தலித் எழுத்தாளர் தாக்கப்பட்டார்.

தமிழின் மிக முக்கியமான தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன். இவரது 'தகப்பன்கொடி' நாவலும் 'தீட்டு' சிறுகதைத் தொகுப்பும் மிக முக்கியமான நூல்கள்.

இவர் வலதுகால் ஊனமானவர். நீண்டநாள்கள் சில ஆயிரங்கள் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் வேலூரிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தன் பதிவை உறுதி செய்ய சென்றிருக்கிறார். நீண்டநேரம் கியூவில் நிற்கமுடியாததால் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சங்கரனின் அலுவலக அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
அவருடைய அட்டையை வாங்கிவைத்துவிட்டு அரைமணிநேரம் கழித்து வரும்படி கூறிவிட்டார் அதிகாரி. பெரியவனும் திரும்பிவிட்டார். இதற்கிடையில் தன்னுடைய மனைவியின் பதிவு விட்டுப்போய்விட்டதா என்பதை உறுதிசெய்ய மீண்டும் அந்த அதிகாரியைச் சந்திக்க கியூவில் நின்றிருக்கிறார்.

இதைக் கவனித்துவிட்ட அந்த அதிகாரி "நீ ஹேண்டிகேப் என்பதால்தானே உடனே உள்ளே அனுமதித்தேன். இப்போ வரிசையில் நிக்கறே. கால் வலிக்கலையா?" என்று கேட்டு யூஸ்லெஸ் பெல்லோ என்று திட்டி அடித்து அனுப்பியிருக்கிறார்.

இதில் இன்னொரு கொடூரம் என்னவென்றால் இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் ஜூனியர்விகடன் (24.12.06) 'எழுத்தாளனுக்கு விழுந்த அடி' என்று தலைப்பிட்டிருக்கிறது.
இதுவே அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஞானக்கூத்தன் போன்ற பார்ப்பன எழுத்தாளர்களுக்கோ, பிற ஆதிக்கச் சாதி எழுத்தாளர்களுக்கோ அடி விழுந்தால் ஒருமையில் 'எழுத்தாளன்' என்று எழுதுமா?

2 உரையாட வந்தவர்கள்:

  1. சபாபதி சரவணன் said...

    அழகியப் பெரியவன் நல்ல கவிஞர். இன்று கூட அவரது கவிதையை மக்கள் தொலைகாட்சியில் வாசிக்க கேட்டேன்.

    அவர் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. எனது கடுமையான கண்டனங்கள்.

    கவிஞனுக்கு கோபம் அவசியம். அடித்த கையை இந்நேரம் முறித்திருக்க வேண்டும், அடி வாங்கிக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள் அழகியப் பெரியவன்? நெஞ்சு பொறுக்கவில்லை.அழகியப் பெரியவன் நல்ல கவிஞர். இன்று கூட அவரது கவிதையை மக்கள் தொலைகாட்சியில் வாசிக்க கேட்டேன்.

    அவர் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. எனது கடுமையான கண்டனங்கள்.

    கவிஞனுக்கு கோபம் அவசியம். அடித்த கையை இந்நேரம் முறித்திருக்க வேண்டும், அடி வாங்கிக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள் அழகியப் பெரியவன்? நெஞ்சு பொறுக்கவில்லை.

  2. கருப்பு said...

    என் ரத்தம் கொதிக்குது திவாகர். உலகம் அறிந்த ஒரு பெரிய எழுத்தாளனுக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

    இதை இப்படியே சும்மா விடக்கூடாது. ஜனாதிபதி வரைக்கும் புகார் அனுப்ப இருக்கிறேன்.