காஞ்சாஹசி

டி.வி.எஸ் 50ஐ எடுத்துச் சென்றிருந்தபோது குழாயடியில் வரிசையில் நின்றிருந்தாள் சிரஞ்சீவி. கிளம்புவதற்குத் தயாராகத்தான் இருந்தாள். ‘‘அஞ்சுநிமிஷம் இருங்க, தம்பியை ஸ்கூலுக்குப் பத்திட்டு வந்துர்றேன்’’. நான் அப்போது பழனியில் ஒரு தொண்டுநிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியொன்றும் பிரமாதமான பணியில்லை. பழனியில் இருக்கும் குழந்தைத்தொழிலாளர்களைக் கணக்கெடுத்து டிராப் அவுட் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மீதமுள்ள சிறார்தொழிலாளர்களுக்கு மாலையில் வகுப்பெடுப்பதுதான் அந்த என்.ஜி.ஓவின் வேலை. மொத்தம் 14 பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊக்குனர்கள் என்று வினோதமான அலுவல்பெயர் இருந்தது. அவர்களை மேற்பார்வை செய்வதுதான் என் பணி. ஏனோ தானோவென்று போய்க்கொண்டிருந்த வேலைகளை முடிந்தவரைக்கும் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் ஒரு நரிக்குறவர் குடியிருப்பைக் கண்டுபிடித்தேன். பழனி ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரே விரிந்து கிடந்த அவர்களின் குடியிருப்பு என் கவனத்தை ஈர்த்தது. நண்டும் சிண்டுமாய் குழந்தைகள், குளிக்காமலே அழகாயிருக்கிற பெண்கள், எப்போதும் கமழும் மாமிசக்கவுச்சி, பூனைத்தனமான பாஷை என்றிருக்கும் அங்குதான் நானும் சிரஞ்சீவியும் செல்ல வேண்டும். அந்த குழந்தைகளுக்கு இன்று முதல் வகுப்பெடுக்கப் போகிறோம். அங்கு பேண்ட் சட்டை அணிந்த ஒரே ஆண் சாம்சன்தான். அனேகமாய் அவன்தான் தமிழ்நாட்டில் எம்.ஏ முடித்த நரிக்குறவராய் இருப்பான். அவன் கிறித்தவத்திற்கு மாறியிருந்ததால் அது சாத்தியமாகியிருந்தது.

நரிக்குறவர்களில் சாதி கிடையாது. ஆடு தின்னும் குழு, எருமை தின்னும் குழு. இருவருக்கும் வெவ்வேறு தெய்வங்கள். பாலியல் என்பது கரைகளற்ற நதியாய் வரைமுறையற்று பாய்ந்துகொண்டிருந்ததால் வேசித்தனத்தில் ஈடுபடும் நரிக்குறவர் பெண்ணையோ, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்ணையோ மருந்துக்கும் பார்த்துவிட முடியாது. ஒருவழியாக நான் மற்ற வகுப்புகளை மறந்துவிட்டு அங்கேயே பழியாய்க் கிடந்தேன். பூனைக்கறி சாப்பிட நான் கற்றுக்கொண்டதும் அங்குதான். அதுமாதிரியான மென்மையான மாமிசத்தை என் பிற்கால வாழ்க்கையில் ருசித்ததில்லை. மூன்றுமாதங்களில் நான் கற்றுக்கொண்ட நரிக்குறவர் வார்த்தைகள் பன்னிரெண்டு. தினமும் சிரஞ்சீவியை வண்டியில் அழைத்துச் செல்வதும் வீட்டில் கொண்டுவந்து விடுவதுமாய்ப் பொழுது போய்க்கொண்டிருந்தது.

அவளிருந்த தெரு சக்கிலியத்தெரு. அதற்கு யார் ராஜாஜிதெரு என்று பெயர்வைத்தார்களோ தெரியவில்லை. எதிரிலிருந்த பறையர்தெருவான பொன்காளியம்மன் கோவில் தெருவில் தண்ணீர் பிடிக்கச் சென்றால் காத்திருந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்துமுடித்தவுடன் குழாயைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, குடத்தையும் ஒரு அலசு அலசித்தான் தண்ணீர் பிடிப்பார்கள் பொன்காளியம்மன் கோவில்தெரு பெண்கள். சிரஞ்சீவியின் வீடு, வீடு என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்திற்கு முற்றிலும் மாறாய் இருந்தது. சமயங்களில் இரவுகளில் அவள் தெருவுக்குப் போக வேண்டியிருந்தால்,  பைக் வெளிச்சத்தைப் பார்த்து அவசர அவசரமாக பாவாடையை வாரிச்சுருட்டி எழுவார்கள் ஒதுங்க வந்த பெண்கள், ஏதோ குடியரசு பரேடைப் போலிருக்கும். ‘‘பேண்டு நாறிக்கிடக்கும் உன் வீட்டு வாசலுக்கு கோலங்கள் தேவையில்லை’’ என்று பின்னாளில் நான் கவிதை எழுதியதும் சிரஞ்சீவியின் வீட்டை மனதில் வைத்துத்தான்.

நான் சிரஞ்சீவியை இப்படி அழைத்துச் செல்வதை மற்ற பல ஊக்குனர்கள் விரும்பவில்லை என்பதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். சாதியும்கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மற்ற வகுப்புகளை நான் கவனிக்காதது, சிரஞ்சீவியுடன் சுற்றித்திரிவது என புகாருக்கு மேல் புகார்களாய் நிறுவன மேலிடத்திற்குப் பறந்தன. இதையொட்டி அவசர அவசரமாய் பழனிக்கு வந்த நிறுவன மேலாளரிடம் கூட்டத்தில் சரமாரியாக என்மீது புகார்களை பரப்பினார்கள் ஊக்குனர்கள். சிரஞ்சீவி அந்த கூட்டத்திற்கு வரவில்லை. அத்தனை கூட்டத்திலும் என் நிலைமையைப் புரிந்துகொண்டு ஆறுதலாய் இருந்தது பவானி மட்டும்தான். பிறகு என்னை நிறுவனம் பணிநீக்கம் செய்த மறுநாளே பவானி வேலையை விட்டுப் போய்விட்டது எனக்கு புதிராகத்தானிருந்தது.

சிரஞ்சீவியுடனான தொடர்புகளும் ஒரு கட்டத்தில் நின்றுபோயின. மதுரையில் இன்னொரு வேலையில் சேர்ந்தபிறகு எதேச்சையாக மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் சாம்சனைப் பார்த்துவிட்டேன். மூன்றாவது பீர் இறங்கியபோது உடைந்து அழ ஆரம்பித்தான் சாம்சன். உண்மையில் சாம்சனுக்கும் சிரஞ்சீவிக்கும்தான் தொடர்பு இருந்ததாம். அது பாலுறவு வரை போயிருக்கிறது. சிரஞ்சீவியைத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தபோது ‘‘உங்களை மாதிரி கீழ்சாதிக்காரங்களைக் கட்டிக்க எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க’’ என்றாளாம் சிரஞ்சீவி. எனக்கு வந்த புன்னகை குரூரமானதா என்று  தெரியவில்லை.

வானி குடும்பச்சூழ்நிலையின் காரணமாக வற்றலும் தொற்றலுமாய் இருந்தாலும் அவளைப் போல் அழகாய்ச் சிரித்த பெண்ணை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. சினிமாவிலோ டிவியிலோ சினேகா புன்னகைப்பதைப் பார்க்கும்போது எனக்கு பவானியின் நினைவுதான் வரும். அவள் தொண்டுநிறுவனத்திற்கு வேலைக்கு வருவதற்கு முன்பு பழனி பஞ்சாமிர்தக் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறாள். அங்கு சூபர்வைசர் முத்துவோடு அவளுக்குக் காதலிருந்திருக்கிறது. பல சமயங்களில் முத்துவோடு நான்தான் போனில் பேசி அவளிடம் பேசக்கொடுப்பேன்.

செக்ஸ் பற்றி முதன்முதலாக நான் பகிர்ந்துகொண்ட பெண்  பவானிதான். ஒரு அலுவலக மீட்டிங்கிற்கு மற்ற எல்லோருக்கும் முன்னால் அவள் வந்துவிட்டாள். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுயமைதுனம் இவை குறித்து நான் பேசிய விஷயங்கள் அவளுக்கு ஏதோ புதிதான உலகத்துக்குள் நுழைந்ததைப் போலிருந்தது. கண்கள் கிறங்க கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் தெரிந்த மினுப்பு என்னை என்னவோ செய்தது. ‘‘நான் உன்னைக் கிஸ் பண்ணலாமா?’’ என்றேன். ‘‘வேண்டாம்’’ என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் மற்ற பெண் பணியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் அவள் வார்த்தைகளில் மறுப்போ அழுத்தமோ இருந்ததாகச் சொல்ல முடியாது.

அவளுக்கும் முத்துவுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு முற்றிலுமாக விலகிவிட்டார்கள். ஆனால் அதற்காக அவள் ஒருநாள் கூட வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது ‘‘எனக்கு முத்துவோட லவ் இருந்தாலும் மணின்னு இன்னொரு பையன் இருந்தான், அவனைத்தான் எனக்குப் பிடிக்கும். நீங்க அடிக்கடி ஏதோ சொல்வீங்களில்ல, செக்ஸ் வேட்கைன்னு. அது அவன் மேலதான் இருந்தது. அவனோட உடம்பும் ஹேர்கட்டும் உங்களை மாதிரிதான் இருக்கும். ஆனா அவன் கருப்பு’’ என்றாள்.

வேலையை விட்ட ஆறுமாதங்களில் பழனிக்குப் போக வேண்டியிருந்தது. பவானியைப் பார்க்கலாமே என்று தோன்றியது. அவள் ஒரு மெடிகல் ஷாப்பில் வேலை சேர்ந்ததாக ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தாள். அவளைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டேன், ‘‘நானும் மணியும் ஒரே மாதிரி இருக்கோம்னு சொன்னியே, அதுக்கு என்ன அர்த்தம்?’’. ‘‘இவ்ளோ லேட்டாவா கேட்பீங்க?’’ அதே சிரிப்பு.

26 உரையாட வந்தவர்கள்:

  1. மிதக்கும்வெளி said...

    எனக்கு எப்போதும் கதை எழுத வராது. பலமுறை முயற்சி செய்து மகத்தான படுதோல்வி அடைந்திருக்கிறேன். இதில் கதைத்தன்மை இருக்கிறதா, இல்லையா என்பதைச் சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற பதிவர்நண்பர்கள் பைத்தியக்காரன், சுந்தர், நர்சிம்,கேபிள், தண்டோரா போன்ற நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.

  2. Anonymous said...

    Reposting the comment on Jeyamohan for your attention.
    ------------------------------
    சுகுணா,
    ஜெயமோகன் மாய்ந்து மாய்ந்து எழுதியதற்கு நீங்கள் இப்படி இரண்டு பிசாத்து போயண்டுகளை சொல்லிவிட்டு மார் தட்டி கொள்வீர்கள் என்று நினைக்கவே இல்லை. தலித்துகள் மீதான வெறுப்பு எல்லா இடங்களிலும் குறைந்துள்ளது என்று ஜே மோ சொல்லவே இல்லை. அவர் சொல்வதெல்லாம் தலித்துகள் மீதான காழ்போ விலக்குதலோ ஏற்புடையது அல்ல என்ற கருத்து நாகரீக மனிதனை வந்தடைந்துள்ளது என்பதே. இது 100 சதவீதம் நடந்து விட்டது என்று யாரும் சொல்லவில்லை .அனால் மெல்ல மெல்ல சமூகத்தின் தார்மீக மையம் அந்த இடத்தை நெருங்கி கொண்டிருகிறது. உதாரணமாக IT துறையில் இருக்கும் என் நண்பர்கள் நடுவே இருக்கும் போது என்னால் எந்த சாதியையும் மட்டம் தட்டி பொதுவில் பேச முடியாது. மனதிற்குள் ஒருவன் என்ன வேண்டுமானாலும் நெனைக்கலாம். அனால் பொதுவில் வைக்க முடியாது. ஒரு 50 வருடம் முன்பு இந்த நிலைமை இருந்திருக்க முடியுமா? ஆனால் இன்று இந்த கருத்து ஒரு நாகரீக மனிதனை வந்து அடைந்துள்ளது. மெல்ல மெல்ல இது மற்றவரிடமும் பரவும் என்பதே ஜெயமோகன் சொல்வது. இதற்கு சமானமான ஒரு உதாரணம் என்றால் விதவை திருமணம் குறித்த கருத்துக்கள் சென்ற 50 வருடங்களில் மாறிவந்திருப்பதை சொல்லலாம். உங்களது அடுத்த விமர்சனம் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று அவர் சொன்னது. இது வெறும் ஒரு தகவல் பிழையாகவே எனக்கு தெரிகிறது,. இந்த ஒரு பிழை அவரது மற்ற கருத்துகளை negate செய்து விடாது.

    பெரியார் பற்றிய அவரது முக்கியமான விமர்சனம் என்ன? அவர் பேசிய பல விஷயங்கள் குறித்து அவருக்கு அடிப்படை புரிதலே இல்லை என்பதே. பெண்கள் கருப்பையை எடுத்து விட வேண்டும் போன்ற எடுத்தோம் கவிழ்த்தோம் கருத்துகளையே அவர் சமூக சீர்திருத்த கருத்துகளாக முன்வைத்தார் என்பது. மேலும் அவர் சமூகத்தின் ஒரு சாரார் மீது வெறுப்பை தூண்டினார் என்பது. இது குறித்து இன்னும் தெளிவான சொற்களில் ஜெயமோகன் இன்னும் விரிவாக எழுதி உள்ளார். அது எதையுமே எதிர்கொள்ளாமல் நீங்கள் வைக்கும் வாதங்கள் சிரிப்பாக தான் இருகின்றன. பைத்தியக்காரன் பதிவில் ரோசாவசந்த் பின்னூட்டம் நேர்மையான எதிர் வினையாக இருக்கிறது. 'இந்த ஜெயமோகனோடு மல்லுகட்டும் கருமம் என்ன எழவிற்கு' என்று நீங்கள் சொல்வது 'ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும்' கதையை நினைவு படுத்துகிறது.

  3. Unknown said...

    கதையோட ஆழத்துல இருக்கற அறவிழைவு புரியுது சுகுணா. நல்ல கதை.

  4. Anonymous said...

    சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற பதிவர்நண்பர்கள் பைத்தியக்காரன், சுந்தர், நர்சிம்,கேபிள், தண்டோரா

    கதையில் மிஸ் ஆன அங்கதம் பின்னூட்டத்தில் இருக்கிறது. ரொம்பவே குசும்புய்யா உனக்கு :-)

  5. காயத்ரி சித்தார்த் said...

    இது சரியான ஏமாத்து வேலை.. தலைப்புல 4 கதைன்னு சொல்லிட்டு பூங்கோதை கதைய சொல்லவே இல்ல..

  6. நேசமித்ரன் said...

    நல்ல கதைங்க சார்

    அந்தப் பூங்கோதை கதையில் வருவதன் உட் பொருள்தான் ....

  7. Ayyanar Viswanath said...

    கல்யாணியை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டிய / பேசாமல் இருக்க வேண்டிய வன்மம் கதை சொல்லிக்கு
    தேவையில்லை என்பதுதான் என் வாசிப்பாக இருக்கிறது. இதுவரை தமிழில் எழுதப்பட்ட பெரும்பான்மை இலக்கிய வடிவங்கள் தன் கூறுதலாக தன்னெழுச்சியின் வெளிப்பாடாகத்தான் வந்துள்ளனவே தவிர பிற அல்லது பன்மை வடிவத்தில் அல்ல. மேலதிகமாய்
    /நீ போஸ்ட்மாடர்னிஸ்ட்/ என்கிற வரிகளின் மூலமாய் பன்மைத்துவத்தின் மீதான நம்பிக்கையில்லாதவராகவும் கல்யாணி சித்தரிக்கப்படுவதால் இல்லாத ஒன்றை எதிர்பார்ப்பது திணித்தலே.

    ப்ளெர்ப் எழுதுபவனைப் பற்றிய புனைவு ஒன்று சன்னாசியின் பக்கத்தில் கிடைக்கும் நேரமிருந்தால் வாசித்துப் பார்க்கவும்.

  8. தமிழ்நதி said...

    "இனி ஒருபோதும் நான் கல்யாணியோடு பேசப்போவதில்லை."

    இந்தக் கதையும் உண்மையிலிருந்து பிறந்ததெனில்,நீங்கள் கல்யாணியோடு பேசாமல் விடுவதுதான் சரி. இந்த விடயத்திலாவது உறுதியாக இருங்கள்.

    சித்தார்த்,

    "கதையோட ஆழத்துல இருக்கற அறவிழைவு புரியுது சுகுணா"

    அடடா! இந்த அறவிழைவு விளக்கு அணைவதும் எரிவதுமாக இருக்கிற விந்தை என்னவாக இருக்கும்:) அறவிழைவும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியோ... அன்றேல் ஆட்களுக்கேற்றபடியோ...

  9. தமிழன்-கறுப்பி... said...

    கதைத்தன்மை நிறையவே இருக்கிறது. கல்யாணியை ஏற்றுக்கொள்ளலாம், இல்லையேல் விலகி விடலாம் வேறெதுவும் அவசியமில்லை.

  10. பா.ராஜாராம் said...

    எனக்கு,பிடிச்சிருக்குங்க.

  11. குட்டிபிசாசு said...

    பின்நவீனத்துவ 'ஆட்டோகிராப்'பா?

  12. நர்சிம் said...

    //மிதக்கும்வெளி said...
    எனக்கு எப்போதும் கதை எழுத வராது. பலமுறை முயற்சி செய்து மகத்தான படுதோல்வி அடைந்திருக்கிறேன். இதில் கதைத்தன்மை இருக்கிறதா, இல்லையா என்பதைச் சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்ற பதிவர்நண்பர்கள் பைத்தியக்காரன், சுந்தர், நர்சிம்,கேபிள், தண்டோரா போன்ற நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.
    //

    இந்தக் கொலவெறி பின்னூட்டத்துக்குப் பதிலா என்னையும் வேற பேர்ல கதைல இன்குலூட் பண்ணி அடி பின்னி இருக்கலாம் ;););)

    கதையல்ல நிஜம் போலவே ஒரு உணர்வு..எல்லாக் கதைகளும் எங்கேனும் நிஜமாய் இருந்தவைதானே..

  13. Rajan said...

    //அனேகமாய் அவன்தான் தமிழ்நாட்டில் எம்.ஏ முடித்த நரிக்குறவராய் இருப்பான். அவன் கிறித்தவத்திற்கு மாறியிருந்ததால் அது சாத்தியமாகியிருந்தது.
    //

    நெத்தியடி

  14. Rajan said...

    சூப்பர் கதை நாலு ஹீரோயின் ! ஆம்பளைக்கி பொம்பள பேரு பொம்பளைக்கு ஆம்பள பேரு ! புரட்சி !

    சேரன ஹீரோவா போட்டா சி செண்டர்ல கலெக்சன் அள்ளிரலாம்

  15. Rajan said...

    //இலக்கியத்தொடர்பில் கல்யாணிக்கும் எனக்கும் அறிமுகமானவள்தான் மனோன்மணி. அவளும் கல்யாணியைப் போல கவிதை எழுதுபவள்தான்.//

    குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்டீங்க !

  16. நேசமித்ரன் said...

    //குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்டீங்க !//

    ரைட்டு பாஸ்

  17. Rajan said...

    ////குழல் வாய் மொழி கோப்பெருந்தேவி எல்லாம் விட்டுட்டீங்க !//

    ரைட்டு பாஸ்

    1:03 AM//


    நான் இல்ல பாஸு! நான் பெயிலு

  18. Rajan said...

    //உண்மைதான். எனது சக இலக்கிய நண்பர்கள் தங்கள் சாமான் எழும்பாததற்குக் கூட பின்நவீனத்துவம்தான் காரணம் என்றார்கள்.//

    கூட இருக்கறவங்களோட வண்டவாளங்களை இப்படி தாங்கள் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பது வருத்தமாக இருக்கிறது !

    எனி ஹவ் சேலம் சித்த வைத்தியர் சரி பண்ணி விடுவார்

  19. Rajan said...

    //‘‘பேண்டு நாறிக்கிடக்கும் உன் வீட்டு வாசலுக்கு கோலங்கள் தேவையில்லை’’ என்று பின்னாளில் நான் கவிதை எழுதியதும்//

    யப்பா அச்சிச்டன்ட் டைரக்டர்ஸ் இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா !

    நீங்க சினிமாவுக்கு வந்தா பிரைட் பிஉச்சர் இற்கு தல

  20. Rajan said...

    //அவள் ஒரு பச்சைத் தேவடியா//

    நீங்க கலர் புல்லான ஆளுன்னு தெரியுது

  21. Rajan said...

    //தொண்டையிலிருந்து ஒரு கசப்புணர்ச்சி சுரந்தது.//

    துப்பிடுங்க தல !

  22. Anonymous said...

    ஐயா உங்க ஓரின சேர்க்கை பங்குதாரர் பொட்டிக்கடை என்பவர் செய்யும் ரகளை தாங்கவில்லை, பதிவுகளில் வந்து சேலையைப்பிடித்து இழுக்காதகுறை தான்.அவரும் உங்க நண்பர் என அறிவோம்.தயவுசெய்து வேண்டாம் என சொல்லுங்கள்,அவர் போடு கருத்துகள் படு மோசமாய் உள்ளது,எல்லோரையும் புணர்ச்சிக்கு கூப்பிடும் செயல் கண்டிக்கத்தக்கது. வீட்டை விட்டு வெளியே வா,உன் பொண்டாட்டியை நான் பார்த்துக்க்றேன் என்னும் ரீதியாக போகிறது,ப்ளீஸ் சார்.

  23. மணிஜி said...

    நடை நன்றாக இருந்தது. அன்று நீங்கள் நடந்து வரும்போது பார்த்தேன்.மற்றப்டி உங்கள் பின்னூட்டம்!! அன்றைக்கே கேட்டிருந்தால் கன்னத்தை காட்டியிருப்பேன் சுகுணா...முதலில் வாமு கோமுவை வாருகிறீர்களோ என்று நினைத்தேன். தலைப்பை பார்த்தவுடன். எங்கடா எது கிடைக்கும் என்று அலையும் சிலதுகளுக்கு பின்னூட்ட்டத்தில் பொறை போட்டிருக்கிறீர்கள்.மிகவும் “தன்மையான கதைதான்”

  24. Anonymous said...

    சார் / மேடம்
    உங்க பதிவுக்கு மிதக்கும் வெளிக்கி என பெயர் மாற்றம் செய்தால் உசிதம். இன்று நான் மலம் கழிக்கும் போது அதன் நுனி கூர்மையாகவும் கிழக்கு நோக்கியும் இருந்தது,அதில் கட்டுவிரியன் போல டெக்சர்கள் இருந்தது, பச்சை வண்ண ஓனானையும் நினைவுபடுத்த தவறவில்லை, மினுமினுப்பாகவும் இருந்தது. நாற்றம் கொஞ்சம் அதிகமாய் இருந்ததால் ஃப்லஷ் செய்தென் உடனே, நரகலை பார்க்கையில் உங்கள் எப்போதும் வீங்கிய பீர் குடித்த முகம் வந்து போனது.ஏன்

  25. வால்பையன் said...

    :)

  26. மிதக்கும்வெளி said...

    இந்த கதையின் சில பகுதிகளை நீக்கி தலைப்பை மாற்றியிருக்கிறேன். கதையில் நீக்கப்பட்ட பகுதி, ஒரு அறஞ்சார்ந்த கேள்வியை முன்வைப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அந்த பகுதி அதே அறமற்ற தன்மையைக் கொண்டதாகக் கருதுவதால் நீக்கிவிட்டேன். காஞ்சாஹசி என்றால் நரிக்குறவர் மொழியில் சாராயம் என்று பொருள்.