மரணத்தின் ருசி












அனேகமாக நீங்கள் இந்த பதிவைப் படிக்கும்போது நான் இறந்துபோயிருக்கலாம்.

பூக்களை நிரப்பிக்கொண்ட
கவிதைகள் மனசாட்சியற்றவை
எவரேனும் எழுதுங்களேன்
தலைகுப்புற வீழ்ந்து
தலைமோதிச்சிதறும்
மரணத்தின் அழகினை

மரணத்தின் தித்திப்பை ருசித்திருக்கிறீர்களா? வழவழப்பான அதன் கரங்கள் பற்றிக்குலுக்கியிருக்கிறீர்களா? அல்லது மரணத்தின் மெல்லிய இடுக்குகளில் கசியும் வெளிச்சக்கீற்றுகளைத் தரிசித்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். காதல், வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம், தற்கொலைமுயற்சி மூன்றுமில்லாத மானிட வாழ்க்கை பொய்யால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது.
தற்கொலை என்பது கோழைத்தனம் என்று சிலர் சொல்லக்கூடும் (பலராகவுமிருக்கலாம்). அது தைரியமற்றவர்களின் வார்த்தை. மரணம் என்பது மாவீரம்.
அறிவின் சேகரம், சிலிர்க்க வைத்த பெண்கள்/ஆண்கள், வாசிப்பின் திமிர், ரகசிய சுயமைதுனம், மாவீரர் கல்லறையில் முகம்புதைத்து அழத்தோன்றும் ஏக்கம், தேசத்தை காட்டிக்கொடுக்கத்துணியும் தீரம், கண்ணீரின் வாதை,வன்மத்தின் வீரியம்,துரோகத்தின் சம்பளம், நட்பின் சுமை, கலவியின் உச்சம் இவையெல்லாம் அற்று ஒரு புள்ளியாய்ப் புள்ளியாய்ப் போய்விடத் தைரியமற்றதே வாழ்வின் மீதான நேசம்.

மரணத்தின் கரிய நிழனினின்று தப்புவதற்காகவே வாழ்க்கையின் மடியில் போய் விழுகிறீர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உண்மையில் வாழ்க்கையின் கண்கூச வைக்கும் பிரகாசத்தினின்று தப்புவதற்காகவே சென்று சேர்கிறோம் மரணத்தின் மெல்லிய அணைப்பில்.

மரணத்தின் சுவைகண்டு மீண்டிராவிட்டால் தேவகுமாரனின் விவிலியத்தில் கவித்துவம் பாய்ந்திராது.

சாம்பல்கிண்ணத்தில் உதிரும் சாம்பல்களிலிருந்து விருட்டென்று பறக்கின்றன வவ்வால்கள்.

அனேகமாக இந்த பதிவை நீங்கள் படிக்கும்போது நான் இறந்துபோயிருக்கலாம், அல்லது உயிருடனும்.

3 உரையாட வந்தவர்கள்:

 1. tamilnathy said...

  நீங்களா எழுதினீர்கள்....? கொண்டாட்டங்களைத்தானே உங்களுக்குத் தெரியும்...புரியும்...பிடிக்கும்!

 2. Anonymous said...

  சதாமை காந்தி ரேஞ்சுக்கு நான் எல்லாம் புகழவில்லை. ஆனால் சதாமைத் தண்டிக்க ஒரு முடிச்சவிக்கு, மொள்ளை மாறி, திருடன், கொலைகாரனான புஷ்ஷுக்கு எந்த உரிமையும் இல்லை. ஐநா சபை எத்தனையோ முறை மன்றாடியும் கேட்காமல் படை எடுத்தான். ஆயுதம் தொங்கிய ராணுவம் ஈராக்கையே புரட்டிப் போட்டது. அவர்கள் பேரழிவு ஆயுதம் கண்டு பிடிக்க முடியாமல் பெருத்த அவமானப்பட்டனர். 3000க்கும் அதிகமான அமெரிக்க வீரர் மடிந்தனர். மடிந்த ஈராக்கிய மக்கள் தொகை 3ல் இருந்து 20 லட்சம் வரை இருக்கலாம். மடித்த அமெரிக்க நேசநாட்டுப் படையினரின் எண்ணிக்கை 10,000க்கு மேல். அமெரிக்கா அழித்த ஈராக்கிய சொத்துக்களின் மதிப்போ பல ட்ரில்லியன்.

  அந்த கயவாளிப் பயலையும் ஆதரிக்க பாப்பானும் செளராஸ்டிரனும்!

  என்னுடைய பதிவிலும் காட்டமாக எழுதி இருக்கிறேன். அவசியம் படிக்கவும்.

 3. akridiy said...
  This comment has been removed by a blog administrator.