ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள்

ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத் திகழ்ந்த காரணத்தினால் சாமியார்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது. அவ்வெறுப்புக்குள் உட்பட்டே ஓசோவும் என் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

கல்லூரி முடிந்து ஒரு பத்திரிகை நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியபோது என்னோடு இணைந்து 'புதியபயணம்' என்னும் மாத இதழை நடத்திய ஜெகன் தான் முதன்முதலில் ஓஷோவை முறைப்படி அறிமுகப்படுத்தினான். முதன்முதலில் படித்த ஓசோ நூல், 'இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள்?'. பெரியாரைத் தொடர்ச்சியாக வாசிக்கும் யாரையும் ஓசோ ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஓஷோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள் குறித்து ஒருநூல் எழுதும் எண்ணமிருப்பதால் ஓஷோவைச் சமீபகாலங்களில் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தபோது கவனத்திற்குட்பட்ட சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ளலாமென்று தோன்றுகிறது.

பெரியாரும் ஓசோவும் சிறுபிராயத்திலிருந்தே கலகக்காரராக விளங்கியவர்கள். ஓஷோ சிறுவனாக இருந்தபோது ஒரு விருந்தினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒரு வயதானவரின் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு ஓசோவின் வீட்டில் பணித்திருக்கிறார்கள். ஆனால் ஓசோவோ ஏன் அவர் காலில் விழ வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 'அவர் வயதானவர், அதனால் காலில் விழவேண்டும்' என்றிருக்கிறார்கள்.

'வயதானவர் என்றால் ஏன் காலில் விழவேண்டும், ஏன் தலையைத் தொடக்கூடாது? நம் வீட்டிற்கு எதிரில் கட்டப்பட்டிருக்கும் யானைக்கு இவரை விட வயது அதிகமிருக்குமே, ஏன் நாம் யானையின் காலில் விழுவதில்லை?' என்று கேட்டிருக்கிறார் பாலக ஓசோ. பெரியாரின் சிறுவயதுக் கலகச்செயற்பாடுகள் பலரும் அறிந்ததுதான்.

அதேபோல் ஓசோவிடமிடம் பெரியாரிடமும் தொழிற்படும் தர்க்கங்கள் அலாதியானவை. பிறந்த நேரம் கணிப்பது குறித்துப் பெரியார் கேட்பார், 'பிறந்த நேரம் என்றால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நேரமா, தலை முதலில் வந்த நேரமா, முழு உடலும் வெளிவந்த நேரமா, அப்போது டாக்டர் பார்க்கும் நேரமா, மருத்துவமனைக்கு வெளியிலுள்ள கடிகாரத்தின் நேரமா, உலகத்திலுள்ள அனைத்துக் கடிகாரங்களும் ஒரேநேரத்தைக் காட்டுமா?' என்று.

ஓசோவும் இப்படியான தர்க்கங்களை அடுக்கிக்காட்டுவதில் வல்லவர். சொர்க்கம் என்பது பிளாஸ்டிக்காலானதாகத்தானிருக்கும் என்னும் ஓசோ, ஏனெனில் அங்கு துன்பமே இல்லை, ஒரே இன்பம்தானெனில் ஒரேநாளில் சொர்க்கம் போரடித்துப் போகுமென்பார். அங்கு முதல்நாள் மட்டும்தான் செய்தித்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும். கொலை, கொள்ளை, பாலியல்பலாத்காரம் இல்லாத நியூஸ்பேப்பர் எதற்கு?

மதவாதிகள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பெரியாரும் ஓசோவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதுவும் ஓசோ தான் பிறந்த ஜைனமதத்தின் போலித்தனமான செயற்பாடுகள் குறித்தும் ஜைனமுனிவர்களின் உடலொடுக்கும் தன்மை குறித்தும் பகிடிசெய்தார். பெரிரார் கடவுளை மறுத்தாரெனில் ஓசோவோ 'கடவுள் இறந்துவிட்டார், ஜென்னே வாழ்கிறது' என்றார்.

அதேபோல் ஓசோவின் வாசிப்பு நினைத்துப்பார்க்க முடியாதளவு அபாரமானது. தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் , அரசியலாளர்கள் என அனைவர் குறித்தும் போகிறபோக்கில் விவரித்துச் செல்வார். பெரியாரை ஓசோ அறிந்திருந்தால் நிச்சயமாகக் கொண்டாடியிருப்பார் என்பதில் அய்யமில்லை.

கற்பு, கலாச்சாரம், குடும்பநிறுவனம், குழந்தைப்பேறு ஆகிய அம்சங்களிலும் ஓசோ மர்றும் பெரியாரின் சிந்தனைகள் பல சமயங்களில் இணையாகப் பயணிக்கின்றன.

இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர். முற்பிறவி, கர்மா, விதி ஆகிய கருத்தாக்கங்கள் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாரிய விளைவுகள் குறித்து உரையாடுகின்றனர். திருமண முறையை மறுத்து ஆண் - பெண்ணுக்கிடையில் தோழமை உறவை வலியுறுத்துகிறார் ஓசோ. பெரியாரும் 'திருமணம் என்பது கிரிமினல் குற்றம்' என்கிறார்.

ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களை ஏற்றுக்கொள்ளாததோடு காத்திரமான விமர்சனங்களையும் முன்வைத்தார். பெண்ணிய இயக்கங்கள் பெண்களை ஆண்களாக மாற்றுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றன என்றார். ஆணை விடப் பெண்ணே உயர்ந்தவள் என்ற ஓசோ ஆனால் பெண்னிய இயக்கங்கள் பெண்களை ஆண்களைப் போல மாற்ற முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது, ஆண்தான் பெண்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என்றார்.

இத்தகைய விமர்சனங்களின் பின்னணியில் பெரியாரின் சிந்தனைகள் குறித்தும் கூட நாம் கேள்விகளை எழுப்பலாம். ஏனெனில் பெரியார் பெண்களை ஆண்களைப் போல உடையணியச்சொன்னவர், இருவருக்கும் பொதுப்பெயர்களை இடச்சொன்னவர். கிராப் வெட்டிக்கொள்ளச் சொன்னவர். இதுவெல்லாம் காலமாற்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை.

குறிப்புகள் :

1. ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை அப்படியே நாம் இந்தியச்சூழலில் பொருத்திப் பார்க்கமுடியாது. இங்கு பெண்ணிய இயக்கங்களில் பார்ப்பனப் பெண்களே அதிகமும் தலைமையைக் கைப்பற்றியதால், பார்ப்பனீய - ஆணிய மதிப்பீடுகளுக்கேற்றவாறான பெண்களை 'உருவாக்கி'த் தருவதில் தங்களையறியாமலே வினையாற்றினர். தமிழ்ச்சூழலிலோ ஓவியா, சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தியப் பெண்கள் இவர்களையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணிய இயக்கமெல்லாம் ஒன்றுமில்லை. வரதட்சணை, கற்பழிப்பு எதிர்ப்பு ஆகியவற்றைத் தாண்டாத இடதுசாரிப் பெண்ணிய அமைப்புகளும், தயிர்சாதத் தயாரிப்புகளான மங்கையர்மலர், அவள்விகடன் வாசகர்வட்டங்கள்தானிருக்கின்றன.

2. கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத் தயவுசெய்து தட்டையாக அணுகவேண்டாம். ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார். குறிப்பாக உடை விசயத்தில் பெண்களுக்கு மிகவும் சவுகரியமானதும் ஆபத்தில்லாததும் சுடிதார், பேண்ட் - சட்டை மாதிரியான உடைகளே. சுனாமியின் போது நிறையப் பெண்கள் ஓடமுடியாமல் சேலை தடுக்கியும் நீண்ட கூந்தல் மரக்கிளைகள் மாட்டியும் இறந்துபோனார்கள் என்னும் எதார்த்தநிலைமைகளையும் கணக்கிலெடுக்கவேண்டும். என்றபோதும் வேறுமாதிரியும் உரையாடிப் பார்க்கலாமே.

18 உரையாட வந்தவர்கள்:

  1. லக்கிலுக் said...

    //ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை.//

    பத்தாவது படிக்கும் போது மாறுவேடப் போட்டிக்காக மிடி அணிந்திருக்கிறேன். உதட்டுச்சாயம் பூசியிருக்கிறேன் :-)))))

  2. Anonymous said...

    நல்ல வாசிப்பனுபவத்தை தந்தீர்கள்...

    அப்புறம்

    ///தட்டையாக அணுகவேண்டாம்///

    அப்படீன்னா ?

  3. Chittoor Murugesan said...

    I agree with Your openion. Please continue this.

  4. குசும்பன் said...

    எனக்கு மிகவும் பிடித்த ஓசோவை போட்டு கிழித்து இருக்க போகிறீகள் என்று படிக்க ஆரம்பிச்சேன், நல்லவேளை :)

  5. மு. சுந்தரமூர்த்தி said...

    //இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//

    It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.

  6. Anonymous said...

    Hi!
    I really enjoyed this article! Coming from a remote village in Coimbatore, I got introduced to OSHO's books and speeches (in cassette form) when I was in college by Kamal Haasan (being his die-hard fan, I read his interviews a lot - still rate him as the BEST in giving A COMPLETE interviews!)

    He wanted people to enjoy what they do. In one of his speeches he said: "If you like a game, play for enjoying the game (any game) - do not play for WINNING - becuase if you do then it becomes a JOB and you stop ENJOYING the game!!!
    How true!!

    He was mis-understood as a "sex-samiyAr"!! His idea was that if you can get that(sex) out-of-the-way a lot of things can be done!! The path he proposed was NOT the best one, though - I guess!!

    Like I read in the interview - OSHO is a RARE MIX - santhnam + sAkkadai!! (Though second part I don't completely agree - but he still had huge flaws - I think).

    Periyar on the other hand - talked about "MANITHAM" - is in a LEAGUE OF HIS OWN!! NOT MANY CAN REACH HIS HEIGHTS!!

    That's my take!

    But good write-up! Keep it up!

  7. மிதக்கும்வெளி said...

    அது தெரியாமலேதான் அதியமானின் பார்வை தட்டையானது என்று பின்னூட்டம் போட்டீர்களா ரவி?

  8. ROSAVASANTH said...

    voice on wings பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.


    http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html

    சுகுணாவின் பதிவை படிக்காமல் இந்த பதிவை படித்து, மேலே உள்ள ஆங்கில கருத்து ஓஷோவினுடையதாக நீங்கள் சொல்லி விமர்சிக்கிறீர்களோ என்று குழம்பி, தெளிவு வேண்டி பின்னூட்டம் இடப்போய், நல்ல வேளையாய் எழுதும் முன் சுகுணா பதிவிற்கு சென்று படித்ததால் இப்போது புரிகிறது.

    மனித வரலாற்றில் பேசிய சமத்துவம், மேலும் மற்ற எல்லா வகை விடுதலை கருத்துக்களுமே ஒரு வகையில் இயற்கையானது என்று அந்தந்த காலகட்டத்தில் கற்பித்து கொண்ட விஷயங்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்கையானது என்றால், அடிமை வழக்கம் கூட இயற்கையானது என்று வாதிட முடியும். இந்த வகை இயற்கையாக இருந்த அடிமை வழக்கத்தை விட்டுதான் நாம் இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம். ஆகையால் என்னத்திற்காக இயற்கையாகவும், இயல்பான பகுத்தறிவு என்று தட்டையாய் தெரிவதையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுப் பார்கலாம். அடுத்து சற்று யோசித்து பார்த்தோமானால் இயற்கைக்கு எதிரானது என்று கருத்துவதும் (உதாரணமாக இனவிருத்தி தவிர்த்த பாலின்பம்) ஒரு வகையில் இயற்கைக்கான சட்டகத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் முயற்சியே. அந்த வகையில் இயற்கையானது அல்லாதது என்று எதுவும் இல்லை என்றும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

    அது சரி, விலங்குகள் `இயற்கையாக அமைந்த' உணர்வுகளின் போக்கில் செயல்படுவதை முன்வைத்து, மனிதன் தன் அறிவு கொண்டு யோசித்து பாலின்பம் மட்டும் போதும்,
    வாரிசு வேண்டாம் என்று முடிவு செய்வது irrationalஆ?

  9. Anonymous said...

    தட்டைக்கு உங்களோட விளக்கம் நல்லா பின்னவீனத்துவமா இருக்கும்னு கேட்டேன்...

    நேத்துலருந்து என்னைசுற்றியிருக்கும் தமிழ்பேசும் நன்பர்கள் மனைவிகள் எல்லாரையும் தட்டையா சிந்திக்காதேள் என்று கொடுமைப்படுத்திட்டேன்...

    தட்டையான்னு ஆரம்பிச்சாலே காத தூரம் ஓடிடறானுங்க...

  10. மிதக்கும்வெளி said...

    சரிதான் ரோசா, மேலும் விலங்குகள் பாலுறவில் இன்பம் அனுபவிக்கிறதா, இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது?

  11. மிதக்கும்வெளி said...

    தட்டையானது என்றால் ஒரு பிரச்சினையின் பல பரிமாணங்களை மறுத்து ஒற்றைப் பரிமாணத்திலேயே அணுகுகிற (அ) புரிந்துகொள்வது.

  12. மு. சுந்தரமூர்த்தி said...

    //ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்கையானது என்றால், அடிமை வழக்கம் கூட இயற்கையானது என்று வாதிட முடியும். இந்த வகை இயற்கையாக இருந்த அடிமை வழக்கத்தை விட்டுதான் நாம் இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம். //

    இந்த ஒப்பீடு சரியல்ல. தேனீக்கள், எறும்புகள் சமூகத்தில் அமைந்த வேலைப்பிரிவுகள் அவற்றின் உடற்கூறியல்/உடலியல் அடிப்படையில் அமைந்தது. அவைகளாக ஏற்படுத்திக்கொண்டதல்ல. இயற்கையானது. விரும்பினால் மாற்றிக்கொள்ளக்கூடியதல்ல. மாறாக மனித சமூகம் ஒத்த உடற்கூறியல்/உடலியல் அமையப்பெற்றிருந்தாலும் தன் "அறிவு" கொண்டு சிந்தித்து ஆண்டான்/அடிமை, முதலாளி/தொழிலாளி, மேல்ஜாதி/கீழ்ஜாதி என்று செயற்கையாக ஏற்படுத்திக்கொண்டது. இயற்கையானதல்ல. ஆகையால் மாற்றக்கூடியது, மாற்றவேண்டியது.

    பாலுறவு vs கருத்தரித்தல் குறித்து என்னுடைய மேலதிக கருத்துக்கள்
    http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html

  13. Anonymous said...

    கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத் தயவுசெய்து தட்டையாக அணுகவேண்டாம். ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார். குறிப்பாக உடை விசயத்தில் பெண்களுக்கு மிகவும் சவுகரியமானதும் ஆபத்தில்லாததும் சுடிதார், பேண்ட் - சட்டை மாதிரியான உடைகளே. சுனாமியின் போது நிறையப் பெண்கள் ஓடமுடியாமல் சேலை தடுக்கியும் நீண்ட கூந்தல் மரக்கிளைகள் மாட்டியும் இறந்துபோனார்கள் என்னும் எதார்த்தநிலைமைகளையும் கணக்கிலெடுக்கவேண்டும். என்றபோதும் வேறுமாதிரியும் உரையாடிப் பார்க்கலாமே.

    Tsunami does not happen daily.
    Why should men be the model for
    women in dress, hair style. Why
    cant it be other way around. There is more to dress than convenience.
    Who decides which is convenient
    for whom. Univeralising norms
    of males is not a solution.
    Leave it to women to decide which is comfortable for them. Periyar and his followers like you are
    irrational in these matters.
    Whats wrong if men grew long hairs
    at the back.

    ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார்.
    This is nonsense, he wanted women to dress and grow short hair as men
    do.By this the very idea of male/
    maleness is elevated as an universal norm.
    பத்தாவது படிக்கும் போது மாறுவேடப் போட்டிக்காக மிடி அணிந்திருக்கிறேன். உதட்டுச்சாயம் பூசியிருக்கிறேன் :-)))))


    OK, but dont do now and scare others :).

    ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை
    You are confused or simply dont
    understand a thing. Did periyar wear saree ?.

  14. ROSAVASANTH said...

    அய்யகோ, மேலே எவ்வளவு ஆழமான கருத்துக்கள் -அதிலும் நகச்சுவை உணர்வு இழையோட! ரவி ஸ்ரீனிவாசை தவிர, அவருக்கு போட்டியாக யாரும் இவ்வளவு அறிவு பூர்வமான கேள்விகளை கேட்டிருக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக!

  15. Anonymous said...

    Dear friend,
    I posted your article about Periyar and Osho in my web site.
    http://www.awakeningawareness.org/
    thank you

  16. jeshoosho said...

    kadavul iranduvittar endru osho kuuriyathai thavaraga artham kollavendam.plz read more pages

  17. jeshoosho said...

    osho kadavul iranduvittar enru kuuriyathai thavaraga artham kollavendam.athu oruvarukku mattum kuuriya padhil anaivarukkm alla

  18. Anonymous said...

    “…ரஜனீஸ் சாமியும் சந்திரானந்தா சாமியும் வந்து சிற்றின்பத்தின் உச்சியில் மனிதன் முத்தி அடைகிறான் என்றால் அதனையும் பின்தொடர பக்தகோடிகள் உள்ளனர்…”
    t Jeyabalan on January 19, 2011 10:52 am


    I think you can write proper reply to Jeyabalan
    at
    http://thesamnet.co.uk/?p=23871