ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2



சரி, இப்போது ஜெயலலிதா, கருணாநிதி அரசியலுக்கு வருவோம். இங்கிருக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு பைத்தியக்காரனத்தனமான பயம் இருக்கிறது. தமிழீழம் அமைந்துவிட்டால், தனித்தமிழ்நாடு அமைந்துவிடும், தங்கள் கருத்தியல் அடிப்படையான இந்தியத்தேசியம் காணாமல்போகும் என்பதுதான் அது. இப்படியெல்லாம் நடக்க ஒரு தர்க்கரீதியான நியாயமும் கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். ஜெயலலிதா ஒரு பக்கா பார்ப்பனர். எனவே அவர் ஈழத்திற்கு எதிராய் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.



கருணாநிதியைப் பொருத்தவரை அவ்வளவு மோசமில்லையென்றாலும்கூட அவருக்கு அடிப்படையில் இரண்டு சிக்கல்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒன்று உளவியல்சிக்கல். அடிப்படையில் அவர் கோழை. ஒருவேளை சங்கராச்சாரியைக் கைது செய்து 'புரட்சி' செய்ததைப் போல ஜெயலலிதா நாளை பிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தாலும் செய்யலாம். ஆனால் கருணாநிதி எப்போதும் அப்படி மாறமாட்டார். ஈழப்பிரச்சினை என்றில்லை, எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.


இன்னொன்று அவர்க்கு இருக்கும் அரசியல் சிக்கல். அவர் ஒன்றும் அதிகாரத்தை மறுத்துவிட்டு மகக்ளுக்காக துப்பாக்கியேந்திப் போராடும் நக்சல்பாரியல்ல, சாதாரண ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதி. அவர் ஆட்சிக்கு வந்துவிட்டாலே 'விடுதலைப்புலிகள் ஊடுருவல்' என்று கூக்குரலிடுவதற்காகவே துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள் இருக்கின்றன.


இன்னொன்று உளவுத்துறை மற்றும் காவல்துறையிலுள்ள பார்ப்பன அதிகாரிகள். நேற்று ஒரு ஈழத்தமிழ் நண்பர் சொன்னார், "பிரணாப் முகர்ஜி இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று. நான் குழம்பிப்போனேன். காலையில் தினத்தந்தி பார்த்தபிறகுதான் தெரிந்தது அவர் பிரணாப்முகர்ஜியல்ல, போலிஸ் டி.ஜி.பி முகர்ஜி. ஆனால் எந்த முகர்ஜியாக இருந்தாலும் இதைத்தான் செய்வார்.

இத்தைகய நெருக்கடிகள் வெளியிலிருந்து வர வர கருணாநிதி ஒடுக்குமுறையைக் கடுமையாக்குவார். இது ஈழத்தமிழர்களுக்குத்தான் என்றில்லை. கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலை,அதன்பிறகு இந்துத்துவ வெறியர்களும் போலீசும் சேர்ந்து முஸ்லீம்களின்மீது நடத்திய தாக்குதல் ஆகியவைகளைத் தொடர்ந்து கருணாநிதி முஸ்லீம் மக்களைத்தான் கடுமையாக ஒடுக்கினார். எனவே கருணாநிதி ஈழப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றோ ஈழ அகதிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றோ கூறுவதும் எதிர்பார்ப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முட்டாள்தனமாகும்.

ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை காட்டப்படும் இன்னொரு பூச்சாண்டி ராஜிவ்காந்தி கொலைக்குப் பிறகு தமிழக மக்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது.







முதலில் ராஜிவ் இறந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் ஆண்டுதோறும் புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டிருப்பதே அபத்தமானது. காந்தியைக் கொன்ற வினாயக்நாதுராம்கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். ஆர்.எஸ்.எஸ் அப்போது தடைசெய்யப்பட்டது. பிறகு அப்போது பாதுகாப்பு அமைச்சராயிருந்த வல்லபாய் படேல் என்னும் பார்ப்பனச் சர்வாதிகாரியின் முயற்சியால் அந்தத் தடை நீக்கப்பட்டது.

பாபர்மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். பிறகு நீதிமன்றம் தடையை நீக்கியது. குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற, கோவையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று வணிகநிறுவனங்களைச் சூறையாடிய ஆர்.எஸ்.எஸ்சிற்கே தடையில்லையென்னும்போது புலிகள் மீது மட்டும் தடை விதிப்பது பைத்தியக்காரத்தனம்.

'ஒரு சீக்கியர் இந்திராகாந்தியைக் கொன்றுவிட்டதால் சீக்கியர்களை வெறுத்துவிட்டீர்களா?' என்று கேட்கும் ஈழத்தமிழர்களின் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. இந்தக் கேள்வியை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால் இந்திராவின் கொலைக்குப் பிறகு தில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றுகுவித்தனர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்.
'ஒரு ஆலமரம் சரியும்போது நிலம் அதிரத்தான் செய்யும்' என்று அதை நியாயப்படுத்தினார் காங்கிரஸ் அமைச்சர் சவாண். பிறகு அந்த குற்றம் நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது. நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியையும்தானே தடை செய்திருக்க வேண்டும்.

எனவே விடுதலைப்புலிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் புலிகள் மீதான தடையை நீக்கக் கோருவதும் அதற்காகப் போராடுவதுமே சரியாக இருக்கமுடியும்.

மேலும் காலகாலத்திற்கு நினைத்துக் கவலைப்பட ராஜிவ்காந்தியும் ஒன்றும் பெரிய தமிழினநலம்விரும்பியல்ல. போபர்ஸ் ஊழல், இந்துத்துவ பார்ப்பனீய ஆதரவு, மண்டல்கமிஷனைக் கொண்டுவந்ததால் பிஜேபி வி.பி.சிங் ஆட்சியை ரதயாத்திரையைக் காரணம் காட்டிக் கவிழ்க்க கொல்லைப்புற வேலைபார்த்தது, பிறகு நம்பிவந்த சந்திரசேகரையே நட்டாற்றில் கவிழ்த்துவிட்ட குள்ளநரித்தனம் இவையெல்லாம்தான் ராஜுவின் மொத்த உருவம்.


ராஜிவ் செத்துவிட்டதால் அவர் புனிதராகிவிட்டார். மேலும் இந்தியாவில் அரசு ஊழியர்கள் ரிட்டயராகும் வயதில்தான் அரசியல்வாதிகள் பிரதமர்களாகவும் குடியரசுத்தலைவர்களாகவும் வருவார்கள். இதனால் 40 வயது ராஜிவ்காந்தி 'இளம் தலைவராகி'விட்டார். தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் ராஜீவ் இறந்த ஆரம்பத்தில் கொஞ்சம் கவலைப்பட்டிருப்பார்கள். அதற்குப்பிறகுதான் உள்ளூரிலேயே ஏகப்பட்ட இழவுகள் விழுந்திருக்குமே, அதற்குக் கவலைப்பட நேரம் ஒதுக்கியிருப்பார்கள்.

எனவே ஈழத்தமிழர்களையும் ஈழப்போராட்டத்தையும் பார்த்து தமிழகத் தமிழர்கள் பயப்படவும் விலகவும் ஒதுங்கவும் ராஜிவ் கொலை காரணமில்லை. அதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கிறது. அது அரசின் ஒடுக்குமுறை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்?


புலிகளை ஆதரிக்கும் 'மாவீரர்கள்' எல்லாம் ஜெயலலிதா காலத்தில் எங்கே போயிருந்தார்கள்?. அருணாச்சலம் என்னும் கள்ளர்சாதி வெறியர் தமிழ்த்தேசியப் போர்வையில் இருந்தார். ஜெயலலிதா தமிழினவாதிகள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தவுடனே தான் நடத்திக்கொண்டிருந்த 'நந்தன்' என்னும் ஒரு குப்பைப் பத்திரிகையையும் நிறுத்திவிட்டார். இது பெரும்பெரும் மாவீரர்கள் வரை பொருந்தும்.
இளிச்சவாயன் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் இவர்கள் முக்குக்கு முக்கு ஈழ ஆதரவு பேசி கருணாநிதியின் வயிற்றில் புளி(லி?)யைக்கரைப்பார்கள். ஜெ ஆட்சிக்காலத்திலும் புலிகள் ஆதரவை ஓரளவிற்கு வெளிப்படையாகவும் உறுதியாகவும் வைத்தவர் என்றால் வைகோவைத்தான் சொல்ல முடியும். 'தென்னகத்துப் பிரபாகரன்' திருமாவளவன் பொடா சட்டம் தன்மீது பாயும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடனே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்னு தலைமையில் 'பொடா எதிர்ப்பு முன்னணி' என்று கூட்டமைப்பு ஆரம்பித்து சரண்டரானார். (இதில் வேடிக்கை என்னவென்றால் 'தமிழ் பேசும் சாதியினர் மட்டும்தான் தமிழர்கள்' என்பது திருமாவின் நிலைப்பாடு. ஆனால் புலியை ஆதரித்து நெடுநாட்கள் சிறையிலே இருந்தவர்கள் தெலுங்கு பேசும் சாதிகளைச் சேர்ந்த 'வடுக வந்தேறி'களான வைகோவும் தோழர் கோவை ராமகிருஷ்ணனும்)


இந்த 'மாவீரர்' புராணங்களைச் சொன்னால் அது நீண்டுகொண்டே போகும். இவர்கள் கட்சியின் அடிப்படை தமிழ்த்தேசிய விடுதலை அல்லது தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை. ஆனால் எங்காவது அது பற்றிப் பிரச்சாரம் செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. புலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தால் இங்கு அமெரிக்கக் கொடியை எரிப்பார்கள், சிங்களக் கொடியையும் எரிப்பார்கள். ஆனால் இவர்களின் எதிரியே இந்தியத் தேசியம்தான். ஆனால் இந்தியக் கொடியை எரிக்க மாட்டார்கள். ஏனென்றால் முந்தையக் 'குற்றங்களுக்கெல்லாம்' காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். பின்னதிற்கோ பாயும் 'தேசியப் பாதுகாப்புச் சட்டம்.

ஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். 'இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்' என்று.

சரி போகட்டும் தொப்புள்கொடி உறவு, ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள், நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் 'பத்துதடவை பாடை வராது...' என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும், அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா? அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா?
ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது?


மணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். 'தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி' என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் 'புரட்சிகர'க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் 'ததேபொகவிலிருந்து விலகியது ஏன்' என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.


ஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா, புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்)

இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு 'என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்' என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.


சரி, இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து, நிலமிழந்து, சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து, தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா?


தமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா? ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்?


எனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.
ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.


புலிகளை ஆதரிப்பது, ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.


எனவே தமிழக அரசோ, இந்திய அரசோ, தமிழ்த்தேசிய வீராதி வீரர், வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும், நிறுத்துங்கள்.

ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1

ஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.

குரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.

'தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்' என்ற பெயரில் ஒரு கட்டுரை 'திராவிடத்தமிழர்கள்' வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.
http://dravidatamils.blogspot.com/2007_01_01_archive.html

ஆனால் தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சுக்களை நீங்கள் இங்கே காணலாம்.

http://www.satiyakadatasi.com/?p=26

தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.

ஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமிஜெகதீசன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.

பெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.

'பெரியார் மய்யம்' என்றும் 'திராவிடர் மனித உரிமை அமைப்பு' என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா, மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.

ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.

நெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான 'கொலைமுயற்சி'யிலிருந்து அவரைக் காப்பாற்றிய 'பெருமை'யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் 'முருகனுக்கே' வெளிச்சம்.

ஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் 'பிரபாகரன் ஒரு தலித்' என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.

மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது 'தமிழர்தேசிய இயக்கம்'. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா? தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு 'மாவீரன்' போராளி' என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.

திருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குறித்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.

ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள்(blackpanther) அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் (dalit panther of india) அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் 'விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்' என்று சொல்லிவருகிறார்.

தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு திருமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் 'தமிழ்' அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.

திராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன?) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.

ஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.





குரல் 2 : ஈழப்பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும்.

இந்தக்குரலை தீவிர இந்தியத்தேசிய ஆதரவாளர்களும் முன்வைக்கிறார்கள் (இலங்கையையே இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி அவ்வப்போது காமெடி பண்ணுவதுண்டு) சமயத்தில் புலிகளும் புலி ஆதரவாளர்களும் கூட இப்படி அபத்தமாகக் குரல் எழுப்புவார்கள்.

ஏற்கனவே இந்தியா 'தலையிட்டு' ஏற்பட்ட குழப்பங்களும் படுகொலைகளும் பாலியல் பலாத்காரங்களும் போதாதா? ஈழப்பிரச்சினையில் இன்னொருநாடு தலையிடுவது என்பதே அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவநலன்களைச் சார்ந்ததே.

இந்தியா என்பது ஒரு தெற்காசியப்பேட்டைரவுடி. அது ஈழவிடுதலைக்கு உதவினால் கூட ஈழத்தை தன் காலனிநாடாக்கவே முயலும். அதுவும் இப்போது உலகமயமாக்கல் காலத்திற்குப்பின் முற்றமுழுக்க அமெரிக்க அடிமையாய் மாறிப்போன இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுமுதலாளிகளுக்கும் ஒரு புதிய சந்தை கிடைக்குமே தவிர அது ஈழப்போராட்டத்தின் தற்கொலையாகவே முடியும்.
(தொடரும்...)

ஈழத்தோழர்களிடம் சூடுபட்ட 'சைவ'ப்பூனை



'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' - வள்ளலார் சி.ராமலிங்கர்

உணர்வுகள் என்னும் வலைப்பதிவின் எழுத்துக்களில் வெளிப்பட்ட சைவ வெள்ளாளப் பாசிசக்கூறுகளை அடையாளப்படுத்தியிருந்தேன். அதற்குப் பதில் என்னும் பெயரில் ஆரூரான் ஒரு கதையொன்று விரித்துள்ளார்.
இனி உளறல்களுக்குப் படிக்க...
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_19.html
அந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் முக்கியமானவை. குறிப்பாக சார்வாகனின் பின்னூட்டம் என் மனதைக் கவர்ந்தது.
இதில் குறிப்பிலும் குறிப்பான ஒன்று உணர்வுகளின் உளறல்களை மறுத்து வாதிட்டவர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள். ஒரே ஒரு ஈழத்தமிழர் கூட உணர்வுகளின் சாதியச் சதிராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பது உண்மையாகவே நெகிழ்வாயிருக்கிறது.
/ Ramani said... /சோழ இளவரசனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு, பிரபாகரன் எதற்காக சோழனின் புலிக்கொடியைத் ஈழத்தமிழர்களின் விடுதலையின் கொடியாக்கினார், அது தமிழ் வீரத்தின் அடையாளம், இப்பொழுது நீங்கள் சோழ இளவரசனை மட்டும் அவமதிக்கவில்லை அவனது புலிக்கொடியையும் சேர்த்துத் தான்.
ஆறுமுகநாவலரின் சாதி அட்டகாசம் மட்டும் கண்ணுக்குத் தெரிகின்ற ஒரு ஈழத்தமிழனுக்கு "யாழ்நகர் பிறந்து தமிழ்காத்தான் எங்கள் நாவலன் இறவாப் புகழ் போர்த்தான்" என்று புகழப்படும் நாவலரது தமிழ்த் தொண்டுகளை உணர முடியவில்லை என்பது கவலைக்குரியது, /
நாவலரின் தமிழ்த்தொண்டை மறுப்பதற்கில்லை. அதானாலேயே, "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலன் பெயர் கொடுத்தனுப்பியதாக அலட்டிக்கொள்ளும் சீமான்களோடு இன்னமும் கருவிக்கொண்டிருக்கவேண்டியிருக்கின்றது (சேச்சே எல்லாம் உவே சாமிநாதருடன்தான் சிலருக்கு இங்கே ஆரம்பிக்கவேண்டும் ;-)) ஆனால், அவருடைய சாதி வெறியை அதற்காக அதேயளவு மறுப்பதற்கில்லை. அவரின் சீர்திருத்த சைவத்தின் பண்பாட்டுக்குறிகள் சீர்திருத்துவ கிறீஸ்துவத்தினை (புரொட்டஸ்தாந்து) அதன் வழியிலேயே எதிர்க்கும் அதே வேளையிலே அவருடைய வேளாளவிழுமியங்களை, தமிழகத்திலே பிராமணர்களின் விழுமியங்களே அளவுகோல்மட்டத்து சமூகவிழுமியக்கோவை ஆனதுபோல ஆக்கியதென்பதும் உண்மை. நாடகங்கள், கூத்துகளைக் குறித்து அவரின் பார்வை எங்கிருந்து வந்தது? (சிவத்தம்பி யாழ்ப்பாணம் குறித்து எழுதிய நூலிலே இதைச் சுட்டியிருக்கின்றார்).
சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன். எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டின் அரசர்களுக்கு இலங்கையின் சிங்கள அரசர்களோடுதன் மணக்கொடுக்கல்வாங்கல்கள் இருந்தன. தொண்டைக்காஞ்சியான், மதுரைப்பாண்டியன், காவேரிச்சோழன் எவனையும் எடுத்துப்பாருங்கள். ஆனால், ஈழத்தமிழர்களின் பெயர்களோடு இணைந்திருப்பது, அவ்வரசர்களின் படையாட்களாக வந்தவர்களின் சமூகப்பெயர்களே. வன்னிமை தொடக்கம் ஒவ்வொன்றாய்த் தேடுங்கள். போங்கள். பிரபாகரன் புலிக்கொடியை ஈழக்கொடியாக்கினால், அதற்காக சோழ இளவரசர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொடர்பிருக்கிறதென்று அர்த்தமா? அப்படியாகப் பார்த்தால், வரதராஜப்பெருமாள் மாகாணசபையிலே நந்திக்கொடியை ஏற்றியதைப் பார்த்திருக்கிறேன். அப்போது ஈழத்தமிழருக்கும் மகேந்திரபல்லவனுக்கும் பேரர் பூட்டன் உறவா? செவிவழிக்கதைகளையும் ஆதாரத்துடனான வரலாற்றையும் கொஞ்சம் உமி, அரிசி பிரித்து நாம் பேச வேண்டாமா? மருமக்கள் முறையிலே சொத்தினைப் பிரித்தல், உணவுப்பழக்கவழக்கம், உடைப்பழக்கவழக்கம் உட்பட்ட பண்பாடு, சொற்பயன்பாடு எல்லாவற்றையும் பார்த்தால், சேரருக்கும் மலையாளிகளுக்குமே ஈழத்தவர் நெருங்கி வருவார். ஈழவருக்கும் ஈழத்தவருக்கும் ஒரே அடியா என்று ஓர் ஆய்வு செய்து பார்க்கவேண்டாமா? குமரி எல்லை கிட்டவா? காவேரித்துறை கிட்டவா? ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தினாலே பின்பட்டவர்கள். வழக்கம்போல, அவர்களை நெடுங்கால ஈழச்சரித்திரத்துள்ளே இழுக்காதீர்கள். அவர்களைச் சோழரோடும் தொடர்பு படுத்தாதீர்கள்.
இப்பின்னூட்டம் தோன்றுமென நம்புகிறேன். அல்லாவிடினும், கவலையில்லை.
February 19, 2007 9:19 PM சீலன் said... தலைவர் பிரபாகரன் கூட ஐயர் வைத்து அருந்ததி பார்த்துத் தான் திருப்போரூரில் திருமணம் செய்து கொண்டார்,
அது 84 இல்.. 2007 இல் ஐயரே இல்லாமல் தான் புலிகளிடத்தில் திருமணம் நடக்கின்றது. காலத்திற்கு ஏற்ப மாற பிரபாகரனால் முடிகிறது. ஆனால் ஒரு சிலரால்.... (தில் இருந்தால் இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கவும்)
February 19, 2007 9:21 PM Anonymous said... Another very good article. I understand you might have done heavey home work. Nice effort, well said...
February 19, 2007 9:27 PM கரு.மூர்த்தி said... மிகமிக ஆழ்ந்த அருமையான கட்டுரை , மிதக்காமல் நிதானமாக இருக்கும் போது அவர் படிக்கட்டும் , திரும்ப வருகிறேன் .
February 19, 2007 9:29 PM தமிழ்நதி said... உணர்வுகள்! நீங்கள் ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை ஈழத்தமிழர்கள் அத்தனை பேருடைய கருத்தும் என்ற தொனிப்பட வைக்கிறீர்கள். அது சரியல்ல. தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துண்டு. குறிப்பாக,
"ஈழத்தில் எந்த முஸ்லீமும் தன்னைத் தமிழனாகக் கருதுவதில்லை. அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அவ்வளவுதான்."
"புத்தர் எங்களுக்குப் பாசிசத்தின் அடையாளம்"
"நாற்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழர்கள் விட்டொழித்த சாதீயத்தையும்"
"அதை விட எங்களின் அழுக்கை மற்றவர்களிடம் காட்டக் கூடாதென்ற மரியாதை கூடத் தெரியவில்லை."
போன்ற அபத்தமான கருத்துக்களுடன் ஈழத்தமிழர் என்பதற்காக எல்லோரும் உடன்படுவார்கள் என்பதில்லை.
உங்களுக்கெதிராகக் கருத்துச் சொல்பவர்களை நீங்கள் வசைபாடுவது வழமை என்பதறிந்தும் பேசாதிருக்க முடியவில்லை. காரணம் உங்கள் கருத்துக்களை நீங்கள் ஒரு இனத்துக்கேயுரியதெனப் பொதுமைப்படுத்துகிறீர்கள். அது பிடிக்காமல்தான் இந்தப் பின்னூட்டம்.
February 19, 2007 9:29 PM unarvukal said... //சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள்.//
திரு.ரமணி,
இப்பொழுது நேரமாகி விட்டது நாளைய பதிவைப் பாருங்கள்.
நன்றி.
February 19, 2007 9:35 PM unarvukal said... தமிழ்நதி,
என்னுடைய கருத்துக்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தானிருக்குமல்லவா, முடிந்தால் உங்களின் அனுபவத்தை எதிர்க்கருத்தாக எழுதுங்கள்.
February 19, 2007 9:38 PM Ramani said... பார்த்துக்கொண்டிருக்க எனக்கும் நேரமில்லை ராசா. விரும்பிய நேரத்திலே போடுங்கள். எனக்கும் நேரம் கிடைத்தால் பாக்கிறேன்.
February 19, 2007 9:39 PM Anonymous said... This post has been removed by a blog administrator. February 19, 2007 9:48 PM ஏமாறாதவன் said... அய்யா,
தங்கள் பதிவுகள் உணர்வுகள் என்னும் வைரம் பூசிய உண்மை என்னும் வாளாக இந்த ஆதிக்கவெறியரகளை தாக்குகிறது.
தங்கள் தமிழக ஈன சாதி ஆதிக்க கட்டுப்பாட்டுக்காக இவர்கள் பார்ப்பன, தலித் முஸ்லிம் என்று சாதி கூறு போட்டு அரசியல் செய்கிறார்கள். இந்த மிதக்கும் அபத்தங்களை சாக்கடையில் தூக்கியெறியுங்கள். ஈழத்து மக்களின் சமுதாய சமத்துவ பாண்மையும் உணரவும் ஏற்கவும் இந்த "வெளி"க்கி களுக்கு தெரியாது. அல்ல.. புரியாது
February 19, 2007 9:57 PM ரூபன் said... //Ramani said... பார்த்துக்கொண்டிருக்க எனக்கும் நேரமில்லை ராசா. விரும்பிய நேரத்திலே போடுங்கள். எனக்கும் நேரம் கிடைத்தால் பாக்கிறேன்.//
What kind of attitude is this? You asked him the question and now you behave like this. """"சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்.""""
I think aaruran live in Canada and it is midnight there, that's why he probably can't answer to you now.
February 19, 2007 10:09 PM Ramani said... /What kind of attitude is this? You asked him the question and now you behave like this. """"சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்.""""
I think aaruran live in Canada and it is midnight there, that's why he probably can't answer to you now/
ruban or whover you are, why don't you use the same logic to me?
February 19, 2007 10:37 PM சார்வாகன் said... இந்த பின்னூட்டத்தை நீர் போடலாம் போடாமல் விடலாம் ஆனால் நான் ஒன்று கேட்கிறன் உமக்கு ஈழம்தொடர்பான தற்போதைய நிலவரங்கள் தெரியுமா? பிரபாகரன் அய்யர் வைத்து தாலி கட்டினாப்போல அது சரியா(அவர் செய்தாப்போல அது சரியெண்டிறீரோ)? அட அவரே அது பிழை எண்டு தன்ர போராளிகளுக்கெல்லாம் உறுதி மொழி எடுத்துக்கொண்டு தாலிகட்டினா சரி எண்டிறார் நீர் எண்ணண்டா புலிகளுக்கு சைவ முத்திரை குத்திக்கொண்டிருக்கிறீர்.
நீங்கள் யாழ்ப்பாணத்து உயர்சைவவேளாள குல மனோநிலையிலை நிண்டு கொண்டு கதைக்கிறதை கைவிடுங்கோ சரியொ.
முஸ்லிம்கள் தமிழற்ற முதுகில குத்தினவங்கள் சரி. தமிழர் ஒரு சொப்பின் பாக்கோட முஸ்லிம்களை ஓட ஓட விரட்டேல்லயோ அப்ப அதை எண்ணண்டு சொல்லுவீர்.அப்ப நீர் பேசிறது தமிழ் இனவாதம் எண்டு சொன்னால் ஏற்றுக்கொள்ளுவீரோ? நீர் சொன்னாலும் சொல்லாட்டியும் முஸ்லீம்கள் ஒரு தனிப்பட்ட இனம்.நீர் உப்படி தமிழ் இனவாதம் பேசிக்கொண்டிருந்தார் எல்லா இனத்தவனும் அவனவன் இனவாதம் கதைப்பது சரியெண்டாகும் தெரியுமோ?
நீர் உம்மட தனிப்பட்ட கருத்துக்களை எல்லாம் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் கருத்தெண்டிறமாதிரி சொல்லி எல்லா ஈழத்தமிழரயும் சிந்திக்கதெரியாதவங்கள் எண்டு நினைக்கப்போறாங்கள் மற்றவங்கள்.
திராவிடத்தில ஈழத்தமிழருக்கு உடன்பாடும் நம்பிக்கையும் இல்லையோ இல்லாமலோ பின்ன திராவிடன் இலங்கேஸ்வரனை ஆரியன் இராமன் வெல்லுறதோ என்று இராமாயணத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கிறார்கள் அங்கே நீர் எத்தனையாம் ஆண்டு.இருந்தனீர்? சும்மா கேள்விப்படுகிற மாய வதந்திகளை வைச்சக்கொண்டு கதைக்க வெளிக்கிடக்கூடாது.அல்லது நீர் எதன்வாயிலாக அங்க நடக்கிற விசயங்களை அறிஞ்சு கொள்ளுறனீர்? இதற்கான விடைகளை நீர் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டால் தாரும் நான் தங்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
சைவத் தமிழர் எண்டிறீர் புலிகள் பொங்கல் விழாவைத்தவிர வேறேந்தப் பண்டிகையையும் ஏற்றுக்கொள்ளுறேல்லை எண்டாவது தெரியுமொ உங்களுக்கு சும்மா சைவக்கதையும் எங்களிடம் சாதி ஒழிஞ்சு போச்சு தெண்டு மேற்பூச்சுக்களை நம்பி வெளிக்கிடாதேஙகோ கதைக்க.
February 20, 2007 12:27 AM தமிழ்நதி said... "என்னுடைய கருத்துக்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தானிருக்குமல்லவா, முடிந்தால் உங்களின் அனுபவத்தை எதிர்க்கருத்தாக எழுதுங்கள்."
நான் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அபத்தங்களை விபரித்தால் அன்றேல் விரிவாக எழுதினால் அது'விரிவான அபத்தமாகவே'இருக்குமல்லால் வேறொன்றுமல்ல. நீங்கள் ஈழத்தமிழர்களிடையே சாதீயப்பிரச்சனை இல்லை என்பதும், முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்பதும், புத்தர் பாசிசத்தின் அடையாளம் என்பதும், உள்ளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளிக்காட்டக் கூடாது மூடிவைக்க வேண்டும் என்பதும்... அது உங்களுடைய அனுபவத்தினூடே பெற்றது என்பதும்... என்ன சொல்ல? நல்லவேளை எனது அனுபவங்கள் அபத்தமான புரிதல்களுக்கு, முடிவுகளுக்கு இட்டுச்செல்லவில்லை என்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.
தவிர, இந்த விளம்பர விளையாட்டுக்களில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. நன்றி. ஒரேயொரு கேள்வி. பெரும்பாலும் உங்களுக்குச் சார்பாகப் பின்னூட்டமிடுகிறவர்களின் பெயர்களைத் தொடர்ந்தால் url not found என இல்லாத ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது எப்படி?
February 20, 2007 1:34 AM unarvukal said... //ஒரேயொரு கேள்வி. பெரும்பாலும் உங்களுக்குச் சார்பாகப் பின்னூட்டமிடுகிறவர்களின் பெயர்களைத் தொடர்ந்தால் url not found என இல்லாத ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது எப்படி?//
தமிழ்நதி,
ஒவ்வொரு பின்னூட்டத்திற்குப் பின்னாலும் யாரோ பின்னணியில் உள்ளனர் என்பது மட்டும் உண்மை. தனக்குத்தானே பின்னூட்டம் இடும் பழக்கம் என்னிடம் இல்லை. பின்னூட்டங்களைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை.
யாருடனும் போட்டிக்காகவும், பிரபலமடையவும் நான் பதிவுகள் செய்வதில்லை. உம்முடைய நோக்கம் அதுபோல் தானிருக்கிறது. என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது.
நன்றி.
February 20, 2007 5:52 AM bala said... //என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது//
உணர்வுகள் அய்யா,எனக்குத் தெரிந்து உங்களுக்கு மட்டுமல்ல,நிறைய பேருக்கு இந்த சிறுபிள்ளைத்தனம் கிடையாது,லக்கியைத் தவிர.ஆனா லக்கி தான் சிறு குழந்தை ஆயிற்றே,அதனால் பரவாயில்லை.
பாலா
February 20, 2007 6:08 AM Hanuman said... //யாருடனும் போட்டிக்காகவும், பிரபலமடையவும் நான் பதிவுகள் செய்வதில்லை. உம்முடைய நோக்கம் அதுபோல் தானிருக்கிறது. என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது.//
சரியான வாதம்கிறுக்கன் எல்லாம் பின் நவீனதுவம் பீ மலம் கழிசடை போன்ற வார்த்தையை போட்டு எழுது நீயும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லி கொடுத்து திரியாரானுங்க.
ஆருரான் அடிச்சி ஆடுங்க
February 20, 2007 6:42 AM கொழுவி said... //நாற்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழர்கள் விட்டொழித்த சாதீயத்தையும்//
நாற்பது வருடங்களுக்கு முன்பு ஈழத்தை விட்டு வெளியேறியவர்களின் குழந்தைகள் அவ்வாறு தான் சொல்லுவார்கள். சமாதான காலங்களிலாவது ஈழத்துக்குப் போய் நிலவரங்களை அறிந்து வந்திருக்கலாம். இணையத்தில் ஈழத்தை அறிந்தவர் பாடு இதுதான்.(தில் இருந்தால் இந்தப் பின்னூட்டத்தையும் விடவும்.)
February 20, 2007 10:07 AM unarvukal said... பின்னூட்டங்களைத் திருத்தும் வழி தெரியவில்லை. அதனால் தயவுசெய்து கடுஞ்சொற்களை உங்கள் பின்னூட்டத்தில் பாவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
February 20, 2007 10:23 AM Hanuman said... //பின்னூட்டங்களைத் திருத்தும் வழி தெரியவில்லை. அதனால் தயவுசெய்து கடுஞ்சொற்களை உங்கள் பின்னூட்டத்தில் பாவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.//
என் முதல் பின்னோட்டத்தை இது குறிப்பதாயின் ஒரு விளக்கம்
தமிழ்நதியின் எழுத்தை மெருகேற்ற இந்த மிதக்கும்வெளி(?) பீ குசு மலம் எல்லாம் போட்டு எழுத்தில் கடுகை தாளிப்பது போல் இருக்கவேண்டும் என்று அறிவுரை(?) சொன்னதை நான் குறிப்பிட்டேன்
.
/


மற்றபடி உணர்வுகளை ஆதரித்து ஜால்ரா போடவர்கள் எல்லாம் எல்லோருடைய பதிவிலும் போய் சாதியத்திற்கும் பார்ப்பனீயத்தீரற்கும் ஆலோலம் போடும் தமிழ்நாட்டுப் பார்ப்பனக்குஞ்சுகள். இவர்கள் சாதிவெறியர்களை ஆதரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

அதிலும் ஹனுமான் என்னும் ஒரு இந்துத்துவ வானரம் தன்பாட்டிற்கு வந்து குரங்காட்டம் ஆடியிருக்கிறது. தமிழ்நதியின் எழுத்துகக்ளை நான் தவறாக வழிநடத்துவதாகவும் கிறுக்கன் என்றும் பலவாறாகப் பிதற்றியிருந்தது.
பெயரிலி, மதிகந்தசாமி, நிவேதா, வசந்தன், அற்புதன், சயந்தன் போன்ற பல தனித்துவமிக்க பதிவாளர்களைப் போலவே தனக்கென எழுத்தாளுமை கொண்டவர் தமிழ்நதி. அவரது பல பதிவுகள் ஈழத்தமிழர்களையும் தாண்டி படித்துப் பாராட்டப்பட்டவை. மேலும் தமிழ்நதியின் எல்லாப் பதிவுகளையும் நான் வரன்முரறையின்றிப் பாராட்டியதுமில்லை. அவரது பல கவிதைகள் வெறும் ஸ்டேட்மேண்டாக முடிந்துபோகிற போதாமை போன்ற பலகுறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

குறிப்பாக அவரது 'அந்த எசமாடன் கேக்கட்டும்' சிறுகதை விளிம்புநிலையிலிருந்து பேசியதாலேயே அதுபற்றி எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எதிர் அழகியல் தொடர்பான அந்தக் கட்டுரையைப் பலரும் பாராட்டவே செய்தனர்.ஆனால் நான் தமிழ்நதியின் படைப்பொன்றைப் பாராட்டியதாலேயே அவர் சாதியை எதிர்க்கிறார் என்கிற ரீதியில் கிறுக்கத்தனமாய் எழுதிச்சென்றிருக்கிறது அனுமான் குரங்கு.

தமிழ்நதி சொன்னதே போலவே அதன் வால் யூ.ஆர்.எல்லைத் தொடர்ந்துபோனால் அது இருக்குமிடமே தெரியவில்லை. வரலாற்றின் துயர்மிக்கக் காலங்களில் ஈழத்தில் தன் வாலால் தீ பற்ற வைத்தது அனுமான் குரங்கு. அந்த ஈழத்து நெருப்பின் மிச்சமும் நந்தனை எரித்த சைவ நெருப்பின் மிச்சமும் ஜோதியில் அய்க்கியமாக ஜோராய் எரிகிறது சா'தீ'. அண்ணாமலைக்கு அரோகரா.

சரி இனி உணர்வுகளின் உளறல்களைப் பார்ப்போம்.

/இவருடைய வெறுப்பெல்லாம் இந்து மதத்தில் தான், அப்படியென்றால் இவர் யாராக இருப்பார், இவருடைய உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. இந்த மாதத்தில் இத்தனை தமிழர்களை மதமாற்றம் செய்தேன் எனக் கணக்குக் காட்டாது விட்டால், இவருக்கு வெளிநாட்டிலிருந்து மாதாந்தம் வரும் காசோலை சொல்லாமல், கொள்ளாமல் நின்று விடலாம். :)/

ஆகமொத்தம் நான் முஸ்லீம் என்றே முடிவுகட்டிவிட்டார் ஆரூரன்பிள்ளை(யார்?). நான் பிறந்த சாதியையும் மதத்தையும் நன்கு அறிந்த நெருங்கிய நண்பர்கள் இதற்கு வாயால் சிரிக்கமாட்டார்கள்.

/பார்ப்பனர்கள் தமிழர்களா இல்லையா என்று நான் ஏன் நிரூபிக்க வேண்டும், பார்ப்பனர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அவர்களுக்குப் பின்னால் வந்த முஸ்லிம்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளும் போது, அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? /

தன் பதிவுமுழுக்க முஸ்லீம்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்றே சைவத்திமிரில் எழுதிச்செல்கிறார். உங்கள் இந்துப் பார்ப்பனீய வெள்ளாள சாதிக்கொடுமை தாங்கமாட்டாமல்தான் முஸ்லீம்களாய் மாறியவர்கள் பறையரும் பள்ளரும் அருந்ததியரும். எங்கோ கனடாவில் அமர்ந்துகொண்டு எங்கள் முஸ்லீம் சகோதரர்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறீர்களே, இதற்குப் பெயர்தான் வெள்ளாளக் குசும்பா? (எல்லாப் புலம்பெயர்ந்த தமிழர்களையும் இழிவுபடுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. அப்படி உங்களைப் புண்படுத்துவதாகக் கருதினால் மன்னிக்க வேண்டுகிறேன். )

/மிதக்கும் ஐயா, எங்களுக்கும் பிராமணர்களுக்கும் பிரச்சனைகளில்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். /

அதுசரி உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? மதுரை ஆதினத்திற்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன பெரிய சண்டை வந்துவிடப் போகிறது. ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது. அதெற்கெல்லாம் சேர்த்துத்தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறீர்களே?

/பசும்பொன் தேவரின் நினைவு மண்டபத்துக்கு ஒரு மைல் தள்ளி நின்றாவது மிதக்கும் அண்ணாச்சியால் சாதியை எதிர்த்து துண்டுப் பிரசுரம் கொடுக்க முடியுமா? /

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடந்தபோது திராவிடர்கழக மாணவரணி சார்பில் வாயிற்கூட்டம் நடத்திக் கள்ளர்வெறியர்களிடம் கல்லடி பட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு. சிங்களக் காடையர்களுக்கெதிராக துப்பாக்கி தூக்கி களத்தில் இறங்கிய அனுபவங்கள் உங்களுக்கு உண்டா?

/ஈழத்தமிழர்களின் தமிழ்மரபுக்கு அடிப்படை பெளத்த மரபென்று, யாராவது நல்ல மது வெறியிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கூடச் சொல்லிப் பாரும், அவரே காறித்துப்பி விட்டு எழுந்து போய்விடுவார்/

உறுபசி போக்க உணவுப்பாத்திரம் சுமந்து திரிந்த மணிமேகலையை, போரை மறுத்த அசோகரை, தியானத்திற்கு இடையூறாய் இருக்கிறதென்று இமைகளை வெட்டியெறிந்த தம்மகீர்த்தியைத் தந்தது பவுத்தமரபு. ஆனால் உங்கள் சைவமரபோ பிள்ளைக் கறியை ருசித்து அடியாரின் மனைவியைத் தனக்குக் கூட்டிக் கொடுக்கக் கேட்ட 'அற்புத மர'பு.

ஏதோ சந்திரிகா செய்யும் பாவங்களுக்கெல்லாம் சங்கமித்திரைதான் காரணம் என்று சொல்வதுபோல இருக்கிறது உங்கள் வாதம். ஜே.வி.பி ஒரு இனவெறி பிடித்த அடிப்படைவாத இயக்கமாக இருக்கிறது என்பதற்காக காரல்மார்க்சைக் குற்றம் சொல்ல மடையனுக்குத்தான் தெரியும். புத்தரை மறுத்து சைவமரபை வலியுறுத்த விரும்புபவனுக்கு மதுவெறி தேவையில்லை. சைவ வெள்ளாள சாதிவெறி போதையே போதும்.

கடைசியாக நீங்களும் நானும் பேசும் மொழி ஒன்றாக இருந்து தொலைப்பதனால் ஒரு தனிப்பட்ட கேள்வி. சகமனிதனையே மனிதனாக அங்கீகரிக்காத இந்துமதத்தையும் சைவ வெள்ளாள சாதித்திமிரையும் தூக்கிப் பிடிக்கும் உங்களுக்கு சிங்களப்பேரினவாதத்தை எதிர்ப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?