மதுரை நண்பர்களின் கவனத்திற்கு
அன்பின் இனிய மதுரை நண்பர்களுக்கு
10.02.2007 மற்றும் 11.02.2007 ஆகிய இருநாட்கள் புதியகாற்று இதழின் சார்பாக 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம் : ஓயாசிஸ் உணவகம், அழகர்கோவில் அருகில், மதுரை.
10.02.2007 அன்று நடைபெறவிருக்கும் 'தமிழ்சினிமாவும் விளிம்புநிலையினரும்' என்னும் அமர்வில் நான் பேசவுள்ளேன். உங்களுக்கு வாய்ப்பு இருப்பின் மதுரையில் சந்திக்கலாம். என் செல்லாதபேசி 9380497555 மூலமும் தொடர்புகொள்ளலாம். மேலும் இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் நமது வலையுலகில் குறிப்பிடத்தக்க நல்ல பதிவுகளை எழுதியவரும் பால்மீறிகளின் விளிம்புக்குரல்களை ஒலித்தவருமான லிவிங்ஸ்மைல் வித்யாவும் நான் கலந்துகொள்ளும் அமர்விலேயே பேசவுள்ளார். (நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்)
தோழமையுடன்
சுகுணாதிவாகர்
//10.02.2007 மற்றும் 11.02.2007 ஆகிய இருநாட்கள் புதியகாற்று இதழின் சார்பாக 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது//
வாழ்த்துக்கள்.
//நமது வலையுலகில் குறிப்பிடத்தக்க நல்ல பதிவுகளை எழுதியவரும் பால்மீறிகளின் விளிம்புக்குரல்களை ஒலித்தவருமான லிவிங்ஸ்மைல் வித்யாவும் நான் கலந்துகொள்ளும் அமர்விலேயே பேசவுள்ளார். (நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்)//
கண்டிப்பாக கேளுங்கள். மீண்டும் பதிவுகளின் பக்கம் வரச்சொல்லுங்கள்
சென்ஷி
வாழ்த்துக்கள் !!!!!
செந்தழல் ரவி
லிவிங் ஸ்மைல் ஏன் எழுதுவதில்லையென்று இப்படி அப்பாவியாகக் கேட்கிறீர்களே?
எல்லாப் பிரச்சினையும் நடந்தபோது நீ்ங்களும் வலையுலகில் இருந்தீர்கள்தானே?
அவரை இயல்பாக இருக்கவிடாமல் அதீதமாகத் தலையில்தூக்கிவைத்து ஆடியபின் கீழ்த்தரமான முறையில் போட்டு மிதித்தது வலையுலகம்.
/லிவிங் ஸ்மைல் ஏன் எழுதுவதில்லையென்று இப்படி அப்பாவியாகக் கேட்கிறீர்களே?
எல்லாப் பிரச்சினையும் நடந்தபோது நீ்ங்களும் வலையுலகில் இருந்தீர்கள்தானே?
அவரை இயல்பாக இருக்கவிடாமல் அதீதமாகத் தலையில்தூக்கிவைத்து ஆடியபின் கீழ்த்தரமான முறையில் போட்டு மிதித்தது வலையுலகம்./
இல்லை உண்மையாகவே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.
Living Smile Vithiya /நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்/
எனது ஆதங்கமாயும் இதை முன்வைக்கின்றேன்.
இன்று ரவிஷங்கர் பயனுள்ளதாக எழுதுகிறவர் என்று செந்தழல் ரவியைச் சொல்லியிருக்கின்றார். அவரும் லிவிங் ஸ்மைல் எழுதியபோது இருக்கவில்லையோ?
வாழ்த்துக்கள்.
லிவிங் ஸ்மைல கொஞ்சம் ஸ்மைல்பண்ணச் சொல்லுங்க ப்ளீஸ்.
:)
முன்னெல்லாம் ஆபிஸ்ல ஓ.பி. அடிக்க முடிஞசது.. இப்ப முடியல.. வேலையும் அதுக்கேத்தாப்புல நிறைய ஆயிட்டுச்சு...
ஒவ்வொரு வீக்கெண்டும் எங்காவது பயணமா அமைஞ்சிருச்சு.. மத்தபடி ஒன்னுமில்ல எழுத நிறையத்தான் இருக்கு..
சீக்கிரமே வரேன்..
மத்தபடி அனானி அண்ணே...
//லிவிங் ஸ்மைல் ஏன் எழுதுவதில்லையென்று இப்படி அப்பாவியாகக் கேட்கிறீர்களே?
எல்லாப் பிரச்சினையும் நடந்தபோது நீ்ங்களும் வலையுலகில் இருந்தீர்கள்தானே?
அவரை இயல்பாக இருக்கவிடாமல் அதீதமாகத் தலையில்தூக்கிவைத்து ஆடியபின் கீழ்த்தரமான முறையில் போட்டு மிதித்தது வலையுலகம். //
இதெல்லாம் டூ மச்!!
சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
மிதக்கும் வெளி அய்யா,
கண்டிப்பாக உங்கள் உரைவீச்சு பதிவாக வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். செய்வீர்களா??
நானும் வேண்டுகோள் வைக்கிறேன் வாழும் புன்னகை வித்யா அவர்களுக்கு...தயவு செய்து எழுதுங்கள். அப்பா அந்த பரிசு கவிதை ஆக்ரோஷம். அபாரம்.