பஞ்சமனின்மொழியில்




வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர்தெளித்துப் புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உன் செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியாப் பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி,
எனக்கு அது
என் துரட்டியில் அள்ளித் தூரக்கொட்டப்படும் மலம்.

6 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    Superb

  2. வசந்த் said...

    //
    உன்னைப் பொறுத்தவரை சாமி,
    எனக்கு அது
    என் துரட்டியில் அள்ளித் தூரக்கொட்டப்படும் மலம்
    //

    சிந்தனையில் அறையும் வரிகள்.

    நன்றி
    வசந்த்

  3. Anonymous said...

    சும்மா நச்சுன்னு இருக்கு

  4. அழகிய ராவணன் said...

    இந்த உக்கிரத்தைப் பாத்ததிலேர்ந்துதான் உங்க பக்கத்தை தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சேன். இது ஏற்கனவே எழுதுனதுதானே?

    ரொம்ப தெனாவட்டா இருக்காம எதுனாச்சும் பதில் எழுதும் :-)

  5. மிதக்கும்வெளி said...

    ஆம் அழகியராவணன்.

  6. Anonymous said...

    Fantastic Diwakar ...
    Thamil Words of yours have a Different Meaning...Good.