முகம் பார்க்கப்படும் காலடிச்சுவடுகள்நீங்கள் காதலிக்கும்
உங்கள் காலடிச்சுவடுகள்
அழிந்துபோகின்றன
அலையாலோ
மழையாலோ
சிறுகுழந்தையின் மூத்திரத்தாலோ.
அவை வெறும்
மணல்துகள்தான் என்பதையே
அவை சொல்லிச்செல்கின்றன.

3 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  அருமையான பின்னவீனத்துவ முன்சோக காதல் கவிதை...!!!

  நான் ரசித்தேன்..!!!!!!!!

 2. Anonymous said...

  நன்று.
  "அவை வெறும்
  மணல்துகள்தான் என்பதையே
  அவை சொல்லிச்செல்கின்றன"
  இல்லாதிருந்தால் இன்னமும் சிறப்பாவிருந்திருக்கும்.

 3. Anonymous said...

  காலடிச்சுவடுகள் காலச்சுவடுகளாக மாறுவதில்தான் மனிதனின் சாதனை இருக்கிறது. அதை விட்டு உயிரற்ற கட்டிடங்களையும் உடலோடு போய்விடும் ஆசைகளையும் மனிதன் வாழ்நாள் முழுவதும் கட்டிக்கொண்டு அழுவது, அறியாமைதான்.