பெரியாரியக்கத் தோழர்களுக்கு உதவுங்கள்! - ஒரு தோழமைப்பதிவு

தோழர்களே!

அசுரன் ஊடகம் கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் பெரியார் திராவிடர் கழகத்தின் நூல் வெளியீடுகள் மற்றும் ஒலிநாடாக்கள் வெளியீடு, ஒளிக்குறுந்தகடு வெளியீடு ஆகியவற்றிற்கு தொழில்நுட்பப்பணிகளையும், கணினியாக்கப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இதுவரை நாங்கள் பணியாற்றிய பதிப்புகள்

தமிழர்கள் உரிமைக்கு எதிரி யார்? பார்ப்பனர்களா ?

தனியார்துறை இடஒதுக்கீடு ஏன்? ஏதற்கு ?

பெரியாரின் விடுதலைப்பெண்

கடவுள்மறுப்புத்தத்துவம் ஒரு விளக்கம்

பெரியார் ஒரு வாழ்க்கைநெறி

இனிவரும் உலகம்

பெரியாரும் அம்பேத்கரும்

கடவுளர் கதைகள்

இந்துமதப்பண்டிகைகள்

இளைஞர்களே உங்களுக்குத் தெரியமா ?

மனுநீதி குலத்துக்குஒருநீதி

பெரியாரின் தன்வரலாறு

கிராமங்கள் ஒழியவேண்டும் ஏன்?

தமிழர்கள் இந்துக்களா ?

மதம் மாறினால் குற்றமா?

இராமாயணக்குறிப்புக்கள்

ஆத்மா – நரகம், மோட்சம்

பெரியாரில் பெரியார்

பெரியாரும் தனித்தமிழ்நாடும்

உயர் எண்ணங்கள்

சித்திரபுத்திரன் விவாதங்கள்


ஆகிய சிறுவெளியீடுகளுக்கு கணினியாக்கம் மற்றும் பதிப்புப்பணிகள் அனைத்தையும் செய்தோம். முதன்முதலாக தமிழர் பண்பாடு என்ற சிறு வெளியீட்டை அசுரன் ஊடகத்தின் பெயராலேயே வெளியிட்டோம். பெரியாரியல்வாதிகளால் மிக மிக அவசியமான பணியென்றும், தங்கள் இலட்சியம் இதுதானென்றும் சொல்லப்பட்டது குடிஅரசு தொகுப்பு வெளியீடு ஆகும். பெரியாரியலாளர்களின் கனவை பெரியார் திராவிடர் கழகம் நிறைவேற்றத் தொடங்கியது. குடிஅரசு மூன்று தொகுதிகள் மற்றும் சோதிடப்புரட்டு எனும் 500 பக்கங்கள் கொண்ட நூல் ஆகியவற்றை மிக மிக மலிவான விலையில் மக்களிடையே பரவ உரிய பணிகளையும் செய்தோம்.


குறுந்தகடுகள்


மதுரையில் நடைபெற்ற பெரியார் தலித்துகளுக்கு விரோதியா? என்ற கருத்தரங்கின் ஒளிக்குறுந்தகடு,

சங்கராச்சாரி யார்?

புதுவை தமிழர் தன்மானமீட்பு மாநாடு

திருப்பூர் தமிழர் எழுச்சி விழா

சேலம் குடிஅரசு வெளியீட்டு விழா உரைகள்

சாய்பாபவின் உண்மைமுகம்

ஓட்டன்சத்திரம் காதலர்தின விழா

இடஒதுக்கீடு ?

திண்டுக்கல் 5 நாள் பயிலரங்கம் (31 குறுந்தகடுகள்) தொகுப்பு

ஏற்காடு பயிலரங்கத் தொகுப்பு

மேட்டூர் நாத்திகர் விழா

தஞ்சை சாதிஒழிப்பு மாநாடு


ஆகியவற்றை தரமான குறுந்தகடுகளைப் பயன்படுத்தி அடக்க விலையில் பெரியார் தி.க மக்களிடம் கொண்டுசென்றது. அதற்குரிய அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் செய்தோம். இன்னும் பல நிகழ்வுகள் எடிட்டிங் பணிகள் முடிவடைந்தும் பொருளாதாரமின்மையால் வெளிவராமல் உள்ளன.


இணையம்


http://www.dravidar.org/ என்ற இணையதளத்தை கடந்த 2007 பிப்ரவரி 12 முதல் ஓராண்டாக நடத்திவருகிறோம். http://www.thozharperiyar.%20blogspot.,http://www.periyardravidar%20kazhagam.blogspot.com/ ,http://www.periyarmulakkam.blogspot.com/,http://www.thozharperiyar.wordpress.com/ ஆகிய வலைப்பூக்களையும் பதிவிட்டு வருகிறோம். திராவிடர் இணையத்தில் மின்நூல்களையும் பதிவேற்றியுள்ளோம். பெரியாரியலைப் பரப்பும் இன்னும் சில இணையதளங்களுக்கு மின்நூலாக்கப் பணிகளையும், கணினியாக்கப் பணிகளையும் செய்துவருகிறோம்.


வேண்டுகோள்!


சேலம் விசு, சேலம் வீரமணி, மேட்டூர் மார்டின், ஒட்டன்சத்திரம் பெரியார்நம்பி, தாராபுரம் குமார், செம்பட்டி ஆல்பர்ட், பழனி மருதமூர்த்தி ஆகிய தோழர்கள் வழங்கிய நன்கொடைகள்,


பெரியகுளம் குமரேசன், செம்பட்டி இராசா, வலையபட்டி நாகராசு, சென்னை மதி, மறைந்துவிட்ட வெள்ளோடு ஸ்ரீரங்கன் ஆகிய தோழர்களின் இரவுபகல் பாராத உழைப்பு,


புதுவை கோபதி, அகிலன் ஆகியோர் வழங்கிய உயர்நுட்பமென்பொருட்கள்,

பெரியார் திராவிடர் கழகத் தலைவர்கள் அளிக்கும் ஊக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட பணிகளை செய்துவருகிறோம்.


ஒரே நேரத்தில் இயக்கத்தின் கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் போன்றவற்றிற்கும் நன்கொடை அளித்து இயக்கப்பணிகளையும் செய்துவரும் தோழர்களுக்கு, வெளியீடுகள் அதற்கான தொழில்நுட்பப் பணிகளுக்கு உதவுதல் என்னும் கூடுதல்சுமையையும்; சுமத்திவருகிறோம். இதுவரை வெளியே உதவி கோராமல் காலத்தை கடத்திவிட்டோம். இனி தொடர்ந்து பணிகள் நடக்க இயக்கம் கடந்த உங்களை நாடுகிறோம்.


பொருளாதாரமின்மையால் தட்டச்சு செய்தும் அச்சிடப்படாமல் உள்ள உள்ள சிறு சிறு நூற்களை வெளியிட உள்ளோம்.


பெரியாரின் உரையாக, கட்டுரையாக இதுவரை வந்துள்ள சிறு வெளியீடுகள் அனைத்தையும் மின்நூலாக்கி இணையதளங்கள் மூலம் உலகம் முழுக்க இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிய பணியையும் தொடங்கியுள்ளோம்.


வெறும் 500 எம்.பி அளவுள்ள - நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்துவரும் திராவிடன் இணையத்தை மேம்படுத்த – அதன் அளவை உயர்த்த உள்ளோம்.


பெரியாரியலை காலத்துக்கேற்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களிடமும், உலகளாவி வாழும் தமிழர்களிடமும் கொண்டுசெல்ல வேண்டிய எமது கடமைக்கு தோள்கொடுக்க, துணைநிற்க அனைவரையும் அழைக்கிறோம். எமது தேவை 2,00,000 இரண்டு இலட்ச ரூபாய்கள்.


இதில் 1,00,000 ரூபாயை நிரந்தர இருப்பாக வைத்து தொடர்ந்து சிறு நூல்களை வெளியிடுவது என்றும், 50,000 ரூபாயை குறுந்தகடு வெளியீட்டிற்கும், 50,000 ரூபாயை மின்னூலாக்கம் மற்றும் இணையதள மேம்பாட்டிற்கும் பயன்படுத்த எண்ணியுள்ளோம்.


அறக்கட்டளைகளோ, அவ்வப்போது வரும் ஆளுங்கட்சிகளின்; அரவணைப்போ, கல்வி வியாபார வருமானங்களோ, கட்டப்பஞ்சாயத்து வருமானங்களோ எதுவுமில்லாத பெரியாரியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற துடிப்பைமட்டும் கொண்டு;ள்ள தோழர்களின் வேண்டுகோள்! பணிகளுக்குரிய ஆலோசனைகளைக் கூறுங்கள். அனைத்தையும் நிறைவேற்ற நிதியையும் வழங்குங்கள்!

அசுரன் ஊடகம், திண்டுக்கல்




நிதி வழங்க வேண்டிய முகவரி : தோழர் ஆல்பர்ட் , நவீன் தொலைபேசி நிலையம் , பேருந்து நிலையம் எதிரில், செம்பட்டி – 624710

வங்கிக்கணக்குப் பெயர் : MERCURY SOFTWARE

வங்கி எண் : 601305014423, ICICI Bank, Madurai Branch

மின்னஞ்சல் : asuranoodakam@gmail.com, atthamarai@gmail.com

3 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    சுகுணாதிவாகர்,
    பிச்சை எடுத்தாவது இந்த கேவலமான காரியத்தை செய்யணுமா என்று தோன்றுகிறது.நீங்களும், உங்க தோழர்களும் கோவில்களுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுங்களேன்,.வசூல் நன்றாக இருக்கும்.

  2. K.R.அதியமான் said...

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சுகுணா.

    தந்தை பெரியார் பல கோடி ரூபாய் சொத்துக்க‌ளை, மிக மிக சிக்கனமாக வாழ்ந்து, இயகத்திற்க்காக சேர்த்து வைத்தார். அதை இன்று 'அனுபவிக்கும்' நபர்கள் செய்ய வேண்டிய பணி இது.

    அய்யா ஒரு தீர்க்க தரிசி. கூட இருந்தவர்களை பற்றி ' இந்த பசங்கல நம்ப முடியாது' என்று அப்பவே சொன்னவர் !! தி.கா வை அணுகி நிதி உதவி அல்லது நேரடியான பணி உதவி கோர முடியாதா ?

    பி.கு : உலகமயமாதலின் விளைவே இன்று அய்யாவின் நூல்களை இப்படி இலவச மற்றும் இதர‌ வ‌லைமனைகளிலும், குறுந்தகடுகளிலும் சுலபமாக, குறைந்த செல்வில் பதிவு செய்ய முடிகிறது என்பதை எண்ணிப்பாருங்கள் !!

  3. சம்பூகன் said...

    சுகுணா திவாகர் இந்த பதிவை படித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்..

    சம்பூகன்