தமிழ்மணம் - ஒரு பின்நவீன வலைதிரட்டி?

சுமார் மூன்று வாரங்களாக தமிழ்மணம் பக்கம் வரவில்லை. அதற்குள் பல 'திடுக்கிடும் திருப்பங்கள்' நிகழ்ந்துள்ளன.

அரவிந்தன்நீலகண்டன் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.(வேறு யார் யாரெல்லாம் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் முழுவிவரம் தெரியவில்லை) வலதுசாரிப் பதிவர்களிலேயே குறைந்தபட்சம் தரவுகளோடு எழுதுபவர் அரவிந்தன் தான். மற்ற இந்துத்துவ மற்றும் பார்ப்பனீய பதிவர்களின் பதிவுகள் பெரும்பாலும் ஜல்லிகளே. அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை. அதோடு யாரை நீக்கினாலுமே கண்டிப்பேன் என்ற முறையில் அரவிந்தன்நீலகண்டனை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதைக் கண்டிக்கிறேன்.

நானே தமிழ்மணத்தில் இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் வருகின்றன. ஆனால் 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பட்டியலில் வருவதில்லை. ஏற்கனவே பலமுறை தமிழ்மணத்திற்கு மனுக்கள் அனுப்பியும் அது 'பரீசீலனை'யிலேயே இருக்கிறது. மேலும் கருவிப்பட்டை, கருவேலம்பட்டை என்று தமிழ்மணம் பயன்படுத்தும் அதீத தமிழ் வேறு பயமுறுத்துகிறது.

சரி, அதேபோல பொன்ஸ் விவகாரம். பொன்ஸ் ஒரு இனிய தோழி. அவர் ஒன்றும் பார்ப்பனீயம் இந்துத்துவம் ஆகியவற்றை எதிர்த்து வன்மையாக எழுதுபவர் அல்ல. ஆனால் அப்படி எழுதுபவர்களின் நண்பர் என்பதாலேயோ என்னவோ குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற செய்கைகள் பெண் எழுத்து முயற்சிகளை ஆரம்பத்திலேயே தகர்த்துவிடும் என்பதால் அது நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கதுதான்.

ஆனால் எனக்கு இருக்கும் குழப்பமெல்லாம் வேறு. உண்மையில் யார் உண்மையான பதிவர், யார் போலிப் பதிவர் என்பதே பலசமயம் விளங்கமாட்டேன் என்கிறது.

உண்மைத்தமிழன் என்று ஒரு மொக்கைத் தமிழன் இருக்கிறார். அவர் எங்களூர்க்காரரும் கூட. அவரது பொழுதுபோக்கே நடப்பது என்னவென்றே தெரியாமல் எதையாவது பின்னூட்டம் போட்டு வாங்கிக்கட்டிக்கொள்வதுதான். கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று இவர் போடும் மொக்கைக்குப் பயந்தே செந்தில் உள்பட பல பதிவர்கள் பதிவே போடாமல் இருக்கிறார்கள்.

ஆனால் இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால் உண்மைத்தமிழன் வலையுலகிற்கு வந்தே ஒருமாதம்தான் இருக்கும். ஆனால் அதற்குள் அவர் பெயரில் ஒரு போலி கமெண்ட் வந்துவிட்டது. உண்மைத்தமிழனுக்கே போலி(?).

நல்லவேளை போலிகளை விட எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தெரியும் என்பதாலோ என்னவோ எனக்குப் போலிகள் உருவாகவில்லை.

வலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் பெயரில் நடக்கும் (இரண்டு அல்லது மூன்று பேர் 'சிறப்புரை' நிகழ்த்த மற்றவர்கள் கும்பலாக மந்தைகளாகப் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருக்கும்) ஜெபக்கூட்டத்தினிடையில் இதுபோன்ற தகவல்கள் தீவிரமாக அலசப்படும். அதிலும் தோழர் லக்கிலுக்கிற்கு அவரது அலுவலகம் தொடர்பான விவரங்கள் தெரியுமோ இல்லை, இந்த விவரங்கள் விரல்நுனியில்.

சிலர் போலிடோண்டு என்கிறார்கள். சிலர் டோண்டுவே போலி என்கிறார்கள். ஏமாறாதவன், ஏமாந்தவன், இளிச்சவாயன், ஆதிசேசன், பாதிசேசன் என்று ஒரு மண்ணும் விளங்கவில்லை. சமயங்களில் நாமே உண்மையா போலியா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. எப்படியோ உண்மைக்கும் போலிக்கும் அப்பால், உண்மை, பொய் என்னும் இருமை எதிர்வுகளைத் தகர்த்து உண்மை, போலி ஆகியவற்றிற்கிற்கு இடையிலான கோடுகள் அழிக்கப்படும் பின்நவீனத்துவ யுகத்தில் வாழ்கிறோம் என்பதையே தமிழ்மணத்தில் வெளியாகும் பதிவுகள் உணர்த்துகின்றன.

வாழ்க பின்நவீனத்துவம்!
வளர்க தமிழ்மணம்!
ஓங்குக போலிகள் புகழ்!

14 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  //அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை.//

  ரொம்பவும் அலட்டத்தேவையில்லை..திவா,
  வேறொரு 'கில்மா' பெயரில் வராமலா இருந்துவிட போகிறதுகள்...
  அல்லது, இருக்கிற சிஷ்யக்கேடிகள் தான் போதாதா...?

 2. மருதநாயகம் said...

  //
  சமயங்களில் நாமே உண்மையா போலியா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறத
  //

  எல்லாம் மாயை நண்பா மாயை

 3. அழகிய ராவணன் said...

  நீ என்ன எழுதுனாலும் அத மொதல்ல படிக்கிற ஆளு நாந்தான். தெரிஞ்சுக்கோ

  ஏன்னா நான் ஒரு ரசிகன் :)

 4. Anonymous said...

  அப்பாடா, ஒருவழியா ஒரு பதிவு புரியும்படி, அதுவும் எந்த சார்பும் இல்லாம எழுதிட்டீங்க....வாழ்க...

 5. சென்ஷி said...

  //ஆனால் இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால் உண்மைத்தமிழன் வலையுலகிற்கு வந்தே ஒருமாதம்தான் இருக்கும். ஆனால் அதற்குள் அவர் பெயரில் ஒரு போலி கமெண்ட் வந்துவிட்டது. உண்மைத்தமிழனுக்கே போலி(?).//

  பெரியாளாயிட்டாரு போலருக்கு :)

  சென்ஷி

 6. அழகிய ராவணன் said...

  //.....அதோடு யாரை நீக்கினாலுமே கண்டிப்பேன் என்ற முறையில் அரவிந்தன்நீலகண்டனை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதைக் கண்டிக்கிறேன்.//

  வழிமொழிகிறேன்.

 7. Anonymous said...

  //நல்லவேளை போலிகளை விட எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தெரியும் என்பதாலோ என்னவோ எனக்குப் போலிகள் உருவாகவில்லை.//

  மரியாதையாக இந்த வார்த்தைகளை நீக்க வேண்டுமென கேட்டுக் கொல்கிறோம்.

  கில்மா போளி இயக்கம்
  ட்ரிப்ளிக்கேன்

 8. Anonymous said...

  //https://www2.blogger.com/comment.g?blogID=26087005&postID=1059997055907619098//

  இது உம்மோட கமெண்ட்ஸ் வர பகுதி தானே.

  எங்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்

  போளியாருக்கே போளி விற்கும் குழு
  கிளியனூர்

 9. Anonymous said...

  அரவிந்தன் நீலகண்டன் நீக்கப்படவில்லை.
  அவராகவே திரட்டியிலிருந்து விலகினார்.
  நீக்கப்பட்டார் என்று நீங்கள் சொல்வது தவறான புரிதலையே தரும்.
  இதுபோல் வேறும் பலர் தாங்களாவே விலகிவிட்ட நிலையில், அவர்கள் 'நீக்கப்பட்டார்கள்' என்று வேண்டுமென்று தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் மீது பழிபோடும் வேலையைச் சிலர் செய்துவருகிறார்கள்.
  அதற்குள் நீங்கள் வந்துவிடக்கூடாது.

 10. ஆதி said...

  ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
  நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

  சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

  நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

  எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

  ஜெய்ஹிந்த்!!!

 11. Anonymous said...

  என்னது காந்தி செத்துட்டாரா?

 12. அசுரன் said...

  //அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை.//

  இந்த கருத்து ஏற்புடையதே....

  உண்மையில் அரவிந்தன் ஓடி போய் விட்டார். இங்கு தமிழ்மணத்தில் தான் பார்ப்ப்னியத்திற்க்கு எதிரான கருத்துக்களுக்கும் ஜனநாயக வெளி கிட்டுகிறது. எனவே அவரது பொய்யுரைகள் உடைக்கப்படுவதுடன், அவர்கள்து நிலைப்பாடுகளின் மீதான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வக்கின்றி அவமானப்படுகிறார்கள். இன்னிலையில் பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு புகலிடமாக இருக்கும் தேன் கூடு தளத்தில் அதற்க்கு எதிர் கருத்து வைப்பவர்களுக்கு இடமில்லை என்கிற சாதகமான அம்சமே இங்கிருந்து அவரை ஓட வைத்துள்ளது.

  ஒரு அன்பர் இங்கு குறிப்பிட்டது போல தமிழ்மண ஜனநாயக வெளியில் பாசிசம் மூச்சடைத்துப் போய் எப்பொழுதடா வெளியே போவோம் என்று காத்திருந்தது. ஒரு சாக்கு கிடைத்தவுடன் ஓடி விட்டார்கள். பயந்தாங்கொள்ளிகள், கோழைகள்

  ஓடிப் போன அரவிந்தன் என்று ஒரு பதிவு போடுகிறேன் விரைவில். பின்ன சும்ம விடலாமா இந்த சும்பன்களை?

  அசுரன்

 13. Anonymous said...

  தமிழ்மணம் Wednesday, April 18, 2007 அறிவிப்புகள் அதில இன்னா சொல்லுதுன்னா...
  //பதிவர் அரவிந்தன் நீலகண்டன் எமது முந்தைய இடுகையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வாயிலாகவும், தன் பதிவில் வெளியிட்டுள்ள இடுகை, அதில் அனுமதித்துள்ள பின்னூட்டங்கள் வாயிலாகவும் தமிழ்மணத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவே உறுதியாக நம்புகிறோம். அதேபோல அவர் தமிழ்மணத்திற்கெதிரான நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கும் இல்லாததாலும், அத்தகைய பிரச்சாரத்திற்கு தமிழ்மணத்தையே பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டும் அவருடைய பதிவு தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகிறது.//
  நம்ம அசுரன் அண்ணாச்சி என்னா சொல்லிதாருன்னா..
  //உண்மையில் அரவிந்தன் ஓடி போய் விட்டார்.//
  நம்ம அனானி இன்னா புரிதல் தராருன்னா..
  //அரவிந்தன் நீலகண்டன் நீக்கப்படவில்லை. அவராகவே திரட்டியிலிருந்து விலகினார். நீக்கப்பட்டார் என்று நீங்கள் சொல்வது தவறான புரிதலையே தரும்.//
  அதுனால மிதக்கும் வெளி இன்னா செய்யணும்னா 'தமிழ்மணம் நீக்கியதாக இருந்தால் நீக்கப்பட்டது அரவிந்தனாக இருந்தால் அது விலகியதாகவே இருக்கட்டும் அது ஓடியதாக இருக்கட்டும்' அப்படீன்னு பின்நவீனத்துவ கவிஜய கிறுக்கி தமிழ்மணத்துக்கு ஆதரவு தரணும். இன்னா நான் சொல்றது?
  s.aravindan neelakandan

 14. குருத்து said...

  அரவிந்தன் போனது வருத்தம்தான். மற்ற அவருடைய சகாக்கள் எல்லாம் வெத்துவேட்டு என்கிறீர்கள். இந்த கருத்தில் நானும் உடன்படுகிறேன்.