கணவன் என்ற மிருகம்

விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

6 உரையாட வந்தவர்கள்:

  1. Hari said...

    நச்

  2. லக்கிலுக் said...

    //ஒரு ஆணுறை போலவே
    என்னைப் பொருத்தியும்
    கலைத்தும் போட்டு
    களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
    எனக்குப் பசித்தது.//

    யப்பா... என்ன அனல்?...

  3. ரவி said...

    பதிவை பார்க்க முடியவில்லையே !!

  4. கவிதா | Kavitha said...

    சூப்பர்... ரொம்ப அழுத்தமான கவிதை.. ஹரி சொன்னது போன்று நச்...

    //ஒரு ஆணுறை போலவே
    என்னைப் பொருத்தியும்
    கலைத்தும் போட்டு
    களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
    எனக்குப் பசித்தது.//

    அற்புதமான வரிகள்....

  5. Anonymous said...

    //விசாரிப்புகள் ஏதுமற்று
    அருகில் படுத்துக்கொண்ட
    உன் கரங்கள்
    என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
    நெளிந்து தீர்கின்றன.///

    என்னை உனக்கு பிடித்திருக்கிறதா என்று முதலிரவு முடிந்த பிறகு கேட்கும் உயரிய கலாச்சார வழி வந்தவர்கள் பிறகு எப்படி இருப்பார்கள்....

    இதை சொன்னால் கலாச்சார காவலர்கள் கொதித்தெழுவார்கள்...
    பெண்ணடிமை மற்றும் ஆணாதிக்கம்
    இதைக் கொண்டாடினால்..ஆகா இந்திய கலாச்சாரப்படி வாழும் இளைன் என்று சொல்லுவார்கள்

  6. butterfly Surya said...

    காதலா காமமா....????

    Super ... Xlent...