சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு

முதலில் வலைப்பதிவாளர்சந்திப்பு சென்னை மெரினா கடற்கரையில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் நேற்றையதினம் சுனாமி வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வுமய்யத்திலிருந்து பாலபாரதிக்குத் தகவல்கள் வந்ததால் சந்திப்பு கிழக்கு பதிப்பகத்தின் டிபார்ட்மெண்டல்ஸ்டோராகிய 'வித்லோகா'விற்கு மாற்றப்பட்டது.

சந்திப்பிற்கு தமிழ்நதி, பொன்ஸ், முத்துலட்சுமி ஆகிய மூன்று பெண்களே வந்திருந்தனர்.

சென்ற இரண்டு வலைப்பதிவாளர் சந்திப்பைப் புறக்கணித்த ஈழத்தமிழ்ப் பதிவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். அவர்களாவன ; சோமிதரன், அகிலன், தமிழ்நதி.

அதேபோல வ.ப.சந்திப்புகளில் குவோத்ரோச்சியைப் போல தலைமறைவாக இருந்த திரு.டோண்டுராகவன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். (ஆனால் 'இப்பதான் மூர்த்தி என்னைப் போன் போட்டு மிரட்டினான்' என்ற டயலாக்கை மட்டும் உதிர்க்கவில்லை.)

பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் பதிவு போட்டும் பின்நவீனம், மார்க்சியம், மொக்கை, ஜல்லி என்று எந்த பதிவாக இருந்தாலும் பின்னூட்டம் போட்டு கருத்துரிமையைக் காப்பாற்றிவரும் உண்மைத்தமிழன் ஊருக்குச்சென்றுவிட்டதால் சந்திப்புக்கு வரமுடியாது என்று தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை சென்னை நந்தனம் சிக்னலில் கைலியுடன் பார்த்ததாக பட்சிகள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்திப்பில் கலந்துகொண்ட சில முக்கியப்பிரமுகர்கள்: வரவணையான், லக்கிலுக், ஐகாரஷ்பிரகாஷ், வெட்டிப்பயல்,கப்பிப்பயல்.

அபிஅப்பா கடைசிநேரத்தில் தப்பித்துவிட்டார்.

விரைவில் சென்னைப் பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து பதிவர் பட்டறை நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியானது. பட்டறையில் அரிவாள், கத்தி, அரிவாள்மனை போன்ற ஆயுதங்கள் தயாரிக்கப்படும் என்று பதிவர்கள் ஆர்வத்துடன் கூறினர்.

வலையில் பதிந்து பலமாதங்களானாலும் வலைப்பதிவாளர் சந்திப்பில் கலந்துகொள்வதைத் தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள முத்துதமிழினி இந்தச் சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

சந்திப்பிற்குப் பின்னான இரவு மதுவிருந்தில் வரவணையான் கலந்துகொள்ளவில்லை.

(இதைக் கொட்டை எழுத்தில் போட்டு சிலருக்குக் குறிப்புணர்த்தும்படி செந்தில் கேட்டுக்கொண்டார்.)

ஒரு முக்கியக் குறிப்பு : நான் சென்னையில் இல்லாததால் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஆனாலும் சந்திப்பு பற்றி உடனுக்குடன் தகவல்கள் தந்த நண்பர் இட்லிவடை மற்றும் போலிடோண்டு இயக்கத்தளபதிகள் ஆகியோர்க்கு நன்றி.

10 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.
  2. உண்மைத்தமிழன் said...

    மிதக்கும் வெளி ஐயா, ஒரு சின்னத் திருத்தம். கைலி கட்டியிருக்கவில்லை.. பேண்ட்தான் அணிந்திருந்தேன்.. (வலையுலகத்துல பத்த வைக்கிறதுக்கும் 'ஆள்' இருக்காகப்பா..)

  3. சட்னிவடை said...

    எனது பதிவைப் படித்தீர்களா மிதக்கும்வெளி?

  4. சோமி said...

    அவர்களாவன; சோமிதரன்,தமிழ்நதி,அகிலன்//

    அவர்களாவனாவா...??

    மொக்கைப்பதிவர் விடுதலை அமமப்பின்(MPVA) இந்திய தலைமை வரவனையான் தண்ணியடிக்காததுக்கு ஆதாரவு தெரிவித்து நானும் சந்திப்புக்குப் பின்னரான தாகசாந்தியில் கலந்துகொள்ளவில்லை.

    அடுத்து சூளைமேடு பதிவர் சந்திப்பை சூளைமேடு டாஸ்மக் வயின் சாப்பில் நடத்தலாமெண்டிருகிறோம்.உங்கள் ஆதரவை கோரி நிக்கிறோம்.

  5. குட்டிபிசாசு said...

    நல்ல கொளுத்துரீங்க!! சண்டை வரம இருந்தா சரி!!

  6. PRABHU RAJADURAI said...

    அவனை விரைவில் கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

    சும்மா, விளையாட்டுக்கு என்று சொல்லிக் கொண்டாலும், இது போன்ற வெளிப்பாடுகளின் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பதிவுகளில் அனுமதிப்பது அதிர்ச்சியளிக்கிறது!

  7. Anonymous said...

    //போலியார் சங்கம் சார்பாக அந்த கிழட்டு வந்தேறி பாப்பார கிழட்டு மூதேவியை வன்மையயக கண்டிக்கிறோம்.//

    நாமல்லாம் என்ன கத்தி என்ன பிரயோசனம்? கெழவன் ரொம்பத்தான் ஆக்ரோஷமா இருக்கான். வந்தான், அனாவசிய வார்த்தைகள வுடல்ல. ஒரு பேப்பர்லே பேசினதெல்லாம் நோட் செஞ்சான். பொறவு டீயை நீ எவண்டா எனக்கு தரதுங்கற மாதிரி உதாசீனப்படுத்திட்டு (அவனோட?)காரில ஏறிண்டு போய்ட்டே இருந்தான்.

    உடனடியா பதிவையும் போட்டான். மாலனே பின்னூட்டம் போட்டாரு. தேவயில்லாம அவனை திட்டி திட்டி நாமதான் அவன வளர்க்குறோமோன்னு தோனுது.

    நேர்ல பார்த்தவன்

  8. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    வெளியே மிதக்கும் அய்யா.. என்னை நந்தனம் சிக்னலில் கைலியோடு பார்த்த அய்யா லக்கிலுக் அய்யா தான்.. அவர் பதிவர் சந்திப்பில் இதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கியது இல்லாமல் உங்களிடமும் சொல்லிவிட்டாரா அய்யா.. அவர் நல்லா இருக்கட்டும் அய்யா..

  9. Anonymous said...

    அந்த பொசக்கெட்ட பய உண்மைதமிழனை விடுங்கள். உங்க பாலபாரதியும் கூட அய்யங்காராமே? எந்தப் புத்துலே எந்தப் பாம்போ? எவனுக்கு தெரியும்?

  10. மிதக்கும்வெளி said...

    திரு.பிரபுராஜதுரையின் கருத்தை ஒத்து அந்தப் பின்னூட்டத்தை எடுத்துவிட்டேன்.