உடலைக்கொண்டாடிய பெரியார்
டிசம்பர்24- பெரியார் நினைவுநாளுக்காக
சிலகாலத்திற்கு முன்பு சமணமுனிவர்களின் நிர்வாணம் பற்றியும் பெரியாரின் நிர்வாணம் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.
பெரியார் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானார் என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான்.. அது மட்டுமல்ல, ஜெர்மனியிலும் சோவியத்ரஷ்யாவிலும் அவர் இருந்தகாலங்களில் பூர்ஷ்வாக்குழுக்கள், தாராளவாதக்குழுக்கள், அனார்கிஸ்ட்கள், டிராட்ஸ்கியக்குழுக்கள் எனப் பல குழுக்களையும் சந்தித்துப்பேசினார். டிராட்ஸ்கியக்குழுக்களோடு தொடர்பு இருந்தததாலேயே பெரியார் சோவியத்யூனியனை விட்டு வெளியேற்றப்பட்டார்..
இது எதைக்காட்டுகிறதென்றால், புதிய சிந்தனைகளையும் போக்குகளையும் கற்றுக்கொள்கிற, வரவேற்கிற தன்மை பெரியாரிடம் இருந்தது என்பதையே. இத்தகைய போக்குகள் தமிழில் அருகி வருகின்றன என்பது வருந்தத்தகக்கது
தீவீரப்பெண்ணியம்(radical feminism) மேற்கில் எழுந்தபோது பெண்ணிய ஓவியர்கள் தங்கள் நிர்வாணத்தை வரைய ஆரம்பித்தார்கள். (அவர்களை என்ன செய்யலாம்? வெளிப்படையாக பாலியல் குறித்து எழுதும் நம் பெண்கவிஞர்களை சினிமாக்கவிஞர் சினேகன் சொன்னதைப் போல "சென்னை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்திவிடலாமா?"). இத்தகைய பார்வையில்தான் பெரியார் நிர்வாணமாக நின்றதையும் அணுகமுடியும்.
மேலும் பெரியார் நிர்வாணமாக நின்றது வெறுமனே துறவுநிலை மட்டுமல்ல, அது உடலின் கொண்டாட்டத்தை வலியுறுத்துவது.
பொதுவாகவே மதம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் உடலை ஒடுக்கவே சொல்கின்றன. ஒருபுறம் பெண்களை போகப்பொருளாகக் கற்பிக்கும் இந்துமதம் மறுபுறம் பெண்ணுடலை விலக்கிவைக்க வேண்டியதாகவே கருதுகிறது.
சுத்தம் x அசுத்தம் என்று கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளிலிருந்தே தீண்டாமை கற்பிக்கப்பட்டது. தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். இழிவான தொழிலை செய்ய பணிக்கப்பட்டதாலேயே அசுத்தம், தீட்டு என்று தலித்துகள் கோயிலிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதைப்போலவே பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது. இப்படியாக பெண்காமம் வெளியே சொல்லத்தகாதது என்று சொல்லப்படுவது வரை இதை நீட்டித்துக்கொள்ளலாம்.
இப்படியாக அதிகாரமும் ஒடுக்குமுறையும் உடலை ஒடுக்குதல், உடலை இழிவாகக் கருதுதல், உடல் பற்றிப் பேசாதிருத்தல் ஆகியவற்றை முன்வைத்தால் விடுதலையைப் பேசும் உடல் அரசியல் (பொட்ய் பொலிடிcச்) நிர்வாணம், உடல் பற்றிப்பேசுதல், உடலைக்கொண்டாடுதல் ஆகியவற்றை முன்வைக்கிறது.
இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் அணுகும்போதுதான் பெரியாரின் நிர்வாணத்தைப் புரிந்ந்துகொள்ளமுடியும். தீவிரப்பெண்ணிய ஓவியர்களின் ஓவியங்களும் அத்தகையதே.
மறுபுறம் சமணமுனிவர்கள் போன்றவர்களின் நிர்வாணத்தை நாம் பெரியளவில் கொண்டாடிவிட முடியாது. ஏனெனில் உடலை ஒடுக்குவதில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. சமணர்களின் இத்தகைய போக்குகளை விரிவாகக் கிண்டலடித்திருப்பார் ஓஷோ. (பிறப்பின் அடிபப்டையில் ஓஷோவும் ஒரு சமணர்தான்) " காந்திதான் உலகின் மிகப்பெரிய வன்முறையாளர். தன் உடலின் மீது அவரளவுக்கு யாரும் வன்முறை செலுத்தியதில்லை" என்பார் ஓஷோ. பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து. (ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.)
உடல் மீதான கடுமையான ஒடுக்குமுறையும் சமணம் அழிவதற்கான காரணங்களில் ஒன்று. மேலும் சமணம் பெண்களை முக்திக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. கவுந்தி அடிகள் கூட நிர்வாணமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை
உடல் அரசியல் - body politics. இது தவறாகப் பதிவாகியிருக்கிறது.
Who gave the world Kama Sutra.
Not periyar but hinduism.
//தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது.//
உண்மைக்கு வெளியே மிதக்கின்றீர்கள்!
பெண்களுக்கு இயற்கையான இந்த நிகழ்வு நாட்களில் உடல் உபாதை பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.
கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.
மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.
மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.
நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்.
சும்மா எதாவது உண்மையில்லாததை விடுதலை செய்து கொண்டே இருங்கள்!
//பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து.//
குறிப்பாகக் குறியை அளந்துகாட்டும் தற்குறித்தனம் பகுத்தறிவானது!
//முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. //
அட்றா சக்கை.. அட்றா சக்கை! புதுவெள்ளமாய் பகுத்தறிவு பொங்குகிறது!
//(ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். //
வெளியே மிதக்கும் அய்யா,
தமிழர் மாமாவுக்கும்,ஓஷோவுக்கும் உள்ள ஒரே ஒப்புமை, தாடி ஓன்று தான்னு நிறைய அறிஞர்கள் கருதுகின்றனரே.
//நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்//
போதுமய்யா, போதும்.நல்ல காலம், நாங்க தப்பிச்சோம்.
தப்பி தவறி கூட ,இன்னும் ஒரு கட்டுரை எழுத வேண்டாம்.
பாலா
இது உங்களது கட்டுரையா? அ.மார்க்ஸின் தொகுப்பு ஒன்றிலும் இதை வாசித்ததாய் நினைவு.
சாரா உங்கள் பிளாக் பார்த்தேன். ஒரே ஒரு பதிவுதான் போட்டிருக்கிறீர்கள் போல. வருகைக்கு நன்றி. ஹரிஹரனின் பின்னூட்டத்திற்கு விரிவான பதிவாக 'பெண்கள் அர்ச்சகர்களாக வேண்டாம்' படித்தீர்களா? பாலாவுக்கெல்லாம் நீங்கள் பதில்சொல்ல வேண்டாம். நான் விளிம்புநிலை மக்களை நேசிப்பவன். மனநோயாளிகளை மதிக்கிறவன், பாலாவையும்.
நண்பரே
எனக்கு பெரியார் மீது ஈடுபாடு உண்டு, வள்ளலார் மீதும் பற்று உண்டு.
இவ்விருவர் பற்றிய ஒப்பீடு அறிய விரும்புகிறேன்
ஒரு கட்டுரை இது பற்றி எழுதினால் நல்லது
அன்புடன்
நல்லதம்பி
nallathambi002@gmail.com