கருத்துரிமைக்கு கல்தா

பொதுவாக நான் தணிக்கையில் நம்பிக்கையற்றவன். கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை உடையவன் என்று பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறேன். அந்த வகையில்தான் பாலா உள்ளிட்ட பலரது பின்னூட்டங்களையும் அனுமதித்து வந்திருக்கிறேன்.


நான் சாதி, இந்துத்துவம், ஆணாதிக்கம், முதலாளியம் ஆகியவற்றிற்கு எதிரானவன். அத்தகைய போக்குகளையே என் எழுத்துக்களில் கண்டிருப்பீர்கள். ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்துள்ளவர்களோடும் சாத்தியப்பட்டவரை உரையாடியே வந்திருக்கிறேன்.


குறிப்பாக எனது 'பார்ப்பனர்களைப் பாதுகாத்த பெரியார்' பதிவில் இந்த அணுகுமுறையையே கையாண்டிருக்கிறேன். ஆனால் ஒரு உரையாடலும் நடக்கிறபாடாய்த் தெரியவில்லை. மாறாக முன் தீர்மானங்களும் சாதியப்பிடிவாதங்களுமே மீண்டும் மீண்டும் பல்லிளிக்கிறது.


பாலாவைப்பொறுத்தவரை அவர் எந்த பதிவையும் அறிவார்ந்த விவாதங்களோடு எதிர்கொள்வதில்லை. ஒருமுறை ஒரு நண்பர் கேட்டார், "விடாது கருப்பையெல்லாம் நீக்குகிறார்களே, பாலாவை நீக்கமாட்டார்களா? என்று. நான் சொன்னேன். "பிளாக்கே இல்லாதவரை எப்படி நீக்குவது?".


பாலாவின் நோக்கம் உண்மையிலேயே எழுதுவதாயிருந்தால் அவர் தனி வலைப்பதிவை ஆரம்பித்து எழுதலாம். ஆனால் அவர் கழிப்பறைகளில் எழுதிதள்ளுவதைப்போலவே என் பிளாக்கைப் பயன்படுத்துகிறார். பாலாவின் இத்தகைய மனநோயைப் புரிந்துகொள்கிறேன்.மேலும் உலகத்தில் ஆகக்கொடிய மனநோய் சாதிதான் என்பதையும் அந்த மனநோய் பாலாவிடம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் பாலா எழுதுவதற்காக நான் கழிப்பறைகள் கட்டிக்கொண்டிருக்கமுடியாதே?.


மேலும் என் மரணத்தின் ருசி என்ற பதிவில் ஒரு நண்பர் 'எரோடிக் பிளாக்' என்று பின்னூட்டம் போடுகிறார். அந்த சுட்டியைத் தொடர்ந்து சென்றால் நிர்வாணப்படங்கள் காட்சியளிக்கின்றன. எரோட்டிக் பிளாக் பார்ப்பதெல்லாம் நல்லவிஷயம்தான். ஆனால் அதை விளம்பரம் செய்வதற்கு என் பிளாக்தானா கிடைத்தது? பாலா போன்றவர்கள் தனியாக பிளாக் ஆரம்பித்து இத்தகைய நற்பணிகளைத் தொடரலாமே.


ஆகவே நண்பர்களே வேறுவழியேயில்லாமல் இனி வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யலாம் என்றெருக்கிறேன். இதில் எனக்கு சம்மதமில்லை என்றபோதும் இதைச் செய்ய நேர்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. கொள்கைகளைச் சிலகாலம் நடைமுறைக்காக தளர்த்திக்கொள்ளலாம் என்பதை சமூக இயங்கியல் எப்போதும் நிரூபித்தே வந்திருகிறது.

இது தற்காலிகமான முடிவுதான் என்றாலும் இந்த முடிவு எடுத்ததற்காக வருந்துகிறேன்.

4 உரையாட வந்தவர்கள்:

 1. கரு.மூர்த்தி said...

  ஆக நிஜமான மன்நோயாளி அன்னானுமஸ் என்ற பெயரில் என்ன எழுதினாலும் பிரசுரிப்பீர் , ஆனால் பாலாவின் கேள்விகளை எதிகொள்ள முடியாவிட்டால் அதை கழிப்பறை வாசகம் என்பீர் , நல்ல நியாயம் , பெரியார் சொல்லி கொடுத்தை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளீர் , வாள்க கருத்து சுதந்திரம் .

  ஆனால் எங்கள் "கருப்பு" அனானிமஸ் போடும் எரோடிக் பின்னுடங்களை மட்டுறுத்தினால் நிறைய தமிழ் வார்த்தைகளை உங்களுக்கு சொல்லித்தருவார் , அப்போது தெரியும் கழிப்பறை வாசகம் என்றால் என்னவென்று

 2. Anonymous said...

  கொள்கைகளைச் சிலகாலம் நடைமுறைக்காக தளர்த்திக்கொள்ளலாம் என்பதை சமூக இயங்கியல் எப்போதும் நிரூபித்தே வந்திருகிறது.

  Come on, you have the right to
  moderate the comments.But dont
  create a scence to do that.Your
  post sounds pathetic.

 3. மிதக்கும்வெளி said...

  கருமூர்த்தி

  பாலா மனநோயாளியா, அனானிமஸ் மனநோயாளியா என்பதல்ல எனது கவலை. மனநோயாளிகளை நான் புறக்கணிப்பதுமில்லை. பாலாவின் கேல்விகளை எதிர்கொள்ள முடியவில்லை என்பதை நீங்கள் சென்றவாரம் சொல்லியிருந்தால் அது 2006ஆம் ஆண்டின் சிறந்த ஜோக்காக இருந்திருக்கும். என்ன செய்வது?
  பாலா அப்படி என்ன கேட்டுவிட்டார்? எனக்கு முன்ன நவீனமாக இருக்கிறதா, பின்னயா, பெரியார் மாமா என்றெல்லாம் உளறிக்கொட்டுவதுதான் ஆரோக்கியமான உரையாடல் என்றால் நீங்களும் அவரும் சேர்ந்தே உளறலாம்.
  எனக்குக் கெட்டவார்த்தைகள், நல்ல வார்த்தைகள் என்ற வகைப்பாட்டிலும் நம்பிக்கையில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்னைக்கெட்டவார்த்தையில் திட்டினால்கூடப் பரவாயில்லை. ஆனால் சம்பந்தமில்லாமல் 'எரோடி பிளாக்' போடுவதெல்லாம் யாரும் வாசிகக்கூடாது என்ற நல்லெண்ணம் தவிர வேறென்ன? (இந்தப் பதிவிற்குப் பின்னும் கூட வேறொரு பதிவுக்கு வந்த பாலாவின் பின்னூட்டங்களைப் பிரசுரித்திருக்கிறேன்.)

  என்னுடைய கேள்வியெல்லாம் பாலா தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்து ஏன் உளறக்கூடாது என்பதுதான். ஆமாம், இவளவு வரிந்துபேசுகிறீர்களே, நீங்கள்தான் பாலாவா?

 4. கரு.மூர்த்தி said...

  //என்னுடைய கேள்வியெல்லாம் பாலா தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்து ஏன் உளறக்கூடாது என்பதுதான். ஆமாம், இவளவு வரிந்துபேசுகிறீர்களே, நீங்கள்தான் பாலாவா? //

  ஆகவே தனியாக பிளாக் இல்லாதவரெல்லாம் பின்னூட்ட கூடாது கூடாது என்கிறீர்கள் , சரி விடுங்கள் , (நாலு பேர் படிக்கதானே பதிவு போடுறோம் ? அப்படியில்லையோ?)

  //ஆமாம், இவளவு வரிந்துபேசுகிறீர்களே, நீங்கள்தான் பாலாவா? //

  1. டோண்டு
  2. முகமூடி
  3. கால்கரி
  4. மாயவரத்தான்
  5. நேசகுமார்

  இப்போ பாலா ,

  சுமாரா 6 பேரா நான்னுன்னு கேள்வி வந்தாச்சு வேறுவேறு இடங்களில் இதுவரை ,

  ஆனா நாந்தான் "கருப்பு" அனானியான்னு ஒருத்தரும் கேக்கவே மாட்டன்றாங்க .