தமிழ்வெறியர்களும் கன்னடவெறியர்களும்

ஓசோவின்மீது ஈடுபாடு கொண்டு அதனடிப்படையில் Love and peace butthas என்னும் அமைதிக்கான ஒரு குழு அமைத்து இயங்கிவருபவர் நண்பர் மீராபாரதி. இவரை இதுவரை எனக்குப் பழக்கமில்லை என்றாலும் அடிக்கடி Love and peace butthas அமைப்பின்சார்பில் மின்னஞ்சல்கள் வருவது வழக்கம். 'பிரபாகரன்' திரைப்படம் குறித்த தமிழ்த்தேசியர்களின் செயல்பாடுகள் குறித்த அவரது கருத்தில் எனக்கு நூறுசதம் உடன்பாடு உண்டு என்பதால் இங்கே பதிவிடுகிறேன். (அவரது பதிவு சிவப்பு வண்ணத்தில் உள்ளது. அவரது இணையத்தளங்கள் meerabharathy.com
awakeningawareness.org)



தமிழர்களுக்கு எதிரான படம் எனக் கருதப்படும் பிரபாகரன் என்ற சிங்களத்திரைப்படம் துசார பீரிசால் நெறியாள்கை செய்யப்பட்டதும் ஏப்பிரல் 25ம் திகதி உலகளவில் வெளியிட தயாராக இருக்கும் இத் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை.இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களால் இப் படத்தின் தமிழாக்கத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதை தடைசெய்யுமாறும் கேட்டு போரடியது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நெறியாளரை தாக்கியுள்ளார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக எனது சிறு குறிப்பை எழுதுவது எனது பொறுப்பு எனக் கருதுகின்றேன். தமிழ் உணர்வாளர்களின் இவ்வாறான நடவடிக்கைகளும் போக்குகளும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் சால்மான் ருஸ்டி தஸ்லிமா நஸ்ருடின் மற்றும் கேலிச் சித்திரக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டது எனக் கருதமுடியாது. இவர்களும் தமிழ் தேசிய அடிப்படைவாதத்திற்கு விழ்த்துள்ளார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.தமிழ் திரையுலகம் தயாரிக்கும் குப்பைத் திரைப்படங்களில் சிறுவர்களை பெண்களை மற்றும் தலித்துக்களை கேலிசெய்தும் சுரண்டியும் அவமானப்படுத்தியும் வெளியிடுகின்றன. இது தொடர்பாக இத் தமிழ் உணர்வாளர்கள் அமைதியாக இருப்பது ஏன்? இச் சிறுவர்களும் பெண்களும் தலித்துக்களும் தங்களுக்கு எதிரானவை இத் திரைப்படங்கள் ஆகவே இவை தடைசெய்யப்படவேண்டும் எனக் கூறினால் தமிழ் திரை உலகத்திற்கு என்ன நடைபெறும். இது தொடர்பான பிரக்ஞை இத் தமிழ் உணர்வாளர்களுக்கு அடிப்படைவாதிகளுக்கு இருக்கின்றதா?மாறாக இச் சிறுவர்களும் பெண்களும் திலித்துக்களும் அமைதியாக இருப்பதால் இத் தமிழ் திரைப்படங்கள் எல்லாம் சரியானவை என்றோ அல்லது நல்லவை என்றோ அர்த்தமாகாது. இதற்கு எதிராக போராடுவதற்கு இவர்களிடம் அதிகாரம் இல்லலை. ஆனால் இந் நிலைமை; நீண்ட காலத்திற்கு தொடரப்போவதில்லை. ஆப்பொழுது இதற்கு தமிழ் அடைப்படைவாதிகளுமு; உணர்வாளர்களும் பதில் கூறியாகவேண்டும். நமக்கு இப்பொழுது தேவையானது இவ்வாறான மாற்றுக் கருத்தாளர்களின் உரையாடலுக்கான ஒரு களம். யாரும் நமது கருத்துக்களுக்கு ஏற்ப எவ்வகையான திரைப்படங்களையும் வன்முறையில்லாது உருவாக்கலாம். இக் குறிப்பிட்ட கருத்துடன் உடன்பாடில்லாதவர்கள் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகளுக்கு எதிராக பாக்கியராஜா அந்த ஏழு நாட்கள் (இது நல்ல படமோ கருத்தோ என்பது விமர்சனத்திற்கு உரியது) எடுத்ததைப் போல மாற்று திரைப்படங்களை தமது கருத்துக்களுக்கு சார்பாக எடுக்கலாம். அல்லது விமர்சனங்களை முன்வைக்கலாம். இவ்வாறான செயற்பாடே ஆரோக்கயமானதாகவும் வளர்ச்சிக்கு உரிய பாதையாகவும் இருக்கும்.மாறாக தமக்கு உடன்பாடில்லாத கருத்தாளர்களுக்கு எதிராக இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவதோ தடைசெய்யக் கூறுவதோ தமது கருத்துக்களுக்கும் தமக்குமான அழிவை நோக்கிச் செல்வதே என்பதை இத் தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.ஆகவே மாற்றுக் கருத்துக்களை கலந்துரையாடுவதற்கான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குவோம். வுக்ல்டர் கூறியது போல், எனக்கு எதிரான கருத்தை நீ கொண்டிருந்தாலும் அதைக் கூறும் உனது உரிமைக்கான நான் மரணிக்கும் வரை போராடுவேன் என்பதை நாமும் கடைபிடிப்பதே ஆரோக்கியமான வன்முறையற்ற ஒரு மனித வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். மனிதர்களே! நண்பர்களே!காட்டுமிராண்டி கலாசாரத்திலிருந்து விடுபட்டு....மனித நேய கலாசாரத்தை நோக்கி வளர்வோம்.சுக மனிததை நேகிக்க முடியாதவர் சக மனிதரின் கருத்தை மதிக்க முடியாதவர்ஒருபோதும் தனது கருத்தையோ தன்னையோ நேசிக்காதவராகவே இருப்பார்.மாறாக கண்முடித்தனமாக தனது மொழியை கலாசாரத்தை சாதியை மதத்தை நோக்கிய பற்றுதல் மட்டும் இருப்பது சுய அழிவிற்கான பாதை என்றால் மிகையல்ல.
கடந்தகால மொழி காலாசராம் மதம் சாதி பெண்ணியம் ....அனைத்தும் விமர்சனத்திற்கு உரியவை. இவை ஒருபோதும் விமர்சனத்திலிருந்து தப்பமுடியாது. ஏனனில் கடந்த கால வரலாறு ஆணாதிக்கத்தினதும் ஆதிகக்க சக்திகளினதும் வரலாறே. இவர்கள் வரையறுத்ததே இன்று நாம பயன்படுத்தும் அனைத்து விடயங்களும். இதிலிருந்து எப்பபொழுது விடுபடுகின்றோமோ அன்றுதான் நம் சுய விடுதலைக்கான முதல் அடியை எடுத்துவைப்போம். நம் சிந்தனையில் கருத்தில் கலாசராத்தில் ஏற்படும் மாற்றமே எதிர் கால மனித வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அடித்தளம் அமைக்கும்.



இனி நான்....

மீண்டும் கன்னடவெறியர்கள் தமிழர்களின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகின்றனர். குறைந்தபட்சம் காவிரிப்பிரச்சினையில் அவர்கள் அடைவதாய்க் கருதும் பாதிப்பளவு கூட ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தால் கர்நாடகத்திற்குக் கிடையாது. ஆனாலும் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளும், தமிழர்களின் உணவகங்கள் உள்ளிட்ட கடைகளும், தமிழ்ப்பேருந்துகளும் தாக்கப்படுவது தொடர்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கவேண்டிய விசயம் என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்காது. எனினும் நாம் ஒரு முக்கியமான அமசத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பொதுவாக மய்யநீரோட்ட இடதுசாரிகள் - குறிப்பாக சி.பி.எம், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்து இரட்டைவேடம் போடுவதாகக் குற்றம் சாட்டுகிற பலரும் இந்துத்துவவாதிகள் இப்பிரச்சினைகளில் காட்டும் இரட்டைநிலைப்பாடுகள் குறித்து பெரிதாய் விமர்சிப்பதில்லை.

கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா கன்னட வெறியைத் தூண்டிவிடுகிறார். இங்கோ மதுரையில் இந்துமக்கள் கட்சி பெங்களூரிலிருந்து வந்த ரயிலை மறிக்கிறது. சி.பி.எம்மாவது குறைந்தபட்சம் பேரளவிற்காவது தன் கட்சித்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகச் சொல்லும். ஆனால் இந்துத்துவ அமைப்புகளூக்கோ சுயநிர்ணய உரிமையா... மூச்!

இவர்கள் ஒன்றுபட்ட இந்தியத்தேசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி அகண்டபாரதத்திற்கு ஆசைப்படுபவர்கள். இப்போது எங்கே போனது அக............ண்ட பாரதக் கனவு ? தேசமே தெயவமெனில் இப்போது எடியூரப்பாவிற்கு எது தேசம்?

எல்லைப்பிரச்சினை போன்ற பலவற்றால் இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பகை நாடென்றால் கர்நாடகத்திற்குத் தமிழ்நாடு என்ன? இப்போது கர்நாடகத்தில் வசிப்பவர்கள் முஸ்லீம்கள் மட்டுமா?

இத்தகைய பல கேள்விகளின் மூலம் இந்துத்துவவாதிகளின் போலித்தேசியத்தை அம்பலப்படுத்துவதோடு மட்டுமில்லாது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் உரத்த குரலை எழுப்ப வேண்டிய நேரம்.

8 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    கன்னடத்திலுள்ள தலித் அமைப்புகள்,அறிவு ஜீவிகள் இத்திட்டத்தை எதிர்க்கும் கூட்டத்தில்
    பங்கேற்று 10ம் தேதி முழு அடைப்பு
    என்று அறிவித்துள்ளார்கள். அங்குள்ள
    காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணா
    உட்பட பலரும் தமிழ்நாட்டிற்கு எதிராகவே பேசியுள்ளனர்.எனவே
    பாஜகவை மட்டும் குறை கூறுவதில்
    பயனில்லை.அங்கு சிபிஎம்,சிபிஐ
    வலுவாக இல்லை.முல்லைப்
    பெரியார் பிரச்சினையில் கேரளாவில்
    இவை என்ன மாதிரி நடந்து கொண்டன என்று நமக்கு தெரியும்.
    இன்றைய இந்து தலையங்கம்
    கர்நாடகாவில் காட்டப்படும் எதிர்ப்பு
    தவறானது என்கிறது.அதைக் கண்டிக்கிறது.அது போன்ற கருத்தை
    கட்சிகளின் அகில இந்திய தலைமைகள் தெரிவிக்குமா
    என்பதுதான் கேள்வி.

  2. முரளிகண்ணன் said...

    எழுத்தின் வண்ணத்தை அல்லது அளவை மாற்றினால் படிக்க எளிதாக இருக்கும்.

  3. Anonymous said...

    thamiznaatil aatchiyil pangu ketkum congress vaarisugal edhavadhu vaayai thirandhadhaa?


    karunanidhi kadal neer kudineerakum thittathai mudichuttaara?


    ippadi ellaarayum kelvi ketkalam.

    all these politicians should be dumped in bay of bengal.

    -aathirai

  4. மாயன் said...

    கர்நாடகத்தில் பாரதீய ஜனதவிற்கு தேர்தலில் நிறைய ஓட்டுக்கள் வேண்டும்...

    இங்கே பெரிய கட்சிகள் அடக்கி வாசிக்க, சிறிய கட்சிகள் மட்டும் தான் பெரும்பாலும் தாக்குதலில் ஈடுபடுவதை காணலாம்... அவர்களுக்கு தேவை விளம்பரம்...

    ஏன் சாராய தொழில் அதிபர் விஜய் மல்லையாவும் கன்னடர் தானே... தமிழ்நாட்டில் அவருக்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன...அங்கே எல்லாம் சென்று வீரத்தை காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்...

    மராட்டியத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், இப்போது இங்கே, கர்நாடகத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது... எல்லாவற்றிலும் அரசியலும், தனி மனித சுயநலங்களும் மட்டும் தான் இருக்கின்றன....

    அவ்வளவு அக்கறை தமிழ் மக்கள் மேல் என்றால் இங்கே உள்ளூரில் இருக்கும் தமிழர்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கட்டும்... அப்புறம் பெங்களூர் தமிழர்கள் பற்றி கவலைப்படலாம்...

  5. தமிழ் குரல் said...

    எப்படி சிங்கள பேரினவாதியின் கருத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க முடியும்.

    அந்த படத்தில் சொல்லி இருக்கும் செய்திகள்...

    ஈழ தமிழர்கள் வன்முறையாளர்கள்... சிங்களர்கள் அகிம்சாவாதிகள்...

    செஞ்சோலையில் குழந்தைகளை கொன்றது... ஈழ தமிழர்கள்தான்...

    இந்த பொய்களை தமிழகத்தில் பரப்ப வேண்டுமா?

    ஈழ தமிழர்களுக்கு எதிரான வேலைகளைதானே...

    சிங்கள காட்டுமிராண்டிகளின் கறி துண்டுகளுக்கு அலையும் சொரி நாய்கள் காங்கிரஸும்...

    தமிழினம் அழிய வேண்டும் என எண்ணும் பார்ப்பனர்களும் செய்து கொண்டுள்ளனர்...

    தமிழனை திட்ட வேண்டும்... இப்போது சிங்களனையும் அழைக்கிறீர்களா?

    சிங்கள் பேரினவாததிற்கு தமிழ் நாட்டில் இடம் கொடுக்க மானமுள்ள தமிழன் அனுமதிக்க மாட்டான்...

  6. Anonymous said...

    இந்தமுறை கன்னடக்காறனுக்கு பலமான அடி விழுந்து இருக்கு அடுத்த தடவை தமிழன் மேல் கை வைக்க யோசிப்பான், அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு முறைதான் சரி,அதாவது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். இருந்து பாருங்கள் அடுத்ததடவை கன்னடன் தமிழன்மேல் கை வைக்க யோசிப்பான், அடித்த தடவை இதை விட பலமாக அடிபோட்டால் வாழ்க்கையில் தமிழன் மேல் கை வைக்கமாட்டான்.

  7. பொய்யன் said...

    120 B endran enna?

  8. இரா. சுந்தரேஸ்வரன் said...

    எல்லோரின் மீதான அன்பு என்பது எப்போதும் தேசியத்திற்கு (Nationalism) எதிரானதாகவே இருக்க இயலும். (தேசப்பற்றையும்கூட இதேபோல விமரிசிக்கலாம். எங்கும் எல்லைக்கோடுகள் !) தேசியம் என்பதன் சிறு அவதாரமாக, மாநிலம் சார்ந்த இவ்வெளிப்பாட்டைச் சொல்லலாம். Additional reading on Nationalism vs Patriotism (do a google) would be interesting.