சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்
சுந்தரராமசாமி பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
இடைப்பட்ட காலத்தில்
பூமிக்கு வந்துபோயிருந்தார்.
வந்துபோன காலத்தில்
மசால்தோசை சாப்பிட்டார்
இலக்கியவாதிகளுடன்
கொஞ்சமாய்ச் சரக்கடித்தார்.
பிதாமகன் போஸ்டரை வெறித்துப் பார்த்தார்,
(ஷகீலா போஸ்டரை
வெறித்தது குறித்த குறிப்புகள் கிடைக்கவில்லை.)
பிறகு பழைய பருப்புசாம்பார் சாப்பிட்டு
திசையதிர குசுவிட்டார்.
தமிழ்நாட்டிற்கு
இரண்டு இலக்கியப்பத்திரிகைகள் கிடைத்தன.
- சில்வியாகுண்டலகேசி ( இருளின் நிறம் வெண்மை தொகுப்பிலிருந்து...)
ஒரேநேரத்தில் காலச்சுவடையும் உயிர்மையையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உயிர்மையில் வெளியான நகுலன் குறித்த அஞ்சலிக்கட்டுரைகள் நெகிழவைத்தன. குறிப்பாக சாருநிவேதிதாவின் கட்டுரை. ஒருவேளை 'என் முதல் சந்திப்பில் நகுலன் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி 'நீங்கள் பார்ப்பானா' என்பது. நான் இல்லை என்றதும் அவர் முகத்தில் ஏன் அப்படி ஒரு திருப்தி என்று தெரியவில்லை' என்றும் 'தன் பேச்சினிடையே அவ்வப்போது சுந்தரராமசாமியைத் திட்டிக்கொண்டிருந்தார்' என்றும் சாரு எழுதியதும் எனக்குப் பிடித்துப்போனதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் சாருவின் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும் சாருவின் நடையிலுள்ள சுவாரஸ்யம் மறுக்கமுடியாதது.
அதேநேரத்தில் காலச்சுவடில் சுந்தரராமசாமியைப் பற்றிய ஸ்டீவர்ட் சதீஷ் என்பவரின் கட்டுரையையும் படித்துத் தொலைக்க நேர்ந்தது. சு.ரா இறந்து ஓராண்டு ஆகப்போகிறது. திவசம் கொடுக்கப்போகும் நேரத்திலும் அவரின் ஆவி தமிழ் இலக்கிய உலகைச் சுற்றிச்சுற்றி வருகிறது.
சு.ரா இறந்தவுடன் தமிழ் எழுத்தாளர்கள் செய்த அட்டகாசம் சொல்லிமாளாது. அவர் புத்தகத்தை முகர்ந்து பார்ப்பார், எல்.எல்.பி மைதானத்தில் வாக்கிங் போவார் என்றெல்லாம் வரலாற்றுத்தகவல்களை அள்ளித்தெளித்தனர். அதில் உச்சபட்சம் ஜெயமோகன் ஆற்றிய இலக்கியச்சேவை.
பத்திரிகையுலகில் ஒரு வதந்தி உன்டு. ஒரு பார்ப்பனப் பத்திரிகை கலைஞர்கருணாநிதி குறித்த வாழ்க்கைக் குறிப்புகளைத் தயார் செய்துவைத்திருக்கிறது,
கலைஞர் சாகவேண்டியதுதான் தாமதம், தேதியைப் போட்டு பத்திரிகையை வெலியிட்டுவிடும். அப்புறம் என்ன? கலைஞரின் மரணச்செய்தியை முதலில் வெளியிட்டது அந்தப் பத்திரிகைதான்.
அதேபோல சு.ரா இறுதிச்சடங்கு முடிந்து ஒரு வாரத்திலேயெ ஜெயமோகனின் சு.ரா குறித்த புத்தகம் வெளியாகிவிட்டது. சு.ரா குறித்த சூடான செய்திகளைத் த்மிழ்கூறும் நல்லுலகிற்கு முதலில் தந்தவர் ஜெயமோகன் தான் என்ற பெருமை உண்டு.
இந்த புனிதவட்ட வரிசையில் தினத்தந்தி ஆதித்தனார் நினைவுபரிசுப்போட்டி நடத்துவதைப்போல காலச்சுவடு சு.ரா நினைவுபரிசுப்போட்டி நடத்துகிறது. ஏற்கனவே பாரதி 175, புதுமைபித்தன் 100, சு.ரா 75 என்று பீடத்தின் வரிசைகளில் சொருகியாயிற்று. அடுத்து என்ன?
மெரினாவில் சு.ரா சிலை வைக்கவேண்டியது, சு.ராவிற்கு அஞ்சல்தலை வெளியிடவேண்டியது, அப்புறம் காலச்சுவடு ஒவ்வொரு புத்தககண்காட்சியின்போதும் ஒரு கூத்து நடத்தும். தினம் ஒரு எழுத்தாளர் காலச்சுவடு ஸ்டாலில் நின்று வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுத்தருவார். அதேபோல எழுத்தாளர்களுகென்று ஓட்டப்பந்தயம், மாறுவேடப்போட்டி, காஞ்சி ஜெயேந்திரன் தலைமையில் ஈட்டிங் ரேஸ் ஆகியவை நடத்தும் எண்ணமும் இருப்பதாகத் தெரிகிறது. இனிமேல் ஆட்டோகிராப்பிற்குப் பதிலாக வரும் வாசகர்களுக்கு சுந்தரராமசாமியின் பெயரைக் கையில் பச்சை குத்தலாம். சரி ஹியூபர்ட் சதீஷின் கட்டுரைக்கு வருவோம்.
"கடவுள் இல்லாதவர்களுக்குப்
பெரும் எழுத்தாளர்களே புனிதர்கள்." என்னும் சற்றும் சுயமரியாதையற்ற கேவலமான மேற்கொளொடு தொடங்கும் கட்டுரை,
'எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்திற்கு வாக்கிங் போனோம். ஒருமுறை சிறிது தூரம் நடந்துவிட்டு அங்கு கட்டடப் பணிக்கெனப் போடப்பட்டிருந்த ஆற்றுமணலில் வந்து உட்கார்ந்துகொண்டோ ம். பேசும்போது மணலைக் கைகளால் மெதுவாகத் தடவிச் சமன்செய்து உங்கள் கைகளைப் பதித்தீர்கள். அதை நான் மிகவும் ரசித்துக்கொண்டே இருந்தேன். இவ்வாறு பல நேரங்களில் உங்கள் உடல் மொழியை, கண்களில் தென்படும் கருணையை, கண்களிலும் உதட்டிலும் தோன்றும் குறும்போடுகூடிய புன்னகையை மிகுதியாக ரசித்திருக்கிறேன். உங்கள் அனைத்துப் படைப்புகளையும்விட உங்கள் ஆளுமையே என்னை மிகவும் கவர்கிறது' என நீள்கிறது.
மைதானத்தில் மணலைப் பரப்பி உட்காரவேண்டும் என்பதை உலகத்தில் முதன்முதலில் கண்டுபிடித்தவர் சுந்தரராமசாமி என்பதை அறியும்போது புல்லரிக்காமல் இருக்க முடியவில்லை.
"1999ஆம் வருடம் நீங்கள் அமெரிக்கா சென்றபோது 'நியூயார்க் டைம்ஸ்' (ழிமீஷ் சீஷீக்ஷீளீ ஜிவீனீமீச்) நாளிதழைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். உலகின் தலை சிறந்த நாளிதழ்களில் ஒன்றாகக் கருதப்படும் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் போன்றவற்றைக் கண்டறிய விரும்பினேன். எனவே, ஒரு நாளிதழ் வாங்கிவர முடியுமா எனத் தொலைபேசியில் கேட்டேன். நம் ஊர் 'எக்ஸ்பிரஸ்', 'இந்து' நாளிதழ்கள் போல் 24 முதல் 30 பக்கங்கள் இருக்கலாம், இல்லை குறைவாகவும் இருக்கலாம் என எண்ணியிருந்தேன். நீங்கள் வாங்கி வந்த பிறகுதான் அதன் எடை கிட்டத்தட்ட அரை கிலோ என்று தெரிந்தது. சில வருடங்கள் சென்ற பின்னர் நீங்கள் வாங்கிவந்த நாளிதழ் பற்றி நான் குறிப்பிட்டபோது, தைலாவின் கணவர் ராம், எடை அதிகமாக இருப்பதால் இதில் உள்ள சில முக்கியமான பக்கங்களை மட்டும் எடுத்துச் சென்றால் போதும் என்று கூறியதாகவும் ஆனால் நீங்கள் அதை முழுமையாகக் கொண்டு வருவதற்கு விரும்பியதாகவும் சொன்னீர்கள். இவ்வாறு நீங்கள் பலருக்குச் செய்த பல செயல்கள் மென்மலர்கள்போல் மணம் வீசுகின்றன"
என்ன கொடுமை சதீஷ் இது? அமெரிக்காவிலிருந்து அரைகிலோ நியூஸ்பேபர் கொண்டுவருவது பெரும் மனிதாபமான சேவையா? அதுவும் சு.ரா என்ன பரதனைப்போல தலையிலேயே சுமந்துகொண்டு அமெரிக்காவிலிருந்து நடந்தா வந்தார்? இன்னும் கூத்து முடியவில்லை.
''தமிழ் இனி 2000' மாநாட்டில் மறக்க முடியாத இன்னொரு இனிய அனுபவம் நிகழ்ந்தது. எனக்கும் நண்பர் நந்தனுக்கும் எழுத்தாளர் வனமாலிகையோடு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பெரும் வசதிகள் இல்லை என்றாலும் அறை நன்றாக இருந்தது. மாநாட்டின் முதல்நாள் அறை ஒதுக்கப்பட்ட சிறிது நேரத்தில் உங்களை வழியில் சந்திக்க நேர்ந்தது. 'அறை சவுகரியமாக இருக்கிறதா?' என மிகுந்த அக்கறையோடு கேட்டீர்கள். 'இல்லாவிட்டால் என் அறையிலே தங்கிக்கொள்ளலாம், இடம் இருக்கிறது' என்றீர்கள். என் உள்ளத்தில் பெரும் உவகை ஏற்பட்டது'
உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் 'நல்லாயிருக்கீங்களா, சாப்பீட்டீங்களா என்றுகேட்டால் அது சாதாரண விருந்தோம்பும் பண்பாகிறது. ஆனால் அதையே எழுத்தாளர்கள் செய்தால் அது மாபெரும் வரலாற்றுநிகழ்வாக மாறிவிடுகிறது.
எழுத்தாளன் என்பவன் யார்? பிள்ளைபிடிப்பவர்கள், பிக்பாகெட் அடிப்பவர்கள், பிச்சைக்காரர்கள் - இவர்களைப் போல அவனும் ஒரு சமூகப்பிராணி, அவ்வளவுதான். என்ன, அவர்கள் எல்லாம் விதவிதமாய்ப் போட்டோ எடுத்துக் கண்காட்சி நடத்துவதில்லை, புத்தகத்தின் பின்னட்டையிலோ, தன் கட்டுரையின் வலது (அ) இடதுமுலையிலேயோ போட்டுகொள்வதில்லை. ஆனால் எழுத்தாளர்கள் போட்டுக்கொள்கிறார்கள்.
பிக்பாக்கெட் அடிக்கும் நண்பனின் வாழ்க்கையிலாவது ரிஸ்க் இருக்கும். ஆனால் எழுத்தாளனுக்கு ஒரு ரிஸ்க்கும் கிடையாது. ஒருவேளை அவன் எழுத்தாளனாக இருப்பது சமூகத்திற்கு வேண்டுமானால் ரிஸ்க்காக இருக்கலாம்.
நீங்கள் இலக்கியவாதியான இரண்டுவருடத்தில் போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், ஜவுளிக்கடை அதிபர்கள், ஸ்வீட்ஸ்டால் நடத்துபவர்கள் என்று பலரின் அறிமுகம் கிடைத்துவிடும். மேலும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வேலைக்குப்போவது கிடையாது அல்லது விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு 'இலக்கிய மற்றும் அறிவுத்தேடல்'களில் ஈடுபட்டுவிடுவார்கள்.
அப்புறம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? இருக்கவே இருகிறார்கள், வேலைக்குபோகும் அப்பாவி மனைவிகள், சொத்து சேர்த்துவைத்துள்ள (அ) பென்ஷன் வாங்கும் அப்பா அம்மாக்கள், இளிச்சவாய் நண்பர்கள், ஏமாந்த சோணகிரி வாசகர்கள். (இதில் பெண் எழுத்தாளர்கள்தான் பாவம். வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டுகாரருக்கு வத்தக்குழம்பு சமைத்துவைத்துவிட்டு அப்புறம் இலக்கியமும் 'சமைக்கவேண்டும்'. போதாதற்கு சில முட்டாள் ஆண் எழுத்தாளர்களின் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லவேண்டும்)
ஆண் எழுத்தாளர்கள் பெரும்புள்ளிகளின் சினேகிதத்தோடு ஸ்டார் ஓட்டல்களில் குடித்துவிட்டு பார்க் ஓட்டலில் பகார்டி ரம்மின் விலை, லீ மெரிடியனில் தகீலாவின் சுவை என்று படிக்கும் வாசகர்களை எச்சில் ஒழுக ஏங்கவைப்பார்கள். ஆனால் தனியாகக் குடிக்கப்போகலாம் என்று கூப்பிட்டுப்பாருங்கள், ஓல்டுமாங்கிற்கு 50 ரூபாய் குறைகிறது என்பார்கள். (ஓல்ட்மாங்கின் விலை 54). இத்தகைய எழுத்தாளர்கள்தான் சமூகத்தில் விசித்திரமான பிராணிகளாய் உலாவருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் சமூகம் தங்களை அங்கீகரிக்கவில்லை என்றும் கேரளாவில் எழுத்தாளர்களுக்கு மரியாதை அதிகமென்றும் புலம்பவும் தவறுவதில்லை.
நகுலனின் அஞ்சலிக்கட்டுரையில் யுவன் சந்திரசேகர் எழுதுகிறார், 'நான் நேரில் சந்திக்கப் பயந்த இரண்டு ஆளுமைகள் நகுலனும் பிரேமிளும்' என்று. மற்ற இலக்கிய ஆளுமைகளை எல்லாம் ஒருசுற்று சந்தித்துவிட்டார் போலும்.
எழுத்தாளன் எழுதுகிறான். எழுத்தை வாசகன் படிக்கிறான். இதைமீறி எழுத்தாளனை நேரில் சந்திக்கவேண்டிய அவசியமென்ன வந்தது? உதாரணமாக சென்னை தம்புசெட்டித் தெருவில் ஒரு எழுத்தாளர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு தம்புசெட்டியில் ஏதேனும் வேலை இருந்தால் அப்படியே எழுத்தாளரைப் பார்ப்பதிலே தவறொன்றுமில்லை. ஆனால் டவுன்பஸ் பிடித்து தம்புசெட்டி தெரு போய் எழுத்தாளனைப் பார்க்கவேண்டிய அவசியமென்ன? அவரென்ன மிருகக்காட்சிசாலையிலா வசிக்கிறார்? இந்த மனோநிலைக்கும் 'இளையதளபதி' விஜய்யைப் பார்க்க ஊரைவிட்டு ஓடிவரும் பத்தாம் வகுப்பு மாணவிகளின் மனோநிலைக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?.
வாழ்வில் அன்றாடம் நிகழும் சாதாரணநிகழ்வுகளையும் பக்திப்பரவசத்தோடு விவரித்துக் கட்டுரைகள் எழுதுவதும் அதை எழுத்தாளர்கள் அனுமதிப்பது மட்டுமில்லாது ஊக்கப்படுத்தி வளர்ப்பதும் எங்குக் கொண்டுபோய் விடும்? இதற்குத்தான் நீங்கள் இவ்வளவு தடிமனான புத்தகங்களை வாசித்தீர்களா?
சு.ரா 'ஒரு இலை உதிர்வதைபோலத்தான் தனது மரணமும்' என்றார். ஆனால் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. இலை உதிர்ந்து ஓராண்டாகியும் ஏகப்பட்ட சருகுகள் குப்பைகளாய்க் குவிந்து சூழலை நாறடிக்கின்றன.
--------------------
Totally Agreed!
//எழுத்தாளனாக இருப்பது சமூகத்திற்கு வேண்டுமானால் ரிஸ்க்காக இருக்கலாம்.//
கலக்குறீங்கய்யா. :-))
நண்பரொருவர் ஜெமோ சுரா பத்தி எழுதுன புத்தகத்தை வாங்கிப் படிங்கன்னு சொன்னார்.
'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாவும்?னு' ஜெமோ எழுதுனதுதானேன்னு கேட்டேன்.
சுராவின் ஆளுமை குறித்து எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து ஊதிப் பெரிதாக்க ஒரு கூட்டமே உலாவருவதும், அந்தக் கூட்டம் மட்டுமே நவீனஇலக்கியத்தின் சொந்தக்காரர்கள் போல பாவிக்கப்படுவதும்... ஊடக வன்முறை இல்லாமல் வேறென்ன?
சாத்தான்குளத்தான்
// ஆனால் டவுன்பஸ் பிடித்து தம்புசெட்டி தெரு போய் எழுத்தாளனைப் பார்க்கவேண்டிய அவசியமென்ன? அவரென்ன மிருகக்காட்சிசாலையிலா வசிக்கிறார்? இந்த மனோநிலைக்கும் 'இளையதளபதி' விஜய்யைப் பார்க்க ஊரைவிட்டு ஓடிவரும் பத்தாம் வகுப்பு மாணவிகளின் மனோநிலைக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?. //
:-)))
பதிவு தண்டம்.....சதீஷ் சு.ரா பற்றி சதீஷ் எழுதியது வேஸ்ட் என்றால் அதனை விலாவாரியாக நீங்க எழுதினது அதவிட தண்டம்....அதபடித்த என் நேரம் அதவிட வெட்டித்தனம்....
பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
இடைப்பட்ட காலத்தில்
பூமிக்கு வந்துபோயிருந்தார்
- இது ஓஷோ அவரது கல்லரையில் எழுதச்சொன்ன வாக்கியங்கள்.
காப்பியடிக்காம இருப்பது நல்லது என்று யாராவது சொல்லுங்களேன்
sariyaana muukkai parththuththaan kusu vittirukkiriirkal thozhaaa!
குமுதத்தில் பாமரன் எழுதும் "படித்ததும் கிழித்ததும்" போல... எல்லாவற்றையும் நான் நின்ற இடத்தில் இருந்து தான் பார்ப்பேன்... இங்கு இருந்து அது நன்றாகத் தெரிந்தால் உண்டு.. இல்லையேல் அது குப்பை என்ற அணுகுமுறை...
மரணத்திற்கு இறந்தவரைப் பற்றிய குறிப்பெழுதுவது எழுதுபவனுக்கும் இறந்தவனுக்குமான நெருக்கத்தைப் பொறுத்து உருவாவது. சம்மந்தமே இல்லாமல் வெளியில் இருந்து கொண்டு அதை பார்த்தால் கோமாளித்தனமாகத் தான் தெரியும்.
சொல்ல வேறொன்றும் இல்லை...
- சித்தார்த்
/பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
இடைப்பட்ட காலத்தில்
பூமிக்கு வந்துபோயிருந்தார்
- இது ஓஷோ அவரது கல்லரையில் எழுதச்சொன்ன வாக்கியங்கள்.
காப்பியடிக்காம இருப்பது நல்லது என்று யாராவது சொல்லுங்களேன் /
தோடா வாத்தியாரு வந்துட்டாரு, இதுகூடத் தெரியாம எழுதினாங்க. அதிலுள்ள நுட்பமான கிண்டல்கூடத் தெரியலைன்னா இன்னாதான் பண்றது?
/மரணத்திற்கு இறந்தவரைப் பற்றிய குறிப்பெழுதுவது எழுதுபவனுக்கும் இறந்தவனுக்குமான நெருக்கத்தைப் பொறுத்து உருவாவது. சம்மந்தமே இல்லாமல் வெளியில் இருந்து கொண்டு அதை பார்த்தால் கோமாளித்தனமாகத் தான் தெரியும்/
அதெல்லாம்சரிதான். அது இருவருக்கு இடையிலான உறவு மற்றும் நெருக்கம் சார்ந்தது என்பதைத் தாண்டி படிக்கிற வாசகன் கற்றுக்கொள்வதில் என்ன இருக்கிறது? மேலும் எழுத்தாளனை icon ஆக்கும் மனோபாவமும் குறைந்தபட்ச விமர்சன மனோநிலையுமற்ற ரசிகமனோபாவமும் தாண்டி வேறென்ன அது? சித்தார்த் பதில் சொல்வாரா?
சித்தார்த் சொன்னதுதான். உங்கள் குசும்பிற்கு அளவே இல்லையா...? சுந்தர ராமசாமி நல்ல எழுத்தாளர் என்று சொன்னதற்காக ஒரு தோழியைக் கொலை செய்ய ஆசைப்படுவதாக நீங்கள் கவிதை எழுதிய பிற்பாடு இப்படி எழுதப் பயமாகத்தான் இருக்கிறது :)
சு.ரா வை விட்டுடுங்க. இதவிட்டுட்டு ஜெயமோகனை பத்தி நாலு வார்த்தை எழுதுங்க.
சுவாரசியாக இருக்கும்.:))
(என்கிட்ட இருக்கற சு.ரா பேயை ஓட்டறதா ஒரு நாள் சொன்னீங்களே?
யாருன்னு இன்னாத்த சொல்றது? நீங்கதான் புளியமரத்தில் குடியிருக்கிற தங்கவேலுதானே? (அல்லது முத்துதமிழினியாகவுமிருக்கலாம்)
தமிழ்நதி,
நான் சீரியசாகத்தான் எழுதியிருக்கிறேன். அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாது. சுந்தரராமசாமி பைத்தியங்களை ஒன்றும் செய்யமுடியாதுன்னு மட்டும் தெரியுது. nonsense
//உங்களுக்கு தம்புசெட்டியில் ஏதேனும் வேலை இருந்தால் அப்படியே எழுத்தாளரைப் பார்ப்பதிலே தவறொன்றுமில்லை. ஆனால் டவுன்பஸ் பிடித்து தம்புசெட்டி தெரு போய் எழுத்தாளனைப் பார்க்கவேண்டிய அவசியமென்ன? //
நீங்கள் சொல்வது சரி.
ஆர்வ மிகுதியில் சில எழுத்தாளர்களை நேரில் சந்தித்தபின், 'இனி எந்த எழுத்தாளர்களையும் மெனக்கெட்டு போய் நேரில் சந்திப்பது அவசியமற்றது. எத்தேச்சையாக சந்திக்க நேர்ந்தால் கூட அதிகம் பேசாமல்/பழகாமல் வந்து விடுவது' என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இப்போதெல்லாம் எந்த ஒரு படைப்பையும் அதை எழுதியவனைத் தவிர்த்துவிட்டு அந்த படைப்பைமட்டுமே பார்க்க பழகிவிட்டது!
இந்த சுந்தர ராமசாமி பற்றி அவர் உதிர்த்த முத்துக்களாக பலர் பக்கம் பக்கமாக எழுதியதை படித்து இதில் என்ன பெரிய வெங்காயம் இருக்கிறது என நினைத்திருக்கிறேன் .வெகு சாமான்யனும் வெகு சாதாரணமாக செய்யும் செயல்களுக்கும் ,வாக்கியங்களுக்கும் கொடுக்கப்பட்ட பில்டப்புகளைப் பார்த்து இழவு இந்த இலக்கியம் நமக்கு புரியாது போல என நினைத்திருந்தேன் ..அப்பாடா..
//அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாது//
யான்? கேக்கறவனோட கொலம் கோத்திரம் பாத்துத்தான் என்ன பதில் சொல்றதுன்னு முடிவு பண்ணுவீங்களோ? அதான் ஐடியிலேயே உரல் ஒட்டிட்டு இருக்கில்ல. 'பேரக் கண்டு புடி பாப்பம்னு' தூண்டில் போடறவனுங்க.. எச்சூஸ்மீ.. போடறவங்க யாருன்னு மூளையக் கசக்கற நேரத்திலே, அந்த உரலை இடிச்சுப் பார்த்தா யாரு இன்னான்னு தெரிஞ்சு போவுது..
இல்லன்னா, இது உள்வட்டத்துக்கான பதிவுமட்டுமே, மத்தவங்க யாராச்சும் ஏதச்சும் சொன்னால், 'ப்போடா பன்னாடை' ன்னுதான் பதில் வரும்னு ஒரு மூலைல ஒரு அனௌன்ஸுமெண்ட்டு போட்ருங்க
//அதெல்லாம்சரிதான். அது இருவருக்கு இடையிலான உறவு மற்றும் நெருக்கம் சார்ந்தது என்பதைத் தாண்டி படிக்கிற வாசகன் கற்றுக்கொள்வதில் என்ன இருக்கிறது? மேலும் எழுத்தாளனை icon ஆக்கும் மனோபாவமும் குறைந்தபட்ச விமர்சன மனோநிலையுமற்ற ரசிகமனோபாவமும் தாண்டி வேறென்ன அது? சித்தார்த் பதில் சொல்வாரா?//
இந்த வாதத்தை அப்படியே நீட்டி... என் மனப்போராட்டங்களை வெளியில் சொல்லி என்னவாகப்போகிறது? ஏன் நான் கவிதை எழுத வேண்டும்? என்றும் கேட்கலாம்.
பிரச்சனை அதுவல்ல... ஜெயமோகனை சு.ராவின் மரணம் பாதித்திருக்கிறது. அவருக்கான வடிகால் எழுத்து. அவர் எழுதினார்... இப்படி புரிந்து கொள்கிறேன் நான். இல்லை நான் அதை 'அண்ணன் எப்ப சாவான்... " ரீதியில் தான் பார்ப்பேன் என்றால் சொல்ல ஒன்றும் இல்லை.
எனக்கென்றால் இது ஒரு தேவையில்லாத விடயம்போல் தெரிகிறது. சக எழுத்தாளர்களை அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து ஏன்யா கிண்டலடிக்கிறீங்க. நீங்கல்லாம் கொசிப்படிக்கிறதுக்குத்தான் எழுத்தாளர்களா ஆகிறீங்களா. உங்களுக்கு வேற வேலையே இல்லையா?
மற்ற எழுத்தாளர்கள் வேலை வெட்டியில்லாம அப்பன், அம்மையின்ரை காசிலையும் மனைவியின் காசிலையும் வாழ்றானுங்களென்றீன்ங்களே. உங்களைப் பார்த்தாலும் அப்படித்தானே தோணுது. வேலை வெடட்டி இல்லாம புளொக்கிலை கொசிப்படிக்கிறீங்க.
நீங்கள்லாம் என்னத்தை எழுதி, என்னத்தைக் கிழிக்கப் போறீங்களோ. இளம் சமூகம் உங்களாலையும் ஒன்றையும் அறிந்து கொள்ளப் போவதில்லை. சதீஸ் மாதிரியானவர்களாலையும் அறிந்து கொள்ளப் போறதில்லை. அவர்கள் அறிந்து கொள்ளப் போவதெல்லாம் கொசிப்படிப்பது எப்படி? கிசு கிசுப்பது எப்படி என்பதைத்தான்.
அதற்கு நீங்கள் எல்லோருமே முன்னுதாரணம். வாழ்க கொசிப்பர் அன்ட் புளொக்கர் சமுதாயம்.
என்னை வலைப்பூ சுந்தரராமசாமி என்று என் ரசிகர்கள் அழைப்பதற்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதானே? :-(
//அந்த சித்தார்த் யாரு, என்னான்னு எனக்குத் தெரியாது. சுந்தரராமசாமி பைத்தியங்களை ஒன்றும் செய்யமுடியாதுன்னு மட்டும் தெரியுது. nonsense //
உன்னை மாதிரி பைத்தியத்தை யார் வந்து திருத்தறது. நீங்கதான் உலகமகா அறிவாளி பாருங்க. உங்களுக்கு ஒருத்தரை தெரியலைன்னா அவர் பிரபலமாகாதவர்.
உங்களுக்கு சு.ராவை பிடிக்கலைன்னா அவரைப் படிக்கறவங்க எல்லாம் நான்சென்ஸ். வேணும்னா ஒரு லிஸ்ட் போட்டுக் கொடு. இனிமே யார் யார்தான் நல்ல எழுத்தாளார்கள்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடு.
யப்பா வலைப் பதிவர்களே அண்ணன் லிஸ்ட் போட்டுக் கொடுப்பாரு அதை தவிர மத்த எழுத்தாளர்களை படிக்கறவனுங்க எல்லாம் லூசுங்கதான். அண்ணன் மட்டும்தான் அறிவாளி.
சுந்தரராமசாமி,ஜெயமோகன் இவங்க ரெண்டு பேர திட்டினா போதும் இலக்கிய பரப்பில் நாங்களும் இயங்குறோம் அப்படிங்கிறத நிரூபிச்சடலாம்.இந்த மட்டமான அனுகுமுறைதான் இந்த கட்டுரையின் உள்ளடக்கமாக இருப்பது வேதனையளிக்கிறது.உங்களின் தேர்ந்த எழுத்து எழுத்தாளனை விமர்சிப்பதற்க்கு மட்டும் பயன்படட்டும் சேறு வாரி அடிக்க சமூகத்தில் இன்னமும் நிறைய விதயங்கள் மீதமிருக்கின்றன.
இந்த அய்யனார் அந்த அய்யனாரா? எனக்குத் தெரியவில்லை. ஒரு சமயம் பாலபாரதியின் தளத்தில் என்று நினைக்கிறேன் என்னுடன் ஒரு குடுமி அய்யனார் ஜெயமோகனுக்காக வாதிட்டு சென்றார். அவரா இவர் என்று தெரியவில்லை. தவறான தகவாலக இருக்கின்ற பட்சத்தில் இந்த அய்யனார் என்னை மன்னிக்கவும்.
அசுரன்
அசுரன்
எனக்கு குடுமிலாம் இல்ல பெரிய மீசையோட வாராவாரம் கள் குடித்து நர மாமிசம் தவிர மத்த எல்லாத்தையும் தின்று செரித்து கவிதை என்கிற வடிவத்தை அடுத்தகட்டத்திற்க்கு நகர்த்திட்டு இருக்கேன் முடிஞ்சா ஒருமுற எட்டிபாருங்க
வாசகன், கண்களை ஈடுக்கிக்கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது. எழுத்துக்களை கொஞ்சம் பெரிதாக்கி, டெம்ப்ளட்டையும் மாற்றினால் கொஞ்சம் சுகாதாரமாக படிக்கலாம்.
சாகித்ய அகதமி விருதுப்பெற்ற இந்நூற்றாண்டின் மிக சிறந்த இலக்கியவாதியான??!! மிதக்கும் வெளி சொல்லும் பொழுது அதில் உண்மை இல்லாமல் இருக்குமா?
தங்களின் படைப்புகளின் முன்னால் சு.ரா எல்லாம் மண்டியிட வேண்டுமய்யா? எனவே சி.ரா இலையுதிர்த்து போட்ட குப்பைகளை மனமுவந்து பெருக்கி தள்ள வந்தமைக்கு தமிழ்கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமை பட்டுள்ளது. தொடரட்டும் உங்கள் மகாத்தான இலக்கிய சேவை ,அது வலைப்பதிவுலகிற்கு அவசியம் தேவை!!! :-))
உங்கள் பதிவில் அதிகமாக பின்னூட்ட குப்பைகள் சேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! இது என்னைப்போன்ற பாமரத்தமிழனின் எளிய விண்ணப்பம்!
பின்னூட்ட மாயைக்கு ஆட்படாதவர் என்பதால் இதனை சொல்கிறேன்!!!
Well done. Really express many tamil sirupathirikkai vasagars mind.
well done. It really express my views on sura
வணக்கம்.
இது மட்டுமல்ல இன்னும் இது போன்ற உங்களுடைய பல பதிவுகளில், எழுத்தாளனாகட்டும், சினிமாக்காரனாகட்டும், கலாச்சார நிகழ்வுகளாகட்டும் அது உங்களை திருப்தி செய்திருந்தால் அது உலகதரத்திற்கு இணையானது. இல்லையால் அது குப்பை. அதைப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள் எல்லாருமே கேவலமான பிறவிகள். இல்லையா?
என்ன மட்டமான சிந்தனை சார் இது? சர்வாதிகாரத்தனமாய் ஒட்டு மொத்தமாய் எல்லாருக்கும் சேர்த்து நீங்களே முடிவெடுத்து விட்டு, அதை தாண்டிய செயல்படுபவர்களை எல்லாம் கொன்று விடுவேன் என்றோ, நான்சென்ஸ் என்றோ சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டும் திரிவது எந்த வகையில் சேர்த்தி என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு பேச்சுக்கு சுந்தர ராமசாமியின் எழுத்துக்கள் மட்டம்தான் என்று வைத்துக் கொண்டாலும் கூட,நான் மட்டும்தான் அறிவாளி, மத்தவன் எல்லாரும் நான்சென்ஸ் என்று சொல்லித் திரிவது அதைவிட வெகு மட்டம்.
//யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் said...
சு.ரா வை விட்டுடுங்க. இதவிட்டுட்டு ஜெயமோகனை பத்தி நாலு வார்த்தை எழுதுங்க.
சுவாரசியாக இருக்கும்.:))
(என்கிட்ட இருக்கற சு.ரா பேயை ஓட்டறதா ஒரு நாள் சொன்னீங்களே?
6:26 AM
மிதக்கும்வெளி said...
யாருன்னு இன்னாத்த சொல்றது? நீங்கதான் புளியமரத்தில் குடியிருக்கிற தங்கவேலுதானே? (அல்லது முத்துதமிழினியாகவுமிருக்கலாம்)//
சுகுணா,
மேற்கண்ட பின்னூட்டம் என்னுடையதில்லை. தகவலுக்காக - இதுவரை பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரிலேயே போட்டிருக்கிறேன். அனானியாகவோ, அதர் ஆப்சனைப் பயன்படுத்தியதோ இல்லை.
சுரா பேயை ஒரு நபரிடமிருந்து ஓட்டுவதாக நீங்கள் குறிப்பிட்டதிருக்கட்டும், நீங்கள் உங்களிடமிருக்கும் அமா (அ மார்க்ஸ்) பேயை எப்போது ஓட்டப்போகிறீர்கள்? :-) :-)
மரணம் யாருடையதாக இருந்தாலும் மனதை பாதிக்கிறது.அதைத்தாண்டி மரணம் என்பது மிருகங்களை விட இழிவான இந்த மனித வாழ்விலிருந்து ஒரு விடுதலை அவளவுதான்....சுந்தரராமசாமிக்கு மட்டும் என்ன விதி விலக்கு இருக்க முடியும்...ஆனால் அவர் இறந்த போது தமிழ் சிறு பத்திரிகை வர்க்கத்தில் சிலர் அவர் நடந்த ஒண்ணுக்கிருந்த இடங்களை எல்லாம் முகர்ந்து பார்த்து மென்று கொண்டிருந்தார்கள்....எத்தனையோ பேர் பிறக்கிறான் இறக்கிறார்கள் அது போலவே சுந்தரராமசாமியின் மரணமும் .....எப்போதும் பார்ப்பனவாதத்தை தன் எழுத்தில் கொண்டிருக்கும் காலச்சுவடு மடத்து எழுத்தாளர்கள் தான் இதை செய்தது.அடுத்தது சுந்தரராமசாமியின் மகன் கண்ணன்....தகப்பனார் பணக்கார எழுத்தாளராக இருப்பதால் கண்ணனும் சிறுபத்திரிகை ஆசிரியர் ஆகிவிட்டார்.ஒரு சு.ரா பெந்தேகொஸ்த் சபைக்காரராக அல்லேலூயா ஆளாக இருந்தால் கண்ணனும் அல்லேலூயா கோஷ்டி ஆகியிருப்பார்.அப்பன் சேர்த்த சொத்தில் குளிர்காயுது..ஈழத்தமிழரின் பணத்தில் மடத்தை வழற்கிறது பிள்ளை...அப்பனைப்போல பிள்ளை....சு.ரா எப்படி தனக்கென்று ஒரு ஜால்ரா வட்டத்தை உருவாக்கிக் கொண்டாரோ அது போல இப்போது கண்ணனும் உருவாக்கிகொண்டிருக்கிறார்.அரசியலில் தயாநிதி குடும்பத்தின் ஒரு விதமான அருவருப்பு தோன்றி சமீபத்தில் அவர்கள் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது சகலரும் மகிழ்ந்தார்களோ அப்படி காலச்ச்சுவடு மடத்தின் மீதும் அருவருப்பு இலக்கிய வட்டத்தில் தோன்றியிருக்கிறது.கனிமொழிக்கு ஜால்ரா,ரவிக்குமாருக்கு கொள்கை வகுப்பாளர்கள்....அதனுடைய உச்சம்தான் மாயாவதியின் தலைமையில் உபியில் பார்ப்பனர் இணைந்த சமூக கூட்டணி உருவாகியிருக்கிறது என்று எழுதுகிறார்கள்.மாயாவதியின் தலைமையை ஏற்றுக்கொள்கிற கண்ணன் பார்ப்பனர் சங்கத்திற்கு ஒரு தலித்தை தலைவராக்கும் படி எழுத முடியுமா?
ஏகலைவன்
நல்லது அய்யனார்,
கோவை ஞானி பாசையில் "சுத்தமான சனதான பார்ப்பனன் என்பவன் கம்யுனிஸ்டே" என்ற வரிகளை அதன் உண்மை பொருளீல் இப்படிச் சொல்ல வேண்டும் - "சுத்தமான சனாதானமான பார்ப்பனன் என்பவன் எந்த குற்றவுணர்வுமின்றி எல்லா பொறுக்கித்தனமும் செய்பவனே".
ஏனேனில் அவனது சாஸ்திரங்கள் அவன் செய்யும் பொறுக்கித்தனங்கள் குறித்து எந்தவொரு குற்றவுணர்வையும் அவனுல் தோற்றுவிக்கும் கருத்தியல் பின்புலம் கொண்டவையாக இல்லை.
பொதுவாக கள்ளு குடிப்பது, மாமிசம் சாப்பிட்டால் அவன் பார்ப்பனன் இல்லை என்ற உங்களது தவறான கருத்தை முன்னிட்டே இந்த பதில் :-)) (உடனே இதன் அர்த்தம் கள்ளு குடிப்பது, மாமிசம் சாப்பிடுவது எல்லாம் பொறுக்கித்தனத்தில் வருவது என்று ஜல்லியிடிக்க தயவு செய்து யாரும் முயன்று விடாதீர்கள்).
ஆனால் நான் கேட்ட சந்தேகத்திற்க்கு விடை கிடைக்கவில்லையே அய்யனார்? அதாவது பாலபாரதி தளத்தில் ஜெயமோகனை ஆதரித்த அய்யனார் நீங்கள்தானா?
கவிதை என்ற வடிவத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தும் உங்களது முயற்சிகளை பார்க்க ஆவலுடனே இருக்கீறேன். வருகிறேன். அழைத்தமைக்கு நன்றி. அடுத்தக் கட்டம் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள். ஒருவேளை அது ஒரு கட்டம் பிந்தங்கி போவதாக இருக்காதா? இதனை எப்படி வித்தியசப்படுத்தி பார்ப்பீர்காள்? என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளை நான் கேட்க்க வாய்ப்புள்ளது. அப்படியாகும் பட்சத்தில் என்னை நிந்த்னை செய்யாதிருக்க வேண்டுகிறேன்.
அசுரன்
அசுரன் ஐயா!
தாமதமான இப்பதிலுக்கு வருந்துகிறேன் இப்போதுதான் உங்கள் பதிலைப் படித்தேன்.பாலபாரதி பதிவை பற்றி எனக்கு தெரியாது.பழைய பதிவுகளை புரட்டி படிக்க முயற்சிக்கிறேன்.அங்கு விவாதித்து நானில்லை.மேலும் அது எதைப்பற்றிய விமர்சனம் என தெரியவில்லை ஜெயமோகன் குறித்தான விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது :)
எனக்கு அவர் எழுத்தைப் பிடிக்கும் என்பதைத் தவிர சொல்ல வேறெதுவும் இல்லை.
கள்குடிப்பதும் மாமிசம் தின்பதும் புனிதங்களுக்கெதிரான செயல் அதாவது புனிதங்களென இவர்கள் வகுத்ததிற்க்கு எதிரான செயலை செய்துகொண்டிருக்கும் நான் புனிதனாய் இருக்க முடியாது.
என் கவிதைகள் புதிய வேறு ஒரு தளத்தில் இயங்குகிறது.பிற்போக்கான சலித்த பழைய பார்வை என்னிடமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலதிகமாய் படிக்கும் நண்பர்கள் அல்லது படிக்கப்போகும் உங்களின் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதை என்னால் தீர்மானிக்க இயலவில்லை.
தனிமனித நிந்தனைகளின் மீது எனக்கு நம்பிக்கையில்லை வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் மூத்த உங்களை நிந்திப்பேனா :)