(பொன்ஸ்+பாலபாரதி)- செந்தில் = பாலா?

திகாலை 10 மணியிருக்கும், வலையுலகின் பிதாமகன் பாலபாரதியிடமிருந்து போன் வந்தது. நானாவது எழுந்து பத்துநிமிடமிருக்கும். ஆனால் தலயோ இன்னும் தூக்கக் கலக்கத்திலேயே பேசினார்.


"பெனாத்தல் சுரேஷ் அமீரகத்திலிருந்து வந்திருக்கார். உன்னைப் பார்க்கணுங்கிறார்"

"எதும் விசேசம் உண்டா?"

"அதெல்லாம் கிடையாது. மதியம் உட்லேண்ட்ஸில் சைவச் சாப்பாடு".

"சைவச்சாப்பாடா? அதுக்கு நான் தி.நகர் அக்கா கடையிலேயே சாப்பிட்டுக்குவேன். நான் வரலை".

"யோவ், உன்னையெல்லாம் ஒரு மனுசனா நினைச்சு ஒருத்தர் பார்க்கணுங்கிறாரு. வரமாட்டியா?"

அப்புறம் என்ன கேள்வி?

"சரி, எத்தனை மணிக்கு?"

"மதியம் 1 மணிக்கு"


தியம் ஒரு மணி. பாபா (அதுதான் பாலபாரதி) தான் வாக்களித்தபடி அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இருந்தார். கூட இருந்தவர்கள் 'திராவிடத்துத் திருவிளக்கு' லக்கிலுக்கும் 'வலையுலகின் தங்கமங்கை' பொன்ஸும். ஒருவழியாகப் பெனாத்தல் சுரேசும் பெனாத்தாமல் வந்து சேர்ந்தார்.


ட்லேண்ட்ஸ் ஓட்டல். அங்குதான் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.முதல் அதிர்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் பொன்ஸ்.

"முதல் முதலில் இங்குதான் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது"

ஆகா அந்த துயரம் இங்கதான் ஆரம்பிச்சுச்சா?

லக்கிலுக்கும் தன் கணக்குக்கு ஒரு சரவெடியைக் கொளுத்திப் போட்டார்.

"அடித்தட்டு மக்களுக்காகத்தான் கலைஞர் ஆட்சிக்கே வர்றார்"

"இதைக் கலைஞர் கேட்டால் அவருக்கே ஹார்ட் அட்டாக் வந்திடும்" என்று ஈனக்குரலில் முணங்கினேன்.

ஒருவழியாக டிபன் அயிட்டங்கள் வந்துசேர சாப்பிட ஆரம்பித்தோம்.
திடீரென்று பொன்ஸின் கடைவாயிலிருந்து பற்களுக்குப் பதில் தந்தங்கள் முளைத்து 'யானைப்பசிக்கு சோளப்பொறியா' என்கிற ரீதியில் சாப்பிட ஆரம்பித்தார். (பொன்ஸ், நீங்கள் சாப்பிட்டது நாலு தோசை, ரெண்டு சோளாபூரி, மூன்றரை போண்டா (அந்த அரை போண்டா பக்கத்து அப்பாவி லக்கிலுக்கின் பிளேட்டில் சுட்டது) என்பதை யாருக்கும் சொல்லமாட்டேன்)

பிறகு பாபாவும் பொன்ஸும் சேர்ந்து மற்றவர்களைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.

நான் by birth நல்லவன் என்பதாலும் அமைதியான டைப், யாரையும் ஓட்டத் தெரியாது என்பதாலும் அமைதியாக இருந்தேன்.

இருவரும் ஓட்டிய ஓட்டில் லக்கிலுக் 'ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' என்ற ரேஞ்சில் "வேலையிருக்கிறது" என்று சொல்லி எஸ்கேப் ஆனார்.

அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் இன்னொரு அப்பாவி, புளியமரம் தங்கவேலு. பாவம் அவர் சுந்தரராமசாமியின் ரசிகர். தோசையின் 'விரிவும் ஆழமும் தேடி', 'சாம்பாரோடு ஒரு உரையாடல்' நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தக் கலாட்டாக்களுக்கு மத்தியில்தான் பொன்ஸும் பாபாவும் என் தலையில் அந்த எம்டன் குண்டைப் போட்டார்கள்.

"உங்க எழுத்துக்காகவெல்லாம் உங்கள் பதிவைப் படிக்கிறதில்லை (அது தெரிஞ்சதுதானே) பின்னால் வரும் பாலாவின் கமெண்டுகளுக்காகத்தான் படிக்கிறோம்" என்றார்கள். (அடப்பாவிகளா!)


சோகமாக ஆபிஸ் வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்தால் வந்தது செந்திலின் பிளாக். அங்கேதான் பாலாவுக்கு 'அந்த' கொடுமை நேர்ந்தது.

பாலாவின் பெயரில் போலி அனானி பின்னூட்டங்கள்.

முதலில் மூன்றுபேர்தான் ஆரம்பித்திருந்தார்கள். பிறகு பத்து, பதினைந்துபேர்கள். மூத்திரச்சந்திலெல்லாம் பாலாவைத் துரத்தி துரத்தி அடித்திருந்தார்கள்.

பாலா, பீலா, பேலா என்று ஆரம்பித்து பஃகலா வரை பகரவரிசையில் கிட்டத்தட்ட 125 போலி பாலாக்களின் பின்னூட்டங்கள்.

'பாலாவே ஒரு போலி. போலிக்கு இன்னொரு போலியா' என்று மற்றொரு போலி அனானி வந்து புலம்பியிருந்தார்.

கடைசியில் 'பொருதடக்கை வாளெங்கே, மணிமார்பெங்கே, போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத் தோளெங்கே, எங்கே' என்று உண்மையான பாலாவைத் தேடவேண்டியிருந்தது.

என்ன கொடுமை செந்தில் இது?

பாலா எவ்வளவு நல்லவர். இனிய நண்பர். நான் பதிவைப் போட்டு நானே படிக்கிறேனோ இல்லையோ முதல் ஆளாக வந்து படித்து கமெண்டும் போடுபவர். அவர் 'வெளியே மிதக்கும் அய்யா' என்று அழைத்தால் காதில் தேன் வந்து பாயாதா?


ஏன் செந்தில் ஏன்? என்னதானிருந்தாலும் பாலா ஒரு so called மனிதன் இல்லையா?

நானும் இந்த 'பிராணிவதை'யைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயன்றேன். ஆனால் முடியவில்லை. எல்லாம் எல்லை மீறிவிட்டது.


செந்திலும் by birth நல்லவர்தான். ஆனால் கடல்கடந்த பொட்டிக்கடை சத்யாவின் 'கூடாநட்புதான் அவரை இப்படி ஆக்கியிருக்க வேண்டும்.

17 உரையாட வந்தவர்கள்:

  1. ரவி said...

    பக்கத்துக்கு பக்கம் வித்யாசம், படிக்கப்படிக்க சுவாரஸ்யமா இருந்தது...!!!!!

  2. பொன்ஸ்~~Poorna said...

    //நான் by birth நல்லவன் என்பதாலும் அமைதியான டைப், யாரையும் ஓட்டத் தெரியாது//
    இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.. நான் சாப்பிட்டதாக நீங்க சொல்வது எத்தனை உண்மைன்னு...:)))

  3. Pot"tea" kadai said...

    //செந்திலும் ப்ய் பிர்த் நல்லவர்தான். ஆனால் கடல்கடந்த பொட்டிக்கடை சத்யாவின் 'கூடாநட்புதான் அவரை இப்படி ஆக்கியிருக்க வேண்டும்.//

    :-))

    ஒரு பய என்னை நல்லவன்னு சொன்னதா சரித்திரமே இல்ல!அதுக்கு வல மட்டும் விதி"விளக்கா" என்ன?

    உள்ளூர்ல உருப்படல போற எடத்துலயாவது ஒழுங்கா இருன்னு எங்க அப்பார் சொன்னது ஞாபகத்துல வந்து ஒதையா ஒதைக்குது.

  4. கரு.மூர்த்தி said...

    வணக்கங்ணா , சும்மா ஒரு கயமை , எங்கள விட்டா உங்களுக்கு யாரு இருக்கா ?

  5. Pot"tea" kadai said...

    இத விட கொடுமையான மேட்டர் ஒன்னு சொல்லறேன் கேளுங்க...யார்கிட்டேயும் தயவு செஞ்சி சொல்லிடாதீங்க சுகுணா.

    நேத்து மத்தியானம் ஆபிஸ் டயத்துல ஒரு ஓவர்சீஸ் அழைப்பு வந்துச்சு. அவர் கேட்ட கேள்வில செல்போனையே தூக்கிப் போட்டு ஒடச்சிடலாம்னு நெனச்சேன்னா பாத்துக்கோங்களேன்.

    அவர் கேட்ட கேள்வி ஒரே ஒரு வரி தான்.

    "நீங்க எந்த நாட்ல இருக்கீங்க?"

  6. சென்ஷி said...

    //"(பொன்ஸ்+பாலபாரதி)- செந்தில் = பாலா?" //

    நான் கணக்குல கொஞ்சம் வீக்... தலைப்பு சரியான்னு பின்னாடி வர்றவங்க சொல்வாங்க

    சென்ஷி

  7. Anonymous said...

    பாலாவை மனிதனாக ஏற்றுக்கொண்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.(ஹிஹி)

  8. தருமி said...

    //நான் by birth நல்லவன் ...//

    அதுக்குப் பிறகு என்ன ஆச்சு...?

  9. மிதக்கும்வெளி said...

    அப்பாடா நானும் வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி ஒரு பதிவு போட்டுவிட்டேன். (நடந்த உண்மைகளை 'விளக்கி')

  10. Anonymous said...

    /தி.நகர் அக்கா கடையிலேயே /

    எந்த அக்கா?

    - பாலா

  11. மிதக்கும்வெளி said...

    /எந்த அக்கா?/


    ம். சொர்ணாக்கா. அக்கா கடைன்னா அக்காதான் இருக்கணுமா? முனியாண்டிவிலாஸ் ஓட்டல் கல்லாவில முனியாண்டியா உக்காந்திருக்கார்? ஆமா நீங்க எந்த பாலா?

  12. bala said...

    //அவர் 'வெளியே மிதக்கும் அய்யா' என்று அழைத்தால் காதில் தேன் வந்து பாயாதா//

    வெளியே மிதக்கும் அய்யா,

    என்னங்க இது?Pleasant Surprise. ஃபிப்ரவரி 10 வரைக்கும் தலையை காட்டமாட்டேன்னு சொல்லிவிட்டு,இவ்வளோ சீக்கிரமா?

    மொதல்ல, காதுல வழியிற தேனை தொடைங்க.பொன் வண்டு வந்து மொய்க்கப் போவுது.அப்புறம் இசை அம்மா கிட்ட பிரியாணி ஆயிடப் போவது.

    நீங்க எப்பவும்,கொஞ்சும் சலங்கை சினிமாவுல ஜெமினி கணேசன் அய்யா,சாவித்திரி அம்மா கிட்ட சொன்ன மாதிரி "இசை" என்னும் இன்ப வெள்ளத்தில் தான் மிதப்பீங்கன்னு நினைச்சேன்.ஆனா நீங்க, உங்களுடைய சாதாரண விசிறி "அய்யா"ன்னு அழைத்தாலே காதுல தேன் பாயுதுன்னு சொல்லி,பொன் வண்டு பிரியாணி செய்யும் இசை லெவல்ல,நம்மளை தூக்கி வச்சு, நெகிழ வச்சுட்டீங்க.

    //செந்திலும் by birth நல்லவர்தான்//

    சரியாக சொன்னீங்கய்யா.செந்தில் அய்யா ஓரளவுக்கு நல்லவர் தான்.அவருக்கு என் மேல கொஞ்சம் கோவம்.எதுக்குன்னா,அவரோட "மதிமுக என் நினைவடுக்களில்" மெகா சீரியல் பதிவுல நான் "செந்தில் அய்யா,மெகா சீரியல் 'தினத்தந்தி சிந்துபாத்' திகில் கதை ரேஞ்சுல சூப்பரா போவுதுன்னு"ன்னு கமெண்ட் போட்டேன்.அதை அவர், நான் அவரோட மதிமுக வை கேவலமா கிண்டல் அடிச்சுதா தப்பா எடுத்து,காமெண்டையும் போடல,மெகா சீரியலையும் நிப்பாட்டிட்டாரு.அதுக்கப்புறம் கோவமா "வண்டை வண்டையா வாஞ்சையா" திட்டப் போவதா பயமுறுத்தினாரு.ஆனா அவர் பேர்ல திட்டாம,போலா,பீலா,பகாலான்னு ப்ராக்ஸி போட்டு, திட்ட ஆரம்பிச்சாரு.போகட்டும் விடுங்க.தெளிஞ்சுடுவாரு.

    அது சரி.நீங்க உங்க பற்கள், கேவலமா ஓநாயோட பற்கள் மாதிரி இருக்குன்னு வருத்தத்தோட சொன்னீங்களே.எதனாச்சும் ட்ரீட்மெண்ட் எடுத்தீங்களா?முடிஞ்சா,பல் தெரியற மாதிரி ஒரு ஃபோட்டோ ஸ்கேன் பண்ணி போடுங்க.நாங்களும் பாக்கறோம்.

    பாலா

  13. மிதக்கும்வெளி said...

    /இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.. நான் சாப்பிட்டதாக நீங்க சொல்வது எத்தனை உண்மைன்னு/

    சரிசரி அழாதீங்க கண்ணைத் துடைச்சுக்கங்க.

  14. மிதக்கும்வெளி said...

    ///நான் by birth நல்லவன் ...//

    அதுக்குப் பிறகு என்ன ஆச்சு...? /

    அப்புறம் என்னாகும்? உங்களோடெல்லாம் சேர்ந்தா என்னாகுமோ அதான்

  15. Anonymous said...

    அது போலி பாலா

  16. மிதக்கும்வெளி said...

    அடப்பாவிகளா இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா?

  17. Anonymous said...

    பாலா வெறும் வரவனையானை மட்டுமே வையரதை வன்மையாக கண்டிக்கிறேன்