ஷகீலா திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்
சமீபத்தில் ஏப்ரல் தீராநதி இதழில் எம்.ஜி.சுரேஷின் 'தமிழ்த்திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இறுக்கமான இலக்கியச்சூழலில் மனம்விட்டுச் சிரிக்க உதவுபவை சுரேஷின் கட்டுரைகள். இந்தக் கட்டுரையும் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது.
தமிழில் வெளிவந்த பின்நவீனத்துவத் திரைப்படங்களாக சுரேஷ் குறிப்பிடும் படங்கள் அலைபாயுதே, ஆயுத எழுத்து, வேட்டையாடுவிளையாடு, காக்க காக்க.
இதில் வேட்டைவிளையாடு, காக்க காக்க திரைப்படங்களில் கதை என்கிற ஒன்று இல்லை (அ) எதிர்க்கதை /கதையற்ற கதை இருக்கிறது. எனவே அவை பின்நவீனத் திரைப்படங்கள் என்கிறார் சுரேஷ்.
அலைபாயுதே படத்தின் தொடக்கக்காட்சியில் கதாநாயகியைத் தேடி ரயில்நிலையத்திற்கு வருகிறான் நாயகன். ஆனால் அவள் வரவில்லை. நாயகனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. காட்சியமைப்புகள் முன்பின்னாக மாற்றப்பட்டிருப்பதால் அது ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம் என்கிறார் சுரேஷ். புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தபோது தினத்தந்தியில் தோழர் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.
சீன் படங்கள், பிட்படங்கள், பலான படங்கள் என்றழைக்கப்படும் பாலியல் திரைப்படங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. (பெண்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை). ஆனால் அவை சுரேஜின் லாஜிக்படி பார்த்தால் நிச்சயமாக பின்நவீனத்துவத்திரைப்படங்கள்தான்.
அவைகளுக்கான கோட்வேர்ட் 'சாமிப்படங்கள்'. (கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை தியேட்டர் கவுண்டரில் 'சாமிப்படம்'தான் ஓடுகிறதா என்று கவுண்டரில் உறுதிப்படுத்திக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தால் உண்மையிலேயே 'சரணம் அய்யப்பா' படம் ஓட அலறியடித்து ஓடிவந்தது தனிக்கதை). இதன்மூலம் புனித அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
படத்தின் அறிமுகத்தில் ஒரு பெண் நடித்துக்கொண்டிருப்பார்.ஆனால் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளுக்குப் பிறகு 'பிட்' அல்லது 'சீன்' என்றழைக்கப்படும் பாலுறவுக்காட்சியில் 'நடித்துக்கொண்டிருக்கும்' பெண்ணின் அறிமுகக் காட்சியே இடைவேளைக்குப் பின் தான் வரும் அல்லது வராமலே கூடப் போகலாம். மூன்றாவது காட்சி ஆறாவது காட்சியாகவும் ஆறாவது காட்சி பதினொன்றாவது காட்சியாகவும் முன்பின்னாக மாற்றப்பட்டு ஓட்டப்படும். இதன்மூலம் சீன்படங்கள் பிரதியின் ஒழுங்கைக்குலைக்கின்றன.
அதேபோல சமயங்களில் பிட்டில் இடம்பெறுபவர்களுக்கும் படத்திற்குமே சம்பந்தமிருக்காது. இப்படியாக இப்படங்களில் நான்லீனியர் தன்மை அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில் தமிழ்ப்படங்களில் இங்கிலீஸ் பிட் ஓடும், இங்கிலீஸ் படங்களில் தமிழ் பிட் ஓடும். ஆகமொத்தம் பிட்கள் மொழி, தேசம் ஆகிய எல்லைகளைத் தகர்க்கின்றன.
ஒருசில படங்களில் சென்சார் போர்டு பிரச்சினைக்காக ஆங்கில வசனங்களை இந்தியநடிகர்கள் பேசி நடித்திருப்பார்கள். இவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டால் நிறுத்தி நிதானமாக பள்ளிகளில் essay ஒப்பிப்பதைப் போல ஆங்கிலம் பேசுவார்கள். இவை ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்களாக இருப்பதால் தமிழர்கள் இந்தப் படங்களுக்குத் தொடர்ந்து போய்த் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
இந்தப் படங்களில் கதை என்கிற ஒன்று பெரிதாகத் தேவைப்படாது.ஆனால் கடைசியில் ஏதேனும் ஒரு 'நீதி' சொல்லப்படும். கட்டாயமாக கடைசிக்காட்சியில் யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்க தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்கள். 'சீன்' முடிந்தவுடனே பலர் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
ஆனால் எப்படியாவது இன்னும் சில 'சீன்'கள் ஓட்டப்படாதா என்கிற பேராசை உள்ளவர்கள் மட்டுமே தியேட்டரில் இருப்பார்கள். இன்னும் சிலபேர் யாராவது தெரிந்தவர்கள் வந்து அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே எல்லோரும் போகட்டும் என்று காத்திருப்பார்கள்.
ஆகமொத்தம் இத்தகைய பின்நவீனக்கூறுகள் கொண்ட பின்நவீனத்துவத் திரைப்படங்களில் ஷகீலா, ஷகீலாவின் தங்கை ஷீத்தல், மரியா, ரேஷ்மா, பிட்பிரதீபா ஆகிய பின்நவீனத்துவ நாயகிகள் நடித்திருப்பார்கள். (இந்தப் படங்களில் நடிக்கும் ஆண்நடிகர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது அல்லது அதுபற்றிக் கவலையில்லை.)
என் நினைவிலிருந்து தமிழில் வெளியான பின்நவீனத்துவத் திரைப்படங்கள்.
1. சாயாக்கடை சரசு
2. மாயக்கா
3. அவளோட ராவுகள்
4. அஞ்சரைக்குள்ள வண்டி
5. காமதாகம்
6. மாமனாரின் இன்பவெறி
7.....
8....
9......
.
.
.
.
பாவம் கொடூரன்
ரதிநிர்வேதம்
:-)
//தினத்தந்தியில் தோழர் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.//
திரு. சுகுனா அவர்களே, ஏதோ ஒரு நான் - லீனியர் பின்நவீனத்துவ குழப்பத்தில் இந்த வரியை போட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்... அருவெறுப்பானதாக தென்படுகினற இந்த வரியினை நீக்கிவிட்டு, பதிவர்களை குஷிப்படுத்தும் உங்கள் பணியை தொடருங்கள்....இந்த பதிவினூடாக ஆனாதிக்கத்தையா பெண்ணியத்தையா நீங்கள் எதனை கட்டுடைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை...ஆனால் ஒன்று ஆணாதிக்கத்தனமான பாலியல் வக்கிரங்களுக்கு பெண்களை தயார்படுத்துவது பெண்ணியம் ஆகி விடாது... உங்கள் பதிவு ஏற்கனவே நிலவுகிற ஆனாதிக்கத்தையே கிளறிவிட்டு அதனை நகைச்சுவை என்று பேசுகிற வக்கிரம் கொண்டதாக இருக்கிறது...
வெண்மனி
உங்களுடைய பதிவுகளிலேயே மிகவும் சிறப்பான பதிவென்பேன் நான்.
பி கு:அஞ்சரைக்குள்ள வண்டி இந்த பின்ன"வீண"த்துவத்தில் சேராது
வெண்மணி
யாரையும் குஷிப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் ஒன்றும் வித்தைகாட்டவும் வரவில்லை. பின்நவீனத்துவம் என்ற பெயரில் அரைகுறையாக உளறும் எம்.ஜி.சுரேஷின் கட்டுரையைக் கிண்டலடிக்கவே இந்தப் பதிவு. மற்றபடி ஷகீலா படங்கள் பெண்ணியப்படங்கள் என்று நான் எங்கே சொன்னேன்?
சுரேஷின் செவ்வி வருவதற்கு முன்னரே, 'அலைபாயுதே' திரைப்படம் பின்-நீவீனத்துவப் படம்தான் என எனது வலைப்பதிவில் நிறுவிவிட்டார்கள் -அதுவும் சுரேஷ் சொன்ன அதே காரணங்களை வைத்து. (ஒருவேளை சுரேஷ் எனது வலைப்பதிவைப் படித்திருப்பாரோ?)
பின்-நவீனத்துவம் பற்றி ஆக்கபூர்வக் கலந்துரையாடலை இதுவரை கேட்காவிட்டால் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு
பதிவிற்கு நன்றி. இந்த பதிவின் மூலம் பல "கலை" சம்மந்தமான செய்திகளை தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு சின்ன சந்தேகம். SJ சூர்யாவின் நியூ, அ..ஆ போன்றவைகளும் இதே வகையில் இடம் பெறுமா
பின்னவீனத்துவம்னு சில நாதாறிகள் உளறுவாங்களே, அது இதானா???
எனக்கு பின்னவீனத்துவமும் தெரியாது, முன்னவீனத்துவமும் தெரியாது.
மிதக்கும் வெளி, நீங்கள் சிறந்த எழுத்தாளர் ஆகிட்டீங்க!
வாழ்த்துக்கள்.
சுகுனா,
நீங்கள் பெண்ணியம் பேசுகிறீர்களா இல்லையா என்பதை பற்றி நான் பேசவில்லை முன்பே குறிப்பிட்டது போல உங்களுடைய பதிவு ஏற்கனவே நிலவுகிற ஆணாதிக்கத்தை கிளரிவிட்டு அதனை நகைச்சுவை என்று பேசுகிற வக்கிரம் கொண்டதாக இருக்கிறது என்றுதான் குறிப்பிடுகின்றேன்.
வெண்மனி
/பின்னவீனத்துவம்னு சில நாதாறிகள் உளறுவாங்களே, அது இதானா???
எனக்கு பின்னவீனத்துவமும் தெரியாது, முன்னவீனத்துவமும் தெரியாது.
மிதக்கும் வெளி, நீங்கள் சிறந்த எழுத்தாளர் ஆகிட்டீங்க!/
உங்கள் மொழியில் சொன்னால் நானும் பின்நவீனத்துவம் பற்றி உளறக்கூடிய நாதாரிதான். பிரச்சினை பின்நவீனத்துவத்தை நிராகரிப்பதில்லை. பின்நவீனத்துவம் என்ற பெயரில் எம்.ஜி.சுரேஷ் தமாஷ் பண்ணுவது குறித்துத்தான் பகிடி செய்திருக்கிறேன். சிறந்த எழுத்தாளர் (அ) சிறந்த நாதாரி? அய்யா பயமாயிருங்கய்யா!
/உங்களுடைய பதிவுகளிலேயே மிகவும் சிறப்பான பதிவென்பேன் நான்.
/
ம்..இருக்கும்யா, இருக்கும்.
வெண்மணி
இன்னும் நீங்கள் கட்டுரையின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
பொட்டீக்கடையார் சொன்னதை வழிமொழிகிறேன்...இது ஒரு சிறப்பான பதிவு..
ஆனா ஒன்னு...ஷகீலாவுக்கு எத்தனை தங்கச்சி என்று அட்ரசோடு நீர் சொல்வது கொஞ்சம் சந்தேகம் தருகிறது...
என்னைப்பொறுத்தவரை "அலெக்ஸாண்ட்ரா" என்ற மொழி மாற்று படம் தான் தமிழில் (??) தரப்பட்ட சிறந்த பின்னவீனத்துவ பிட்டு படம் என்பேன்...(எத்தனை முறை பார்த்தேன் என்று கேட்காதீர்கள்...)
கேர்ள் பிரண்ட்ஸ், மது-மங்கை-மயக்கம், ட்யூஷன் டீச்சர், திருட்டு புருஷன், மதன மர்ம மாளிகை போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பின்நவீனத்துவ திரைப்படங்களை உங்கள் லிஸ்ட்டில் காணாதது எனக்கு ஏமாற்றம் தான்.
பின்நவீனத்துவ திரைப்படங்களை பரங்கிமலை ஜோதி, போருர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி, மவுண்ட்ரோடு கெய்ட்டி, (சில நேரங்களில்) ஜெயப்ரதா போன்ற பின்நவீனத்துவ திரையரங்குகளில் காணமுடியும்.
ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் இப்போது "இளமை தாகம்" என்ற பின்நவீனத்துவ திரைப்படம் ஓடுகிறதாக நினைவு.
"பருவ ராகம்" என்ற பெயரைப் பார்த்து அது பின்நவீனத்துவ திரைப்படம் என்று நினைத்து தியேட்டருக்கு போய் ஏமாந்த காலமும் உண்டு :(
;-)))
//பின்நவீனத்துவ திரைப்படங்களை பரங்கிமலை ஜோதி, போருர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி, மவுண்ட்ரோடு கெய்ட்டி, (சில நேரங்களில்) ஜெயப்ரதா போன்ற பின்நவீனத்துவ திரையரங்குகளில் காணமுடியும்//
பட்டியலில் தற்போது காம்ப்ளக்ஸாக மாறியிருக்கும் அயனாவரம் ராதா திரையரங்கையும் சேத்துக்கொள்ளவும்..
:)
"அலெக்ஸாண்ட்ரா" இந்தப் படம் திருச்சி மாரீஸில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய பெருமை பெற்றது. ரவியும் அங்கே பார்த்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
நம்ம மாரீஸ் பேவரைட் "பீப்பிங் டாம்" என்றொரு படம். நானும் எத்தனை தடவை பார்த்தேன் என்ற நினைவு இல்லை. ;)
ஆனால் இந்தப் பதிவு பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ;)
பின்நவீனத்துவன்ற பேர்ல இவங்க எழுதுற பீநாத்துவ எழுத்துக்களுக்கு மத்தியில் தங்களது எதிர்பின்நவீனத்துவ எழுத்து நன்றாகவே உள்ளது.
/// இந்த பதிவினூடாக ஆனாதிக்கத்தையா பெண்ணியத்தையா நீங்கள் எதனை கட்டுடைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை... ஆணாதிக்கத்தனமான பாலியல் வக்கிரங்களுக்கு பெண்களை தயார்படுத்துவது பெண்ணியம் ஆகி விடாது... ///
வெண்மனி, மிகவும் சரியான வாதம் தான். ஆனால் தோழர் தம் கட்டுரையில் பெண்கள் இப்படி நடித்து தான் பின்னநவீனத்தை வளர்க்க வேண்டுமென்பதாக சொல்லவில்லை.
மேற்படி சர்ச்சைக்குரிய கட்டுரையின் தரம் இத்தகைய திரைஅபத்தங்களை பி.ந. என்று கொண்டாடுவதாக உள்ளது என்பதை தனக்கேயுரிய நையாண்டியுடன் நமக்கு சுட்டிக் காட்டுகிறார். இது இலக்கிய போலிகளின் மீதான பகடியேயன்றி, பெண்களின் மீதானதன்று.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
என்னது காந்தி செத்துட்டாரா?
/// Anonymous said...
என்னது காந்தி செத்துட்டாரா? //
பின்ன நேருஜியே சாகும் போது, காந்தி சாகமாட்டாரா...?
என்னது நேரும் செத்துட்டாரா...?
அக்மார்க் மிதக்கும் வெளி பதிவு !!!
சூப்பர் தல
//கேர்ள் பிரண்ட்ஸ், மது-மங்கை-மயக்கம், ட்யூஷன் டீச்சர், திருட்டு புருஷன், மதன மர்ம மாளிகை போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பின்நவீனத்துவ திரைப்படங்களை உங்கள் லிஸ்ட்டில் காணாதது எனக்கு ஏமாற்றம் தான்.//
லக்கி அய்யா,
உங்கள் புரோபைலில் தலைவர் கலைஞர் படத்தைப் போட்டுக்கொண்டு இப்படி ஒரு லிஸ்டை கொடுப்பது என்னமோ மாதிரி இருக்கு
நீங்க ஏற்கனவே போட்டிருந்த அட்லாஸ் வாலிபர் படம் நல்லாத்தானே இருந்திச்சி
- சக உடன்பிறப்பு
//
Anonymous said...
என்னது காந்தி செத்துட்டாரா?
//
எருமை எருமை...காலையில அவர் பஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டிருந்தார்...அவர் இடுப்புல கட்டியிருந்த கண்ணாடிய வெச்சு அது அவர்தான்னு கண்டுபிடிச்சு மணி கேட்டேன்...அவரும் கண்ணாடிய தொடச்சு பார்த்து மணி சொன்னாரே...
ஆங்...எந்த பஸ்டாண்டா...நான் காலையில டாஸ்மார்க் பக்கமா போயிக்கிட்டிருந்தேன்...அங்க தான் நின்னுக்கிட்டிருந்தாரு அவரு..
இல்லை...நேருக்கு நேர் படத்து ஆர்ட் டேரக்டர் செத்துட்டார்..
என்னது, ராஜாஜி உயிரோட இருக்காரா ? டோண்டு மாமா பதிவ ப்ரவுஸ் செண்டர்ல படிச்சிக்கிட்டிருகாரா ?
என்னது மறுபடியும் காந்தி செத்துட்டாரா?
உடன்பிறப்பு அழகிய ராவணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று என் புரொபைல் படத்தை உடனே மாற்றி விடுகிறேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி அழகிய ராவணன்.
சத்தியமா காந்தி செத்துட்டார். நம்புங்கடா !!!
போடா பாடு. காந்தி போனமாசம் அப்பல்லோல உடம்பு முடியாம செத்துபோனது எனக்கு என்ன தெரியாதுன்னு நினைச்சியா ? அது என்ன இனிஷியல்...ஈவிகேஎஸ் இளங்கோவன் தம்பியா நீ ?
/// Anonymous said...
என்னது மறுபடியும் காந்தி செத்துட்டாரா? //
மறுபடியும் நேருஜி சாகும் போது, காந்தி சாகமாட்டாரா...?
சுரேஷின் பிதற்றல்களை படித்து சிரிப்புதான் வந்தது அட இதெல்லாம் பரவாயில்லங்க! நம்ம தமிழ் சினிமா வை பத்தி ஏதோ சொல்றாரேன்னு விட்டுட்டு போயிடலாம்..ஆனா டான் ப்ரவுன் தான் உலகத்திலே தலை சிறந்த எழுத்தாளர் ..அவரோட டாவின்சி கோட் ஒரு வேதம் அப்படிங்கிற அளவுக்கு உளறி கொட்டியுமிருக்கார் பிப்ரவரி தீராநதி ன்னு நெனைக்கிறேன்
அதிகமா நம்ம மக்க கிட்ட மாட்டிட்டு முழிக்கிறது பின்நவீனத்துவம் என்ற சொல்லாத்தான் இருக்க முடியும் ..
டேய் முதல்ல யாருடா இந்த சுரேசு அதை மொதல்ல சொல்லித்தொலைங்கடா. சும்மா கிடக்கிறவனை எல்லாம் ஆளாக்கி விடாதீங்க. பொறவு அவனுக்கு ஆதரவா நாலு ஜல்லி எதிர்ப்பா நாலு பல்லின்னு கிளம்பிரும்.
பெனாத்தல் சுரேசா?
//சுரேஷின் செவ்வி வருவதற்கு முன்னரே, 'அலைபாயுதே' திரைப்படம் பின்-நீவீனத்துவப் படம்தான் என எனது வலைப்பதிவில் நிறுவிவிட்டார்கள் -அதுவும் சுரேஷ் சொன்ன அதே காரணங்களை வைத்து.//
அதை ஆதாரங்களுடன் நிறுவியர் நானே என்பதை தாழ் மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)
//உடன்பிறப்பு அழகிய ராவணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று என் புரொபைல் படத்தை உடனே மாற்றி விடுகிறேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி அழகிய ராவணன்.//
மிக்க நன்றி லக்கி அய்யா!
//டேய் முதல்ல யாருடா இந்த சுரேசு அதை மொதல்ல சொல்லித்தொலைங்கடா. சும்மா கிடக்கிறவனை எல்லாம் ஆளாக்கி விடாதீங்க. பொறவு அவனுக்கு ஆதரவா நாலு ஜல்லி எதிர்ப்பா நாலு பல்லின்னு கிளம்பிரும்//
:D ... இந்த அனானி யாரா இருந்தாலும் அவரு காலத்தொட்டு வணங்கிக்கிறேன்.
சிரிச்சி வயத்த வலிக்குது.
இந்தமாதிரி அற்புத நகைச்சுவை உணர்வு கொண்ட அனானிகளால்தான் வலையுலகம் கஞ்சா மாதிரி செம கிக்கா இருக்கு
Ungal ezhuthil matram therikiradhu..sathiyama shakilavai sollavillai..matra bimbangalin unmaiyai udaika purapattuvittergal pol therigiradu..Vazhthukkal..vetri nadai podungal..Thol koduppom..
Nanri
தனது இலக்கிய பிரஸ்தாபங்களை வைத்து திரைப்படத் துறையில் நுழைந்துள்ள சில சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களின் ஒரு விதமான முன்னேற்றத்தைக் கண்டு எம்.ஜி.சுரேஷும் அந்த முன்னேற்றத்தை காண இது போன்ற குப்பை பிதற்றல்களில் இறங்கவேண்டியிருக்கிறது. ஆனால் பின் நவீனத்துவம் பற்றி இது போன்று குப்பையாக நாம் யோசிக்கிறோம் என்ற தன்னுணர்வுடன் இதைச் செய்திருந்தால் அது ஆகச்சிறந்த அயோக்கியத்தனம். ஆனால் பின் நவீனத்துவமே இவ்வளவுதான் இதுதான் என்று நினைக்கும் பட்சத்தில் பக்கத்தை நிரப்புவதற்காக குப்பைகளை கொண்டு கொட்டும் தீரா நதி மேல்தான் கோபம் எழவேண்டும். அதே தீரா நதி இதழில் இன்னொரு இலக்கிய போலி சாரு நிவேதிதாவின் பேட்டி வேறு. அவர் எதைப்பற்றி வேண்டுமானாலும் தான் குப்பையாக உளற முடியும் என்பதில் அதி கர்வம் கொண்டவர். தீரா நதி என்ற farce ஆன அமைப்புதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் சிறுபத்திரிக்கைகளில் பின் நவீனத்துவம் பற்றி வரும் பாதிக் கட்டுரைகள் இது போன்ற குறிப்புக் குப்பைகளாகத்தான் இருக்கின்றன. பின் நவீனத்துவம் பற்றி இத்தனைக்கும் சுரேஷ் நடத்திய பன் முகம் பத்திரிக்கையில் பேராசிரியர் நோயல் இருதயராஜ் எழுதிய பின் நவீனத்துவம் வருணனையும் கோட்பாடும் என்ற மிகச்சிறந்த கட்டுரையை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை படித்தவராக சுரேஷை தீரா நதி கட்டுரை காட்டவில்லை. எழுத்தாளர்கள் கையில் கிடந்து திண்டாடும் பின் நவீனத்துவம் மையமழிப்பு, ஒழுங்கு குலைப்பு, நான் லீனியர், இன்டர் டெக்ஸ்ட் என்று வெறும் டைப்ஸாக, க.னா.சு போட்ட பட்டியலாகவே குறுக்கப்பட்டுள்ளது. எக்சிஸ்டென்ஷியலிச்ம், ஸ்டரக்சரலிச்ம், இன்னும் எத்தனையோ இசங்கள் இது போன்று தமிழ் சிறு பத்திரிக்கை கருத்தியலாளர்களிடையே, அதனை மோஸ்தராக பின் பற்றி தங்களது ஜீவித ஜீவனத்திற்கு நியாயம் தேடிக்கொள்ளும் எழுத்தாளர்களிடையே சீரழிந்திருக்கிறது என்பதே வரலாறு.
-
நட்சத்ரேயன்
Natchatran, relax. There are too many farces floating around, ranging from A.Marx, Ramesh-Prem,Charu nivedita to Suresh. all in the name of postmodernism or some other fancy ism.Choose your favorite farce and have a good laugh.
excellent
யோவ் பிளாக்கர் அந்த பேக் கிரௌண்ட் படத்த மாத்துயா!
இல்லன்னா ஜனங்க நேரு காந்தி ஜின்னா எல்லோருக்கும்
உயிர் கொடுத்துவிடுவார்கள்