ஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை?நம் வலையுலகிற்குத் தொடர்பில்லாத ஒரு ஈழத்து நண்பர் என்னை அவர் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார்.

வீட்டில் நுழைந்தவுடன் வீட்டில் இருப்பவர்களை ஒவ்வொருவராக நண்பர் அறிமுகப்படுத்திக்கொண்டுவந்தார். குளியலறையிலிருந்து இரண்டுபேர், படிப்பக அறையிலிருந்து இரண்டுபேர், சமையலையிருந்து மூன்றுபேர் என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்துபேர். அனேகமாக டாய்லெட்டில் இரண்டுபேர் வசிப்பார்கள் என்று நினைத்தேன். நல்லவேளை யாருமில்லை.

ராவும் இந்திய அரசும் சந்தேகப்படுவது சரிதான். அவர் வீட்டில் ஒரு மினி தமிழீழமே இருந்தது. இந்தியாவிற்குள் தனி ஈழம்.

பிறகு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம், தவறு, பேசிக்கொண்டிருந்தார்கள். பாதி என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பேச்சினிடையே நண்பர் என்னைச் சுட்டிக்காட்டி தன் வீட்டாரிடம் 'இவர் சரியான விசர்' என்றார். ஏதோ பாராட்டுகிறார் என்று தெரிகிறது. ஆனால் என்ன என்றுதான் புரியவில்லை. விசர், விஷன் (vision), ஏதோ தொலைநோக்குப் பார்வை உள்ளவர் என்று நம்மை நல்லவிதமாகச் சொல்கிறார் என்று எடுத்துக்கொண்டேன். ஆனால் பிற வார்த்தைகள் எல்லாம் திட்டுகிறார்களா, பாராட்டுகிறார்களா என்று இனங்காணமுடியாமலிருந்தது.

ஒருவழியாகச் 'சாப்பிடலாமா?' என்றார். நான் ஒருவித ஆவலுடன் நமக்குப் பழக்கமில்லாத ஒரு புதிய உணவுவகைகளைச் சாப்பிடப்போகிறோம் என்று ஆவலுடன் இருந்தேன். எல்லோரும் உணவுமேஜையில் அமர்ந்தோம்.


குழம்பு கிடையாது. கறி வருவலை அப்படியே சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட வேண்டியதுதான். முதல்வாய் எடுத்துவைத்தேன். பயங்கரக் காரம். கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

கஷ்டப்பட்டு இரண்டாவது வாயையும் எடுத்துவைத்துவிட்டேன். காரம் தலைக்கேறி புரையேறத் தொடங்கியது. நண்பர் 'யாரோ நினைக்கிறார்கள்' என்றார். எனக்கோ செத்துப்போன என் தாத்தா நினைப்பதுபோல இருந்தது. "ஏண்டா பேராண்டி, இன்னும் பூமியில என்ன பண்ணிக்கிட்டிருக்க? சீக்கிரம் வந்துசேரடா" என்று அழைப்பு விடுப்பதுபோல இருந்தது.

தட்டுத்தடுமாறி மூன்றாவது வாயை எடுத்துவைக்கும்போது செத்துப்போன பாட்டியின் குரலும் சேர்ந்து கேட்டது. பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் கொலைவெறியோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சமைப்பதே கொலைவெறியோடு சமைப்பார்கள் போல. எப்படி இவ்வளவு காரத்தைச் சாப்பிடுகிறார்கள்?. ஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை என்பதற்கான காரணம் எனக்கு விளங்கியது. நான் மட்டும் கையில் ஸ்பூன் வைத்திருக்க அவர்கள் கத்தி, அரிவாள் ஆகியவற்றோடு சாப்பிடுவதுபோல ஒரு பிரமை.

அந்தநேரத்தில்தான் நண்பனின் சகோதரி 'சொதி ஊற்றிக்கங்க' என்று ஒரு திரவத்தை ஊற்றினார். பயந்துகொண்டு ஊற்றிய எனக்கு அதுதான் இதமாக இருந்தது. காரமேயில்லாமல் அருமையாக, காரத்தால் காயம்பட்ட என் கண்ணீர் ஆற்றும் மருந்தாக சொதி இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். 'கதிரையைக் கொண்டுவாருங்கள்' என்றார் நண்பர். எனக்கோ ஏதோ காரமாகச் சாப்பிடக் கொண்டுவருகிறார்கள்போல என்றுநினைத்துப் பயந்துபோனேன். பிறகுதான் கதிரை என்றால் நாற்காலி என்று தெரிந்து நிம்மதியானேன்.

"நீங்கள் ஆறுதலாகச் சாப்பிட்டிருக்கலாமே" என்றார் நண்பர். (ஆறுதலாக என்றால் 'நிதானமாக' என்று அர்த்தமாம்)

நான் 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டால் என் வீட்டிற்குத்தான் யாராவது ஆறுதல் சொல்ல வரவேண்டியிருக்கும் அல்லது பிளாக்கில் யாராவது இரங்கல்பதிவு போடவேண்டியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் அவர் விசர், கிசர் என்று புரியாமல் பாராட்டுவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்துக் கிளம்பினேன். "சரி, நான் போய்வருகிறேன்" என்றேன்.

"ஏன், இருந்து இரவு சாப்பிட்டுப் போகலாமே" என்றார்.

நான் கிலியடித்துத் தப்பித்து ஓடிவந்தேன்.

29 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  ஹி ஹி ஹி இது தேவையா திவா? நல்லா மாட்டிகிட்டிங்களா?
  ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் இருக்கு. ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் இப்படி சமைப்பதில்லை..அவரவர் குடும்ப்த்திற்க்கு ஏற்ப காரம் மாறுபடும். எங்க வீட்டில் காரம் அதிகம் போடுவதில்லை. காரணம் உங்களை போல பலர் எங்க வீட்டில் உள்ளார்கள். நானும் இப்படி அனுபவித்திருக்கின்றேனக்கும்:(

  என்னுடைய படத்தை கேளாமல் எடுத்தத்ற்காக உங்களுக்கு காரம் அதிகம் போட்ட குழம்பு அனுப்பி வைக்கப்படும்.

 2. Anonymous said...

  ஹி ஹி ஹி இது தேவையா திவா? நல்லா மாட்டிகிட்டிங்களா?
  ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் இருக்கு. ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் இப்படி சமைப்பதில்லை..அவரவர் குடும்ப்த்திற்க்கு ஏற்ப காரம் மாறுபடும். எங்க வீட்டில் காரம் அதிகம் போடுவதில்லை. காரணம் உங்களை போல பலர் எங்க வீட்டில் உள்ளார்கள். நானும் இப்படி அனுபவித்திருக்கின்றேனக்கும்:(

  என்னுடைய படத்தை கேளாமல் எடுத்தத்ற்காக உங்களுக்கு காரம் அதிகம் போட்ட குழம்பு அனுப்பி வைக்கப்படும்.

 3. சயந்தன் said...

  //அந்தநேரத்தில்தான் நண்பனின் சகோதரி 'சொதி ஊற்றிக்கங்க' என்று ஒரு திரவத்தை ஊற்றினார். பயந்துகொண்டு ஊற்றிய எனக்கு அதுதான் இதமாக இருந்தது. காரமேயில்லாமல் அருமையாக, காரத்தால் காயம்பட்ட என் கண்ணீர் ஆற்றும் மருந்தாக சொதி இருந்தது.//

  மேலதிக தகவல்களுக்கு.. நீங்கள் இந்தச் சுட்டி சென்று உரையாடலை கேட்க வேண்டும். :))
  http://sayanthan.blogspot.com/2007/03/blog-post_28.html

 4. சினேகிதி said...

  romba nonthupoi irukreenga pola :-)) anal konjam exagerate panidengelo endo santheham :-))) unga veedila ellam kaarama samaikave maadengela??

 5. Anonymous said...

  வேண்டுமென்றே ஈழத்தவரைக் கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதா? எனக்கு வலைபதியும் உலகத்தோடு எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வப்போது கண்ணில் படும் பதிவுகளை வாசிப்பதை விட... இது ஈழத்தவரைக் கிண்டல் செய்ய வெளிக்கிட்டு உங்களை கேவலப்படுத்தியுள்ள ஒரு பதிவு...

 6. Anonymous said...

  இந்தியாவில் தனி ஈழம் கண்ட அந்த குடும்பத்தின் சமையல் ஜொள்ளு ஊற்றுகிறது...இது போன்ற காரச்சாப்பாட்டை ஏற்பாடு செய்ய முடியுமா எனக்கும் ?

 7. மிதக்கும்வெளி said...

  தவறுதான் தூயா, ஆனால் உங்கள் பிளாக்கிலிருந்துதான் எடுத்தேன் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? ((-

 8. மிதக்கும்வெளி said...

  ஸ்பீக்கர் இல்லாததால் கேட்கமுடியவில்லை சயந்தன், ஏதும் 'காரசாரமான' உரையாடலா?

 9. மிதக்கும்வெளி said...

  /வேண்டுமென்றே ஈழத்தவரைக் கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதா? எனக்கு வலைபதியும் உலகத்தோடு எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வப்போது கண்ணில் படும் பதிவுகளை வாசிப்பதை விட... இது ஈழத்தவரைக் கிண்டல் செய்ய வெளிக்கிட்டு உங்களை கேவலப்படுத்தியுள்ள ஒரு பதிவு... /

  மன்னிக்கவும். வெறுமனே நகைச்சுவைக்காகவே இதை எழுதியிருக்கிறேன். ஈழத்து நண்பர்கள் யாராவதின் மனம் புண்பட்டால் வருந்துகிறேன், இந்தப் பதிவையும் கூட எடுத்துவிடுகிறேன்.

 10. மிதக்கும்வெளி said...

  /இந்தியாவில் தனி ஈழம் கண்ட அந்த குடும்பத்தின் சமையல் ஜொள்ளு ஊற்றுகிறது...இது போன்ற காரச்சாப்பாட்டை ஏற்பாடு செய்ய முடியுமா எனக்கும் ? /

  விதி யாரை விட்டது? சென்னை வாங்க, ஏற்பாடு செய்கிறேன்.

 11. பொன்ஸ்~~Poorna said...

  சுகுணா,
  இதேபோல், இஸ் உஸ்ஸென்று நண்பர் வீட்டில் சாப்பிட்ட அனுபவத்தை எழுத நினைத்தேன். அனானி பின்னூட்டத்தைப் படித்தபின் இந்தப் பின்னூட்டம் இடுவதா வேண்டாமா என்று தெரியவில்லை..

 12. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

  ரொம்ப நொந்துட்டீங்க போலருக்கு. :))

 13. லிவிங் ஸ்மைல் said...

  //// நம் வலையுலகிற்குத் தொடர்பில்லாத ஒரு ஈழத்து நண்பர் என்னை அவர் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார். ////

  /// பேச்சினிடையே நண்பர் என்னைச் சுட்டிக்காட்டி தன் வீட்டாரிடம் 'இவர் சரியான விசர்' என்றார் ///

  அதப்பிடி இத்தனநாளா உங்க போஸ்ட் படிக்கிற எங்களுக்கே இன்னும் கன்பர்ம் பண்ணமுடியல. பண்ணாலும் வாய்விட்டு சொல்ல முடியல... அவங்களுக்கு எப்பிடி..?!

  சரி... எப்படியோ உண்மைய யார் சொன்னாலும் ஏத்துக்குனுமில்ல..!!

  விசர்க்கு, அர்த்தாயித்தா இல்வா...?!

 14. லிவிங் ஸ்மைல் said...

  //// நம் வலையுலகிற்குத் தொடர்பில்லாத ஒரு ஈழத்து நண்பர் என்னை அவர் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார். ////

  /// பேச்சினிடையே நண்பர் என்னைச் சுட்டிக்காட்டி தன் வீட்டாரிடம் 'இவர் சரியான விசர்' என்றார் ///

  அதப்பிடி இத்தனநாளா உங்க போஸ்ட் படிக்கிற எங்களுக்கே இன்னும் கன்பர்ம் பண்ணமுடியல. பண்ணாலும் வாய்விட்டு சொல்ல முடியல... அவங்களுக்கு எப்பிடி..?!

  சரி... எப்படியோ உண்மைய யார் சொன்னாலும் ஏத்துக்குனுமில்ல..!!

  விசர்க்கு, அர்த்தாயித்தா இல்வா...?!

 15. Anonymous said...

  திரும்பவும் அங்க சாப்பிடப்போனா நீர் ஒரு விசரனாத்தான் இருப்பீர்.
  (சரியான அர்த்தம் தெரிந்திருக்குமெண்டு நினைக்கிறேன்)

  சொதி பற்றின சயந்தனின் கலந்துரையாடலைக் கேட்டால் மேலதிகமாக சிலவிடயங்கள் தெரியவரலாம்.

 16. மிதக்கும்வெளி said...

  /சரி... எப்படியோ உண்மைய யார் சொன்னாலும் ஏத்துக்குனுமில்ல..!!

  /

  எனக்கு எதிரி எங்கேயும் தூரத்தில இல்லன்னு புரிஞ்சுபோச்சு.

 17. Anonymous said...

  சுகுனா,பொன்ஸ், நம்ம அனானி நன்பர் பதிவின் நகைச்சுவையை புரிந்துகொள்ளாமல் எழுதிவிட்டார்...I think அதை சீரியஸாக எடுக்கவேண்டியதில்லை...

  இலைக்காரன் நாராயண மூர்த்தி பற்றி எழுதியதுக்கு இண்போஸிஸ் மக்கள் சண்டை போட்ட மாதிரிதான் இதுவும்...

  சுகுனா - நீங்க பதிவை எல்லாம் எடுக்க அவசியம் இல்லை....

  பொன்ஸ் - உங்கள் அனுபவம் ப்ளீஸ்..

  சென்னைக்கு ஏப்ரல் 22 ல் அவங்க வீட்டில் ஒரு துண்டு போடுங்க....ஒரு கட்டு கட்டுவோம்...

 18. லக்கிலுக் said...

  நானும் அக்குடும்பத்தாரை சந்திக்க வேண்டும்.

  எனினும் எனக்கு விருந்தோம்பல் எல்லாம் வேண்டாம். நான் அய்யராத்து பையன். முழு சைவம். கறிச்சோறு எல்லாம் சாப்பிடப்படாது :(

  பதிவின் வாயிலாக புரிந்து கொண்டது. "ஈழத்தில் இருக்கும் தமிழனாவது சூடுசொரணையோடு இருக்கிறான்"

 19. லக்கிலுக் said...

  //விசர்க்கு, அர்த்தாயித்தா இல்வா...?! //

  லிவிங் ஸ்மைல் சிஸ்டர்!

  மொதல்ல காம்ரேடுக்கு அர்த்தம் சொல்லுங்க. நேத்து தாவு தீர்ந்துடுச்சி :-)

 20. Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 21. லிவிங் ஸ்மைல் said...

  என் ஹாஸ்டலில் ஒரு ஈழப்பெண் உண்டு.. எனது சாப்பட்டை சுவைத்துப் பார்த்து அய்ய, காரம் இல்லை உப்பு இல்லை என்று கிண்டல் செய்வால்..

  சில சமயம் அவள் காரச் சட்னி அறைக்கும் போது (இரண்டு பேருக்கு 8-10 வரமிளகா) நேர்ல பார்த்து டரியல் ஆனதுண்டு பலமுறை.. இதுல அக்கா, மிளகா போதுமே..? எண்டு கேக்கேக்க என்னிட்டம் பதிலே கிடையாது...

  // லக்கிலுக் said...
  பதிவின் வாயிலாக புரிந்து கொண்டது. "ஈழத்தில் இருக்கும் தமிழனாவது சூடுசொரணையோடு இருக்கிறான்" //

  சூடு சொரணை பெற ஏப்ரல் 22 செ.ர.வுடன் சேர்ந்து நீங்களும் துண்டு போடலாமே

 22. நளாயினி said...

  சாப்பிடும் போதும் கொலைவெறியோடு யாராவது சாப்பிடுவார்களா?உண்மையில் நீங்கள் சாப்பாட்டிலேயே குறியாக இருந்திருக்கிறீங்கள் என்பது புரிகிறது. வாயை திறந்த சாப்பிட தெரிந்த உங்களுக்கு உறைப்பு என சொல்லக் குhட தெரியாதா? ம்.. அடுத்து ரொயிலெற்றில் வசிப்பதாகவும் ஒரு நக்கலா? கதிரை என சொன்னால் எதுவுமே புரியாதா? அடாh. திறமையின் சிகரம் நீங்கள். ஆறுதலாக சாப்பிடுங்கள் என சொல்லி இருப்பது ஆசுவாசமாக ருசித்த சாப்பிடுங்கள் என்பது அற்தம். இது குhட தெரியாதா உங்களுக்கு.தமிழ் குhடவா உங்களுக்கு புரியாது.ஓ அடுத்ததென்ன அருவாள் கத்தியோடை கொலை வெறியொடை சாப்பிடுறதா? அடாh கற்பனையின் சிகம் நீங்கள். இப்படிக் குhடவா கற்பனை பண்ணுவார்கள். பாத்து ஒரு நல்ல வைத்தியரை பாருங்கள். தமிழில் தானே பேசினார்கள். சிங்களத்திலா பேசினார்கள். இல்லையே. தமிழும் விழங்காதோ? நல்லாவே ஈழத்தவரை நக்கலடிச்சிட்டு உங்களை ஏலம் போட்டு வித்திருக்கிறியள். சரியான விசரப்பா நீர்.

 23. Anonymous said...

  ஏன் திவா, இதை கண்டுபிடிக்க நான் என்ன ஈழத்தில் இருந்து புலனாய்வுபிரிவையா அழைத்து வரமுடியும்!!! இது நான் செய்தது, நான் எடுத்த படம், என்னோட ப்ளொக்கில் நான் போட்டதாக்கும்...

  பேசன் ட் நகரில் /அருகாமையில் ஒரு உணவகம். அப்படி ஒரு காரம் நான் சாப்பிட்டதே இல்லை..ஆனால் காரத்தில் சுவை அதிகம்..இல்லையா??

 24. Anonymous said...

  Dear 'Anony' / Ms. Nalayini,

  Before write / take such steps you should know / read about the person who wrote this or read his previous posts.

  Why can't you take this as a funny like Thooya, Sayanthan, Mathy and others ?.

  Don't be serioius.

 25. மிதக்கும்வெளி said...

  /பேசன் ட் நகரில்/

  சென்னை பெசண்ட்நகரா?

 26. மிதக்கும்வெளி said...

  அன்பின் இனிய நளாயினி,
  மேற்கண்டபதிவு என்னின் அனுபவத்தின் மெல்லிய சரடிலிருந்து புனைவாய் உருவாக்கப்பட்டது. வாசிப்பின் சுவாரசியம் கருதி சற்று மிகைப்படுத்தியிருக்கிறேன். மேலும் கொலைவெறி என்பது வெறுமனே பகிடிக்காகச் சொல்லப்படும் சினிமாவிலிருந்து நடைமுறை வாழ்க்கைக்குள்ளும் இடம்பெயர்ந்த சொல். எனவே இதை நீங்கள் இவ்வளவு சீரியசாகப் பார்க்கவேண்டியதில்லை என்றே கருதுகிறேன். மேலும் இந்தப் பதிவிற்கு சம்பந்தப்பட்டுள்ள ஈழத்துநண்பருக்கும் இதை வாசித்துக்காட்டினேன். அவரும் ரசித்துச் சிரித்தார். உண்மையில் உங்கள் மனது புண்பட்டிருந்தால் மீண்டும் மன்னிப்புகளும் வருத்தங்களும்.

  பிரியங்களுடன்
  சுகுணாதிவாகர்.

 27. மிதக்கும்வெளி said...

  /பேசன் ட் நகரில்/

  சென்னை பெசண்ட்நகரா?

 28. வரவனையான் said...

  என்ன நண்பா ! பின்னூட்ட கயமை பொங்கி வழியுது பதிவில் :)))))))))))


  சின்னபிள்ளைங்க பொம்மையை பறித்தது போல் தூயாட படத்தை பறித்து அழ வேற வைக்கிறீர்.

 29. Anonymous said...

  மிதக்கும் வெளி said...

  /பேசன் ட் நகரில்/

  சென்னை பெசண்ட்நகரா?
  //
  அதே தான் திவா...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவும் உறைக்குது..ஆனால் சுவை அதிகம்.  //

  வரவனையான் said...

  சின்னபிள்ளைங்க பொம்மையை பறித்தது போல் தூயாட படத்தை பறித்து அழ வேற வைக்கிறீர்.
  //

  வரவனை இங்க தான் இருக்கிங்களாக்கும்.. :P