நீங்களும் ஹீரோ/ஹீரோயின் தான்
இது சாருநிவேதிதா ஆரம்பித்துவைத்த ஆட்டம்தான். ஒவ்வொரு எழுத்தாளரையும் ஏதாவதொரு சினிமா நட்சத்திரங்களோடு ஒப்பிடுவது. உதாரணத்திற்கு சுந்தரராமசாமி - 'மாயாபஜார்' எஸ்.வி.ரங்காராவ் (கல்யாண சமையல்சாதம்...)
சில பல வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வலைப்பதிவாளர்களைச் சந்தித்தபோது சில நட்சத்திரங்களை நினைவுபடுத்தினார்கள். எனவே இந்தப் பதிவு. இது தனிப்பட்டமுறையில் யாரையும் புண்படுத்தும் பதிவு அல்ல. எனவே யாரும் கோபிக்கவேண்டாம். (போதுமடா பில்டப், இதுவரை நீ செய்த அட்டூழியத்தையே நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இப்போது மட்டும் என்ன என்று நீங்கள் முனங்குவது கேட்கிறது. கூல்டவுன், கூல்டவுன்)
சிவஞானம்ஜி - சிவாஜிகணேசன்.
தருமி - ரகுவரன்
ஞானவெட்டியான் - 'பட்டினத்தார்' டி.எம்.எஸ். சௌந்தராஜன்.
ஜி.ராகவன் - ஜெமினிகணேசன்
முத்து தமிழினி - சரத்பாபு
லக்கிலுக் - (அந்தக்கால) சந்திரசேகர்
குழலி - முரளி
டோண்டு ராகவன் - வி.கே.ராமசாமி
மா.சிவகுமார் - விவேக்
யெஸ்.பாலபாரதி - கே.பாக்யராஜ்
(அப்பாடா ஒருவழியாப் பழிவாங்கியாச்சு)
பொன்ஸ் - அருணா
அகிலன் - தனுஷ்
ரோசாவசந்த் - ஜெய்சங்கர்
ஓகை - எஸ்.வி.சுப்பையா
(எஸ்.வி.சுப்பையா ஷில்பா செட்டியின் ரசிகரா என்று தெரியாது. ஆனால் ஓகை அம்மணியின் தீவிர ரசிகர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டபோது வீட்டிலேயே மம்தாபானர்ஜி ரேஞ்சுக்கு உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நேற்றுதான் ஷில்பா போட்டியில் வென்றவுடன் பழச்சாறு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். என்ன, பழச்சாறு மூன்று வருடங்களுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்டது)
'ஆலமரம்' திரு - விக்ரம்
ப்ரியன் - அஜித்குமார்
வரவணையான் செந்தில் - (லவ்டுடே) விஜய்
சுகுணாதிவாகர் - கமல்ஹாசன்
(சாரி கொஞ்சம் ஓவர்)
நீங்களும் பட்டியலைத் தொடரலாம்.
ஒரு வில்லன் மொகம் கூடவா என்னோட மூஞ்சிக்கு செட்டாவல?
:-(
நற..நற..நற..
எனக்குப் பிடிச்ச ஆளு ரகுவரன். ரொம்ப நன்றி.
ஆனா ஒண்ணு மட்டும் புரியலை. கொடுத்திருக்கிற லிஸ்ட்ல நிறைய பேரு ஹீரோக்கள். (எல்லாத்தையும் ஒரு தூக்கு தூக்கி விட்டுடுவோம்னு பாத்திட்டீங்களோ? அதுவும் சரிதான்) ஒரே ஒரு வில்லன் நம்ம ஆளுதான். தெரிஞ்சுதான் வச்சிருப்பீங்க.. ஒரு காலத்தில பசங்க வச்ச பட்டப் பெயருக்கு ஒத்துதான் வருது...
//யெஸ்.பாலபாரதி - கே.பாக்யராஜ்//
ம்ச்.. இதெல்லாம் ஒரு பழிவாங்கலா? கலாபவன் மணியே நல்லா இருந்திச்சி..
இதைக் கண்டித்து நான் உட்லேண்ட்ஸில் பா.க.ச சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
யாரங்கே, நாலு தோசை, அஞ்சு பரோட்டா, மூன்று ஊத்தப்பம் எடுத்துட்டு உண்ணாவிரத இடத்துக்கு வந்துருங்க.. ;)
//சுகுணாதிவாகர் - கமல்ஹாசன் //
சுகுணாதிவாகர் -- தசவாதாரம்
கலக்குங்க தலைவரே
என்னைப் பத்தி நானே பின்னூட்டம் போட்டா நல்லாயிருக்காதே..! :)))
அதனால நான் நாகேஷ். நமக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்.
//யெஸ்.பாலபாரதி - கே.பாக்யராஜ்//
உண்மையிலேயே பாக்யராஜ் கேரக்டருக்கு பாலாபாய் ஓவரோன்னு தோணுது.
என்னோட சாய்ஸ் :-
யெஸ்.பாலபாரதி - ஜெய்கணேஷ் :))
மத்த யாரையும் எனக்கு அவ்வளவா தெரியாது. பாலாபாயை போட்டோவுல பாத்திருக்கேன்.
சுட சுட சினிமா மேட்டர் தர்றவர விட்டுட்டீங்க ?
சென்ஷி
கொஞ்சம் பழைய ஆசாமிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்றால்,
மதி கந்தசாமி : சுகாசினி
பெயரிலி : சந்திரபாபு
துளசி கோபால் : ஏ.வி.எம்.சரவணன்
பத்ரி : வி.கோபாலகிருஷ்ணன்
காசி : மேஜர் சுந்தரராஜன்
கிருபாஷங்கர் : விவேக்
சுரேஷ்கண்ணன் : பிரகாஷ்ராஜ்
இராம.கி : டி.கே.ஷண்முகம்
ஸ்ரீகாந்த் மீனாஷி : அரவிந்தஸாமி
பாஸ்டன் பாலாஜி : பார்த்திபன்
//டோண்டு ராகவன் - வி.கே.ராமசாமி//
ஒரு சின்னத் திருத்தம்.
டோண்டு ராகவன் - சோ (ராமசாமி)
வீட்டுக்கு வருமானவரித்துறை படையெடுத்து வரப்போறாங்க :)
விடாது கருப்பு - கசன்கான்
விட்டது சிகப்பு - சிலுக்கு சுமிதா
//மா.சிவகுமார் - விவேக்//
இதுதான் கொஞ்சம் ஓவர். உங்களுக்கே நியாயமாப்படுதா?
//சுகுணாதிவாகர் - கமல்ஹாசன்
(சாரி கொஞ்சம் ஓவர்)//
கொஞ்சமா? அடப்பாவி:-))))
வெளியே மிதக்கும் அய்யா,
(My choice in Brackets)
சிவஞானம்ஜி - சிவாஜிகணேசன்.(TR மகாலிங்கம்)
தருமி - ரகுவரன்-(நாட்டாமை விஜயகுமார்)
ஞானவெட்டியான் - 'பட்டினத்தார்' டி.எம்.எஸ். சௌந்தராஜன்.
ஜி.ராகவன் - ஜெமினிகணேசன்-(சிவகுமார்)
முத்து தமிழினி - சரத்பாபு-(சந்திரபாபு)
லக்கிலுக் - (அந்தக்கால) சந்திரசேகர்-(குமரிமுத்து)
குழலி - முரளி-(TA மதுரம்)
டோண்டு ராகவன் - வி.கே.ராமசாமி(டெல்லி கணேஷ்)
மா.சிவகுமார் - விவேக்
யெஸ்.பாலபாரதி - கே.பாக்யராஜ்-( PS வீரப்பா)
(அப்பாடா ஒருவழியாப் பழிவாங்கியாச்சு)
பொன்ஸ் - அருணா-அங்கமுத்து
அகிலன் - தனுஷ்
ரோசாவசந்த் - ஜெய்சங்கர்(வில்லன் ஜெய்சங்கர்,நல்லா காமெடியா வில்லத்தனம் பண்ணுவாரு)
ஓகை - எஸ்.வி.சுப்பையா-
(எஸ்.வி.சுப்பையா ஷில்பா செட்டியின் ரசிகரா என்று தெரியாது. ஆனால் ஓகை அம்மணியின் தீவிர ரசிகர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டபோது வீட்டிலேயே மம்தாபானர்ஜி ரேஞ்சுக்கு உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நேற்றுதான் ஷில்பா போட்டியில் வென்றவுடன் பழச்சாறு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். என்ன, பழச்சாறு மூன்று வருடங்களுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்டது)
'ஆலமரம்' திரு - விக்ரம்(ஜனக ராஜ்)
ப்ரியன் - அஜித்குமார்
வரவணையான் செந்தில் - (லவ்டுடே) விஜய்-(MN நம்பியாரோட அடியாளா வந்து எம்.ஜி.ஆர் கிட்ட எப்பவும் அடிவாங்கும் ஜஸ்டின்)
சுகுணாதிவாகர் - கமல்ஹாசன்-(என்னத்தை கன்னையா)(பழி,பழிக்குப் பழி)
(சாரி கொஞ்சம் ஓவர்
என்னையும் இந்த ஆட்டையில் சேத்துக்கங்க சார்!
பின்னூட்ட சூராவளி பாலா அப்புறம் நானு ( இது கொஞ்சம் ஓவரில்ல?)
எங்களை விட்டுடீங்களே ?
/ஒரு வில்லன் மொகம் கூடவா என்னோட மூஞ்சிக்கு செட்டாவல?/
பொன்னம்பலம்?
/யாரங்கே, நாலு தோசை, அஞ்சு பரோட்டா, மூன்று ஊத்தப்பம் எடுத்துட்டு உண்ணாவிரத இடத்துக்கு வந்துருங்க.. ;)/
தாயி இன்னும் உங்க அகோரப்பசி அடங்கலையா?
/சுகுணாதிவாகர் -- தசவாதாரம்
கலக்குங்க தலைவரே /
நல்லவேளை குணா கமல்ன்னு சொல்லவேயில்லையே
/என்னோட சாய்ஸ் :-
யெஸ்.பாலபாரதி - ஜெய்கணேஷ்/
இதுக்கு நானே பரவாயில்லை. பாக்ராஜை விட ஜெய்கணேஷ் கிழபோல்டு. அதுவிமில்லாம பான்பராக் சாப்பிட்டே செத்துப்போனவர்.
/எங்களை விட்டுடீங்களே ? /
உங்களை நான் பார்த்தில்லையே?
//மிதக்கும் வெளி said...
/ஒரு வில்லன் மொகம் கூடவா என்னோட மூஞ்சிக்கு செட்டாவல?/
பொன்னம்பலம்? //
உங்களது பெருந்தன்மையில் பியரடித்து தொப்பையை குளிர்வித்தோம்
/*தாயி இன்னும் உங்க அகோரப்பசி அடங்கலையா? */
அகோரப்பசி என்பதைவிட யானைப் பசி சரியாக வரும் சுகுணா