போட்டி வலைப்பதிவாளர் மாநாடு - நிகழ்ச்சி நிரல்
காலை 9.00 - 10.00
குத்துவிளக்கில் சிகரெட் கொளுத்தி மாநாட்டைத் தொடங்கி வைப்பவர் : யெஸ்.பாலபாரதி
வரவேற்புரை : கெட்டசெய்தி இந்தியா
( வரிவிலக்கிற்காக)
தலைமையுரை : சிவஞானம்ஜி (மூத்தவலைப்பதிவாளர்)
காலை 10.00 - 11.00
தமிழிசை
இயக்குனர் பேரரசுவின் தமிழிசைப்பாடல்கள்
பாடுபவர் : குழலி
காலை 11.00 - 12.00
கலைநிகழ்ச்சிகள்
பழைய சொம்பு ஆட்டம் : 'நாட்டாமை' முத்துதமிழினி
சிறப்பு கரகாட்டம் : வரவணையான்
புலிவேஷ ஆட்டம் : கொழுவி, ஈழபாரதி
நண்பகல் 12.00 - 2.00
கருத்தரங்கம்
'பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?' ' - 'பின்னூட்டம்' பாலா
என்னை மிரட்டிய நெடுங்குழை காதன் - சமீபத்திய ஆய்வு
- டோண்டு ராகவன்
பாகிஸ்தானாகி வரும் கராச்சி
- ஜடாயு
ஆவி அமுதாவும் அமெரிக்க மறுகாலனியாதிக்கமும்
- அசுரன் & ராஜ்வனஜ்
ரமணிசந்திரன் நாவல்கள் - ஒரு பின் நவீனத்துவ ஆய்வு
- சுகுணாதிவாகர்
மதியம் 2.00 - 4.00
உணவு இடைவேளை
சைவ உணவுக்கு அணுகவும் : இட்லிவடை
( சாப்பிட வருபவர்களை ரகசியமாக படம் பிடிக்கும் வசதி உண்டு)
சரக்கு மற்றும் அசைவ உணவுகளுக்கு : வரவணையான் (எ) செந்தில்
( கார்டு உள்ளவர்கள் மட்டுமே அணுகவும் (ரேசன் கார்டு அல்ல) அல்லது புரவலர்களுடன் அணுகவும்.)
மாலை 4.00 - 5.00
புத்தக வெளியீட்டு விழா
'போலி டோண்டுவின் பொன்மொழிகள்'
வெளியிடுபவர் : ஆப்பு ( தலைமை கணிப்பொறியாளர், போலி டோண்டு இயக்கம்)
பெற்றுக்கொள்பவர் : விடாதுகருப்பு (பெரியார் பூனைப்படை)
பொ(ப)ன்னாடை அணிவித்துக் கௌரவப்படுத்தப்படுபவர்கள் : டோண்டுராகவன், மாயவரத்தான், ஹரிஹரன், ஜடாயு, ஜயராமன், வஜ்ரா மற்றும் பலர்.
மாலை 5.00 - 6.00
இலவச மருத்துவ முகாம்
பெத்தடின் ஊசி வினியோகம் : ஹரிஹரன்
(மாதவிடாயால் அவதியுறும் பெண்களுக்கு விபூதிமருந்தும் உண்டு)
மாலை 6.00 - 8.00
திரைப்படவிழா
(உலகத்தரம் வாய்ந்த தமிழ்ச்சினிமாக்களைத் திரையிடும் முதல் முயற்சி)
திரையிடப்படும் படங்கள் : பாசப்பறவைகள், கண்ணம்மா
- sponsered by லக்கிலுக்
ஆய்வுரை : பாரதியின் கண்ணம்மா, பாரதி கண்ணம்மா, கலைஞரின் கண்ணம்மா - ஒரு திராவிட ஒப்பாய்வு
- முத்துகுமரன்
திரையிடப்படும் படங்கள் : நாளைநமதே, தாய்மீது சத்தியம், ஆடிவெள்ளி
- sponsered by பொன்ஸ்
ஆய்வுரை : ஆடிவெள்ளியும் ஆனைகளின் அடிமைத்தன்னிலையும்
-ரோசாவசந்த்
இரவு 8.00 - 10.00
ஸ்பெசல் நாடகம்
டோண்டு மற்றும் போலிடோண்டு இணைந்து மிரட்டும் 'கண்ணாமூச்சி ரே ரே'
(தம்மடிக்க, சரக்கடிக்க, கடலைபோட அரங்கில் அனுமதி உண்டு)
நாள் : 32.13.3006
இடம் : கோவிந்தாபுரம்,
கேரளா, பாகிஸ்தான்.
அனைவரும் வருக! அல்வா தருக!
நோட்டிஸ் உபயம் : ஓகை, 'புளியமரம்' தங்கவேலு, முத்துதமிழினி.
'சோதனை'ச் செய்தி (வரிவிலக்கிற்காக)
யாராவது மாநாட்டுக்கு வந்துட்டுக்கு ஒண்ணுமே நடக்காத கூட்டத்தைப் பத்தி ஒன்றரை பக்கம் பதிவு போடுறது, அப்புறம் நம்மளை மாதிரியே வேலை வெட்டியில்லாம எழுதின நாலுபேருக்கு 'லிங்க்' கொடுக்கிறது, 'நான் சென்னைலதானே இருந்தேன், சின்னாளப்படில்தானே இருந்தேன், மிஸ் பண்ணிட்டேன், மிசஸ் பண்னிட்டேன்'ன்னு பின்னூட்டம் போடுறது இதெல்லாம் வேணாம், ஆமாம்
குசும்பு :-))))
யோவ்! இன்னிக்குமா?! :)))))))))
என் பேரயும் எங்காவது சேர்த்திருக்கலாம்...அட்லீஸ்ட் நோட்டீஸ் உபயத்துலயாவது....ஹி..ஹி...
///மிஸ் பண்ணிட்டேன், மிசஸ் பண்னிட்டேன்'ன்னு பின்னூட்டம் போடுறது இதெல்லாம் வேணாம், ஆமாம் ///
சின்னப்புள்ளத்தனமா இருக்கு!
பங்காளி நீங்கள் அவ்வளவு பெரிய புகழ்விரும்பியா? (என்னை மாதிரி எளிமைவிரும்பின்னு நினைச்சேன்). விடுங்க, மாநாட்டுப் பந்தலில் டியூப்லைட்டிலில் எல்லாம் (வெளிச்சமே வெளியே வராதமாதிரி) உபயம் : பங்காளின்னு போட்டுடலாம்
வாவ் ! சூப்பர் ! நல்ல நகைச்சுவை
அட்ரா சக்கை... அட்ரா சக்கை.. அட்ரா சக்கை...
இந்த வாரம் "மிதக்கும் வெளி" வாரமா?!..
விட்டுப்போச்சே...
:)))))))))))))
என்னை வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வைத்ததற்கு நன்றி.
இதை எல்லாம் "அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது"-வெட்டிப்பயல்.
ரிப்பீட்டு!
//பொ(ப)ன்னாடை அணிவித்துக் கௌரவப்படுத்தப்படுபவர்கள் : டோண்டுராகவன், மாயவரத்தான், ஹரிஹரன், ஜடாயு, ஜயராமன், வஜ்ரா //
மொதல்லியே லாரியில் ஏற்றினால் நாலு பேர் குறைவார்கள் என்பதற்கு கோபித்துக் கொண்டார்கள். இப்போது அதையும் குறைத்து குற்றம் தேடிக் கொண்டீர்களே நண்பரே
இன்றுதான் , இந்த பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்தது !
அருமையான பதிவு . நல்ல time Pass மச்சி ...
சூப்பராப்பு....
சிரிப்ப அடக்க முடியல சாமி...
//
'பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?' ' - 'பின்னூட்டம்' பாலா என்னை மிரட்டிய நெடுங்குழை காதன் - சமீபத்திய ஆய்வு - டோண்டு ராகவன் பாகிஸ்தானாகி வரும் கராச்சி - ஜடாயு ஆவி அமுதாவும் அமெரிக்க மறுகாலனியாதிக்கமும் - அசுரன் & ராஜ்வனஜ் ரமணிசந்திரன் நாவல்கள் - ஒரு பின் நவீனத்துவ ஆய்வு - சுகுணாதிவாகர் மதியம் 2.00 - 4.00 உணவு இடைவேளை சைவ உணவுக்கு அணுகவும் : இட்லிவடை ( சாப்பிட வருபவர்களை ரகசியமாக படம் பிடிக்கும் வசதி உண்டு) சரக்கு மற்றும் அசைவ உணவுகளுக்கு : வரவணையான் (எ) செந்தில் ( கார்டு உள்ளவர்கள் மட்டுமே அணுகவும் (ரேசன் கார்டு அல்ல) அல்லது புரவலர்களுடன் அணுகவும்.) மாலை 4.00 - 5.00 புத்தக வெளியீட்டு விழா 'போலி டோண்டுவின் பொன்மொழிகள்' வெளியிடுபவர் : ஆப்பு ( தலைமை கணிப்பொறியாளர், போலி டோண்டு இயக்கம்) பெற்றுக்கொள்பவர் : விடாதுகருப்பு (பெரியார் பூனைப்படை) பொ(ப)ன்னாடை அணிவித்துக் கௌரவப்படுத்தப்படுபவர்கள் : ///
அதுவும் இந்த கட்சி பகுதிதான் சூப்பர்
//நாள் : 32.13.3006
இடம் : கோவிந்தாபுரம்,
கேரளா, பாகிஸ்தான்.
அனைவரும் வருக! அல்வா தருக! //
அசுரன்
ha ha ha ha
அவ்வப் போது அநாமதேயங்கள் வந்து பீடி,சோடா,கடலை மிட்டாய்,முறுக்கும் விற்பார்கள்.
தயவு செய்து சில்லறை கேட்காதீர்கள்.