கொலைவேட்கை
ஒரு கொலைசெய்ய என்னை அனுமதி.
இன்றிரவுக்குள் நான் யாரையாவது
கொலைசெய்யவேண்டும்
குறைந்தபட்சம் என்னையாவது.
ஜன்னல்களை உடைத்தெறி.
காற்றெதுவும் வரத்தேவையில்லை.
இப்போது தேவையெல்லாம்
புழுக்கம் நிறைந்த ஒரு கொலைமட்டுமே.
நீ ஒரு புத்தகக்காட்சிக்கு
அழைத்துச் சென்றாய்.
புத்தகங்களும் என்னைக்
கொலைக்குத் தூண்டின.
அப்துல்கலாம், சுந்தரராமசாமி,
சந்திரசேகர சுவாமிகள்பாடு
அட்டைப்படங்கள் வேறென்ன செய்யம்?
உன்னை எனக்குப் பிடிக்கும்தான்.
ஆனாலும் உன்னையாவது
கொலைசெய்ய விரும்புகிறேன்.
நீ சுந்தரராமசாமியின்
ரசிகையாக இருப்பதற்காவது.
உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் மீது தான் குற்றமே தவிர்த்து , உங்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது :-)
இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா கூட்டிட்டுப் போயிருக்க மாட்டேனே... பாத்திங்களா சொந்தச் செலவில் சூனியம் என்பது இதைத்தான்:)
வெளியே மிதக்கும் அய்யா,
நீங்க சொல்வது சரிதான்.ஆனா அதுக்காக உங்க மூஞ்சி போட்ட புஸ்தகங்கள் இருந்தா அந்த புஸ்தக கண்காட்சியையே கொளுத்தணும்னு எல்லா மக்களுக்கும் கோபம் வருமே,என்ன செய்வது?
அன்பு சுந்தர ராமசாமி ரசிகை அனானி
இனிமேலாவது நல்ல பசங்க கூட சேரவும்
இதெல்லாம் ஓவர் நக்கல்! சுந்தர ராமசாமியே (பாரப்பா பெயரிலேயே அழகன்யா) பாதி கொன்றிருப்பார்.
அப்புறம் நீயும் செஞ்சா... உனக்கு பாதிக்கொலைக்கு தான் தண்டனை கிடைக்கும் மிதக்கும் வெளி!
Waste of time