சொற்களின் தாய்

அவளுக்கும் எனக்குமிடையில்
இடைவெளி இருக்கிறதென்பது உண்மைதான்.
அவ்விடைவெளியெங்கும் ததும்பி வழிகிறது
அன்பின் வெம்மையும்
தாய்மையின் கதகதப்பும்.
வேறுசில வார்த்தைகளினூடே
பிரதி பயணிக்கிறது.
காலடியோசைகள் இப்போது நின்றுவிட்டன.
நாடோடிப்பாடல்கள் தேய்ந்துமறையும்
தீவினின்று
சிறுபறவைகளை அழைத்துவந்தவள் அவள்.
இசைக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளிலேயே
மிருகங்களைப் பழக்கும் வித்தையறிந்தவள்.
பாம்பின் தடங்களைப் பின் தொடர்ந்தால்
அவளின் கண்ணீர்த்தடங்களை நீங்கள்
வாசித்தறியக்கூடும்.
முன்னையப்பழமையில்
பூமியோடு பெயர்த்தெடுத்து
நாடுகடத்தப்பட்டவளின்
புகலிடத்தேசத்திலினின்று வந்ததாய்ச் சொன்னாள்.
பரந்துவிரிந்தாலும்
பூமி
காலுக்கடியில்தான் கிடக்கிறது
என்பதைத்தாண்டியும்
என்ன சொல்ல ஏலும்?

4 உரையாட வந்தவர்கள்:

  1. None said...

    Just letting you know I was here and sending you love and peace from The Netherlands!

    Chia

  2. Ayyanar Viswanath said...

    /பூமி
    காலுக்கடியில்தான் கிடக்கிற்து/

    இதுகூட சப்பக்கட்டுதான் திவாகர்.மொழி வசமாகிட்டதால நமக்கு நாமே சொல்லிக்கிற ஆறுதல்.அதிகபட்சமாய் சில வரிக் கவிதைகளை தவிர வேறென்ன செய்துவிடமுடியும் நம்மால்

  3. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    //இதுகூட சப்பக்கட்டுதான் திவாகர்.மொழி வசமாகிட்டதால நமக்கு நாமே சொல்லிக்கிற ஆறுதல்.அதிகபட்சமாய் சில வரிக் கவிதைகளை தவிர வேறென்ன செய்துவிடமுடியும் நம்மால் //

    சரியா சொன்னீங்க அய்யரே.. பகுத்தறிவு இவர்களுக்கு யதார்த்தத்தை சொல்லி தர மறந்துவிட்டது. பகுத்தறிவு மூலம் சொர்க்கத்தை காண நினைப்பவன் மூடன்.

  4. Ayyanar Viswanath said...

    அய்யா உண்மைத் தமிழரே நான் சொன்னது துயர் மிகுந்த வெறுமையில்
    மத்தபடி நாங்கலாம் ஒரே இனம்
    :)