உடை
மறுக்கப்பட்டதே விதிக்கப்பட்டதாயும்
விதிக்கப்பட்டதே மறுக்கப்பட்டதாயும்
நகரும் வாழ்க்கையில்
சாலையோரத்தில்
சில கண்ணாடிகளை உடைப்பது
தவிர்க்கமுடியாததாகிறது
உடைந்துசிதறும் கண்ணாடித்துண்டுகளில்
கேட்கிறதா
மறுப்பின் இசையும்
கொண்டாட்டத்தின் வேட்கையும்.

5 உரையாட வந்தவர்கள்:

 1. அய்யனார் said...

  ஆகச்சிறந்தது இது ன்னு அடிச்சி சொல்லலாம்

 2. மிதக்கும்வெளி said...

  அப்ப மற்றதெல்லாம் குப்பைன்னு சொல்றீங்களா?((-

 3. Anonymous said...

  மொத்தத்துல வன்முறை எதிர்ப்பின் ஒரு சாரம். அது நடந்தே தீரும் என்று கவிதை பாடி நீங்க தப்பிச்சுக்குறீங்க. இது எப்படி ஸார் பகுத்தறிவு கொள்கைக்குள்ள வரும்..?

 4. Anonymous said...

  சிறை வைத்த சுவர்கள் மீதான கோபத்தை சிலபொழுது காற்றில் கத்தி கிழித்துக் காட்டுகிறீர்களோ.. என்றும் தோன்றுகிறது

 5. Mathi said...

  please visit

  www.mathimaran.wordpress.com