பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று



நேற்றிரவு தொலைபேசியில் அழைத்தாய்
உன்னோடு பேசமுடியவில்லை தயாள்.
என் தசைகளைச் சிலபாம்புகளுக்குத்
தின்னக்கொடுத்திருந்தேன். மன்னி.
முதல் வார்த்தையிலேயே
என்னைக் கொலைசெய்ய விருப்பம்தெரிவித்தாய்.
நல்லது. ஆயுதங்களின் தேவைக்கு அணுகு.
என்னைக் கர்வி என்றும் யாருடைய கேள்விகளுக்கும்
பதில்சொல்வதில்லையென்றும்
குற்றம்சாட்டினாய். இருக்கலாம்.
கோப்பைகளை நிரப்புவதைவிடவும்
உடைக்கவே விரும்புகிறேன் தயாள்.
உனது வரவேற்பறை எப்போதும்
தயாராயிருப்பதாக முகமன் கூறினாய்.
விருந்தினர்களின் புழுக்கம்நிறைந்த
வரவேற்பறைகள் எனக்கு
உகந்ததல்ல தயாள்.
என்னை நினைக்கும்போதெல்லாம் ஒரு
குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே
விரிவதாய்ச் சொன்னாய்.
கலகக்காரனாகவும் மனநோயாளியாகவும்
சமயங்களில் பிதற்றும் குழந்தையாகவும்
அறியப்பட்டவனின் வாழ்க்கை
உண்மையில் சாதாரணமானது,
சமயங்களில் அற்பமானதும் தயாள்.
என் கவிதைகளில் நெளியும்
தேவதைகளின் முகவரிகேட்டுத்
தொந்தரவு செய்கிறாய்.
நான் புனைவை வைக்கிறேன்.
நீ உண்மையைத் தேடுகிறாய்.
நான் எழுதுவது கவிதைகள் என்று நம்புகிறாய்.
எனக்குக் கவிதைகளில் நம்பிக்கையில்லை தயாள்.
வார்த்தைகளில் என்னைத் தேடியலைவதைவிடவும்
ஒரு புன்னகையிருந்தால் வீசிவிட்டுப்போ.
புலனாய்வுசெய்து என்னைக் கண்டுபிடிப்பதைவிட
என்னைக் கொலைசெய்துவிடு தயாள்
அல்லது என் கவிதைகளைப் புறக்கணி.

10 உரையாட வந்தவர்கள்:

  1. காயத்ரி சித்தார்த் said...

    //வார்த்தைகளில் என்னைத் தேடியலைவதைவிடவும்
    ஒரு புன்னகையிருந்தால் வீசிவிட்டுப்போ.
    புலனாய்வுசெய்து என்னைக் கண்டுபிடிப்பதைவிட
    என்னைக் கொலைசெய்துவிடு தயாள்
    அல்லது என் கவிதைகளைப் புறக்கணி//

    உங்கள் கவிதைகள் புறக்கணிக்க முடியாதவை சுகுணா. படைப்பாளியை படைப்பின் வழி அணுகுவது, தவிர்க்க வேண்டிய அதே நேரம் தவிர்க்க இயலாத மனவியல்பு. தயாளை மன்னிக்கலாம் தவறில்லை!

  2. லக்கிலுக் said...

    தலை!

    கொஞ்ச நாளாவே உங்க படைப்புகள் யாரோடவோ பேச விரும்புது. அது யாருன்னு புலனாய்வு செய்யணும் :)

  3. மிதக்கும்வெளி said...

    லக்கி,

    கவிதை வாசிப்பவர்கள் புலனாய்வு அதிகாரிகளானால், கவிஞர்கள் எல்லாம் கொலைக்குற்றவாளிகள்தான் ஆகவேண்டும்((-

  4. லக்கிலுக் said...

    //கவிதை வாசிப்பவர்கள் புலனாய்வு அதிகாரிகளானால், கவிஞர்கள் எல்லாம் கொலைக்குற்றவாளிகள்தான் ஆகவேண்டும்((- //

    ஆஹா... அருமை... உங்கள் கவிதையை விட இந்த பஞ்சை அதிகம் ரசிக்கிறேன்! :-)

  5. Anonymous said...

    எனக்கு புரிந்தவரையில், நல்ல கவிதை திவா
    தயாள் என்பது தான் புரியவில்லை

  6. மிதக்கும்வெளி said...

    நல்லவேளை, அப்பாடா, தயாள் யாரு தயாளு அம்மையாரா என்று யாரும் கேட்கவில்லை.

  7. மிதக்கும்வெளி said...

    நல்லவேளை, அப்பாடா, தயாள் யாரு தயாளு அம்மையாரா என்று யாரும் கேட்கவில்லை.

  8. Ayyanar Viswanath said...

    /அது யாருன்னு புலனாய்வு செய்யணும் :)/

    லக்கி புலனாய்வு முடிவுகளை அறிவிப்பீங்களா :)

    தல எனக்கு ஒரு ரசிகர்மன்றம் புதுசா கிளம்பி இருக்கு ஏதாவது எசகு பிசகா கமெண்ட வந்தா ரிஜக்ட் பண்ணுங்க..
    அது ஏன் தலைவா போலிகளுக்கு உங்கள ரொம்ப பிடிக்குது?

  9. Anonymous said...

    //அது ஏன் தலைவா போலிகளுக்கு உங்கள ரொம்ப பிடிக்குது?//

    ஓநாய்களுக்கு ஓநாயை புடிக்காதா? போலி அய்யாக்களை வெளியே மிதக்கும் அய்யாவுக்கு பிடிப்பதில் என்ன ஆச்சரியம்? பாலா அய்யா பெயரில் வெளியே மிதக்கும் அய்யா பின்னூட்டம் போட்டதில்லை என்று மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள்!

  10. Anonymous said...

    தயாள் யாரு தயாளு அம்மையாரா..?