கருப்பையின் சாவியை மூடியும் திறந்தும்...



குழந்தைகளைப் பெற்றுத்தள்ளி
பூமியை அசுத்தப்படுத்தாதீர்கள்
குறைந்தபட்சம் குழந்தைகளையாவது.
பிறக்கும்போது குழந்தைகள்
குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன.
வளர்ந்து தொலைக்கும்போது
அவை உங்களைப் போல் ஆகிவிடுகின்றன.
யோனி, கருப்பை
ஏதேனும் ஒரு துவாரம்
அடையுங்கள்.
சாக்கடை நிரம்பி வழிந்து
வாழ்வு நாறுகிறது.

------------

நீ அணுகுண்டுபோடு,
காற்றில் விஷம் கல,
நீரை கூட்டிக்கொடு,
பாக்கெட்டில் அடைத்து
என் தண்ணீரையே
எனக்கு
ஊ..க்கொடு.
ஒவ்வொரு உயிராய்க் கொன்று
முக்கோணங்களின் அவசியம் பற்றி
நியூஸ்ரீல் தயாரி.
உன் ஆணுறையை மலக்குழியில் தூக்கியெறிகிறேன்.
நாளை உன் முகத்தில் காறியுமிழவாவது
எனக்குக் குழந்தைகள் வேண்டாமா?

2 உரையாட வந்தவர்கள்:

  1. அழகிய ராவணன் said...

    //நியூஸ்ரீல்/

    நியூஸ் ரீல் ??

    //சாக்கடை நிரம்பி வழிந்து வாழ்வு நாறுகிறது//

    எப்படித்தான் சிந்திக்கிறீர்களோ?

    நல்லாருக்கு

  2. Anonymous said...

    நல்ல கவிதை.
    ஆனால்
    (ஆதிக்கம் செலுத்துகிற) "அவர்களது"
    முகத்தில் காறி உமிழ ஆண்களுக்கு குழந்தைகள் தேவை. ஆணுறையை மலக்குழியில் தூக்கியெறிந்தாகிவிட்டது. என்னதான் உயிரிய காரணங்களுக்காக என்றாலும் {அவர்களுக்காக} "பெற்றுத்தள்ளுகிற"வர்களாய் பெண்கள் தானே இருக்கிறார்கள் :-(
    இன்னொருவித ஆதிக்கம்?
    இப்படியொரு கேள்வியும் தோன்றியது.
    :-)
    --ஒரு பொடிச்சி