நாடிழந்தவளுடன் உரையாடல்உன்னை அகதி என்றழைக்க நாகூசுகிறது. அது என்னையே நான் வேசிமகன் என்றழைப்பதுபோலத்தான். ஆனாலும் ஒரு வசதிக்காக அகதி என்றழைக்கிறேன். இதன்மூலம் என் தாயைப் பலமுறைப் பலாத்காரித்த குற்றத்திற்கு ஆளாகிறேன். ஒவ்வொரு தேசமும் தனககான அகதிகளை உற்பத்தி செய்கிறது. தேசங்கள் குடிமக்களை உருவாக்குவதுபோலவே அகதிகளையும் உருவாக்குகிறது. அவர்களைத் தன் புறவாசலில் குடியேற்றுகிறது அல்லது நாடுகடத்துகிறது. கடத்தப்பட்ட புறதேசங்களில் அவர்கள் புறவாசல்களில் குடியமர்த்தப்படுகிறார்கள்.ஒருவகையில் நீ அகதியாய் இருப்பது நல்லதுதான். உன் சொந்த தேசத்தில் உனக்கென்று சாதியடையாளம், மத அடையாளம், வர்க்க அடையாளம் இருந்தது. இப்போது உன்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம் அகதி என்னும் அடையாளம் மட்டுமே. துயரமானதுதான், ஆயினும் மற்றடையாளங்கள் அழிந்திருக்கின்றன அல்லது குறைக்கப்பட்டிருகின்றன. இது நல்லதுதான். நான் இப்படிச் சொல்வது உனக்கு அதிர்ச்சியளிக்கலாம், மேலும் அது என் மன வக்கிரம் என்றும் நீ குற்றம்சாட்டலாம். அது உண்மையாகவுமிருக்கலாம். உனது உறவு எப்போதும் என்னைத் துயரத்துக்குள்ளாக்குகிறது. உன்னைப்போல நான் ரத்தத்தில் கைநனைத்த சிசுக்கள், காகங்கள் கொத்தித்தின்னும் பிணங்கள், அடையாளம் தெரியாது சிதைக்கப்பட்ட பெண்ணுடல்கள், பார்த்துப் பார்த்துச் சேர்த்து சேர்த்து கட்டி சிதிலமடைந்த வீடுகளைக் கண்டதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மதிப்பீடுகளாலான நாற்காலிகளின் மீதமர்ந்து எதிர்காலம் குறித்த உன்னதக்கனவுகள் குறித்து சிந்திப்பவன். நான் எப்போதும் தேசத்தை மறுத்துவந்தபோதும், தேசம் தனக்கான குடிமக்கள் பட்டியலிலேயே என் பெயரையும் இணைத்திருக்கிறது. நான் எப்போதும் தேசத்துரோகியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குடிமக்களில் ஒருவனாயிருக்கிறேன். இது நிச்சயம் அவமானகரமானதுதான். அதனாலேயே உன்னைக் குற்றவுணர்வோடேயே அணுகவேண்டியவனாயிருக்கிறேன். உன் கண்கள் எப்போதும் என் தலைக்குமேல் தொங்கும் வாள். உன் புன்னகை என் உடம்பெங்கும் ஊர்கிறது ஒரு பூரானைப்போல நெளியும்படியும் இரைமுடித்து வயிறுபுடைத்த ஒரு மலைப்பாம்பைப்போல அச்சமூட்டும்படியும். உன் சினேகிதம் என் நகக்கண்ணில் ஊசியேற்றி தள்ளிநின்றி ரசிக்கிறது. ஒவ்வொருமுறையும் நீ என்னை மலக்குழியில் தள்ளுகிறாய். உன்னோடு கைகுலுக்கும் முன் என் கைகளின் தூய்மையைப் பரிசோதிக்கவேண்டியிருக்கிறது. இப்போது என்னிடம் இருப்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே, உன்னை நான் எப்படி அணுகுவது , பெருந்தன்மையாளனாகவா, குற்றவுணர்வாளனாகவா, அனுதாபியாகவா அல்லது என்னை நேசிக்கிறேன் என்பதால் உன்னையும் நேசிக்கிறேன் என்பவனாகவா?

மாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள்இயக்குனர் சேரனின் மாயக்கண்ணாடி திரைப்படம் இளைஞர்களின் தன்னம்பிக்கைக் கனவுகளைக் குலைத்துவிட்டதாக ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. சேரனும் 'ஏழு நல்ல படங்களைத் தந்த நான் எட்டாவதாக மோசமான படத்தைத் தருவேனா?" என்று படவிளம்பரங்களிலேயே தன்னிலைவிளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. முடிதிருத்தும் ஒரு இளைஞன் திரைத்துறையில் நுழைய முயற்சித்து தோல்வியடைந்து மீண்டும் அதே தொழிலில் தஞ்சம் புகுவதே படத்தின் ஒன்லைன் எனப்படும் ஒற்றைவரிக்கதை. சேரன் தன் திரைப்படங்கள் மூலம் கட்டமைக்கவிரும்பும் தன்னிலைகள் குறித்து சில சுருக்கமான பார்வைகளை முன்வைத்து உரையாடலை வளர்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

சேரனின் முதலிரண்டு படங்களும் விளிம்புநிலையினரைப் பற்றிப் பேசின. 'பாரதிகண்ணம்மா' கள்ளர் பள்ளர் சாதிமுரண்பாடுகள் குறித்து ஒரு காதல் கதைவழியாகப் பேசியது. இத்திரைப்படம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் முக்குலத்தோரால் அதிகம் எதிர்ப்புக்குள்ளானது. அப்படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதும் தமிழகத்தின் இரு சாதிகள் குறித்த வெளிப்படையான விவரணைகளோடு சாதிமுரண்பாடுகள் பற்றிப் பேசிய ஒரு சில படங்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று. கதையின் இறுதியில் கள்ளர்சாதிப்பெண் இறந்துபோக காதலித்த பள்ளர்சாதி இளைஞன் உடன்கட்டை ஏறுகிறான். தேவர்கள் திருந்துகின்றனர்.

இரண்டாவது படமாகிய பொற்காலம் ஊனமுற்றவர்களின் துயரம் மற்றும் வாழ்க்கை குறித்து கவனஞ்செலுத்தியது. ஊனமுற்றவர்கள் என்பவர்கள் நகைச்சுவைக்கான பயன்படுபொருள்களாகவே பயன்படுத்தப்பட்டுவந்த தமிழ்த்திரையில் அவர்களின் பிரச்சினையை சற்றேனும் கரிசனத்தோடு அணுகியது. அதிலும் குறிப்பாக ஊமைப்பெண்ணின் அண்ணனிடம் வடிவேலு "நான் கருப்பா இருக்கேன்னுதானே என்னிடம் கல்யாணம் செஞ்சுக்கிறியா?ன்னு கேட்கலை?" என்ற கேள்வி மிகநுட்பமாக நமக்குள் உறைந்திருக்கும் ஆதிக்கக்கருத்தியல் மற்றும் வன்முறை குறித்துக் கேள்வியெழுப்பியது. ஆனால் இந்தப் படத்தின் இறுதியிலும் அந்த ஊமைப்பெண் இறந்துபோகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறு இவ்விரண்டு படங்களிலும் வெளியிலிருந்துதான் என்றாலும்கூட விளிம்புநிலை மக்களைப் பற்றிப் பேசிய சேரனின் கருத்தியல் அடிப்படைகள் அவரது மூன்றாவது படங்களிலிருந்து தன்னைத் திட்டவட்டமாக வெளிப்படுத்திக்கொண்டது.

அவரது 'தேசியகீதம்' படம் திராவிட இயக்கங்களின் ஆட்சியால்தான் தமிழகமே கெட்டுப்போனது என்னும் நடுத்தரவர்க்க மனம் சார்ந்தத விமர்சனத்தை முன்வைத்தது. அதன்மூலம் காமராஜர் ஆட்சி, காங்கிரஸ் பொற்காலம், கக்கன் போன்ற தூய்மைவாதப் படிமங்களின் மீதான ஏக்கத்தை நிறுவியதன்மூலம் தனது நடுத்தரவர்க்கக் கருத்தியலுக்கு நியாயம் செய்தார் சேரன். திராவிட இயக்கங்கள் கடும்விமர்சனத்துக்குரியவே. ஆனால் அதற்கான மாற்று நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தூக்கிபிடித்த காங்கிரஸ் ஆட்சியல்ல. ஊழலற்ற ஆட்சி, நேர்மை ஆகிய கருத்துருவங்களின் அடிப்படையிலேயே இந்திய நடுத்தரவர்க்க மனம் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடுமையானதல்ல. இவர்களைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கும் ப.சிதம்பரமும்தான் முன்னுதாரணங்கள். இத்தைகைய அரசியலையே தேசியகீதம் முன்வைத்தது.

சேரனின் 'வெற்றிக்கொடிகட்டு' திரைப்படம் அரபுநாடுகளில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களிடம் தாய்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய சேவை பற்றிப் பேசியது. ஆனால் சேரனின் அறிவுரை அரபுநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் முஸ்லீம் இளைஞர்களிடம்தானே தவிர அய்.அய்.டி மற்றும் உயர்தொழில்நுட்பக்கல்வி படித்து காலை நான்குமணிக்கே அமெரிக்கத்தூதரகத்தில் கால்கடுக்கக்காத்துநிற்கும் பார்ப்பன மற்றும் ஆதிக்கச்சாதி இளைஞர்களிடம் அல்ல. மேலும் குறிப்பாக துபாயில் கக்கூஸ் கழுவுவது தொடர்பான பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவைக்காட்சிகள் மலமள்ளுபவர் பற்றிய அவரது சாதிய உளவியலையே வெளிப்படுத்தின. மீண்டும் ஒருமுறை மலமள்ளுவது இழிவானது, மலமள்ளுபவன் இழிவானவன் என்பதை பொதுப்புத்தி உறுதி செய்தது.

சேரனின் பாண்டவர்பூமி கிராமத்தைக் காதலோடு அணுகியது. இயற்கை சூழ்ந்த வாழ்க்கையை மய்யமாகக் கொண்ட கிராமங்கள் நேசிக்கத்தகுந்தவையே. ஆனால் நிலப்பிரபுத்துவமும் சாதியவன்முறைகளும் அதிகம் நிறைந்துள்ள பிரதேசம் கிராமம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனாலேயே அம்பேத்கர் தலித்துகளிடம் 'கிராமங்களைக் காலிசெய்யுங்கள்' என்றார். ஆனால் சேரனின் படங்களோ சாதிமுரண் மற்றும் நிலமானிய உறவுகள் குறித்து எவ்வித விமர்சனமின்றி கிராமங்களை ரொமண்டிசத்தோடேயே அணுகியது. பிழைப்பிற்காய் நகரம் நோக்கி நகர்ந்துவிட்ட நடுத்தரவர்க்கத்தின் மாயைக்கனவுகளுக்கு வலுசேர்த்தது பாண்டவர்பூமி. ஆட்டோகிராப்பும் கிராமத்து வாழ்க்கை, இழந்த காதல்கள் என இதே பணியையே செய்தன.

தவமாய்த்தவமிருந்து படத்திலும் குடும்பத்தின் சாதிய உளவியல், அது பெண்களின் மீது செலுத்தக்கூடிய வன்முறை ஆகியவை குறித்து எந்த்கேள்வியும் எழுப்பாமல் குடும்பம்குறித்த புனிதப்பிம்பத்தைக் கட்டியெழுப்பியது. ஆக பொதுவாகவே சேரனின் திரைப்படங்கள் இழந்துபோன நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் குறித்த புனிதக்கனவோடு காத்திருக்கும் தூய்மைவாத நடுத்தரவர்க்கக் கருத்தியலையே மய்யமாய்க் கொண்டவைகள். அத்தைகய தன்னிலைகளையே சேரன் தன் படத்தின் மூலம் உற்பத்தி செய்யவும் உறுதிப்படுத்தவும் செய்கிறார்.

இப்போது மாயக்கண்னாடி படத்திற்கு வருவோம். ஊடகங்கள் குற்றம் சாட்டுவதில் நியாயம் உள்ளதா? சேரனின் முதலிரண்டு படங்களுமே துன்பியல் முடிவை உடையவை. ஆனால் காதலில் வெற்றிபெறாமல் செத்துப்போன தலித் இளைஞனும் திருமண முயற்சி கைகூடாமல் இறந்துபோன பெண்ணும் ஊடங்களின் அக்கறைக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில் அவையும் நடுத்தரவர்க்க வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட ஊடகங்கள். அவை நிலவும் கருத்தியலுகு வலுசேர்ப்பவையும்கூட. ஆனால் மாயக்கண்ணாடியில் பிரச்சினையே வேறு.

இன்று தொழிலுக்கும் சாதிக்குமான உறவு என்பது தளர்ந்திருக்கிறது. பூசைத்தொழிலிருந்து பார்ப்பனர்களும் 'அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர்' சட்டத்தின்மூலம் பெருமளவு அகற்றப்படுவதற்கான சாத்தியமேற்பட்டுள்ளது. தலித்துகளிடமும் அருந்ததியர்கள் எனப்படும் தோட்டிகளே மலமள்ளும் சாதியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் சேவைச்சாதிகள் என அழைக்கப்படும் மருத்துவர், வண்ணார் ஆகியோர் தங்கள் சொந்தச்சாதியோடு இணைந்த தொழிலோடு இன்னமும் பிணைக்கப்பட்டுள்ளனர். அப்படிப்படட் நாவிதப்பின்னணியைக் கொண்ட இளைஞனை மீண்டும் அவனது குலத்தொழிலில் தள்ளுவதே மாயக்கண்னாடியில் நாம் விமர்சிக்கவேண்டியதே தவிர அப்துல்கலாம் முதல் எம்.எஸ்.உதயமூர்த்திவரை நடுத்தரவர்க்க மகான்கள் உற்பத்தி செய்துள்ள தன்னம்பிக்கைக் கதைகள் தகர்ந்துபோவதைப் பற்றியல்ல.

வலைப்பதிவாளர்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்அமுக நண்பர்கள் ரொம்ப சீரியசான பதிவுகளைப் பார்த்து மண்டை காய்கிறார்கள். எங்களுக்குக் கும்மியடிக்க ஏதாவது பதிவு போடக்கூடாதா என்று கோரிக்கை வைக்கிறார்கள். என்ன செய்யலாம்?

செந்தழல்ரவி போல 'சிக்கன் உப்புமா செய்வது எப்படி?' என்று மொக்கைப் பதிவுபோடலாம். அல்லது வரவணையான்போல

"இதயத்தில் அறுவைச்சிகிச்சையாம்.
மறுத்துவிட்டேன்.
இதயத்தில் இருக்கும் உன்மீது
கத்திபடலாமா?"
என்று மொக்கைக்கவிதைகள் எழுதலாம், அல்லது பாலபாரதி போல 'நான் ஜட்டிபோடுவதை நிறுத்திவிட்டேன்' என்று சுயவிளம்பரப்பதிவு போடலாம். ஆனால் அத்தகைய திறமைகள் இல்லாததல் ஏதோ என்னாலான மொக்கை மற்றும் 100% கும்மிப்பதிவு.

வலைப்பதிவாளர்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள்..

செந்தழல் ரவியிடம் : 'விருந்து' படிச்சா வேலைகிடைக்குமா?

பாலபாரதியிடம் : பள்ளியில் படிக்கும்போது ஜெயராமன் என்ற ஆசிரியரை மிரட்டினீர்களாமே, உண்மையா?

பொன்ஸிடம் : உங்களுக்கு தமிழில் பிடித்த பெண்கவிஞர் சல்மாவாமே?

டோண்டு ராகவனிடம் : உங்களுக்கு அதிகம் பிடித்த பலகாரம் போண்டாவா, போளியா?

லக்கிலுக்கிடம் : நீங்கள் அதிகம் விரும்பும் தலைவர் கலைஞரா, போலிடோண்டுவா?

வரவணையானிடம் : எப்போது 'கவிதை' எழுதுவீர்கள்?

தூயாவிடம் : சூடான ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சயந்தனிடம் : இதற்குமுன்னால் சவுண்ட்சர்வீஸ் வைத்திருந்தீர்களா?

தமிழ்நதியிடம் : அதிகம் மெகாசீரியல் பார்ப்பீர்களா?

டி.பி.ஆர் ஜோசப்பிடம் : அடிக்கடி திரும்பிப்பார்த்தால் கழுத்து வலிக்காதா?

சுகுணாதிவாகரிடம் : அதே கேள்விதான்
(நீங்கள் நல்லவரா, கெட்டவரா?)

முட்டாள்களின் தேசம்
கனவுகாணச்சொன்ன ஒரு முட்டாளின்
தலைமையில்தான் இந்த தேசம்
இருக்கிறதென்பதில் என்ன பெருமை?
பசி, பலாத்காரம்,பீ, மூத்திரம்,
யோனியில் நுழையும்
போலிஸின் குண்டாந்தடி,
அகதிக்கு எறியப்படும் எச்சில்பருக்கைகள்,
வயதுக்கு வருமுன்பே
திரைகிழிக்கும் விபச்சாரம்,
உள்ளாடை களைந்து
என் புடுக்கில்
மத அடையாளம் தேடும் உளவறிவு
இவையெல்லாம் வந்துதொலைக்கும்போது
கனவு என்ன மயிரிலா வரும்?
ஒரு காய்ந்த ரொட்டித்துண்டுமின்றி
காற்றையுண்டு உறங்குபவனுக்குத்
தூக்கமே வராதே,
கனவென்ன குதம் வழியா வரும்?

கருப்பையின் சாவியை மூடியும் திறந்தும்...குழந்தைகளைப் பெற்றுத்தள்ளி
பூமியை அசுத்தப்படுத்தாதீர்கள்
குறைந்தபட்சம் குழந்தைகளையாவது.
பிறக்கும்போது குழந்தைகள்
குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன.
வளர்ந்து தொலைக்கும்போது
அவை உங்களைப் போல் ஆகிவிடுகின்றன.
யோனி, கருப்பை
ஏதேனும் ஒரு துவாரம்
அடையுங்கள்.
சாக்கடை நிரம்பி வழிந்து
வாழ்வு நாறுகிறது.

------------

நீ அணுகுண்டுபோடு,
காற்றில் விஷம் கல,
நீரை கூட்டிக்கொடு,
பாக்கெட்டில் அடைத்து
என் தண்ணீரையே
எனக்கு
ஊ..க்கொடு.
ஒவ்வொரு உயிராய்க் கொன்று
முக்கோணங்களின் அவசியம் பற்றி
நியூஸ்ரீல் தயாரி.
உன் ஆணுறையை மலக்குழியில் தூக்கியெறிகிறேன்.
நாளை உன் முகத்தில் காறியுமிழவாவது
எனக்குக் குழந்தைகள் வேண்டாமா?

பூமி ஒரு வாட்டர்பாக்கெட்டாய் உருமாறியபோது..தேனீர்க்கடையில்
அன்பாய்த் தண்ணீர் வாங்கிக்
குடித்த காலம் போயிற்று.
ஒவ்வொரு வாட்டர் பாக்கெட்டையும்
உறிஞ்சிக்குடிக்கும்போதும்
வற்றிப்போன தாயின் முலையையும்
வெள்ளைக்காரனின் குறியையும்
சப்புவதாய் உணர்கிறேன்.

முகம் பார்க்கப்படும் காலடிச்சுவடுகள்நீங்கள் காதலிக்கும்
உங்கள் காலடிச்சுவடுகள்
அழிந்துபோகின்றன
அலையாலோ
மழையாலோ
சிறுகுழந்தையின் மூத்திரத்தாலோ.
அவை வெறும்
மணல்துகள்தான் என்பதையே
அவை சொல்லிச்செல்கின்றன.

துளிஒரு தீக்குச்சியால்
காட்டை அழிக்க முடியுமெனில்
காடு பெரிதா? குச்சி பெரிதா?
தீக்குச்சி என்பதும்
காட்டிலிருந்தே வந்தது

புகையில் உதிரும் சாம்பல்
இருப்பற்று அலையும் வெளியில்
விரயமாகும் பாடலுக்காய்
வருந்திச்சாகுமொரு மனமெனில்
அதன் காது திருகிக்
கண் திருகி
நடுச்சாலையில் போட்டு நசுக்கித்தேய்த்து
பெயர்தெரியாப் பறவையின்
கூடுதேடி அலைந்தபடிப்
போய்க்கொண்டிருக்கும்
ஒரு நாடோடி ஆவி.

நெருப்பைத் தழுவுதல்
செந்தூரமாய்ச் சிவந்த
அடிவானத்தை நக்கிப்
பறக்கிறதொரு பறவை.
அதன் அடிவயிற்றுக கதகதப்பில்
சூடேறும் வானின் சில துளிகளைக்
கொண்டுவந்து என் கிடங்கில் போடு.
தீப்பிடித்து எரியட்டுமிந்த பூமி

ஷகீலா திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்சமீபத்தில் ஏப்ரல் தீராநதி இதழில் எம்.ஜி.சுரேஷின் 'தமிழ்த்திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இறுக்கமான இலக்கியச்சூழலில் மனம்விட்டுச் சிரிக்க உதவுபவை சுரேஷின் கட்டுரைகள். இந்தக் கட்டுரையும் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த பின்நவீனத்துவத் திரைப்படங்களாக சுரேஷ் குறிப்பிடும் படங்கள் அலைபாயுதே, ஆயுத எழுத்து, வேட்டையாடுவிளையாடு, காக்க காக்க.

இதில் வேட்டைவிளையாடு, காக்க காக்க திரைப்படங்களில் கதை என்கிற ஒன்று இல்லை (அ) எதிர்க்கதை /கதையற்ற கதை இருக்கிறது. எனவே அவை பின்நவீனத் திரைப்படங்கள் என்கிறார் சுரேஷ்.

அலைபாயுதே படத்தின் தொடக்கக்காட்சியில் கதாநாயகியைத் தேடி ரயில்நிலையத்திற்கு வருகிறான் நாயகன். ஆனால் அவள் வரவில்லை. நாயகனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. காட்சியமைப்புகள் முன்பின்னாக மாற்றப்பட்டிருப்பதால் அது ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம் என்கிறார் சுரேஷ். புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தபோது தினத்தந்தியில் தோழர் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.

சீன் படங்கள், பிட்படங்கள், பலான படங்கள் என்றழைக்கப்படும் பாலியல் திரைப்படங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. (பெண்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை). ஆனால் அவை சுரேஜின் லாஜிக்படி பார்த்தால் நிச்சயமாக பின்நவீனத்துவத்திரைப்படங்கள்தான்.

அவைகளுக்கான கோட்வேர்ட் 'சாமிப்படங்கள்'. (கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை தியேட்டர் கவுண்டரில் 'சாமிப்படம்'தான் ஓடுகிறதா என்று கவுண்டரில் உறுதிப்படுத்திக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தால் உண்மையிலேயே 'சரணம் அய்யப்பா' படம் ஓட அலறியடித்து ஓடிவந்தது தனிக்கதை). இதன்மூலம் புனித அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

படத்தின் அறிமுகத்தில் ஒரு பெண் நடித்துக்கொண்டிருப்பார்.ஆனால் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளுக்குப் பிறகு 'பிட்' அல்லது 'சீன்' என்றழைக்கப்படும் பாலுறவுக்காட்சியில் 'நடித்துக்கொண்டிருக்கும்' பெண்ணின் அறிமுகக் காட்சியே இடைவேளைக்குப் பின் தான் வரும் அல்லது வராமலே கூடப் போகலாம். மூன்றாவது காட்சி ஆறாவது காட்சியாகவும் ஆறாவது காட்சி பதினொன்றாவது காட்சியாகவும் முன்பின்னாக மாற்றப்பட்டு ஓட்டப்படும். இதன்மூலம் சீன்படங்கள் பிரதியின் ஒழுங்கைக்குலைக்கின்றன.

அதேபோல சமயங்களில் பிட்டில் இடம்பெறுபவர்களுக்கும் படத்திற்குமே சம்பந்தமிருக்காது. இப்படியாக இப்படங்களில் நான்லீனியர் தன்மை அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில் தமிழ்ப்படங்களில் இங்கிலீஸ் பிட் ஓடும், இங்கிலீஸ் படங்களில் தமிழ் பிட் ஓடும். ஆகமொத்தம் பிட்கள் மொழி, தேசம் ஆகிய எல்லைகளைத் தகர்க்கின்றன.

ஒருசில படங்களில் சென்சார் போர்டு பிரச்சினைக்காக ஆங்கில வசனங்களை இந்தியநடிகர்கள் பேசி நடித்திருப்பார்கள். இவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டால் நிறுத்தி நிதானமாக பள்ளிகளில் essay ஒப்பிப்பதைப் போல ஆங்கிலம் பேசுவார்கள். இவை ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்களாக இருப்பதால் தமிழர்கள் இந்தப் படங்களுக்குத் தொடர்ந்து போய்த் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

இந்தப் படங்களில் கதை என்கிற ஒன்று பெரிதாகத் தேவைப்படாது.ஆனால் கடைசியில் ஏதேனும் ஒரு 'நீதி' சொல்லப்படும். கட்டாயமாக கடைசிக்காட்சியில் யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்க தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்கள். 'சீன்' முடிந்தவுடனே பலர் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ஆனால் எப்படியாவது இன்னும் சில 'சீன்'கள் ஓட்டப்படாதா என்கிற பேராசை உள்ளவர்கள் மட்டுமே தியேட்டரில் இருப்பார்கள். இன்னும் சிலபேர் யாராவது தெரிந்தவர்கள் வந்து அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே எல்லோரும் போகட்டும் என்று காத்திருப்பார்கள்.

ஆகமொத்தம் இத்தகைய பின்நவீனக்கூறுகள் கொண்ட பின்நவீனத்துவத் திரைப்படங்களில் ஷகீலா, ஷகீலாவின் தங்கை ஷீத்தல், மரியா, ரேஷ்மா, பிட்பிரதீபா ஆகிய பின்நவீனத்துவ நாயகிகள் நடித்திருப்பார்கள். (இந்தப் படங்களில் நடிக்கும் ஆண்நடிகர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது அல்லது அதுபற்றிக் கவலையில்லை.)

என் நினைவிலிருந்து தமிழில் வெளியான பின்நவீனத்துவத் திரைப்படங்கள்.

1. சாயாக்கடை சரசு
2. மாயக்கா
3. அவளோட ராவுகள்
4. அஞ்சரைக்குள்ள வண்டி
5. காமதாகம்
6. மாமனாரின் இன்பவெறி
7.....
8....
9......
.
.
.
.

அமுக ரவுடிகளிடமிருந்து அப்பாவிப்பிராமணர்களைக் காப்பாற்றுவது எப்படி?
இரண்டுநாட்களாக இந்துப்பாசிஸ்ட் ஜடாயுவின் பதிவுகளைப் படிக்கும்போது அவர் ஆழ்ந்த மனக்குழப்பத்திற்கும் அதீத கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

நேற்றைய பதிவில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் ரவுடி என்று திட்டியிருந்தார். செந்திலை அவன் இவன் என்றே ஏகவசனத்தில் எழுதியிருந்தார்.

இன்றைய பதிவில் தமிழ்மணத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அது அவரது சொந்த விசயம் மற்றும் அவருக்கான உரிமையும் கூட. ஆனால் இனி நாய்களும் நரிகளும்தான் தமிழ்மணத்தில் எழுதும் என்கிற ரீதியில் அவர் எழுதியிருப்பதன் மூலம் அமுக ரவுடிகள், பாகச குண்டர்கள் மட்டுமல்லாது இன்னும் கொஞ்சநஞ்சம் தமிழ்மணத்தில் ஒட்டியிருக்கும் பார்ப்பனப் பதிவாளர்கள் மற்றும் இந்த ஆட்டைக்கே வராத 'நடுநிலை'யாளர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார்.

முதலில் அவரது பதிவுகளைப் படிக்கும்போது கோபம்தான் வந்தது. அதுவும் என் பிரியத்துக்குரிய நண்பன் செந்திலைச் சக பதிவர் என்றுகூடப் பார்க்காமல் மோசமாக எழுதுகிறாரே என்று ஆத்திரம் வந்தது. ஆனால் சிறிது யோசித்தால் அவரது கோபத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ளலாம்.

"சென்னையில் வாழ்ந்து வரும் ஒரு பயந்த சுவாமுள்ள அப்பாவி பதிவரை மிரட்டி கையழுத்து வாங்கி ஏதோ பெரிய வீர சாகசம் செய்துவிட்டதாக புல்லரித்துக் கொள்கிறது ஒரு இணைய ரவுடி கும்பல். திராவிட கட்சிகளின் அதே பாணியைப் பின்பற்றும் இந்த கும்பல் அ.மு.க என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பது சாலப் பொருத்தம் தான்." என்கிறார் ஜடாயு. நியாயம்தானே?

"இந்து இளைஞர்களே முஸ்லீம்பெண்களின் யோனிகளை உங்கள் விந்துக்களால் நிரப்புங்கள்" என்று சுற்றறிக்கை அனுப்பி தேசப்பணியையே தெய்வீகப்பணியாக ஆற்றிவரும் ஆர்.எஸ்.எஸ் மரபில்வந்த ஜயராமன் காமக்கதைகளுக்காக ஒரு போலி பிளாக் ஆரம்பிப்பதில் என்ன தவறு?

'காந்தி இறந்தபோது பார்ப்பனர்களைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய' பெரியாரின் வன்முறை வழியைப் பின்பற்றாமல் கடப்பாறையால் மசூதி இடிப்பது, கலவரங்களைத் தூண்டுவது, தன் காமலீலைகளைக் கேள்வி கேட்டார் என்பதற்காக நடுக்கோயிலிலேயே கூலி ஆட்களை வைத்து கொலைசெய்வது போன்ற பல சாத்வீகமான வழிகளை பாலபாரதி போன்ற அமுக ரவுடிகள் அறியமாட்டார்கள். பொன்ஸிற்கும் இந்த சாத்வீகமான வழிகள் தெரிந்திருந்தால் 'அன்பாக' ஜெயராமனைச் செருப்பால் அடித்திருப்பார்.

ஆனால் என்ன செய்வது? இப்போது எல்லை கடந்துவிட்டது. நடந்த தவறுகளைச் சரிசெய்யமுடியாது. ஆனால் இனிமேல் 'அப்பாவிப் பிராமணர்களைப் பாலபாரதி போன்ற அமுக குண்டர்கள்' மிரட்டும் தவறுகளைத் தடுக்க முடியும். எப்படி?

பொன்ஸ் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களுக்காக மிகவும் சிரமப்பட்டு என்றும் அன்புடன் போண்டாதாசன்களைத் தேடி ஜயராமன் அலைவதைத் தவிர்க்க பொன்ஸே அந்த விவரங்களை ஜெயராமனுக்கு அளிக்கலாம்.

இதுமாதிரியான தமிழ்ப்பணி மற்றும் இலக்கியச் சேவைகள் செய்வதற்காக ஆல்காடெல் நிறுவனம் ஜெயராமனுக்கு மாதந்தோறும் இன்கிரிமென்ட் வழங்கலாம்.

அமுக ரவுடிகளைச் சாத்வீக நிலைக்குக் கொண்டுவர யோகா, தியானம் போன்ற ஆன்மீகப் பயிற்சியை அளிக்கலாம்.

இந்த அமுக ரவுடிகள் மாமிச உணவுகளை உண்பதால்தான் அவர்களிடம் சாத்வீகக் குணம் குறைந்து ராட்சஸக் குணம் மேலோங்குகிறது. எனவே தயிர்சாதம் சாப்பிடுபவர்கள் மட்டுமே வலைப்பதிவுகளில் எழுதலாம் என்று தமிழ்மணம் அறிவிக்கலாம்.

வாரந்தோறும் ஒருவரை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்து பாலபாரதி போன்ற மொக்கை ரவுடிகளின் (மொட்டை ரவுடியல்ல)மொக்கைப் பதிவுகளை ஒரு வாரம் முழுவதும் படிக்கும் இம்சையிலிருந்து பதிவர்களைக் காப்பாற்ற ஜெயராமனையே நிரந்த நட்சத்திரமாக அறிவித்து அவரது காமக்கதைகளையே நட்சத்திரப்பதிவுகளாகப் போடலாம்.

அதில் 'சிறந்த பதிவுகளைத்' தேர்ந்தெடுத்து பூங்காவில் போடலாம். இதன்மூலம் ஒருசாராருக்கே பூங்காவில் வாய்ப்பளிக்கப்படுகிறது, திராவிட மற்றும் கம்யூனிச வாடை பூங்காவில் அதிகம் அடிக்கிறது என்கிற குற்றச்சாட்டிலிருந்து தமிழ்மணத்திற்கும் விடுதலை கிடைக்கும்.

ஆனால் ஜெயராமன் ஒரே மாதியான போர்னோ கதைகள் எழுதினால் அது ஒருகட்டத்தில் போரடிக்கும். அதில் வெரைட்டி வேண்டுமானால் என்ன செய்வது? அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது இந்துப்புராணங்கள். அதில் இல்லாத போர்னோவா? இந்து தத்துவத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட அரவிந்தன்நீலகண்டன், ஜடாயு, வஜ்ரா, கால்கரிசிவா போன்ற சுயம்சேவக்குகள் ஜயராமனுக்கு உதவி, பதிவாளர்களை மனம் மகிழச்செய்து தேசப்பணியையே தெய்வப்பணியாக ஆற்றலாம்.

ஜயகிந்த்!

தமிழ்மணம் - ஒரு பின்நவீன வலைதிரட்டி?

சுமார் மூன்று வாரங்களாக தமிழ்மணம் பக்கம் வரவில்லை. அதற்குள் பல 'திடுக்கிடும் திருப்பங்கள்' நிகழ்ந்துள்ளன.

அரவிந்தன்நீலகண்டன் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.(வேறு யார் யாரெல்லாம் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் முழுவிவரம் தெரியவில்லை) வலதுசாரிப் பதிவர்களிலேயே குறைந்தபட்சம் தரவுகளோடு எழுதுபவர் அரவிந்தன் தான். மற்ற இந்துத்துவ மற்றும் பார்ப்பனீய பதிவர்களின் பதிவுகள் பெரும்பாலும் ஜல்லிகளே. அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை. அதோடு யாரை நீக்கினாலுமே கண்டிப்பேன் என்ற முறையில் அரவிந்தன்நீலகண்டனை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதைக் கண்டிக்கிறேன்.

நானே தமிழ்மணத்தில் இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் வருகின்றன. ஆனால் 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பட்டியலில் வருவதில்லை. ஏற்கனவே பலமுறை தமிழ்மணத்திற்கு மனுக்கள் அனுப்பியும் அது 'பரீசீலனை'யிலேயே இருக்கிறது. மேலும் கருவிப்பட்டை, கருவேலம்பட்டை என்று தமிழ்மணம் பயன்படுத்தும் அதீத தமிழ் வேறு பயமுறுத்துகிறது.

சரி, அதேபோல பொன்ஸ் விவகாரம். பொன்ஸ் ஒரு இனிய தோழி. அவர் ஒன்றும் பார்ப்பனீயம் இந்துத்துவம் ஆகியவற்றை எதிர்த்து வன்மையாக எழுதுபவர் அல்ல. ஆனால் அப்படி எழுதுபவர்களின் நண்பர் என்பதாலேயோ என்னவோ குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற செய்கைகள் பெண் எழுத்து முயற்சிகளை ஆரம்பத்திலேயே தகர்த்துவிடும் என்பதால் அது நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கதுதான்.

ஆனால் எனக்கு இருக்கும் குழப்பமெல்லாம் வேறு. உண்மையில் யார் உண்மையான பதிவர், யார் போலிப் பதிவர் என்பதே பலசமயம் விளங்கமாட்டேன் என்கிறது.

உண்மைத்தமிழன் என்று ஒரு மொக்கைத் தமிழன் இருக்கிறார். அவர் எங்களூர்க்காரரும் கூட. அவரது பொழுதுபோக்கே நடப்பது என்னவென்றே தெரியாமல் எதையாவது பின்னூட்டம் போட்டு வாங்கிக்கட்டிக்கொள்வதுதான். கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று இவர் போடும் மொக்கைக்குப் பயந்தே செந்தில் உள்பட பல பதிவர்கள் பதிவே போடாமல் இருக்கிறார்கள்.

ஆனால் இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால் உண்மைத்தமிழன் வலையுலகிற்கு வந்தே ஒருமாதம்தான் இருக்கும். ஆனால் அதற்குள் அவர் பெயரில் ஒரு போலி கமெண்ட் வந்துவிட்டது. உண்மைத்தமிழனுக்கே போலி(?).

நல்லவேளை போலிகளை விட எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தெரியும் என்பதாலோ என்னவோ எனக்குப் போலிகள் உருவாகவில்லை.

வலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் பெயரில் நடக்கும் (இரண்டு அல்லது மூன்று பேர் 'சிறப்புரை' நிகழ்த்த மற்றவர்கள் கும்பலாக மந்தைகளாகப் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருக்கும்) ஜெபக்கூட்டத்தினிடையில் இதுபோன்ற தகவல்கள் தீவிரமாக அலசப்படும். அதிலும் தோழர் லக்கிலுக்கிற்கு அவரது அலுவலகம் தொடர்பான விவரங்கள் தெரியுமோ இல்லை, இந்த விவரங்கள் விரல்நுனியில்.

சிலர் போலிடோண்டு என்கிறார்கள். சிலர் டோண்டுவே போலி என்கிறார்கள். ஏமாறாதவன், ஏமாந்தவன், இளிச்சவாயன், ஆதிசேசன், பாதிசேசன் என்று ஒரு மண்ணும் விளங்கவில்லை. சமயங்களில் நாமே உண்மையா போலியா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. எப்படியோ உண்மைக்கும் போலிக்கும் அப்பால், உண்மை, பொய் என்னும் இருமை எதிர்வுகளைத் தகர்த்து உண்மை, போலி ஆகியவற்றிற்கிற்கு இடையிலான கோடுகள் அழிக்கப்படும் பின்நவீனத்துவ யுகத்தில் வாழ்கிறோம் என்பதையே தமிழ்மணத்தில் வெளியாகும் பதிவுகள் உணர்த்துகின்றன.

வாழ்க பின்நவீனத்துவம்!
வளர்க தமிழ்மணம்!
ஓங்குக போலிகள் புகழ்!

22.04.2007 சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு
தி.நகர் நடேசன் பூங்கா சரியாக நேரம் மாலை 4 மணி 13 நிமிடம் 36 வினாடிகள். வெயில் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்தது. மழை வருவதா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தது. பூங்கா வாசலில் சுகுணா சூப் என்னும் ஸ்டாலில் சூப் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

பூங்காவிற்கு எதிரிலிருந்த டீக்கடை ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ அல்லது ஏதேனும் 'அசம்பாவிதங்கள்' நிகழுமென்றோ பூட்டியேயிருந்தது. கண்ணதாசன் பதிப்பகமும் அப்படியே. அதன் பெயர்ப்பலகையில் சம்பந்தமில்லாமல் கண்ணதாசன், ஓஷோ, அப்துல்கலாம் எனப் பலரும் காட்சியளித்தனர்.

மொத்தம் பன்னிரண்டு காக்கைகள் பூங்காவின் மூலைகளிலும் பல்வேறு இடங்களிலும் திரிந்துகொண்டிருந்தன. ஒரு முதியவர் தன் சட்டையையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு கைகளை விறுவிறுவென்று சுற்றி உடற்பயிற்சி செய்தது ஏதோ தற்கொலை முயற்சி போல இருந்தது.

பூங்காவைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த பெண்களில் கருப்பு டி-ஷர்ட் போட்ட பெண் மிகவும் அழகாயிருந்தார். அவரது கன்னங்களிலும் உதட்டின் மேலும் மினுமினுத்த வியர்வைத்துளிகளில் சூரியன் மின்னினான்.

மொத்தம் 32 காதலர்கள் புதர்களின் மறைவிலும் மற்றும் வெளிப்படையாகவும் காதல் செய்துகொண்டிருந்தனர். மூன்று நாய்கள் பூங்காவிற்கு வெளியிலே திரிந்துகொண்டிருந்தன. அதில் ஒரு நாய் கறுப்பு மற்றும் அதற்கு ஒற்றைக் கண்தான் இருந்தது.

அது ஆச்சு ஒரு வருசம்..
எழுத்து என்பது ரத்தமாக இருக்கவேண்டும். - நீட்ஷே.


அன்பின் இனிய நண்பர்களே,வலையுலகில் எழுத ஆரம்பித்து ஓராண்டாகிவிட்டது. வலையுலகை எனக்கு அறிமுகம் செய்துவைத்த செந்திலுக்கு மீண்டும் நன்றிகள். பொதுவாக என்னுடைய பதிவுகள் குறித்து மீண்டும் மீண்டும் இரு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.ஏன் மிதக்கும்வெளி என்று உங்கள் வலைப்பக்கத்திற்குப் பெயர்வைத்தீர்கள் என்பது அதிலொன்று..

மிதக்கும்வெளி என்றால் மப்படித்து மல்லாந்துவிடுவதென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியில்லை. அர்த்தங்கள் சூழலில் மிதந்துகொண்டிருக்கின்றன. சொற்கள் அவையோடு இணைந்துகொள்கின்றன என்கிறது பின்நவீனம். சொற்களும் அர்த்தங்களும் மட்டுமில்லை, சமயங்களில் நாமும் இணைந்தும் விலகியும் பயணிக்கிறோம், உடன்பட்டும் முரண்பட்டும். அதனால்தான் மிதக்கும்வெளி.

இன்னொரு கேள்வி சீரியசான பதிவுகள், நக்கலடிகும் கிண்டல்கள், வலையுலக குழாயடிச்சண்டைகள், கவிதைகள் என அனைத்தையும் ஏன் ஒரே பிளாக்கில் பதிவிடுகிறீர்கள், அதற்கென தனித்தனியாக பிளாக்குகளை ஆரம்பித்துக்கொள்ளலாமே என்றும் கேள்விகள் வருகின்றன.

ஆனால் ஒரே விதமான அடையாளத்தில் உறைந்துபோவதை நான் மறுக்கிறேன். அது வெறுமனே ஒற்றைத் தன்மையையும் ஒற்றை அடையாளத்தையும் மட்டுமே கையளிக்கும். ஆனால் நான் அந்த இறுகிய அடையாளத்தை மறுதலிக்கிறேன். எனக்கென்று ஒரு அரசியல் இருகிறது. ஆனால் அது ராணுவத்தின் விறைப்பான அரசியல் அல்ல, அப்படியிருந்தால் அது வெறுமனே பிணங்களின் அரசியல். வலியும் கொண்டாட்டமும் போராட்டமும் இணைந்த அரசியலே என் அரசியல். கொண்டாட்டங்களும் புன்னகையுமற்றுப் போனால் உயிர்ப்பித்திருக்கமுடியுமென்று தோன்றவில்லை.

வேறென்ன சொல்லவிருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளிலிருந்து என் வலைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். ஏதோ சில உருப்படியான விடயங்களையும் என் அறிவு மற்றும் புரிதலின் சாத்தியங்களுக்குட்பட்டு எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.

ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டதற்காய் வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கு.. வாழ்த்துக்களை மட்டும் பதியாமல் என் எழுத்துக்கள் குறித்த் கருத்துக்களையும் பதிவிட்டால் சில பயனுள்ளதாகவிருக்குமென்று கருதுகிறேன். சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன். அனைவருக்கும் நேசமான முத்தங்கள்.

பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்.

ஏப்ரல் 14 - தேதி அல்ல வரலாறுஆரியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த
அசுரகுலத்தலைவனே வீரவணக்கம்!!

அசுரி
பேண்டுநாறிக்கிடக்கும்
உன் வீட்டு வாசலுக்கு
கோலங்கள் தேவையில்லை.
மலர்களின் வாசத்தைவிடவும்
உன் சட்டைக்கையிடுக்கில் வீசும்
வியர்வைமணம் பிடித்திருக்கிறதெனக்கு.
நம் காதலைப் பகிர
தாஜ்மகால்கள் வேண்டியதில்லை
ஏதேனும் கட்டிமுடிக்கப்படாத
கட்டிடங்களே போதும்.
நீ வா!
உன் அழகோடும் இன்மையோடும்.
எனக்குத்தெரியும்
எல்லாத் தேவதைகளுக்கும் குசு வருமென்று.

மேகம் நழுவிய தடயம்
என் மனசு இருட்கிடங்கு.
ஒருநாள் வெடிக்க
ஒளியாய்ச் சிதறினேன்.
------------------


கனவின் சாம்பலில்
மக்கிக்கிடந்தன சிறகுகள்.
கிளறிப்பார்த்த கோழியின் கால்களில்
தட்டுப்பட்டது
அதன் சிறகுகள்.

-------------------

வலி மிகுதியாய்க் கொண்டே வருகிறது.
அழவேண்டும்போல இருக்கிறது.
அழுவதற்கும் கையாலாகாத மனம்
மட்டுமே இப்படிக்
கவிதைகள் எழுதுகிறது.

------------------------

கொலை குறித்தும்
தற்கொலை குறித்தும்
யோசித்துக்கொண்டிருப்பவனின் மனம்
ஒரு மதுக்கோப்பைக்குள்ளும்
புத்தகத்துக்குள்ளும்
அல்லது சுய மைதுனத்திற்குள்ளும்
தற்கொலையோ
கொலையோ செய்து முடிக்கிறது
இப்போது பிணமாய்
மிஞ்சியிருப்பதெல்லாம்
சில திரவத்துளிகள் மட்டுமே.

-----------------------

தமிழ்த்தேசியம் யாருக்கானது? - முகங்கள் மூன்றுசமீபத்தில் தமிழ்த்தேசியர் குறித்த இரு ஆக்கங்களைப் படிக்க நேர்ந்தது. ஒன்று புதியபார்வை மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் நேர்காணல். மற்றொன்று பிப்ரவரி 2007 'தமிழர் கண்ணோட்டம்' இதழில் வெளிவந்த தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் பெ.மணியரனின் 'வர்ணசாதி ஒழிப்பா, இந்துமத ஒழிப்பா' என்னும் கட்டுரை.

இந்தியத்தேசியவாதியாக இருந்த நெடுமாறன் எப்படித் தமிழ்த்தேசியவாதியாக மாறினார் என்பதற்கு புதியபார்வை நேர்காணல் விடையளிக்கிறது.

கல்லூரிக்காலத்தில் திமுகவின் அனுதாபியாக இருந்திருக்கிறார் நெடுமாறன். பிறகு 'திராவிடத்தேசியம் மாயை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ்த்தேசியமே மெய்' என்னும் ஈ.வி.கே.சம்பத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு திமுகவிலிருந்து வெளியேறி சம்பத் மறும் கவிஞர்.கண்ணதாசன் இணைந்து நடத்திய 'தமிழ்த்தேசியக் காங்கிரஸ்' கட்சியில் பணியாற்றியுள்ளார்.

ஒருகட்டத்தில் சம்பத் தன் கட்சியை இந்தியத்தேசியக் காங்கிரசில் கரைத்துவிட நெடுமாறனும் காமராஜரின் அபிமானத்துக்குரிய காங்கிரசுக்காரராக மாறிவிடுகிறார். இந்திராவின் வருகைக்குப் பின்பு காங்கிரஸ் சிண்டிகேட், இண்டிகேட் எனப்பிரிய நெடுமாறன் சிண்டிகேட் காங்கிரசில் தொடர்ந்து காமராஜரை ஆதரிக்கிறார். காமராஜர் மறைவுக்குப் பின் சிண்டிகேட்டும் இந்திரா காங்கிரசும் இணைகின்ற்ன.

இந்திராவின் தலைமை ஏற்று அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் பழ.நெ. திமுகவினரின் தாக்குதலிலிருந்து மதுரையில் இந்திராவைக் காப்பாற்றுகிறார். ஆனால் அடுத்த ஓராண்டிலேயே இந்திரா திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவெடுக்க காங்கிரசிலிருந்து வெளியேறி 'காமராஜர் தேசிய காங்கிரஸ்' ஏற்படுத்திப் பிறகு அதன் பெயரை' தமிழர் தேசிய இயக்க'மாக மாற்றுகிறார்.

ஆக மொத்தம் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஏற்படாவிட்டால் நெடுமாறன் காங்கிரசிலேயே நீடித்து இன்னும் இந்தியத்தேசியவாதியாகவே தொடர்ந்திருப்பார். திராவிடத்தேசியம் பொய், தமிழ்த்தேசியமே மெய் என்று கட்சி ஆரம்பித்து அதைவிடப் பெருந்தேசியமான இந்தியத்தேசியத்தை வலியுறுத்தும் காங்கிரசில் சம்பத் தன் கட்சியை இணைத்தது ஏன்? நெடுமாறன் போன்றவர்கள் அதுகுறித்துக் கேள்வி எழுப்பாதது ஏன்?

நீங்கள் 'இந்தியத்தேசியத்திலிருந்து ஏன் மீண்டும் தமிழ்த்தேசியத்திற்கு வந்தீர்கள்?' என்கிற கேள்விக்கு நெடுமாறன் பதிலளிக்கிறார், "இப்போது இந்திராவைப் போல எல்லாத் தேசிய இனங்களும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் இந்திய அரசியலில் இல்லை".

இதில் இரண்டு அபத்தங்கள்.

1. இந்திரா இந்தியாவின் எல்லாப் பிரதமர்களைப் போலவே தேசிய இனங்களின் மீது கடுமையான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தவர். பஞ்சாப், காஷ்மீர் ஆகியப் பிரச்சினைகள் சிக்கலாக இந்திரா ஒரு முக்கியக் காரணம். எனவே நெடுமாறனின் கூற்று, அடிப்படையிலேயே தவறானது. இந்திராவின் பாசிச நடவடிக்கைகள் குறித்து நெடுமாறனிடம் எந்தக் கேள்விகளும் இல்லை. அவரிடம் இந்திரா மீதான விமர்சனமெல்லாம் அவர் கட்சியை நடத்திய விதம் குறித்துத்தான்.

2. மேலும் எல்லாத் தேசிய இனங்களும் ஒத்துக்கொள்ளும் ஒரு தலைவர் இருந்தால் அங்குத் தேசிய இனப்பிரச்சினையே இல்லை என்று அர்த்தமா? அருந்ததியர்கள் மதுரைவீரன் படத்தில் மயங்கி ரசித்து எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டதால் தலித் பிரச்சினையே இல்லை என்பதா?

எனவே நெடுமாறனின் 'தமிழ்த்தேசிய'த்திற்கு எந்தவித சித்தாந்த அடிப்படையுமில்லை என்பதை அவர் மீண்டும் நிறுவியிருக்கிறார். அவரது நேர்காணலில் ஒரு காங்கிரஸ்காரராக திமுக மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். ஆனால் காங்கிரஸ் சாதி, சிறுபான்மையினர், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் நடந்துகொண்டமுறை குறித்து துளியளவும் விமர்சனமில்லை அவரிடம். '1969ல் காமராசர் உயிரோடு இருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும்' என்கிறார் சின்னபுள்ளத்தனமாக அல்லது இன்னமும் ஒரு காங்கிரஸ்காரராக.

அடுத்து பெ.மணியரசனின் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். ஜனவரி தமிழர்கண்ணோட்டம் இதழில் பெரியார் சிலை உடைப்பு, அதைத்தொடர்ந்து பெரியார் தி.க மற்றும் ம.க.இ.க தோழர்களால் நடத்தப்பட்ட பூணூல் அறுப்பு, ராமன் படம் எரிப்பு, கோவில் சிலை உடைப்பு ஆகியவை குறித்து பெ.ம எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் 'பார்ப்பன் ஆதிக்கத்தை எதிர்க்கவேண்டியதுதான்,. ஆனால் இந்துமதத்திற்கெதிரான போராட்டங்கள் என்பவை பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது' என்னும் கருத்துப்பட அவர் எழுதியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தலித்முரசு இதழும், மும்பையிலிருந்து பன்னீர்செல்வம் என்ற பெரியாரியத் தோழர் ஒருவரும் 'சாதியையும் பார்ப்பனீயத்தையும் ஒழிக்கவேண்டுமானால் இந்துமதத்தை ஒழித்தே ஆக வேண்டும்' என்னும் அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய அடிப்படைகளை முன்வைத்து வாதிட்டிருக்கின்றனர்.

அதற்கான மறுப்பே மணியரசனின் கட்டுரை. எட்டு பக்க அளவிலான அக்கட்டுரையின் சாராம்சங்கள்.

1. இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல ஒரு மதம், உலகில் மத ஒழிப்பு என்பது எங்கேயும் நடந்தது கிடையாது. எனவே இந்துமதத்தை ஒழிப்பது சாத்தியம் கிடையாது.

2. இந்துமதத்தில் இரண்டு கூறுகள் உள்ளன. (i). அதன் ஆன்மீகக்கூறு, (ii). வருணாசிரம அடிப்படையிலான சாதி. இதில் இரண்டாவதைத்தான் நாம் எதிர்க்கவேண்டும். ஏனெனில் அதன் ஆன்மீகக்கூறு பெரும்பான்மை மக்களின் மனநிலையில் இரண்டறக் கலந்துள்ளது. அதை அவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அதனால்தான் அம்பேத்கரும் பெரியாரும் மதமாற்றத்தை வலியுறுத்தியபோது பெரும்பான்மை சூத்திரர்களும் தலித்துகளும் மதம் மாறத் தயாராக இல்லை.

3. மதமாற்றம் என்பது சாதியொழிப்பிற்கான தீர்வு இல்லை.


4. எதிர்காலத்தில் அமையவிருக்கும் புரட்சிகரத் தமிழ்த்தேசியக் குடியரசு மத ஒழிப்பை வலியுறுத்தாது, மெய்யான மதச்சார்பின்மையையே வலியுறுத்தும்.

இதிலுள்ள முரண்களை அவதானிப்போம்.

1. இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல ஒரு மதம் கிடையாது என்பதை அம்பேத்கரும் பல இடதுசாரி ஆய்வாளர்களும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். மற்ற மதங்களைப் போல அது செமிட்டிக் தன்மை வாய்ந்ததில்லை. ஒரு இறைத்தூதுவர் (அ) இறைமைந்தன், புனித நூல், வரையறுக்கப்பட்ட சடங்குகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவை இந்துமதம் நிலைப்பதற்கான காரணங்கள் இல்லை. அவற்றின் அடிப்படையே அம்பேத்கர் தெளிவாக விளக்குவதைப் போன்ற 'செங்குத்தான சாதியமைப்பே'. தனக்கு மேலே ஒருவன் இருப்பதைப் பற்றிய உணர்வையொடுக்கும் தனக்குக் கீழே ஒருவன் அடிமையாய் இருப்பதைக் கதகதப்பாய் உணரும் வசதியான மனோநிலையே இந்துமதத்தைக் காப்பாற்றி வருகிறது.

மேலும் உலகில் எங்கும் மதவொழிப்பு நடக்கவில்லையென்பதால் மதவொழிப்பைக் கைவிட்டு விடுவதா? உலகில் எங்கும் வர்க்க ஒழிப்பும் கூடத்தான் நடக்கவில்லை. அதற்காக மார்க்சியத்தைக் கருத்தியல் அடித்தளமாகக் கொண்டுள்ளதாகச் சொல்லும் த.தே.பொ.க வர்க்க ஒழிப்பைக் கைவிட்டுவிடுமா? 'மெய்யான' வர்க்கச்சார்பின்மை அல்லது வர்க்கச் சமரசத்தைக் கடைப்பிடிக்குமா?

இரண்டாவது இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகள் என்று சொல்லப்படுபவை. இப்போதுள்ள இந்துமதத்தின் மெய்யியல் எனப்படுபவை பவுத்த, சமண, சாங்கிய, ஆசிர்வக, மற்றும் உலகாயுத மதங்களிருந்து உட்செரித்துக்கொண்டவையே. இதை விடுத்து மெய்யான இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகள் என எவையையாவது சொல்லமுடியுமா?

மேலும் பெ.ம சொல்வதுபோல இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகள் (அவை அவைதீக மரபிலிருந்து உட்செரித்துக்கொள்ளப்பட்டவையாக இருந்தாலும்கூட) என்பவை பெரும்பான்மையான 'இந்து' எனவழைக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துபவை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் அதுபற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள்.

பெ.ம சொல்வதைப்போல மதமாற்றத்தில் ஈடுபடாமல் பெரும்பான்மை மக்கள் தயங்குவதற்குக் காரணம் வழிபாட்டுமுறைகள் மற்றும் சடங்குகள் என எடுத்துக்கொண்டாலும் அவைக்கும் இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகளுக்கும் ஒரு தொடர்புமில்லை. பிரதேச ரீதியினான சிறுதெய்வ வழிபாடுகள் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் கலந்துபோனவை.

மேலும் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்கள் பவுத்தம் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறாமலிருக்க வேறு பல காரணங்களும் இருக்கின்றன. இட ஒதுக்கீடு, மாமிச உணவுப்பழக்கம், குடி, புதிய கலாச்சாரத்தைக் கண்டு பயம் எனப் பல்வேறு காரணிகள் அவற்றில் செயல்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் சாதிக்கும் பார்ப்பனீயத்திற்கும் எதிராக நடந்த நிலமீட்பு, இட ஒதுக்கீடு இன்னும் பல போராட்ட முறைகளோடு ஒப்பிடும்போது மதமாற்றம் என்பது உடனடிப் பலனைத் தருவதாக அமைந்திருக்கிறது. மதமாற்றம் என்னும் அறிவிப்பு வந்தவுடன் தான் ஆதினங்களிலிருந்து அமைச்சர்கள் வரை அலறியடித்துக் கொண்டு சேரிகளை நோக்கி ஓடிவருகின்றனர். மதமாற்றம் என்பது தீர்வா இல்லையா என்பதை விட அது ஒரு வீரியமிக்க போராட்டம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் இசுலாமிய மதமாற்றம் என்பது சாதியையும் தீண்டாமையும் குறிப்பிட்டளவு ஒழிக்கவே செய்திருக்கிறது.

த.தே.பொ.கவின் மதமாற்றம் மீதான வெறுப்பு மற்றும் அசூயை என்பது புதிதானதல்ல. பார்ப்பனப் பாசிச ஜெயா அரசு மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது புதிய ஜனநாயகம் இதழ் 'மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கெதிரான ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தது'. அதன் முகப்பட்டையிலேயே 'சுயமரியாதையுள்ள சூத்திரர்களே, தலித்துகளே இந்துமதத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை அப்போது கடுமையாக விமர்சித்த தமிழர்கண்ணோட்டம் 'இது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைக் கெடுக்கும் பார்ப்ப்னத் தலைமையின் சூழ்ச்சி' என்று வர்ணித்தது.

மேற்கண்ட கட்டுரையில் பெ.ம குறிப்பிடும்போது சைவ சமயமும் வைணவ சமயமும் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது என்கிறார். ஆனால் அதற்கு முன் தமிழக்த்தில் பெரும் செல்வாக்குச் செலுத்திய சமணத்தைப் பற்றியும் பவுத்தத்தையும் பற்றி ஒரு மூச்சையும் விடக்காணோம். உண்மையில் பவுத்த மற்றும் சமண ஆசீர்வகக்கூறுகள் தமிழர்களின் வாழ்வில் எச்சங்களாக மிஞ்சிநிற்கின்றன. குறிப்பாக தலித்முரசு பிப்ரவரி மற்றும் மார்ச் 2007 இதழில் வெளிவந்துள்ள பேராசிரியர் நெடுஞ்செழியனின் நேர்காணலில் அவர் ஆசிர்வகத்திற்கும் அய்யனார் வழிபாட்டிற்குமுள்ள தொடர்பு குறித்துப் பேசுவதைக் கவனித்தால் விளங்கும்.


ஆனால் பெ.ம போன்ற தமிழ்த்தேசியர்கள் தமிழ் மரபாக இங்கு முன்வைப்பது பார்ப்பனீயத்தைத் தூக்கிப்பிடித்த சைவம் மற்றும் பார்ப்பனீயத்தைதான். சமணம் மற்றும் பவுத்தம் போன்ற அவைதீக மரபுகளையல்ல. அதனால்தான் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இந்துமதத்தை ஒழிக்கத்தேவையில்லை என்பதற்கு உதாரணம் சுட்டும்போது பார்ப்பனர்களை எதிர்க்கும் சைவ மடங்களையும் ஆதீனங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் சமற்கிருத எதிர்ப்பு, தமிழ் வழிபாடு ஆகியவற்றில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் இந்த சைவை ஆதினகர்த்தாக்கள் சாதி என்று வந்துவிட்டால் பார்ப்பனீயத்தைத் தாங்கிப்பிடிப்பதும் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாகப் போர்க்கோலம் பூண்டதும் நமக்கு நினைவிருக்கும். எனவே பெ.ம கனவுகாணும் 'புரட்சிகரத் தழ்மித்தேசியக் குடியரசு' என்பது சாதியையும் பார்ப்பனீயத்தையும் சைவத்தையும் வைணவத்தையும் காக்கும் அரசாக இருக்குமே தவிர ஒரு மெய்யான மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அரசாக இருக்காது.

அடுத்து நந்தன் இதழின் ஆசிரியர் நா.அருணாச்சலம் குறித்துப் பார்ப்போம். பொதுவாகப் பெரியாரியம், தமிழ்த்தேசியம் குறித்துப் பேசுவோரிடம் அருணாச்சலம் குறித்து ஒரு மாயையான மயக்கமிருக்கிறது. 'திராவிடத் தமிழர்கள்' நந்தன் இதழ் குறித்து ஒருமுறை வெகுவாய்ப் புகழ்ந்திருந்தனர். நான் 'ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2 ' என்னும் பதிவில் அருணாச்சலத்தைக் 'கள்ளர் சாதி வெறியர்' என்று விமர்சித்திருந்தேன்.
http://sugunadiwakar.blogspot.com/2007_03_01_archive.html

அதை மறுத்து நண்பர் தங்கமணி கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.


/அருணாசலம் கள்ளர்சாதி வெறியர் என்று எழுந்தமானத்துக்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள் (அவர் கள்ளர் ஜாதியில்லை என்று நினைக்கிறேன்). ஆரம்பகால 90களில் அவர் முழுமையாக செயல்பட்டபோது உலகத் தமிழர் பேரவை என்ற குடையில் கீழ், தாய் மொழி வழிக்கல்வியையும், ஈழப்பிரச்சனையையும் முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் (அவைகள் எந்த நோக்கங்களைக் கொண்டிருந்த போதும்) அனைத்தையும் ஒன்று திரட்டுவதில் அவர் கணிசமான வெற்றியைப்பெற்றிருந்தார். அப்படியான ஒரு ஒற்றுமையை சாதிக்க தமிழ்சூழலில் (தமிழர்களிடம்) எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழ்வழிக்கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் (100 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணாவிரத போர்) தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருக்கும் போது, எப்படி கருணாநிதியால் கலைக்கப்பட்டன; ஏமாற்றப்பட்டன என்பதை அப்போது அவ்விதயங்களைக் கவனித்து, பங்கேற்று வந்தவர்கள் அறிவர்.

அதேபோல ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இராஜீவ் கொலைக்குப்பின்னான கடுமையான காலகட்டங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பேரில் நியாயமான போராட்டங்களை கோரி போராடுவது இந்தியச்சூழலில் எவ்வளவு கடுமையானது என்பதும் உணரமுடியாதது அல்ல. அச்சமயத்தில் அவர் தீவிர பங்காற்றிவந்தார். அரசு அடக்குமுறைகளின் தீவிரத்தன்மையை நீங்கள் அறியாதவரா அல்லது அப்படி தோற்றமளிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நெடுமாறன் இதய அறுவைச்சிகிச்சைக்கு பின் பொடாவில் கைது செய்யப்பட்டு வேண்டுமென்றே கடலுக்குக்கும் சென்னைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென்பதற்காகவே அலைக்கழிக்கப்பட்டார். நீங்கள் குறிப்பிடும் நந்தன் பத்திரிக்கை சுஜாதாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக்கொண்டதுடன், தமிழ் இயக்கங்களை ஒன்றிணைப்பதில், பெருவாரியாரியான தமிழ்ப்பற்றாளர்களைச் சென்று சேர்வதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. அதன் முதலாம் ஆண்டுவிழா (இன்று துக்ளக்கிற்கு பெருமைப் படுகிறார்களே) காமராஜர் அரங்கம் நிரம்பிவழிய நடந்தது. இன்றுவெகுஜன பத்திரிக்கைகள் (ஆவி, குமுதம்) போன்றவைகள் நடிகைகள், பரிசுகள், இலவசங்கள் போன்றவற்றை வைத்து சேர்க்கப்பட்ட கூட்டம் போல அல்லாமல் பத்திரிக்கையின் வாசகர்களால் அவ்வரங்கு நிறைந்தது.
மருத்துவக் காரணங்கள், பெரும் பொருளிழப்பு போன்றவைகளால் முடக்கப்படும்போது பொடாவின் அழுத்தத்தை உங்களைப்போன்றவர்களால் வேண்டுமானால் எளிதாக தாங்கிக்கொள்ள முடியுமாயிருக்கலாம். அதை அவர் நந்தனை நிறுத்தி தவிர்த்துக்கொண்டார்.

கவனமாகவும், முழுமையான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் ஆட்படுத்தி (ஆட்பட்டு) எழுதுதல் நீண்டகால நோக்கிலும், நம்பிக்கையை உண்டாக்குவதிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
நன்றி.

5:17 PM


/

இதில் இரண்டு தகவல் பிழைகள். முதலில் அருணாச்சலம் கள்ளர் சாதியச் சார்ந்தவர்தான் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். மேலும் உலகத்தமிழர் பேரவை என்பது பொடாவிற்குப்பின் நெடுமாறன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அருணாச்சலம் நடத்திவந்தது தமிழ்ச்சான்றோர் பேரவை மற்றும் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் என்னும் அமைப்புகள்.

நந்தன் இதழை நாம் இருவகையாகப் பிரித்துக்கொள்ளலாம். தோழர் சுபவீரபாண்டியன் நந்தன் இதழில் இருந்தபோது, சுப.வீக்குப் பின். சுப.வீ இருந்தவரை நந்தன் இதழ் பெரியாரியம், சாதியெதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றைத் தாங்கிவந்தது. ஆனால் அதன்பின் நிலைமைகள் தலைகீழாக மாறின.


கண்டதேவிப் பிரச்சினையின்போது 'தலித்துகள் கோவில் தேர்ப்பிரச்சினையில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதை விட்டுவிட்டு கோயிலைப் புறக்கணிக்க வேண்டும்' என்னும் கருத்துப்பட அருணாச்சலம் பெரியாரின் ஒரு சில மேற்கோள்களை அடிப்படையாக வைத்து 'அடிமைக்குத் தேவை விபூதியல்ல, விடுதலை' என்னும் கட்டுரையை எழுதினார். இதை மறுத்து பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.விடுதலைராசேந்திரன் பெரியார், கோவில் நுழைவுப்போராட்டம் மற்றும் அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும் போராட்டங்களில் கூறியிருந்த கருத்துக்களை முன்வைத்து அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் பசும்பொன்முத்துராமலிங்கம் (தேவர்) என்னும் சாதிவெறியனின் பிறந்தநாளுக்கு ஒரு பக்கத்தில் அவரது புகைப்படத்துடன் சிறப்புக்கட்டுரை வெளியிட்டது நந்தன். ஆனால் நந்தன் இதழ் நிற்கும்வரை அம்பேத்கரின் ஒரு சின்னப் புகைப்படம் கூட நந்தன் இதழில் வந்தது கிடையாது.

மேலும் நந்தன் இதழ் 'பகுத்தறிவு மலர்' 'புரட்சியாளர் மலர்' என்னும் இரண்டு சிறப்பிதழை வெளியிட்டிருந்தது. அதில் காரல்மார்க்ஸ் முதல் கருணாநிதியின் 'குப்பைத்தொட்டி' வரை இடம்பெற்றிருந்தன. ஆனால் அம்பேத்கர் குறித்து ஒரு சிறுகுறிப்பும் வெளிவரவில்லை. இதைச் சுட்டிக்காட்டி நந்தன் இதழிலேயே ஒரு வாசகர் கடிதம் வெளியானது. அதற்குப் பதில் எழுதிய நந்தன் 'நாங்கள் பகுத்தறிவு மலர் வெளியிட்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறோம்' என்று குறிப்பு வரைந்தது. இதன்பொருள், 'அம்பேத்கர் பகுத்தறிவாளர் இல்லை' என்பதுதான். (ஆனால் நந்தனின் வரையறையின்படி கருணாநிதி பகுத்தறிவாளர்).


நந்தன் இதழ் கடைசிவரை தலித்விரோதத்தை முன்வைக்கும் அல்லது தலித்துக்களைப் புறக்கணிக்கும் தமிழ்த்தேசிய இதழாகவே முன்வந்தது. கவிஞர்.இன்குலாப், பேராசிரியர்.சுபவீரபாண்டியன் போன்ற ஒரு சிலரைத்தவிர சாதியெதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றில் உறுதியாய் நிற்கும் தமிழ்த்தேசியர்களைக் கண்ணுக்கெட்டியதூரம் காணோம்.

சாதி மற்றும் ஆணாதிக்க நீக்கம் செய்யப்படாத நெடுமாறன், மணியரசன், அருணாச்சலம் வகையறாக்களின் தமிழ்த்தேசியம் பார்ப்பன ஆதிக்கத்தைப் பதிலீடு செய்த சாதிவெறியர்கள் மற்றும் ஆணாதிக்கப்பாசிஸ்ட்களின் தேசியமாகத்தானிருக்கும்.

ஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை?நம் வலையுலகிற்குத் தொடர்பில்லாத ஒரு ஈழத்து நண்பர் என்னை அவர் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார்.

வீட்டில் நுழைந்தவுடன் வீட்டில் இருப்பவர்களை ஒவ்வொருவராக நண்பர் அறிமுகப்படுத்திக்கொண்டுவந்தார். குளியலறையிலிருந்து இரண்டுபேர், படிப்பக அறையிலிருந்து இரண்டுபேர், சமையலையிருந்து மூன்றுபேர் என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்துபேர். அனேகமாக டாய்லெட்டில் இரண்டுபேர் வசிப்பார்கள் என்று நினைத்தேன். நல்லவேளை யாருமில்லை.

ராவும் இந்திய அரசும் சந்தேகப்படுவது சரிதான். அவர் வீட்டில் ஒரு மினி தமிழீழமே இருந்தது. இந்தியாவிற்குள் தனி ஈழம்.

பிறகு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம், தவறு, பேசிக்கொண்டிருந்தார்கள். பாதி என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பேச்சினிடையே நண்பர் என்னைச் சுட்டிக்காட்டி தன் வீட்டாரிடம் 'இவர் சரியான விசர்' என்றார். ஏதோ பாராட்டுகிறார் என்று தெரிகிறது. ஆனால் என்ன என்றுதான் புரியவில்லை. விசர், விஷன் (vision), ஏதோ தொலைநோக்குப் பார்வை உள்ளவர் என்று நம்மை நல்லவிதமாகச் சொல்கிறார் என்று எடுத்துக்கொண்டேன். ஆனால் பிற வார்த்தைகள் எல்லாம் திட்டுகிறார்களா, பாராட்டுகிறார்களா என்று இனங்காணமுடியாமலிருந்தது.

ஒருவழியாகச் 'சாப்பிடலாமா?' என்றார். நான் ஒருவித ஆவலுடன் நமக்குப் பழக்கமில்லாத ஒரு புதிய உணவுவகைகளைச் சாப்பிடப்போகிறோம் என்று ஆவலுடன் இருந்தேன். எல்லோரும் உணவுமேஜையில் அமர்ந்தோம்.


குழம்பு கிடையாது. கறி வருவலை அப்படியே சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட வேண்டியதுதான். முதல்வாய் எடுத்துவைத்தேன். பயங்கரக் காரம். கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

கஷ்டப்பட்டு இரண்டாவது வாயையும் எடுத்துவைத்துவிட்டேன். காரம் தலைக்கேறி புரையேறத் தொடங்கியது. நண்பர் 'யாரோ நினைக்கிறார்கள்' என்றார். எனக்கோ செத்துப்போன என் தாத்தா நினைப்பதுபோல இருந்தது. "ஏண்டா பேராண்டி, இன்னும் பூமியில என்ன பண்ணிக்கிட்டிருக்க? சீக்கிரம் வந்துசேரடா" என்று அழைப்பு விடுப்பதுபோல இருந்தது.

தட்டுத்தடுமாறி மூன்றாவது வாயை எடுத்துவைக்கும்போது செத்துப்போன பாட்டியின் குரலும் சேர்ந்து கேட்டது. பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் கொலைவெறியோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சமைப்பதே கொலைவெறியோடு சமைப்பார்கள் போல. எப்படி இவ்வளவு காரத்தைச் சாப்பிடுகிறார்கள்?. ஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை என்பதற்கான காரணம் எனக்கு விளங்கியது. நான் மட்டும் கையில் ஸ்பூன் வைத்திருக்க அவர்கள் கத்தி, அரிவாள் ஆகியவற்றோடு சாப்பிடுவதுபோல ஒரு பிரமை.

அந்தநேரத்தில்தான் நண்பனின் சகோதரி 'சொதி ஊற்றிக்கங்க' என்று ஒரு திரவத்தை ஊற்றினார். பயந்துகொண்டு ஊற்றிய எனக்கு அதுதான் இதமாக இருந்தது. காரமேயில்லாமல் அருமையாக, காரத்தால் காயம்பட்ட என் கண்ணீர் ஆற்றும் மருந்தாக சொதி இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். 'கதிரையைக் கொண்டுவாருங்கள்' என்றார் நண்பர். எனக்கோ ஏதோ காரமாகச் சாப்பிடக் கொண்டுவருகிறார்கள்போல என்றுநினைத்துப் பயந்துபோனேன். பிறகுதான் கதிரை என்றால் நாற்காலி என்று தெரிந்து நிம்மதியானேன்.

"நீங்கள் ஆறுதலாகச் சாப்பிட்டிருக்கலாமே" என்றார் நண்பர். (ஆறுதலாக என்றால் 'நிதானமாக' என்று அர்த்தமாம்)

நான் 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டால் என் வீட்டிற்குத்தான் யாராவது ஆறுதல் சொல்ல வரவேண்டியிருக்கும் அல்லது பிளாக்கில் யாராவது இரங்கல்பதிவு போடவேண்டியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் அவர் விசர், கிசர் என்று புரியாமல் பாராட்டுவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்துக் கிளம்பினேன். "சரி, நான் போய்வருகிறேன்" என்றேன்.

"ஏன், இருந்து இரவு சாப்பிட்டுப் போகலாமே" என்றார்.

நான் கிலியடித்துத் தப்பித்து ஓடிவந்தேன்.

பாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும்
நண்பர் பாலபாரதி சமீபத்தில் ராமேசுவரம் கோயிலில் காணப்படும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பாகுபாட்டைப் பற்றியும் அதன் அடையாளமாய் ராமேசுவரம் மடப்பள்ளியில் பார்ப்பனரல்லாதார் இங்கே நுழையக்கூடாது என்னும் அறிவிப்புப் பலகையையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்.
http://balabharathi.blogspot.com/2007_03_01_archive.html

ஆனால் இது தொடர்பான உரையாடல்களை வளர்த்தெடுத்துச்செல்ல வேண்டிய அவர் 'எதற்கு வம்பு' என்று நினைத்தாரோ என்னவோ, 'பொறுப்பாக' பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டுப் போய்விட்டார். இதைத் தொடர்ந்து தோழர்.லக்கிலுக் 'செருப்பாலடி' என்று போட்ட பதிவு பல 'அப்பாவிப் பார்ப்பனர்க'ளின் மனதைப் புண்படுத்துகிறது என்று நினைத்தோ என்னவோ 'என்றும் அன்புடன் பாலா' என்ற நண்பர் தன்னுடைய பதிவில் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

http://balaji_ammu.blogspot.com/2007/04/321.html

1. ஆட்சியில் இருந்து கொண்டிருப்பது சமூக நீதி காக்கும் அரசு தானே, அதுவும் 40 வருடங்களுக்கு மேலாக.. கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் அறநிலையத் துறை எல்லாம் இவர்கள் கையில் தானே இருக்கிறது.. அப்புறம் இந்த போர்டை அகற்றவோ அல்லது அப்படி எழுதி வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவோ ஏன் துப்பில்லை ?

2. இதை மெனக்கெட்டு போட்டோவெல்லாம் எடுத்து வந்து பிளாகில் பதிப்பித்து விவாதிக்கும் பதிவர் திலகங்கள், பின்னூட்டச் சக்ரவர்த்திகள் ஆகியோர் "உன் ஆள்" தான் அதை வைத்தான் என்று வெட்டிக் கூச்சல் போட்டு பிலிம் காட்டுவது தவிர அந்த மாதிரி துவேஷம் வளர்க்கும் போர்டை அகற்றவும், அதை வைத்தவரை அடையாளம் கண்டு தண்டிக்கவும், அதனால் சமூக நீதி காக்கவும் செய்ய ஏதேனும் துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா ?


நாற்பது ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருப்பவை சமூகநீதி அரசுகளா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். கோயில் தொடர்பான விவகாரங்களில் அரசு தலையிடுவதற்கான வரம்புகள் என்ன? 'தீண்டாமை என்பது கிரிமினல் குற்றம்' என்று நமது பாடப்பொத்தகங்களில் முதல் பக்கத்தில் இருந்தாலும் சட்டமாகவே ஆக்கப்படாலும் 'பார்ப்பனர் தவிர வேறு யாரும் அர்ச்சகர்கள் ஆகக்கூடாது' என்பதுதானே சற்றுமுன் வரை இருந்த நடைமுறை நியதியாக இருந்தது?

"தீண்டாமை என்பது ஷேமகரமானது" என்று எழுதிய கிழட்டு ஜந்துதானே 'இங்கு காஞ்சி பரமாச்சார்யாவாகவும் நடமாடும் தெய்வமாகவு'மிருந்தது? கொலைக்குற்றவாளியாக இருந்தபோதும் போலீஸ் அதிகாரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால்தானே ஜெயேந்திரன் அரசு வாகனத்தில் ஏற மறுத்தான்? ஒரு கிரிமினல் வாழை இலையில் பேள்வதிலிருந்து அவனது பார்ப்பன நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசும் நீதிமன்றமும் போலீசும் அனுமதிக்கத்தானே செய்தன? இந்த லட்சணத்தில் 'ஜெயேந்திரனை தமிழக அரசு மரியாதையாக நடத்த வேண்டும்' என்றுதானே மன்மோகன்சிங்கும் 'காம்ரேட்' சீதாராம் யெச்சூரியும் கூறினார்கள்? இங்கேயெல்லாம் அரசு 'தலையிடுவதற்கான' வரம்பு என்னவாக இருந்தது? இங்கே அரசு வலிமையானதா, இல்லை பார்ப்பனீயமா?

இந்த 'அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும்' விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். 1972ல் கருணாநிதியின் தி.மு.க அரசு சட்டத்தைக் கொண்டுவந்ததும் பார்ப்பனர்கள் அமைதியாகத்தான் இருந்தார்களா? அன்றாயிருந்தாலும் இன்றைய 2006 ஆக இருந்தாலும் பார்ப்பனர்கள் அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?

பெரியார் தான் சாகும் காலத்தில் 'தமிழர் இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தி கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்குள் இறந்துபோனார். ஆனால் பின்னாளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்து சிறீரங்கம் கோயிலில் வெற்றிகரமாக நடத்தியும் காட்டியது. அப்போது தினமலர், துக்ளக் என்ன எழுதியது என்பதை பாலா பழைய இதழ்களை எடுத்துப் பார்க்கட்டும். அல்லது சிரமப்பட்டால், கோ.கேசவன் எழுதிய 'கோவில் நுழைவுப் போராட்டம்' என்னும் நூலையாவது படிக்கட்டும்.

ஆனால் இதில் தெளிவாக உள்ள விஷயம். ராமேசுவரம் கோவில் அறிவுப்புப் பலகை என்பது ஒரு குறியீடுதான். கோயில் என்பதே பார்ப்பன அதிகார மய்யமாகத்தானிருக்கிறது. குமரிமாவட்டத்திலுள்ள கோவில்களில் நீங்கள் நுழைந்தால் சட்டையைக் கழற்றச் சொல்வார்கள். எதற்கு மாடலிங் செய்யவா, அல்லது பேஷன் ஷோ நடத்தவா?

குமரிமாவட்டத்தில் பனையேறிய சாணார்கள் 'பார்க்க்கத்தகாத சாதி'(unseeable)யாக நடத்தப்பட்டனர். சட்டையைக் கழற்றினால் பனைமரத்தில் ஏறிய தழும்புகள் உடலில் இருந்தால் அவர்கள் 'சாணார்கள்' என்று அடையாளம் காணப்பட்டுக் கோயிலில் நுழையாமல் விரட்டப்பட்டார்கள். இப்போது அந்த வழக்கமில்லையென்றாலும் பார்ப்பனீயத்தின் எச்சமாகத்தான் சட்டையைக் கழற்றும் பழக்கம் எஞ்சி நிற்கிறது. ஆனால் இப்படி அவமானம் இழைக்கப்பட்ட சாதியிலிருந்து வந்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள்தான் இந்துமதத்திற்கு கொடிதூக்குகிறார்கள்.

அரசு என்ன செய்தது என்று பாலா கேட்கிறாரே, அரசு ஏதோ தன் வரம்பிற்குட்பட்ட வகையில் செய்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்துமுன்னணியும் இதையும் ஒழித்துக்கடட் அறநிலையத்துறையிலிருந்து அரசை வெளியேறச் சொல்கிறது.

ராமேசுவரம் கோவிலிலாவது 'பார்ப்பனர்கள் நுழையக்கூடாது' என்று போர்டுதான் வைக்கிறார்கள். அய்.அய்.டியிலும் அய்.அய்.எம்.எஸ்ஸிலும் போராட்டமே நடத்துகிறார்கள்.அய்.அய்.டியில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தைத் தெரிந்துகொள்ள பாருங்கள் (ஓசை செல்லாவிற்கு நன்றி)
http://oomai.wordpress.com

உச்சநீதிமன்றமும் ராமேசுவரம் கோயில்போலவேதான் செயல்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

1. 1931ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஓபிசியை வரையறுக்கக்கூடாது.
2. இட ஒதுக்கீடு என்பது சமூகத்தைப் பிளவுபடுத்தவே உதவும். உலகில் எங்கும் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை.

இப்போது ஓபிசியைத் தெளிவாகக் கணக்கிடவேண்டுமென்றால் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அரசு நடத்தவேண்டும். 'கிரிமிலேயர், கிரிமிலேயர்' என்று ஆதிக்கச்சாதி வெறியர்கL கூப்பாடு போடுகிறார்களே, கிரிமிலேயரைக் கண்டறிவதற்கும் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் எடுத்தாக வேண்டும். ஆனால் அதையும் நீதிமன்றம் ஒத்துக்கொள்ளுமா? அப்போதும் நீதிமன்றம் 'அரசு சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது' என்று கூக்குரலிடத்தான் செய்யும்.

மேலும் மிகத்திறமையாக ஜெயலலிதாவிலிருந்து இணையப்பார்ப்பனர்கள் வரை பந்தின்போது ஒரு சாமர்த்தியமான வாதத்தை முன்வைத்தார்கள். "அரசு நீதிமன்றத்தில் திறமையாக வாதாடவில்லை. எனவே தன் தவறை மூடிமறைக்கவே மத்தியக் கூட்டணியிலுள்ள திமுக பந்தை நடத்துகிறது'.

ஆனால் மத்திய அரசு எவ்வளவுதான் 'திறமையாக' வாதாடினாலும் உச்சநீதிமன்றம் இதையேதான் சொல்லும். அதற்கான தெளிவான நீரூபணம்தான் மேற்கண்ட இரண்டாவது அம்சத்தில் உள்ளது. 'உலகில் எங்கும் சாதியடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை' என்று நீ.ம காரணம் காட்டுவதே அபத்தமாக இருக்கிறது. உலகில் எங்கும் சாதி இல்லாதபோது சாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு மட்டும் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கருப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காவல்நிலையங்களில் கருப்பர்களையே நியமிக்கின்றனர். இது ஒருவகையான இட ஒதுக்கீடுதான். அங்கு நிறப்பாகுபாடு இருக்கிறது. இங்கோ சாதிப்பாகுபாடு இருக்கிறது. இதற்கு மூன்று தீர்வுகள் இருக்கின்றன என்று கருதுகிறேன்.

1. அரசு சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுப்பது.

2. உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தைக் குறைக்க நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவருவது.

3. இப்போதைய உச்சநீதிமன்றத்தின் தடையாணையைத் தூக்கிக் கிடப்பில் போடுவது.

ஆனால் அப்படி நடந்தாலும் 'என்றும் வம்புடன்' பாலாவோ அல்லது அவரது ஒண்ணுவிட்ட, ரெண்டுவிடாத தூரத்துச் சொந்தங்களோ அனானியாகவோ அநாமதேயங்களாகவோ வந்துகேள்வி கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? டோண்டுராகவன் அவர்களைப் போல 'போடா பாப்பார ஜாட்டான்' என்று போகவேண்டியதுதான்.

ரவிசீனிவாசின் பிரதிகள் - ஒரு கட்டவிழ்ப்பு

ரவிசீனிவாஸ் தன்னை எப்போதும் நடுநிலையாளராகவும் அறிவுஜீவியாகவும் காட்டிக்கொள்பவர். அவர் ஆரம்பகாலங்களில் பல சிறுபத்திரிகைகளில் பல முக்கியமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால் அப்படி ஒரு மாற்றுப்பாதையைத் தேடிப்போனவர் ஏன் ஒரு சனாதனப் படுகுழியில் விழ நேரிட்டது என்று ஆராயவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.


எட்வர்ட்சேத் அறிவுஜீவிகளை இருவகையாகப் பிரிப்பார். சமூகத்தின் இருப்பில் சிறிதும் சலனம் ஏற்படாதவாறு அதைக் கட்டிக்காக்கும் மரபுசார்ந்த அறிவுஜீவிகள், மற்றொருவகையினர் சமூகத்தின் இருப்பைக் குலைக்கப் பல முன்னெடுப்புகளை முன்வைக்கும் உயிர்ப்புமிக்க அறிவுஜீவிகள். இதில் ரவி எப்படியான அறிவுஜீவி?

அவர் என் பதிவொன்றிலிட்ட பின்னூட்டத்தின் அடிப்படையில் பாவ்லோபிரேயரின் மாற்றுக்கல்வி குறித்த கட்டுரை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பொதுவாக மாற்றுகளை முன்வைக்கவேண்டுமென்றால் நிலவும் பொதுப்புத்திக்கு எதிராகச் செயல்படாமல் அது முடியாது. ஆனால் மாற்றுகள் குறித்து தமிழில் மொழிபெயர்ப்புக் கட்டுரையைக் கொடுக்க முடிகிற ஒருவரால் இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் எப்படிப் பொதுப்புத்தியோடு பேசமுடிகிறது.

ரவிசீனிவாசின் பதிவுகளின் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட இரண்டுமணிநேரமொதுக்கி அவரது 'கண்ணோட்டம்; வலைப்பக்கத்தைப் படித்தேன். பாதியளவு படித்தேன் என்றுவைத்துக்கொள்வோம். ஆனால் அதிலேயே அவரது பிரதிகளில் தொழிற்படும் அரசியல் தெளிவாக விளங்குகிறது.

ஒருமுறை சுபமங்களா இதழில் அ.மார்க்ஸ் ஆட்டோநாம்கள் குறித்து ஒருகட்டுரை எழுதியிருந்தார். அவ்விதழின் மறுவாரம் காலச்சுவடு கண்ணன் 'அ.மா சிறுவிடங்களில் நிகழும் சம்பவங்களை ஊதிப் பூதாகரப்படுத்துகிறார்' என்கிற கருத்துப்பட தெரிவித்திருந்தார். (அதுதான் கண்ணனின் முதல் எழுத்து. பலரைத் தன்பால் ஈர்த்த சுந்தரராமசாமி என்னும் எழுத்தாளரின் மகனுக்கு ஒரு பத்தியேனும் உருப்படியாய் எழுதவியலாமல் போனது இலக்கியச்சோகமே.). அதற்கு மறுவாரம் பதிலளித்துக் கடிதமெழுதியிருந்த பொ.வேல்சாமி, 'ஒருவரின் உடல்நலத்தைச் சோதனையிட சிறிதளவு மலமிருந்தால் போதும், கண்ணனுக்கு ஒரு வண்டியளவு மலம் தேவைப்படுகிறது போலும்' என்று தெரிவித்திருந்தார். (ஆனால் இப்போது பொ.வே வின் கட்டுரைத் தொகுப்பைக் காலச்சுவடு வெளியிடுவது இன்னொரு இலக்கியச்சோகம்). இதேபதிலைத்தான் ரவிசீனிவாசின் எழுத்துக்களுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. மாதிரிக்குச் சில.


/இந்திய அரசு செயலில் பதிலடி கொடுக்காதவரை குண்டு வெடிப்புகள் தொடரும்.இந்தியாவின் சாபக்கேடு முலாய்சிங் யாதவ் போன்ற 'மதசார்ப்பற்ற'வாதிகள். இவர்கள் இஸ்லாமிய தீவீரவாதம் இல்லை, சிமி மீது சந்தேகம்இல்லை என்று கூறிக் கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் வாய்சொல்வீரர் கூட இல்லை.அறிக்கைகள், உரைகள், அனுதாப விஜயங்கள் போதும்.காரியத்தில் காட்டுங்கள், நாங்கள் நம்புகிறோம் என்று இந்தியாவின் குடிமக்கள்குரல் கொடுத்தாலும் கூட இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களா.

மீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தினை ஒழிப்பதில் இந்தியா இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது.

இஸ்ரேலின் கொள்கைகளை,செயல்களை நாம் ஆதரிக்க வேண்டியதில்லை.தீவிரவாதத்தினை எதிர்கொள்வதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இதுஅமெரிக்காவிற்கும் பொருந்தும்/


ஆகமொத்தம் இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லீம்களுக்கு எதிராய்ச் செயல்படுவதுகுறித்தோ அல்லது அமெரிக்கா ஈராக் மறும் ஆப்கான் மீது கட்டவிழ்த்துவிடும் போர் வல்லாதிக்க வெறி குறித்தோ ரவிக்குக் கேள்விகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதனை நியாயப்படுத்தவும் செய்கிறார். இன்னொரு பதிவில் யூதப்படுகொலைகள் குறித்துக் கண்ணீர்வடிக்கும் ரவிதான் இஸ்ரேல் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளிலிருந்து இந்தியாவும் அமெரிக்காவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். தேசபக்தி என்கிற பெயரில் ரவியின் குரல்வளை வழி நாம் அத்வானியின் குரல்களையே கேட்கிறோம்.


/ஈழத் தமிழர் போல் காஷ்மீர் பண்டிட்களின் நிலையும் மோசமானது. உள்நாட்டில் பண்டிட்கள்அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமியதீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு பயந்து ஒட வேண்டியதாயிற்று/


ஈழத்தமிழர்களின் அவலத்தையும் காஷ்மீர் பண்டிட்களின் நிலையையும் ஒப்பிடுவதிலிருந்தே ரவியின் விஷமம் நமக்கு விளங்குகிறது. தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமை, காஷ்மீர்ப்பிரச்சினையில் இந்தியா போட்ட ஒப்பந்தம், இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திவரும் அட்டூழியம் யாவையும் இந்த 'அறிவுஜீவிக்கு'த் தெரியாதா என்ன?


சென்ற சட்டமன்றத் தேர்தலில் பார்ப்பனர் சங்கம் எடுத்த நிலைப்பாடு குறித்து ரவி இப்படி எழுதுகிறார்.

/ஜெயெந்திரர் கைதினை பிராமணர் சங்கம் கண்டித்திருந்தாலும்தேர்தலில் ஜெயலலிதாவிற்கே ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.ஏனெனில் ஒரு பார்பனத்தி ஒருதிராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், இரண்டு முறை முதல்வாரகியிருப்பதும்பார்ப்பனர்களின் எதிரியான வீரமணி போன்றவர்களுக்கு எரிச்சல் தருகிறது/


ஆக மொத்தம் ரவியைப் பொறுத்தவரை ஜெயேந்திரர் கைது கண்டிக்கத்தக்கதுதான். அதுகுறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை. அவருடைய பிரச்சினையெல்லாம் ஏன் அவர்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை என்பதுதான்./ஜெயலலிதா கருணாநிதிக்கு சரியான போட்டியாளர்தான். மேலும் அவர் தன் ஆன்மிக ஈடுபாடுகளை பொதுவில் வைத்தவர். மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்தினை கிண்டல் செய்வது, பிராமணர்களை இழிவாகப் பேசுவது, சிறுபான்மையினருடன் கொஞ்சிக் குலாவுவது என்ற வரையறையை நிராகரித்தவர்.அது மட்டுமல்ல குடுமி வைத்திருக்கும் ஒருவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்து அவரை சட்டமன்ற உறுப்பினரும் ஆக்கியவர்/

நான் சாதிக்கு அப்பாற்பட்டவன் என்று அவ்வப்போது அலறித்துடிக்கிற ரவி குடுமி வைத்த ஒருவர் எம்.எல். ஏ ஆனதும் ஏன் புல்லரிக்கிறார்? ஜெயலலிதா ஒரு திராவிடக்கட்சியின் தலைவியாய் இல்லாமல் பி.ஜே.பி போன்ற ஒரு பார்ப்பனக் கட்சியின் தலைவியாயிருந்து இதையெல்லாம் செய்யமுடியுமா?

/ஜாதி சங்கங்களுக்குத் தேவை இல்லை என்பது என் கருத்து. ஆனால் அனைத்து ஜாதிகளும் சங்கங்கள்,அமைப்புகள் வைத்து தங்களை ஒரு சக்தியாக காட்டிக் கொள்ள முயலும் போது,நேரடியாகவும்,மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபடும் போது இந்த ஜாதி மட்டும் சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. பிராமணர்கள் இட ஒதுக்கீடு போன்றவற்றால் பாதிப்படையும் போது தங்கள் நலன்களை பாதுக்காக்க, உரிமைகளை முன்னிறுத்த ஜாதி அமைப்பு தேவையாகிறது. /


ஆகமொத்தம் ரவியைப் பொறுத்தவரை தலித் அமைப்புகளும் பார்ப்பனச் சங்கமும் ஒன்றுதான். லயன்ஸ்கிளப்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றுதான்.

/ஐ.ஐ.டி உட்பட பல உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு தேவையற்றது, ஆபத்தானது, எதிர்க்கப்பட வேண்டியது. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் கல்வியாளர்கள் உட்பட பலர் இந்த பரிந்துரையினை எதிர்த்துள்ளதாகவும், இன்போஸிஸ் நாராயணமூர்த்தி (ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர்) இதை எதிர்த்திருப்பதாகவும் அறிகிறேன். இந்த எதிர்ப்பு நியாயமானதே. ஜவகர்லால் பல்கலைகழகம், தில்லி பல்கலைகழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இப்போது தலித்,பழங்குடியினருக்குஇருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் 27% ஒதுக்கீடு செய்யும் போது இட ஒதுக்கீடு 49.5 % ஆகிவிடுகிறது. சில கல்வி நிலையங்களில் வேறு சில இட ஒதுக்கீடுகளையும் சேர்த்தால் இது 50%க்கும் மேலாகிவிடுகிறது.

ஐஐடிகளிலும், ஐஐம்களிலும் சேர்வதற்காக சில ஆண்டுகள் கடின உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐஐஎம்களும், ஐஐடிகளும் இன்று உலக அளவில் மதிக்கப்பட முக்கிய காரணம் இவை மிகக் கடினமான நுழைவுத்தேர்விற்குப் பின் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் சாதனைகளால். இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்பட்டோர் என்ற காரணத்தில் சிலருக்கு இட ஒதுக்கீடு செய்வது அவை பெற்றுள்ள மதிப்பினை குறைக்கவே உதவும். ஒருவரின் உழைப்பு,அறிவாற்றல் ஆகியவற்றை விட ஜாதியே முக்கியம் என்றாகிவிடும்/


சென்னை அய்.அய்.டியின் நிலைமையையே எடுத்துக்கொள்வோம். 40 துறைத்தலைவர்களில் அய்ந்துபேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்தவர், ஒரே ஒருவர்தான் தலித், ஒருவர் கூட முஸ்லீம் கிடையாது. மேலும் புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டால் அவர் டாக்டர் வசந்தாகந்தசாமியை அணுகலாம். மற்ற பிரச்சினைகளைக் கூட விடுங்கள், அய்.அய்.டி, அய்.அய்.எம்.எஸ் பிரச்சினைகளில் 'நாங்கள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டோம்' என்று பார்ப்பனர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கமுடியாது. சென்னை அய்.அய்.டி முழுக்க முழுக்க பார்ப்பனப் பண்ணையமாகவே திகழ்கிறது. திருமாவளவனின் தமிழ்த்தேசியம் குறித்த கட்டுரையை வெளியிடும் ரவிசீனிவாசால் தமிழ்த்தேசிய இதழான 'தாகம்' இதழ் சென்னை அய்.அய்.டி குறித்து டாக்டர்.வசந்தாகந்தசாமி அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதத்தை இதழ் முழுக்க வெளியிட்டதே, அதை ரவி படித்திருக்கமாட்டாரா என்ன?

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ரவியின் அறிவும் உணர்வும் ஷங்கர்படங்களைத் தாண்டியதாய் இல்லை. தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை அவை மணிரத்னம் படங்களைத் தாண்டியதாய் இல்லை. உண்மையிலேயே இட ஒதுக்கீட்டால் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ரவி கருதினார் என்றால் பார்ப்பனர்களின் தனிநபர் வருமானம் எவ்வளவுதூரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது, அவர்களின் பணித்தரங்கள், இட ஒதுக்கீடு வந்ததன்பின் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மறுக்கப்பட்ட சதவீதம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடவேண்டும்.

ரவிசீனிவாசுக்கு ஆங்கிலப்புலமையும் நவீன இலக்கியம் குறித்த அறிவும் அமைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இயல்பாகவே பார்ப்பனச்சமூகத்தைச் சேர்ந்த அவரிடம் அதெல்லாம் அமைந்திருப்பதில் வியக்கத்தக்கது ஒன்றுமில்லை. அம்பேத்கர், ஆனந்த் டெல்டும்பே, ரவிக்குமார் போன்றவர்கள் அறிவுஜீவிகளாய் வருவது மட்டுமே ஆச்சரியக்குரியதும் பாராட்டுக்குரியதாகும்.

உண்மையைச் சொல்லப்போனால் ரவிசீனிவாஸ் அறிவுஜீவியென்றாலும் அவர் அருண்ஷோரி, குருமூர்த்தி போன்றவர்களின் தரத்திலமைந்த மரபுசார்ந்த அறிவுஜீவிதான். அதேநேரத்தில் ஹரிஹரன், பின்னூட்டம் பாலா போன்ற அரைகுறைக் கிறுக்கர்களை விடவும் ஆபத்தானவரும் நம் தாக்குதலின் பெரும் இலக்காய் விளங்கவேண்டியவரும் கூட.


* அடைப்புக்குள் இருப்பவை ரவிசீனிவாசின் 'கண்ணோட்டம்' வலைப்பக்கத்தில் உள்ள பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.