எத்தனைகாலம் பியர்போத்தல்களோடு பேசிக்கொண்டிருப்பது?

காதலற்றுக் கழிகிறது காலம்..
நண்பகல் வெறுமையைப் போல
மயான வெம்மையைப் போல..
ஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.
இந்த காலத்தை என்ன செய்வது?
கொலுசொலி, சிணுங்கல்,
பொய்க்கோபம், வாழ்த்தட்டைகள்,
சின்னச்சின்ன பரிசுகள்
பிரிவின் வாதை,
நெகிழ்வின் கண்ணீர்..
எதைக்கொண்டு நிரப்புவது
இந்த காலத்தை?
பதில்சொல்லுங்களேன் எவளாவது.

3 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    காதல் என்பது ஒரு கற்பனை உணர் மகிழ்ச்சியாகவே ஆகிவிட்டிருக்கும் நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.ஆனால் இதுவரைக்கும் யாரும் பின்னூட்டவில்லையே...
    கவிதை வெகு அருமை...

  2. Manoj said...

    இதற்கு ஒரே ஒரு பின்னூட்டமா?! கவிதை நச்சென்று அதன் குறியை தாக்குகிறது. உணர்வினை வெளிப்படுத்த தமிழைவிட பொருத்தமான மொழியும் உண்டோ! காதலியின் பிரிவை, அதன் மரணவேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லையென்றாலும் உங்கள் கவிதை அந்த முயற்சியில் நல்ல உயரத்தை எட்டிவிட்டது என்றே சொல்வேன். பாராட்டுக்கள். எவ'ள்'ஆவது என, அந்த நேரத்தில் அனைத்து பெண்கள் மீதுமே வளர்ந்து விடுகிற ஒரு வெறுப்பை, ஒளிவின்றி வெளிப்படுத்தியதற்கு மேலும் பாரட்டுக்கள். என் கைத்தட்டல்கள் கேட்கும் என நினைக்கிறேன்.

  3. Anonymous said...

    கவிதை வெகு அருமை...