ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1
ஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.
குரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.
'தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்' என்ற பெயரில் ஒரு கட்டுரை 'திராவிடத்தமிழர்கள்' வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.
http://dravidatamils.blogspot.com/2007_01_01_archive.html
ஆனால் தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சுக்களை நீங்கள் இங்கே காணலாம்.
http://www.satiyakadatasi.com/?p=26
தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.
ஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமிஜெகதீசன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.
பெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.
'பெரியார் மய்யம்' என்றும் 'திராவிடர் மனித உரிமை அமைப்பு' என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா, மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.
ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.
நெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான 'கொலைமுயற்சி'யிலிருந்து அவரைக் காப்பாற்றிய 'பெருமை'யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் 'முருகனுக்கே' வெளிச்சம்.
ஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் 'பிரபாகரன் ஒரு தலித்' என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.
மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது 'தமிழர்தேசிய இயக்கம்'. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா? தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு 'மாவீரன்' போராளி' என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.
திருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குறித்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.
ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள்(blackpanther) அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் (dalit panther of india) அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் 'விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்' என்று சொல்லிவருகிறார்.
தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு திருமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் 'தமிழ்' அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.
திராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன?) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.
ஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.
குரல் 2 : ஈழப்பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும்.
இந்தக்குரலை தீவிர இந்தியத்தேசிய ஆதரவாளர்களும் முன்வைக்கிறார்கள் (இலங்கையையே இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி அவ்வப்போது காமெடி பண்ணுவதுண்டு) சமயத்தில் புலிகளும் புலி ஆதரவாளர்களும் கூட இப்படி அபத்தமாகக் குரல் எழுப்புவார்கள்.
ஏற்கனவே இந்தியா 'தலையிட்டு' ஏற்பட்ட குழப்பங்களும் படுகொலைகளும் பாலியல் பலாத்காரங்களும் போதாதா? ஈழப்பிரச்சினையில் இன்னொருநாடு தலையிடுவது என்பதே அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவநலன்களைச் சார்ந்ததே.
இந்தியா என்பது ஒரு தெற்காசியப்பேட்டைரவுடி. அது ஈழவிடுதலைக்கு உதவினால் கூட ஈழத்தை தன் காலனிநாடாக்கவே முயலும். அதுவும் இப்போது உலகமயமாக்கல் காலத்திற்குப்பின் முற்றமுழுக்க அமெரிக்க அடிமையாய் மாறிப்போன இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுமுதலாளிகளுக்கும் ஒரு புதிய சந்தை கிடைக்குமே தவிர அது ஈழப்போராட்டத்தின் தற்கொலையாகவே முடியும்.
(தொடரும்...)
சுகுணா,
ஈழம் பற்றிய அரசியல் கட்டுரை அருமை. ஈழம் பற்றி பேசுவதும் தமிழக தலைவர்களுக்கு ஆதயத்தை தருவதாக தான் உள்ளது. தமிழ்நதியின் சமீபத்திய பதிவை படிக்கும் போது தமிழக ஆட்சிகள் புலம் பெயர்ந்து வரும் ஈழத்து மக்களுக்கு வாடகைக்கு விடு கூட கிடைக்க இயலாத அளவு 'இந்திய தேசிய' சோதியில் கலந்ததன் தாக்கம் வெளிப்படுகிறது.
ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள்(blackpanther) அமைப்பு??
///இந்தியா என்பது ஒரு தெற்காசியப்பேட்டைரவுடி. அது ஈழவிடுதலைக்கு உதவினால் கூட ஈழத்தை தன் காலனிநாடாக்கவே முயலும். அதுவும் இப்போது உலகமயமாக்கல் காலத்திற்குப்பின் முற்றமுழுக்க அமெரிக்க அடிமையாய் மாறிப்போன இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுமுதலாளிகளுக்கும் ஒரு புதிய சந்தை கிடைக்குமே தவிர அது ஈழப்போராட்டத்தின் தற்கொலையாகவே முடியும்.///
நீங்கள் எதன் அடிப்படையில் இந்த வரிகளை சொன்னீர்கள் என புரியவில்லையே!
ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள்(blackpanther) அமைப்பு
He is too drunk to differentiate between africa and usa.compared to the nonsense he writes this factual
error is nothing.Does he know that
Nedumaran gave up nationalist politics by mid eighties.Had he
continued in congress he could have
got cabinet minister post or could have become a MP or TNCC president.
He is steadfast in his support for the cause of Eelam since early 80s.
He is a theist and respects Periyar
and supports OBC reservation.Whatever may be his faults and shortcomings his concern
for Tamils and committment to the cause of Eelam is beyond doubt. Floating 'intellectuals' can never
understand or appreciate that. They
are keen to score petty points in discussions than to find any solution or take a position in the
Eelam issue.
//நீங்கள் எதன் அடிப்படையில் இந்த வரிகளை சொன்னீர்கள் என புரியவில்லையே//
கார்மேகராஜா அய்யா,
ஆமாம்,இந்த வரிகளை மட்டும் அடிப்படை உண்மை இல்லாம சொல்லியிருக்காராக்கும்.எப்பவுமே அப்படித்தான்.ஏதோ,அப்பப்போ, பெரியார் பெரியார் னு கோஷம் போடுவார்.அதுக்காக ,திரூ,கார்மேகராசா,குழந்தை லக்கி போன்ற தெய்வப்பிறவிங்களெல்லாம் வந்து, இவருக்கு ஜல்லி அடிப்பாங்க,இவரும் உச்சி குளிர்ந்து, ஒரே மூச்சுல நூறு பதிவு போடுவார்.மொத்தத்தில வேலை இல்லாத கும்பல்.
பாலா
வெளியே மிதக்கும் அய்யா,
அருண் என்ற நாதாரிப்பய மவன் உங்களை இங்கே அவன் ஜாதிக்காக செம வாங்கு வாங்கி இருக்கிறான் ஐயா.
/நீங்கள் எதன் அடிப்படையில் இந்த வரிகளை சொன்னீர்கள் என புரியவில்லையே/
இப்போதுள்ள உலகமயமாக்கல் சூழல், காஷ்மீரில் இந்தியாவின் ராணுவ வெறி, அமெரிக்கா ஈராக்கில் ஆடிய ரத்தவிளையாட்டு, மூன்றாமுலகநாடுகள் வெறும் சந்தைகளாக மட்டும் கணக்கிடப்படும் அவலம் அனைத்தையும் இணைத்துப்பாருங்கள் தோழர்.
/Does he know that
Nedumaran gave up nationalist politics by mid eighties.Had he
continued in congress he could have
got cabinet minister post or could have become a MP or TNCC president.
He is steadfast in his support for the cause of Eelam since early 80s.
He is a theist and respects Periyar
and supports OBC reservation.Whatever may be his faults and shortcomings his concern
for Tamils and committment to the cause of Eelam is beyond doubt. Floating 'intellectuals' can never
understand or appreciate that. They
are keen to score petty points in discussions than to find any solution or take a position in the
Eelam issue.
/
அதெல்லாம் சரி. இரண்டு அடிப்படையான கேல்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.
1. நெடுமாறன் தமிழ்த்தேச விடுதலைக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்?
2. இங்குவாழும் ஈழ அகதிகளுக்காக எதைக் கிழித்திருக்கிறார்?
வாசித்தேன். பாவம் அவருக்கு இந்தியத்தேசியப் பைத்தியம் பிடித்திருக்கிறது. 'பக்தி வந்தால் புத்தி போகும்' என்று பெரியார் சொன்னது தேசபக்தியையும் சேர்த்துத்தான். கீழ்க்கண்ட அவரது கூற்றுக்களே அவரது ஜாதிய விகாரங்களை விளக்கப் போதுமானவை.
/இலவச மின்சாரம் இலவச இனைய இணைப்பு கிடைத்தவுடன் தன் மன விகாரங்களை சொல்லி கொண்டு திரியும் இது போல ஆட்களின் மறுபதிப்பு செய்வ்தால் என்ன பயன்?? /
/வாக்கு வங்கியும், மக்களின் ஆதரவுமில்லாத திராவிடத் தமிழர்கள் இப்படியான ஆளில்லாத ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி பம்மாத்துக் காட்டுவதால் ஈழவிடுதலைப் போராட்டமும், திராவிடத் தமிழர்களின் பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்புடன் கூடிய தலித்துகளின் போராட்டத்தின் அங்கமாகக் கருதப்படும் அபத்தம் ஏற்படுத்தப் பட்டு விடுகிறது, அதனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவு ஈழவிடுதலைக்கு கிடைக்காமல் போய்விடும் ஆபத்து ஏற்படும் என்று சொல்வதை விடத் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள இந்தியாவின் பல மாநிலங்களிலும் அப்படியானதொரு கருத்து ஏற்கனவே ஏற்பட்டு விட்டது என்பது தான் உண்மை.
/
/என்றோ அழிந்து போன ஜாதி வெறுபாடுகளை இனையட்தில் மறு பதிவு செய்து பிராமணம் தேவர் கள்ளர் தலித் வெள்ளாளர் என்று தமிழர்களுக்குள்ளுள் பிரிவு ஏறபடுதுவ்த்தை தவிர இந்த எழுத்தாளார்களுக்கு வேறு தெரியாது/
/ இன்றைக்கு நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். அனைத்துக்கு காரணம் என் பெற்றோர்கள்./
Your tamil writing style is very good; unfortunately you seem to be specialising in ignorance, half-truths and lies in some cases.
Do you know Nedumaran has spent number of years in Jail due to his support for Ealem Tamils?
For example, this news item talks about him being in Jail for 17 months in one particular case.
http://www.hinduonnet.com/fline/fl2102/stories/20040130004003200.htm
One can quote lot more. But only if you can accept your mistake.