சாவுக்கும் சர்வே

சதாம் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா, வருத்தமளிக்கிறதா என்று ஒரே சர்வேயாம். கேவலமாக இருக்கிறது. எல்லாப் பிணங்களையும் மேட்டராகவும் ஸ்டோரியாகவும் கவரேஜாகவும் நியூஸாகவும் பார்க்கும் மீடியாக்கார புத்தி. நல்லவேளை பத்திரிகைக்கார நாய்ப்பிழைப்பிலிருந்து மீண்டாகிவிட்டது.

பார்ப்பனர்களைப் பாதுகாத்த பெரியார்


"நான் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனே தவிர பார்ப்பனர்களை வெறுப்பதில்லை. நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்" - தோழர் பெரியார்.ஈவெ.ரா


வலைப்பதிவுகளில் எழுதுபவர்களைப் பொறுத்தவரை இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர். பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனியம், இந்துத்துவத்தை ஆதரிக்கிறவர்கள். இன்னொரு பிரிவினர் பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள்.
ஆனால் இந்த வலையுலகில் நடக்கும் விவாதங்களுக்கும் தமிழ்நாட்டில் நிலவும் சமூகச் சூழலுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.


பெரியார் காலத்தைவிட இப்போது பார்ப்பன ஆதிகக்ம் குறைந்திருக்கிறது. பார்ப்பனர்களின் அதிகார மய்யங்கள் மாறியிருக்கின்றன. 'சூத்திரர்' என்கிற வார்த்தையே தெரியாத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. பார்ப்பனர்களுக்கு இணையாக சாதிய அதிகார விருப்பம் கொண்ட இடைநிலைச்சாதிகள் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் கிராமங்களில் தலித்துகள் மீது வன்முறையைச் செலுத்துகிறார்கள்.


ஆனால் வலையுலகில் நடக்கும் விவாதங்களோ இன்னமும் 1950, 60களில் நடந்த ஆரிய, திராவிட விவாதங்களாகவே இருந்து வருகின்றன. ஆனால் இந்த விவாதங்களில் நியாயமில்லை என்றும் சொல்லிவிட முடியாது. வலையுலகில் எழுதும் பெரும்பாலான பார்ப்பனர்கள் இன்னமும் சத்தியமூர்த்தி(அய்யரி)ன் வாரிசுகளாகவே இருக்கின்றனர்.


ஒரு உதாரணம் 1972ல் பெரியார் 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும்' கோரிக்கையை வலியுறுத்தும்போது பார்ப்பனர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனல் இப்போது 2006ல் அதே கலைஞர் தலைமையிலான திமுக அரசு அதே சட்டத்தைக் கொண்டுவரும்போது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மத்தியிலும் இந்துத்துவச் சக்திகள் மத்தியிலும் முன்னைய கடுமையான எதிர்ப்புகள் இல்லை. இப்போது 'தனியார்துறையில் இட ஒதுக்கீடு' போன்ற கோரிக்கைகளை வைத்தால்தான் பார்ப்பனர்கள் அலறுவார்கள். அவர்கள் வேறு அதிகார மய்யங்களுக்கு நகர்ந்திருக்கிறார்கள். எனவே 1973ம் காலத்திய அதே பெரியார் அரசியலை நாம் செய்ய இயலாது.


ஆனால் வலையுலகில் இருக்கும் சூழல் என்னவென்றால் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை விட வலையுலகில் எழுதிய பெரும்பாலான பார்ப்பனர்கள் அனைவரும் அர்ச்சகராகும் சடட்த்தை மூர்க்கமாக எதிர்த்தார்கள். இத்தகைய இறுகிப்போன பார்ப்பனர்களுக்கு கடுமையான பார்ப்பன எதிர்ப்பு அரசியல் தேவைதான். பெரும்பாலும் வலையுலகில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக பார்ப்பனரல்லாதோரில் அதிகமும் இடைநிலைச்சாதிகளும் கொஞ்சம் முஸ்லீம்களும் எழுதுகிறார்கள் என்று கருதுகிறேன். தலித்துகள் அதிகம் இன்னமும் இந்த உலகத்திற்குள் வரவில்லை. தலித்துகளும் கணிசமக எழுத ஆரம்பிக்கும்போது வேறுதளங்களுக்கு விவாதங்கள் நகரும் என்று கருதுகிறேன்.

இதை நான் எழுதுவதன் நோக்கம் பார்ப்பன எதிர்ப்பாளர்களும் சரி, பார்ப்பன எதிர்பு முன்வைக்கப்படுவதாலேயே பெரியார் என்னும் போராளியை மாமா என்றும் வெங்காயத் தலைவன் இன்னும் எவ்வளவு தூரம் கொச்சையாக வசைபாட வேண்டுமோ அவ்வளவுதூரம் வசைபாடும் பார்ப்பன நண்பர்களுக்கும் சேர்த்து, பெரியார் பார்ப்பன எதிர்ப்பில் கடைப்பிடித்த அறவியல் மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


1948 காந்தி கோட்சே என்ற பார்ப்பனரால் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம். முதலில் முஸ்லீம்தான் காந்தியைக் கொன்றுவிட்டான் என்று வதந்தி பரவ முஸ்லீம்கள் மீது தாகுதல் தொடுக்கப்படுகிறது. ஆனால் அந்தக் கொலையைச் செய்தவன் இந்து, அதுவும் பார்ப்பனன் என்று தெரியவர இந்திய வானொலி வரலாற்றிலேயே முதல்முறையாக 'காந்தியை ஒரு இந்து சுட்டுக்கொன்றான்' என்று கொலையாளியை அவனின் மத அடையாளத்தோடு அறிவிக்கப்பட்டது.


அப்போது பாபாசாகேப் அம்பேத்கரின் மண்ணான மும்பையில் தலித்துகள் அக்கிரகாரத்தில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துகின்றனர். ஆனால் பார்ப்பன எதிர்ப்பை உக்கிரமாக முன்வைத்த தமிழகத்தில் பெரியார் 'யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதற்குப் பின்பு நடந்த காந்தியார் அஞ்சலிக்கூட்டத்தில் "காந்தியைச் சுட்டுக்கொல்ல ஒரு துப்பாக்கி எந்தளவு காரணமோ அந்தளவுதான் அந்த பார்ப்பனரும் காரணம்" என்று பேசுகிறார்.


பார்ப்பனரல்லாத பெரும் மக்கள் திரளைத் தன்னகத்தே கொண்ட பெரியார் நினைத்திருந்தால் பார்ப்பனர்களுகு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருக்க முடியும். ஆனால் ஒருபோதும் அவர் பார்ப்பனர்கள் உள்ளிட்ட எந்த உயிரையும் வெறுத்தவரில்லை. பார்ப்பன எதிர்ப்பு உட்பட அவரது எல்லா செயற்பாடுகளும் அளவிறந்த அன்பின்பாற்பட்டது.


பலசமயங்களில் அவர் பார்ப்பனர்களோடு உரையாடல் நிகழ்த்தவும் முன்வந்தார். ('பார்ப்பனத் தோழர்களே' என விளித்து அவர் பேசிய உரை ஒரு முக்கியமான உரை. அந்த பிரதி இப்போது என் கைவசம் இல்லை. கிடைத்தால் பிரசுரிக்கிறேன்.)


அதே 1948 பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். தனது ஆஸ்தான நண்பனும் அரசியல் எதிரியுமான ராஜாஜியைச் சந்திக்கிறார். பிறகு மணியமமையை மணந்துகொள்கிறார்.

மணியம்மையின் திருமணத்தையொட்டி அண்ணா உட்பட பலர் கட்சியிலிருந்து விலகுகின்றனர். திமுக பிறக்கிறது. அப்போது அவர்கள் பெரியார் மீது இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

1. பெரியார் பொருந்தாத் திருமணம் செய்துவிட்டார்.
2. மணியம்மை பெரியார் திருமணம் என்பது வெறுமனே ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது அல்ல. அடுத்து கட்சி, டிரஸ்ட், சொத்து ஆகியவற்றிற்கு வாரிசை நியமிக்கும் ஏற்பாடும் கூட. அத்தகைய இயக்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய ஏற்பாட்டைப் பார்ப்பனர் ராஜாஜியின் ஆலோசனையில் பேரில் எடுத்துவிட்டார்.


காலங்கள் உருண்டோடின. ராஜாஜி இறந்துவிட்டார். ராஜாஜிக்கு அடுத்தாண்டு பெரியாரும் மறைந்துவிட்டார். பெரியார் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி 'புதியபார்வை' இதழில் 'அய்யாவின் அடிச்சுவட்டில் 'என்னும் தொடரை எழுதுகிறார். அதில்தான் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதத்தை வெளியிடுகிறார்.


அதில் 'மணியம்மையைத் திருமணம் செய்வதில் தனக்கு விருப்பமில்லை' என்றே ராஜாஜி தெரிவிக்கிறார். ஆனால் கடிதத்தின் தலைப்பில் அந்தரங்கம் என்று போட்டிருந்ததால் பெரியார் கடைசிவரை அந்த கடிதத்தை வெளியிடவில்லை. 'ஒரு பார்ப்பனர், அதுவும் பார்ப்பனர்களின் பாதுகாவலனாக விளங்கிய ராஜாஜி என்னும் பார்ப்பன ராஜகுருவிடம் கட்சியின் எதிர்காலத்தை அடகு வைத்தார்' என்னும் வரலாற்றுப் பழியைச் சுமந்து மறைந்தார்.


வேசி வீட்டிற்குச் சென்றது முதல் நிர்வாணமாய் நின்றது வரை ரகசியங்கள் எதுவுமற்று தமிழ்வெளியில் தன்னை முன்கிடத்திக்கொண்டவர் பெரியார். ஆனால் வெளிப்படையாய் இருத்தல் என்பது தான் ரகசியங்களற்று இருத்தலே தவிர பிறரின் அந்தரங்களை அம்பலப்படுத்துவதல்ல என்கிற அற மதிப்பீடுதான் பெரியாரின் அறமதிப்பீடு.


பெரியர் மதங்களை மறுத்தார். ஒழுக்கம், தியாகம், கற்பு, மதுவிலக்கு என்னும் பேரறங்களை மறுத்தார். ஆனால் இத்தகைய சுயேச்சை அறங்களை உற்பத்தி செய்தார். அத்தகைய அறங்கள்தான் இன்றைய மாற்று மதிப்பீடுகளாக விளங்கும் என்று கருதுகிறேன்.


பார்ப்பன நண்பர்களும் பார்ப்பனரல்லாத தோழர்களும் தங்களது அரசியல் செயற்பாடுகளில் இத்தகை சுயேச்சை அறங்களைக் கடைப்பிடிப்பதே வன்மமும் வெறுப்புமற்ற மாற்று வாழ்க்கைநெறியை உருவாக்க ஏது செய்யும் என்று நம்புகிறேன்.


வேண்டுகோள் 1 : உடனே பெரியார் ,"பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் பார்ப்பனை அடி" என்று சொல்லவில்லையா என்று கேட்கவேண்டாம். அது பெரியாரின் வார்த்தைகள் அல்ல. பெரியார் எந்த ஆண்டில் எங்கு அப்படிப்பேசினார் அல்லது எழுதினார் என்று காட்டுங்களேன்.


வேண்டுகோள் 2 : இந்த பதிவுக்குச் சம்பந்தமில்லாத, திசைதிருப்பும் பெரியார் மணியம்மை திருமணம் பற்றிய கேள்விகள் வேண்டாம்

அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்கள்.

போட்டி வலைப்பதிவாளர் மாநாடு - நிகழ்ச்சி நிரல்

காலை 9.00 - 10.00
குத்துவிளக்கில் சிகரெட் கொளுத்தி மாநாட்டைத் தொடங்கி வைப்பவர் : யெஸ்.பாலபாரதி
வரவேற்புரை : கெட்டசெய்தி இந்தியா
( வரிவிலக்கிற்காக)
தலைமையுரை : சிவஞானம்ஜி (மூத்தவலைப்பதிவாளர்)
காலை 10.00 - 11.00
தமிழிசை
இயக்குனர் பேரரசுவின் தமிழிசைப்பாடல்கள்
பாடுபவர் : குழலி
காலை 11.00 - 12.00
கலைநிகழ்ச்சிகள்
பழைய சொம்பு ஆட்டம் : 'நாட்டாமை' முத்துதமிழினி
சிறப்பு கரகாட்டம் : வரவணையான்
புலிவேஷ ஆட்டம் : கொழுவி, ஈழபாரதி
நண்பகல் 12.00 - 2.00
கருத்தரங்கம்
'பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?' ' - 'பின்னூட்டம்' பாலா
என்னை மிரட்டிய நெடுங்குழை காதன் - சமீபத்திய ஆய்வு
- டோண்டு ராகவன்
பாகிஸ்தானாகி வரும் கராச்சி
- ஜடாயு
ஆவி அமுதாவும் அமெரிக்க மறுகாலனியாதிக்கமும்
- அசுரன் & ராஜ்வனஜ்
ரமணிசந்திரன் நாவல்கள் - ஒரு பின் நவீனத்துவ ஆய்வு
- சுகுணாதிவாகர்
மதியம் 2.00 - 4.00
உணவு இடைவேளை
சைவ உணவுக்கு அணுகவும் : இட்லிவடை
( சாப்பிட வருபவர்களை ரகசியமாக படம் பிடிக்கும் வசதி உண்டு)
சரக்கு மற்றும் அசைவ உணவுகளுக்கு : வரவணையான் (எ) செந்தில்
( கார்டு உள்ளவர்கள் மட்டுமே அணுகவும் (ரேசன் கார்டு அல்ல) அல்லது புரவலர்களுடன் அணுகவும்.)
மாலை 4.00 - 5.00
புத்தக வெளியீட்டு விழா
'போலி டோண்டுவின் பொன்மொழிகள்'
வெளியிடுபவர் : ஆப்பு ( தலைமை கணிப்பொறியாளர், போலி டோண்டு இயக்கம்)
பெற்றுக்கொள்பவர் : விடாதுகருப்பு (பெரியார் பூனைப்படை)
பொ(ப)ன்னாடை அணிவித்துக் கௌரவப்படுத்தப்படுபவர்கள் : டோண்டுராகவன், மாயவரத்தான், ஹரிஹரன், ஜடாயு, ஜயராமன், வஜ்ரா மற்றும் பலர்.
மாலை 5.00 - 6.00
இலவச மருத்துவ முகாம்
பெத்தடின் ஊசி வினியோகம் : ஹரிஹரன்
(மாதவிடாயால் அவதியுறும் பெண்களுக்கு விபூதிமருந்தும் உண்டு)
மாலை 6.00 - 8.00
திரைப்படவிழா
(உலகத்தரம் வாய்ந்த தமிழ்ச்சினிமாக்களைத் திரையிடும் முதல் முயற்சி)
திரையிடப்படும் படங்கள் : பாசப்பறவைகள், கண்ணம்மா
- sponsered by லக்கிலுக்
ஆய்வுரை : பாரதியின் கண்ணம்மா, பாரதி கண்ணம்மா, கலைஞரின் கண்ணம்மா - ஒரு திராவிட ஒப்பாய்வு
- முத்துகுமரன்
திரையிடப்படும் படங்கள் : நாளைநமதே, தாய்மீது சத்தியம், ஆடிவெள்ளி
- sponsered by பொன்ஸ்
ஆய்வுரை : ஆடிவெள்ளியும் ஆனைகளின் அடிமைத்தன்னிலையும்
-ரோசாவசந்த்
இரவு 8.00 - 10.00
ஸ்பெசல் நாடகம்
டோண்டு மற்றும் போலிடோண்டு இணைந்து மிரட்டும் 'கண்ணாமூச்சி ரே ரே'
(தம்மடிக்க, சரக்கடிக்க, கடலைபோட அரங்கில் அனுமதி உண்டு)
நாள் : 32.13.3006
இடம் : கோவிந்தாபுரம்,
கேரளா, பாகிஸ்தான்.
அனைவரும் வருக! அல்வா தருக!

நோட்டிஸ் உபயம் : ஓகை, 'புளியமரம்' தங்கவேலு, முத்துதமிழினி.

பெண்கள் அர்ச்சகராக வேண்டாம்


"இந்து மதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம்:பெண்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிகழ்வு நாட்களில் உடல் உபாதை கூடியிருக்கும் பெண்களில் பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது சாதாரணமான பொதுஅறிவுடைய வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள், அந்தந்த ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் ஆலய அர்ச்சகர்களாக இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்."


ஹரிஹரனின் இந்த சமீபத்திய பதிவைப் படித்தபோது பிரபுதேவா நடித்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சிதான் நினைவுக்கு வந்தது.


விவேக்கும் வடிவேலுவும் ஒரே பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்வார்கள். விவேக் கையில்லாதவரைப் போல நடித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை விவேக்கு அண்டர்வேர் மாட்டமுடியாது. அவரது காதலி மாட்டிவிட்டு விட்டு கைகளைத் தட்டிக்கொள்வார். விவேக் சொல்வார், "ஒரு லோடு மண்ணடிச்சமாதிரி கையைத் தட்டுறா பாரு"


ஏதோ மணியாட்டுவதும், தீபாராதனையும் உலகமகா உழைப்புப்போலவும் அதற்கு மாதவிடாய்தான் தடையாக இருப்பதுபோலவும் ஹரி பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஹரி, நீங்கள் மாதவிடாய்க்காலங்களிலும் கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் 'பால்சுரந்த தனமிரண்டைப் பயிர்வருடத் தலைகுனிந்தே மகவு உறிஞ்சுதுன்னு மண்ணுறிஞ்சக் களையெடுக்கும்' உழைக்கும் பெண்களைக் கண்டதிலலையா? கல் சுமக்கும், ரோட்டோரங்களில் மதியவெயிலில் சாப்பாட்டுக்கடை போடும் சகோதரிகளைப் பார்த்ததிலலையா? அல்லது அவர்களுக்கெல்லாம் மாதவிடாய் வராது என்ற எண்ணமா?

ஒருவேளை நீங்கள் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உழைக்கும் பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். பார்ப்பனச் சகோதரிகள் மாதவிடாய்க் காலங்களில் குனிந்து வளைந்து கோலம் போடுவதிலலையா? வீடு பெருக்குவதில்லையா? துணி துவைப்பதில்லையா? பாத்திரம் கழுவுவதில்லையா? ஆம்பளைகள் வக்கணையாய் வழித்துத் தின்ன வடித்துக்கொட்டுவதில்லையா?(என்ன, புணர்ச்சி இயந்திரமாகச் செயல்படுவதிலிருந்து மூன்றுநாட்கள் ஓய்வு கிடைக்கலாம்). அல்லது நீங்கள் சொல்வதைப் போல அவர்கள் 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' வந்து பார்ப்பன ஆண்களைக் கொலைசெய்துவிட்டார்களா?

சாதியையும் தாண்டி நீங்கள் ஆண் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

முதலில் 'உடலைக்கொண்டாடிய பெரியார்' என்ற எனது பதிவில்தான் பின்னூட்டத்தில் இந்த அரிய 'அறிவியல் கருத்துக்களை வெளியிட்டீர்கள்'. நான் பெண்கள் அர்ச்சகர்களாவதைப் பற்றிக்கூட பேசவில்லை, பெண்கள் அந்த மா.வி.காலங்களில் கோயிலுக்குச் செல்லாதது ஏன் என்றே கேட்டிருந்தேன். ஒருவேளை சாமி சிலை முன்னால் கையெடுத்துக் கும்பிடுவதும் மாபெரும் உழைப்பு என்று கருதுகிறீர்களா?

அதென்ன நிதானம் தவறிப் பெண்கள் நீதி சொல்வார்கள்? நிதானத்தோடு ஆண்கள் சொன்ன நீதிகள் எல்லாம் பெண்களுக்கு அநீதிகளாகத்தானே இருந்தன.

எங்கள் ஊர்ப்பக்கம் மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் ஊறுகாய்ப்பாட்டிலைக்கூட தொடமாட்டார்கள். ஊறுகாய் கெட்டுவிடும் என்பது நம்பிக்கை. இது தீட்டு, அசிங்கம் என்னும் தூய்மைவாத உளவியல் பெண்களிடம் ஆழக் கட்டப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக ஆண்களால் மாதவிடாய், பிரசவம் என்னும் உடல் உபாதைகளை உணரமுடியாது. அதை மிகுந்த பொறுப்போடும் புரிந்துணர்வோடும், மானுட நேசத்தோடும்தான் அணுகவேண்டும். 'நீ பலவீனமானவள், எனவே கீழிறக்கப்பட வேண்டியவள்' என்னும் அதிகார மனோபாவத்தோடு அல்ல.

இவ்வளவு சொல்லியும் நீங்களோ உங்கள் அரங்கநாதரோ, சிதம்பரம் நடராஜரோ முடியாது, கிடியாது என்றால் ரொம்பவே சங்கடப்பட்டால், வேண்டாம் பெண்கள் அர்ச்சகராகவே வேண்டாம்.

மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


கேள்வி 1 : பகுத்தறிவின் துணைகொண்டு உண்மையை விடுதலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஹரிஹரன் குறைந்தபட்ச அறிவையும் பலசந்தர்ப்பங்களில் தன்னிலிருந்து விடுதலை செய்துவிடுகிறார்.

சார்வாகத்தை இந்துமதம் உட்செரித்துக்கொண்டது பரிணாமமாம். அப்படியானால் வேத நெறிகளுக்குப் பின் தோன்றிய ஆசிர்வகம், சாங்கியம், லோகாயுதம், பவுத்தம், சமணத்தை என்ன சொல்வீர்கள்? அது பரிணாம வளர்ச்சி என்றால் தஞ்சாவூரில் 'கோலம் போடும் பெருமைமிகு' இந்து மரபை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாம் கொடிகட்டிப் பறந்தால் அதுமட்டும் பரிணாமம் ஆகாதோ?

கேள்வி 2 : கால்கள்தான் இறைவனின் படைப்பில் உயர்ந்ததாம், பெருமாளின் பாதம்தான் சேவிக்கபப்டுகிறதாம். எனவே சூத்திரர்கள் காலில் பிறந்தது இழிவாகாதாம். நல்லது. அப்படியானால் அத்தகைய சேவிக்கத்தக்க உயர்ந்த பாதங்களில் அணிந்திருக்கும் செருப்பு தைக்க பார்ப்பனர்கள் தயாரா? (மேலும் பகவான ராமபிரானின் செருப்பு ஆண்ட புண்னிய பூமியாயிற்றே இது?)கால் கழுவபப்டும் கழிப்பறையைக் கழுவ பார்ப்பனர்கள் தயாரா?இதேபோல சூத்திரர்களை தஸ்யூக்கள், வேசிமகக்ள், அடிமைகள் என்று வேதங்கள் ஏன் குறிப்பிடுகின்றன என்ற அறிவார்ந்த உண்மைகளையும் ஹரி விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

மணிரத்னம் ஒரு போஸ்ட்மாடர்னிஸ்டா?

அன்புள்ள அனானி,

உங்கள் பெயர் எனக்குத் தெரியவில்லை (முட்டாள், பெயர் தெரியாவிட்டால்தான் அனானி, cool down). அடிக்கடி என் பின்னூட்டங்களில் வந்து எனக்கு பின்நவீனம் தெரியாது, சினிமா தெரியாது என்றெல்லாம் 'அருளாசிகள்' வழங்கிப் போகிறீர்கள். நன்றி. இருக்கலாம்.
கார்ப்பரேசன் பள்ளியில் 12ம் வகுப்பு வரை சத்துணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த என் அரைகுறை ஆங்கில அறிவின் விளைவாகப் பின்நவீனம் குறித்து நான் ஏதாவது அபத்தமாக உளறியிருக்கலாம். நான் பின்நவீனத்தில் டாக்டரேட் பண்ணியவன் இல்லை. நான் ஒரு பின்நவீனத்துவவாதி என்று எங்கேயும் சொன்னதாகவும் நினைவில்லை. (postmodern conditionதான் இருக்கிறது, postmodernistஎன்றெல்லாம் யாரும் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்)

மணிரத்னத்தின் சினிமா குறித்து நான் எழுதும்போது 'ஒரிஜினலாட்டி, காப்பி' குறித்து பி.ந என்ன சொல்கிறது என்று சட்டையைப் பிடித்து உலுக்கியிருந்தீர்கள். உண்மைதான் பின்நவீனம் 'ஒரிஜினல் என்ற ஒன்று கிடையாது' என்றுதான் சொல்கிறது. ஒரிஜினாலிட்டி என்ற பெயரால் ஏற்படும் அறிவின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் மணிரத்னத்தை விமர்சிக்கும்போது மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை? தேவா டியூன்களைக் காப்பியடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்படும்போது கோபம் வருவதில்லை. ஆனால் மணிக்கு மட்டும் பின்நவீன உதவியோடு வந்துவிடுகிறீர்களே, ஏன்? தேவா ஏன் சாதாரணக் கானா இசையமைப்பாளராக அறியப்படுகிறார்? மணிரத்னம் எப்படிக் கலைஞ்ன் ஆனார்?

ஒரு படத்தைப் பார்த்து உந்துதல் பெறுவது, அதை நம் சூழலில் முயற்சித்துப் பார்ப்பது உலகமகா பாவமில்லை. ஆனால் எந்த பிரச்சினை குறித்து (அ) எந்த சூழல் குறித்துப் படமெடுக்கிறீர்களோ அது குறித்த அவதானிப்பு அவசியம் இல்லை என்று கருதுகிறீர்களா?

'புதுப்பேட்டை' யிலும், 'ஈ'யிலும் வரும் சேரியையும் பாருங்கள். 'ஆயுத எழுத்தில் வரும் சேரியைப் பாருங்கள். சென்னையில் எந்த சேரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது? (மணிரத்னம் வகையறாக்கள் வந்து கூட்டிப் பெருக்கினால் ஒருவேளை அபப்டி மாறக்கூடும்)'ரோஜா' படம் காஷ்மீர்ப் பிரச்சினை பற்றிய எந்த உரையாடலைத் துவக்கி வைத்தது? மீண்டும் தேசியக் கற்பிதம் குறித்த உணர்ச்சி மேற்பரப்பில் மட்டும்தானே விளையாடியது?
மும்பை படத்தின் கிளைமாக்ஸில் ஏன் 4பக்க வசனம்? ஏன் மணிரத்னம் என்னும் கலைஞனால் அதைக் காட்சிப்படுத்த முடியவில்லை? ராமர் கோவில் பாபர் மசூதிப் பிரச்சினை குறித்து போகிற போக்கில் 'எல்லோரும் ஒற்றுமையா இருங்கள்' என்று சொல்வதற்குக் கலைஞன் தேவையா? ஏன் மிஸ்டர்&மிசஸ் அய்யர் ஏற்படுத்திய பாதிப்பை மும்பை உருவாக்கவில்லை?

திராவிட இயக்கம் குறித்து எந்த ஆழமான கல்வியும் இல்லாமல் எந்த தைரியத்தில் மணி 'இருவர்' படம் எடுத்தார்? ஒரு படத்தின் மூலம் தாக்கம் பெறுவது என்பது வேறு. தலையைச் சொரிவதிலிருந்து வாயைக் குதப்பிப் பேசுவது வரை காப்பியடிப்பது கலையா? இசை, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் போன்ற ஒரு சில அம்சங்களைத் தூக்கிவிட்டால் உலக சினிமாவில் மணிரத்னத்தின் இடம் எது?

எந்த புரிதலும் இல்லாமல் எல்லாவற்றையும் வியாபாராமாக்கி விடும் ஒருவரைக் குறித்து விமர்சித்தால் ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்?

நீங்கள் பின்நவீனப் பண்டிதர் என்பதால் அடையாள அரசியல்(politics of identity), வித்தியாசங்களின் அரசியல்(politics of differences) (அ) மிச்சங்களின் அரசியல்(politics of reminders) பற்றி அறிந்திருப்பீர்கள். சபல்டர்ன் ஆய்வுகள் அடிப்படையிலான வாசிப்புகளின் அவசியத்தையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில் அணுகினால் மணியின் சினிமாக்கள் யாருக்கு ஆதரவாக நிற்கின்றன?

மணியின் படங்களில் பெண்களின் இடங்கள் எவை? காதலனின் உயிர் உருக்கும் பாட்டைக் கேட்டு தன் பர்தாவைத் தடுக்கும் நங்கூரத்தை உதறிவிட்டு ஓடி வரும் பெண்ணின் குலுங்கும் மார்புகளைக் குளோசப்பில் காட்டிய கலைஞன் தானே மணி? ஆயுத எழுத்தில் சேரிப்பெண்ணாக வரும் மீராஜாஸ்மினின் பிரதானப் பணிகள் எவை? மாதவனோடு சரசமாடுவதும், கணவனிடம் அடிக்கடி அறை வாங்குவதும்.

இங்கு மார்க்சியம் தெரிந்த பல பார்ப்பனர்கள் மார்க்சிஸ்ட்களாக இருந்ததை விடப் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். (எல்லாப் பார்ப்பனர்களையும் சொல்லவில்லை. எம்.என்.ராய், ராகுல்ஜி, ஏ.எஸ்.கே போன்றோர் மீது எனக்கு மரியாதை உண்டு). இப்போது பின்நவீனம் தெரிந்தும் பார்ப்பனர்களாகவே இருக்கிறீர்கள்.

என்னைப் பார்ப்பன வெறுப்பாளன் என்று அடையாளப்படுத்தியிருந்தீர்கள். நான் பார்ப்பன எதிர்ப்பாளனே தவிர பார்ப்பன வெறுப்பாளன் இல்லை. எனக்குத் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்தை அறிமுகப்படுத்தியவர்களும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கவுமே இருந்தார்கள். நான் கொண்டிருப்பது பார்ப்பன வெறுப்பு என்றால், 'இருவர்' படம் (முழுவதும்) 'ஆயுத எழுத்தில்' வில்லனாக வரும் கதாபாத்திரம் கருப்புச்சட்டை அணிந்திருப்பது, 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று வசனம பேசுவது ஆகியவைகளைக் கொண்டு மணிரத்னம் என்ன வகையான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார் என்று தயவு செய்து எனக்கு விளக்குங்களேன்.

நன்றி.
சுகுணாதிவாகர்.

எனக்கு பிடித்த ஏழரை

எல்லோரும் 'ஆறிப்போன ஆறு' எழுதுகையில் நான் எனக்குப் பிடித்த ஏழரையை எழுதுகிறேன். இதில் ஏழரையாவது விஷயம், எனக்கு அரைகுறையாகப் பிடிக்கும் (அ) சில பிரச்சினைகள் இருக்கலாம் (அ) பிடிக்... எனக் கொள்க.


பிடித்த அழகிகள்

1. தீபா (5வது படிக்கும்போது காதலித்த பெண்)
2. ஜெய்சிறீ (கல்லூரி படிக்கும்போது காதலிதது. எல்லாம் காதலித்ததான், பட்ட அல்ல)
3. முருகேஸ்வரி ( ஆறாவது டீச்சர்)

(சாரி பட்டியல் ஏழரையைத் தாண்டும் என்று நினைக்கிறேன். (முதல்லேயே இப்படியா?)

பிடித்த நடிகர்கள்

1. எம்.ஆர்.ராதா
2.சிவாஜி (வசந்த மாளிகை, புதிய பறவை, அந்த நாள் போன்ற படங்களுக்காக. நிச்சயமாக கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மனுக்காக அல்ல)
3. சந்திரபாபு
4. ரங்காராவ்
5. பாலையா
6. தலைவாசல் விஜய்
7 . ரஜினிகாந்த்
7 1/2 . கமல்ஹாசன்

அழகில் பிடித்த நடிகைகள்

1. வாணிசிறீ
2. ராதா
3. ரஞ்சிதா
4. விந்தியா
5. குஷ்பு
6. கௌதமி
7 ஐஸ்வர்யாராய்
7 1/2 சினேகா


நடிப்பில் பிடித்த நடிகைகள்

1. சாவித்திரி
2. பத்மினி (சித்திக்காக)
3. ராதிகா
4. குஷ்பு
5. சிம்ரன்
6. ஜோதிகா
7. ?

தமிழில் பிடித்த படங்கள்

1. அவள் அப்படித்தான்
2. வீடு
3.அந்த நாள்
4. காதல் கொண்டேன்
5. புதுப்பேட்டை
6 மறுபடியும்
7 உதிரிப்பூக்கள்
7 1/2 பாட்ஷா

பிடித்த உலகத்திரைப்படங்கள்

1. சில்ட்ரன் ஆப் ஹெவன்
2. பைசைக்கிள் தீவ்ஸ்
3 . டிரீம்ஸ் (குரோசோவா)
4 . செவென் சாமுராய்
5. பிளாக்மெயில் (ஹிட்ச்காக்)
6. அசேசினேசன் ஆப் மால்கம் எக்ஸ்
7. பிளாக் (இந்தி)
7 1/2 டைட்டானிக்

பிடித்த எழுத்தாளர்கள்

. அ.மார்க்ஸ்
2. ஷோபாசக்தி
3. பெரியார் ஈ.வெ.ரா
4. சாருநிவேதிதா
5. ப.சிங்காரம் (புயலிலே ஒரு தோணி)
6. ரவிக்குமார்
7. அழகியபெரியவன்
7 1/2 . அசோகமித்திரன்

பிடித்த கவிஞர்கள்

1. செல்வி சிவரமணி (இலங்கை)
2. என்.டி.ராஜ்குமார்
3 மாலதி மைத்ரி
4. பிரேதா பிரேதன்
5. யவனிகா சிறீராம்
6. சுகுணாதிவாகர்
7 மகாதேவன் ("ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது)
7 1/2 பாரதி

பிடித்த வலைப்பதிவுகள்

1.தமிழ்நதி
2. ராஜ்வனஜ்
3. அசுரன்
4. மரைக்காயர்
5. ஆப்பு
6. ரோசாவசந்த்
7. வரவணையான்
7 1/2. டூண்டு (எ) போலி டோண்டு

ஒரு பின்குறிப்பு : இது முழுமையான பட்டியல் அல்ல. பதிவுகளை யாராவது ஒரு பதிவாளருக்கு dedicate செய்யலாம் என்றிருந்தேன். ஆனால் தோழர்கள் தமிழ்நதியும் மதி. கந்தசாமியும் சீரியசான பதிவுகளைப் படிக்கும்போது இதுமாதிரியான dedicationsகள் disturb செய்கிறது என்று எழுதியிருந்தார்கள். ஆனால் இது சும்மா ஜாலியான பதிவுதானே என்பதால் dedicated to என் பிரியத்துக்கும் முத்தங்களுக்குமுரிய வரவணையான் (எ) செந்திலுக்கு

மணிரத்னம் நீங்கள் கலைஞனா, திருடனா?



'இயக்குனர் அசிங்கம்' பாலச்சந்தர், 'பார்த்தாலே பரவசம்' வரை நூறு நாடகங்கள் எடுத்திருக்கிறார். 101வது நாடகமாக 'பொய்' ஓடிக்(?)கொண்டிருக்கிறது. பாரதிராஜா என்னும் கலைஞன் பல கிளிஷேக்களை எடுத்து ஓய்ந்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் அடுத்து இருப்பது மணிரத்னம்தான்.

அவர் மௌனராகம், இதயக்கோயில், பகல்நிலவு என்று எடுத்துக்கொண்டிருந்த வரை ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அரசியல் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து வாந்திதான் எடுத்தார். காஷ்மீர்ப்பிரச்சினை, வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இனப்பிரச்சினைகள் என ஒரு இழவும் தெரியாது ஏதாவதொன்றை எடுத்துத் தள்ளி விமர்சகர்களிடம் நார்நாராய்க் கிழிபட்டார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மணிரத்னம் ஏதாவது சொந்தமாய் யோசித்துப் படமெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது. அவர் சுட்ட இடங்கள்.

நாயகன் - காட்பாதர்
திருடா திருடா - கிளிப்ஹேங்கர்
ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.
தளபதி - மகாபாரத உல்டா
பம்பாய் - ஓட்டல் ருவாண்டாவை மோசமாக உல்டா அடித்தது.
ஆயத எழுத்து - அகிரோ குரோஷாவைக் கேவலப்படுத்தியது.

நாயகனில் 'காட்பாதர்' படத்தில் மார்லின்பிராண்டோ தலையைச் சொறிவதைக்கூட காப்பியடித்து கமல் சொறிவார். அனேகமாக மணியின் படங்களிலேயே தேறுவது 'அஞ்சலி' மட்டும்தான். (ஒருவேளை அது திருடப்பட்ட படத்தை நான் பார்க்காமல் கூட இருந்திருக்கலாம்)

இப்போது மணிரத்னம் 'குரு' என்று ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடைய கதையைச் சமீபத்தில் (2006ல்தான்) ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. அந்த கதை வேறு ஒன்றுமில்லை. ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட 'சிட்டிசன் கேன்' என்னும் படத்தின் அதே கதைதான்.முடிந்தால் அந்த படத்தின் டி.வி.டியைப் பாருங்கள். மணிரத்னம் அதைச் சுடமாட்டார் என்று (தைரியம் இருந்தால்) பந்தயம் கட்டுங்கள். குரு வெளியாகும்வரை பொறுத்திருங்கள்.ஒருவேளை அப்படி இல்லாமல் இருந்தால் பந்தயம் கட்டுபவர்களுக்கு மணிரத்னத்தால் காப்பியடிக்கப்பட்ட மேற்கத்தியப்படங்களின் டி.வி.டிக்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தியாவில் காப்பியடிப்பவன் தான் கலைஞன் என்றால் கலைஞனை என்ன சொல்வார்கள்?

இந்துக்கோயில்களை இடித்தது சரியா?

சமீபத்தில் தோழர் மரைக்காயர் ஆனந்தவிகடனில் வெளிவந்த பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நேர்காணலைப் பதிவிட்டிருந்தார். அது ஏற்கனவே படித்ததுதான் என்றபோதிலும் அவர்து பதிவுக்குப் பின்னூட்டமிருந்த ஒரு இந்துத்துவவாதிக்குப் பொறுமையாக அவர் விளக்கம் அளித்திருந்தது என்னைக் கவர்ந்தது.

சமீபத்தில் 'புதியகாற்று - டிசம்பர் - இதழில் ஆ.சிவசுப்பிரமணியனின் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுவாக முஸ்லீம் மன்னர்கள் இந்துக்கோயில்களை இடித்துவிட்டார்கள் என்பதுதான் இந்துத்துவவாதிகளின் வழக்கமான பல்லவி. ஆனால் கோயில் என்பது செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கிட்டங்கியாகவே இருந்தது. அதைக் கொள்ளையடிப்பதுதான் மன்னர்களின் நோக்கமாக இருந்ததே தவிர கோயில்களைச் சிதைக்க வேண்டுமென்பதில்லை. இதற்கு இந்து மன்னர்களும் விதிவிலக்கல்ல.எந்தெந்த இந்து மன்னர்கள் இந்துக்கோயில்களைச் சிதைத்தார்கள் என்பது குறித்து பேரா.ஆ.சி விரிவாக விளக்கியிருக்கிறார். மிக முக்கியமான கட்டுரை. அவசியம் படியுங்கள்.

ஆ.சிவசுப்பிரமணியனைப் போலவே இன்னொரு முக்கியமான ஆய்வாளர் தொ.பரமசிவன். இவர்கள் இருவரும் நாட்டார் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இந்துமதம் எப்படித் தின்று செரித்தது, அவை எப்படி இந்துமதமாக்கப்பட்டன என்பது குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள்.

இவ்விரு அறிஞர்களின் முன்னோடிகள் என்று மயிலை.சீனி.வேங்கடசாமிநாட்டாரையும் சாத்தான்குளம் ராகவனையும் சொல்லலாம். இவ்விருவரும் சுயமரியாதை இயக்கச் சார்பாளர்களாக விளங்கினார்கள். (அவர்கள் இருவரையும் பயன்படுத்திக்கொள்ள பெரியார் தவறிவிட்டார் என்பது வேறு விஷயம்). குறிப்பாக வேங்கடசாமி நாட்டாரின் 'பௌத்தமும் தமிழும்' மிக முக்கியமான நூல். அவரது பல ஆய்வுகள் சைவ, வைணவ வெறியர்களால் பௌத்த விகாரைகளும் சமணப் பள்ளிகளும் எவ்வாறு சிதைக்கப்பட்டன என்று விளக்குகின்றன.

இப்போது அய்யப்பன் சீசன். எங்குபார்த்தாலும் கருப்புச் சட்டை, கருப்பு வேட்டிகள் நடமாடிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் சபரிமலை அய்யப்பன் சிலை என்பது புத்தர் சிலையே. இந்து ஆண் கடவுள்கள் யாருக்கும் உட்கார்ந்த நிலையில் சிலை இல்லை. மேலும் சாத்தன் என்பது பவுத்தப்பெயர். உதாரணம் சீத்தலைச் சாத்தனார். (அவர் எழுதும்போது எழுதுகோலின் பின்பகுதியை அடிக்கடி தலையில் குத்திக்கொள்வாராம். அதனால் அவர் சீழ்+தலை+சாத்தனார் ஆனாராம். இப்படி வெறுப்பை உமிழும் எத்தனையோ கட்டுக்கதைகள் பிறகு இந்துவெறியர்களிடமிருந்து கிளம்பியது.அதேபோல பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர் ஆசிர்வகம் என்னும் மாற்று மதத்தை சேர்ந்தவர். அவரது இயற்பெயர் தெரியவில்லை. ஆனால் பகு+உடுக்கை+நன்கு அணியார்- நன்றாக உடை உடுத்தத் தெரியாதவர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.)

சாத்தன் என்னும் பவுத்தப் பெயரே 'சாஸ்தா'வாக மாறி அது அய்யப்பனாக்கப்பட்டது.'சாமியே சரணம் அய்யப்பா' என்பது கூட 'புத்தம் சரணம் கச்சாமி'யிலிருந்து திருடப்பட்டது. இப்படியாக புத்த விகாரைகளை அழித்தே பல இந்துக்கோயில்கள் கட்டப்பட்டன.

இந்தியா புத்தமும் சமணமும் கொழித்த பூமி. புத்த விகாரையே, விகார், பீகார் ஆயிற்று. சமணம் தந்த சொல்லே 'பள்ளி'. அதற்குமுன் "சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே" என்றதுதான் 'அன்பே சிவமான' இந்துமதம். 'பொது' என்னும் சொல்லே பாலி மொழி தமிழுக்கு வழங்கிய கொடை.

ஆனால் எல்லாவற்றையும் கபளீகரம் செய்த இந்துத்துவத்தின் கொடுங்கரங்கள் இந்தியாவின் அழகியலின், வரலாற்றின் சின்னமாகிய பாபர் மசூதி வரை நீண்டது.ஆனால் காலம் எப்போதும் ஒரு புள்ளியில் உறைந்து நிற்பதில்லை. காலச்சக்கரத்தைச் சுழற்றும் வாய்ப்பு எங்கள் வலிய கரங்களுக்கும் வரும். அப்போது, இந்துக்கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு புத்தவிகாரைகள் எழுப்பப்படும். இடிப்பதை மட்டுமே 'கடமை'யாகக் கொண்டு 'சிறீரங்கத்தில் பெரியார் சிலை வைக்கலாமா' என்று கேள்வி எழுப்புவர்களுக்கு 'எதிர்பாராத பலன்' கிடைக்கும்.

இந்துக்கோயில்களின் இடத்தில் பெரியார் சிலைகளும் புத்தர் சிலைகளும் நிறுவப்படும். பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும். கோயில்தலமனைத்தும் பள்ளிகள் செய்வோம்.

உடலைக்கொண்டாடிய பெரியார்



டிசம்பர்24- பெரியார் நினைவுநாளுக்காக

சிலகாலத்திற்கு முன்பு சமணமுனிவர்களின் நிர்வாணம் பற்றியும் பெரியாரின் நிர்வாணம் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

பெரியார் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானார் என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான்.. அது மட்டுமல்ல, ஜெர்மனியிலும் சோவியத்ரஷ்யாவிலும் அவர் இருந்தகாலங்களில் பூர்ஷ்வாக்குழுக்கள், தாராளவாதக்குழுக்கள், அனார்கிஸ்ட்கள், டிராட்ஸ்கியக்குழுக்கள் எனப் பல குழுக்களையும் சந்தித்துப்பேசினார். டிராட்ஸ்கியக்குழுக்களோடு தொடர்பு இருந்தததாலேயே பெரியார் சோவியத்யூனியனை விட்டு வெளியேற்றப்பட்டார்..

இது எதைக்காட்டுகிறதென்றால், புதிய சிந்தனைகளையும் போக்குகளையும் கற்றுக்கொள்கிற, வரவேற்கிற தன்மை பெரியாரிடம் இருந்தது என்பதையே. இத்தகைய போக்குகள் தமிழில் அருகி வருகின்றன என்பது வருந்தத்தகக்கது
தீவீரப்பெண்ணியம்(radical feminism) மேற்கில் எழுந்தபோது பெண்ணிய ஓவியர்கள் தங்கள் நிர்வாணத்தை வரைய ஆரம்பித்தார்கள். (அவர்களை என்ன செய்யலாம்? வெளிப்படையாக பாலியல் குறித்து எழுதும் நம் பெண்கவிஞர்களை சினிமாக்கவிஞர் சினேகன் சொன்னதைப் போல "சென்னை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்திவிடலாமா?"). இத்தகைய பார்வையில்தான் பெரியார் நிர்வாணமாக நின்றதையும் அணுகமுடியும்.

மேலும் பெரியார் நிர்வாணமாக நின்றது வெறுமனே துறவுநிலை மட்டுமல்ல, அது உடலின் கொண்டாட்டத்தை வலியுறுத்துவது.
பொதுவாகவே மதம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் உடலை ஒடுக்கவே சொல்கின்றன. ஒருபுறம் பெண்களை போகப்பொருளாகக் கற்பிக்கும் இந்துமதம் மறுபுறம் பெண்ணுடலை விலக்கிவைக்க வேண்டியதாகவே கருதுகிறது.

சுத்தம் x அசுத்தம் என்று கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளிலிருந்தே தீண்டாமை கற்பிக்கப்பட்டது. தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். இழிவான தொழிலை செய்ய பணிக்கப்பட்டதாலேயே அசுத்தம், தீட்டு என்று தலித்துகள் கோயிலிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதைப்போலவே பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது. இப்படியாக பெண்காமம் வெளியே சொல்லத்தகாதது என்று சொல்லப்படுவது வரை இதை நீட்டித்துக்கொள்ளலாம்.

இப்படியாக அதிகாரமும் ஒடுக்குமுறையும் உடலை ஒடுக்குதல், உடலை இழிவாகக் கருதுதல், உடல் பற்றிப் பேசாதிருத்தல் ஆகியவற்றை முன்வைத்தால் விடுதலையைப் பேசும் உடல் அரசியல் (பொட்ய் பொலிடிcச்) நிர்வாணம், உடல் பற்றிப்பேசுதல், உடலைக்கொண்டாடுதல் ஆகியவற்றை முன்வைக்கிறது.


இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் அணுகும்போதுதான் பெரியாரின் நிர்வாணத்தைப் புரிந்ந்துகொள்ளமுடியும். தீவிரப்பெண்ணிய ஓவியர்களின் ஓவியங்களும் அத்தகையதே.


மறுபுறம் சமணமுனிவர்கள் போன்றவர்களின் நிர்வாணத்தை நாம் பெரியளவில் கொண்டாடிவிட முடியாது. ஏனெனில் உடலை ஒடுக்குவதில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. சமணர்களின் இத்தகைய போக்குகளை விரிவாகக் கிண்டலடித்திருப்பார் ஓஷோ. (பிறப்பின் அடிபப்டையில் ஓஷோவும் ஒரு சமணர்தான்) " காந்திதான் உலகின் மிகப்பெரிய வன்முறையாளர். தன் உடலின் மீது அவரளவுக்கு யாரும் வன்முறை செலுத்தியதில்லை" என்பார் ஓஷோ. பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து. (ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.)

உடல் மீதான கடுமையான ஒடுக்குமுறையும் சமணம் அழிவதற்கான காரணங்களில் ஒன்று. மேலும் சமணம் பெண்களை முக்திக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. கவுந்தி அடிகள் கூட நிர்வாணமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை

தலித் எழுத்தாளர் தாக்கப்பட்டார்.

தமிழின் மிக முக்கியமான தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன். இவரது 'தகப்பன்கொடி' நாவலும் 'தீட்டு' சிறுகதைத் தொகுப்பும் மிக முக்கியமான நூல்கள்.

இவர் வலதுகால் ஊனமானவர். நீண்டநாள்கள் சில ஆயிரங்கள் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் வேலூரிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தன் பதிவை உறுதி செய்ய சென்றிருக்கிறார். நீண்டநேரம் கியூவில் நிற்கமுடியாததால் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சங்கரனின் அலுவலக அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
அவருடைய அட்டையை வாங்கிவைத்துவிட்டு அரைமணிநேரம் கழித்து வரும்படி கூறிவிட்டார் அதிகாரி. பெரியவனும் திரும்பிவிட்டார். இதற்கிடையில் தன்னுடைய மனைவியின் பதிவு விட்டுப்போய்விட்டதா என்பதை உறுதிசெய்ய மீண்டும் அந்த அதிகாரியைச் சந்திக்க கியூவில் நின்றிருக்கிறார்.

இதைக் கவனித்துவிட்ட அந்த அதிகாரி "நீ ஹேண்டிகேப் என்பதால்தானே உடனே உள்ளே அனுமதித்தேன். இப்போ வரிசையில் நிக்கறே. கால் வலிக்கலையா?" என்று கேட்டு யூஸ்லெஸ் பெல்லோ என்று திட்டி அடித்து அனுப்பியிருக்கிறார்.

இதில் இன்னொரு கொடூரம் என்னவென்றால் இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் ஜூனியர்விகடன் (24.12.06) 'எழுத்தாளனுக்கு விழுந்த அடி' என்று தலைப்பிட்டிருக்கிறது.
இதுவே அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களுக்கோ, பிற ஆதிக்கச் சாதி எழுத்தாளர்களுக்கோ அடி விழுந்தால் ஒருமையில் 'எழுத்தாளன்' என்று எழுதுமா?

உங்களுக்கு commonsense இல்லையா?


சமீபகாலமாக வலையுலகில் பொதுப்புத்தி குறித்து அதிகமும் பேசப்பட்டது, குறிப்பாக அப்சல் விவகாரத்தில். ஆனால் commonsense என்றழைக்கப்படும் பொதுப்புத்தி குறித்து ஆழமான புரிதலின்றி மேலோட்டமாகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பொதுவாகவே புத்தி என்பதே இயற்கையானதல்ல, மாறாகக் கட்டமைக்கப்பட்டதே. மொழி என்பது சொற்களாலானது, சொற்கள் அர்த்தங்களால் ஆனவை என்ற வழமையான மொழியியல் புரிதலிலிருந்து விலகி சொற்கள் அர்த்தங்களைப் பதிலீடு (subtitute) செய்வதில்லை, மாறாகக் குறியீடு (signify) மட்டுமே செய்கிறது என்னும் சிந்தனையின் அடிப்படையில் குறியீடு, குறிப்பான் ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்தது பின்நவீனம்.

பொதுப்புத்தி என்பது சமூகத்தில் ஆதிக்கத்தைக் கைக்க்கொண்ட பெருங்கதையாடல்களால் கட்டமைக்கப்படுவது. நம்சூழலில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தமிழ்ச்சினிமாவில் கள்ளக்கடத்தல் வில்லன்களின் பெயர்கள் பீட்டராகவோ முஸ்தபாவாகவோ இருப்பது, தலித்துகள் உணர்வற்ற அடிமைகளாகச் சித்தரிக்கப்படுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பால்மீறிகள், நாடோடிகள், பழங்குடிகள் என விளிம்புநிலையினர் குறித்து பெருங்கதையாடல்கள் கட்டமைக்கும் பிம்பங்களே பொதுப்புத்தியாக உருமாற்றமடைகிறது.

இத்தகைய போக்கிற்கு எதிரான எதிர்வினைகளும் எழாமலிருப்பதில்லை. அத்தகைய மனநிலைகளைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். உதாரணமாக நம் இளைஞர்களிடையே உலவும் பாலியல்கதைகளில் பெரும்பாலான கதைகளின் நாயகர்களாக எம்.ஜி.ஆரும் காந்தியும் இருப்பது. இவர்கள் இருவரும் திருஉரு(icon)க்களாக்கப்பட்டவர்கள். இந்த திரு உருக்களின் மீதான எரிச்சலே பாலியல்கதைகளாக மாறுகிறது. இன்னொரு உதாரணமாகக் கேரளச்சமூகத்தில் வழக்கத்திலுள்ள தெறிப்பாட்டைச் சொல்லலாம். நம் வலைப்பூக்களிலும் இத்தகைய உதாரணங்களைச் சொல்லமுடியும்

பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள், சாதி என்பது இயற்கையானதுதான், இந்துமதமே உண்மையான மதம், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழ்நாடே கெட்டுப்போனது அதற்கு முன் இங்கிருந்த ஒரே பிரச்சினை பாலாறும் தேனாறும் ஓடியதால் ஏற்பட்ட ஈ மற்றும் கொசுத்தொல்லைப் பிரச்சினை மட்டுமே என்பதாகவே பொதுப்புத்தியின் போக்கிலிருந்து பேசுபவைதான் ஹரிஹரனின் எழுத்துக்கள். இதுபோன்ற போக்குகளுக்கு எதிர்வினையாகவே விடாதுகருப்பு, டூண்டு(எ) போலிடோண்டு ஆகிய தோழர்களின் எழுத்துக்கள் அமைகின்றன.

இவர்களின் எழுத்துக்களில் 'கெட்ட'வார்த்தைகள் இருக்கின்றதா என்றால் 'ஆம்'. ஆனால் கெட்டவார்த்தை, நல்லவார்த்தை என்பதே பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டதுதான். அவைகள் கெட்டவார்த்தைகள் என்றால் பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களை தஸ்யூக்கள், சூத்திரர்கள், வேசிமக்கள் என்று குறிப்பிடும் இந்துமதப் பிரதிகளைக் கொளுத்தி விட பார்ப்பனர்கள் தயாராக இருக்கிறார்களா?


மேலும் வியாசர்பாடியில் வசிக்கும் ஒரு தலித்துக்கு 'ஙோத்தாபாடு' என்பது சாதாரணமான வார்த்தை. நிச்சயமாக திருவல்லிக்கேணி பார்ப்பான் அந்த வார்த்தையை உச்சரிக்கமாட்டான். அதற்காக அந்த பார்ப்பான் நல்லவன் என்று சொல்லிவிட முடியுமா? கெட்டவார்த்தைகளை விட மோசமானவை சாதிய அதிகாரம் நிறைந்த வார்த்தைகள்.
(ஹரிஹரனின் எழுத்துக்கள் போலிடோண்டு மற்றும் விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்களை விடவும் நாகரீகமானவை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உண்மையில் போலிடோண்டு, விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்கள் தடைசெய்யப்படவேண்டியவை என்றால் நிச்சயமாக ஹரிஹரனின் எழுத்துகளும் தடைசெய்யப்படவேண்டியவைதான்.
டூண்டு, விடாதுகருப்பு எழுத்துக்களில் ஆணாதிக்க, ஆண்மய்ய மற்றும் ஆண்நோக்குப் பார்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்து எனக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நான் கருத்துமாறுபடுவதாலேயே அல்லது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒரு எழுத்தைத் தடை செய்யவோ தணிக்கை செய்யவோ கோருவது நியாயமாகாது. தணிக்கை, தடை, தண்டனை ஆகிய கருத்தாக்கங்களை மனித உரிமை ஆர்வலர்களும் நவீனச்சிந்தனையாளர்களும் கேள்விக்குள்ளாக்கிவரும் சூழலில் விடாதுகருப்பு, போலிடோண்டு, ஹரிஹரன் ஆகிய யாருடைய எழுத்துக்களாக இருந்தாலும் தடை செய்வதோ அல்லது தணிக்கை செய்வதோ நீதியாகாது. )

ஒரு வசதிக்காக ஹரிஹரனின் எழுத்துக்களைப் பெருங்கதையாடல்கள் என்றும் விடாதுகருப்பு, டூண்டு ஆகியோரின் எழுத்துக்களை சிறுகதையாடல்கள் என்றும் பிரித்துக்கொள்ளலாம்(ஒரு வசதிக்காக மட்டுமே). ஆனால் இத்தகைய இருவிதமான அணுகுமுறைகளுமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உதவாது. இரு போக்குகளுமே பிடிவாதமான முன் தீர்மானங்களைக் கொண்டவை.

அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது? பொதுவாக நாம் ஒரு பிரதியை அணுகும்போது உடன்பாட்டு வாசிப்பு, எதிர்மறை வாசிப்பு என்கிற இருவிதமான வாசிப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இது முன் தீர்மானங்களின் அடிப்படையில் அணுகுவது. இது உங்களுக்கு எதையும் புதிதாக கற்றுத் தராது. அறிந்தவற்றிலிருந்து விலகும்போதுதான் நாம் புதிய அர்த்தங்களைச் சென்றடையமுடியும், மேலும் கண்டடைய முடியும்.

விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.

உரையாடல் மட்டுமே நமக்குப் புதிய புரிதல்களை உருவாக்க உதவும். பொதுப்புத்தியிலிருந்து விலகுவதுமட்டுமே இதற்கான வழி.
எனவே, இனி யாராவது "உனக்கு commonsense இருக்கிறதா?" என்று கேட்டால் தயங்காமல் "எனக்கு commonsense இல்லை" என்று பெருமிதத்தோடு கூறுங்கள்.

அறிந்தவற்றிலிருந்து விலகுங்கள், அறியாமையிலிருந்து தொடங்குங்கள், உரையாடப் பழகுங்கள். உரையாடுவோம்.

சென்னையில் போட்டி வலைப்பதிவாளர் சந்திப்பு



என்னடா வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்து ஒரு மாசமாச்சே, இன்னும் யாரும் ஆரம்பிக்கலையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பிச்சாட்டாருய்யா.. லக்கிலுக் ஆரம்பிச்சுட்டாரு.

இந்த வ.ப. சந்திப்பு என்றாலே எனக்கு 'தி..திக்' என்றிருக்கும். முதல் 'திக்' இந்த மீட்டிங்கைச் சாக்காக வைத்துக்கொண்டு வரவணையான்(எ) செந்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறியோ, டிரெய்ன் ஏறியோ, டிக்கெட் எடுத்தோ, எடுக்காமலோ வந்து "குஷ்புவைப் பேட்டி எடுங்க, குஷ்புவைப் பார்க்கணும்", 'சினேகா வீடு எங்கே இருக்கிறது?' 'ரகசியா சென்னையில்தான் இருக்கிறாரா?', 'நமீதாவின் ஷூட்டிங் ஸ்பாட் எது?' என்றெல்லாம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார். ஒருவழியாக குவார்ட்டர் பீடிங் பாட்டிலை வாங்கிக்கொடுத்து அவரைச் சமாதானப்படுத்த வேண்டும்.

அடுத்து ஆரம்பிக்கும் வ.ப.ச என்னும் இம்சை. அங்கே பல 'திக்..திக்'கள். 'கலந்துரையாடல்' என்று சொல்லிவிட்டு மூன்றுபேர் மட்டுமே மாறிமாறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதில் சில பெரியவர்கள் 'நைன்டி பார்ட்டி செவனில்...'என்று ஆரம்பித்துவிடுவார்கள். திடீரென்று ஒரு பெரியவர் மூன்று நிமிடம் வெளியே போய்வந்துவிட்டு, "இப்பதான் அவன் என்னைப் போனில் கூப்பிட்டு மிரட்டினான்" என்று பார்வையாளர்களை 'வஞ்சிக்கோட்டை கிழவன்(?)' ரேஞ்சுக்குப் பெருமிதமாகப் பார்ப்பார். உடனே அனுதாப அலை பலமாக அடிக்க ஆரம்பித்துவிடும். பார்வையாளர்கள் 'த்சோ..த்சோ' என்பார்கள்.

இதற்கிடையில் டீ,போண்டா, செமினார்பிஸ்கெட்கள் பறிமாறப்படும். (செமினார் பிஸ்கட்ஸ்: சென்னைப் பல்கலைக்கழகத்தின் பக்கத்துக்கடைகளில் கேட்டால் சொல்வார்கள் செமினார் பிஸ்கெட் என்றால் என்னவென்று. மேரிபிஸ்கட்தான் அது. உலகத்திலேயே படு மட்டமான மண்ணு போன்ற டேஸ்ட் உடைய பிஸ்கெட் அது. பல்லுப்போன கிழவர்களுக்கென்றே தயாரிக்கப்படுவது. எல்லா செமினார்களிலும் இது கட்டாயம் உண்டு). அப்போதே சில வலைப்பதிவர்கள் 'போண்டா எப்படி இருந்தது?' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளை எழுதுவதற்குத் திட்டமிடுவார்கள். (ஏன் தான் போண்டா, இட்லி, வடை, போன்ற சாம்பார் விஷயங்களில் மூழ்குகிறார்களோ?)

திடீரென்று 'தெகல்கா' ரேஞ்சுக்கு யாராவது ரகசியமாக வீடீயோ மற்றும் போட்டோ எடுப்பார்கள். கூட்டத்தில் இருக்கும் பலரும் பள்ளிகொண்ட சீதாராமையா, சாருமஜும்தார் ரேஞ்சுக்கு போட்டோவுக்குத் தலைமறைவாவார்கள். "என்னைக்கொன்னுடாதீங்க' தொனியில் 'போட்டோ எடுத்துடாதீங்க" என்று அபயக்குரல் எழுபுவார்கள்.எனக்கு அப்போதே கடுப்பாகி விடும். 'ஏன் தான் அடைச்ச கடையாப் பார்த்து உடைச்ச சோடா வாங்கறாங்களே'ன்னு இருக்கும்

செந்திலோ சீக்கிரத்தில் கூட்டத்தை விட்டு வரமாட்டார். கூட்டம் முடிந்தாலும்( போண்டா சாப்பிட்டதும் அதற்குமுன் சீரியஸாகப் பேசிய விஷயத்தை அம்பேல் என்று விட்டுவிடுவார்கள்) அனானி, யுனானி என்று விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும். ஒருவழியாக இந்த தொல்லையிலிருந்து மீண்டதும்தான் 'ஒளிமயமான எதிர்காலம்' ஆரம்பிக்கும். 'பாருக்குப் போகலாம்' என்றவுடனேயே லக்கிலுக், முத்துதமிழினி, பாலபாரதி, வரவணையான் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.

"கார்டு அக்செப்ட் பண்ற பாருக்குப் போங்கள்" என்பார் செந்தில்.
பாருக்குப் போனவுடன் தான் தெரியும் கார்டு இருப்பது முத்துவிடம்தான் என்று. செந்திலிடம் இருப்பதெல்லாம் பழைய விசிட்டிங்கார்டுகள்தான். அதிலும் பாதி கம்பெனியின் அட்ரெஸ்கள் மாறியிருக்கும். சரியாகப் பில் கொடுக்கும் நேரத்தில், வராத போனை அட்டெண்ட் செய்யப் போய்விடுவார் செந்தில்.(ஆனால் 'ஆலமரம்' தங்கவேலு, ஓகை போன்ற 'நல்ல உள்ளங்கள்' நன்கொடை வழங்கும்போது மட்டும் ஆஜராகிவிடுவார்)

'நாட்டாமை' முத்துதமிழினியோ ஆலமரத்தின்கீழ்தான் அமர்ந்து குடிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தியவுடன் தான் கொண்டு வந்திருந்த பழையசெம்பில் சரக்கை ஊற்றிக்குடிக்க ஆரம்பிப்பார்.

உண்மையில் வ.ப.ச.க்குப் பின்னான பார் சந்திப்பில்தான் தீவிரமான விவாதங்களும், கருத்துப்பரிமாற்றங்களும் நடக்கின்றன. மனம் விட்ட உரையாடல் சாத்தியமாகிறது. உறவும் பலப்படுகிறது. 1947 பெரியவர்களும் பெரும்பாலும் வரமாட்டார்கள் என்பதால் பயமின்றிப் பேசலாம்.

ஆகையால் மக்களே, இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் மிகச்சமீபத்தில்(1871ஓ 2025ஓ அல்ல) பாரிலேயே வலைப்பதிவாளர் சந்திப்பு நடத்தலாம் என்றிருக்கிறோம். இதற்காக எங்கள் பேரவைத் தோழர்களும் கடுமையாக உழைக்கவிருக்கிறார்கள்.
செந்திலும் உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். (உதவி என்ன பெரிய உதவி! முத்துதமிழினியை எப்படியாவது அமுக்கிட்டு வந்தால் போதும் - இது வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த செந்திலின் மனசாட்சி)

மீட்டிங்கில் போண்டா, செமினார் பிஸ்கெட்களுக்கு தடா. கோமாதா விருந்து (அதாங்க மாட்டுக்கறி) கட்டாயம் உண்டு. இது 'போட்டி' வலைப்பதிவாளர் சந்திப்பு என்பதால் கோமாதா போட்டி உண்டு.( போட்டி : சென்னையில் முட்டை கலந்த குடல்கறி). கோமாதா சாப்பிடத் தயங்குபவர்களுக்கு ஒரு டம்ளர் (அ) ஒரு டபரா கோமியம் வழங்கப்படும்.

ஒரு பின்குறிப்பு : தலித் இலக்கியத்தின் ஆரம்பகட்டங்களில் மகாராஷ்டிரத்தில் அர்ஜுன்டாங்ளே போன்ற தலித் இலக்கிய முன்னோடிகள் தலித் கவியரங்கங்களை பேருந்துநிலையங்களிலும், கட்டணக்கழிப்பிடங்களிலும் நடத்தினார்கள். அதேபோல நாமும் வலைப்பதிவாளர் சந்திப்பை நடத்த முயற்சிக்கலாம். பேருந்து நிலையத்தில் நடத்தினால் இன்னும் வசதி, யாராவது 1947 கதையை ஆரம்பித்தால் அப்படியே பஸ் ஏறி வீட்டிற்கு எஸ்கேப் ஆக வசதியாக இருக்கும்.

dedicated to 'கோல்டன் ஈகிள் பாரில் நடந்த 'ஒரிஜினல்' வலைப்பதிவாளர் சந்திப்பில் ஓவராகக் குடித்து மட்டையான லக்கிலுக்கிற்கு.

கணவன் என்ற மிருகம்(2)



ஒரு முத்தத்தைத் தந்துஎன்னை அபகரித்துப்போனாய்.
என் இறைச்சியின் கொதிப்படங்கும் முன்னரே
உன் வேட்டை முடிந்துவிடுகிறது.
கரையோரத்தில்
ஒற்றைத்தூண்டிலோடு

காத்திருக்கும் நீ ஆழங்களில் அமிழ்ந்திருக்கும்
ரகசியங்கள் பற்றிக் கவலையற்றிருக்கலாம்.
ஆனால் ஒருபோதும்
வெல்லமுடியாத என்னை
உன் மொழியால் ஆண்டதாய்ப்
பெருமிதம் கொள்ளும் உனக்கு
கனவுகளில் தீர்த்துக்கொள்ளும்
என் வஞ்சமே பதிலாயிருக்கும்.

dedicated to தோழர்.கவிதா. 'கணவன் என்ற மிருகம்' என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தேன். அதில் பலரும் பின்னூட்டம் இட்டிருந்தாலும் பெண் என்ற வகையில் பின்னூட்டமிட்டிருந்தது கவிதா மட்டுமே. என் போன்ற ஆம்பளை நாய்களுக்குக் கவிதை மட்டுமே எழுத முடியும். ஒரு பெண்ணால் மட்டும்தான் வலியை உணர்ந்துகொள்ளமுடியும். thank you kavitha.

ஈ.வே.ராவின் வெங்காயமும் கட்டவிழ்ப்பும்



சமீபகாலமாக பார்ப்பன வன்மத்தோடு கூடிய எழுத்துக்கள் வலைப்பூக்களில் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஹரிஹரன் என்னும் பார்ப்பனர் அறிவு, வரலாற்றுப் புரிதல், அறம், மனசாட்சி என்ற எதுவுமில்லாது உளறிக்கொட்டுவதும் அதற்கும் ஒரு பத்துப்பார்ப்பனர்கள் 'அப்படிப்போடு சபாசு' என்று கூச்சல் போடுவதும் ஒருபக்கம் தமாஷாவாகவும் இன்னொருபக்கம் சகிக்கமுடியாததாகவும் இருக்கிறது.
குறிப்பாக சமீபத்தில் 'பெரியார் கன்னடர் என்பதால்தான் அடிக்கடி வெங்காயம் என்று குறிப்பிட்டார் என்கிற ரீதியிலான பதிவு.
பின்நவீன அறிஞர்களில் ஒருவரான தெறிதா 'கட்டவிழ்ப்பு' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். அதுகுறித்து விரிவாக விளக்க வேண்டுமானாலும் இப்போதைக்கு சுருக்கமாகவே சொல்கிறேன்.பின்நவீனம் எல்லாவற்றையும் பிரதிகளாகவும் கதையாடல்களாகவுமே பார்க்கிறது. நமது எல்லாக் கதையாடல்களும் பிரதிகளும் மொழி வழி கட்டமைக்கப்பட்டவை. அறிவு என்பதும் மொழி வழிக் கட்டமைக்கப்பட்ட அதிகாரச்செயல்பாடே. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெருங்கதையாடல்கள் எல்லாவற்றையும் இயற்கையானவை என்றே வலியுறுத்தும். ஆனால் எதிர் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஒடுக்கப்பட்டோரும் அந்த ஆளும் வர்க்கப் பிரதியின் மற்றும் கதையாடலின் பின்னுள்ள அதிகாரத்தையும் வன்முறையையும் மறுவாசிப்பின் மூலம் வெளிக்கொணர்வர். இதையே கட்டவிழ்ப்பு என்கிறோம்.
தோழர்.பெரியார் சமூகத்தில் நிலவிய சாதி, பார்ப்பனியம், கடவுள், மொழி, தேசியம் ஆகிய அனைத்தையும் கட்டவிழ்த்தார். மட்டுமல்லாது தியாகம், ஒழுக்கம், பொதுநலம், காதல், திருமணம், குடும்பம், கற்பு, குழந்தைப்பேறு(?) ஆகியவற்றையும் கூட அவர் கட்டவிழ்த்தார். அதற்கான மாற்று வாசிப்புகளை முன்வத்தார். அவரின் தொடர்ந்த உரையாடலின் இடை அவரால் உச்சரிக்கப்பட்ட 'வெங்காயம்' என்ற சொ; கட்டவிழ்த்தலின் குறியீடு. அவர் உரித்துப்போட்ட வெங்காயங்கள் கூடைகூடையாய்த் தமிழ்கூறும் நல்லுலகில் குவிந்துகிடக்கின்றன.இத்தகைய தத்துவார்த்த அறிவின்றி எதையாவது உளறுவதுதான் பாப்பாரப்புத்தி என்பது. பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகச் சொல்வார், "பார்ப்பனர்கள் அறிவாளிகள் கிடையாது, புத்திசாலிகள்தான்' என்று. அதனால்தான் உலகின் மாபெரும் மேதைகளில் ஒருவரும் இந்தியாவின் முதன்மை அறிஞருமான பாபாசாகேப்பையே 'எதோ அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தவர் என்கிற ரீதியில் ஓரங்கட்டிவிட்டு சர்வமுட்டாள் ராதாகிருஷ்ணனை 'தததுவ அறிஞர்' என்று போலிப்பிம்பத்தை எழுப்ப முடிந்தது.
dedicated to 'பருப்புசாம்பார்' ஹரிஹரனுக்கு (நன்றி தோழர் டூண்டு)

என்றான பிறகு...

பூக்களால் நாம்பேசிக்கொண்டிருந்த
பொழுதுகளில்நம் கடிதங்களே
வாசமடித்தனஎழுத்துப்பிழைகளோடு.
பேருந்து தவிர்த்துசுட்டுவிரல்
பிடித்து நடைபயணித்த பொழுதுகள்கவிதை
எழுதுவதற்காய்வீணடித்த பொழுதுகளை
விடச் சுகமானவை.
அன்றொருநாள் பேருந்தில்படாமல்
அமர்ந்தபோது நீ கேட்டாய்"நான் ஒன்றும்
தீண்டத்தகாதவள் இல்லையே?"
இன்று நான் படாமல்உன்
சுடிதாரைச் சுருட்டிக்கொண்டு
விலகி அமர்ந்ததன்
காரணம்விளங்கவேயில்லை எனக்கு.
நான் பரிசளித்த சாவிவளையம்வாங்க
மறுத்த நீவீடு
சென்றுஅழுதிருக்கலாம்
யாருமறியாது.
சூழலால் நீ என்னை உதறினாயெனினும்நீ
என்னை நிராகரித்ததை
விடவும்அதிர்ச்சியாயிருக்கிறதுநீ
யாரிடம் பொய் சொல்கிறாய்?


ஒரு குறிப்பு : தினம் ஒரு பதிவை யாருக்காவது சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன். முதல் பதிவு 'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதிக்கு

அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பு

டீ, போண்டா (அ) செமினார் பிஸ்கட்,
அப்புறம் பெரிசுகளின்
அறிவுரை இம்சைகள்
எல்லாம் முடிஞ்சா
ஈகிள் பார்.
அடுத்தநாள் காலையில்
முதல் வேலை
'வலைப்பதிவாளர் சந்திப்பு'- பதிவு
போடணும்.
வரப்போகும் பின்னூட்டங்கள்
வருவதற்கு முன்பே தெரியும்
" ஆகா நான் அன்று
சென்னையில்தானே இருந்தேன்.
ஒரு அருமையான கூட்டத்தை
மிஸ் பன்ணிட்டேன்"

கணவன் என்ற மிருகம்

விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

ஆதிக்கசாதி நாய்களுக்கு...

நேற்று எம்
முன்னோரின் பெயர் சூட்டவும்
வழித்தெறிந்தீர்கள் பேருந்துகளிலிருந்து
உங்கள் தலைவன்களின் பெயர்களை.

இன்று நாங்கள்
இழுப்பதற்கெனக் கைவைத்தால்
நடுத்தெருவில் நாதியற்று
விட்டுப்போயிருக்கிறீர்கள்
சாமியையும் தேரையும்.

நாளை உம் தெருக்களில்
அத்துமீறி நுழைகையில்
கைவிட்டுப் போவீரோ
உம் தெருக்களை.

" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்" - ஜெயலலிதா தாக்கு!

வீட்டிலும் டென்ஷன், வெளியிலும் டென்ஷன். சற்று ரிலாக்ஸாக டி.வி. பார்க்கலாம் என்று டிவியைப் போட்டால், ஜெயாடிவி செய்திகள்.
" முன்னாள் தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதா இன்று காலை விடுத்த அறிக்கை.
'ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. கறுப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று தனக்குத் தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு மனிதரைப் பார்த்துத்தான் நீதிபதி கெட்டுவிட்டார். இதன் பின்னணியில் கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசு இருக்கிறது என்றும் தெரிகிறது. சிக்கன்குனியாவையே கட்டுப்படுத்தமுடியாத கருணாநிதியின் மைனாரிட்டி அரசு மரணதண்டனையையா தடுக்கப்போகிறது? முன்னாள் அதிபர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் பழிவாங்கத்துடிக்கும் சதியின் ஒரு அங்கம்தான் இது என்பதை மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்"
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:-
"முதல்கில் என்னைக் குடிகாரன் என்றார் அந்த அம்மா. இப்போது ஈராக் நீதிபதியைக் குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிதானத்தை இழந்திருக்கிறார் என்று தெரியவில்லையா? அவர் அறிக்கை விடுவதற்கு முன்பு பாரின் ஜின் குடிப்பார் என்று எனக்கும் நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளையும் நீங்கள் மாறி மாறிப் பார்த்துவிட்டீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஈராக்கில் மொத்தம் 53 நீதிமன்றங்கள் இருக்கு. ஆனால் ஒயின்ஷாப்போ 3021தான் இருக்கு...."
இன்று முரசொலியில் வெளிவந்த கருணாநிதியின் கவிதை
உடன்பிறப்பே
மதுமயக்கம் மதுமயக்கம் என்று
மதிமயக்கத்தால் உளறுகின்றார் ஒரு அம்மையார்.
மைனாரிட்டி அரசு என்று நம்மையும் ஏசுகின்றார்.
புயலொன்று இப்போது தன் புடவைக்குள்
இருக்கிறது என்ற மமதையும் கூட.
வங்கக்கடற்கரையில் உறங்கும்
நம் அண்ணன் அறிவான்
நாம் பங்கமற்றவர்கள் என்பதை"
இந்த கடிதம் குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ அளித்த பேட்டி
" கோபாலபுரத்தார் என்னையும் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்திருக்கிறார். வம்புச்சண்டைக்குப் பயப்படாத வரிப்புலி மதிமுக என்பதை அவர் மறந்துவிட்டார். இன்று ஈராக் நீதிமன்றம் வரை கோபாலபுரத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சதாம் தவறாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் கிரேக்கத்திலே ஸ்பார்ட்டகஸ் தண்டிக்கப்பட்டார். ரோமாபுரியிலே சாக்ரடிஸ் தண்டிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். ஏன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வைகோ பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டானே..(ஆ ஊ யேய்..ம்ம்ம்(கர்ஜிக்கிறார்))
இந்த தொல்லை தாங்காமல் திநகர் இந்திபிரச்சாரசபாதெரு பக்கம் வாக்கிங் போனால் அங்கே வாசலில் நின்றுகொண்டு சன் டிவிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாஎ விஜய.டி.ராஜேந்தர்.
" அனனிக்கு ஈராக் மக்கள் சொன்னாங்க சதாம், சதாம்
இன்னைக்கு ஈராக் நீதிபதி சொல்றார் கதம், கதம்.
நீதிபதி அடிச்சது சரக்கா?
அம்மா சொல்றதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?
கலைஞர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க அம்மா
அதெல்லாம் வெறும் சும்மா"
அப்போது அந்த பக்கமாக வந்த சிம்பு டென்ஷனாகி.." லூஸு அப்பா,லூஸு அப்பா, லூஸு அப்பா லூஸுத்தனமா உளறி ஏன்யா உயிரை எடுக்கிறே...(பாடிக்கொண்டிருக்கும் போதே நயன் தாராவிடமிருந்து போன் வர ஜெர்க் ஆகிறார்.)
போனில் நயன்: காப்பாத்துங்க..காப்பாத்துங்க. சரத்குமார் அடுத்த படத்திலயும் ஜோடியா நடிக்க கூப்பிடறார்.

கட் பண்ணினால் ராதிகா வீடு (பின்ன என்ன சரத்குமார் வீடா?)
சரத் சோகமாக புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே வந்து " ஆபிஸ் போகணும். புடவையை அயர்ன் பண்ணிணீங்கினா இல்லையா?
சரத் : ஏன் ராது விரட்டுறே? நான் தான் வேலைப்பளு அதிகமாயிருக்குன்னு கட்சியில இருந்துகூட விலகிட்டேனே. நயன் தாரா வேற என்னோட நடிக்க மாட்டேங்குது. ராது வேற யாரை ஜோடியாப் போடலாம்?
ராதிகா : யாரை வேணும்னாலும் போடுங்க. படம் என்ன ஓடவாப்போகுது?

அப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா?

அப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டும் என்ற பொதுப்புத்தியின் இரைச்சல் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அப்சால் விவகாரம் குறித்து தமிழில் ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது.
நூலின் பெயர் : முகம்மத் அஃப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?
இந்நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை எழுதியவர் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவரும் ,தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், பெண்ணியம், சிறுபான்மையினர் பிரச்சினைகள், இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்காக தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துள்ள என் நேசத்துக்கிரிய நண்பன் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
விலை : ரூ 25
புத்தகம் வேண்டுவோர் கவனத்திற்கு:
கருப்புப்பிரதிகள்,
45அ இஸ்மாயில் மைதானம்,லாயிட்ஸ் சாலை, சென்னை- 5
செல் : 944272500
நூலின் முக்கியப் பகுதிகள்...

. 'காவலில் வைக்கப்பட்டோர் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கழகம் (spdpr)என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலே இந்நூல் அமைந்துள்ளது. நூலிலிருந்து சில பகுதிகள்..
"நான் மரணதண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் விஷ ஊசி மூலம் மட்டுமே கொல்லப்பட வேன்டுமெனவும் என் வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மூலம் அறிந்தேன். என் வழக்கறிஞரின் இக்கூற்று என் மேல் முறையீட்டையே கேலிக்குரியதாக்கிவிட்டது."
- அப்சால் எஸ்.ஏ.ஆர்.கீலானிக்கு வழக்காடுவதற்கான அகில இந்திய குழுவிற்கு எழுதிய கடிதம்

"நீதிவிசாரணை தொடங்கும் முன்பே காவல்துறையினர் அவரைச் சித்திரவதை செய்தார்கள். வாயில் மூத்திரம் கூட அடித்தார்கள். இவற்றை நான் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் சந்தர்ப்பச்சூழ்நிலை என்னை இதைச் சொல்ல வைத்துவிட்டது. என் ஆறுவயது மகனுக்காக இதைச் செய்கிறேன்"
- அப்சாலின் மனைவி தபஸ்ஸூம் குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில்..

"நீதிவிசாரணை முழுவதும் அப்சால் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கோரி நீதிபதியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்குரைஞர்கள் பலரின் பெயரையும் கூட அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர்களனைவரும் அவருக்காக வாதிட மறுத்துவிட்டர்கள். நேர்மையான நீதிவிசாரணையை உறுதி செய்வதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைச் சாகவிடுவதே பெரிய தேசபக்தி என இந்திய வழக்குரைஞர்கள் நினைத்ததற்காக அப்சாலையா குற்றம் சாட்ட இயலும்?
-காஷ்மீர் தலைவர்களின் கூட்டுத்தீர்மானத்தில்...

ஒருகாலத்தில் (1975) மகாவீர்ஜெயந்தியைக் காரணம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று இயக்கம் நடத்திய பாரதிய ஜனசங் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று அப்சால் தூக்கிலிடபப்ட வேண்டுமென்பதற்காக குடியரசுத்தலைவரைச் சந்திக்கிறார். பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித்சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர்கள் இன்று மன்னிப்புக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்துகின்றனர்.
- அ.மார்க்ஸ்
அப்சாலுக்கும் மரணதண்டனைக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் நீங்கள் உதவ விரும்பினால் spdpr முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.
163, வசந்த் என்க்ளேவ், புதுடெல்லி 110057
மின்னஞ்சல் : rona358@gmail.com phone : 011 26152680

அப்சாலுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்!

(04.11.06)மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் 'மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்'தின் சார்பில் அப்சலுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் மார்க்சியம், இருத்தலியம், அம்பேத்கரியம் ஆகியவை குறித்து தமிழில் தொடர்ந்து எழுதி வருபவரும் 'பெரியார்-ஆகஸ்ட்15', 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' ஆகிய முக்கிய ஆவண நூல்களை எழுதியவருமான தோழர் எஸ்.வீ.ராசதுரை.
இக்கூட்டத்தில் எஸ்.வீ.ஆரோடு பல நூல்களை எழுதியவரும் பெண்ணியம், காந்தியம் ஆகியவற்றில் புதிய உரையாடல்களைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான தோழர்.வ.கீதா, மரணதண்டணை ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்திவரும் முன்னாள் நீதிபதி சுரேஷ், தமிழக முதல்வர் கலைஞரின் மகள் கவிஞர்.கனிமொழி, நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மரணதண்டனைக் கைதியும் இப்போதைய தமிழ்-தமிழர் இயக்கத்தின் தலைவருமான தோழர்.தியாகு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப்நய்யார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மரணதண்டணையை ஒழிக்கக்கோரியும் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழங்க்கக்கோரியும் இவர்கள் ஆற்றிய உரைகளின் சில துளிகள்:
கூட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் எஸ்.வி.ஆர் , மரணதண்டனைக்கு எதிரான போராட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கூறி, அப்சாலுக்கு கருணை காட்ட வேண்டுமென்று பகத்சிங்கின் பேரன் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், "ராஜேந்திரசிங்கின்(சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்) மீதான மரணதண்டனை தீர்ப்பினையும் எதிர்ப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் மும்பைக் கலவரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு பால்தாக்கரேக்கும் மோடிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டால் அதையும் எதிர்ப்போம்" என்றார் உறுதியாக.
எழுத்தாளர் வ.கீதா இது வெறுமனே மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமில்லை, முஸ்லீம்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றார்.
நீதியரசர் சுரேஷ், உலக அளவில் மரணதண்டனை குறித்த சட்டங்கள் குறித்தும் அதற்கு எதிரான இயக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
கவிஞர்.கனிமொழி " பெரும்பாலும் பெண், சொத்து ஆகியவைகளை மய்யமாகக் கொண்டே கொலைகள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திட்டமிடாமல் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை. ஆனால் அரசோ திட்டுமிட்டு மரணதண்டனை என்னும் பெயரில் ஒரு கொலையை அரங்கேற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். 'தனஞ்செயனின் கடைசி நிமிடங்கள்' என்னும் நூலிலிருந்து சில வரிகளை வாசித்துக் காட்டினார். "கற்பிக்கப்பட்ட போலித்தேசியத்தின் பெயரால் முஸ்லீம்கள் பழிவாங்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்த கனிமொழி, "நம்முடைய பண்டைய இலக்கியங்களை எடுத்துக்கொண்டோமென்றால், சிலப்பதிகாரம் குறித்தும் கண்ணகி குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கண்ணகி தவறாக தண்டனை அளிக்கப்பட்ட கோவலனுக்காகவே மதுரையை எரிக்கிறாள். இப்போது நாமும் அப்சாலுக்குத் தூக்கு வழங்கப்படும்போது மவுனம் சாதித்தோமென்றால் நம்மையும் யார் எரித்தாலும் தவறில்லை" என்றார் ஆவேசமாக.
பிரபல பத்திரிகையாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப்நய்யார், "பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது நானும் அந்த கட்டிடத்தின் உள்ளேதான் இருந்தேன். அப்போதே பல எம்.பி.க்கள் ஆவேசப்பட்டார்கள். ஆனால் அப்போதும் நான் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் எல்லையில் 10லட்சம் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்கூடாகப்பார்த்தவன் நான். மரனத்தின் வலி எனக்குத் தெரியும். ஆனால் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நஞ்சையே விதைத்து வருகின்றன. நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதற்கு முன்பே பத்திரிகைகளில் விசாரணை நடத்தி தீர்ப்பும் வழங்கிவிடுகிறார்கள்" என்றார்.
பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர்மணி, "நீதிபதிகளோ நீதித்துறையோ பாரபட்சமற்றவையல்ல. ஜெயேந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஆனால் மதானிக்கோ குற்றபப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின்பும் பிணை வழங்கப்படவிலலை" என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் "அமெரிக்காவில் செப்டம்பர்11 தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஜகாதியாமுகையா என்பவருக்கே ஆயுள்தண்டனைதான் வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதக் கதையாடலக்ளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவிலேயே அந்த நிலை. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்சாலுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்? " என்று கேள்வியெழுப்பினார்.
கூட்டத்தில் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழக்கக்கோரிய மனுவில் கையெழுத்துகளும் வாங்கப்பட்டன.

எத்தனைகாலம் பியர்போத்தல்களோடு பேசிக்கொண்டிருப்பது?

காதலற்றுக் கழிகிறது காலம்..
நண்பகல் வெறுமையைப் போல
மயான வெம்மையைப் போல..
ஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.
இந்த காலத்தை என்ன செய்வது?
கொலுசொலி, சிணுங்கல்,
பொய்க்கோபம், வாழ்த்தட்டைகள்,
சின்னச்சின்ன பரிசுகள்
பிரிவின் வாதை,
நெகிழ்வின் கண்ணீர்..
எதைக்கொண்டு நிரப்புவது
இந்த காலத்தை?
பதில்சொல்லுங்களேன் எவளாவது.

தோழர் டூண்டு

வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.

காஞ்சி ஜெயேந்திரனுக்காக...

நான் மீசை வைத்து தாடி மழித்தால்
அவன் தாடி வைத்து
மீசை மழிக்கிறான் என்கிறாய்.
நான் தெற்கு நோக்கி வணங்கினால்
அவன் மேற்கு நோக்கித் தொழுகிறான் என்கிறாய்.
எனக்கும் அவனுக்குமான
வித்தியாசங்களை விவரமாய்
விளக்கிச் சொல்லும் நீயோ
நான் உண்ட இலையில்
பேண்டு தொலைக்கிறாய்.
பின் பேண்ட இலையை
உண்டு முடிப்பாயோ?

வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்

தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.


நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான அநாகரிகதர்மபாலாவின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்

வரவணையான் : ஆட்டோகிராப்

( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)

அசுரன் : நான் சிவப்பு மனிதன்

லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)

we the people : பாரதவிலாஸ்

இட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்

ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)

ஈழபாரதி : தர்மயுத்தம்

வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்

ஜெயராமன் : அய்யர் தி கிரேட்

டோண்டு ராகவன் : நான் அவனில்லை

விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்

குழலி ; அய்யா, மறுமலர்ச்சி

யார் யாரைத் தூக்கில் போடலாம்?

புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் விஜய் தெண்டுல்கரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது, " யாரையாவது எண்கவுண்டர் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் யாரை என்கவுண்டர் செய்வீர்கள்?" என்று. அதற்கு தெண்டுல்கர் உடனே சொன்ன பதில். "நரேந்திரமோடியை". இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்று சிலர் அடம்பிடிக்கும் போது எனக்குத்தோன்றியது இதுதான். 'பாராளுமன்றம் என்னும் பைசா பிரயோசனமில்லாத ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் என்னும் ஜந்துக்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சாலைத் தூக்கில் போடலாம் என்றால் 3000 முஸ்லீம்களின் படுகொலைகளுக்குக் காரணமான நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவதில் என்ன தவறிருக்கமுடியும்?

எனக்குத் தமிழ்நாட்டில் யாரையாவது என்கவுண்டர் செய்ய அதிகாரம் கொடுத்தால் நான் சுடப்போவது எழுத்துலகப் பாசிஸ்ட் 'துக்ளக்' சோ.
அப்சாலைத் தூக்கிலிடுவது சரியென்றால் வேறு யார் யாரையெல்லாம் தூக்கிலிடலாம் என்று யோசித்தபோது....

1. கார்கிலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலிருந்து இஸ்ரேலிடம் ஏவுகணை வாங்கியது வரை ஊழல் செய்துவிட்டு தேசபக்தி பற்றி லெக்சர் அடிக்கும் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அடல்பிகாரிவாஜ்பேயி.

2. பாபர்மஜ்ஸித் என்னும் வரலாற்றுச் சின்னம் இடிபடுவதற்குக் காரணமாயிருந்த கடப்பாறைக் காதலன் அத்வானி.

3. அரசியல் தரகன் சூனாசாமி (சுப்பிரமணியசாமி)

4. மனிதனுக்குப் பிறந்ததாக ஒத்துக்கொள்ளாமல் "கோமாதா எங்கள் குலமாதா" என்று அடம்பிடிக்கும், "இந்துக்களின் கடையிலேயே பொருட்களை வாங்குங்கள்" என்று உளறிக்கொட்டி (பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடை விரித்து எல்லாவற்றையும் கபளீகரம் செய்யும்போது இந்து என்னடா, பொந்து என்னடா) ஆனால், மறந்தும் கூட "(தலித்துகளாகிய) இந்துக்களின் வீட்டிலேயே பெண் எடுங்கள்" என்று தூக்கத்தில்கூட உளறிவிடாத 'வீரத்தைத் துறந்த'(வீரத்துறவி?) ராமகோபாலன்.

5. காம சூத்திர லிபிகளை தன் எழுத்துகளில் பயன் படுத்துவதாலேயே பெரிய எழுத்தாளராகி விசிறி சாமியார், ஃபேன் சாமியார் என்று காமெடி அடித்து பலரைக் கெடுத்து வைத்திருக்கும் பாலகுமாரன்

6. விஞ்ஞானத்தையே மதத்தைப்போல கற்பிக்கும் சுஜாதா

7. காஷ்மீர் பிரச்சினை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் 'ரோஜா' என்று படம் எடுப்பது, 'பம்பாய்' என்னும் முஸ்லீம் விரோதக்குப்பையை எடுத்து அதில் தமிழனை(" தமிழா தமிழா! நாளை நம் நாடே!) தேவையில்லாமல் அழைப்பது, 'பம்பாய்' படத்தில் 'துலுக்கன்' என்று வசனம் வைத்து 'கேரக்டர் வாய்ஸ்' என்று சப்பைக்கட்டு கட்டுவது, ஆனால் திராவிட இயக்கம் பற்றி ஒரு படம் எடுத்து அதில் 'பார்ப்பான்' என்ற வார்த்தை ஒரு இடத்திலும் கூட வராமல் கவனமாக பார்த்துக்கொள்வது, திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.

8. இதுவரை ஒரே ஒரே கதையை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு கருடபுராணம், புருடாபுராணம் என்று ரீல் விட்டு சகலமும் பார்ப்பனீயத்தின் பக்கம் சாயும் பார்ப்பன அடிவருடி ஷங்கர்

9. 97% பார்ப்பனரல்லாத மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு சட்டசபையில் அமர்ந்து " நான் ஒரு பாப்பாத்திதான்" என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா....
இன்னும் நீங்களும் எழுதலாம்

(பின்குறிப்பு : எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை. நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான். ஆனால் அப்சலைத் தூக்கில் போட வேண்டுமென்ற பார்ப்பனர்கள் மற்றும் ஜெய்ஹிவ்ந்த் தாசர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்வது? தோழர் மாவோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, " மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை")

உலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடிதம்

அன்பு நண்பர் செல்வனுக்கு

சமீபத்தில் சமணமுனிவர்களுக்கு எதிரான பெரியார் திராவிடர்கழகத்தினரின் போராட்டத்தைப் பற்றியும் பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதைக்குறித்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் வாசிக்க நேர்ந்தது. ரோசாவசந்த், திராவிடத்தமிழர்கள், செல்வன் ஆகியோரின் பதிவுகளில் என்னால் செல்வனின் பதிவை மட்டுமே படிக்கமுடிந்தது. அது குறித்து ஒரு சில பகிர்வுகள்...
சமணமுனிவர்கள் விவகாரத்தில் பெரியார் தி.க தோழர்கள் நடந்துகொண்டது முற்றிலும் தவறானதே. பெரியார் நிர்வாணமாக தெருவிலே நின்றாரா, அல்லது தெருவோரத்திலே நின்றாரா என்பது கேள்வியல்ல.பெரியார் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானார். அது மட்டுமல்ல, ஜெர்மனியிலும் சோவியத்ரஷ்யாவிலும் அவர் இருந்தகாலங்களில் பூர்ஷ்வாக்குழுக்கள், தாராளவாதக்குழுக்கள், அனார்கிஸ்ட்கள், டிராட்ஸ்கியக்குழுக்கள் எனப் பல குழுக்களையும் சந்தித்துப்பேசினார். டிராட்ஸ்கியக்குழுக்களோடு தொடர்பு இருந்தததாலேயே பெரியார் சோவியத்யூனியனை விட்டு வெளியேற்றப்படுகிறார். இது எதைக்காட்டுகிறதென்றால், புதிய சிந்தனைகளையும் போக்குகளையும் கற்றுக்கொள்கிற, வரவேற்கிற தன்மை பெரியாரிடம் இருந்தது என்பதையே. இத்தகைய போக்குகள் தமிழில் அருகி வருகின்றன என்பது வருந்தத்தகக்கது

தீவீரப்பெண்ணியம்(radical feminism) மேற்கில் எழுந்தபோது பெண்ணிய ஓவியர்கள் தங்கள் நிர்வாணத்தை வரைய ஆரம்பித்தார்கள். அவர்களை என்ன செய்யலாம்? வெளிப்படையாக பாலியல் குறித்து எழுதும் நம் பெண்கவிஞர்களை சினிமாக்கவிஞர் சினேகன் சொன்னதைப் போல "சென்னை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்திவிடலாமா?"

மேலும் பெரியார் நிர்வாணமாக நின்றது ரமேஷ்-பிரேம் சொல்வதைப் போல வெறுமனே துறவுநிலை மட்டுமல்ல, அது உடலின் கொண்டாட்டத்தை வலியுறுத்துவது.

பொதுவாகவே மதம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் உடலை ஒடுக்கவே சொல்கின்றன. ஒருபுறம் பெண்களை போகப்பொருளாகக் கற்பிக்கும் இந்துமதம் மறுபுறம் பெண்ணுடலை விலக்கிவைக்க வேண்டியதாகவே கருதுகிறது. சுத்தம் x அசுத்தம் என்று கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளிலிருந்தே தீண்டாமை கற்பிக்கப்பட்டது. தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். இழிவான தொழிலை செய்ய பணிக்கப்பட்டதாலேயே அசுத்தம், தீட்டு என்று தலித்துகள் கோயிலிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதைப்போலவே பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது. இப்படியாக பெண்காமம் வெளியே சொல்லத்தகாதது என்று சொல்லப்படுவது வரை இதை நீட்டித்துக்கொள்ளலாம்.

இப்படியாக அதிகாரமும் ஒடுக்குமுறையும் உடலை ஒடுக்குதல், உடலை இழிவாகக் கருதுதல், உடல் பற்றிப் பேசாதிருத்தல் ஆகியவற்றை முன்வைத்தால் விடுதலையைப் பேசும் உடல் அரசியல் (body politics) நிர்வாணம், உடல் பற்றிப்பேசுதல், உடலைக்கொண்டாடுதல் ஆகியவற்றை முன்வைக்கிறது. இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் அணுகும்போதுதான் பெரியாரின் நிர்வாணத்தைப் புரிந்ந்துகொள்ளமுடியும். தீவிரப்பெண்ணிய ஓவியர்களின் ஓவியங்களும் அத்தகையதே.

மறுபுறம் சமணமுனிவர்களின் நிர்வாணத்தையும் நாம் பெரியளவில் கொண்டாட முடியாது. ஏனெனில் உடலை ஒடுக்குவதில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. சமணர்களின் இத்தகைய போக்குகளை விரிவாகக் கிண்டலடித்திருப்பார் ஓஷோ. (பிறப்பின் அடிபப்டையில் ஓஷோவும் ஒரு சமணர்தான்) " காந்திதான் உலகின் மிகப்பெரிய வன்முறையாளர். தன் உடலின் மீது அவரளவுக்கு யாரும் வன்முறை செலுத்தியதில்லை" என்பார் ஓஷோ. பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து. (ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.) உடல் மீதான கடுமையான ஒடுக்குமுறையும் சமணம் அழிவதற்கான காரணங்களில் ஒன்று. மேலும் சமணம் பெண்களை முக்திக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. எனவே நண்பர் ஒருவர் கேட்டதற்குப் பதில் கவுந்தி அடிகள் நிர்வாணமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான்.

தேவையற்ற விவகாரங்களுக்குப் போய்விட்டேன் என்று கருதுகிறேன். பெரியார் தி.கவின் நிலைப்பாடு முற்றிலும் தவறானதுதான். பெரியாரின் நிர்வாணம் சரியெனில் சமண முனிவர்களின் நிர்வாணமும் சரிதான்.

ஆனால் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெரியாரிஸ்ட்களையும் பெரியார் இயக்கங்களையும் வசைபாடுவது கண்டிக்கத்தக்கது. (ஒருவர் தி.க முண்டங்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் திட்டியிருந்தார்). அதிலும் பெரியார் தி.க விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சனநாயக ரீதியான அமைப்பு. குஷ்பு விவகாரத்தில் முழுக்க முழுக்க குஷ்புவுக்கு ஆதரவாக நின்ற ஒரு இயக்கம். இந்த மாதிரியான விவகாரங்களை பார்ப்பனர்கள் மிகச்சாமர்த்தியமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். உதாரணமாக இந்த சமண முனிவர்கள் விவகாரத்திலேயே பெரியார்தி.கவைக் கடுமையாக விமர்சித்து தனது தலையங்கத்திலே எழுதிய காலச்சுவடு என்னும் இதழின் ஆசிரியர் கண்ணன் ஒரு பார்ப்பனர், மட்டுமல்ல முன்னாள் ஏ.பி.வி.பி உறுப்பினரும் கூட.

இதே பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதையும் அவர் மைனராக இருந்தபோது வேசி வீடுகளுகளுக்குச் சென்றதையும் இணைத்து "பெரியார் ஒரு பொம்பளைப்பொறுக்கி" என்று ரவிக்குமார் என்ற தலித் எழுத்தாளரை ஒரு கட்டுரை எழுதவைத்து வெளியிட்டு தன் பார்ப்பன மன வக்கிரங்களைத் தணித்துக்கொண்டார். எனவே இந்த மாதிரியான ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெரியார் பற்றி வலைத்தளங்களில் படித்தே தெரிந்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். நேரடியாக பிரதியைத் தேடிப்பிடித்து வாசிப்பதே நல்லது. திரிபுகளே நிஜமென உலவும் காலமிது.

கடவுளுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள்

"பொதுவாக பார்ப்பனர்களைப் போல வேறு நாத்திகர்கள் இல்லை" என்பார் தோழர்.பெரியார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எல்லா பார்ப்பன அர்ச்சகர்களும் எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்வது கடவுள் சிலை முன்னால்தான்.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை பெண் தெய்வங்கள்தானே? அதற்கு ஏன் ஒரு ஆண் பூசாரி சேலை மாற்றிவிடுகிறார்? ஏனென்றால் அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்று அந்த பார்ப்பனருக்குத் தெரியும்.

இன்னொன்றை யோசித்துப் பாருங்கள். கடவுள் இந்த உலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த இயற்கைநியதிக்கு மாறாக மாமிசம் சாப்பிடாத ஒரு இனம் இருக்கிறதென்றால் அது பார்ப்பனர்கள்தான்.உலகில் மாமிசம் சாப்பிடாத இனக்குழுவும் இருக்கிறதா என்ன?

பஞ்சமனின மொழியில்

வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர் தெளித்து புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உங்கள்
செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியா பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி.
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்

மண்


அவர்கள் வாழும் மண் உங்களுடையதா
அல்லது நீங்கள் வாழும் மண் அவர்களுடையதாஅல்லது
பொதுவாக நீங்கள் இருவரும் வாழும் மண் யாருடையது என்பது குறித்த ஆய்வுகள், விவாதங்கள்,கருத்துரைகள் தயாரிக்கப்படுகின்றன உங்களால்,
அவர்களாலும்கூட
மண்ணில் பொதித்த கண்ணிவெடியால் சொச்சம் முதியவர்களைக் கொன்றீர்கள்..
அவர்கள் விண்ணிலிருந்து மண் நோக்கிப்
பொழிந்த குண்டுகளால் சொச்சம் பிஞ்சுகளைக் கொன்றார்கள். எப்படியாயினும் பிணங்கள் போகப்போவது மண்ணிற்குத்தானே. (மண்ணிலிருந்து காணாமல் போனவர்களின் பட்டியல் தனி)
ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றும்போதோ
அல்லது மீட்கப்படும்போதோ
அழிவதென்னவோ மாற்றினத்து
பெண்ணுடல்கள்தான்.
யோனி மூடிய மண்
பெண்
மண்
பூமிமாதா
உங்கள் மண்ணிற்கான பேச்சுவார்த்தைக்கு
அயல் மண்ணிலிருந்து தூதுவர்கள் வருவார்கள்.
நீங்களோ எதிரியோ
வெற்றி பெறும்போது
கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மண்ணை
அவர்களுக்கு விற்கத்தொடங்குவீர்கள்.
இன்னமும் உங்களுக்கு மண் மீதுதான் பிரியம் எனில்
சில பொட்டலங்களில் சேகரித்துக்கொள்ளுங்கள்.
பலவற்றிற்கு அவை பயன்படும்.
துப்பாக்கி ரவைகள் தயாரிக்க
தேனீரில் கலந்து குடிக்க
முகாம்களுக்கான அடித்தளம் அமைக்க
சில நேரங்களில் பிணங்களின் வாய்களை மூடவும் கூட

மேதகு தாகம்


தலைவருக்குத் தாகம்
மிகும் வேளை போர்.
குறையும் வேளையோ பேச்சுவார்த்தை.
மிகுந்தால் அவர் போராளி,
குறைந்தாலோ அவர் ஒருராஜதந்திரி
.குறைகிறதோ மிகுகிறதோ
கோப்பை கோப்பையாய்க்குடிக்க கொடுக்க வேணும்.

நாடு


நாடு உனக்கு என்ன செய்தது
என்று கேட்காதே
(ஏனெனில் அது ஒன்றும் செய்யாது.)நாட்டிற்கு நீ என்ன செய்தாய்
என்று கேள்.
(நீதான் கேட்கவேண்டும்.பின் என்ன பூர்ஷவாக்களா கேட்பார்கள்?)

குரல் கொடுப்போம்

பொடாசட்டம் காலவதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.வைகோவிற்காகவும் நெடுமாறனுக்காகவும் குரல்கொடுக்கும்,கொடுத்த பலரும் ஊத்தாங்கரையில் கைதுசெய்யப்பட்ட நக்சல்பாரித் தோழர்கள் குறித்து அக்கறை கொள்ளவ்ல்லை.அதிலும் கைது செய்யப்பட்டவர்களில் 6பேர் பெண்கள்.இதுகுறித்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் மனித உரிமை இயக்கங்களும் சிந்திக்க வேண்டும்.



நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல
நான் நேசிக்கும்படி இருப்பது.

விண்ணப்பம்


நீ வேண்டும்

அல்லது

இழந்து போன'

நான்' வேண்டும்.

அ.தி.மு.க.க்கு இல்லை அரசியல் தீண்டாமை

திருமாவளவனுக்கு சில கேள்விகள்!
கருணாநிதி உங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டால் 'அரசியல் தீண்டாமை' என்று முழங்கும் நீங்கள் ,தேவர் ஓட்டு போய்விடும் என்று புதிய தமிழகத்தை அ.தி.மு.க கூட்டணியில் சேர்க்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?செ.கு.தமிழரசன் எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்தே அ.தி.மு.க.வை ஆதரித்து வந்தவர்.ஆனால் அவருக்கு ஒரு சீட்டு கூட தரப்படாதைப் பற்றி உங்கள் கருத்து...?மேலும்,நீங்கள்,வைகோ,ஜெ மூவரும் மதுரையில் பேசுவதாக இருந்த கூட்டத்தை ,தேவர் ஓட்டு பாதிக்கும் என்ற உளவுத்துறையின் ரிப்போர்ட்டையொட்டி,ரத்து செய்தாரே?இது அரசியல் தீண்டாமையாக உங்களுக்குத் தோன்றவில்லையா

வனம்

நீயுமற்று நானுமற்று நீண்டுகிடக்கும் பெருவெளி
பெருவெளியின் பரப்பெங்கும் பெய்துகிடக்கும் பேரமைதி
அமைதியை கொத்தித் தின்னும்
பறவைகளின் கீச்சொலி.
பல்கிப்பெருகும் வண்டுகளின்
அளவற்ற காமத்தால்
நனைந்தது வனம்
.உருகி வழியும் மாம்சம்
எரிந்துகொண்டிருக்கும் தீயில்
வீழ்ந்த வேளை
தேவதூதர்களின் வருகையால்
அதிர்ந்தது வனம்
பின் எப்போதும்காடு அலறிக்கொண்டேயிருந்தது

கசிவு


நீங்கள் ஒரு குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை நிமிண்டுகிறீர்கள்.
இப்போது குளித்து முடித்த
அதன் தேகத்தை தழுவுகிறீர்கள்.
கன்னததில் அழுந்த முத்தமிடுகிறீர்கள்.

இப்போதுநீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள். - சுகுணாதிவாகர்

ஒரு சில சொற்கள்....


நாம் மிதந்து கொண்டிருக்கிறோம்

சில நேரங்களில் இணைந்தும்...

சில நேரங்களில் விலகியும்....

invitation

i m sugunadiwakar 4m tamilnadu.i m poet&write some political articles.