அசுரி




பேண்டுநாறிக்கிடக்கும்
உன் வீட்டு வாசலுக்கு
கோலங்கள் தேவையில்லை.
மலர்களின் வாசத்தைவிடவும்
உன் சட்டைக்கையிடுக்கில் வீசும்
வியர்வைமணம் பிடித்திருக்கிறதெனக்கு.
நம் காதலைப் பகிர
தாஜ்மகால்கள் வேண்டியதில்லை
ஏதேனும் கட்டிமுடிக்கப்படாத
கட்டிடங்களே போதும்.
நீ வா!
உன் அழகோடும் இன்மையோடும்.
எனக்குத்தெரியும்
எல்லாத் தேவதைகளுக்கும் குசு வருமென்று.

9 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    நான் மூஞ்சியில் குசு விடுகிறேன்
    நீ என் வீட்டு வாசலில் வந்து பேண்டு விட்டு போ
    நீ பின் நவீனத்துவமாக உன் அம்மா மடியில் பேண்டு விட்டு வா.

  2. தமிழ்நதி said...

    என்ன நண்பரே!ஏதாவது கோபமா என்ன:-) ஆனாலும், உண்மைகள் 'நாற்றமாக'த்தான் இருக்கின்றன.

  3. மாசிலா said...

    மிதக்கும்வெளி,

    என்னங்க இது?
    ரொம்ப அசிங்கமா, சிச்சீ அழுக்கா இருக்குதே!

    மன விரக்தியோ?

    அருவருப்பா இருக்கு. வேண்டாம், தயவு செய்து.

  4. Anonymous said...

    But all that lets kusu off is not an angel :)

  5. Anonymous said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    தயவு செய்து கவிதை எழுதுவதை விட்டு விடுங்கள்.உங்களை மாதிரி வெத்து வேட்டு ஆசாமிகள் கவிதை எழுத முயல்வதை,ஆங்கிலத்தில் "farting against thunder " என்பார்கள்.உங்க கவிதைகளிலேயே மிகவும் கேவலமான கவிதை இந்த குசு கவிதை தான்.இப்ப புரியுது நீங்க ஏன் மிதக்கறீங்கன்னு.Gas தான் காரணம்.ஆகையால் இன்று உங்களுக்கு M A P O N G C என்ற பட்டம் வழங்கப்படுகிறது.ஏற்றுக் கொள்ளுங்கள்.

    பாலா

  6. Ayyanar Viswanath said...

    திவாகர்

    அப்பா 'பளார்' னு அறஞ்ச மாதிரி ஒரு கவித

    அழகியல் பார்வை அது இது ன்னு பெனாத்திட்டு இருக்க என்ன மாதிரி ஆளுங்கள தூக்கி போட்டு மிதிச்சா மாதிரி,,..

    நல்ல வீர்யம் திவா

  7. அசுரன் said...

    நடுத்தர வர்க்கத்தின் பிரேமைகளின் மீது குசு விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.


    அசுரன்

  8. Anonymous said...

    //
    எனக்குத்தெரியும்
    எல்லாத் தேவதைகளுக்கும் குசு வருமென்று.
    //

    I would say this is the best poem.

    Just the truth.

  9. Anonymous said...

    வெள்ளை அங்கிகளோடு உயர பறக்கும் தேவதைகளும் குசுவிடத்தான் செய்யும் என்பது யதார்த்தம் தானே

    ஆனால் பேண்டு போடுதல்
    குசு விடுதல் இவற்றை மட்டும் ஒரு கவிதையில் எழுதுவதால் என்ன அழகியல் உணர்ச்சி

    //நடுத்தர வர்க்கத்தின் பிரேமைகளின் மீது குசு விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    //

    நடுத்தர வர்க்கம் மட்டுமா குசு விடும்
    தேவதைகளே விடும்போது

    என்ன கோபம் யார்மேல்

    குசுவிடுபவன் மீதா

    அல்லது தாஜ்மகால் கட்டியவன் மீதா

    அல்லது குசுவிடாத தேவதைகள் கற்பனை செய்தவன் மீதா