நான் அமோதிக்கிறேன்......
இதையும் படியுங்களேன்...
அறிவிருந்தால் புரியும்...
தலித் மக்களுக்காக தேவர்:
http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post_6607.html