வலைப்பதிவாளர்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்
அமுக நண்பர்கள் ரொம்ப சீரியசான பதிவுகளைப் பார்த்து மண்டை காய்கிறார்கள். எங்களுக்குக் கும்மியடிக்க ஏதாவது பதிவு போடக்கூடாதா என்று கோரிக்கை வைக்கிறார்கள். என்ன செய்யலாம்?
செந்தழல்ரவி போல 'சிக்கன் உப்புமா செய்வது எப்படி?' என்று மொக்கைப் பதிவுபோடலாம். அல்லது வரவணையான்போல
"இதயத்தில் அறுவைச்சிகிச்சையாம்.
மறுத்துவிட்டேன்.
இதயத்தில் இருக்கும் உன்மீது
கத்திபடலாமா?"
என்று மொக்கைக்கவிதைகள் எழுதலாம், அல்லது பாலபாரதி போல 'நான் ஜட்டிபோடுவதை நிறுத்திவிட்டேன்' என்று சுயவிளம்பரப்பதிவு போடலாம். ஆனால் அத்தகைய திறமைகள் இல்லாததல் ஏதோ என்னாலான மொக்கை மற்றும் 100% கும்மிப்பதிவு.
வலைப்பதிவாளர்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்..
செந்தழல் ரவியிடம் : 'விருந்து' படிச்சா வேலைகிடைக்குமா?
பாலபாரதியிடம் : பள்ளியில் படிக்கும்போது ஜெயராமன் என்ற ஆசிரியரை மிரட்டினீர்களாமே, உண்மையா?
பொன்ஸிடம் : உங்களுக்கு தமிழில் பிடித்த பெண்கவிஞர் சல்மாவாமே?
டோண்டு ராகவனிடம் : உங்களுக்கு அதிகம் பிடித்த பலகாரம் போண்டாவா, போளியா?
லக்கிலுக்கிடம் : நீங்கள் அதிகம் விரும்பும் தலைவர் கலைஞரா, போலிடோண்டுவா?
வரவணையானிடம் : எப்போது 'கவிதை' எழுதுவீர்கள்?
தூயாவிடம் : சூடான ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
சயந்தனிடம் : இதற்குமுன்னால் சவுண்ட்சர்வீஸ் வைத்திருந்தீர்களா?
தமிழ்நதியிடம் : அதிகம் மெகாசீரியல் பார்ப்பீர்களா?
டி.பி.ஆர் ஜோசப்பிடம் : அடிக்கடி திரும்பிப்பார்த்தால் கழுத்து வலிக்காதா?
சுகுணாதிவாகரிடம் : அதே கேள்விதான்
(நீங்கள் நல்லவரா, கெட்டவரா?)
ஒவரு நக்கல்:-)))
தலைவா,
நீங்க மொக்கைப்பதிவு போட்டாலும் அது கொஞ்சமும் குறையாத இலக்கியச்சுவையாத்தான் இருக்கு
கொஞ்சநாளா உங்களுக்கு போன் பேசனும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். பெரிய எழுத்தாளார்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாம தயக்கமாவே இருக்கு :)
உங்க எழுத்துக்கு கஞ்சா அடிக்ட் மாதிரி ஆயிட்டேன்
ஆமா நீங்க நல்லவரா? கெட்டவரா?
ஆமா நீங்க நல்லவரா? கெட்டவரா?
வரவணையானிடம் : எப்போது 'கவிதை' எழுதுவீர்கள்?
:D
;-)
/நீங்க மொக்கைப்பதிவு போட்டாலும் அது கொஞ்சமும் குறையாத இலக்கியச்சுவையாத்தான் இருக்கு//
எங்க இருக்கு, காணலையே ;-)
:)))
//நான் ஜட்டிபோடுவதை நிறுத்திவிட்டேன்' என்று சுயவிளம்பரப்பதிவு போடலாம்//
அமீரக பாகச சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் தலைவர் எப்போதும் செய்யாத ஒன்றைச் செய்ததாகச் சொல்லி சுயவிளம்பரப் பதிவு போட மாட்டார். அப்படி இருக்கும்போது 'ஜட்டி போடுவதை நிறுத்தி விட்டேன்' என்று எப்படி பதிவு போடுவார்?
சாத்தான்குளத்தான்
அமீரக பாகச கிளை
துபாய் - அமீரகம்
மற்ற அமுக நண்பர்கள் போல் தரம் வாய்ந்த மொக்கை பதிவுகளை போட முடியாவிட்டாலும் கன்னி முயற்சி என்பதால் மன்னித்து விடுகிறோம் :))
//அடிக்கடி திரும்பிப்பார்த்தால் கழுத்து வலிக்காதா?//
இது சூப்பரு.
//பள்ளியில் படிக்கும்போது //
என்கிற வார்த்தைகளுக்கே அடி விழத் தொடங்கிடும்.. மிச்ச கேள்வியை எப்போ சொல்வீங்க ? ;)
வார நாட்களில் தான் நீங்க வெட்டியா இருப்பீங்கன்னு நினைச்சேன்.. ஞாயிறிலும் ரெண்டு மூணு பதிவா? ;)
//எங்க இருக்கு, காணலையே ;-) //
ஜெஸிலா,
இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல..அல்ல..அல்ல
அதையும் தாண்டி புனிதமானது..து :)
பின்நவீனத்துவ ஜல்லியை எப்போது நிறுத்துவீங்க?
இது உங்களுக்கான கேள்வி
உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்ச அப்புறம் நான் மெகா சீரியல் பாக்கிறதை நிறுத்திட்டேன். ஏன்னா ஒரே நேரத்துல ரெண்டு இம்சையைத் தாங்க முடியாதுங்கிற காரணத்தினாலதான் அந்த முற்காப்பு,தற்காப்பு நடவடிக்கை :))))
//லக்கிலுக்கிடம் : நீங்கள் அதிகம் விரும்பும் தலைவர் கலைஞரா, போலிடோண்டுவா?//
இருக்கிற "தொல்லை" பத்தாதா? இது வேறயா? :-(((((
கட்சியிலே கட்டம் கட்ட வெச்சிடுவீங்க போல இருக்கே?
////நீங்க மொக்கைப்பதிவு போட்டாலும் அது கொஞ்சமும் குறையாத இலக்கியச்சுவையாத்தான் இருக்கு
கொஞ்சநாளா உங்களுக்கு போன் பேசனும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். பெரிய எழுத்தாளார்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாம தயக்கமாவே இருக்கு :)
உங்க எழுத்துக்கு கஞ்சா அடிக்ட் மாதிரி ஆயிட்டேன் ////
ஏதாவது மால் வெட்னீங்களா ? என்ன அநியாயம்...உங்க பின்னவீனத்துவ எழுத்துக்கு இப்படி ஒரு ரசிகரா ? லொக்கேஷன் எங்கேன்னு கேட்டு வெச்சுக்கோங்க..
///உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்ச அப்புறம் நான் மெகா சீரியல் பாக்கிறதை நிறுத்திட்டேன். ஏன்னா ஒரே நேரத்துல ரெண்டு இம்சையைத் தாங்க முடியாதுங்கிற காரணத்தினாலதான் அந்த முற்காப்பு,தற்காப்பு நடவடிக்கை :)))) ///
தமிழ்நதி...சூப்பர்...!!!!!
இன்னும் நாலஞ்சு பேரை இழுத்திருக்கலாம் ஆட்டையில...
வெர்ஷன் 2 அல்லது பார்ட் 2 போடவும்...
பாலுமகேந்திரா இப்படித்தான், நீங்கள் கேட்டவைன்னு ஒரு படம் எடுத்தாரு...அது ஓடலை. இது நல்லா ஓடியிருக்க மாதிரி - பின்னூட்டங்களைப் பார்த்தால் - தெரிகிறது :-)
//ஏதாவது மால் வெட்னீங்களா ? என்ன அநியாயம்...உங்க பின்னவீனத்துவ எழுத்துக்கு இப்படி ஒரு ரசிகரா ? //
செந்தழல்,
உங்களுக்கும் ரசிகர்தான் ஹி..ஹி..
//லொக்கேஷன் எங்கேன்னு கேட்டு வெச்சுக்கோங்க..//
ஏன் மால் வெட்டவா? இல்ல ஆட்டோ அனுப்பவா??
-முபாரக்
//வலைப்பதிவாளர்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்" //
அப்படிக் கேட்டால் கிடைக்கக் கூடிய பதில்கள்.
//செந்தழல் ரவியிடம் : 'விருந்து' படிச்சா வேலைகிடைக்குமா//
பத்தாது. திரைச்சித்ரா, க்ளாமர் இதழ்களையும் அவசியம் படிக்க வேண்டும். ஐபிஎம்லே கேரண்டியா வேலை கிடைக்கும். வாக்கின் இன்ட்ரியூ தகவல்களுக்கு ஈமெயிலில் அணுகவும்.,
//பாலபாரதியிடம் : பள்ளியில் படிக்கும்போது ஜெயராமன் என்ற ஆசிரியரை மிரட்டினீர்களாமே, உண்மையா?//
என்ன தல இவ்ளோ நீளமாக் கேள்வி கேட்டுருக்கீங்க.... ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... கண்ணக் கட்டுதே...
//பொன்ஸிடம் : உங்களுக்கு தமிழில் பிடித்த பெண்கவிஞர் சல்மாவாமே?//
சல்மாவா? சட்டுன்னு காதிலே கில்மான்னு விழுந்தது... என்ன விஷயம்னு தல பாலபாரதிகிட்டே கேட்டேன்..அவர்.. இதெல்லாம் பிண்ணவீணத்துவம் மாதிரி பெரிய மேட்டர்.. தலைய குடுட்து மாட்டிக்காதேன்னு சொன்னார்.. ஆக,அண்ணன், எங்கள் தல , பாலபாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தக் கேள்வியை சாய்ஸிலே விடுகிறேன்.
//டோண்டு ராகவனிடம் : உங்களுக்கு அதிகம் பிடித்த பலகாரம் போண்டாவா, போளியா?//
மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அவர்களே.. எனக்கு போண்டாதான் மிகவும் பிடிக்கும். ஆனாலும் போளியையும் விரும்பிச் சாப்பிடுவேன். இந்த அறுபது வயது இளைஞனையும் நினைவில் நினைவில் வைத்துக் கொண்டு, கேள்வி கேட்டதுக்கு நன்றி மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அவர்களே..
//லக்கிலுக்கிடம் : நீங்கள் அதிகம் விரும்பும் தலைவர் கலைஞரா, போலிடோண்டுவா?//
இருவருமே அல்ல. தல பாலபாரதி தான் எங்கள் அன்புத் தலைவர்.
//வரவணையானிடம் : எப்போது 'கவிதை' எழுதுவீர்கள்?//
ராத்திரி 'கச்சேரியிலே' சொல்றேன் நண்பா
//சுகுணாதிவாகரிடம் : அதே கேள்விதான்
(நீங்கள் நல்லவரா, கெட்டவரா?) //
அதே பதில் தான் : தெரியலயேப்பா..
liked it sooper pa
கலக்கல் கலாய்த்தல்.
:))
நீங்க சீரியசானவரா? நக்கலானவரா?