22.04.2007 சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு
தி.நகர் நடேசன் பூங்கா சரியாக நேரம் மாலை 4 மணி 13 நிமிடம் 36 வினாடிகள். வெயில் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தது. மழை வருவதா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தது. பூங்கா வாசலில் சுகுணா சூப் என்னும் ஸ்டாலில் சூப் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
பூங்காவிற்கு எதிரிலிருந்த டீக்கடை ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ அல்லது ஏதேனும் 'அசம்பாவிதங்கள்' நிகழுமென்றோ பூட்டியேயிருந்தது. கண்ணதாசன் பதிப்பகமும் அப்படியே. அதன் பெயர்ப்பலகையில் சம்பந்தமில்லாமல் கண்ணதாசன், ஓஷோ, அப்துல்கலாம் எனப் பலரும் காட்சியளித்தனர்.
மொத்தம் பன்னிரண்டு காக்கைகள் பூங்காவின் மூலைகளிலும் பல்வேறு இடங்களிலும் திரிந்துகொண்டிருந்தன. ஒரு முதியவர் தன் சட்டையையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு கைகளை விறுவிறுவென்று சுற்றி உடற்பயிற்சி செய்தது ஏதோ தற்கொலை முயற்சி போல இருந்தது.
பூங்காவைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த பெண்களில் கருப்பு டி-ஷர்ட் போட்ட பெண் மிகவும் அழகாயிருந்தார். அவரது கன்னங்களிலும் உதட்டின் மேலும் மினுமினுத்த வியர்வைத்துளிகளில் சூரியன் மின்னினான்.
மொத்தம் 32 காதலர்கள் புதர்களின் மறைவிலும் மற்றும் வெளிப்படையாகவும் காதல் செய்துகொண்டிருந்தனர். மூன்று நாய்கள் பூங்காவிற்கு வெளியிலே திரிந்துகொண்டிருந்தன. அதில் ஒரு நாய் கறுப்பு மற்றும் அதற்கு ஒற்றைக் கண்தான் இருந்தது.
"22.04.2007 சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு" ஒரு க்ளோஸப் விசிட் என்று தலைப்பு இருந்திருந்தால் நல்லா இருக்கும்.
:)
ம் அப்புறம்... என்ன ஆச்சு சொல்லுங்க
:((
AGRRRRRRRRRRRRRRRRRRRrr.. oh u mean that black dress girl??? :P
//அவரது கன்னங்களிலும் உதட்டின் மேலும் மினுமினுத்த வியர்வைத்துளிகளில் சூரியன் மின்னினான்.//
// அதில் ஒரு நாய் கறுப்பு மற்றும் அதற்கு ஒற்றைக் கண்தான் இருந்தது.//
ஏலேய்.. மாப்பு.. மப்புலையும் ஒனக்கு கண்ணு சரிய தெரிஞ்சிருக்கே!
எப்டி நைநா இப்டியெல்லாம் பாத்து ஃபுல்லா யோசிக்குற...
:)
சென்ஷி
அய்யோ நீங்கள் திருந்தவே மாட்டீங்களா..!? அல்லது இப்படித்தானா நீங்கள்.? சிலரை புரிவதென்பது மிக கடினம்.
இத்தனை கவனித்தீர்களா நீங்க? எனக்கென்னவோ கருப்பு டீசர்ட் பெண்ணைத் தவிர மத்த கணக்கெல்லாம் இட்டுக்கட்டியதாவே தெரியுது ;)
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !
ஆகமொத்தம் நான் சொல்ல வந்தது உங்கள் யாருக்கும் விளங்கவில்லை. இதைத்தவிர அந்த வலைப்பதிவாளர் சந்திப்பு கருமாந்திரத்தில் குறிப்பிடும்படி ஒரு இழவுமில்லை.
// மிதக்கும் வெளி said...
ஆகமொத்தம் நான் சொல்ல வந்தது உங்கள் யாருக்கும் விளங்கவில்லை. இதைத்தவிர அந்த வலைப்பதிவாளர் சந்திப்பு கருமாந்திரத்தில் குறிப்பிடும்படி ஒரு இழவுமில்லை.
//
எப்படி புரியும்?
இப்படி பின்நவீனத்துவமா எழுதினா..?
அய்யோ "தொடரும்" போட மறந்துட்டீங்க. போய் எடிட் செஞ்சு மாத்துங்க:-))
//இதைத்தவிர அந்த வலைப்பதிவாளர் சந்திப்பு கருமாந்திரத்தில் குறிப்பிடும்படி ஒரு இழவுமில்லை. // ஒப்புசப்பில்லாமப் போச்சே ;-)
தலைப்பை மட்டும் எழுதிட்டு, பதிவை ப்ளாங்க்கா விட்டுருந்தா டக்குன்னு புரிஞ்சிருக்கும் :-)... இந்த பி.ந.வாதிகளெல்லாம் எப்பத்தான் திருந்தப் போறாங்களோ :-)
//மொத்தம் 32 காதலர்கள் புதர்களின் மறைவிலும் மற்றும் வெளிப்படையாகவும் காதல் செய்துகொண்டிருந்தனர். //
கணக்கு மிஸ் ஆவறாப்புல தெரியுதே
நல்லா கவுண்ட் பண்ணீங்களா?
அந்த ரவுடி,தடியன் மொட்டையனை கேளுங்கள்...சரியாக விளக்கமளிப்பார்
aamaa saamy athukkappuram enna nadanthathu? ethaachium nadanthathaa'nnu sollave illaye!!! naan chella kitta kettathukku appuram thaan intha comment. unmaiyaichollavum thaNNippathivaaka!
baar podiyankal sangam
//அந்த ரவுடி,தடியன் மொட்டையனை கேளுங்கள்...சரியாக விளக்கமளிப்பார///
இது பாலாண்ணா தானே? ..இருங்க பாலாண்ணாவைகூட்டிட்டு வாறேன்...அவருக்கு பதில் சொல்லியே ஆகணும்..