சாவுக்கும் சர்வே
சதாம் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா, வருத்தமளிக்கிறதா என்று ஒரே சர்வேயாம். கேவலமாக இருக்கிறது. எல்லாப் பிணங்களையும் மேட்டராகவும் ஸ்டோரியாகவும் கவரேஜாகவும் நியூஸாகவும் பார்க்கும் மீடியாக்கார புத்தி. நல்லவேளை பத்திரிகைக்கார நாய்ப்பிழைப்பிலிருந்து மீண்டாகிவிட்டது.
அதைப் பார்த்தவுடன் தோன்றியது நீங்கள் சொல்வதுதான் :-(
அதில் இன்னும் ஒரு காமெடி, எல்லாத்தையும் பைத்தியக்காரனாக்கும் ஐட்டம் என்னவென்றால்...
சர்வேப்படி 70% மேல இது துக்ககரம்னு சொல்றாங்க. ஆனா நம்ம நடுநிலை உடான்ஸ் சர்வேயண்ணன் சதாம் கொல்லப்பட்டதே சரின்னு கடைசியா நாட்டாமை பண்றார்.
அப்புறமா, இந்த ரண்டு நாளா, சில பார்ப்பனர்கள், சதாம் சம்பந்தப்பட்ட எல்லா பதிவுக்கும் ஓடி ஓடிப் போய் அமெரிக்காவுக்கு பாலாபிஷேகமும் புனித நீராட்டும் செய்து புளங்காகிதமடைந்தார்கள்.
இன்னும் பாருங்கள். பதுங்கியிருக்கிற சில பார்ப்பன அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் களத்தில் குதித்து புது புள்ளிவிவரப் புழுகுகளோடு புல்லரிக்க வைப்பார்கள்.
இவர்கள் மட்டும் ஏன் இப்படி இனவாதிகளாகவே இருக்கிறார்கள் என யோசிக்க வேண்டும்
நீங்கள் ஏதோ கோபத்தில் பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
சர்வேக்கள் என்பது, மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவே.
அமெரிக்காவின் எதேச்சதிகாரப் போக்கிற்கு ஆதரவா இல்லை எதிரா, என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள், புரியும்.
- அருண்,சென்னை.
தொலைக்காட்சியில் தண்டனை நிறைவேற்றியதைக் காட்டியதெல்லாம்; மிக அற்ப தனம். இவர்கள் காசுக்காக மலம் தின்னும் கூட்டம்.
யோகன் பாரிஸ்
//தல..இது புதுசா இருக்கே.//
நாடோடி அய்யா,
இல்லையே..ஏற்கெனவே கருப்பய்யா, இந்த செய்தியை போட்டு உடைத்து விட்டாரே..இப்போ அவங்க ரெண்டு பேரும் உழைக்கும் வர்க்கமாம்,எல்லாரையும் போல.
பாலா
பாலா அதுதான் ஏற்கனவே bangde111111 என்ற பெயரில் பின்னூட்டம் போட்டுவிட்டீர்களே. இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
//பாலா அதுதான் ஏற்கனவே bangde111111 என்ற பெயரில்//
வெளியே மிதக்கும் அய்யா,
அது போலி.
பாலா
//
வெளியே மிதக்கும் அய்யா,
அது போலி.//
இவரு 100% ஒரிஜினலாம்! அல்லாரும் நம்புங்கப்பா!
அட, இப்பத்தான் இதப் பாத்தேன்.
சதாம் தூக்கில் ஏற்றியது சரியா என்று சர்வே போட்டதில் ஒரு தவறும் இருப்பதான் எனக்கு தெரியல.
இந்த சர்வே போடலன்னா, நம்மவர்களில் 134 ஆட்கள் துக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சிருக்காது சாமி.
ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயங்கள் இருக்கும். We should try to understand and respect that.
என்ன, நான் சொல்றது சரியா?
சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தி உங்களை..?
சந்தோஷப் படுத்தியது (22) (11%)
துக்கப் படுத்தியது (134) (70%)
No feelings பா! (35) (19%)
குடியானவரே,
//சர்வேப்படி 70% மேல இது துக்ககரம்னு சொல்றாங்க. ஆனா நம்ம நடுநிலை உடான்ஸ் சர்வேயண்ணன் சதாம் கொல்லப்பட்டதே சரின்னு கடைசியா நாட்டாமை பண்றார்.
//
70% மக்கள் கருத்து சார்.
சதாம் கொல்லப்பட்டது சரின்னு சொன்னது என் தனிப்பட்ட கருத்து.
இதிலும் பார்ப்பனர் பார்ப்பனீயம் எல்லாம் இழுக்கும் உங்கள் திறன் பாராட்டுக்குரியது :)
நிஜம்...
நீங்கள் நாய் பொழைப்பு பார்த்தவர் தானா? ஆமாங்க ! எதுல?