ரவிசீனிவாசின் பிரதிகள் - ஒரு கட்டவிழ்ப்பு

ரவிசீனிவாஸ் தன்னை எப்போதும் நடுநிலையாளராகவும் அறிவுஜீவியாகவும் காட்டிக்கொள்பவர். அவர் ஆரம்பகாலங்களில் பல சிறுபத்திரிகைகளில் பல முக்கியமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால் அப்படி ஒரு மாற்றுப்பாதையைத் தேடிப்போனவர் ஏன் ஒரு சனாதனப் படுகுழியில் விழ நேரிட்டது என்று ஆராயவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.


எட்வர்ட்சேத் அறிவுஜீவிகளை இருவகையாகப் பிரிப்பார். சமூகத்தின் இருப்பில் சிறிதும் சலனம் ஏற்படாதவாறு அதைக் கட்டிக்காக்கும் மரபுசார்ந்த அறிவுஜீவிகள், மற்றொருவகையினர் சமூகத்தின் இருப்பைக் குலைக்கப் பல முன்னெடுப்புகளை முன்வைக்கும் உயிர்ப்புமிக்க அறிவுஜீவிகள். இதில் ரவி எப்படியான அறிவுஜீவி?

அவர் என் பதிவொன்றிலிட்ட பின்னூட்டத்தின் அடிப்படையில் பாவ்லோபிரேயரின் மாற்றுக்கல்வி குறித்த கட்டுரை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பொதுவாக மாற்றுகளை முன்வைக்கவேண்டுமென்றால் நிலவும் பொதுப்புத்திக்கு எதிராகச் செயல்படாமல் அது முடியாது. ஆனால் மாற்றுகள் குறித்து தமிழில் மொழிபெயர்ப்புக் கட்டுரையைக் கொடுக்க முடிகிற ஒருவரால் இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் எப்படிப் பொதுப்புத்தியோடு பேசமுடிகிறது.

ரவிசீனிவாசின் பதிவுகளின் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட இரண்டுமணிநேரமொதுக்கி அவரது 'கண்ணோட்டம்; வலைப்பக்கத்தைப் படித்தேன். பாதியளவு படித்தேன் என்றுவைத்துக்கொள்வோம். ஆனால் அதிலேயே அவரது பிரதிகளில் தொழிற்படும் அரசியல் தெளிவாக விளங்குகிறது.

ஒருமுறை சுபமங்களா இதழில் அ.மார்க்ஸ் ஆட்டோநாம்கள் குறித்து ஒருகட்டுரை எழுதியிருந்தார். அவ்விதழின் மறுவாரம் காலச்சுவடு கண்ணன் 'அ.மா சிறுவிடங்களில் நிகழும் சம்பவங்களை ஊதிப் பூதாகரப்படுத்துகிறார்' என்கிற கருத்துப்பட தெரிவித்திருந்தார். (அதுதான் கண்ணனின் முதல் எழுத்து. பலரைத் தன்பால் ஈர்த்த சுந்தரராமசாமி என்னும் எழுத்தாளரின் மகனுக்கு ஒரு பத்தியேனும் உருப்படியாய் எழுதவியலாமல் போனது இலக்கியச்சோகமே.). அதற்கு மறுவாரம் பதிலளித்துக் கடிதமெழுதியிருந்த பொ.வேல்சாமி, 'ஒருவரின் உடல்நலத்தைச் சோதனையிட சிறிதளவு மலமிருந்தால் போதும், கண்ணனுக்கு ஒரு வண்டியளவு மலம் தேவைப்படுகிறது போலும்' என்று தெரிவித்திருந்தார். (ஆனால் இப்போது பொ.வே வின் கட்டுரைத் தொகுப்பைக் காலச்சுவடு வெளியிடுவது இன்னொரு இலக்கியச்சோகம்). இதேபதிலைத்தான் ரவிசீனிவாசின் எழுத்துக்களுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. மாதிரிக்குச் சில.


/இந்திய அரசு செயலில் பதிலடி கொடுக்காதவரை குண்டு வெடிப்புகள் தொடரும்.இந்தியாவின் சாபக்கேடு முலாய்சிங் யாதவ் போன்ற 'மதசார்ப்பற்ற'வாதிகள். இவர்கள் இஸ்லாமிய தீவீரவாதம் இல்லை, சிமி மீது சந்தேகம்இல்லை என்று கூறிக் கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் வாய்சொல்வீரர் கூட இல்லை.அறிக்கைகள், உரைகள், அனுதாப விஜயங்கள் போதும்.காரியத்தில் காட்டுங்கள், நாங்கள் நம்புகிறோம் என்று இந்தியாவின் குடிமக்கள்குரல் கொடுத்தாலும் கூட இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களா.

மீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தினை ஒழிப்பதில் இந்தியா இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது.

இஸ்ரேலின் கொள்கைகளை,செயல்களை நாம் ஆதரிக்க வேண்டியதில்லை.தீவிரவாதத்தினை எதிர்கொள்வதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இதுஅமெரிக்காவிற்கும் பொருந்தும்/


ஆகமொத்தம் இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லீம்களுக்கு எதிராய்ச் செயல்படுவதுகுறித்தோ அல்லது அமெரிக்கா ஈராக் மறும் ஆப்கான் மீது கட்டவிழ்த்துவிடும் போர் வல்லாதிக்க வெறி குறித்தோ ரவிக்குக் கேள்விகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதனை நியாயப்படுத்தவும் செய்கிறார். இன்னொரு பதிவில் யூதப்படுகொலைகள் குறித்துக் கண்ணீர்வடிக்கும் ரவிதான் இஸ்ரேல் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளிலிருந்து இந்தியாவும் அமெரிக்காவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். தேசபக்தி என்கிற பெயரில் ரவியின் குரல்வளை வழி நாம் அத்வானியின் குரல்களையே கேட்கிறோம்.


/ஈழத் தமிழர் போல் காஷ்மீர் பண்டிட்களின் நிலையும் மோசமானது. உள்நாட்டில் பண்டிட்கள்அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமியதீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு பயந்து ஒட வேண்டியதாயிற்று/


ஈழத்தமிழர்களின் அவலத்தையும் காஷ்மீர் பண்டிட்களின் நிலையையும் ஒப்பிடுவதிலிருந்தே ரவியின் விஷமம் நமக்கு விளங்குகிறது. தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமை, காஷ்மீர்ப்பிரச்சினையில் இந்தியா போட்ட ஒப்பந்தம், இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திவரும் அட்டூழியம் யாவையும் இந்த 'அறிவுஜீவிக்கு'த் தெரியாதா என்ன?


சென்ற சட்டமன்றத் தேர்தலில் பார்ப்பனர் சங்கம் எடுத்த நிலைப்பாடு குறித்து ரவி இப்படி எழுதுகிறார்.

/ஜெயெந்திரர் கைதினை பிராமணர் சங்கம் கண்டித்திருந்தாலும்தேர்தலில் ஜெயலலிதாவிற்கே ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.ஏனெனில் ஒரு பார்பனத்தி ஒருதிராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், இரண்டு முறை முதல்வாரகியிருப்பதும்பார்ப்பனர்களின் எதிரியான வீரமணி போன்றவர்களுக்கு எரிச்சல் தருகிறது/


ஆக மொத்தம் ரவியைப் பொறுத்தவரை ஜெயேந்திரர் கைது கண்டிக்கத்தக்கதுதான். அதுகுறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை. அவருடைய பிரச்சினையெல்லாம் ஏன் அவர்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை என்பதுதான்./ஜெயலலிதா கருணாநிதிக்கு சரியான போட்டியாளர்தான். மேலும் அவர் தன் ஆன்மிக ஈடுபாடுகளை பொதுவில் வைத்தவர். மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்தினை கிண்டல் செய்வது, பிராமணர்களை இழிவாகப் பேசுவது, சிறுபான்மையினருடன் கொஞ்சிக் குலாவுவது என்ற வரையறையை நிராகரித்தவர்.அது மட்டுமல்ல குடுமி வைத்திருக்கும் ஒருவருக்கு தேர்தலில் வாய்ப்பளித்து அவரை சட்டமன்ற உறுப்பினரும் ஆக்கியவர்/

நான் சாதிக்கு அப்பாற்பட்டவன் என்று அவ்வப்போது அலறித்துடிக்கிற ரவி குடுமி வைத்த ஒருவர் எம்.எல். ஏ ஆனதும் ஏன் புல்லரிக்கிறார்? ஜெயலலிதா ஒரு திராவிடக்கட்சியின் தலைவியாய் இல்லாமல் பி.ஜே.பி போன்ற ஒரு பார்ப்பனக் கட்சியின் தலைவியாயிருந்து இதையெல்லாம் செய்யமுடியுமா?

/ஜாதி சங்கங்களுக்குத் தேவை இல்லை என்பது என் கருத்து. ஆனால் அனைத்து ஜாதிகளும் சங்கங்கள்,அமைப்புகள் வைத்து தங்களை ஒரு சக்தியாக காட்டிக் கொள்ள முயலும் போது,நேரடியாகவும்,மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபடும் போது இந்த ஜாதி மட்டும் சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. பிராமணர்கள் இட ஒதுக்கீடு போன்றவற்றால் பாதிப்படையும் போது தங்கள் நலன்களை பாதுக்காக்க, உரிமைகளை முன்னிறுத்த ஜாதி அமைப்பு தேவையாகிறது. /


ஆகமொத்தம் ரவியைப் பொறுத்தவரை தலித் அமைப்புகளும் பார்ப்பனச் சங்கமும் ஒன்றுதான். லயன்ஸ்கிளப்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றுதான்.

/ஐ.ஐ.டி உட்பட பல உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு தேவையற்றது, ஆபத்தானது, எதிர்க்கப்பட வேண்டியது. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் கல்வியாளர்கள் உட்பட பலர் இந்த பரிந்துரையினை எதிர்த்துள்ளதாகவும், இன்போஸிஸ் நாராயணமூர்த்தி (ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர்) இதை எதிர்த்திருப்பதாகவும் அறிகிறேன். இந்த எதிர்ப்பு நியாயமானதே. ஜவகர்லால் பல்கலைகழகம், தில்லி பல்கலைகழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இப்போது தலித்,பழங்குடியினருக்குஇருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் 27% ஒதுக்கீடு செய்யும் போது இட ஒதுக்கீடு 49.5 % ஆகிவிடுகிறது. சில கல்வி நிலையங்களில் வேறு சில இட ஒதுக்கீடுகளையும் சேர்த்தால் இது 50%க்கும் மேலாகிவிடுகிறது.

ஐஐடிகளிலும், ஐஐம்களிலும் சேர்வதற்காக சில ஆண்டுகள் கடின உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐஐஎம்களும், ஐஐடிகளும் இன்று உலக அளவில் மதிக்கப்பட முக்கிய காரணம் இவை மிகக் கடினமான நுழைவுத்தேர்விற்குப் பின் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் சாதனைகளால். இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்பட்டோர் என்ற காரணத்தில் சிலருக்கு இட ஒதுக்கீடு செய்வது அவை பெற்றுள்ள மதிப்பினை குறைக்கவே உதவும். ஒருவரின் உழைப்பு,அறிவாற்றல் ஆகியவற்றை விட ஜாதியே முக்கியம் என்றாகிவிடும்/


சென்னை அய்.அய்.டியின் நிலைமையையே எடுத்துக்கொள்வோம். 40 துறைத்தலைவர்களில் அய்ந்துபேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்தவர், ஒரே ஒருவர்தான் தலித், ஒருவர் கூட முஸ்லீம் கிடையாது. மேலும் புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டால் அவர் டாக்டர் வசந்தாகந்தசாமியை அணுகலாம். மற்ற பிரச்சினைகளைக் கூட விடுங்கள், அய்.அய்.டி, அய்.அய்.எம்.எஸ் பிரச்சினைகளில் 'நாங்கள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டோம்' என்று பார்ப்பனர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கமுடியாது. சென்னை அய்.அய்.டி முழுக்க முழுக்க பார்ப்பனப் பண்ணையமாகவே திகழ்கிறது. திருமாவளவனின் தமிழ்த்தேசியம் குறித்த கட்டுரையை வெளியிடும் ரவிசீனிவாசால் தமிழ்த்தேசிய இதழான 'தாகம்' இதழ் சென்னை அய்.அய்.டி குறித்து டாக்டர்.வசந்தாகந்தசாமி அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதத்தை இதழ் முழுக்க வெளியிட்டதே, அதை ரவி படித்திருக்கமாட்டாரா என்ன?

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ரவியின் அறிவும் உணர்வும் ஷங்கர்படங்களைத் தாண்டியதாய் இல்லை. தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை அவை மணிரத்னம் படங்களைத் தாண்டியதாய் இல்லை. உண்மையிலேயே இட ஒதுக்கீட்டால் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ரவி கருதினார் என்றால் பார்ப்பனர்களின் தனிநபர் வருமானம் எவ்வளவுதூரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது, அவர்களின் பணித்தரங்கள், இட ஒதுக்கீடு வந்ததன்பின் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மறுக்கப்பட்ட சதவீதம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடவேண்டும்.

ரவிசீனிவாசுக்கு ஆங்கிலப்புலமையும் நவீன இலக்கியம் குறித்த அறிவும் அமைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இயல்பாகவே பார்ப்பனச்சமூகத்தைச் சேர்ந்த அவரிடம் அதெல்லாம் அமைந்திருப்பதில் வியக்கத்தக்கது ஒன்றுமில்லை. அம்பேத்கர், ஆனந்த் டெல்டும்பே, ரவிக்குமார் போன்றவர்கள் அறிவுஜீவிகளாய் வருவது மட்டுமே ஆச்சரியக்குரியதும் பாராட்டுக்குரியதாகும்.

உண்மையைச் சொல்லப்போனால் ரவிசீனிவாஸ் அறிவுஜீவியென்றாலும் அவர் அருண்ஷோரி, குருமூர்த்தி போன்றவர்களின் தரத்திலமைந்த மரபுசார்ந்த அறிவுஜீவிதான். அதேநேரத்தில் ஹரிஹரன், பின்னூட்டம் பாலா போன்ற அரைகுறைக் கிறுக்கர்களை விடவும் ஆபத்தானவரும் நம் தாக்குதலின் பெரும் இலக்காய் விளங்கவேண்டியவரும் கூட.


* அடைப்புக்குள் இருப்பவை ரவிசீனிவாசின் 'கண்ணோட்டம்' வலைப்பக்கத்தில் உள்ள பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

16 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  ரவி சீனிவாசன் பதிவுகளை விட்டு விலகி இருக்கப்போவதாக, தமிழில் எழுதுவதை நிறுத்துவதாக வலைப்பதிவில் அறிவித்துவிட்டாரே. எனவே உங்கள் பதிவு ஒரு கை ஒசையாக (ஜென குறிப்பிடும் பொருளில் அன்று) இருந்துவிடும்.

 2. Anonymous said...

  சரி, சரி, நல்லா ஆத்தா-அம்மான்னு எல்லா பார்பானையும் மொத்தமா திட்டுங்க...அதுதான் நீங்க பண்ணக்கூடியது....அறிவுபூர்வமா என்ன பெரிசா செய்வீங்க, வெங்காய கருத்துத்தான் வரும்

 3. Anonymous said...

  செத்துப் போன கருநாகத்தை காலால் மிதிப்பது பாவமில்லையா வெளியே மிதக்கும் அய்யா. அவரு 2005ல தீவிரமா எழுதிண்டு இருந்த பதிவுகளை படிக்கவில்லையா அய்யா...இந்த பூனைக்குட்டி வெளியே வந்தது இடஒதுக்கீடு மேட்டரில் தான்.

  அப்பப்போ வந்து கோர்ட்டு அவமதிப்புன்னும் ஊளையிடும் அந்த ஓநாய்.

  பார்ப்பன பருப்பு குசுவை உண்டு வாழும் ஜீவன்களுக்கு பசு மாட்டை தின்று அதில் வெளியே பிரியும் காற்றை சுவாசிப்பது கஷ்டம் தான்

 4. அசுரன் said...

  என்னைக் கேட்டால் ரவியின் அரசியல் குறித்து சுல்பமான வரையறை ஏகாதிபத்தியத்தின் ஒலிபெருக்கி. அவ்வளவுதான்.

  அவரது வர்க்க இயல்பு இதனை தாண்டி சிந்திக்கும் நேர்மையை அவருக்கு கொடுக்கும் என்று நான் நம்பவில்லை. அறிவார்ந்த நேர்மை என்பது அந்த குறிப்பிட்ட அறிவு ஜீவியின் வர்க்க இயல்பே தீர்மானிக்கிறது. ரவி விசயத்தில் அது என்னவென்பதை அவர்வர் வர்க்கன நிலையிலிருந்து பரிசீலித்துக் கொள்ள வேண்டும்தான்.

  பார்ப்ப்ன சாதி சங்கம் குறித்து பேசும் ரவி, இன்றைய உலகமயச் சூழலின் நிலைக்கேற்ப அதாவது தரகு முதலாளிகள் நாஸ்காம் சங்கமாக இணைந்துள்ள போதே IT தொழிலாளர்கள் சங்கம் வைப்பதை மறுக்கும் நிலையில் இன்னும் ஒரு படி மேலே சென்று பார்ப்ப்னர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் மட்டுமே சங்கம் வைக்க உரிமை உள்ளது தலித் போன்ற ஒடுக்கப்படுவோர் சங்கம் திரள்வது தவறு என்றூ கோரிக்கை வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.

  இடஓதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக ஒடுக்கப்ப்ட்ட ஒரு பார்ப்பனக் குழந்தையின் நிலைமையும், ஒரு தலித் குழந்தையின் நிலைமையும் ஒன்றல்ல. ஏனேனில் இவர்களுக்கென்றே வேறுபட்ட வரலாற்று பின்னணீயும், சமூக கலாச்சார பின்னணியும் உள்ளது. அவை இவர்களின் அறிவு, பொருளாதார, அதிகார வளர்ச்சியில் ஆற்றும் பங்கை முற்றிலும் மறந்து விட்டால் பொருளாதார அடிப்படையிலான இடஓதுக்கீட்டில் உள்ள மோசடியை உணர முடியாது.

  ரவி நமது தாக்குதலின் இலக்காக நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லை :-)) ஏனேனில் நாம் அவரது வர்க்கத்தை தாக்குமிடத்து அவரே வந்து தன்னை தாக்குத்ல் வட்டத்துக்குள் ஆஜர் படுத்தி விடுவதால நமது வேலை பெருமளவு மிச்சமாகிறது. அவரது செயல்துடிப்பு மிக்க இந்த பங்களிப்பு உண்மையில் எமக்கு உற்சாகமளிக்கீறது :-))

  நமது தரப்பை இன்னும் ஆழமான விவாதத்தினூடாக எடுத்துச் செல்ல உதவும் ரவி அவர்களுக்கு என்றுமே எனது நன்றி உரித்தாகுகிறது. அவரது சேவை எமக்கு என்றும் தேவை. அவரை இன்னும் இன்னும் வீரியமான தாக்குதல் தொடுக்க கோருகிறேன். :-))

  அசுரன்

 5. உண்மைத்தமிழன் said...

  மிதக்கும் வெளி அவர்களே, பதிலடி சரியானதுதான். அதெப்படி ஒரு இடத்தில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு மறு இடத்தில் அதை மாற்றிப் பேசுவது எழுதுவது? நீங்கள் எழுதியிருப்பதன்படி நண்பர் ரவி சீனிவாஸ¤ம் வலைத்தள அரசியல்வாதியாக இருப்பார் போலிருக்கிறது.

 6. Osai Chella said...

  vasantha kandasaamy is known to me and we have published her articles in http://oomai.wordpress.com . kindly take a look.

  then alladip paappaan killadi paappaan enRu periyar sonnathuthaan njaapakam varukurithu!

 7. குழலி / Kuzhali said...

  //அதேநேரத்தில் ஹரிஹரன், பின்னூட்டம் பாலா போன்ற அரைகுறைக் கிறுக்கர்களை விடவும் ஆபத்தானவரும் நம் தாக்குதலின் பெரும் இலக்காய் விளங்கவேண்டியவரும் கூட.
  //
  மிகச்சரியானதே...

 8. Anonymous said...

  //இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ரவியின் அறிவும் உணர்வும் ஷங்கர்படங்களைத் தாண்டியதாய் இல்லை. தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை அவை மணிரத்னம் படங்களைத் தாண்டியதாய் இல்லை//

  ஹி ஹி ஹி
  ஆரம்பத்தில் புரியலை...இப்ப புரியுது கொஞ்சமா.."சனாதனம்" என்றால் என்ன திவா??

 9. Anonymous said...

  ஏமாறாதவன், அறியாதவன் என்ற பெயர்களில் எல்லாம் மறைந்து எழுதும் மடசாம்பிராணியான மடராமனும், பார்ப்பன அடிவருடியான அரைவிந்தன் நீலகுண்டனும் ராமகோபாலனின் தங்கள் பதிவுக்கு விளக்கம் அளிப்பார்களா?

  ரவிசீனிவாசை நான் முழு கிராக்கன் என்றுதான் இன்னும் வகைப்படுத்தி இருக்கிறேன்.

  ஊரான் காசை வாங்கி, வசூலித்து தன்னுடைய காசுபோல் பெருமையாக ஜம்பம் அடித்து ஒரு பெண்ணுக்கு கொடுத்ததால் அன்புடன் பாலா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? சிந்திக்குமா அந்த பாப்பார மிருகம்?

 10. மிதக்கும்வெளி said...

  சனாதனம் என்றால் வைதீகம், என்று பொருள்படும் தூயா. இந்தியச்சூழலில் சாதியடிப்படையிலான வருணாசிரமத்தைச் 'சனாதன தர்மம்' என்பார்கள்.

 11. Anonymous said...

  In Anna University almost all head of depts. are OBCs.There is no dalit VC (Vice-Chancellor)in any of the twenty universities in Tamil Nadu.Since 1978, when it was established Anna University had no dalit as VC.Only OBCs (that too from four castes- chettiar,Pillai,Gounder,Vanniyar) have been VCs for 30 years.

  Madurai Kamraj University and
  Madras University did not fill
  up dalit quota in faculty
  positions for a decade. Anandakrishnan,an OBC
  who heads Madras Institute of
  Development Studies(MIDS) refuses
  to fill up dalit quota in faculty
  positions in MIDS.He will shout from roof top defending OBC quotas.
  Dalit Murasu wrote about this.
  Who funds MIDS-govt of tamilnadu
  and govt of india.both refuse to
  take action against MIDS.Dalit
  scholars have got a stay from
  court so that no post in filled.
  In universities they will not fill posts in dalit quota for 10 years.
  Then they will reject most dalit applicants on account of over age.
  After that this will become an open
  position and will be filled with OBCs.

  In Tamilnadu if IIT is for brahmins,other universities are for OBCs and nothing is left for dalits.

 12. Anonymous said...

  .."சனாதனம்" என்றால் என்ன

 13. Anonymous said...

  http://www.keetru.com/dalithmurasu/nov06/nagoor_kani.html
  தலித் பிரதிநிதித்துவம்: மறுக்கும் தி.மு.க. அரசு


  - நாகூர் கனி


  தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் 2 ரூபாய் அரிசி, 13,000 சாலைப் பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணை, 10,000 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி, சத்துணவுப் பணியாளர்களுக்கு சலுகை, இலவசத் தொலைக்காட்சி வழங்குதல் என அனைத்தையும் கவனமாக நிறைவேற்றி வருகிறது. ஆனால், தலித் மக்களுக்குரிய பின்னடைவுப் பணியிடங்களை மட்டும் நிரப்ப மறுக்கிறது. 19 சதவிகித இடஒதுக்கீட்டில், இதுவரை சுமார் 4 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே தலித்துகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. 1993 முதல் 2001 வரை பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை ‘சிறப்பு சேர்க்கை' மூலம் நிரப்பிட, பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் இதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

  தலித் மக்களுக்குரிய அனைத்துப் பிரிவுகளிலும் 19 சதவிகித அளவீட்டை எட்டும் வகையில் பின்னடைவுப் பணியிடங்களை நிறைவு செய்ய வேண்டும் என தி.மு.க. அரசு, 1997 இல் அரசு ஆணை (2/97) வெளியிட்டது. ஆனால், அதை நிறைவேற்றாமல், 595 அரசுக் கல்லூரி ஆசிரியர் பணிக்காக மட்டுமே விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து நான் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன் (வழக்கு எண். OA/6844 Tamilnadu Administrative Tribunal). இதன் அடிப்படையில், டாக்டர் கிருஷ்ணசாமி சட்டப் பேரவையில் வெள்ளை அறிக்கை கேட்டுப் போராடியதால், நீதிமன்றத்தின் பிடியிலிருந்து தப்பிக்க 100 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை மட்டும் தி.மு.க. அரசு நிரப்பியது.

  அவ்வாறு கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 595 ஆசிரியர் பணிகளுக்கானப் பின்னடைவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதில் 100 இடங்களுக்கு மட்டும் 1998 இல் விளம்பரம் கொடுத்து விட்டு மீதி, 495அய் படிப்படியாக நிரப்புகிறோம் என உறுதி அளித்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனத் தடைச் சட்டம் போட்டுவிட்டது. தற்பொழுது மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்றபிறகு, 495 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், பொது இடங்களையும் நிரப்ப வலியுறுத்தி, சென்னையில் 9.9.2006 அன்று மாபெரும் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. மேலும், இதை வலியுறுத்தி 28.9.2006 அன்று தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், 18.9.2006 அன்று பத்திரிகை மூலம் 1034 அரசுக் கல்லூரி விரிவுரையாளர் நியமனத்துக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுவிட்டது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பின்னடைவு ‘சிறப்பு சேர்க்கை' விளம்பரம் மட்டும் கொடுக்கப்படவில்லை.

  எனவே, அரசுக் கல்லூரிகளில் கொடுக்கப்பட வேண்டிய 495 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைத்துப் பிரிவுகளிலும் கொடுக்கப்பட வேண்டிய 17,314 பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பக் கோரி 2.10.2006 அன்று மதுரையில் ‘மத்திய மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு' சார்பில் மாபெரும் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.

  பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டை முழுமையாக (19%) நிறைவு செய்ய தமிழக அரசு மறுத்து வருவதால், நான் தலித்தாக இருந்தும் 1987இல் எம்.பில். பட்டமும் 1992 இல் பிஎச்.டி.யும் முடித்து 55 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து, அதில் 25அய் வெளியிட்டும், 2 புத்தகங்கள் எழுதி முடித்தும் இன்று வரை வேலையில்லாப் பட்டதாரியாகவே இருக்கிறேன். இதே நிலையில்தான் 100க்கும் மேற்பட்ட பிஎச்.டி. பட்டதாரிகளும் சுமார் 3000க்கும் மேற்பட்ட எம்.பில். பட்டதாரிகளும் இருக்கிறார்கள். அண்மையில் வெளிவந்த இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து தமிழக முதல்வர், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்; இடஒதுக்கீடுக்காக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அவர் நிரப்ப வேண்டிய இடங்களை மட்டும் நிரப்ப மறுப்பது என்ன நியாயம்?

 14. rajavanaj said...

  திவாகர்,

  சனாதன என்பது எப்போதும் இருந்து கொண்டே இருப்பது என்பது போன்ற ஒரு பொருளைத் தரும் என்று நினைக்கிறேன்.

  வைதீக என்பது வேத முறையிலான என்பது போன்ற பொருளைத் தரும்.

  அவர்கள் 'சனாதன தர்மம்' என்பதற்கு எப்போதும் இருக்கும் தர்மம். அல்லது நிலையான தர்மம் என்றே பொருள் கொள்கின்றனர்.

  'தர்மம்' என்பதற்குத் தான் தெளிவான எந்த ஒரு விளக்கமும் கிடையாது.

 15. Anonymous said...

  யாரையா நீர், இரண்டு மணி நேரத்தை இப்படி வீணடித்திருக்கிறீர்.இது நியாயமா.அவனவன் ஒன்லைன் சாட் செய்ய,ஸ்பென்ஸ்ர் பிளாசாலா பிகரை கரெக்ட்/கலெக்ட் பண்ண, ஒர்க்குட்டில் கலாய்க்க இரண்டு மணி நேரம் போதாதுன்னு புலம்பறான்.உருப்படற வழியப் பாருங்க -:).

 16. Anonymous said...

  I think he anticipated your comments and ran away from
  blogs.