அ.மார்க்சின் ‘பெரியார் ?’ - ஒரு இடையீடு
(அ.மார்க்சின் ‘பெரியார் ?’ நூலுக்கு எழுதிய இந்த விமர்சனம் புதிய கோடங்கி இதழில் வெளியானது. ஆண்டு நினைவில்லை. ஆனால் கட்டுரையின் வேறு சில விஷயங்கள் தற்சமயச் சூழலுக்குத் தேவையில்லை என்று கருதுவதால் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே இங்கே பதிவிட்டிருக்கிறேன். ஒரு சில வார்த்தைகளையும் மாற்றியுள்ளேன். - சுகுணா)
’பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகளின் மீதான கவன ஈர்ப்பு’ என்னும் பிரகடனத்தோப்டு வெளிவந்திருக்கும் அ.மார்க்சின் ‘பெரியார்?’ பெரியாரின் வேறு பல பரிமாணங்களைக் கணக்கில் எடுத்திருக்கிறது. இது பெரியாரியக்கத்தவர் மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் மத்தியிலும் பதட்டங்களை ஏற்படுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இச்சிறுவெளியீடுனூடாக சில இடையீடுகளை நிகழ்த்தலாம் என்று தோன்றுகிறது.
முதலாவதாக “ மதநீக்கச் செயற்பாடுகளை இந்தியச் சூழலில் செய்தவர்கள் அம்பேத்கர், பெரியார், பூலே” என்கிறார் அ.மார்க்ஸ். இவர்கள் மூவரும் சாதி இருப்பு குறித்து தீவிரமான புரிதல் கொண்டிருந்ததையும் இந்திய தன்னிலைகளின் உருவாக்கத்தில் இந்துமதம் மற்றும் பார்ப்பனிய உளவியல் வகிக்கும் பாத்திரம் குறித்தும் ஆழமாக யோசித்து அதற்கு எதிராகவே இந்துத்துவத்தின் அடித்தளத் தகர்ப்பிற்கான அவைதீகச் செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் மூவரையும் எல்லா அம்சங்களிலும் ஒத்த போக்கினராகக் கருத வேண்டிய அவசியமில்லை.
அம்பேத்கரிடமிருந்து பெரியாரும் பெரியாரிடமிருந்து அம்பேத்கரும் வேறுபடும் சிலவேறு புள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒன்று மதநீக்கம் - இறுதியாக மத ஒழிப்பு. ’’நான் சமூகத் தொண்டாற்றுவதற்கு ஆன்மீக உணர்வு அவசியமாகிறது” என்கிறார் அம்பேத்கர். ‘’தலித் மக்கள் இந்து மதத்தை விட்டு நீங்க வேண்டும்” என்னும் நிலைப்பாட்டின்போது தழுவுவதற்காய் பவுத்தத்தைத் தேர்வுசெய்கிறார் அம்பேத்கர். ஆனால் பெரியாரோ, ‘’இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்” என்கிறார். இந்தியாவில் செல்வாக்கு பெற்ற இருபெரும் மாற்று மதங்களாகிய கிறித்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் கிறித்தவத்தை, ‘’நான் பார்த்தவரையில் அதுவும் இன்னொரு பார்ப்பனீய மதமாகத்தானிருக்கிறது” என்று நிராகரிக்கும் பெரியார், இஸ்லாத்தைப் பரிந்துரைக்கிறார். ‘’மகமதியர்கள் முரட்டு சுபாவத்தோடு இல்லாதிருந்தால் இந்தியாவில் இந்து தீண்டப்படாதவரின் எண்ணிக்கை ஆறுகோடியும் முகமதிய தீண்டப்படாதவரின் எண்ணிக்கை ஆறுகோடியுமிருந்திருக்கும்” என்று முஸ்லீம்களின் ‘முரட்டுத்தனத்தை’ மெச்சுகிறார் பெரியார். அதைவிட முக்கியம் கிறித்தவத்துக்கு மாறுகிற தலித்துக்கு சாதி தொடர்வதைச் சுட்டிக்காட்டி இஸ்லாத்திற்கு மாறுகிற தலித் மறுநாளே தனது சாதி அடையாளத்தை துறந்துவிட்டு ‘இஸ்லாமியனாக’ மாறிவிட முடிவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்து மதத்தின் மூலம் இழந்த ‘சுயம்’ இஸ்லாத்தின் மூலம் வந்து சேர்கிறது. என்றாலும் கூட பல சந்தர்ப்பங்களில் ‘’புத்தி உள்ளவனெல்லாம் புத்தன், நானும் பவுத்தன்” என்று சொல்லி வந்தாலும், அ.மாவே நூலில் குறிப்பிடும்படி தம்மை ‘இஸ்லாமை அனுசரிப்பவர்” என்று சொல்லி வந்தாலும் ‘’நான் இறந்தபிறகு என் வீட்டார் பார்ப்பானின் காலைக் கழுவி தண்ணீரைக் குடித்து மோட்சம் அடையக்கூடாது என்பதற்காகத்தான் முஸ்லீமாக மாறுவேன் என்கிறேன்’’ என்று கூறினாலும் கூட அவர் எம்மதத்தையும் சேர்ந்தவராகவில்லை. அவ்வளவு சுலபமாக எந்தவொரு நிறுவனத்திற்குள்ளும் அகப்படமாட்டார் பெரியார்.
பெரியாரின் பகுத்தறிவு மதநீக்கச் செயற்பாடே என்கிறார் அ.மார்க்ஸ். மததின் ஆளுமை அகற்றப்பட்டு மேலைச் சூழலில் அறிவு ஆட்சி செய்துவந்த காலகட்டத்தில் இந்தியச் சூழல் மத இருள் (அதாவது பார்ப்பனிய இருள்) கப்பிக் கிடந்தது. இதுவே பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு அடித்தளம் என்பது அ.மாவின் கூற்று. இது உண்மை என்பதை விடவும் உண்மையின் ஒருபகுதிதான் என்று சொல்லத்தோன்றுகிறது.
பெரியாரின் பகுத்தறிவை வெறுமனே மதம் மற்றும் கடவுள் வழிபாடு நீக்கம் என்று மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஆழமாக யோசித்தால் அது எல்லாவித கருத்தியல் மேலாண்மை வன்முறைக்கு எதிரான இறுக்கமற்ற நெகிழ்வுடைய திறப்பு என்று புரிந்துகொள்ளலாம். இந்திய-தமிழ்ச்சூழலைக் கணக்கிலெடுக்காது சாதிய எதார்த்தத்தைப் புறந்தள்ளி, மார்க்சியர்கள் மார்க்சியத்தை அப்படியே பொருத்த முனைந்த சூழலில் அதுவே ஒரு மதமாகிப் போனதாக கண்டிக்கிறார். எந்தவொரு சித்தாந்தமும் முன்மொழியப்படும் காலத்தின்பின் ஏதேனும் ஒரு புள்ளியில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வழிபாடாக்கப்படும் என்கிற பிரக்ஞை இருந்ததாலேயே அவர் இறுதிவரை தனது ஒவ்வொரு சொல்லாடலின் முடிவிலும் ‘இது இறுதியான உண்மையல்ல’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேயிருந்தார். (அதையும் மீறி பெரியார் பீடத்தில் ஏற்றப்பட்டுவிட்டார் என்பது வேறு
விஷயம்).
மேலும் மேலைநாட்டு பகுத்தறிவும் அதனடியிலெழுந்த நவீன அறிவியலும் இரண்டு விதமான அம்சங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு, அவை ஒற்றைத் தீர்வுகளாகவே உள்ளன என்றன. சில ‘வகைமாதிரிகளைக்’ கொண்டு பொதுவிதிகள் உருவாக்கப்பட்டன. ’ஒவ்வொன்றின் மீதும் கவனம்’, ‘ஒவ்வொன்றிற்குமான பிரச்சினைகள்’, ‘ஒவ்வொன்றிற்குமான தீர்வுகள்’ என்பதை மறுத்தே அவற்றின் பொதுவிதிகளும் தீர்வும் ஆளுமை செலுத்தின. ஆங்கில நவீன மருத்துவம் முதற்கொண்டு இத்தகைய போக்குகளே நிலவியதால், பகுத்தறிவு மற்றும் அறிவியல், நுண் தளங்களில் நுட்பமாக அதிகாரத்தைத் தொழிற்படுத்த ஆரம்பித்தது. ஆனால் மாறாக பெரியார் எந்தவொரு பொதுவிதிகளை உருவாக்கவுமில்லை, பொதுத்தீர்வுகளைப் பரிந்துரைக்கவுமில்லை. பொதுவான ஒழுக்கம், பொதுவான கலாச்சாரம், பொதுவான வாழ்க்கைமுறை என்கிற எல்லாவற்றையும் மறுத்தார். மற்றதின் இருப்பு குறித்து தெளிவான பிரக்ஞை இருந்தது அவரிடம். அதனால்தான் தனக்கு சத்தியமானது மற்றவர்க்கு அசத்தியமானது.
மேலும் ஒரு பகுத்தறிவுவாதியானவன் மாற்றுத்தீர்வு குறித்தே கவனம் குவிப்பான். ’’மாற்றுகளை முன்வைத்து விட்டு விமர்சனம் செய், கட்டவிழ்ப்புகளை நிகழ்த்து’’ என்பான். ஆனால் இந்த கறார்தன்மை பெரியாரிடம் இல்லை. ‘’மதத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் என்ன வைப்பது?” என்கிற கேள்வி எழும்போது அவர் சொல்கிறார், ’’நடுவீட்டில் மலம் நாறுகிறது, தூக்கி எறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்கிறாயே”. கட்டமைப்புகளின் மீதான விமர்சனமும், கட்டவிழ்ப்புகளுமே இங்கு முக்கியம். வேறொரு வகையான கட்டமைப்பை நிறுவுதல் என்பது இன்னொரு வகையான அதிகாரச் செயற்பாட்டிற்கு அடிகோலலாம் என்கிற புரிதல் இருந்தது அவருக்கு.
மேலும் பெரியாரின் சொல்லாடல்கள் மற்றும் செயற்பாடுகளைப் பகுத்தறிவு வலியுறுத்தும் ‘தர்க்க’ அளவுகோல்களைக் கொண்டு மட்டும் அளந்துவிட முடியவில்லை. எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்பட்டவுடன் பகுத்தறிவுவாதி எழுப்ப விரும்புகிற கேள்வி, ‘’நடைமுறைக்கு ஒத்துவருமா?”. இங்கு ‘நடைமுறை’ என்பது நிலவுகிற நடைமுறையே. ஆனால் மாற்றம் விரும்புகிற ஒருவனுக்கு ‘நடைமுறை’ பற்றிக் கவலையில்லை. அவனைப் பொறுத்தவரை நடைமுறை என்பதே வன்முறையானதும் மாற்றவேண்டியதும் ஆகும். ’’பெண்கள் விடுதலை பெற கர்ப்பப்பையைத் தூக்கி எறியுங்கள்” - பெரியார். அப்படியானால் ’ஜனசமூகம் என்னாவது?’ இதுதான் பகுத்தறிவுவாதியின் கேள்வி. ’’ஜனசமூகம் விருத்தியடையாவிட்டால் உனக்கு ( அ.து - பகுத்தறிவுவாதிக்கு) என்ன நட்டம்? இதுவரை விருத்தியடைந்த ஜனசமூகத்தால் பெண்களுக்கு என்ன நன்மை? விலங்குகள் வேண்டுமானால் விருத்தியடையட்டுமே”- இங்கு பெரியார் தர்க்கங்களைத் தாண்டுகிறார். உறைந்து போயிருந்த தமிழ்ப்பரப்பில் பெரியார் ஏற்படுத்திய காத்திரமான அதிர்வுகள் வெறுமனே ‘பகுத்தறிவு’ என்னும் எல்லைக்குள் நின்று விடுபவையல்ல, அதையும் தாண்டிய விசாலமான பரிமாணங்கள் கொண்டவை.
இப்படியாக பெரியார் குறித்த தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நாம் புதிய புரிதல்களைக் கண்டடையலாம்.
மன்னிக்கவும். பதிவு எழுதுவதற்கு முன்பே தவறுதலாகப் பட்டனை அழுத்திவ்விட்டேன்.
மன்னிக்கவும். பதிவு எழுதுவதற்கு முன்பே தவறுதலாகப் பட்டனை அழுத்திவ்விட்டேன்.
எழவு , இப்படி யாரும் படிக்காத , சீரியசா எடுத்துக்காத பதிவுகளை எழுதி இந்த வருடமும் சிறந்த நகைச்சுவை பதிவாளர் விருது வாங்க பாருமையா ...
தமிழ் நாட்டில் உள்ள எல்லா வெறி நாய்களுக்கும்(அதாவது சுகுணா திவாகர் போன்ற முண்டங்கள்)ஒரு ஜாதி வெறி பிடித்த கிழவனின் தாடியைப் பிடித்து தொங்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.தமிழர்களை விட கீழ்த்தரமான ஜாதி உலகத்தில் உண்டா என்ன?
http://www.youtube.com/watch?v=vOvU-Dwg-_Y&feature=channel
உன்னெல்லாம் ஸ்டார் ஆக்குனதுக்கு தமிழ்மணக்காரங்க ரொம்ப வருத்தப்படுறாங்கடா...
உன்னைய மாதிரி ஒரு அறிவாளி தமிழ் வலையுலகத்துல இதுவரை இருந்ததில்லையாம். ஆகவே உன் அறிவை வேறு நல்ல விஷயத்துக்குப் பயன் படுத்திவிட்டு, தமிழ் வலையுலகை விட்டுச்செல்லும் படி பலர் சார்பாக உன்னை மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன்.
///தமிழ் நாட்டில் உள்ள எல்லா வெறி நாய்களுக்கும்(அதாவது சுகுணா திவாகர் போன்ற முண்டங்கள்)ஒரு ஜாதி வெறி பிடித்த கிழவனின் தாடியைப் பிடித்து தொங்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.தமிழர்களை விட கீழ்த்தரமான ஜாதி உலகத்தில் உண்டா என்ன?///
அனானி சொல்ல வருவது பார்ப்பானைப் பார்ப்பான் என்பதும் சாதி வெறிதானே என்பதுதான் போலிருக்கிறது. பிள்ளைவாள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
thaanga mudialayada sami ! Star pathivarnu vera declare panni intha thamizmanam nammala torcher pannuthu.
///thaanga mudialayada sami ! Star pathivarnu vera declare panni intha thamizmanam nammala torcher pannuthu.///
அனானி செல்லம்,
பகுத்தறிவு பகலவனுடைய வழியில போகிற மின்மினிப் பூச்சிகளுக்குப் பக்கத்தில போகவே உனக்குத் தாங்கலை... அப்புறம் எப்பிடி?