கலவியைப் பற்றியதும் மரணத்தைப் பற்றியதுமான இருகவிதைகள்
போகம் 1
"எலும்பு நொறுங்கும்படி
இறுக்க அணைத்து
உன் உதட்டோடு
முத்தமிட வேண்டும்"
"தயவுசெய்து என்னைக்
கொலைசெய்ய
முயற்சிக்க வேண்டாம்.
இதோ விஷத்தைத் திறந்துவிட்டேன்.
செத்துப்போகிறேன் நானே".
போகம்2
சலனமற்று ஓடும் நதியில்
குதித்து இறங்குகிறேன்.
ஓயாது சீறும்
அலைகளின் ஓசையில்
மௌனத்தைச் சிதைக்கிறாய்.
இறுக்கி அணைக்கிறேன்.
அருவி உடைந்து சிதறுகிறதுகண்ணாடிச்சில்லுகளாய்.
பேயாய் ஓடும் காட்டாற்றில்
அடித்துச் செல்லப்பட்டு
கரையொதுங்குகிறேன் பிணமாய்.
//உன் உதட்டோடு
முத்தமிட வேண்டும்"
"தயவுசெய்து என்னைக்
கொலைசெய்ய
முயற்சிக்க வேண்டாம்//
வெளியே மிதக்கும் அய்யா,
நீங்க கேவலமா எழுதுவதை பாத்தா,உங்களை நோய்டா புகழ் சுரேந்தர் கோலி ட்ரெய்னிங் கொடுத்து "தமிழ் நாட்டுல தொழில் நடத்துடா"ன்னு அனுப்பி வச்சாரோன்னு சந்தேகமா இருக்கய்யா.
பாலா