அலைகளையும் நீலத்தையும்
எடுத்துவிட்டால்
கடல் என்பது
வெறும் தண்ணீர்ப்பரப்புதான்.
குழாயைத் திறந்தால்
கொட்டுகிறது கடல்.
சீறும் அலைகளின் ஓசையைக்
குழாயில் கேட்கவில்லையா சௌகத்?

15 உரையாட வந்தவர்கள்:

 1. thiyagu said...

  அய்யா அருமையான கவிதை
  கையை கொடுங்க

  மிக நன்று

 2. விசாலாட்சி மூர்த்தி said...

  நல்ல கவிதை

 3. Anonymous said...

  செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?
  அல்லது ஒரு குறிப்புணர்த்தலா?

 4. காயத்ரி said...

  இன்று தண்ணீர் குழாய் திறக்கையில் இதுவும் கடலா என்ற வியப்பு வந்தது. உங்கள் கவிதைகள் கற்க மட்டுமல்ல மனதில் நிற்கவும் செய்கின்றன.. வாழ்த்துக்கள் சுகுணா!

 5. சித்தார்த் said...

  //அலைகளையும் நீலத்தையும்
  எடுத்துவிட்டால்
  கடல் என்பது
  வெறும் தண்ணீர்ப்பரப்புதான்.//

  மிக நன்றாக வந்துள்ளது திவாகர். உங்கள் கவிதைகளில் இருக்கும் அந்த அந்தரங்க தன்மை (பெயர் பயன்படுத்துவதால் இருக்கலாம்) பிடித்திருக்கிறது.

 6. மிதக்கும்வெளி said...

  /செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?
  அல்லது ஒரு குறிப்புணர்த்தலா?/

  மீண்டும் அதேகேள்வி.

 7. மிதக்கும்வெளி said...

  சித்தார்த்,

  சுந்த்ரராமசாமி குறித்த பதிவில் உங்களைத் திட்டிவிட்டுப் பின் நாளெல்லாம் வருத்தப்பட்டேன். சமயங்களில் சடாரென்று உணர்ச்சிவசப்படுவதும், கோபப்படுவதும் எனது பலவீனமாக இருக்கிறது. சாரி, நாம் பழம் விட்டுக்கொள்வோம், உங்கள் மனசு ஆற நேற்று எஸ்.எம்.எஸ்ஸில் வந்த ஒரு ஜோக்:

  போலீஸ் : ஏண்டா 'சிவாஜி' படத்தைத் திருட்டிவிசிடில பார்த்தே?

  மாட்டியவன்: கண்ணா, பன்னிங்கதான் கூட்டமாய்ப் போய்த் தியேட்டரில படம் பார்க்கும். சிங்கம் சிங்கிளாத்தான் திருட்டுவிசிடில பார்க்கும்.

 8. அய்யனார் said...

  தல
  இந்த ஜோக் சொன்னதுக்கு அவன் சட்டைய பிடிச்சி அடிச்சிருக்கலாம்
  :)

 9. ஜெஸிலா said...

  //அலைகளையும் நீலத்தையும்
  எடுத்துவிட்டால்
  கடல் என்பது
  வெறும் தண்ணீர்ப்பரப்புதான// அலைகளுக்கு ஏது நீலம்? வானின் நிறத்தை திருடிக் கொண்டுதானே கடல் நீலமாகிறது? கடல் என்பது எப்போதுமே நிறமில்லாத வெறும் தண்ணீர் பரப்புதான்.

 10. vathilai murali said...

  அருமை

 11. பொன்ஸ்~~Poorna said...

  //இந்த ஜோக் சொன்னதுக்கு அவன் சட்டைய பிடிச்சி அடிச்சிருக்கலாம்//

  Repeat! :)

  கவிதை வழக்கம் போல அருமை...

 12. Anonymous said...

  /செளகத் என்பது ஒரு செளக்கியத்துக்காகவா?
  அல்லது ஒரு குறிப்புணர்த்தலா?/

  மீண்டும் அதேகேள்வி.//

  பரவாயில்லை, அதே பதிலை கேட்டிராதவர்களுக்காகச் சொல்லுங்கள்

 13. மிதக்கும்வெளி said...

  /பரவாயில்லை, அதே பதிலை கேட்டிராதவர்களுக்காகச் சொல்லுங்கள்
  /

  கொஞ்சம் பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று கவிதையை வாசியுங்களேன் நண்ப/பி!

 14. லக்கிலுக் said...

  //கொஞ்சம் பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று கவிதையை வாசியுங்களேன் நண்ப/பி!//

  இந்தப் பின்னூட்டமே கவிதையாகத்தான் தெரிகிறது எனக்கு!

 15. enbee said...

  Thala...

  Kavitha, Kavitha,...