விலகி மிதக்கும்வெளி


நான் என்பது பெயர்தான் எனில் சிவக்குமார். பிறந்தது திண்டுக்கல்லில். காலம் நகர்த்திக் கரை சேர்த்த இடம் தற்சமயம் சென்னை. ஒரு திமுக குடும்பத்தில் பிறந்தவன் என்பது அரசியல் உயிரியாய் உருவாவதற்கான அடிப்படையாய் அமைந்தது. என் கனவுகளுக்கு என் அப்பாவும் என் அப்பாவின் கனவுகளுக்கு நானும் பரஸ்பரம் இழைத்துக்கொண்ட துரோகங்கள் ஏராளம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவரை ஏதும் இல்லை என்றாலும் தந்தை மகற்கு ஆற்றிய பேருதவி ஏழாம் வகுப்பு படிக்கும்போது அரசுநூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்த்தது. ஒரு அருவமாய்த் தெரிந்த பெரியாரை உயிர்ப்பு மிக்க காதலனாய் மாற்றியவை பெரியார் குறித்த வாசிப்புகள். பெரியாரியக்கங்களிலும் ஒருகாலம் பணியாற்றியிருக்கிறேன். வாழ்க்கையில் பெரும்பாலும் நினைவு வைத்துக்கொள்ளத் தேவையில்லாதவர்களாய் ஆண்கள் இருக்கிறார்கள். என்றாலும் தாமரைக்கண்ணன், பூ.மணிமாறன், டார்வி, விடுதலைராசேந்திரன் மாதிரியான அற்புதமான மனிதர்களோடு பழகுவதற்கான சந்தர்ப்பங்களை இயக்கங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. இன்றளவும் தன்னை முன்னிறுத்தாத தகைமையாளராய், பெரியாரை வாழ்க்கையாய் மாற்ற எத்தனிக்கிற மனிதனாய், பற்றற்ற துறவியாய் வாழ்வை நகர்த்தும் அதி அசுரன் என்ற பெயரில் எழுதும் அதிமனிதன் தாமரைக்கண்ணனை இந்த கணங்களில் நினைத்துக்கொள்கிறேன். ’ஓ மனிதா!’ என்று ஒவ்வொருமுறையும் தொந்தரவு செய்து பூமியைப் புரட்டும் நெம்புகோலைக் கைப்பிடி இற்றுவிழும் வரை கவிதைகள் எழுதிய காலம் முடிந்து நவீன இலக்கியக் களத்தில் காலடி எடுத்துவைத்த ஆண்டு 1999. ஆணுறைகளையும் நாப்கின்களையும் போலவே கவிதைகளும் சமூகத்திற்கு அவசியமானவை என்றுதான் கருதுகிறேன். 2003ஆம் ஆண்டு ‘தீட்டுப்பட்ட நிலா’ என்னும் கவிதைத்தொகுதி மருதா பதிப்பகத்தின் மூலம் வெளியானது. பெயருக்கேற்றால் போல் நாய்கூட சீந்தவில்லை. ‘பெயர்மாற்றமும் மதமாற்றமும் - எங்கே போகிறது தலித் அரசியல்?’ என்னும் சிறுவெளியீடு சுயமரியாதை இயக்கத்தாலும் ‘அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும் கூடத்தான்’ என்னும் சிறுவெளியீடு புதிய ஜனநாயகம் வெளியீடாகவும் வெளியானது. கதவு, புதியபயணம், கவிதாசரண், எக்ஸில், தொரட்டி, புத்தகம் பேசுது என பல சிறுபத்திரிகைகளில் படைப்புகள் வெளியாயின. சில கட்டுரைத் தொகுப்புகளில் தனிக்கட்டுரைகளும் வெளியாயின. ஒருகட்டத்தில் சிறுபத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்தி வலைப்பூக்களில் எழுதத்தொடங்கினேன். ஆறாண்டுகால வலையெழுத்து ஏராளமான வாசகர்களையும் நண்பர்களையும் அதில் பாதியளவு கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது. அம்பேத்கரியம், பவுத்தம், பெரியாரியம், மார்க்சியம், பின்நவீனம் ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடும் அரைகுறை அறிவும் கொண்டவன். இவைதான் என் எழுத்துகளையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். தற்சமயம் பத்திரிகையாளன். துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு குழந்தையும் உண்டு.

28 உரையாட வந்தவர்கள்:

  1. nagoreismail said...

    உங்களின் வலைத்தளம் எனது பள்ளிகூடம்.

    என்னை பொறுத்த வரை நீங்கள் எழுதும் வாரம் முழுதுமே நட்சத்திரம் தான்.

    எனினும், தமிழ்மணம் இந்த வாரம் உங்களை நட்சத்திரமாக அலங்கரித்தற்கு தமிழ்மணத்துக்கு நன்றிகளும் தங்களுக்கு வாழ்த்துகளும்

    உங்களின் எழுத்துக்களை மிகவும் ரசிக்கும் வாசகன்

  2. Ganesan said...

    சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்

    http://kaveriganesh.blogspot.com

  3. Unknown said...

    thanks for tamil manam

  4. குசும்பன் said...

    //துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் //

    :))))))

    நட்சத்திர வாழ்த்துக்கள், இந்த வாரம் செம சூடா இருக்கபோவுது!

  5. Ganesan said...

    நல்ல எழுத்து திறன் உங்களுக்கு.

    வாழ்த்துக்கள்.

  6. காயத்ரி சித்தார்த் said...

    //துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு குழந்தையும் உண்டு.//

    :)

    நட்சத்திர வாழ்த்துக்கள் சுகுணா!

  7. யுவகிருஷ்ணா said...

    புதுவருடத்தின் முதல் நட்சத்திரமே வாழ்க..

    வாழ்த்துகள்!

  8. கோவி.கண்ணன் said...

    வாழ்த்துகள் சுகுணா !

  9. Ashok D said...

    //மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவரை ஏதும் இல்லை என்றாலும் தந்தை மகற்கு ஆற்றிய பேருதவி ஏழாம் வகுப்பு படிக்கும்போது அரசுநூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்த்தது//
    same pinch... ஆனால் நான் பெரியார் பக்கம் போகவில்லை. அப்பொழுது தமிழ்வானனே போதுமாகயிருந்தது :)
    வாழ்த்துகள்

  10. நிலாரசிகன் said...

    வாழ்த்துகள் ஜி :)

  11. gulf-tamilan said...

    நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

  12. கண்ணா.. said...

    நட்சத்திர வாழ்த்துக்கள்..

    :))

    உங்கள் பெயரில் நிறைய அனானி கமெண்டுகள் உலவுகின்றன. அது குறித்தும் உங்கள் தளத்தில் தெரிய படுத்துங்கள். பல பேருடைய குழப்பத்தை தீர்க்க உதவும்

  13. Vaa.Manikandan said...

    போட்டோ ரொம்ப பார்மல் ல இருக்கே ;) சும்மா...விளையாட்டுக்கு...நல்ல விவாதங்களை நடத்துங்கள். வாழ்த்துக்கள்.

  14. Jayaprakash Sampath said...

    வாழ்த்துகள்.

  15. enRenRum-anbudan.BALA said...

    வாழ்த்துகள்.

    என்ன, சிறிது நாட்களுக்கு முன் உங்கள் வலைப்பதிவை access பண்ண முடியவில்லை ? ஏதோ இன்வைட் தேவை என்று மெசேஜ் வந்தது!

  16. enRenRum-anbudan.BALA said...

    உங்களுக்கும் "Test" செய்யும் பழக்கம் உண்டா!

  17. nagoreismail said...

    ‘தீட்டுப்பட்ட நிலா’

    ‘அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும் கூடத்தான்’

    "...’ஓ மனிதா!’ என்று ஒவ்வொருமுறையும் தொந்தரவு செய்து பூமியைப் புரட்டும் நெம்புகோலைக் கைப்பிடி இற்றுவிழும் வரை கவிதைகள் எழுதிய காலம்..."

    - இவையனைத்தையும் படிப்பதற்கு மிகுந்த ஆவலாய் உள்ளது. எங்கே கிடைக்கும்? - தயவுசெய்து தகவல் தரவும்.

    எனது இணைய அஞ்சல் முகவரி
    dulfiqar@gmail.com

  18. மிதக்கும்வெளி said...

    விளம்பர உபயம் : நன்றி தண்டோரா சவுண்ட் சர்வீஸ்.

    /அநேகமாக நிறைய பேர்கள் (அதாகப்பட்டது மிதக்கும்வெளி (எ) சுகுணா எழுதியதை) படிக்க வாய்ப்பில்லை.அதானால் நான் (கவிஞர் அண்ணாத்தே) பதிகிறேன். /

    (அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் எழுதியது)

    பிரதி உபகாரம் : எல்லோரும் உடனடியாக சவுண்ட் சர்வீஸ்க்குச் செல்லவும். முகவரி : http://www.thandora.in/2010/01/blog-post.html.

    அங்கேதான் நாய்ச்சந்தை, சாரி சண்டை நடப்பதாக அண்ணாத்தே சொல்லியிருப்பதால் காணவந்த கண்களுக்கு நன்றி கூறிச் செல்லுங்கள்.

  19. தண்டோரா said...

    என்னுடைய கமெண்ட் எங்கே

  20. மிதக்கும்வெளி said...

    அதை நீங்கள்தான் போட வேண்டும் தண்டோரா. மட்டுறுத்தலை எடுத்துவிட்டேன். எனவே யார் எந்த பின்னூட்டம் போட்டாலும் வெளியாகும்.

  21. தண்டோரா said...

    நீங்கள் நீக்கிவிட்ட பின்னூட்டத்தை சொல்கிறேன். அதை தனி பதிவாக போடவைக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தாதீர்கள் நண்பர் சுகுணா.

  22. மிதக்கும்வெளி said...

    தண்டோரா,

    அடிப்படைகளைப் புரிந்துகொள்ளுங்கள். மட்டுறுத்தல் இல்லை என்னும்போது தானாகவே உங்கள் பின்னூட்டம் வெளியாகும். அப்படி ஒருவேளை வெளியான பின்னூட்டத்தை நான் அழித்திருந்தாலும் உங்கள் பெயர் காட்டி, பின்னூட்டம் அழிக்கப்பட்ட விவரமும் இருக்கும். ஆனால், ‘தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்’ என்னும் பதிவில் உங்கள் பதிவின் சில வரிகளோடு ஒரு பின்னூட்டம் இருக்கிறது. ஆனால் அது உங்கள் பெயரில் இல்லை, வேறொரு பெயரில் உள்ளது. அது நீங்கள்தானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லித்தான் நீங்கள் முதலில் தனிப்பதிவு போட்டீர்களா என்ன? ஆமாம், என் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?

  23. மிதக்கும்வெளி said...

    நண்பர் சுகுணா என்று எவ்வளவு அழகாக அழைக்கிறீர்கள் தண்டோரா? பிறகு ஏன் எப்போதும் உறைவாளோடு அலைகிறீர்கள்?

  24. தமிழன்-கறுப்பி... said...

    வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

  25. சின்னக்குட்டி said...

    உங்கள் நட்சத்திர வாரம் சிறக்க இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்

  26. கண்ணகி said...

    அதென்ன துரதிர்ஸ்டவசமாக ஒரூ மனைவி.........வீட்டம்மா சீக்கிரம் வாங்க....குழவிகட்டையோடு.....

  27. ஜமாலன் said...

    வாழ்த்துக்கள்.. நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ்மணம் பக்கம் வந்தேன்.. உங்கள் நட்சத்திர முன்னுரை அருமை. இந்த 4 மாதங்களில் நிறைய நண்பர்கள் நட்சத்திரமாகி வாழ்த்து சொல்லாமல் விட்டிருப்பதை இப்பொழுதுதான் உணர்கிறேன். வாழ்த்து என்பது பதிவுலக மொய் இல்லை என்பது நம்மைப்போல நண்பர்களும் அறிந்தவர்கள்தான். )))

    வாழ்த்துக்கள் மீண்டும்.

  28. Unknown said...

    நடசத்திர வார வாழ்த்துக்கள் சுகுணா திவாகர்.... கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தொனித்தாலும் அதுதானே உம்முடைய அடையாளம்