காஞ்சி ஜெயேந்திரனுக்காக...

நான் மீசை வைத்து தாடி மழித்தால்
அவன் தாடி வைத்து
மீசை மழிக்கிறான் என்கிறாய்.
நான் தெற்கு நோக்கி வணங்கினால்
அவன் மேற்கு நோக்கித் தொழுகிறான் என்கிறாய்.
எனக்கும் அவனுக்குமான
வித்தியாசங்களை விவரமாய்
விளக்கிச் சொல்லும் நீயோ
நான் உண்ட இலையில்
பேண்டு தொலைக்கிறாய்.
பின் பேண்ட இலையை
உண்டு முடிப்பாயோ?

6 உரையாட வந்தவர்கள்:

  1. சரண் said...

    உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் இருக்கிறது இந்த பதிவு..'பேண்டதை தின்பாயா?" என்று கேட்டது கவிதைக்கான அழகான முடிவு! வரவேற்கிறேன் தோழரே..

  2. Anonymous said...

    //உண்ட இலையில்
    பேண்டு தொலைக்கிறாய்.//

    இதோட தாத்பர்யம் என்ன வோய்?

  3. அருண்மொழி said...

    அது என்னங்க ஜெயேந்திரன்!!!. "சுப்பிரமணி" என்றே சொல்லுங்கள்.

  4. Pot"tea" kadai said...

    இதுக்கு பேர் தான் கூப்பிட்டு வெச்சு அறையரதோ?

    :))

  5. Anonymous said...

    உன்னை மிதித்து நிற்கும்
    என் கால்களிலிருந்தும்
    திமிற நினைக்காதே!
    அதோ பார்..!
    உன்னைப் பிடிக்கவென்றே
    தூ.ரத்துப் பூச்சாண்டி!

  6. Anonymous said...

    //நான் உண்ட இலையில்
    பேண்டு தொலைக்கிறாய்.//

    "உண்ணும் இலையில்" என்று நிகழ்காலத்தில் இருந்தால் பிழையா?