உண்மை மற்றும் போலி நண்பர்களுக்கு...

'போலிகள் ஜாக்கிரதை', 'இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பின்னூட்டம் இடப்போவதில்லை', 'தமிழ்மணத்திலிருந்து விலகப்போகிறேன்' என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்' ஏனோ எனக்கு இன்னமும் வாய்க்கவில்லை.

தமிழ்நதியின் பெயரில் எனக்கு வந்த ஒரு போலிப்பின்னூட்டம் குறித்துச் சில வார்த்தைகள். சிலநாட்களுக்கு முன்பு அவரது 'ஆண்மை' என்னும் கவிதைக்கு நான் ஒரு பின்னூட்டமிருந்தேன். ஆனால் 'மிதக்கும்வெளியின் உணர்ச்சி போலி உணர்ச்சி' என்றும் 'கோட்பாடுகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு உளறுபவர்' என்ற ரீதியிலும் அவருக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. (பிறகு அதைத் தமிழ்நதி எடுத்துவிட்டார்.)

அந்த 'உண்மை உணர்ச்சியாளர்' கோட்பாடு குறித்த முழுமையான புரிதலை விளக்குவதற்காக டியூசன் எடுக்க என் வலைப்பக்கமே வந்திருக்கலாம். அங்கே எதற்குச் சென்றார் என்று தெரியவில்லை. அப்படிச் சென்றவர் தனது வாசிப்புத் தகுதிக்காகவாவது தனது பெயரைப் போட்டு எழுதியிருக்கலாம்.

என்னுடைய பதிவுகளில்தான் பெரும்பாலும் எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் அனுமதிக்கொண்டிருக்கிறேன் தானே! என்ன சமயங்களில் ஒரே கெட்டவார்த்தையில் திரும்பத் திரும்பத் திட்டும்போது போரடிப்பதால் அவற்றை மட்டும் மட்டுறுத்த வேண்டும் என்கிற 'அவசியம்' ஏற்படுகிறது.

அதிலும் எனக்கு வரும் பின்னூட்டங்கள் அலாதியானவை. 'என்ன பிரகாஷ், காலையில் காபி சாப்பிட்டீங்களா?' என்று யாராவது ஒரு நண்ப/பி பின்னூட்டம் போடுவார். அதாவது யாரேனும் பதிவர் நண்பருக்கு நீங்கள் போன் செய்கிறீர்கள் என்றுவைத்துக்கொள்வோம். அவரது போன் அவுட் ஆப் ஆர்டராக இருக்கலாம் (அ) அவுட் ஆப் சர்வீசாக இருக்கலாம் (அ) நீண்ட நேரம் பிஸியாக இருக்கலாம். அவரை மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்?

உங்களது அந்த நண்பர் என்னுடைய வலைப்பக்கத்தை ஓரளவிற்கு ரெகுலராகப் படிக்கும் துன்பத்திற்கு ஆளாகுபவராக இருந்தால் என்னுடைய ஏதாவது ஒரு பதிவிற்கு 'என்ன அய்யனார், உங்கள் பையனுக்கு எல்.கே.ஜி அட்மிஷன் கிடைச்சாச்சா?' என்று பின்னூட்டம் போட்டுவிடலாம். எப்படியும் அய்யனார் ஓரிருநாட்களில் உங்களைத் தொடர்புகொண்டுவிடுவார்.

இப்படியாகவே பின்னூட்டங்கள் வருகின்றன. இந்த லட்சணத்தில் நான் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதில்லையென்று ஒரு தோழி மிகவும் வருத்தப்பட்டிருந்தார். 'பிரகாஷ் காபி சாப்பிட்டாச்சா?' என்ற கேள்விக்குப் பிரகாஷ்தானே பதில் சொல்லமுடியும்.

சரி, விதயத்திற்கு வருவோம். தமிழ்நதியைப் பொருத்தவரை ஒரு நல்ல படைப்பாளி, நல்ல நண்பரும்கூட. ஆரிய, திராவிட, ஆறிய, சூடான விவாதங்களில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்பவரில்லை. மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது. ஏதோ அவருக்குத் தோன்றிய விஷயங்களைப் படைப்பாகக் கொண்டுவருபவர்.

மேலும் அவருக்கென்றுள்ள குடும்பப்பொறுப்புகள், புலம்பெயர்ந்து வாழ்வதால் இயல்பாகவே ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகள், அடையாளச்சிக்கல்கள் என்று ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. இதில் யார் போலி, யார் உண்மை என்றெல்லாம் கண்டுபிடிக்க வைத்து ஏன் கஷ்டப்படுத்தவேண்டும்?

வேண்டுமானால் நண்பர்கள் விரும்பினால் என்னுடைய அய்.டி மற்றும் பாஸ்வேர்ட் கூட தருகிறேன். விருப்பம்போல கமெண்டோ அல்லது 'வடைகறி பிரியாணி செய்வது எப்படி/' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளையும் கூட போட்டுக்கொள்ளலாம். ஏற்கனவே ஒரு பதினைந்துபேருக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தெரியும். பாலபாரதி கூட என் பக்கத்தில் இரண்டு பதிவு போட்டிருக்கிறார். (சும்மா சொன்னேன் தல, நீங்கபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு மருந்தைக் குடிச்சுடாதீங்க. அப்புறம் தமிழ்நாடு 'தல'சிறந்த சிந்தனையாளரை இழந்துவிடும்.)

அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்?

20 உரையாட வந்தவர்கள்:

 1. Midhakkum Veli said...

  //அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்?//

  Adhane!
  Pavamya Vittudunga!

 2. மிதக்கும்வெளி said...

  இது அழகு!

 3. பொன்ஸ்~~Poorna said...

  என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்'
  - அப்படி ஒரு பதிவு வந்தா, உங்களை விட அதிர்ஷ்டம் எங்களுக்குத் தான் ;)

 4. பொன்ஸ்~~Poorna said...

  பை த பை, மறந்திட்டேனே...

  மதி, சாப்டாச்சா?

 5. Midhakkum Veli said...

  Indha Maadhiri Ethuna Puriyara maadhiri ezhuthina paravallai!

 6. சிறில் அலெக்ஸ் said...

  //(சும்மா சொன்னேன் தல, நீங்கபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு மருந்தைக் குடிச்சுடாதீங்க. அப்புறம் தமிழ்நாடு 'தல'சிறந்த சிந்தனையாளரை இழந்துவிடும்.)

  //

  :)))

 7. சந்தோஷ் said...

  //அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்?//

  :)) பாவம்பா திவாகர்..

 8. Anonymous said...

  pOligalE....ungalaiyum manitha uyiraaa madhichu...romba decent'a thala solli irukaaru...iniyaavathu yOsinga makkalE..(sathiyamaaa naan pOli illeeeengO..naanga..vilambara virumbigal illai athaan intha anony VeDam..)

 9. Anonymous said...

  //மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது.//

  அப்படீன்னா..?

 10. பா.க.ச நிர்வாக்குழு said...

  இதை ஒரு பா.க.ச பதிவாக அங்கீகரிக்கிறோம்

 11. enbee said...

  :)

  Irunthalum ivvalavu nallavara irukkatheenga.

 12. அய்யனார் said...

  பொன்ஸ் .அய்யனார் சாப்டாச்சான்னு கேட்டா உடனே பதில் வருமே :)

 13. லக்கிலுக் said...

  வரவனை ஐயா!

  வயிறு வலிக்குதுன்னு சொன்னீங்களே? சரியாயிடிச்சா?

 14. அய்யனார் ரசிகர் மன்றம் said...

  அய்யனார் சாப்டாச்சா?

 15. மிதக்கும்வெளி said...

  /என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்'
  - அப்படி ஒரு பதிவு வந்தா, உங்களை விட அதிர்ஷ்டம் எங்களுக்குத் தான் ;)

  /

  கவலைப்படாதீர்கள் பொன்ஸ், இன்னும் இரண்டுவாரத்தில் நானே எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம் என்றுதானிருக்கிறேன்.

 16. மிதக்கும்வெளி said...

  ///மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது.//

  அப்படீன்னா..? /

  அப்படின்னா... வெறுமனே இசங்களின் பெயர்களை உதிர்த்துக்கொண்டு தனிநபர் சண்டைகளை வளர்ப்பவரோ, அல்லது வம்புச்சண்டைக்கோ போகாத அப்பாவி என்று அர்த்தம். தாவு தீருது.

 17. மிதக்கும்வெளி said...

  அய்யனார் ரசிகர் மன்றாவது உண்மையா? ரசிகர்மன்றமாவது உண்மையா வையுங்கப்பா!

 18. வரவனையான் said...

  //லக்கிலுக் said...
  வரவனை ஐயா!

  வயிறு வலிக்குதுன்னு சொன்னீங்களே? சரியாயிடிச்சா? //


  நான் இன்னும் களத்திலேயே இறங்கலப்பா,

 19. Anonymous said...

  //அப்படின்னா... வெறுமனே இசங்களின் பெயர்களை உதிர்த்துக்கொண்டு தனிநபர் சண்டைகளை வளர்ப்பவரோ, அல்லது வம்புச்சண்டைக்கோ போகாத அப்பாவி என்று அர்த்தம். தாவு தீருது.//

  மேலே சொன்னவங்கள்ல யார் ஸார் அப்பாவிகள்..? மார்க்சிஸ்ட்டுகளா? பெரியாரிஸ்ட்டா? போஸ்ட் மாடர்னிஸ்ட்டா? டோண்டூஸ்ஸா..?

  இந்த நாலு பேராலதான அடிதடியே நடக்குது.. அப்புறமென்ன அப்பாவிக..?

 20. லக்கிலுக் said...

  இந்தப் பதிவை அமோகமாக வரவேற்கிறோம்.

  பின்நவீன புயல் வெளியே மிதக்கும் அய்யா ரசிகர்மன்றம், சென்னை-91