வைகோ எனது மதிப்பீடு

வைகோவைப்பற்றி அவர்களது கட்சிக்காரர்கள் பேசுகிறார்களோ இல்லையோ, வலைப்பதிவுகளில் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விவாதக்களம் வேறு ஆரம்பித்துவிட்டது.(எல்லாம் செந்திலால் வந்த வினை).


வைகோவின் பேச்சு எப்போதும் என்னை ஈர்த்ததில்லை. அவரது கூட்டங்கள் சகோ.தினகரனைத்தான் நினைவுபடுத்துகின்றன. எனக்குத் திமுகவில் பிடித்தபேச்சாளர் கருணாநிதிதான். அவரிடம் எப்போதும் சூழலைக் கலகலப்பாக்கி விடும் இயல்பு இருக்கும். வைகோவின் பேச்சுகளில் இருப்பதெல்லாம் நாடகப்பாணி மட்டுமே.


என்னுடைய குடும்பம் திமுக குடும்பம் என்பதால் பல திமுக மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. அப்போதெல்லாம் கருணாநிதி 'என் உயிரினும் மேலான உடன்பிறப்பே' என்றால் ஒரு சிலிர்ப்பிருக்கும். ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னை சிந்தாதிரிப்பேடையில் நடந்த திமுக கூட்டத்திற்குப் போயிருந்தேன். கலைஞர் உடன்பிறப்புகளை அழைத்தவுடன் கைதட்டிவிட்டு உடன்பிறப்புகள் குவார்ட்டர் அடிக்கப்போய்விட்டார்கள். இப்போது திமுக என்பது வெறுமனே கார்பரேட் நிறுவனம்தான் என்பது கடைசித்தொண்டனுக்கும் தெரிந்திருகிறது.


இல்லையென்றால் மு.க கைதுசெய்யப்பட்டபோது ஒரே ஒருநாள் அமைதிக்குப் பிறகு தமிழகம் தன்னியல்புக்குத் திரும்பியிருக்காது. அவரது கைது சம்பவத்தையொட்டி நடந்த ஊர்வலத்தில் இரண்டு மூன்று பேர் கொல்லப்பட்டபோதும் திமுகவில் பெரிய சலனங்கள் இல்லை.


ஆனால் இப்படிப் பணியாளர்களாக இல்லாமல் கொள்கைப்பிடிப்புள்ள, தலைவன்மேல் தனிப்பட்ட அபிமானம் கொண்ட சிலராவது இருப்பதுதான் மதிமுகவின் பலம். ஆனால் திமுகவில் இருந்தால் சம்பாதிக்கலாம். மதிமுக தொண்டர்களுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது. அத்தகைய தொண்டர்களுக்குத் தலைமை தாங்கும் பெரும்பாரத்தைச் சுமக்கும் அளவிற்கு வைகோவிற்கோ பெருந்தோள்கள் இல்லை.


ஒரு தலைவன் அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடாது, உணர்ச்சிவசப்படுவதுபோல நடிக்கலாம். திண்டுக்கல் மாநாட்டில் கருணாநிதி "தம்பி கண்ணீரை என் கூலிங்கிளாஸ் மறைத்துவிட்டது. நான் அழுததை நீ பார்த்திருக்க முடியாது" என்றுதான் சொன்னார். ஆனால் வைகோவோ குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார். கருணாநிதியின் சாமர்த்தியம் வைகோவிற்கு நூறில் ஒரு பங்குகூடக் கிடையாது. (கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் சிந்தித்திருந்தால் தமிழ்ச்சமூகம் எங்கேயோ போயிருக்கும் என்பது வேறு விஷயம்)


வைகோவிடம் கைவசம் இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு புலி ஆதரவு அரசியல். அதையும் இப்போது திருமாவளவன் கைப்பற்றிக்கொண்டார். கருணாநிதியைப்போலவே திருமாவுக்கும் புலி பாலிடிக்ஸ் என்பது அரசியல் மூலதனமே. ஆனால் வைகோவிற்கு அதையும் தாண்டிய உணர்வுபூர்வமான விஷயம். ஆனால் இனி ஒன்றும் செய்ய ஏலாது.


செஞ்சி ராமச்சந்திரனும் எல்.ஜியும் வெளியேறுவதால் மதிமுகவில் பெரிய பாதிப்பு இருக்காதுதான். ஆனால் பாதிப்பு ஏற்படுத்த மதிமுகவில் என்ன இருக்கிறது?


எனக்கு வைகோவிடம் தனிப்பட்ட முறையில் சொல்ல இரண்டே இரண்டு ஆலோசனைகள்தான் இருக்கின்றன.

1. அவர் ராமதாஸ், திருமாவைப்போல சினிமாவில் நடிக்கலாம். நிச்சயம் அவர்களை விட வைகோவால் நன்றாக நடிகக் முடியும். ஆனால் இப்போதுள்ள தமிழ்ச்சினிமாவுக்கு வைகோ போன்ற மிகைநடிகர்கள் தேவையில்லை என்பதால் அவர் சீரியல்களில் நடிக்கலாம்.

2. அல்லது வைகோ ஜெயாடிவியில் வேலைக்குச் சேரலாம்.


இந்த இரண்டில் எது நடந்தாலும் வைகோ ஆசைப்பட்டபடி அவரது முகம் டிவியில் வரும். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டுமென்றாலும் வைகோ அவரது கட்சியைக் கலைக்க வேண்டும்.

11 உரையாட வந்தவர்கள்:

  1. bala said...

    //அவர் ராமதாஸ், திருமாவைப்போல சினிமாவில் நடிக்கலாம். நிச்சயம் அவர்களை விட வைகோவால் நன்றாக நடிகக் முடியும். ஆனால் இப்போதுள்ள தமிழ்ச்சினிமாவுக்கு வைகோ போன்ற மிகைநடிகர்கள் தேவையில்லை என்பதால் அவர் சீரியல்களில் நடிக்கலாம்.//
    //வைகோவின் பேச்சுகளில் இருப்பதெல்லாம் நாடகப்பாணி மட்டுமே//

    வெளியே மிதக்கும் அய்யா,

    கரை வேட்டியும்,கர கரத்த குரலும்,நாடக பாணி அடுக்கு மொழி பேசும்,திராவிட நாடகத்தை அரங்கேற்றி,திராவிட அரசியல் அயோக்யத்தனத்தை ஆரம்பித்து வைத்த பெருமை,அண்ணா,கருணாநிதி
    அவர்களுக்கே உரியது. வைகோ கழகத்தில் இருந்த வரை அவர், சிங்கக் குட்டி,வெளியே வந்த பிறகு குள்ளநரிக் குட்டி.என்ன, இப்பொழுது அவர், 3500 கோடி மகா கஞ்சன், மஞ்சத்துண்டுக்காரர்,பிச்சைக் காசு 30 கோடி கொடுத்து வாங்க முடியாத
    தன் மானத் தமிழன்.நிலமை இப்படி இருக்க வைகோ மட்டும் மெகா சீரியல்களில் நடிக்க போகணுமாம்-தமிழ் சினிமாவில் அய்யாவும்,திருமாவும் நடிக்கலாமாம்.அப்போ கலைஞர் என்ன,ஹாலிவுட் ரேஞ்சா?
    முன்னாளில் பிரியாணி/குவார்ட்டர் பாட்டிலுக்காக,கழக கும்பலில் கோவிந்தா போட்டு உடல் வளர்த்த நன்றி உணர்வினால் இதை சொல்கிறீர்களா?
    அது சரி, இப்பொழுது உங்களுக்கு பிரியாணி/சாராயம் சப்ளை செய்வது யார்?இசையா?

    பாலா

  2. வரவனையான் said...

    சுகுணா, என்னதான் செய்யியுறது இந்த பாலாவை , :)

    கமெண்ட் ரிஜெக்ட் பண்ணலாம்னு பார்த்தா , தணிக்கை என்பது தவறுன்னு மனசு சொல்லுது, போடலாம்னு பார்த்தா சீரியஸ் கட்டுரையும் சிரிப்பாகி போயிடுது.

    அம்பி பாலா நோக்கு என்னதான் வேணும்....

    :)))))))))

  3. PRABHU RAJADURAI said...

    "அவரது கூட்டங்கள் சகோ.தினகரனைத்தான் நினைவுபடுத்துகின்றன"

    பேச்சும், முக சேஷ்டைகளும் என்றிருந்தால் பொருத்தமாயிருக்கும்...

  4. Anonymous said...

    Bala has given very good comment...my applause to you bala...

  5. முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

    வைகோவின் அரசியல் மற்றும் கொள்கை குழப்பங்களை நானும் கவனித்துள்ளேன். என் அரசியல் ஞானம் மற்றவரை பற்றிய கருத்து சொல்லும் அளவுக்கு இல்லாததால் நான் ரொம்பவும் அரசியல் பேசுவதில்லை - உங்கள் கட்டுரை படிக்க நன்றாக இருந்தது என்று மட்டும் என்னால் சொல்லமுடிகிறது.

  6. மிதக்கும்வெளி said...

    /இப்பொழுது உங்களுக்கு பிரியாணி/சாராயம் சப்ளை செய்வது யார்?/


    மன்னிக்கவும் கேள்வி இடம் மாறிவந்திருக்கிறது. குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து முஸ்லீம்களைக் கொலை செய்யச் சொல்கிற எந்தக் கட்சியிலும் நான் இருந்ததில்லை.

  7. லக்கிலுக் said...

    வைகோவை கிண்டலுடன் விமர்சிக்க வேண்டும் என்றே ஆரம்பித்திருக்கிறீர்கள்.

    வைகோவின் பேச்சு அடிமட்டத் தொண்டனையும் தொடக்கூடியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சமீபக்காலப் பேச்சுக்களில் வேண்டுமானால் கண்ணியம் குறைந்திருக்கலாம்.

    என்னைக் கவர்ந்த மூன்று பேச்சாளர்களில் இவரும் ஒருவர்.

  8. மிதக்கும்வெளி said...

    /வைகோவின் பேச்சு அடிமட்டத் தொண்டனையும் தொடக்கூடியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை./

    இருக்கலாம். ஆனால் என்னை எப்போதும் வைகோ ஈர்த்ததில்லை. (தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம், நீங்கள் கருப்புசிவப்பு கட்சியில் ஒரு கருப்பு ஆடு?)

  9. லக்கிலுக் said...

    //இருக்கலாம். ஆனால் என்னை எப்போதும் வைகோ ஈர்த்ததில்லை. (தனிப்பட்ட முறையில் ஒரு சந்தேகம், நீங்கள் கருப்புசிவப்பு கட்சியில் ஒரு கருப்பு ஆடு?) //

    கருப்பே சிறப்பு...

    வைகோவை நிறைய திமுக தொண்டர்களுக்கு இன்னமும் மனதுக்குள் ரொம்பவும் பிடிக்கும். நான் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன் :-))))))

  10. Anonymous said...

    //கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் சிந்தித்திருந்தால் தமிழ்ச்சமூகம் எங்கேயோ போயிருக்கும் என்பது வேறு விஷயம்//

    100/100 -- உண்மை

  11. bala said...

    //கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் சிந்தித்திருந்தால் //

    மஞ்ச துண்டு அய்யா,
    பெரியார்/அண்ணா காட்டிய வழியில தான சிந்தித்து செயல்பட்டாரு.அப்புறம் நேரு வழியில சிந்திக்கலன்னு குறை பட்டுக்கறீங்க.என்னவோ போங்க.எனக்கு என்னவோ, யார் வழியும் சரியில்ல.எங்க தலைவர் அசுரன் அய்யா கை காட்டுற வழி தான் எம் மக்கள் போக வேண்டிய வழி.ஒரு கையில் மலம்,இன்னொரு கையில் திருவோடு.ஆனா எல்லாத்துக்கும் மேல, எங்க இளைய தளபதி ராஜவனஜ் அய்யா எம்மக்களை "சகோதரர்களே" என்று அழைப்பார் பாருங்க.அந்த பாசத்துக்கு கரும்பாறை கூட உருகும்.அந்த பாசம் போதும் எம் மக்களுக்கு.நாங்க பொழைச்சுக்குவோம்.